Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-17

விடிகாலை நான்கு மணி அளவில் எழுந்து அமர்ந்தான்…அவள் தன்னிடம் ஏதோ கூறியதுப் போல் உணர, தன் பக்கத்தில் படுத்திற்கும் மனையாளின் முகத்தைப் பார்த்தான் கரந்தெடுத்த பால்போல் கள்ளமில்லாமல் தெளிவாக இருக்கும் அவள் முகத்தின் அருகில் சென்றான்.

 

ஏறியிரங்கும் சீரான மூச்சு, அவள் முகத்தை அவன் கைகளில் ஏந்தினான், பின்பு அவள் நெற்றில் செல்லமாக முட்டி இதழ்பதித்தான் ‘ ஏன் குட்டிமா என்கிட்ட பேசமாடங்கிற’ என அவள் உறக்கம் கலைந்து அவள் கண் திறந்து பார்த்த வேலையில் நான்கு கண்களும் ஒன்றாய் கலக்க…

 

விழியில் நுழைந்து உயிரில் கலந்து நிற்க… அம்மோன நிலையை கலைக்கா வண்ணம்…இருவரும் கண்களால் தங்கள் மனதில் உள்ளதை பேசிக்கொண்டனர்… ஒரு வாரம் தன் மனையாளின் அருகாமை கிட்டாததா… இல்லை உணர்ச்சிகளின் பெருக்கோ ஏதோ அவனைத் தாக்க அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டான்…

 

தன் கணவனின் உணர்ச்சிகள் வெளியேற தன்னை வடிகாலாய் பயன்படுத்தி, அவன் ஆளுமையில் தன்னைத் தொலைத்தாள், தன் கணவன் வன்மையோடு தன்னை நாட… அவள் தன்னை முழுவதுமாக தொலைத்தாள்…

 

கூடல் முடிந்த வேலையில் கார்த்திக் நன்றாக தூங்கும் தன் மனைவியை  தன் மேல் சாய்த்து…அவன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான் தன்னிடம் கோபம் கொண்டிருப்பவள், தன் தொடுகையில் அவள் உருகி கறைந்ததை எண்ணினான்…

 

இப்பொழுது அவள் பேசியது தனக்கு சிறிது சிறிதாக நியாபகம் வந்தது…’நான் ரொம்ப சுயநலத்தோட உங்களை திருமணம் செய்துக் கொண்டதாகவும், தன்னோட சுயநலத்திற்கு உங்கள் வாழ்க்கையை பணயம் வைத்ததாகவும் ‘கூறினாள்…

 

ஆனால் ஏன் அப்படி தன்னிடம் என்ன மறைத்தாள் என்று யோசித்துக் கொண்டே காலை ஆறு மணி வேளையில் உறங்கினான்…

 

காலை எழுந்ததும் திவிக்கு கண்கள் கோவைப்பழம் போல் சிவந்திருந்தது, கண்கள் திறக்கவே மிகவும் கடினமாக இருந்தது , மிக சிரமப்பட்டு விழித்தால்… தூக்கம் வராமல் நள்ளிரவில் உறக்கம் தழுவ கண்முட… பின்பு விடிகாலை வேளையில் தன் கணவன் தன்னை நாட …

 

தன் கணவனின் விரதத்தை பூர்த்தி செய்த பின்பு சரியாக தூக்கம் இல்லாத காரணத்தினால்… கண்கள் மீண்டும் எரிய துவங்க கண்களிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது …. அவள் மனது லேசாக உணர்ந்தது தன் மனக்காயங்கள் எல்லாம் தன் கண்ணீராய் கரைந்ததோ இல்லை தன் கணவனிடம் கொட்டியதோ…தன் கண்ணீரைப் பொறுப்படுத்தாது… அவளது மனம் லேசாக இருந்தது…

 

அவள் குளித்து முடித்து வேலை பார்க்க  கீழே செல்ல பின்பு தன் கணவனுக்கு காபிக் கொண்டு சென்றாள்… தன் கணவனிடம் எப்படி கூறுவது, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் திகைத்தாள்… யோசித்துக் கொண்டே தங்களின் அறைக்குள் வந்ததையோ தன் கையிலிருந்து காபியை அவன் எடுத்து பருகியதோ அவன் குடித்து முடித்து தன் கையில் வைத்ததையோ  அறியாமல் தன் சிந்தனையில் உழன்றுக் கொண்டிருந்தவள்…

 

கார்த்திக் அவளை நோக்கி அவள் எண்ணோட்டத்தை அறிந்து அவளாகவே வந்து கூற வேண்டும் என்று முடிவெடுத்து சடுதில் குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டான்… அவன் இவளைக் கடந்து சென்றதை கண்டு இவன் தன்னிடம் கோபம் கொண்டுள்ளான், இன்னும் கோபம் போகவில்லை என்று எண்ணிக் கொண்டு சமாதனத்திற்கு தூது விட்டாள்…

 

அவனோ விடாகண்டனாக தன் மௌனத்தை யுத்தம் போல் தொடர்ந்தான், மேலும் இரண்டு நாட்கள் தொடர அவள் உள்ளுக்குள் கலங்கினால்..

 

பேசாமல் உந்தன் மௌனம் எந்தன் நெஞ்சிலே

காதல் வலையே வீசி செல்கிறதே

பூக்காதோ உந்தன் மௌனம் என்னை காணும் வேளையில்

காதல் வாசம் எங்கும் வீசுமடா

நதியே கடலில் சேராதே

என்னுள் கலந்து விடு

மழையே மண்ணாய் சேராதே

நெஞ்சில் நிறைந்து விடு

பார்க்காமல் என்னை நீயும் தாண்டி செல்லும் வேலை

பார்த்தேனே உந்தன் கண்ணில் என்னை தள்ளும் போதை

பட பட பட வென மாறும் வானம் பட்டென நீயும் பார்த்தல்

என் வானமே நீயாட நீயே நீயே தானடா

சிலு சிலு சிலு வென வீசும் காற்று சிறிதாய் நீயும் சிரித்தால்

என் வாழ்கையே நீயாட நீயே நீயே தானடா

 

அவன் மௌனம் அவளை வேகுவாக தாக்க  மாலை நேர வெயிலில் அவன் பால்கனி புறம் நின்று யோசித்துக் கொண்டிருக்க… அவனை பின்புரத்திலிருந்து அணைத்து அவள் கன்னங்கள் அவன் முதுகுபுறம் பட ‘மாமா சாரி மாமா ப்ளீஸ் என்கிட்ட பேசுங்க’ என்றாள்…

 

அவனோ சிலைப்போல் நிற்க தன் முதுகுப்புறத்தில் ஈரம் பரவுவதைக் கண்டவன் அவனுக்கு அன்று திவி தந்தையிடம் கொடுத்த வாக்கைப் பற்றி நியாபகம் வர தன் மௌனத்தை கைவிட்டவன் ‘நத்திங் பேபி’ என்று தன்னை சுற்றியிருந்த அவள் கையை பிடித்து முன்னே இழுத்தான்

.

‘குட்டிமா இப்ப எதுக்கு அழற’என்று அவள் கண்ணீரை தன் உதட்டால் துடைத்து எடுத்தான்.மாமா நீங்க நம்பறிங்களா நான் உங்கள சந்தேகப்படறேன்னு’ என அவன் முகத்தை ஆராய்ந்தால்… அவன் என்ன பதில் கூறுவான் என்று அவன் முகத்தை திகில் கொண்டு பார்த்திருக்க…

 

அவனோ அவள் நெற்றில் முத்தமிட்டு ‘என் குட்டிமாவ பத்தி எனக்கு தெரியாதா, நீ என்ன சந்தேகப்பட்டா உன்ன நீயே சந்தேகப்பட்றேன்னு ‘ அர்த்தம்  என. அவள் கண்களில் இருந்து கண்ணீர் தன் கன்னங்களில் இறங்கி தன் தொண்டைக் குழியை நனைக்க அவனை இருக்கமாக கட்டிக்கொண்டு தனக்கு இந்த வாழ்க்கை கார்த்தியின் அன்பு தனக்கு கொடுத்து வைக்கவில்லை என்று தன் விதியை நோந்துக் கொண்டு உடைந்து அழுதாள்…

 

விதி இவளை கார்த்தியுடன் சேர்த்து வைக்குமா இல்லை என்ன நடக்கும்…

 

வரும் அத்தியாத்தில் காண்போம்…

 

நன்றி தோழமைகளே

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி
2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Kandipa sir but konjam emotionala irukum… vara epi


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Athu enna rakasiyam sikkiram sollunga thozhi .divikku nalla vithiya kotungamma

error: Content is protected !!