Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Veppangulam

Share Us On

[Sassy_Social_Share]

வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 11

அத்தியாயம் : 11

ரம்யாவின் கழுத்தில் கிடந்த தாலியையும், ரம்யாவையும் அந்த புதியவனையும் மாற்றி மாற்றிப் பார்த்தான் பாஸ்கரன் அங்கு என்ன நடக்கிறதென்பது கூட அவன் மண்டைக்குள் ஏற மறுத்தது. திரும்பவும் அவனது பார்வை ரம்யாவின்  தாலியிலேயே நிலைத்தது.

அதுவரை மகன் பேசட்டும் என்று அமைதிகாத்த மணிவண்ணன். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து முன்னே வந்து பேசலானார்

“நீங்க ரம்யாவோட புருஷன்னு தெரியாம என் பையன் உங்க மேல கைவச்சுட்டான் மன்னிச்சுக்குங்க தம்பி உங்க பேரு என்னன்னு தெரிஞ்சிக்கலாமா? “மென்மையாகவே பேசினார்

பாஸ்கரன் சட்டையை கொத்தாக பிடித்ததுமே புதியவனின் பேஸ்மண்டு ஆட்டம் கண்டுவிட்டது.அதனால் தன் திமிரான பேச்சை பின் தள்ளி,

“என் பேர் ரவிங்கய்யா, என் பொண்டாட்டி ரம்யாவுக்கும் எனக்கும் சின்னதா ஒரு பிரச்சனை,  கோவிச்சிகிட்டு சொல்லாம கொள்ளாம இங்க வந்துட்டா, நேத்துதான் இவ இங்க இருக்கறதா எனக்கு தகவல் கிடைச்சுது அது தான் உடனே பொறப்பட்டுவந்துட்டேன்.

“சரிங்க தம்பிஉள்ள வாங்க, எங்க வீட்டுக்கு விரோதியே வந்தாலும் உள்ள கூப்பிட்டு தான் பேசுவோம்….அப்புறம் ஒருவிஷயம் இங்க எல்லாரும் மரியாதையான மனுசங்க அதனால கொஞ்சம் வார்த்தையில மரியாதை இருக்கறா மாதிரி பாத்துக்கேங்க ‘ என்று ஜாடை மாடையாக அவன் பேச்சு நாகரீகத்தை சுட்டிகட்டிவிட்டு உள்ளே அழைத்துச் சென்று அமரவைத்தார்

சில நிமிடம் ரம்யாவை பார்த்தார்…..அவளது முகத்தில் எதனை படித்தாரோ தெரியாது.

“தம்பி இப்பவே இருட்ட ஆரம்பிச்சிருச்சு அதனால எங்க வீட்டுக்கு வந்த பொண்ணை ராவுல அனுப்ப மாட்டோம் நாளைக்கு வெள்ளிக் கிழமை, நாளைக்கும்  அனுப்ப மாட்டோம் அதனால நாளைக்கு ஒரு நாள் தங்கிட்டு சனிக்கிழமை

கருக்கல்ல (விடியர்காலை)  வேனும்னாலும் கிளம்பிக்கோங்க, சரிங்களா “என்று

தீர்ப்பு எழுதிவிட்டது போல் கூறுபவரை எதிர்த்து பேச வழியில்லாமல் விழித்தான் ரவி.

‘அடடா இது என்ன சிக்கலா போச்சு, ரம்யாவோட முடிய கொத்தா பிடிச்சிட்டு போய் கார்ல ஏத்தி சென்னை பக்கம் கெளம்பலாம்னாஇது என்ன புது தொந்தரவா இருக்கு? ஆனா இவரை எதிர்த்து பேசுனா நாம ஒழுங்கா வீடு போய் சேரமாட்டோம் போலருக்கே இது சரி வராது பேசாம இந்த பெருசு கேக்குரதுக்கு ஆமாம் சாமிபோட்டு தொலைக்க வேண்டியது தான் ‘ என்ற முடிவிற்கு வந்தவந்தவன் லேசாக சரி என்பது போல் தலையாட்டி வைத்தான்.

“ஏய்  அய்யாகண்ணு   இங்கன வா தம்பி சாம்மானெல்லாம் கார்ல இருக்கும் அதை எடுத்துப் போய் ரம்யாம்மா அறையில வை.” என்று கட்டலையிட்டவர் துண்டை உதரி தோளில் போட்டுக் கொண்டு வெளியே கிளம்பிவிட்டார்

பார்வதியும், கவிதாவும் தலை கவிழ்ந்திருந்த ரம்யாவையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஊமை மாதிரி கமுக்கமா இருந்துட்டாளே “என்று அவர்களுக்குள் கிசு கிசுத்தனர்.

“ம் ….. வாங்க ஏகப்பட்ட வேலை இருக்கு “என்ற மரிக்கொழுந்தின் அதட்டலில் இருவரும் சமையலறைக்குள் புகுந்தனர்.

ரம்யாவோ! தனித்து விடப்பட்டாள். இத்தனை நாள் இந்தக் குடும்பத்தோடு நெரிங்கி விட்டது  போல்  இருந்த நினைப்பு இன்று அடியோடு மாறிவிட்டது.

தனித்து விடப்பட்ட உணர்வு மேலும் அவளை கொன்றது. ரவியோ மேலே அவளது அறையினுள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.அவள் மனம் அந்த அறையின் பக்கமாக செல்ல கூட வெறுத்தார், அவன் மூச்சுக்காத்து படும் தூரத்தில் இருப்பது கூட பாவம் என்று உள்ளே குமுறினாள். அப்போது தான் மரிக் கொழுந்தின் ஆதரவான கரம் ரம்யாவின் சிரசை தொட்டது அவ்வளவுதான். மரிக்கொழுந்தின் தோளில் சாய்ந்து கதறி விட்டாள்.

அவள் அழுது நிறுத்தட்டும் என்று காத்திருந்த மரிகொழுந்து மென்மையாக அவளது முதுகை தடவிக் கொடுத்தாள்.படிப்படியாக அழுகை நின்றது.

தோள்களில் துவண்டு கிடந்தவளை நிமிர்த்தி கண்களை அழுந்தத் துடைத்தவள்  அங்கே சோபாவில் அமரவைத்து தானும் அமர்ந்தாள். மேஜை மேல் இருந்த தண்ணீரை ரம்யா பருக கொடுத்தவள் அவள் பருகி முடித்ததும் பேசலானாள்.

“இந்த பொம்பள ஜென்மமே இப்படித்தான் தாயி, உசுரு இருக்குற வரைக்கும் அழுது கரைஞ்சே வாழ வேண்டியிருக்கு. புருஷன் பொண்சாதின்னா ஆயிரம் இருக்கும். ஆம்பளங்க வெளிய தெருவ போரவங்க கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், பொட்டச்சி  நாமதான் அனுசரிச்சு போகனும். விட்டு கொடுக்கரவன் கெட்டுப் போனதில்லன்னு ஒரு பழமொழியே இருக்கு. விட்டுக்கொடுத்து போயிட்டா பிரச்சனை இல்லபாரு!!  இதத்தான் நான் பார்வதி, கவிதா, சுகுணா எல்லாத்துக்கும் சொல்லுவேன் இப்ப உனக்கும் சொல்றேன் கொஞ்சம் விட்டுக் குடுத்து போ தாயி “

அவனைபற்றி தெரியாமலே அவளுக்கு அறிவுறை வழங்கும் தாயுள்ளத்திற்கு என்ன சொல்வதென்று புரியாமல் தவித்தாள் ரம்யா.

“சரி கண்ணு போ….. போயி உம் புருஷனுக்கு காப்பி தண்ணி ஏதாவது போட்டு கொண்டு போய் குடு. பாவம் மெட்ராஸ்லேந்து உன்னைய தேடி வந்துருக்காருல்ல ” என்று விருந்தோம்பலில் ஈடுபட்டவரிடம் மறுத்துப்பேச மனமின்றி தலையசைத்தாள்.

அங்கே, இங்கே போக்கு காண்பித்து சற்று தாமதமாகத்தான் டீ போட்டாள். எல்லோர் மனதிலும் ரம்யாவின் கடந்த காலம் கேள்வியாய் இருக்க, அதனை மறைத்து அவளிடம் இயல்பாய் பேச முனைந்தனர். மரிக்கொழுந்தின் சொற்ப்பொழிவாக இருக்கும் என்பது ரம்யா அறிந்ததே.

அது சரியும் கூட, “உங்களுக் கெல்லாம் புருஷன் வீட்ல பிரச்சனைன்னா மூக்க உறிஞ்சிகிட்டு அம்மா வீட்டுக்கு ஓடரீங்கல்ல, உங்க அம்மா உங்களுக்கு எடுத்து சொல்லி அனுப்பி வைப்பாங்கல்ல, பாவம் அந்த புள்ள அம்மா அப்பா இல்லாம, ஆதரவுக்கு ஆளில்லாம, நம்மள தேடி ஓடி வந்திருக்கு. அதுக்கு நாமதான் ஆறுதலா இருந்து புத்தி சொல்லி அனுப்பனும் ” என்ற மரிக்கொழுந்தின் வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டா?

டீ போட்டாகி விட்டது ஆனால் இதனை எப்படி கொண்டு கொடுப்பது? என்ன யோசித்தாலும் கால்கள் அவன் அறை நோக்கி செல்ல மறுத்தன. அந்த பக்கமாக வந்த மதிஅழகியை அழைத்தவள்.

“மதி கொஞ்சம் என் கூட வாயேன்”

“எங்க அக்கா? “

“ம்… ச்சு… வான்னா வாயேன்” டீயுடன் மாடிக்குச் சென்றவள்அவளது அறை வாசலில் நின்று,

“நான் உள்ள போய் டீ கொடுத்துட்டு வரேன்.அப்படி அஞ்சு நிமிசத்துல நான் வெளிய வரலைன்னா, நீ என்ன தேடிக்கிட்டு வர மாதிரி உள்ள வந்துரு சரியா? “என்றதும் பேந்த ப் பேந்த விழித்தப்படி தலையசைத்தாள் மதிஅழகி.

நடுங்கிய கால்களுடன் மெல்ல உள்ளே சென்ற ரம்யா அந்த அறையை கண்களால் அளந்தாள்.அங்கே கிடந்த கட்டிலில் கைகால்களை விரித்து மல்லாந்து படுத்திருந்தான் ரவி.தூங்குகிறானோ! என்று பார்த்தவள் அவனருகில் இருந்த டீப்பாயில் இருந்த பிராந்தி பாட்டில்களை பாத்ததும் கூசிப் போனாள்.

“சீ…சீ….என்ன மனுஷன் இவன் யார் வீட்டுலயோ வந்து தண்ணி அடிச்சுட்டு விழுந்து கெடக்கான்.இது இவங்களுக்கு தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம்.?’என நினைத்தவள் டீயை அதே டீப்பாயில் வைத்து விட்டு வந்த அரவம் தெரியாமல் வெளியேறினாள்.மனதிற்குள் லேசான நிம்மதி படர்ந்தது “இனி காலையில் தான் அந்த தண்ணி வண்டி எழுந்திரிக்கும் அதுவரை தப்பித்தேன்.ஆனால் இப்படியே எத்தனை நாள் தான் ஓடும்? இதற்கு முடிவுதான் என்ன?”மனம்  பலவற்றை யோசித்து  குழம்ப மதிஅழகியோ புதிதாக குழப்பினாள்.

“என்னக்கா இப்படி பண்ணிட்டீங்க? உங்களுக்கு கல்யாணமாயிடுச்சுன்னு சொல்லவேயில்ல? நாங்க எல்லாம் வேற யோசிச்சோம் ….பாஸ்கர் அத்தான் இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா……”

“மதி “என்ற காளிதாசனின் அதிகாரக் குரல் அவளை பேசவிடாமல் நிறுத்தியது.

உடனே குரல் வந்த திசை நோக்கி “என்ன அத்தான் ” என கேட்டுக்கொண்டே சென்றுவிட்டாள் மதிஅழகி.

‘மதி என்ன சொல்ல வந்தாள்?  பாஸ்கரனை பற்றி என்ன?  ஏதோ விளங்குவது போலவும், நிறைய விளங்காதது போலவும் மனம் குழம்பித் தவித்தது.இருக்கும் குழப்பம்  போதாதென்று இது வேறு ‘என்று நினைத்தவள் தன் முன் நிற்கும் மலையளவு பிரச்சனையை சமாளிப்பதெப்படி என்று சிந்திக்கலானாள்.

ஆனால் அப்படி சிந்தித்து சிந்தித்து பதில் கிடைக்காததால் தான் அங்கிருந்து தப்பி இங்கே ஓடி வந்தாள் ஆனால் அவளது விதிஇங்கேயும் துரத்திக் கொண்டு வந்து விட்டது. எல்லாம் தலையெழுத்து.

“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா மதி. அவங்களுக்கே என்ன பிரச்சனைன்னு தெரியல அவங்க புருஷன்னு ஒருத்தன், புதுசா வந்து குதிச்சிருக்கான். அதை நினைச்சு அவங்களே குழம்பிப் போய் இருக்காங்க இதுல புதுசா அண்ணாவப்பத்தி பேசி இன்னும் அவங்கள கஷ்டப்படுத்த பாக்கரியே “

“மனசு கேக்கல அத்தான் அவங்களுக்கும் அவங்க புருஷனுக்கும் என்ன பிரச்சனையா இருக்கும் ? ஒரு டீ கொடுக்க கூட என்ன,, துணைக்கு அழைச்சிட்டு போராங்க”

“அது அவங்க சொந்த பிரச்சனை அதுலல்லாம் நாம தலையிடக் கூடாது “

“சரி அத விடுங்க அத்தான் …….பாஸ்கர் அத்தான் எங்க?

“அதுதான் தெரியல அவர் வீட்டுக்குள்ளயே வரல….எங்க போனார்னு தெரியல நான் இப்போ அவரைத்  தேடித்தான் போரேன் …..நீ ரம்யாவுக்கு ஆறுதலா கொஞ்சம் கூடவே இரு சரியா? ” என்றவன் வேகமாக வெளியேறி விட்டான்.

இரவு உணவிற்கு ரவியை அழைத்து வருமாறு ரம்யாவிடம் கூறிய நாட்டாமைக்கு.

“இல்ல ஐயா……அவரு தூங்கராரு பிரயான களைப்பு……டிபன் எடுத்துட்டு போய் மேலேயே வெச்சிட்டேன் அவருக்கு முழிப்பு வரும் போது சாப்பிட்டடுமே……பாவம் “என்று ஒருவாரு சமாளித்து விட்டாள்.மணிவண்ணனின் ஆராய்ச்சிப் பார்வை ரம்யாவை ஆராய தவறவில்லை.

அந்த இரவு இரு இதயங்களுக்கும் தூங்கா இரவானது.
2 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Aaka arumaiyana thiruppam


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Indra Selvam says:

   Nandri

error: Content is protected !!