Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-20

மையூரியோ எப்படி இது சாத்தியம் என்று குழம்பி  கொண்டிருந்தாள்.அடுத்த முறை அவளை வேரோடு சாய்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். தன் தொழில் மூளையை பயன்படுத்தி  அடுத்த திட்டத்திற்கு தயாரானாள்.

 

மூன்று மாதக் கருவை தன் வயிற்றில் சுமந்துக் கொண்டிருந்தாள்.கர்ப்பக் காலத்தில் எந்த மனைவியும் தன் கணவன் தன் அருகிலிருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் என்று தன்னுடன் படித்த தோழி கூறியதைக் கேட்டு கார்த்திக் அவளின் நிலையை அறிந்து தொழிலை வீட்டிலே  தன் லேப்டாப்பை வைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.அவளை தன் அருகிலேயே வைத்துப் பார்த்துக் கொண்டான். அதனால் மையூரியால் திவியை ஒன்றும் செய்ய முடியாமல் போனது.

 

இரண்டு வாரத்திற்கு  ஒரு முறை திவியின் பெற்றோர் அவளைப் பார்த்து விட்டு சென்றனர்….

 

இதற்கிடையில் ரோஷன் தன் திட்டமான கார்த்தியின் மும்பைத் தொழிலை சரிய வைக்க சதி திட்டம் தீட்டிக் கொண்டிருந்தான். இப்போது அவன் மனைவி கருவுற்ற செய்தி பரவ, ஆகையால் கார்த்திக்  வரமுடியாமல் இருக்க தன் காரியத்தை நடத்த காத்திருந்தான் அதற்கும் தக்க சமயம் அமைந்திட அவன் வெறிக் கொண்ட புலிப்போல் அவனை நேருக்கு நேர் எதிர் கொள்ள முடியாமல் கோழைப் போல் அவன் முதுகில் குத்த தயாரானான்.

 

வர்ஷா திவ்யாவின் உடல் நிலையைப் பற்றி கூறியதால் கார்த்திக்  தன் இமைப்போல் அவளை பார்த்துக்கொண்டான்.இதற்கிடையில் திவ்யா மையூரியை அழைத்தாள்… மையூரிக்கோ சந்தேகம் வர… பயந்துக் கொண்டே அவளை எதிர் கொண்டாள்….

 

மையூரியோ அறைவாயிலில் நின்றுக்கொண்டு செல்லலாமா வேண்டாமா என்று யோசிக்க… அவளைக் கண்ட திவ்யா ‘அட வாங்க மையூரி உள்ளே வாங்க… ஏன் வெளில நிக்குறிங்க’ என அவளோ குற்ற உணர்வில் உள்ளே வந்து அமர்ந்தாள்… அவள் வந்து அமர்ந்ததும் மையூரியை நேரே சந்தித்த திவ்யா ‘மையூரி நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே’ என அவளோ அவள் முகத்தைப் பார்த்தாள்.

 

என்ன என்று கேட்க ‘நீங்க ஏன் கார்த்திக்கை கல்யாணம் பண்ணிக்க கூடாது’  என்று கேட்க மையூரிக்கோ ஒன்றும் புரியவில்லை என்னடா இவள் தன்னிடம் ஏன் இப்படி பேசுகிறாள் என்று எண்ணிக்  கொண்டிருக்க… அவளோ தான் மறைத்து வைத்த உண்மையை அவளிடம் கூறினாள்.

 

‘மையூரி ஐ ஹவ் கிளாட்டிங்(Clotting) ப்ராப்ளம், ஹும் என்னோட மூளைல ஒரு கட்டியிருக்கு சோ இட்ஸ் டூ ரிஸ்க் டு டூ சர்ஜரி, அதனால என்னோட ஆயுள் எத்தனை நாளுன்னு தெரியல,  சப்போஸ் எனக்கு ஏதாவுது ஆகிடுச்சினா கார்த்திக்க உன்கிட்ட ஒப்படைச்சிட்டு போறேன்’, அப்புறம் என் குழந்தை என்னைக்கும் உனக்கும் கார்த்திக்கும் தடையா இருக்காது, என் குழந்தையை என் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு சொல்கிறேன்.

 

‘நீ தான் என்ன வழிக்கி விழ வச்சன்னு தெரியும், அப்புறம் கூட  நீ ஏதாவது பண்ணனும்னு ட்ரைப் பண்ண, எல்லாமே எனக்கு தெரியும், அதனாலதான் நான் கார்த்திய உன்ன கல்யாணம் பண்ணிக்க சொன்னேன், அவரு மேல எவ்வளோ காதல் இருந்தா என்ன கொலைப் பண்ண ட்ரைப் பண்ணிற்ப்ப சோ இவ்ளோ பண்ற நீ அவர நல்லா பார்த்துக்குவேனு எனக்கு நம்பிக்கை இருக்கு…

 

மையூரிக்கு ஒன்றும் புரியவில்லை என்னடா இவள் இப்படி சொல்கிறாள்…

 

மையூரி பிறப்பிலிருந்து கெட்டவள் இல்லை ஆனால் கார்த்தியிடம் மட்டும் அவளுக்கு தனி இடம் வேண்டுமென்றும் அவனை தன் வாழ்க்கையின் ஆதாரமாக கொண்டு வளர்ந்தவள். அவன் தன்னை விடுத்து வேரோரு பெண்ணை அதுவும் காதல் திருமணம் செய்துக் கொண்ட பிறகே தன் மற்றோரு முகத்தை அவளே அறிந்தாள்.

 

திவ்யா கூறியதை கேட்டு அவள் கார்த்தியிடம் தன்னைப் பற்றி கூறவில்லை என்று புரிந்து கொண்டாள்.ஆனால் ஏன் அவளின் நிலையைப் பற்றி அவள் கார்த்திக்கிடம் கூறவில்லை என்று அவளுக்கு புரியவில்லை.

 

திவ்யாவோ ‘ என்னாச்சி மையூரி நான் தான் பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க அப்பிடியே எதும் சொல்லாம இருக்கீங்க’… மையூரிக்கோ தான் இவ்வளவு செய்தும் அவள் தன்னைப் பற்றி கார்த்தியிடம் கூறியிருக்கலாம் ஆனால் அவள் அவ்வாறு செய்யாததைப் பார்த்துக் மையூரிக்கு குற்ற உணர்வு காரணமாக தன் மேல் கோபம் வந்தது.

 

தான் செய்த முட்டாள் தனத்தை நினைத்து வருந்தினாள். அவளின் குற்ற உணர்வு அவளை மன்னிப்பு கேட்பதில் இருந்து தடுத்தது.

 

தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டால் அதற்கு மரியாதை  உண்டு. ஆனால் தெரிந்து செய்து பின்பு மன்னிப்பு கேட்பது பெருங் குற்றமே. தான் செய்த மனிதாபமற்ற செயல் அவளை வாள் கொண்டு அறுத்தது.

 

இவளை என்னவென்று சொல்வது கார்த்திதான் இவளின் உயிர் , தனக்காக அவள் உயிராக நினைக்கும் கார்த்தியை தனக்கு விட்டுத் தரும் இவள் முன் தன் காதல் ஒன்றுமில்லாமல் போக… அவளை நிமிர்ந்து பார்த்து’ கார்த்திக்கு இந்த விஷயம் தெரியுமா என்று கேட்க’… இம்முறை இவள் ஸ்தம்பித்து நின்றாள்…  ‘இல்ல மையூரி மாமாவுக்கு தெரியாது… ப்ளீஸ் இதை பத்தி நான் யார் கிட்டையும் சொல்லல உன்கிட்டதான் சொன்னேன்’ என்று கூற…நான் என் வாழ்நாளை எண்ணிக்கொண்டு இருப்பதை பற்றி வருத்தபட வில்லை… ஆனால் என் உயிருக்கு உயிரான என் கணவரையும், என் பிள்ளையையும் பிரிந்து செல்கிறேன் என்று நினைக்கும் போதே யாரோ தன் நெஞ்சில் கல் கொண்டு அடிக்கும் வலியை  உணர்ந்தாள்…

 

அதைவிட குற்ற உணர்ச்சி  கொல்ல… ‘எனக்கு இப்படி ஒரு  ப்ராப்லம் இருக்குனு தெரிஞ்சும்  அவரோட காதல மறுக்க முடியாம… அவர நான் சுயநலமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அதுக் கூட வீட்டுல எனக்கு அலையன்ஸ் பாக்குறாங்கனு தெரிஞ்சித் தான்… என்னோட கழுத்துல தாலி ஏறனும்னா அது அவர் கைலதானு முடிவுப் பண்ணேன்’…

 

மையூரி எனக்கு தெரியாது, நீ கார்த்திக்கை காதலித்தாய் என்று, தெரிந்திருந்தால் அப்போதே விலகி சென்றிருப்பேன் என்று திவ்யா கூறிய செய்தியைக் கேட்டுக் கொண்டே  தன் அறைக்கு வந்து சேர்ந்தாள்…

 

தன் நிலையை எண்ணி, அவளை பழிவாங்க துடித்துக் கொண்டிருந்த மையூரி திவ்யாவின் நிலைக் கண்டு தான் அவளுக்கு  இழைத்த துன்பத்தைக் கண்டு சங்கோஜப் பட… மையூரி தன்னையே வெறுத்தாள்…. அவளிடம் மன்னிப்பு கேட்கவும் அவள் மனம் சுட்டது…. தான் செய்த பிழைக்கு பிராயசித்தம் தேடினாள்…

 

மாலை வெகு நேரம் தாண்டியும் கார்த்திக் வராமல் இருக்க திவ்யா அவனுக்கு அழைப்பு விடுத்தாள்… அவனோ எடுக்க வில்லை மணி பத்துக்கு மேல் தாண்டியும் அவன் வரவில்லை… திருமணமாகி இத்தனை நாளில் கார்த்திக் இப்படி நடந்துக்கொண்டது இல்லை ஒரு வேலை மையூரி எதேனும் கூறியிருப்பாளோ என்று எண்ணினாள்….

 

ஆனால் மையூரியிடம் இதைப் பற்றிக் கூறவேண்டாம் என்று தான் சத்தியம் வாங்கிக் கொண்டோமே என்று நினைக்க… அவள் சிந்தனைகள் கட்டுத்தாண்டி ஓடிக் கொண்டிருக்க கடிவாளம் போட்டு தடுத்து நிறுத்தினாள்…. மணி பதினொன்றுக்கு மேல் தான் கார்த்தி வீட்டை அடைந்தான்… அவன் முகத்தை சந்தேக ரேகைகள் சூழ்ந்துக் கொண்டிருக்க… திவ்யா அவனை உண்ண அழைக்க அவன் அவளிடம் பேசாமல் இருந்தான்…

 

அடுத்த அத்தியாத்தில் காண்போம்….

நன்றி தோழமைகளே

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி
6 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Dhivya Bharathi says:

  Potachi akka


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  BrindhaShankarganesh says:

  Sekiram next podunga romba aarvama eruku


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Santhanalakshmi says:

  Suspense aha poguthu story


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thank u mam


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Ennappa ippati pannitingappa divi pavam


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thank u sir…