Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Veppangulam

Share Us On

[Sassy_Social_Share]

வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 15

அத்தியாயம் : 15

நெற்றி பொட்டில் கைவைத்து யோசித்தான் பாஸ்கரன் “நான் இப்போ என்ன செய்யனும்… அப்பா இலைமறை காயாய் ரம்யா வேண்டாம்னு சொல்லிட்டாரு… அப்போ …நான் எப்படி?????

தலை உலுக்கிக் கொண்டான். ரம்யாவை மறப்பதா?  அது இந்த ஜென்மத்தில் சாத்தியமில்லை. அதுவும் அவள் இப்படி ஒரு இக்கட்டில்இருப்பது தெரிந்தும்  கைவிடுவதா? , முடியவே முடியாது. வேண்டுமானால் என்காதலை என்னுள்ளேயே புதைத்து விடலாம். ஆனால் நிச்சயம் ரவியிடமிருந்து ரம்யாவை காப்பாற்றியே தீருவேன். யார் தடுத்தாலும் சரி.

உறுதியெடுத்தவன்.

 

ரம்யாவை மறப்பதா???  மீண்டும் குழம்பினான்.

பற்பல குழப்பங்கள் புடைசூழ நெற்றியில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவனை கதவு தட்டப்பட்டு எழுப்பியது.

 

மறுபடியும் தந்தையாக இருக்குமா? என்ற விதிர் விதிர்ப்பில் விரைந்து கதவு திறந்தவன் முன் ஐயாகண்ணு நின்றிருந்தான்.

 

“என்ன ஐயாகண்ணு….”

 

” ஐயா…. ஊருக்குள்ள அவசரமா கூட்டம் கூட்டிஇருக்காக…. ஏதோ பிரெச்சனையாம், ஐயா கிளம்பி போயிட்டாக உங்களையும் சீக்கிரம் வரச்சொன்னாக….” என்றவன் அங்கிருந்து அகல

 

அவசரமாக குளித்து கிளம்பி படியிறங்கினான்

 

எதிரில் ரவி படி ஏறிக்கொண்டிருந்தான்.

 

“என்ன சின்ன நாட்டாமை… நாங்க ஊருக்கு போற நேரத்துல நீங்க எங்கயோ வேகமா போயிகிட்டு இருக்கீங்க!!!!?? ”

பாஸ்கரனின் முஷ்டி இருகியது. அவனது முக மாற்றம் ரவிக்கு குதூகலத்தை ஏற்படுத்தியது.

 

“என்ன!! கள்ளக்காதலி கைவிட்டு போறாளேன்னு வருத்தமா???  உன்ன பாக்க பாவமாதான் இருக்கு. அதனாலயே நாங்க புறப்படும் போது நீ நிச்சயமா இங்க இருக்கனும்., உன் முகத்தை நான் பாக்கனும்… எனக்கு எப்பவுமே பாவமான முகத்தை பாக்க ரொம்ப பிடிக்கும் சரியா?  அதனால எங்கயும் போகாம இங்கயே இரு…”

 

‘ நான் வராம உன்ன யாரும் அனுப்ப மாட்டாங்க தம்பி ….அதுக்கெல்லாம் ஆள்செட்பன்னி வெச்சிட்டு தான் போறேன் ‘ மனதிற்குள் சிரித்தவன்

 

“எனக்கு கட்டளையிட நீ யாருடா…? அதுமட்டுமில்லாம உன் மூஞ்சியை பாத்தெல்லாம் பயந்து ஓடற ரகம் நான் இல்ல… ஊருக்குள்ள பஞ்சாயத்து… அந்த கூட்டத்துக்கு நான் போகனும். உனக்கு வேணும்னா நான் வர்றவரைக்கும் இங்கயே இரு, யாரு பாவபட்ட மூஞ்சின்னு பிறகு பாக்கலாம் ”

 

“கான்பிடன்ஸ்.., உன் இந்த கான்பிடன்ஸ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

உனக்கு ஒன்னு தெரியுமா… நம்ம நாட்டு பெண்ணுங்களை ஏமாத்தறதுக்காகவே இந்த தாலி சென்டிமென்ட் கண்டுபிடிச்சிருக்காங்க அதுவும் அவகழுத்துல நான் கட்டினது அவங்க அம்மாவோட தாலி அதனால….நிச்சயமா அவ அதை மதிப்பா!! ”

 

‘அங்க தீர்ப்பு முடிஞ்சதும் இங்க வந்து உனக்கு தான்டா தீர்ப்ப மாத்தி எழுத போறேன். பொறு தம்பி பொறு ‘ மனதிற்குள் பேசியவன்,

 

“உன் பேச்சை கேக்க எனக்கு நேரமில்லை நான் போகனும் ”

 

“இரு இரு… நான் கூட ஊர் கூட்டம் நாட்டாமை தீர்ப்பு, வெத்தலைசாறு, வெங்கல சொம்பு, அரசமரம்…இதெல்லாம் பாத்ததே இல்ல நானும் உன்கூட வரேன்…சரியா… ரெண்டு நிமிஷம்…” என்றவன் ரம்யாவோடு காரில் ஏறினான்.

 

ரம்யா பாஸ்கரனின் கண்கள் சந்தித்துக்கொண்டதும் குதூகலமானான் ரவி.

வேண்டுமென்றே ரம்யாவின் தோள்மீது கைபோட்டு

 

“டார்லிங் இன்னிக்கு நம்ம ஊருக்கு போக போறோம்…இனி ஒரு புது வாழ்கையை ஆரம்பிக்கலாம். நீயும் பழசையெல்லாம் மறந்திடு. நானும் மறந்துடறேன் ”

என்றவன் ரிவர்வியூ கண்ணாடியில் இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கரனை கிண்டலாக பார்த்தான். அவனது கண்களோ அனலை கக்கிக் கொண்டிருதன.

 

ரம்யாவோ…ரவியின் பிடியிலிருந்து விலகத்துடித்தாள்.

 

அதனாலோ என்னவோ குறுக்கு வழியாக சென்று விரைவாக கூட்டம் நடக்கும் இடத்தை அடைந்தான் பாஸ்கரன்

 

இவனது காரை பார்தும் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். கீழே இறங்கி அவர்களின்  வணக்கத்தை ஏற்றவன். முன்னே சென்று மணிவண்ணணின் அருகில் அமர்ந்து கொண்டான்.

 

“ம்… அதுதான் சின்னய்யா வந்துட்டாருல்ல, பிரெச்சனை என்னன்னு சொல்லுங்கப்பா ” என்றது ஒரு கரைவேட்டி பெரிசு.

 

“பிராது கொடுத்தது யாரு? ”

என்ற கேள்வி எழுப்பினான் பாஸ்கரன்.

 

“நான் தானுங்கய்யா ” என்றார் ஒரு பெரியவர் கைகட்டி குனிந்து நின்று

 

“என்னப்பா நடந்தது?  விளக்கமா செல்லு ” – மணிவண்ணன்

 

“ஐயா …எனக்கு ஒரே பொண்ணுங்க.. கடன ஒடன வாங்கி பட்டணத்துல படிக்க வெச்சு இப்போ பெரிய பட்டமெல்லாம் வாங்கிட்டா… எடுத்ததுமே ஒருலட்சம் சம்பளம் கிடைக்கும் வேலையும் கிடைச்சிருச்சு.,நாளை கழிச்சு வேலையில சேரனும்..

அதுக்குள்ள இந்த பாவி………..” மேலே கூறமுடியாமல் துண்டால் வாய் பொத்தி அழுதார். அவருக்காக அவரது தம்பி முன்வந்து பேசினார்

 

“ஐயா ……….இந்தா… எதிரில் நிக்கிறானே, இவன் எங்க அக்கா மவனுங்க…. படிப்பு மண்டையில ஏறல… கெட்ட சவகாசம் வேற…சுயமா சம்பாதிக்க துப்பில்லை… எங்க மகளுக்கு பட்டனத்துல வேலை மாசம் ஒரு லட்சம்னு தெரிஞ்சிகிட்டு இன்னிக்கு காலையில கோயிலுக்கு சாமி கும்புட வந்த பொண்ணுக்கு கட்டாயத்தாலி கட்டிபுட்டான் … இப்ப என்ன செய்யறதுன்னே தெரியலங்கய்யா… அதுதான் ஊர் பெரிய மனுஷங்கள கூட்டி கேட்டுறலாம்னு நானும் அண்ணனும் பிராது கொடுத்தோமுங்க.

 

சட்டென பாஸ்கரனின் கண்கள் ரம்யாவை நோக்கின அவளும் கண்களில் நீர் தேங்க அவனைத்தான் பார்த்திருந்தாள்.

 

ரவியோ “அட இது நம்ம கேசு… எத்தன படம் பாத்துருக்கோம்…. ‘சொந்த மாமன் மவள தூக்கிட்டு போய் கல்யாணம் முடிக்கற தெல்லாம் நாட்டுல நடக்கறது தான். .. தாலி கட்டியாச்சு இனி ரெண்டு பேரும் புருஷன் பொண்சாதின்னு’ தீர்ப்பு சொல்ல போறாரு இந்த நாட்டாமை ” என்று இருமாப்பாக பேசினான்

 

மணிவண்ணன் எதிரில் நின்றவனிடம் பேசலானார்

 

“என்ன கோபாலு இதெல்லாம்… நீ ஏன் இப்படி செஞ்ச? ”

 

கை கட்டி நல்லவன் போல் நின்று அவன் பேசிய விதமே மணிவண்ணனுக்குள் ஏதோ பரைசாற்றியது.

 

“எப்பவுமே எனக்கு கனகம்னா கொள்ளை பிரியமுங்க. அதுவும் என் மேல பிரியமாதான் இருந்துச்சு… ஆனா பட்டனத்து படிப்பு சவகாசம் இப்போ ஒரு லட்சம் பணம் வேற சம்பாதிக்க போவுதா அதான் என்ன மதிக்கவே மாட்டேங்குது. இது சரிப்படாதுன்னு தான் தாலி கட்டினேன்..

ஏன் நான் தாலி கட்ட கூடாதா? எனக்கு முறையில்லையா?  இல்ல உரிமைதான் இல்லையா?”

 

“உனக்கு உரிமையில்லைன்னு யாருப்பா சொன்னது….. எல்லா உரிமையும் உனக்கு இருக்கு… இந்தா புள்ள நீ என்ன சொல்லுற?”

 

கண்ணீர் கண்ணங்களில் வழிய தலைகவிழ்ந்திருந்த அந்தப்பெண் கனகம்

“ஐயா….எனக்கு மச்சான கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசையே இருந்ததில்லீங்க…

அதுமட்டுமில்லாம.,நான் பண்ணன்டாம் வகுப்பு முடிச்சதுமே அப்பாவும் அம்மாவும் எம்புள்ளய கட்டிக்கோய்யான்னு கேட்டப்போ ‘அது சரியான அட்ட கருப்பு.,அத எவன் கட்டிப்பான்னு ‘ சொல்லி அனுப்புனது இதே மச்சான் தான். அதுக்கு சாட்சி இருக்குங்க. அப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமாதான்யா இருந்தது, அதுக்கப்புறம் தான் நான் மேல்படிப்பு படிக்க முடிஞ்சது.

 

இப்போ எனக்கு பெரிய வேலை கிடைக்கப்போகுதுன்னு தெரிஞ்சதும், வேலைக்கு போகாம கடைசி வரைக்கும் என் உழைப்புலயே காலம் தள்ளலாம்னு யோசிக்குது ஐயா. அதுக்காக ஆசை அன்புன்னு உங்களையும் ஏமாத்துது ஐயா ”

 

சில நிமிடம் அமைதிகாத்த மணிவண்ணன்… பின் பேசலானார்.

 

“ஊர் மக்கள் கிட்ட நான் ஒன்னு கேட்டுக்கறேன்

என்மேல எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் வெச்சிருக்கரீங்களோ, அதே அளவு எம் மவன் பாஸ்கரன் மேலயும் இருக்குதானே? ”

 

“நிச்சயமாங்கய்யா ” என்றனர் ஒட்டுமொத்தமாக

 

இந்த வழக்குக்கு பாஸ்கரன் தம்பி தான் தீர்ப்பு சொல்லப்போவுது ” என்று மணிவண்ணன் கூறியதுதான் தாமதம்  அங்கே பேச்சுசத்தம் வானை பிளந்தது.

 

“அமைதி….அமைதி ” என்று மணியக்காரரின் முழக்கத்திற்குப் பின்தான் அமைதியடைந்தனர்.

 

“நீங்க தான் தம்பி தீர்ப்பு சொல்லனும் ”  என்று மணிவண்ணன் பாஸ்கரனிடம் கூற

 

வார்த்தை தொண்டைக்குழியில் சிக்க மென்று விழுங்கினான் பாஸ்கரன்

இருப்பினும் கண்களை மூடி தன் மனதை சமநிலை படுத்தி சில வினாடி சிந்தித்தவன்

 

“பூசாரி ஒரு பானையில பால் எடுத்துட்டு வாங்க ” என்ற கட்டளையை பிறப்பித்தான்

 

உடனே அங்கே பால் நிறைந்த பானை வைக்கப்பட்டது

 

“இந்தாம்மா கனகா, நான் சொல்லுறதை நல்லா கேட்டுக்கோ… கல்யாணங்கறது ஆயிரம் காலத்து பயிர்னு சொல்லுவாங்க, மனசு சங்கமிச்சு நடக்குறது தான் கல்யாணம். அன்பு, பாசம், காதல் இதுதான் மூனு முடிச்சா போட வேண்டியது. அப்படி கட்டினாதான் அது தாலி. ஆனா உன் கழுத்துல கிடக்கறது வெறும் கயிராதான் எனக்கு தோனுது. தாலியை புனிதமா நினைக்கறதும், பாவமா நினைக்கறதும் அத வாங்கிக்கிட்ட அந்த பொண்ணை பொருத்தது. நீ இந்த தாலிக்கு மதிப்பு கொடுத்து புனிதமா ஏத்துகிட்டா எதிர்ல நிக்கிற உன் மச்சான் பக்கத்துல போயி நின்னு இந்த சபையோட ஆசிர்வாதத்தோட உன் வாழ்க்கையை ஆரம்பி…

அதையே பாவமா நினைச்சு அந்த பாரத்தை இரக்கி வைக்க துடிச்சன்னா, இதோ இந்த பால் பானைக்குள்ள தூக்கி போட்டுடு…இதோட உனக்கும் இந்த கோபாலுக்கும் எந்த ஒட்டும் ஒறவும் கெடையாது, அதமீறி ஏதாவது கலாட்டா செஞ்சா அவனுக்கு தன்டனை கிடைக்கும். இதுதான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு…முடிவு உன் கையில் தான் மா ” என்று முடித்தவனை பாராட்டும் விதமாக பார்த்தார் மணிவண்ணன்.

ஆனால் பாஸ்கரனோ ரம்யாவை பார்த்தான்.

 

கூட்டத்தில் இருந்த அத்தனை பேரின் கண்களும் கனகத்தையும் அவள் கழுத்தில் கிடந்த மஞ்சள் தாலியையுமே மாற்றி மாற்றி பார்த்தது.

 

கனகத்தின் கைவிரல்கள் நடுங்கிய வண்ணம் தாலியை பற்றின.

 

அதுவறை முந்தாணைக்குள் முகம் புதைத்து அழுதுகொண்டிருந்த கனகத்தின் தாய் மல்லிகா அழுகையினூடே வெடித்தார்.

“ஏண்டி உன் கை நடுங்குது?  நான் சொல்லிக்கொடுத்தபண்பாடும், பாரம்பர்யமும் தாலியின் புனிதமும் உன்னை தடுக்குதா??  நல்லா கேட்டுக்க அப்படி சொல்லிகொடுத்த நான்தான் இப்பவும் சொல்றேன். இந்த பச்சோந்தி கையால தாலிவாங்கி உன் கழுத்து நிறையரதுக்கு அத அத்தெரிஞ்சிட்டு நீ முன்டச்சியா நிக்கலாம், காலம்பூரா நான் கஞ்சி ஊத்தறேன். அத்து எரி டீ…”

 

தாயின் பேச்சால் சிறுதெம்புற்றவள்  மெல்ல மெல்ல தாலியை கழட்டினாள், அடிமேல் அடிவைத்து பால் குடத்தை நெருங்கினாள்.

 

ஏதேதோ உளரிக்கொண்டு திமுறி அவளை தடுக்க முயன்ற கோபாலை நான்கு பேர் இறுக பிடித்துக்கொண்டனர்

 

கண்ணீர் வழிய அந்தத் தாலியை பால் குடத்தினுள் போட்ட கனகம் அதிர்ந்தாள்

 

அந்த பால் குடத்தில் விழுந்தது அவளுடைய தாலி மட்டுமல்ல. எதிரில் நின்றிருந்த ரம்யாவுடைய தாலியும் தான்… அவளது முகத்தில் நிம்மதி படர்ந்தது.

 

ஊரே ஸ்தம்பித்து நின்றுவிட்டது, பாஸ்கரன் இருப்பிடத்திலிருந்து எழுந்துவிட்டான். அவனது கைபற்றி உணர்ச்சி வேகத்தில் அவன் எதுவும் செய்துவிடாதபடி காத்த மணிவண்ணனின் கண்களில் கூர்மை ஏறியது. ரவியின் கண்களில் கொலைவெறி தெரிந்தது.
6 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sabeena Begam says:

  ரொம்ப￰￰ நல்ல முடிவு விருப்பம் இல்லாத வாழ்வு கொடுமை அதில் இருந்து விடுபடுவதே நல்லது


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Shamika Nazruk says:

  மிக அழகிய கிராமத்து காதல் கவிதை போன்றதோர் கதை அருமை..அடுத்த அத்தியாயத்தை போட ஏன் இத்தனை தாமதம் கதாசிரியரே….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Editor out of station… nalaikku update pottuduvaanga…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Next ud podunga please


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Niveta Mohan says:

  Semma itha ithathaan ramya ethirpaarthen.. Ini baskar paarthupaan


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Achcho super po sema thalppa

error: Content is protected !!