Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-21

அவனை உண்ண அழைக்க… அவனோ கையை தூக்கி நிமிர்த்தி போதும், பேசாதே என்றான்… ‘ மாமா என்னாச்சி, ஏன் கோவமா இருக்கிங்க’… அவனோ பேசாமல் சென்று படுத்துக்கொள்ள… அவன் பேசாமல் இருக்க…. என்ன காரணமென்று யோசித்தால்…. அவளுக்கோ புலப்படவில்லை… அவனை எழுப்பவும் அவளுக்கு மனம் வரவில்லை…. கார்த்தியோ அவளுக்கு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டான்…

 

‘மாமா நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் …. வந்து சாப்பிடுங்க… ப்ளீஸ் என்மேல என்ன கோபம் இருந்தாலும் சாப்பாட்டு மேல காட்டாதிங்க’ என்றாள்… அவனோ அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்… அவளோ யாராக இருக்கும் இந்நேரத்தில் என்று தன் அலைபேசியைப் பார்க்க அவனோ’ உங்கள் கடமையை சரிவர செய்ததுக்கு நன்றி… நான் உண்டு விட்டேன்… தாங்கள் உறங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்ற குறுஞ்செய்தியை கண்டவள்… கோபம் தலைக்கேற …. அதனை அணைத்து விட்டு… அவன் முதுகு புறத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க … அவனோ படுத்ததும் உறங்கிவிட… அவள் உறங்காமல் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டிருந்தாள்…

 

காலை எழுந்ததும் திவியோ அவன் பின்னாடியே ‘மாமா மாமா’ என்று அலைந்துக் கொண்டிருக்க அவனோ அவளை கண்டுக் கொள்ளாது தன் காரியத்தில்  கண்ணாக இருந்தான்… அவள் சாப்பிட்டு செல்லுமாறு சொல்ல, அவன் காதில் வாங்காததுப் போல் தன் மெர்சிடர்ஸ் பென்சில் பறந்து சென்றான்…

 

கௌரி அவ்வளவு சொல்லியும் அவள் உணவு உண்ண மறுத்தாள்… இரவு அவன் வருகைக்காக அவள் ஹால் ஷோபாவில் காத்துக் கொண்டிருக்க… அவன் அவளைக் கடந்து சென்ற வேளையில் கௌரி அவனைத் தடுத்து நிறுத்தினாள்… ‘கார்த்திக் உங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு நான் கேட்க விரும்பல ஆனா அவ காலைல இருந்து சாப்பிடல’ என அவன் அவளை ஒரு பார்வை பார்க்க… அவன் பார்வை தாங்க முடியாமல் கீழே குனிந்துக் கொண்டாள்…

 

‘சரி  அவளை சமாதானப் படுத்தி சாப்பிடவை’ என்றார் அவனோ அவளை மேலே வருமாறு அழைத்துச் சென்றான்… பின்பு தன் உடலை சுத்தம் செய்துக்கொண்டு அவன் வெளியே வர… அவனைக் கண்டு அவள் எழுந்து நிற்க….

 

அவன் அவளை அமரச் செய்து… கீழேச் சென்று உணவுக் கொண்டு வந்தான்… தன் பார்வை தன் கணவனையே தொடர… அவன் அவளிடம் பேசாமல் அவளுக்கு ஊட்ட அவள் வாய் திறக்காமல் மௌனமாய் வேண்டாமென்று தலையசைத்தாள் …

 

அவனோ உனக்கு வேண்டாம் ‘என்னோட குட்டி பாப்பாவுக்கு பசிக்கும் சோ நீ சாப்பிட்டு தான் ஆகனும், நான் சாப்பிடனும்னா நீங்க எங்கிட்ட ரீசன் சொல்லனும்’ அவனோ ‘ நீ இப்போ சாப்பிடு அப்புறம் நான் சொல்றேன்… என்றவனை. ‘அப்போ உங்களுக்கு நான் முக்கியமில்லை உங்க குழந்தை தான் முக்கியம்’ என அவனிடம் செல்ல கோபம் கொண்டு … அவள் கண்கள் கலங்கி விட அதைக் கண்டவன்,  அவன் கோபமெல்லாம் பறந்து சென்றுவிட, நின்று அழுதுக் கொண்டிருந்தவளை இடையோடு அணைத்து தன் மடி மீது அவளை அமர்த்தி மூக்கோடு மூக்கு உரச அவளை சமாதானம் செய்தான்…

 

அவளோ விடாமல், ‘ ஏன் என்னாச்சி திடீர்னு எங்கிட்ட கோபம், நான் உங்ககிட்ட முன்னாடியே சொல்லிற்கேன், எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கனும்னு’… என்று  சொல்ல, அவன் முகம் மாறுவதை அறிந்தாள்… ‘ இல்ல குட்டிமா இந்த டாப்பிக் வேண்டாம்  வேற பேசலாம், எனக்கு யோசிச்சி யோசிச்சி எங்க ஆரம்பிச்சனோ அங்கையே வந்து நிற்கிறேன், சோ, எனக்கு தலைய வலிக்குது…

 

நீயும் சொல்லமாட்ட அன்னக்கி நீ சொன்னப்ப நான் முழு சுயநினைவுல இல்ல சரி நீயும் எப்பையாவுது சொல்வேன் பார்த்தா, வாய திறக்கமாட்டேங்கிற, உன் கிட்ட இருந்து எப்புடி உண்மைய வாங்குறதுனு தெரியல  அதான் நான் பேசாம இருந்தேன்…. சரி இப்பையாவுது சொல்லு’… என்றான்.

 

அவளோ திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்தாள்

 

‘ என்ன குட்டிமா அப்படி பாக்குற… நான் உங்கிட்ட ரீசன் கேட்டேன் என்றான்…. அன்னைக்கு எதுக்கு அப்படி சொன்ன… நான் உங்கள ஏமாத்திட்டேன் சுயநலமா உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டேனு ஏன் சொன்னே… ஐ வான்ட் தி ரீசன் ‘ என்றான்

 

அது இல்ல மாமா மையூரி உங்கள காதலிச்சானு எனக்கு தெரியாது… அதனால தான் நான் உங்கள சுயநலமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன் சொன்னேன்’… என்று அவள் கூறிய கூற்றை  ஏற்றுக்கொள்ள அவன் மனம் மறுத்தது…

 

ஆனால் அவள் முகத்தில் எந்தவித மாற்றங்களையும் அவனால் கண்டுகொள்ள முடியவில்லை,

 

அவள் சொல்லும் காரணத்தை அவன் நம்பாமல் ‘ உண்மையாவா குட்டிமா இதுதான் ரிசனா’ என்று அவளை குடைய , அவனை சமாளிக்க முடியாமல் அவனை விட்டு இறங்க எத்தனிக்க…

 

அவளை பிடித்து இழுத்து ‘ குட்டிமா என்னாச்சி இதுதான் உண்மையா’ என்று அவளைப் பார்த்துக் கேட்டான் அவளோ ‘ மாமா இதுதான் உண்மை’ என்று அவனை சமரசம் செய்தாள்….

 

சரி ‘ என் குட்டிமாவ நான் நம்புறேன் ஓகே வா’ என்று அவள் இதழில் அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்தான்… அவள் மூச்சுகுத் திணரும் பின்பே அவளை விடுவித்தான்…

 

அவள் வெட்கம் கொள்ள… அவள் அழகை அவன் பருகிக் கொண்டே… ‘சரி வா சாப்பிடலாம்’ என்றான்.

 

‘மாமா நீங்க சாப்பிடலையா’ என்று பதறி ‘சீக்கிரமா வாங்க சாப்பிடலாம்’ என அவன் நலனை கருத  அவளது அக்கறையில் கார்த்திக்கின் மனம் முழுவதுமாக  அவளிடம் சரணடைந்தது.

 

அவனோ ‘என் குட்டிமாவும்’ அவள் வயிற்றை அணைத்து ‘என் அம்முவும் சாப்பிடாம நான் எப்படி சாப்பிடுவேன்’ என்று அவளைப் பார்த்துக் கேட்டான்…

 

தான் சாப்பிடாமல் இருப்பதை தாங்கிக் கொள்ளாமல் தனக்காக உருகும் அவனின் அன்பில் அவள் மனம் கரைந்து கண்களில் நீர் கோர்த்தது….

 

தன்னைப் பற்றி முழுவதுமாக தெரிந்தால் அவன் எப்படி இதை ஏற்றுக்கொள்ளப் போகிறான்…

 

ஒரு பக்கம் அவனிடம் தன் நிலையை மறைத்தாலும்…. இன்னொறு பக்கம் அவன் காதலில், அன்பில் தன்னை முழுவதுமாக தொலைத்தாள்….

 

மேற்கொண்டு குற்ற உணர்வுகள் அவளை தாக்கின… தன் மேல் அளவு கடந்த நம்பிக்கை கொண்டிருக்கும்… தன் பாதி உயிரான கணவனிடம் மறைக்கும் நிலைக்கு தான் தள்ளப்பட்டதை நினைத்து அவள் மனதில் பாரம் ஏறிக் கொண்டேயிருக்க… தன் மன வருத்தத்தை யாரிடம் கூற வழியின்றி அழுதாள்…

 

கடவுளிடம் வேண்டினாள் தன் ஆயுளை நீடிக்க கூடாதா என்று அவள் மனம் மௌனமாக கண்ணீர் வடித்தது…

 

அவளுக்கு அவன் ஊட்டி விட அவள் அழுதுக் கொண்டே கவளத்தை வாங்கினாள்… ‘ குட்டிமா அழாத.. பேபி இப்போ தூங்குவா நீ வேற அழுது டிஸ்டப் பண்ணாத’ என அவளோ சிரித்துக் கொண்டு நீங்க என்னமோ பாத்த மாதிரி பேசுறீங்க’ என.

 

எனக்கு தெரியாதா என் அம்மு பேபிய பத்தி’ என்று தன் குழந்தைக்கு இப்பொழுதே வக்காளத்து வாங்கினான்…

 

மன நிறைவுடன் அவனைப் பார்த்து … நீங்களும் சாப்பிடுங்க என்று அவனுக்கு அவள் ஊட்டினாள்…

 

சாப்பிட்டு முடித்த பின் அவளை தன் கையில் ஏந்திச் சென்று கட்டிலில் கிடத்தி அவள் அருகில் படுத்துக் கொண்டான் ‘ அவளை அணைத்து அவள் மார்பில் முகம் புதைத்து நிமிர்ந்தான்… குட்டிமா என்கிட்ட எதுவா இருந்தாலும் சொல்லு குட்டிமா … என்கிட்ட எதுவும் மறைக்காத ‘ … என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்…

 

அன்றைய இரவு அவர்களை சுற்றி காதல் வார்த்தைகள் தவிர காம களியாட்டம் அரங்கேராமல் இருவருக்கும் அன்றைய இரவு மறக்க முடியாத இரவாக இருந்தது…

 

இதற்கிடையில் மையூரியோ தன் பணியிடத்தை மாற்றிக் கொண்டு… வடமாநிலமான தன் பூர்விகத்துக்கு அடுத்த படியாக குன்றுகள் நிறைந்த பிரதேசமான பூனாவிற்கு பணி இடமாற்றம் செய்துக் கொண்டு விடைப் பெற்று சென்றாள்…

 

கார்த்தியோ மையூரி முடிவே சரி என்றும், தனக்கும் திவ்யாவுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் அகன்ற நிம்மதியில் இருந்தான்.தனக்கும் தன் மனைவிக்கும்  இடையே பிரச்சனை   ஏற்படுத்திய மையூரியை  அடியோடு  வெறுத்தான்.

 

தன் மனைவி மையூரியிடம் தன்னை மணமுடித்துக் கொள்ளுமாறு கேட்ட செய்தியை அறிந்தாள் அதனை எப்படி எதிர் கொள்வான்…

 

மறுநாள் காலையில் திவ்யாவை அழைத்துக் கொண்டு தஞ்சை மெடிக்கல் கல்லூரிக்கு சென்றான்….

 

ஏனெனில் திவியின் தம்பி ராஜிற்கு நீட்த் தேர்வின் மூலம் மெடிக்கல் கௌன்சிலிங்கில் தஞ்சை  மெடிக்கல் கல்லூரியில் சீட் கிடைத்தது…

 

கார்த்திக் திவியிடம் பிரைவேட் கல்லூரியில் தான் இடம்  வாங்கிக் கொடுத்து பணம் கட்டி படிக்க வைப்பதாக எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் வேண்டாமென்று மறுத்துவிட … ராஜை கார்த்தி அணுக அவனும் தன் தமக்கையை ஆமோதித்து வேண்டாமென்று மறுத்தான்… பின்பு தன் சொந்த முயற்சியால் மதிப்பெண் பெற்று மருத்துவனாக தேர்ந்தான்.

 

இன்று முதன் முதலில் கல்லூரிக்கு செல்கிறான். ஆகையால் தன் முயற்சிக்கு பக்க பலமாய் இருந்து தன் மரியாதைக்குரிய மாமனையும் தன் பாசமிகுந்த தமக்கையும் அழைத்திருந்தான்…

 

திவிக்கு இது நான்காம் மாதம் என்பதால் அவளை வெளியில் பயணிக்க அனுமதித்து அவளுடன் அவனும் வந்தான்….

 

அவர்கள் கிளம்பும் வேலையில் அனுயாவோ ‘ அண்ணா நானும் வரேன்’ என்று ஒத்த காலில் நிற்க… கார்த்தியோ அவளை ‘ ஏய் பிசாசு காலேஜ் போகலையா’ என அவளோ மனதில் ‘என்ன காலேஜா என் ஆளு டாக்டர் படிக்க போறாரு… இன்னைக்கு பர்ஸ்டே வேற… இதுல எனக்கு காலேஜ் ரொம்ப முக்கியமா’…  என்று எண்ணிக்கொண்டிருக்க… அவளோ ‘அண்ணா இன்னைக்கு காலேஜ் கல்சுரல்ஸ் சுத்த போர் அதான் நான் போல… வாலு நம்ப முடியலையே’ என்றான்…

 

திவ்யாவின் பார்வை அவளை தொடர அனுயா வார்த்தைகள் தடுமாறினாள்.’ ஏன் அண்ணி இப்படி பாக்குறிங்க… உங்க ரொமான்ஸ்க்கு நான் தடையா இருக்க மாட்டேன் ஓகேவா ‘ என்று ‘ வேணுனா நான் கண்ண முடிக்கிறேன்’  என அவளை திவ்யா துரத்த கார்த்தியோ ‘ குட்டிமா என்ன இது குழந்தை மாதிரி’ அவளை துரத்திக் கொண்டு ஓடியவளை பிடித்திழுத்து நிறுத்தினான்….

 

நன்றி தோழமைகளே

 

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி
2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Thank u sir


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Arumai kathai nantraka selkirathu.

error: Content is protected !!