Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் - 67

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல்- 93

அத்தியாயம் – 93

யாருடைய விருப்பு வெறுப்பைப் பற்றியும் அவன் கவலைப்படவில்லை. அந்த குட்டி பூங்கொத்தை பார்க்காமல் கழியும் ஒவ்வொரு நொடியும் யுகமாய் மாறியது அவனுக்கு. அதனால்தான் முன்பெல்லாம் மாலை மட்டும் மாமனார் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தவன் இப்போது கூடுதலாக காலை வேளையிலும் ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டு அலுவலகத்திற்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.

அலுவலகத்திலிருந்து எத்தனை மணிக்கு திரும்பினாலும் ஒரு முறை அந்த பால் முகத்தை பார்த்தால்தான் அன்று இரவு அவனுக்கு உறக்கம் வரும். அப்படியும் சில நாட்களில் ஏக்கத்துடன் வெகு நேரம் விழித்துக் கிடப்பான். அந்த நேரத்தில் மனைவிக்கு அழைத்து அவளுடைய தூக்கத்தையும் கெடுக்க மனம் வராமல், குழந்தைகள் சம்மந்தப்பட்ட வலைத்தளங்களில் நுழைந்து அவர்களுடைய உலகத்தை அறிந்துகொள்ள முயல்வான். அந்த முயற்சியில் நிறைந்தது நரேந்திரமூர்த்தியின் வீடு.

‘அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில குடை பிடிப்பானாம்…’ – குட்டிக்கண்ணனுக்கு அவன் வாங்கி குவித்திருக்கும் பொருட்களை வைக்க இடமில்லாமல் திணறும் பிரபாவதி, யாருக்கும் தெரியாமல் அடிக்கடி வாய்க்குள் முணுமுணுக்கும் வசனம் இது.

தொட்டில்… ஊஞ்சல்… ம்யூஸிக்கல் வாக்கர்… என்று அத்தனையும் ஒன்றுக்கு மூன்றாக வந்து சேர்ந்ததோடு அல்லாமல் சின்னச்சின்ன விளையாட்டு சாமான்கள் முதல் ஆடை அணிமணிகள் வரை அனைத்தும் பெட்டிப் பெட்டியாய் வந்து இறங்கியது. பிறந்த குழந்தைக்கு தொட்டில் வாங்கியது சரிதான்… ஆனால் ஊஞ்சலும் வாக்கரும் எதற்கு? அதெல்லாம் அந்தந்த காலகட்டத்தில் வாங்கிக்கொள்ளக் கூடாதா? இதையெல்லாம் எங்கு கொண்டு வைப்பது என்று எரிச்சல்பட்டாள்.

பாதி பெட்டியை திறந்து பார்ப்பதே இல்லை. அதை பிரித்து ஒரு மூலையில் போட்டு வைப்பதை விட அது பெட்டியோடு ஒரு ஓரமாக எங்காவது இருந்துவிட்டு போகட்டும் என்று லாஃப்டில் அடுக்கி வைத்துவிடுவாள்.

கொரியர்காரன் வந்தாலே அவளுக்கு பயமாக இருக்கும். ‘இப்போது எதை ஆடர் செய்து வைத்தானோ!’ என்று திட்டிக் கொண்டே போய்தான் கையெழுத்திடுவாள். வந்திருக்கும் பார்சல் அளவில் பெரிதாக இருந்தால் முகம் கடுகடுவென்று மாறிவிடும். ஆனால் யாரிடம் சொல்ல முடியும்? அந்த மாத்திரை மேட்டருக்கு பிறகுதான் அவளுடைய பேச்சிற்கு மதிப்பு தரைமட்டத்திற்குக் குறைந்துவிட்டதே…

நாட்கள் இப்படியே நகர்ந்துக் கொண்டிருந்தன. குழந்தை முகம் பார்த்து சிரிக்க துவங்கினான். குப்புத்துக் கொண்டு தவழ முயன்றான்… தினமும் வரும் தந்தையை அடையாளம் கண்டு அவனை பார்த்ததும். “ஊ… ஊ…” என்று சத்தம் எழுப்பினான். அதை அவனுடைய மனைவி குறிப்பிட்டுக் காட்டினாள்.

“பாருங்க… உங்க பையன் உங்களை பார்த்ததும் எப்படி சத்தம் போடறான்!” – வாழ்க்கையில் இதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும் ஒரு ஆண்மகனுக்கு. நிறைந்த மனதோடு மனைவியை வீட்டுக்கு அழைத்தான்.

“பையனுக்கு பேர் வைக்கணும். ஃபங்ஷன் பெருசா பண்ணனும். எப்போ வீட்டுக்கு வர்ற?” – அவள் எதிர்மறையாக எதுவும் சொல்லிவிட மாட்டாள் என்கிற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. காரணம்… குழந்தை பிறந்ததிலிருந்து மதுரா அவனிடம் சுமூகமாகத்தான் பேசிக் கொண்டிருந்தாள். இவன் குழந்தையை கொஞ்சும் போது அவள் கூட இருந்து ரசிப்பாள். இவன் இல்லாத நேரத்தில் குழந்தை ஏதாவது புதிதாக செய்தால் அதை செல் போனில் வீடியோவாக பதிவு செய்து அவனுக்கு போட்டு காட்டுவாள். குழந்தையின் குறும்புகளையும் சேட்டைகளையும் அவனிடம் பகிர்ந்து கொண்டு சிரிப்பாள். மகன் பிறந்து மனைவியின் கோபத்தை கரைத்துவிட்டான் என்பது தேவ்ராஜின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையோடுதான் அவளுடைய பதிலுக்காகக் காத்திருந்தான். ஆனால் அவளிடம் எந்த மறு மொழியும் இல்லை.

தன் மடியில் உறங்கும் குழந்தையின் முகத்திலேயே பார்வையைப் பதித்து சிலை போல் அமர்ந்திருப்பவளைக் கண்டு துணுக்குற்ற தேவ்ராஜ், “என்னால தனியா இருக்க முடியல. நீயும் குழந்தையும் எனக்கு திரும்ப வேணும்… ப்ளீஸ்…” என்றான் அவள் கையில் தன் கையை வைத்து.

உதட்டைக் கடித்துக் கொண்டாள் மதுரா. அவள் உள்ளம் போராடியது. சூழ்நிலை மாறும் போது மனநிலையும் மாறும் என்பார்கள். மதுராவின் மனநிலையும் மாறிதான் இருந்தது. தேவ்ராஜின் மீது அவளுக்கு இருந்த எதிர்மறை உணர்வுகளெல்லாம் மனதிலிருந்து மறைந்திருந்தது. ஆனாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு தயக்கம்… அவனுடைய அழைப்பிற்கு இசையை முடியாத மனச்சிக்கல்…

“முன்னாடி நடந்த மாதிரி இனி எதுவும் நடக்காது… நம்பு..”

“………………………..”

“இப்படி அமைதியாவே உட்கார்ந்திருந்தா நா எப்படி புரிஞ்சுக்கறது?”

“………………………..”

“ஏதாவது பேசு மது…”

“என்னோட மனசு இன்னமும் உனக்கு புரியலையா?”

“நல்லா புரிஞ்சதுனாலதான் பயப்படறேன் தேவ். உங்களோட அதிகப்படியான அன்பு என்னை சாஃபக்கேட் பண்ணுது… மூச்சு முட்டுது… உங்களோட ஆட்டிடியூடை என்னால ஹாண்டில் பண்ண முடியல” – இப்போது அவன் பதில் சொல்ல முடியாமல் அமைதியாகிவிட்டான்.

ஓரிரு நிமிடங்கள் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தான். பிறகு அவளுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்து, “ஐம் ஒர்கிங் ஆன் தட்…” என்றான்.

“ஒர்கிங் ஆன் வாட்?”

“என்னோட டெம்பர்… எமோஷன்ஸ் எல்லாம் உன்ன ஹர்ட் பண்ணாம பார்த்துக்கறேன்”

“எப்படி?”

“என்னால முடியும். நீ கூட இருந்தா எல்லாமே முடியும்…” என்றான் நம்பிக்கையோடு. அவள் இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

“ஒண்ணு… உங்களை ஹாண்டில் பண்ணற மெச்சூரிட்டி எனக்கு வரணும்… இல்ல என்னை புரிஞ்சுகிட்டு எனக்கான ஸ்பேஸை கொடுக்கற மனப்பக்குவம் உங்களுக்கு வரணும். ரெண்டுல ஏதாவது ஒண்ணு நடந்தாதான் நாம வாழலாம். நமக்குள்ள இன்னொரு சண்டை வரா கூடாது தேவ். அதை நம்ம பையன் பார்க்கக் கூடாது. பிரச்சனைகளை பார்த்துப் பார்த்து முரட்டுத்தனமா நீங்க வளர்ந்துடீங்க. இன்னொரு முரடான என்னோட பையனை வளர்க்கறதுல எனக்கு விருப்பம் இல்ல…”

தேவ்ராஜின் முகம் சிறுத்துவிட்டது. குரலை உயர்த்தவில்லை என்றாலும் அவளுடைய மறுப்பு அழுத்தமாய் இருந்தது. அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“நான் அப்பா இல்லாம… அவரோட அன்பு இல்லாம… கைடன்ஸ் இல்லாம வளர்ந்தேன். என்னோட பையனும் அப்படி வளரக் கூடாது. அதை நா அலோ பண்ண மாட்டேன்” என்றான் முகம் சிவக்க. அவன் கண்களில் தெரிந்த சீற்றத்தைக் கண்ட மதுரா,

“இதோ… உங்க மாற்றத்து சாட்சி… எவ்வளவு கோவம்! உங்களால மாற முடியாது தேவ். உங்களுக்கு பிடிக்காத எதையும் நா செய்யக் கூடாது. செஞ்சா அதை தடுக்க நீங்க எந்த எல்லைக்கும் போவீங்க… எவ்வளவு நாள் நா இப்படி உங்க நிழலாவே வாழறது? எனக்குன்னு எண்ணங்கள்… ஆசைகள் இருக்காதா? இருக்கக் கூடாதா?” என்றாள் ஆற்றாமையுடன்.

மதுராவின் வார்த்தைகள் ஆணியறைந்தது போல் அவன் மனதில் பதிந்தது. அவள் சொன்னதில் இருந்த உண்மை அவனை சுட்டது.

இப்போது அவனுக்கு வந்த கோபம் நியாயமான கோபம் தான்… எல்லை மீறாத கோபம் தான். ஆனால் அவளுடைய பிடிவாதம் அதிகரிக்கும் போது இந்த நியாயமான கோபம் அநியாயத்திற்கு எல்லை மீறும் என்பதும் உண்மைதான். அதை அவனுடைய உள்மனம் உணர்ந்து, தவறென்றும் ஏற்றுக் கொண்டது.

இந்த வாழ்க்கை அவனுடையது மட்டும் அல்ல… அவனுக்கும் அவளுக்கும் பொதுவானது. முடிவெடுக்கும் உரிமை அவனுக்கு மட்டும் அல்ல… அவளுக்கும் இருக்கிறது. அவளுடைய விருப்பங்களை இவன் அனுசரிக்கத்தான் வேண்டும். தன்னுடைய விருப்பங்களை அவள் மீது திணிக்காமல் விலகத்தான் வேண்டும்… அதுதான் நியாயம்…

மனைவியையும் குழந்தையையும் தன்னோடு… தன்னுடைய இறகுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அவனுடைய விருப்பம். அந்த கட்டுக்குள் அவள் அடைபட மறுப்பது அவனுக்கு பிடிக்கவில்லைதான். ஆனால் இந்த மறுப்பை அவன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவளுடைய விருப்பத்துக்கு மதிப்புக்கு கொடுத்துத்தான் ஆக வேண்டும். – தேவ்ராஜின் உண்மையான மனமாற்றம் அந்த நொடியில்தான் ஆரம்பித்தது. மனைவியின் முகத்தை வாஞ்சையோடு பார்த்து, “வெயிட் பண்ணறேன்” என்றான்.

அதற்கு மேல் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வெகுநேரம் உறங்கும் குழந்தையின் முகத்தை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் தேவ்ராஜ். அவன் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் மதுரா. மனதை பரிமாறிக்கொள்ள அவர்களுக்கு வார்த்தைகள் தேவைப்படவில்லை. அவர்கள் கொடுத்து வாங்கி கொண்ட அருகாமையே அவர்களுடைய உணர்வுகளை பரிமாற்றம் செய்தது. மௌனம் மட்டுமே அங்கு மத்தியஸ்தராக வேலை செய்தது.

23 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sona RAJKUMAR says:

  I came to know about this story from fb….. and I read 93 epis in one night … such a lovely and lively story….. eagerly waiting 4 next epi ….
  Your writing is awesome.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Karthikaa Radhakrishnan says:

  Sema novel mam chance illa ithu than unga novel la padicha first story mam. Ini theadi theadi padikka poren. Mam next ud yeppo poduvinga

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Udaya Suman says:

  Wow…. semma full Ah Im completed……last 3 , 4 episodesla azhuthutan sema keep rocking

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  Hi Nithya….3 epis are very heart warming…..Dev and Madhu has changed for better….along with Dev we too are waiting for madhura’s change of heart…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  பிரிவு என்பது சிலபேருக்குள் நிறைய புரிதலை கொடுக்கும்தான் ஆனால் இப்பிரிவு நிரந்தர பிரிவாகிடாமல் இருந்தால் சரிதான்.

  நன்றி

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sony Sri says:

  Nice ud sis

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Yazhvenba M says:

  Innum wait pananuma ? 🙁

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  nice ud sis

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  selvipandiyan pandiyan says:

  இப்படி ஒரு மாற்றம்!இந்த பிரிவு நல்ல முடிவை கொடுக்குமா?

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Aaka enna alagana tharanam dev and mathu rentu perum azhaga maarittanga entha matram valkaikku thevaiyana mukkiyama ontruthan. Nithi ungal ezhuththukal mikavum arumai varnikka vartthai illaipa .👍 👌

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vithiyaa Ragupathy says:

  Superb going.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kani Ramesh says:

  Super sis…Dev ivlo irangi vanthathe perusu than madhu oda feelng puriyuthu…analum avanoda irunthu dev ku puriya vaikalam pavam dev…sikarama sethu vainga sis..intha prabhavathy ku yen ivlo kadupu avan paiyan avan vanguran un veetula vaika idam illana avanga veetuku anupida vendiyathu thane

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  saranya shan says:

  madhu valarnthutaa…………dev ithaiye thanun amma sonnargal.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Dhivya Bharathi says:

  Nice epi akka but madhura manasu maranum… pavum dev … pesama madhurava divorce panida solunga… naa vena deva marriage panikuren… nithi ok vvaa yenoda point..😍😍😍

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Radha Karthik says:

  Personal space is very important… Dev will soon realize that… Pls unite them soon mam. …

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  வந்துட்டேன்.
  அவன் முரடன்
  அவள் முட்டாள்….பாவம் இவங்களுக்கு பொறந்த மாணிக்கம் ..குட்டி.
  இரண்டையும் இரண்டு போட்டு திருத்துடா கண்ணா….
  பிரபாவதி தான் அங்கே கிளப்பிவிட காரணமாவாள்….

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jansi r says:

  Nice epi
  யதார்த்தமான சிந்தனை

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Seekrama serthu vainga please…
  Romba azhaga ezhuduringa

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Indra Selvam says:

  Ha ha ha prabhavathy adangavea mata polayea………. veannai thirandu vavarumpothu panaiya odaichitalea madhura! But antha alavuku avaluku manasula iruka kayam aarala…….. kuttipaiyan than seekirama antha kayathai aara veikanum………..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Indra Selvam says:

   Appadi nan than first……. nithya intha story mudikarathukula oru first commentavathu podanumnu ninaichene…. ippo tgan niraiveari iruku.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you so much Indira… phone la mani kanakkaa discuss panninaalum inga rendu vari comment paarkkum podhu romba sandhosham… 🙂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jayashree swaminathan says:

  Thanks for a super update.The way Madhura dels with Dev is lovely

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Jayashree… 🙂

error: Content is protected !!