Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-4

முகங்கள் – 4

“நான் சந்தனா ” என்று கூறியவளின் கண்களை ஊடுருவியவன்

 

“சந்தனாவா???? என்ன நந்தினி ஆச்சு உனக்கு?” – என்றான் , அதிலும் நந்தினி என்ற வார்த்தையை அழுத்தமாகவும் தெளிவாக உச்சரித்தான்,  பயத்தில் முகம் வியர்த்தது அவளுக்கு.

 

“ந…ந.. நான் ..ச…ச….ந்தனா, ந…நந்தினி மேடம் அ…அ..அங்கே குகைகக்குள்ள..!!!அய்யோ! அவங்களை நீதான் கொன்னே! நா… நா பார்த்தேன். சொல்லு… ஏன் அப்படி செஞ்ச? சொல்லு!” அவனது விலையுயர்ந்த சட்டையை பிடித்து அசுரவேகத்தில் உலுக்கினாள்.

 

காட்டு கத்தலாக கத்தியவள் தொடர்ந்து

 

“அப்போ என் மூக்கில் எதைய்….ய்…..யோ நீ எதையோ வெச்ச. பிறகு எனக்கு எதுவும் நினைவில்ல . சொல்லு ஏன் அப்படி செஞ்ச, சொல்லு ” மீண்டும் உலுக்கினாள்

 

அவளது பிடியிலிருந்து அசால்டாக தன்னை விடுவித்துக்கொண்டவன், அவளது இரு கைகளையும் இடதுகையால் பிடித்துக்கொண்டு வலது கையால் தன்  சட்டையின் சுருக்கங்களை நீவிவிட்டுக்கொண்டே

 

“இவ்வளவு விஷயம் நினைவிருக்கும் உனக்கு, ஏன் இந்த வேலைக்கு வந்தேங்கிறது நினைவில்லையா? ” ஒருவிதமான இகழ்ச்சி அவனது பார்வையில் இருந்தது

 

ஒருநொடி அவமானத்தில் முகம் சிவந்த பொழுதும் சட்டென அது கோபமாக மாறி, “எல்லாம் உன்னால்தான். என் சித்திக்கு பணத்தாசை காண்பிச்சு என்னை கட்டாயப்படுத்தி தானே இங்க கூட்டிவந்த!”

 

“நான் மட்டும் காரணமில்லையே, உன்னோட இந்த நிலைமைக்கு உன் சித்தியோட பணத்தேவையும் ஒரு காரணம் தானே? . இன்னும் அதிக பணம் தாரேன், நான் சொல்ற படி கேட்டு நடந்தால்.” அவனது குறல் அவளிடம் கேட்டது போல் இல்லை, கட்டளைபோல் இருந்தது

 

உடனே அருவருப்பில் முகம் சுருங்க “”சீ…. ஒரு கொலைகாரனோட பேச்சை கேட்டு நான் நடப்பேன்னு நினைச்சியா?. முடியாது. யாருக்கு வேணும் உன் பணம். நீ என் சித்திக்கு கொடுத்த பணத்துக்கு ஈடா என் நகைகளை வேணா வைச்சிக்கோ. உன் இஷ்டத்துக்கெல்லாம் நான் ஆட மாட்டேன்” எச்சரிக்கையோடு முடித்தாள்

 

அவளது எச்சரிக்கும் குரல் அவனுள் சிரிப்பை வரவைத்தது, ருத்ரபிரதாப் ஒன்றை நினைத்தால் அது எக்காலத்திலும் நிறைவேறியே தீரும், எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் அவனுக்கு அடிபணிந்தே ஆகவேண்டும், அப்படியிருக்க இந்தச் சிறுபெண் மறுப்பது அவனுள் சிரிப்பை வரவழைத்தது. சிரிப்பினூடே அவனது  ஆயுதத்தை கையிலெடுத்தான்.

 

“அப்படியா ? பணத்துக்கு நகை எனக்கு ஓகேதான் ” என்று நிறுத்தியவன் அவளது முகம் வலியையும் மறந்து சந்தோஷத்தில் மலர்வதை ஒருவித திருப்தியோடு பார்த்து விட்டு சாவதானமாக “அப்போ இதுக்கு என்ன ஈடுகொடுப்ப? ” என்றவன் அவள் முகத்திற்கு நேரே தன் செல்போனை காண்பித்தான். அதில் ஓடிய காட்சி சந்தனாவின் சப்தநாடிகளையும் ஒடுக்கிவிட்டது.

 

மலர்ந்த அவளது முகம் உடனே யாரோ ஓங்கி அரைந்தது போல் சிவந்து விட்டது, முகம் வெளிற “இது… எப்.. .எப்படி.? ..எப்போது.?… கடவுளே “கண்களில் அருவியாய் வழிந்த கண்ணீரை துடைக்கும் சக்தியையும் இழந்தவளாய் அமர்ந்திருந்தாள் சந்தனா.

 

கொஞ்சமும் இரக்கப்படாமல் தொடர்ந்தான் “எப்போ? எப்படி? இதெல்லாம் தெரிஞ்சு இப்போ ஆகப்போறது எதுவுமில்லை. நான் அசைக்கும் கோளுக்கு நீ ஆட இந்த வீடியோவே போதுமானதுங்கிறது தான் தற்போதைய உண்மை.அதனால் நல்லா காதை திறந்து வெச்சு கேட்டுக்கோ ” என்றவன் அவளது காதுகளை நெருங்கி ” இன்றிலிருந்து நீ நந்தினி ” உச்சந்தலையில் ஆணி அறைந்தது போல் அறிவித்தான்.

 

“எ….ன்….ன..ன…!!!!”!!!!!”!!!” அதிர்ச்சிதான், ஆனால் அதனை அவளால் வெளிப்படுத்த முடியவில்லை, மனம் பயத்தில் உறைய கருவிழிகள் இலக்கில்லாமல் எங்கோ வெறித்தன

 

அவளது முகத்திற்கு நேரே சொடக்கிட்டான் ருத்ரன்

 

அவன் புறம் கண்களை திருப்பாமலே “நான் சந்தனா ” – என்றாள் மெல்லிய குரலில்

 

தன் காதிற்குள் ஆள்காட்டி விரலைவிட்டு இருமுறை அசைத்தவன் “ஷ்..ஷ்..ஷப்பா…முடியலை. இந்த சந்தனா புராணம், இந்நேரம் சந்தனாவோட சடலத்துக்கு மாலைபோட்டு பாடைகட்டி சங்கும் ஊதியிருப்பாங்க,  நாளைக்கு இரங்கல் செய்திக்கும் ஏற்பாடு செஞ்சாச்சு ” அவள் இறந்துவிட்டாள் என்று அவளிடமே சர்வசாதாரணமாக கூறினான்

 

“!!!!!!!!!” – அதிர்ச்சியின் உச்சத்திலிருந்தாள். பேசமுயன்றும் நா எழவில்லை

 

“புரியலை தானே. புரியவைக்கறேன். எது எப்படியானாலும் என்னோட இந்த படம் எந்தவித சிக்கலும் இல்லாம குறித்த தேதியில ரிலீஸ் ஆகணும். நந்தினி இப்போ இல்லை, சாரி அவ இப்போ உன் கேரக்டர்ல நடிச்சிக்கிட்டிருக்கா, செத்ததுக்கப்புறமும் நடிக்கிற பாக்கியம் நந்தினிக்கு மட்டுமே கிடைச்சிருக்கு, அதனால அவளுக்கு கைமாறா நீ  நந்தினியா  நடிக்கனும்.என் படத்துலயும் சரி நிஜத்துலயும் சரி” அவளது முடிவை எதிர்பார்க்காமல் அவனே முடித்து விட்டான்

 

“எ…ன்ன… என்ன உளரல் இது. இதுக்கு பேரு ஆள் மாறாட்டம். இதுக்கு நான் நிச்சயம்  ஒத்துக்கமாட்டேன். நான் எப்பவுமே சந்தனாதான். நான் இப்பவே என் வீட்டுக்கு  போகனும்,  நான் செத்துட்டேன்னு அங்கே கவலைபடுவாங்க “பேசிக்கொண்டே  – வேகமாக இறங்கியவள் வெளியேற இரண்டடி எடுத்து வைத்தாள்.

 

அவளை கதவு வரை நடக்கவிட்டவன், பின் மெதுவாக ஆனால் அழுத்தமாக

 

“போகனுமா? தாராளமா  போ! ஆனா இந்த வீடியோவை மறந்தா எப்படி? வா உன் கையால் இதை யூடியூப்ல போட்டுடு,  எத்தனை வியூஸ் வருதுன்னு நானும் பார்க்கனும் ” செல்போனை அவள் புறம் நீட்டினான்

 

அதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்கவும் அஞ்சியவளாய் அப்படியே வேரூன்றி நின்றாள் சந்தனா.

 

“அதுமட்டுமில்லை உனக்காக அங்க கவலைபட யாரும் இருக்கிறதா எனக்கு தெரியலை. சொளையாக மூப்பது லட்சத்துக்கான செக் கொடுத்திருக்கேன் உன் சித்தி கனவுல கூட எனக்கு எதிரா பேசமாட்டாங்க, இதுல சந்தோஷமான விஷயம் எது தெரியுமா, உன் சாவால் லட்சாதிபதி ஆனவங்க நீயே அவங்க முன்னால போய் நின்னாலும் ‘சத்தியமா இது சந்தனா இல்லைன்னு’ அடிச்சு சொல்லுவாங்க இப்படி பட்டவங்களுக்கு நீ செத்தவளா இருக்கிறதே மேல்.”

 

அவன் கூறும் உண்மை அவளை சுட்டது

 

“நீ இப்போ டெட் என்ட்ல இருக்க சந்தனா. ஒரே ஒரு வழிதான். அதுவும் நான் சொல்றதுதான் ”

 

அவளால் மௌனமாக கண்ணீர் வடிக்க மட்டுமே முடிந்தது. அவன் கூறுவதும் சரிதானே. அவளுக்காக யார் இருக்கிறார்கள். யாருக்காக அவள் உயிர்வாழ்கிறாள். எப்போது ஒரு சுமைபோலதானே அவளை சித்தி எண்ணினாள்.

 

தன் வசனங்கள் அதன் இலக்கை சரியாக தாக்கிவிட்டதை உணர்ந்தவன் தொடர்ந்தான்

 

“இப்போ நான் சொல்றதை செய்” என்று தன் திட்டத்தை கூறினான்

 

கேட்க விருப்பமில்லாத பொழுதும் கேட்டுக்கொண்டிருந்தாள். இடையில் அந்த வீடியோவும் சித்தியின் கோபமான முகமும் தோன்றி மறைந்து கொண்டே இருந்தது.

 

*************************************

 

ருத்ரா… நந்தினியோட அம்மா மும்பையிலேருந்து சென்னை ஏர்போர்ட் வந்துட்டாங்க. நந்தினியின் டிரைவர் கூட்டிவர போயிருக்கார். இது வரை நந்தினியை பார்க்க யாரையும் நம்ம அலவ் பண்ணலை ஆனா சந்திரிகா மேடத்தை நிறுத்த முடியாது. என்ன செய்ய போறோம்.”

 

எதையோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தவன்.

 

“அவங்களை விடு பிரகாஷ். ஈசியா சமாளிச்சிடலாம். ஆனா நந்தினியோட பர்சனல் மேனேஜர் அஸ்வின் தன்னோட ஹனிமூன் டிரிப்ப பாதியிலேயே கேன்சல் பண்ணிட்டு வாரான். அவன் கொஞ்சம் டேன்ஜரஸ்”

 

“பின்னே பேப்பர்ல இல்லாததும் பொல்லாததும் வேற எழுதுறாங்க. சாதாரண மயக்கத்துக்கு இத்தனை பில்டப்பா ”

 

“மயங்கியது ஹீரோயினாயிருந்தா இப்படித்தான். அதுமட்டுமில்லாம நந்தினி போன்ல கூட பேசாததால் அஷ்வின் கலவரமாகியிருப்பான். வரட்டும் ”

 

சிறிது நேரத்தில், “ஹே…. ஈஷ்வர் என் பேட்டிக்கு இன்னா ஆச்சு?” பதட்டத்துடன் புலப்பிக்கொண்டே தன் பெருத்த உடல் குலுங்க. முகத்தில் அதிகப்படியான மேக்கப்புடன் ருத்ரனை எதிர்கொண்டார் சந்திரிகா.

 

இருக்கையிலிருந்து அவசரமாக எழுந்தவன். சந்திரிகாவை தோளோடு அணைத்துக்கொண்டான். “நந்தினிக்கு ஒன்றும் இல்லை லேசான அதிர்ச்சிதான் எல்லாம் சரியாகிவிடும்” ஹிந்தியில் ஆறுதல் படுத்தினான்.

 

“நான் நந்தினியை பார்க்கணும்?” அங்கே நின்று கொண்டிருந்த நர்சிடம் கேட்டார் சந்திரிகா.

 

“நிச்சயம் பார்க்கலாம். நந்தினி இப்போ நல்லா தூங்கிறாங்க. முழிச்சதும் டாக்டர் சொல்லிவிடுவாங்க. அப்போ பார்க்கலாம்”

 

“ஹே… ஈஷ்வர்” என்று தெய்வத்தை பிரார்த்திக்க தொடங்கினார் சந்திரிகா

 

முகங்களின் தேடல் தொடரும்




5 Comments

You cannot copy content of this page