Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 95

அத்தியாயம் – 95

மகளின் துன்பத்தைக் கண்டு கலங்கிய இராஜேஸ்வரி, மன ஆறுதலுக்காக மாயாவிடம் அதைப்பற்றி பேசினாள். தங்கையின் வலியை தனதாக உணர்ந்த மாயா மறுநாளே தாய் வீட்டிற்கு வந்தாள். பாரதியை தனியாக சந்தித்துப் பேசினாள். அவள் மனதிலிருக்கும் துன்பத்தை ஆறுதல் என்னும் துணியைக் கொண்டு துடைக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை… காரணம்… தனக்கென்று இந்த உலகத்தில் யாருமே இல்லை என்கிற எண்ணம் அவள் மனதில் ஆழமாக வேரூன்றியிருந்தது.

“உனக்கு ஒரு குடும்பம் இருக்கு… தேவ் பாய்க்கும் அதே மாதிரிதான்… மதுரா இருக்கா… அம்மாவுக்கு நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்க… ஆனா எனக்கு? ஐம் அலோன்… என்னை பத்தி ஸ்பெஷலா திங்க் பண்ண… எனக்கு முதல் உரிமை கொடுக்க யாருமே இல்ல… நா எல்லாரையும் இழந்துட்டேன்… என்னால யார் கூடவும் இயல்பா பழக முடியல… எல்லாருமே எனக்கு எதிரியா தெரியிறாங்க… இதை நா விரும்பல… ஐ வாண்ட் மை ஹோம் பேக்… ஐ வாண்ட் மை ஃபேமிலி பேக்…” என்றாள் கண்ணீர் தளும்ப.

தங்கையின் உணர்வுகளை துல்லியமாக புரிந்துக் கொண்ட மாயா சட்டென்று அவளை அணைத்துக் கொண்டாள்.

“பைத்தியம்… இப்போ யாரை இழந்துட்ட நீ? நாங்க எல்லாரும் உன்கூட தான் இருக்கோம். உனக்காக எதை வேணுன்னாலும் செய்வோம். அம்மா உன்மேல உயிரையே வச்சிருக்காங்க. தேவ் பாய்க்கு உன்மேல எவ்வளவு பாசம்னு தெரியுமா?” – செல்லமாக கடிந்துக் கொண்டாள்.

“இல்ல… தேவ் பாய்க்கு மதுராதான் முக்கியம். என்னை பத்தி யோசிக்காமதானே அந்த வீட்டுல ஃபங்ஷன் அரேஞ் பண்ணினாங்க”

“அது பெரிய விஷயமே இல்ல பாரதி. அதோட தேவ் பாய் பொறுத்தவரைக்கும் மதுராவோட டிராக் வேற நம்ம டிராக் வேற. அவமேல பாசம் இருந்தா நம்மள வெறுத்துடுவாங்கன்னு அர்த்தமா? என்ன பேசுற நீ? நானும் தான் துருவன் மேல உயிரா இருக்கேன். அதுக்காக உன் மேல பாசம் இல்லைன்னு சொல்லுவியா? இது மாதிரியெல்லாம் யோசிக்கக் கூடாது பாரதி. நாங்க எல்லாருமே உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்கணுமேன்னு போராடிகிட்டு இருக்கோம். நீ சம்மதிக்க மாட்டேங்கிறியேங்கற கவலைதான் எங்களுக்கு” என்று பலவற்றையும் எடுத்துக் கூறினாள். பாரதியின் முகம் சற்று தெளிந்தது.

“சரி சொல்லு… உண்மையிலேயே அந்த மோனிகா தம்பி மேல உனக்கு இன்ட்ரெஸ்ட் இருக்கா? உனக்காக நா யார் கால்ல வேணுனாலும் விழுவேன்… யாரை வேணுன்னாலும் கான்வெண்ஸ் பண்ணுவேன். சொல்லு… தேவ் பாய், அம்மா… யாரை பத்தியும் யோசிக்காம சொல்லு… அந்த இன்ட்ரெஸ்ட் தான் உன்ன இந்த பாடுபடுத்துதுன்னா என்கிட்ட மறைக்காம சொல்லு…” என்றாள்.

உடனே பாரதியின் முகம் அஷ்டகோணலாக மாறியது… “ச்சீ… ஆர் யூ மேட்?” என்றாள் எரிச்சலுடன். பெரிய இருட்டு சிறையிலிருந்து விடுதலை அடைந்தது போல் இருந்தது மாயாவிற்கு.

‘அப்பாடா…’ என்று சுதந்திர மூச்சை சுவாசித்தாள். தங்கைக்காக எதையும் செய்ய தயாராகத்தான் இருந்தாள். ஆனால் மனதிற்கு ஒவ்வாத செயலை செய்ய வேண்டியதாகப் போகிறதோ என்கிற பயமும் அவளுக்கு இருந்தது. அந்த பயத்திலிருந்து விடுதலை அடைந்ததே பெரிய நிவாரணம். இனி எதையும் சமாளிக்கலாம் என்கிற உற்சாகம் பிறந்தது.

“உனக்குன்னு ஒரு லைஃப் அமையனும் பாரதி. அப்போதான் இந்த லோன்லினஸ் போகும். கல்யாணம் பண்ணிக்க” – மாயா.

பாரதியின் முகம் நொடியில் வாடியது. “ஏன்… கல்யாணம் பண்ணினாதானா? நீயெல்லாம் எனக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்க மாட்டியா?” – இறங்கிய குரலில் கேட்டாள்.

“யார் சொன்னது… நா எவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுத்தாலும் நீ திருப்தியாகமாட்ட” என்றாள். அவள் கூற்றிலிருந்த உண்மையை உணர்ந்து அமைதியானாள் பாரதி.

“தேவ் பாய்கிட்ட சொல்லி மாப்பிள்ளை பார்க்க சொல்லட்டுமா?” – மாயாவின் கேள்விக்கு தலையை இடம் வலமாக ஆட்டி மறுத்தால் பாரதி.

“ஏன்?”

“கல்யாணத்துல விருப்பம் இல்ல மாயா”

“என்ன சொல்ற நீ?” – அதிர்ந்தாள் மாயா. இறுகிய முகத்தோடு அமைதியாக அமர்ந்திருக்கும் தங்கையை பார்த்து, “அதெப்படி விருப்பம் இல்லாம போகும்.நீ என்ன சந்நியாசியா… இல்ல சாமியாரிணியா? அந்தந்த வயசுல செய்ய வேண்டிய எல்லாத்தையும் செஞ்சுதான் ஆகணும்” – சிறு பதற்றம் தெரிந்தது அவளிடம்.

‘போடற குண்டையெல்லாம் பெருசு பெருசா போடுறாளே!’ என்கிற கலக்கத்துடன் தங்கையின் பதிலுக்காக அவள் முகத்தை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள். அவளிடமிருந்து பதில் வரவில்லை. தங்கையின் மனதிலிருக்கும் தடையை உடைக்க முடியாமல் போனாலும் என்ன தடை என்பதை ஊகித்தாள் மாயா.

“திலீப்பா?” – இறுகிய குரலில் கேட்டாள். அப்போதும் பாரதி வாய் திறக்கவில்லை. அவளுடைய மௌனமே காரணத்தை உறக்கக் கூறிவிட அடுத்து என்ன செய்வது என்கிற சிந்தனையோடு வீட்டுக்குப் புறப்பட்டாள்.

தங்கையை பற்றி வெகுநேரம் ஆழமாக சிந்தித்த மாயா, தேவ்ராஜை அணுகி பாரதியின் மனநிலையையும் தன்னுடைய யோசனையையும் கூறினாள்.

“வாட்!” – அதிர்ச்சியுடன் தங்கையைப் பார்த்தான் தேவ்ராஜ்.

“நாம எல்லாரும் எவ்வளவோ எடுத்து சொல்லிட்டோம். அவ மனசு இருக்க ஏதோ ஒரு பிளாக் அவளை அடுத்த கட்டத்துக்கு மூவ் ஆகவிடாம தடுக்குது. அதை பிரேக் பண்ண இவனால முடியும்னு எனக்கு தோணுது”

“ஸ்டுப்பிட் ஐடியா… இது கண்டிப்பா நெகட்டிவ் ரிசல்ட்டை தான் கொடுக்கும்”

“இல்ல தேவ் பாய்… இது சரியா வரும்னு எனக்கு தோணுது”

“எப்படி சரியா வரும்? இவளை வேண்டாம்னு சொல்லிட்டு அவன் வேற கல்யாணம் பண்ணி செட்டில் ஆயிட்டான். அவனை எப்படி இந்த விஷயத்துல இன்வால்வ் பண்ண சொல்ற? அவன் எதையாவது பேசி இவ மனசுல இன்னும் கொஞ்சம் ஆசையை வளர்த்துவிட்டுட்டு போயிட்டான்னா என்ன செய்வ? ஓணான்… வேலின்னு ஏதோ சொல்லுவாங்களே…. அதுமாதிரி ஆயிடப் போகுது. பேசாம போயி இழுத்து போர்த்திக்கிட்டு தூங்கு” எரிச்சல்பட்டான்.

“இல்ல தேவ் பாய்… அவன் திமிர் பிடிச்சவன்தான். ஆனா இந்த மாதிரி வில்லங்கமான வேலையெல்லாம் செய்ய மாட்டான். பாரதி அவன் மேல பைத்தியமா இருக்கா. அந்த பைத்தியத்தை அவனால மட்டும்தான் தெளிய வைக்க முடியும் தேவ் பாய். நான் அவன்கிட்ட பேசிப் பார்க்கறேன். சரியா வரும்னு தோணினா பாரதிகிட்ட பேச சொல்றேன். என்னை நம்பி இந்த ஒரு சான்ஸ் கொடுங்க”

“இதுனால உன்னோட லைஃப்ல எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாது” – எச்சரித்தான்.

“எப்படி வரும்?”

“அந்த பொண்ணு… அவன் வைஃப்… பேர் என்ன?”

“தேஜா..”

“ஆங்… தேஜா… அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா பிரச்சனை வராதா? உன்ன தப்பா நினைச்சுட்டா என்ன செய்வ?”

“என்னைய தப்பா நினைச்சாலும் நினைக்கலன்னாலும் இந்த விஷயத்துல அவனை தப்பா நினைக்க முடியாது தேவ் பாய். அண்ணன் தம்பி ரெண்டு பேருமே மனைவிக்கு துரோகம் பண்ணற ஆளுங்க இல்ல. அந்த விதத்துல தேஜா சேஃப் தான்… சேஃபா இருக்கறவ என்கிட்ட எதுக்கு பிரச்சனை பண்ண போறா?”

“மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ல பிரச்சனை வரலாம்”

“வராம நான் பார்த்துக்கறேன்”

“நோ… நீ பாரதிக்கு நல்லது செய்யணும்னு நினைக்கறது எனக்கு புரியாது. ஆனா எனக்கு உன்னோட வாழ்க்கையும் முக்கியம். ரிஸ்க் வேண்டாம். விட்டுடு… பாரதி மெல்ல மெல்ல தானாவே சரியாயிடுவா” – அறுதியாக மறுத்தான். ஆனால் மாயா விடவில்லை. மணிக்கணக்காக பேசி அவனை சம்மதிக்க வைத்தாள். தங்கையின் வாழ்க்கையை சரி செய்ய வேண்டும் என்கிற நோக்கமும்… மனதிலிருந்த ஏதோ ஒரு நம்பிக்கையும் அவளை வழிநடத்தியது.

**********************

அன்று குழந்தையின் பெயர்சூட்டு விழாவிற்கு வந்திருந்த பாரதி எதிலும் ஒட்டாமல் ஒருவித சங்கடத்துடன் ஒதுங்கியே இருந்தாள். அவள் முகத்தில் மகிழ்ச்சி என்பது கிஞ்சத்திற்கும் இல்லை. குடும்பத்திலிருந்து அவள் வெகுவாய் விலகியிருக்கிறாள் என்பது பார்க்கும் போதே தெரிந்தது. அதை கண்ட திலீப்பின் மனம், ‘தன்னை வேண்டாம் என்று நிராகரித்து அவமதித்தவள் தானே… அனுபவிக்கட்டும்’ என்று எண்ணவில்லை. பாவம் என்று பரிதாபப்பட்டது.

வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும்… எந்த நேரத்தில் எப்படிப்பட்ட முடிவை எடுக்க வேண்டும் என்று தெரியாமல் தன்னைத்தானே சீரழித்துக்கொள்ளும் அந்த பேதையை பார்க்கும் போது அவன் மனம் வேதனைப்பட்டது. அவளுடைய இந்த நிலைக்கு தெரிந்தோ தெரியாமலோ தானும் ஒரு காரணமாகிவிட்டோம் என்கிற வருத்தம் அவன் மனதில் இருந்தது.

பழைய சம்பவங்களையெல்லாம் மறந்துவிட்டு அவள் தனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்… சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்பினான். இவன் இப்படி ஒரு மனநிலையில் இருக்கும் போதுதான் மாயா அவனைத் தேடி வந்தாள்.

‘நம்மை பார்த்தாலே முகத்தை திருப்பிக்கொண்டு போகிறவள் இன்று எதற்காக நம்மிடம் பேச வேண்டும் என்று சொன்னாள்! அதுவும் தனியாக…!’ என்று யோசித்தபடி அவன் அந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்திருக்க, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த மாயா அவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

“சொல்லுங்க… என்ன விஷயமா என்னை இங்க வர சொன்னீங்க?” – மரியாதையோடு கேட்டான்.

ஓரிரு நிமிடங்கள் தயங்கியவள் பிறகு, “எனக்கு நீ ஒரு உதவி செய்யணும். முடியுமா?” என்றாள்.

அவளை ஆச்சர்யத்துடன் பார்த்தான் திலீப். ‘தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி துருவனிடம் கூட உதவி கேட்க கெளரவம் பார்க்கும் மாயாவா இது!’ என்கிற வியப்பு அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.

அவனுடைய வியப்பை தயக்கம் என்று எடுத்துக் கொண்ட மாயா சங்கடத்துடன் தலை குனிந்தாள். உண்மையில் இது அவளுக்கு அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் தங்கைக்காக… பாரதிக்காக என்று தனக்குள் உருப்போட்டு தன் மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

“உனக்கு கஷ்டமா இருந்தா…” – “நோ நோ… நா… ஜஸ்ட்… ஐம் சாரி… சொல்லுங்க… நா என்ன செய்யணும். எனிதிங் ஃபார் யூ…” – அவசரமாக அவளை இடைமறித்து கூறினான்.

உடனே அவள் முகம் மலர்ந்தது. அந்த நொடியில் அவன் மீது அவளுக்கு சிறு அன்பு கூட துளிர்த்தது. அதன் பிறகு இறுக்கம் தளர்ந்து சற்று இலகுவாக உணர்ந்தவள் தன் தங்கையின் நிலையை அவனிடம் எடுத்துரைத்தாள்.

ஏற்கனவே அவளுக்காக இறக்கப்பட்டுக் கொண்டிருந்த திலீப், அவள் இன்னமும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் குற்றஉணர்ச்சிக்கு ஆளானான்.

“ஐம் சாரி” என்றான் வருத்தத்துடன்.

“இதுல உன்ன மட்டும் தப்பு சொல்ல முடியாது திலீப். எல்லாருமே ஒருவித ஈகோவோட இருந்துட்டோம். இப்போ பாரதியோட லைஃப் ரொம்ப ரிஸ்க்கான இடத்துல இருக்கு. நீதான் அவகிட்ட பேசணும். அவளோட மனச மாத்தணும்…”

“நானா! நா எப்படி!”

“உன் மேல அவளுக்கு நிறைய கோபம் இருக்கு… வருத்தம் இருக்கு… ஆனா அதுக்கு எல்லாத்துக்கும் மேல அவ மனசுக்குள்ள உனக்கு ஒரு நல்ல இடம் இருக்கு. அவ மனசுல இருக்க கோவமெல்லாம் கொறஞ்சிடுச்சுன்னா நீ சொல்றதை கேட்பா… அவளை சமாதானம் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க வை”

திலீப்பின் முகத்தில் கலவரம் சூழ்ந்தது. இது சாத்தியமா என்கிற சந்தேகம் எழுந்தது. மீண்டும் அவள் காதல் கீதல் என்று திரும்பிவிட்டால் என்ன செய்வது என்கிற பயம் எழுந்தது. அந்த பயத்தை அவன் மாயாவிடம் வெளிப்படுத்தவும் செய்தான்.

சட்டென்று மாயாவின் முகம் இறுகியது. கண்களை மூடி அவள் ஆழமாக மூச்செடுத்த போது அவள் தனக்குள் போராடுவது அவனுக்கு புரிந்தது.

“ஐம் சாரி… பாரதியை நான் தப்பா நினைக்கல. ஆனா அவ ஏற்கனவே மனசு பட்டிருக்கு… அதான்… நா திரும்ப போயி அவ மனசை கெடுத்துடாக் கூடாதேன்னு…” – முடிக்க முடியாமல் தயங்கினான்.

“ஒரு குடும்பத்தை கலைக்கறது எவ்வளவு பெரிய பாவம்னு எங்களைவிட யாரும் அதிகமா உணர்ந்திருக்க முடியாது திலீப்… என் தங்கச்சி உன்னோட மனைவிக்கு துரோகம் பண்ணனும்னு கனவுல கூட நினைக்க மாட்டா…” – உறுதியாகக் கூறினாள்.

குற்றஉணர்ச்சி சுருக்கென்று குத்தியது… வார்த்தையை விட்டுவிட்டோம் என்று எண்ணி உதட்டை கடித்துக் கொண்டான். “சாரி…” – மெல்ல முணுமுணுத்தான்.

அவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தை கவனித்துவிட்டு, “தட்ஸ் ஓகே…” என்றாள்.

அதற்கு மேல் அவன் அதிகம் யோசிக்கவில்லை. பாரதியின் மனதை மாற்றி அவளுடைய வாழ்க்கையை சீரமைக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று தனக்குள் உறுதியெடுத்துக் கொண்டான்.

20 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ramya Devi says:

  Nice going

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Narmatha Sakthi says:

  Nice episode sis

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Meena PT says:

  பாரதியோட பிரச்சனை என்னனு மாயாவுக்கு இப்பதான் புரிஞ்சிருக்க.மாயாவோட பிளான் எவ்வளவு சக்சஸ் ஆகுது பார்க்கலாம்

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Baladurga Elango says:

  95 updates at a stretch padithu irukan nithya…so sweet

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Dhivya Bharathi says:

  So sad bharathi pavum indha dilip ku apidiyena avasaram……nxt epi waiting

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  vijaya muthukrishnan says:

  superud. waiting for your next ud

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  மாயாவின் நல்லெண்ணம் ஈடேறுமா,தேஜா இதனை அறிந்தால் அதனை சரியான கோணத்தில் பார்த்து புரிந்துகொள்வாரா.

  நன்றி

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sumithra Ramalingam says:

  Maya thannudan piranthavarkkaga eppodum nalla yosikkira.pasamalar than.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Reena thayan says:

  Dev.um Mathu um enkayavathu shooting poitankala

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Amma maaya nee nallavangala kettavangala onnume puriyala sila samayam nalla mitivu etukkura sila samay am ekkutthappa mutivu etukkura ippa etuttha mutivu okva irukkuma illa deelip valkkail pirachchanai varuma .etho mathu visayathil kuttaiya kulapina devota nalla valkkai amanchchu ippa eppatinu theriyaleye .mmmm enna varuthunu pappom

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  மாயா…இன்னும் வில்லங்கத்தை விடலையா…நீ?.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  மாயாவின் திட்டம் எந்த அளவுக்கு சரி வரும்? பாரதி மனம் மாறுவாளா?

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sow Dharani says:

  Super maya உனக்குள்ள ஒரு cid எப்பவும் இருக்கு….என்ன சில நேரம் அது கோணல் யா வேலை செய்யும்…..இட்ஸ் ஓகே….இப்ப போற ரூட் கரெக்ட் யா இருக்கும்….என்ன தேஜா கிட்ட சொல்லிடு செய்யுங்க….பாவம் தப்பா புரிஞ்சிக்க போறாங்க…..

  பட் தேவ் மது இல்ல இதுல….

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  MAYAAAAMAAAA NEE IVLOO NALAVALAAAAAAAA
  SUPERBBBBBBB

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Hero heroine ah thandi ellarukum importance kudukaradu romba arumai!

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  saranya shan says:

  Ivan vera maathiri

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kani Ramesh says:

  Super sis bharathi ku ava life settle ana k than… Bt i mis dev n madhu today😔😔

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Azhagana pathivu

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jansi r says:

  Nice twist

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Banu Priya says:

   Pls put roday epi