Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

கனல்விழி காதல் - 68 pre

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 96

அத்தியாயம் – 96

திலீப் பாலி ஹில் வந்த போது தேவ்ராஜ் வீட்டில் இல்லை. இராஜேஸ்வரியிடம் மாயா அனைத்தையும் ஏற்கனவே சொல்லியிருந்ததால் அண்ணன் மகனைப் பார்த்ததும் அவனை வரவேற்று உபசரித்தவள், “இதெல்லாம் சரியா வறுமாப்பா…” என்று பயந்தாள்.

“ஐ வில் டேக் கேர் ஆஃப் இட் அத்த… பயப்படாதீங்க” என்று கூறிவிட்டு “இப்போ எங்க இருக்கா?” என்றான்.

“பின்பக்கம்… கார்டன்ல இருக்கா. கூப்பிடவா…”

“இல்ல… நானே போயி பார்த்துக்கறேன்” – திலீப் தோட்டத்திற்கு வந்த போது அவனுக்கு முதுகுக்காட்டி அமர்ந்திருந்தாள் பாரதி. எதையோ பறிகொடுத்தது போல் இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டு அமர்ந்திருப்பவளைக் கண்டு அவன் மனம் சங்கடப்பட்டது.

“குட்டிமா…” – அந்த குரலை கேட்டதும் அவளுடைய முதுகு விறைத்து நிமிர்ந்தது.

‘குட்டிமா!’ – சிறு பிள்ளையாக இருந்த போது அனைவருக்கும் அவள் குட்டிமாகவாத்தான் இருந்தாள். அந்த பெயர் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது ஆதிராதான் குட்டிமா. ஆனால் இப்போது இவன்! இவளை…! – பாரதியின் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவள் அழுகிறாள் என்பதை அவனால் உணர முடிந்தது.

“குட்டிமா…” – மீண்டும் அழைத்தான். சட்டென்று கண்களைத் துடைத்துக் கொண்டு கோபமாக திரும்பியவள், “நா குட்டிமா இல்ல. கால் மீ பாரதி” என்றாள் சீற்றத்துடன்.

“நீ எனக்கு எப்பவுமே குட்டிமா தான். சின்ன வயசுல என் கூட விளையாடின அதே குட்டிமாதான் நீ. நா உன்ன அப்படித்தான் பார்க்கறேன்” என்றான்.

“நீ என்னை எப்படியும் பார்க்க வேண்டாம். போ இங்கேருந்து. எதுக்கு வந்த இங்க…” – வெறுப்புடன் கத்தினாள்.

“உங்கிட்ட கொஞ்சம் பேசணும். பேசிட்டு போயிடறேன்” என்றான்.

“என்கிட்ட பேச உனக்கு என்ன இருக்கு? நீ யார் எனக்கு முதல்ல…? யார் உன்ன உள்ள விட்டது?” – அவள் ஆத்திரத்துடன் வெடிக்க, அவன் முகத்தில் புன்னகை தோன்றியது.

“அந்த கோபம் இன்னமும் அப்படியே இருக்கு… மதுரா உன்னைவிட ரெண்டு வயசு பெரியவ… சின்ன வயசுல நீ அவளையே அடிச்சுடுவ. துருவ் பாய் மதுராவுக்கு சப்போர்ட் பண்ணுவாரு… நா உனக்கு தான் சப்போட் பண்ணுவேன். அதெல்லாம் மறந்துட்டியா?” – பாரதி உதட்டை கடித்துக் கொண்டாள்.

“இந்த பழங்கதையெல்லாம் சொல்லிட்டு போகத்தான் வந்தியா? அப்படின்னா ஐம் சாரி… இதையெல்லாம் கேட்க எனக்கு நேரம் இல்ல…”

“நா பழைய கதையை சொல்ல வரல… உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்ல வந்தேன்”

“ஸ்டாப் இட் யூ ப்ளடி புல்ஷிட்… ஜஸ்ட் கோ டு ஹெல்… ” – கோபத்தில் மேல்மூச்சு வாங்க கத்தினாள். அவளுடைய கோபம் அவனை சிறிதும் பாதிக்கவில்லை.

“ஐ ப்ராமிஸ் யூ. சின்ன வயசுலேருந்தே எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும். மதுராவை எப்படி பார்த்தேனோ அப்படித்தான் உன்னையும் பார்த்தேன். வேற மாதிரி உன்ன யோசிக்க முடியல எனக்கு. மத்தபடி உன்மேல எனக்கு வெறுப்போ கோபமோ இருந்ததே இல்ல குட்டிமா. இதை நீ நம்பனும்…” – தழைத்த குரலில் கூறினான்.

அவள் மீது அவனுக்கு எந்த வெறுப்பும் இல்லை என்பதை அவள் மனதில் பதிய வைக்க வேண்டும் என்பதே அவனுடைய நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறினால் அவளிடமிருக்கும் தாழ்வுமனப்பான்மை கோபமெல்லாம் மறைந்துவிடும் என்று நம்பினான்.

“இதெல்லாம் எதுக்கு இப்போ நீ என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்க? உனக்கு பிடிச்சா என்ன… பிடிக்கலைன்னா எனக்கென்ன? எனக்கு உன்ன சுத்தமா பிடிக்காது. அதனாலதான் உன்ன வேண்டான்னு சொன்னேன். திரும்ப வந்து என்கிட்ட பேசிகிட்டு இருக்க! பெரிய தியாகி… மகாத்மான்னு நெனப்பா உனக்கு?” -அவள் வெறுப்புடன் பேசினாலும் திலீப்பின் கணக்கு பலித்தது. அவள் மனதில் இப்போது கோபம் சிறிதும் இல்லை. அவள் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த பாரம் வெகுவாய் குறைந்திருந்தது.

************************

பிரபாவதிக்கு ஒரே கவலை. என்னதான் அன்பை அள்ளிக் கொடுத்து கட்டி அணைத்தாலும் ஓட்டமாட்டேன் என்கிறானே இந்த குட்டிப்பையன் என்கிற வருத்தத்தில் மாண்டுபோனாள். அவளுடைய குரலோ அணுகுமுறையோ… ஏதோ ஒன்று பிடிக்கவில்லை அவனுக்கு. அவள் தூக்கினால் மட்டும் கத்தி ஊரை கூட்டிவிடுவான்.

அன்றும் அப்படித்தான்… மதுரா குளிக்கச் சென்றுவிட்டாள். தொட்டிலில் உறங்கி கொண்டிருந்தவன் விழித்துவிட்டான். கொள்ளை பிரியத்தோடு பேரனை அள்ளி அணைத்தாள் பிரபாவதி. அவ்வளவுதான்… அலறி தீர்த்துவிட்டான். தங்கமே… வைரமே என்று அவளும் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தாள். ஆனால் அவன் அடங்குவதாக இல்லை. பல் இல்லாத பொக்கை வாய் ஈறுகளை இறுக்கமாகக் கடித்து, பாட்டியின் நெற்றி முடியை கொத்தாக பிடித்து இழுத்து கையேடு கொண்டு வந்துவிட்டான்.

“ஆ… ஐயோ… விடுடா… வாலு பயலே…” என்று அவள் வலியில் கத்த, நரேந்திரமூர்த்திதான் மனைவியின் முடியை பேரனின் கையிலிருந்து பிய்த்துவிட்டார்.

“பார்த்தீங்களா உங்க பேரனை…! இந்த வயசுலேயே என்ன பண்ணறான்னு! என்னோட முடியை பூரா கையோட கொண்டுவந்துட்டான்” – அழுது கொண்டிருக்கும் பேரனின் கன்னத்தில் அழுந்த ஒரு முத்தம் கொடுத்துவிட்டு கணவனிடம் புகார் வாசித்தாள்.

“அவனுக்கு உன்ன பிடிக்கல… அதான் போடுறான்… நீ எதுக்கு கிட்ட போற?” – மனைவியை கிடல் செய்து சிரித்தார்.

“பிடிக்காது பிடிக்காது… என் வீட்ல இருந்துகிட்டு என்னையே பிடிக்காதா? நாலு போடு போட்டா எப்படி பிடிக்காம போகும்?” – விளையாட்டாகத்தான் சொன்னாள். ஆனால் அதற்கே நரேந்திரமூர்த்தி கண்டித்தார்.

“என்ன பேசுற? மது காதுல விழுந்தா வருத்தப்பட போறா” என்றார்.

“நீங்க சும்மா இருங்க. மது நம்ம பொண்ணு… நா விளையாட்டா பேசுறேனா சீரியஸா பேசுறேனான்னு அவளுக்கு தெரியாதா? அதெல்லாம் ஒண்ணும் வருத்தப்படமாட்டா” என்று கூறி கணவனை அடக்கிவிட்டு அழும் குழந்தையை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினாள்.

என்னதான் தாயாக இருந்தாலும், தன் குழந்தையிடம் வினையாக பேசவில்லை என்று தெரிந்தாலும் சில சமயங்களில் மதுராவின் மனம் புண்படத்தான் செய்தது. அதை அறியாத பிரபாவதி, கிண்டல் கேலி என்று நினைத்து அடிக்கடி எக்குத்தப்பாக எதையாவது பேசிவைப்பாள்.

‘காடைக்கு களம் கொடுத்தாலும், காடை காட்டைத்தான் பார்க்கும்’ – ‘அப்படியே அப்பன் பிடிவாதம்’ – ‘அப்படியே அப்பன் கோவம்’ – ‘பேர்லையாவது அந்த தேவ் இல்லாம இருந்திருக்கலாம். அதுல கூடவா அப்பன் மாதிரி!’ – ‘என்ன இருந்தாலும் குட்டிமாதான் இந்த வீட்டு பிள்ளை. நீ அந்த வீட்டு வாரிசாச்சே! அதான் என்கிட்ட வர மாட்டேங்கிற’ – இது போன்ற வார்த்தைகளெல்லாம் மதுராவின் மனதை ஒவ்வொரு முறையும் சுருக்கென்று தைக்கும். ஆனால் காட்டிக்கொள்ள மாட்டாள். விளையாட்டாக பேசுவதை பெரிதுபடுத்தக் கூடாது என்று அமைதியாக இருந்துவிடுவாள்.

அன்று திலீப் வீட்டில் இருந்தான். தொடர்ந்து அழுதுகொண்டே இருந்த தங்கை மகனை தாயிடமிருந்து வாங்கி சமாதானம் செய்தான்.

“அடேயப்பா…! என்னால இவனை சமாளிக்க முடியலப்பா! நீயாச்சு… உன் தங்கச்சசி மகனாச்சு… பார்த்துக்க…” என்று மகனிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் பிரபாவதி.

நரேந்திரமூர்த்தியும் ஏதோ வேலையிருப்பதாக கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார். திலீப் மட்டும் குழந்தையோடு ஹாலில் அமர்ந்திருந்த போது தேவ்ராஜ் வீட்டிற்குள் நுழைந்தான்.

அந்த சூழ்நிலை இருவருக்குமே சங்கடமானதுதான். இருவரும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்து பேசி பலகாலமாகிவிட்டது. அவனுடைய குழந்தை இவன் கையில்… குழந்தையை பார்க்கத்தான் அவன் வந்திருக்கிறான். இப்போது என்ன செய்வது! குழந்தையை எப்படி அவனிடம் கொடுப்பது! பேசாமல் சோபாவில் அமரவைத்துவிட்டு போய்விடலாமா! ஆனால் குழந்தை நழுவி விழுந்துவிட்டால் என்ன செய்வது!’ – திலீப்பின் சிந்தனை தறிகெட்டு ஓடிய போது எதுவுமே நடக்காதது போல் நிதானமாக அவனிடம் நெருங்கினான் தேவ்ராஜ்.

“என்ன சொல்றான்? ரொம்ப வாலு பண்ணறானா?” என்று பேச்சு கொடுத்தான்.

அவன் அப்படி இயல்பாக தானே முன்வந்து பேசிய பிறகு தவிர்க்க முடியாமல், “ஆங்… கொஞ்சம்… சேட்டை…” என்று தடுமாற்றத்துடன் பதிலளித்தான்.

குழந்தையை அவனிடமிருந்து வாங்கியபடி, “தேங்க்ஸ்” என்று முணுமுணுத்தான் தேவ்ராஜ். அவனை வியப்பாக பார்த்தான் திலீப்.

“பாரதிகிட்ட சேஞ்சஸ் தெரியுது” என்றான்.

நொடியில் திலீப்பின் முகம் மலர்ந்தது. அந்த மலர்ச்சியில் தெரிந்த மகிழ்ச்சியை கவனித்தபடி குழந்தையோடு மனைவியின் அறைக்குள் நுழைந்தான் தேவ்ராஜ்.

தேவ்ராஜ் குழந்தையோடு விளையாடிக் கொண்டிருக்கும் போது குளியலறையிலிருந்து வெளிப்பட்டாள் மதுரா. பனியில் நனைந்த ரோஜா போல் பளிச்சென்றிருந்தாள். அவள் கூந்தலிலிருந்து வடிந்த ஈரம் ஆடையை சற்று நனைத்திருந்தது. கழுத்திலும் முகத்திலிலும் ஆங்காங்கே முத்து போல் நீர் திவலைகள் பூத்திருந்தன. அவனுடைய பார்வை மாறியது. கண்களில் கிறக்கம் கூடியது.

கணவனைப் பார்த்ததும் அழகாக புன்னகைத்து, “எப்ப வந்தீங்க?” என்றாள் மதுரா.

அவன் பதில் சொல்லவில்லை. அவள் மீது வைத்த கண்ணனை விளக்கவும் இல்லை. அவன் கண்களில் தெரிந்த கள்ளத்தனத்தைக் கண்டுகொண்ட மதுராவின் முகத்தில் புதுரத்தம் பாய, குபீரென்று சிவந்தது அவள் முகம். அவன் பார்வையை தவிர்த்தபடி கீழுதட்டை மடித்துக் கடித்தாள்.

‘தட்ஸ் மை ஜாப்…’ – அவன் மனம் சிணுங்கியது. அவன் மனதிற்குள் சொல்லிக் கொண்டதை அவள் உள்ளுக்குள் உணர்ந்தாள். கண்கள் தானாய் விரிந்தன. அதை பார்த்த அவன் முகத்தில் குறும்புப் புன்னகை எட்டிப்பார்த்தது. அவள் ‘என்ன?’ என்று புருவம் உயர்த்தினாள். அவன் தலையை குறுக்காக ஆட்டினான்.

‘ஃப்ராட்…’ – அவள் மனம் முணுமுணுத்தது. இப்போது ‘ரியலி?’ – அவன் புருவம் உயர்த்தினான். அவள் முகம் சிரிப்பில் மலர்ந்தது. பெற்றோரின் ரகசிய சம்பாஷணைகள் எதுவும் புரியாமல். ‘ங்கா… ங்கா…” என்று பொம்மையை போட்டு அடித்துக் கொண்டிருந்தான் குட்டி தேவ்.

கீழே குனிந்து குழந்தையை தூக்கிய மதுரா அங்கிருந்து விலகும் முன் அவள் கையை பிடித்து இழுத்து தன் அருகில் அமரவைத்தான் தேவ்ராஜ்.

“ப்ச்… என்ன! விடுங்க…” – சங்கடத்துடன் குழந்தையை அணைத்துப் பிடித்துக் கொண்டாள்.

“வீட்டுக்கு வா…” – கரகரத்த குரலை செருமி சரிசெய்துக் கொண்டு அழைத்தான்.

மதுராவின் முகத்தில் மகிழ்ச்சி மறைந்து தீவிரம் குடியேறியது. மனைவியின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கவனிக்காமல், அவள் கையை தன் கைகளுக்குள் அடக்கி, அவளுடைய தளிர்விரல்களோடு விளையாடியபடி, “சோதிக்காத மது… ப்ளீஸ்…” என்றான்.

“வெயிட் பண்ணறேன்னு சொன்னீங்களே!” – மெல்லிய குரலில் முணுமுணுத்தாள். அவள் கையை பிடித்திருந்த அவன் பிடி சட்டென்று தளர்ந்தது. மனைவியின் முகத்தை கூர்ந்து பார்த்தான்.

“உன்ன இப்பவே வீட்டுக்கு கூட்டிட்டு போகணும் போல இருக்கு… ஐ மிஸ் சோ மச்… ப்ளீஸ் டோன்ட் டெஸ்ட் மீ எனிமோர்…” – தழைத்த குரலில் கூறினான். கெஞ்சினான் என்று கூட சொல்லலாம். அவள் பதில் சொல்லவில்லை. அவன் முகம் இறுகியது. கண்களை மூடி ஆழ மூச்செடுத்தான். ஒன்று இரண்டு மூன்று என்று மனதிற்குள் எண்ணினான். சற்று நேரம் கழித்து கண்களை திறந்து அவளை பார்த்தான். அவள் பார்வை இவன் முகத்திலேயே பதிந்திருக்க, கண்கள் நான்கும் பின்னிக் கொண்டன.

“பாரதி மாப்பிள்ளை பார்க்க சொல்லிட்டா… சீக்கிரமே கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடும். இதுக்கு மேலையும் டிலே பண்ணினா எப்படி? எப்பதான் வர்றதா இருக்க?” – சிறு எரிச்சல் எட்டிப்பார்த்தது அவன் குரலில். அப்போதும் அவள் பதில் சொல்லவில்லை. தலைகுனிந்தபடி அழுத்தமாக அமர்ந்திருக்கும் மனைவியை பார்த்து பற்களை நறநறத்தான் தேவ்ராஜ்.

“திஸ் இஸ் த லிமிட் மது. இதுக்கும் மேல என்னால உன் கால்ல விழுந்து கெஞ்ச முடியாது. அது உன்னோட வீடு… உனக்கே எப்ப வரணும்னு தோணுதோ வா… இனி நா கூப்பிட மாட்டேன்” என்று சிடுசிடுத்துவிட்டு எழுந்தான்.

***************************

இந்திரா செல்வம் எழுதும் முகங்கள்…

முகங்கள் – 1

36 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  admin says:

  friends, Next episode innikku update pannuven. But time solla mudiyaadhu… correction pannikittu irukken… nichchayam pottuduven…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Mohana Nagaraj says:

  Hi mam. I’m new reader. This is really very nice loveable story. I’m really love it. Pls next episode podugah mam.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hemavathy Pandian says:

  Nithi mam when is the next episode 97

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Subha Mani says:

  Next epi

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Banu Priya says:

  Next episode pls

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ishara Ismail says:

  amazing story
  Waiting for the next epi

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nithya Yuvaraj says:

  Next epi epa mam

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Banu Priya says:

  Today epi pls

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Imaa Aroo says:

  Super story…I’m new reader N.karthigan super Selma…..wait for next

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  admin says:

  Dear Readers,
  Next episode is not yet completed. so plz don’t wait for the update now… I’ll try to update by morning….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Subha Mani says:

   Mam morning post panunga plz

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Suba Siva says:

  Very nice story!!

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sony Sri says:

  Nice ud sis

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Shanmugaselvi V. says:

  Naa night tha novel padika start pannam ….. Night full thongama padichan , romba supera irrundhu novel .. very nice … Waiting for next epi….

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Baladurga Elango says:

  madhu ena nikura theriyala

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ambika V says:

  Madhura romba pannura dev mattrum madhuku theriyalai ya dev alavukku love illai madhukitta evalukkaga avan evalo adjust pannuran 👿👿

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Narmatha Sakthi says:

  Nithya ma pavam Dev Madhu va anupu ma paiyan rowpa feel panran

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  saranya shan says:

  meendum vedalammaari eraathe,avalmanathil enna irukkunnu kel.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lalitha Vasudevan says:

  super …

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  No kovam dev no kovam .un mamiyar antha velaiya pakkava seirunga nee pesama iruppa palaiyapati aarampithu vitathe mathu vanthiruva. Nithi sollungappa devkitta porumaiya irukka. Bharathi kutiya viravil unakka marriage ok valtthukkal.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Razitha Kaboor says:

  nice epi

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sumithra Ramalingam says:

  Madhu Dev pavanda sothikkathama

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sow Dharani says:

  யம்மா மது இதுக்கு மேலே என்ன வேணும் உனக்கு…..

  ஒரு வழிய பாரதி back to normal…..

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Banu Priya says:

  Nice for madhu dhav romance

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  மதுரா பதில் சொல்லவில்லை என்றவுடன் தேவ்விற்கு கோபம் வருகின்றது ,தேவ்வாவது பொறுமை காப்பதாவது,பிறவிக்குணம் மாறிவிடுமா என்ன.

  நன்றி

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  நீ போடா தேவ்..உன் மாமியார் பேக் பண்ணி அனுப்பி வைப்பாங்க….விடுறா…விடுறா…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  HA HA MADHUUUU IPPO UN TURN SOOOOOO CRIPPPPPPP IRUUUUUUU

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kani Ramesh says:

  Super bharathi mrgeku othukitathu happy… prabhavathy una pathi ipave kutty dev ku therinji pochi athan unkita otta matenguran… Dev pavam madhu epo than avana purinjipa

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Ramanathan says:

  Nice

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  aCho sema super epi.. poidu ma Madhu… Avan pavam la

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jansi r says:

  Wow nice epi

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  இந்த தேவ்க்கு பொறுமைன்றதே கொஞ்சம் கூட இல்லை….இப்ப தான் அவளே கொஞ்சம் பொஞ்சமா மனம் மாறிட்டு வரா இப்ப போய் திரும்ப முருங்கை மரம் ஏறிட்டான்..,.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Dhivya Bharathi says:

  Ada. Ada yen madhu ipadi panra. Pavum dev ….. madhu romba panra. …… dev boy nee madhura venam …. naa readya iruken

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Subha Rajan says:

  Nice epi mam.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Dlaxsana Rajamanokaran says:

  Nice

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Saradha Sekar says:

  Nice

You cannot copy content of this page