Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 98

அத்தியாயம் – 98

“பாரதிக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிருக்கு” – கணவனின் வார்த்தையைக் கேட்டதும் பொருட்களை அடுக்குகிறேன் பேர்வழி என்று கலைத்து கொண்டிருந்த மதுராவின் கை சட்டென்று வேலை நிறுத்தம் செய்தது.

இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தாள். இந்த பேச்சை அவன் என்றைக்கு எடுக்கிறானோ அன்றைக்கு நன்றாக திட்டிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தாள். ஆனால் இப்போது அதை நிறைவேற்ற முடியும் என்று தோன்றவில்லை. பொங்கிவந்த ஆத்திரம் தொண்டையை அடைத்துக் கொண்டது. சம்மந்தமில்லாமல் அழுகை வரும் போலிருந்தது. ‘ச்சே! என்ன இது!’ – கண்களை மூடி ஆழமாக மூச்சை உள்ளிழுத்தாள். இறுக்கிப் பிடித்திருந்த உணர்வுகளை முயன்று தளர்த்தினாள்.

தனக்கு முதுகுகாட்டி நிற்கும் மனைவியின் மீதிருந்து பார்வையை அகற்றவில்லை தேவ்ராஜ். அவள் ஏதேனும் பதில் சொல்வாள் என்று ஓரிரு நிமிடங்கள் காத்திருந்தான். அவளிடமிருந்து எந்த மறுமொழியும் வரவில்லை.

“ஹும்ம்ம்…” – பெருமூச்சுவிட்டான். குழந்தையின் முகத்தைப் பார்த்து அவளுடைய புறக்கணிப்பை உதறியவன், பாரதிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை, அவனுடைய தொழில் குடும்ப விபரம் அனைத்தையும் அவள் கேட்காமலே கூறினான்.

கணவனுக்கு புறமுதுகு காட்டியபடி அவன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மதுரா பதில் ஏதும் சொல்லவில்லை. உண்மையில் சொல்ல முடியவில்லை. ஏதேனும் பேசினால் அவன் மீதிருக்கும் பிணக்கில் வெடித்து அழுதுவிடுவோம் என்று பயந்து அமைதியாக இருந்துவிட்டாள்.

அவள் அப்படி எதுவுமே சொல்லாமல் மரம் போல் நிற்பது, இழுத்துப் பிடித்து வைத்திருந்த அவனுடைய பொறுமைக்கு வேட்டு வைத்துவிட்டது.

“நீயா எதுவும் கேட்கமாட்ட… நானா சொன்னாலும் ரெஸ்பான்ஸ் பண்ணமாட்ட… குட்… வெரி குட்…”

“………………”

“ஐ நோ… நா தப்பு பண்ணியிருக்கேன்… நீ ரியாக்ட் பண்ணற… ஆனா எவ்வளவு நாளைக்கு?”

“………………..”

“என்மேல கோவம்னா அதை சொல்லு… திட்டு… வெளிப்படுத்து… வொய் த ஹெல் ஆர் யு சோ நம்?” – ‘ஏன் இப்படி அமைதியா இருந்து தொலைக்கிற?’ என்று கத்தினான்.

விரல் நகங்கள் உள்ளங்கையை பதம்பார்க்கும் அளவிற்கு கைகளையும் கண்களையும் இறுக்கமாக மூடிக் கொண்டு நின்றாள். உள்ளே படபடவென்று அடித்துக் கொண்டது. கன்னங்கள் ஈரமானது.

“ஓ…கே…!!! இப்படித்தான் இருக்கணும்னு நீ விரும்பினா இரு… எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் இப்படியே இரு… நானும் என்னோட பொறுமையோட எல்லை என்னதான்னு தெரிஞ்சுக்கறேன்…” – விலகிச் செல்லும் அழுத்தமான காலடிகளின் சத்தம் அவன் அறையிலிருந்து வெளியேறுவதை அவளுக்கு உணர்த்தியது.

ஓரிரு நிமிடங்கள் கழித்து திரும்பிப் பார்த்தாள். அவன் இல்லாத அறை வெறுமையாய் தோன்றியது. ஏதோ பெரும் குற்றம் இழைத்துவிட்டது போல் மனதை பெரும் பாரம் அழுத்தியது. வேகமாக பாய்ந்து வந்து மெத்தையில் விழுந்தவள் அழுது கொட்டினாள். ஏன் அழுகிறோம் என்று புரியவில்லை… கோபம் கோபமாக வந்தது… யார் மீது என்று தெரியவில்லை… யாரையாவது அடிக்க வேண்டும் போல் இருந்தது… யாரை அடிக்க முடியும்…! தலையில் அடித்துக் கொண்டாள். ஆனால் ஏன் அடித்துக்கொள்கிறோம் என்று விளங்கவில்லை. பைத்தியம் பிடித்துவிட்டதா! – விருட்டென்று எழுந்து அமர்ந்தாள். இன்னும் ஆத்திரம் தொண்டையிலேயே இருந்துக் கொண்டு கரைந்து தொலைவேனா என்றது. முழங்காலைக் கட்டிக்கொண்டு, ‘ஊ… ஊ..’ என்று அழுதாள்.

மருமகன் கத்திவிட்டு வேகமாக வெளியேறியதை கவனித்துவிட்டு மகளுடைய அறைக்கு வந்தாள் பிரபாவதி. தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கும் மகளைக் கண்டு பதறியவள், “ஐயையோ என்ன ஆச்சு? மறுபடியும் வம்பிழுத்துட்டுப் போயிட்டானா? அடிச்சுட்டானா? அவன் திருந்தவே மாட்டான்… நல்ல காலம்… அங்க போமாட்டேன்னு சொல்லிட்ட. இங்க வந்தே இந்த அராஜகம் பண்ணறவன் அங்க என்னென்ன பண்ணுவான்…! கடவுளே! இந்த கொடுமையிலிருந்து என் பொண்ணுக்கு விடுதலையே இல்லையா!” என்று கடவுளிடம் பஞ்சாயத்து வைத்தாள்.

ஏற்கனவே எரிச்சலிலிருந்த மதுரா தாயின் பேச்சைக் கேட்டு இன்னும் கடுப்பானாள். அதே நேரம் பிரபாவதி போட்ட கூச்சலில் உறங்கி கொண்டிருந்த குழந்தை விழித்துக் கொண்டு வீறிட்டான்.

“அடேய்… கத்தாதடா… உங்க அப்பன் போட்டுட்டு போன சத்தம் போதாதுன்னு இப்போ நீ வேற கிளம்பிட்டியா! அப்படியே அப்பன் மாதிரி” – திட்டிக் கொண்டே குழந்தையை தூக்கினாள்.

“பிள்ளைங்க அப்பா மாதிரி இல்லாம வேற யார் மாதிரி இருப்பாங்க? ஏன் எப்பவும் அப்பா மாதிரி இருக்கே அப்பா மாதிரி இருக்கேன்னு குழந்தையை திட்டி, தேவ் ஏதோ தப்பான அப்பா மாதிரி ப்ரொஜெக்ட் பண்ணுறீங்க?” – காலி அவதாரம் எடுத்தது போல் விழிகள் சிவக்க தாயை உக்கிரமாக முறைத்தாள்.

மேல்மூச்சு வாங்க ஆவேசமாக தன்னை பார்வையால் எரிக்கும் மகளை திகைப்புடன் பார்த்த பிரபாவதி, “இப்போ நா என்ன சொல்லிட்டேன்” என்றாள்.

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்… நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன். எப்ப பார்த்தாலும் என் பிள்ளையை திட்டிகிட்டே இருக்கீங்க? என்ன பிரச்சனை உங்களுக்கு தேவ பிடிக்காது… அதனால அவரோட பிள்ளையையும் பிடிக்கல… அதானே?” – பல நாட்களாக உள்ளே அடக்கி அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்துக் கொண்டு வெளியேறியது.

“மது! நா எப்பவும் சும்மா விளையாட்…” – “என்ன விளையாட்டு? இல்ல என்ன விளையாட்டு விளையாடுறீங்க நீங்க? அடுத்தவங்களை புண்படுத்தறதுதான் உங்க விளையாட்டா? தெரியாமத்தான் கேட்கறேன்… அவரு உங்க மருமகன் தானே? வீட்டுக்கு வந்தா வாய்க்குள்ளேயே முணுமுணுக்குறீங்க… மூஞ்ச திருப்பிகிட்டு போறீங்க… அவரு என்ன இந்த வீட்டுக்கு வரணுன்னு ஆசைப்பட்டா வர்றாரு? எனக்காக… என் பிள்ளைக்காக… இங்க வந்து உங்ககிட்டயெல்லாம் அவமானப்பட்டுக்கிட்டு போறாரு” – படபடவென்று மூச்சுவிடாமல் பொரிந்தாள்.

உண்மையில் பிரபாவதி அவமதித்ததெல்லாம் ஐதொரு காலம்… தான் அவமதித்துவிட்ட கோபத்தை தன் மேல் காட்டிக்கொள்ள முடியாமல் சிக்கிய பிரபாவதியை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தாள்.

“ஏய்… ரொம்ப பேசாதடீ… நா எப்ப அவனை அவமானப்படுத்தினேன்… நீதான்…” – “இதோ… இப்ப அவமானப்படுத்தல? மருமகனை அவன் இவன்னுதான் மரியாதை இல்லாம பேசுவீங்களா? துருவன் பாயை அத்தை இப்படி பேசினா விடுவீங்களா?”

“தேவையில்லாம உங்க அத்தைகாரியை என் கூட கம்பார் பண்ணாதடீ… அவன் இப்பதான் உன் புருஷன். சின்ன வயசுலேருந்து எனக்கு நாத்தனார் மகன். நா அப்படிதான் கூப்பிடுவேன்… அதெல்லாம் மாத்திக்க முடியாது…”

“மாத்திக்க முடியாதா? முடியாதா??? அதெப்படி முடியாது?”

“முடியாதுன்னா முடியாதுதான்… நா அவனை ‘அவன் இவன்’னுதான் கூப்பிடுவேன். உனக்கு பிடிக்கலைன்னா காதை மூடிக்க”

“காதை மூடிக்கணுமா! நா ஏன் காதை மூடறேன்? எங்க அத்தைகிட்ட போயி, உங்க பையனை ‘அவன் இவன்’னு கூப்பிட சொல்றேன்”

“சொல்லு சொல்லு… எம்மருமக வருவா… வந்து சொல்லிக் கொடுத்த உன் நாக்கையும்… பேசின உங்க நொத்தை நாக்கையும் கட் பண்ணி எடுத்துட்டு வந்துடுவா…”

“ஐயை…யையே…! என்ன சத்தம் இங்க… பிரபா… நீ இருக்கற இடம் அமைதியாவே இருக்காதா? அம்மாடி… நீயும் என்னடா பதிலுக்கு பதில் பேசிகிட்டு இருக்க?” – பெண்களின் சண்டையில் இடையில் நுழைந்து தலையைக் கொடுத்தார் நரேந்திரமூர்த்தி.

“என்னை எதுக்கு குறை சொல்லறீங்க? உங்க மகளை கேளுங்க…” – பிரபாவதி.

“டாடி… இவங்க ஓவரா பேசுறாங்க… வாயை மூட சொல்லுங்க” – மதுரா.

“ஐயையோ! ஓவரா பேசுறேனா! ஏங்க… அழுதுகிட்டு இருந்தாங்க… என்னனுதான் ஒரு வார்த்தை கேட்டேன்… கரண்ட்டு மாதிரி என்னைய பிடிச்சுகிட்டா… அப்புறம் நா காத்தாம என்னங்க செய்வேன்? நீங்களே சொல்லுங்க…”

“டாடி… அவங்க என்னன்னு மட்டும் கேட்கல டாடி… தேவ் மாதிரி இருக்கான்னு சொல்லி சொல்லி தம்பியை திட்டுறாங்க…”

“ஆமாம்… அதுல என்ன தப்பு… உன் பிள்ளையும் புருஷனும் ஒரே மாதிரிதான் இருக்காங்க… அந்த முட்டை கண்ண வச்சுக்கிட்டு என்னைய முறைச்சு முறைச்சு பார்க்கறாங்க… அதுக்கு என்ன இப்போ? ஏங்க… நா இங்க வரும்போது இவ அழுதுகிட்டு இருந்தா…. எதுக்கு அழுதான்னு கேளுங்க… அவன்தான் என்னமோ பண்ணிட்டு போய்ட்டான். அந்த கோவத்துலதான் என்னைய பிடிச்சுக்கிட்டு உதறுறா…”

“நான்சென்ஸ்… அவங்களுக்குள்ள ஏதாவது இருக்கும். நீ எதுக்கு தேவையில்லாம அதுல தலையிடற? உனக்கு அப்பவே சொன்னேன்… லூஸ் டாக் அதிகமா பண்ணிக்கிட்டு இருக்க… கண்ட்ரோல் பண்ணுன்னு… கேட்டியா? வாயையே திறக்காத மதுவே உன்கிட்ட சண்டைக்கு வந்துட்டான்னா, தப்பு உன்மேலதான் இருக்கும். போ இங்கேருந்து… போன்னு சொல்றேன்ல…” – கணவனின் இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத பிரபாவதி அதிர்ந்துபோனாள். ‘போன்னு சொல்றேன்ல’ – என்று அவர் இன்னொரு முறை அதட்டியதும், கண்களில் கண்ணீருடன், “ஹும்” என்று முகத்தை வெட்டி திருப்பிக் கொண்டு அங்கிருந்து விலகினாள்.

32 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Banu Priya says:

  Enga pa next episode pls upload

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Subha Mani says:

  Tdy ud Iruka

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   irukku… ll be updated soon…

   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Subha Mani says:

    Oh super am waiting

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vuinu Rajesh says:

  Super. Waiting for next UD.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nithya Yuvaraj says:

  Superb

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  latha sundar sundar says:

  superb but very small update

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Jaya Bharathi says:

  superrrrrr

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Padmasrisuresh Suresh says:

  Superb…madhuravoda feelings…..and….Dev feelings

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Imaa Aroo says:

  Waiting for next

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  saranya shan says:

  Madhu mothamaa pongitta. Maya intha kan kollaa katciyai paarkalaiyaa

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  vijaya muthukrishnan says:

  super ud. egerly waiting for your next ud

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Jeevikajayamala Jayaramoo says:

  Very nice.Super

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vijay Siva says:

  Super ud vey nice

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sow Dharani says:

  அமைதி யா இருகுற பொண்ணு எல்லாம் பொங்குன இப்படி தான் ஆகும்……. பிரபா உங்களுக்கு இது தேவைதான்….. டேய் குட்டி தேவ் உங்க அப்பா பேசும் போது எல்லாம் தொண்டை யை தோரகளை…. பாட்டி வாய் தொறந்த வோடனே அழுகையை ஸ்டார்ட் பண்ணி கலவரத்தை ஆரம்பிச்சிற்றேயே….

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Yazhvenba M says:

  அடடா இதெல்லாம் தேவ் கேட்டிருக்க கூடாதா?

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Saradha Sekar says:

  Nice 👌

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  மகளே தாய்க்கு நல்ல மூக்கறுப்பு கொடுத்துவிட்டார் ,ஆகா இதையெல்லாம் கேட்க தேவ்விற்கு கொடுத்துவைக்கவில்லை.

  நன்றி

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Dhivya Bharathi says:

  Super ud akka…..

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sumithra Ramalingam says:

  dev thappichutta,ana eppo matta porannu theriyala

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Banu Priya says:

  Nice madhu. Chellam

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Haaaaaaa mathu super unakul ippati oru mathuva.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  selvipandiyan pandiyan says:

  ஹா ஹா மது பின்னிட்ட போ!

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kani Ramesh says:

  Ha ha madhu sema nalla venum prabavathy ku… madhu ivlo solliyum deva avan ivanu than pesura inum kooda nalla thitalam thappe illa…super epi sis

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Suganya Samidoss says:

  Super. சிரிச்சிகிட்டே படித்தேன். இயல்பாக இருக்கு உங்கள் கதை

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  மதுரா பொங்குற பொங்கல்ல தேவ் மாட்டுவான்னு நினைச்சா கடைசில மாட்டினது பிரபாவதியா….ஹா ஹா….சூப்பர்

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Haha semma …. Madhu darling 😘😘😘

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  SUPERRRRRRRRRR

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jansi r says:

  Ha ha
  Prapavati tappulaam senjuddu seyyata potu maatikidda

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  giffi i says:

  Awesome epic

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Chriswin Magi says:

  Buhahaaa prabavathy shocks Moorthi rocks 😂😂😂

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  நான் முதல்..ப்ரியா முந்திட்டேனே

You cannot copy content of this page