Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-25

அனு ,ராஜ் படிக்கும் கல்லூரி வளாகத்தில் அவனுக்காக காத்திருந்தாள்.அவள் எண்ணியதுப் போல் ராஜும் வர அவனை எதிர்கொண்டாள்,  அவன் நெற்றியில் முடிச்சு விழ பின்பு நினைவு வந்தவனாக தன் பையிலிருந்த கிப்ட் கவரை அவளிடம் கொடுத்தான்.

 

அவள் வாங்க மறுத்தாள் பின்பு அவனிடம் ஒரு ஐந்து நிமிடம் பேச வேண்டும் என்று  வேண்ட  அவனோ அருகிலிருக்கும் ‘ காபி ஹவுஸ்க்கு’ அவளை அழைத்துச் சென்றான்.

 

அவ்வழியே கார்த்தியின் கார் சென்றது.ஏனெனில் திவ்யாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்லும் வேளையில்  எதேர்ச்சியாக அதே காபி ஷாப் அருகில் இருக்கும் சிக்னலில் நின்றது.கார்த்திக் அனுயாவும் ராஜும் உரையாடிக் கொண்டிருந்த காட்சியைக் கண்டான்.

 

தன் நெற்றில் முடிச்சு விழ அவர்களை நோக்கி தன் பார்வையை செலுத்தினான்.அனுயா அவனிடம் ஏதோ தீவிரமாக பேச அவனோ அதை மறுத்து தலையசைக்க ராஜ் தன் கையிலிருந்த பார்சலை டேபிள் மீது வைத்துவிட்டு  குடித்த காபிக்கு பில் கட்டி விட்டு அனுவை திரும்பிக்கூட பார்க்காமல் கல்லூரி வளாகத்திற்கு சென்றுவிட்டான். ராஜுன் பிம்பம் கலங்கலாக தெரிய தான் அழுகிறோம் என்று தன் கன்னத்தை தொட்டுப் பார்த்து தெரிந்துகொண்டாள்.

 

பிறந்ததிலிருந்து கஷ்டம் என்னவென்று அறியாதவள், இதுநாள் வரையிலும்  யாருடைய பிணக்கையும்,புறக்கணிப்பையும் உணராதவள்.அதனால் இவனின் புறக்கணிப்பை அவளால் தாங்க முடியவில்லை.ஏன் அவன் தன்னை ஏற்க மறுக்கிறான் என்று தன்னை நொந்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

 

அனுயாவை கண்ணீரோடு பொது இடத்தில் கண்டவன் சினம் கொண்டு தன் ஸ்டியரிங் மீது குத்த ‘மாமா என்னாச்சி ‘என. அவனோ பேசாமல் இருக்க அவன் பார்வை  சென்ற திசையை தானும் பார்க்க அவள் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றிருந்தாள்.அவனிடம் எதும் கேட்காமல் மௌனமாக இருந்தாள்.

 

அவனின் மௌனம் மருத்துவமனை செல்லும் வரையில் தொடர்ந்தது. மருத்துவர் அழைக்க இருவரும் ஸ்கேன் அறைக்கு சென்றனர்.ஸ்கேன் ஸ்கீரினில் தங்கள் குழந்தையின் முழு உருவம் தெரிய கார்த்திக்கிற்கு அழகாக அசையும் அந்த சின்ன மொட்டை அப்பொழுதே கையில் ஏந்த வேண்டும் போலிருக்க அவனுக்கு மிகவும் பூரிப்பாக இருந்தது.

 

அவன் திவ்யாவை பார்த்து சிரிக்க, அவனின் சிரிப்பில் தன்னை தொலைத்தாள்.கன்னக் குழி விழ சிரிப்பவனின் சிரிப்பில் தன்னைத் தொலைத்து அவனின் அழகைக் கண்டு அவளுள் கர்வம் எழுந்தது.

 

தன் கணவனின் அழகைக் கண்டு பிரம்மிப்பில் இருந்தவளை கார்த்தியின் அழைப்பு அவளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

 

‘ குட்டிமா அங்க பாரு’ என்று திரையில் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் தங்கள் மகவை பார்த்து நெகிழ்ந்தான்.அவளின் பார்வை அவன் உணர்ந்து தான் இருந்தான், பொது இடம் என அறிந்து அவன் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டான்.

 

‘ குட்டிமா பாப்பா எவ்வளோ அழகா அசையுறா பாரு செம்ம க்யூட்ல, என் அம்மு எப்படி இருக்கா பாரு குட்டிமா’ என்று தன் மனைவியிடம் கூறி மகிழ்ந்தான்.

 

அனுவின் பிரச்சனையை பின்னுக்கு தள்ளினான்.பின் அவளின்  கையை எடுத்து தன் கையில் வைத்து முத்தமொன்றை வைத்தான். ஸ்கேன்  முடிந்த பின் இருவரும் மருத்துவரை அணுகினர். மருத்துவர் குழந்தை நல்ல ஆரோக்கியமாகவும் நல்ல நிலமையில் இருப்பதாகவும் பேரு காலத்தில் பிரச்சனையின்றி குழந்தை பிறப்பதற்கு மருத்துவர் சில ஆலோசனை கூறினார்.. பின்பு சக்கரையின் அளவு மற்றும் இரத்தழுத்தாம் இரண்டையும் கட்டுப்பாடாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்று வீடு திரும்பினர்.

 

இருந்தாலும் மாதமாக ஆக திவ்யாவிற்கு பயம் தொற்றிக் கொண்டே சென்றது.அவள் நரம்பியல் மருத்துவர் தீபாவிடம் சென்று வீட்டுக்கு தாமதமாக வர, அன்று பார்த்து கார்த்தி விரைவில் வீடு திரும்பியிருந்தான். அவனை தங்கள் அறையிள் கண்டவள் அதிர்ந்தாள்,  அவனோ அவளுக்காக காத்திருந்ததுப் போல் ‘ குட்டிமா எங்க போய்டு வர’ என வினவ அவளோ தன் அத்தையிடம் கூறிச் சென்றதுப் போல் தன்  அம்மா வீட்டிற்கு சென்று வந்ததாக அவனிடம் கூறினாள்.

 

அவன்  சந்தேகமாய் அவளைப் பார்த்தான்.ஏனெனில் திவ்யாவின் வீட்டிற்கு தொடர்புக் கொண்டு பேச திவ்யா அங்கு வராததை அவர்கள் தெரிவிக்க அவன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். அவள் முகமே சரியில்லை என்று அவனுக்கு அப்பட்டமாய் காட்ட அவன் பார்வை அவளை தொடர்ந்தது.

 

அவளோ அவனைக் கண்டுக் கொள்ளாது  தன் கைப்பையை ஹங்கரில் மாட்டிவிட்டு குளியல் அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வர கார்த்தி அறையில் இருக்கும் சுவடே இல்லாமல் இருக்க, அவனைத் தேடினாள். அவனோ பால்கனியில் நின்று தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான்.

 

அவளோ அவன் அருகில் வந்து…’ அனு விஷயமா என்கிட்ட ஏதாவது பேசனுமா’ என்று அவனின் பதிலுக்கு எதிர் பார்த்துக் கொண்டு நின்றாள்.

 

அவள் பேச்சை மாற்றுவதை அறிந்து தன் மனதில் சந்தேகம் எழுந்தாலும், அவளிடம் எதுவும் கேட்காமல் அமைதிக் காத்தான். அவள் காரணமின்றி எதையும் மறைக்க மாட்டாள் என்று அவளிடம் நம்பிக்கை இருந்தது.

 

‘மாமா அனு ராஜை விரும்புறா நான் உங்ககிட்ட சொல்றேன் சொன்ன, அனுதான் ஓகே ஆனதும் நானே எங்க அண்ணன் கிட்ட சொல்லிக்கிறேன் சொன்னா, அதான் மாமா நான் உங்ககிட்ட சொல்லலை’ என்றாள்.

 

அவனோ தன் மனதில் நினைத்ததை கேட்டுவிட்டான்.அவளுக்கு வருத்தம் தருவதாய் இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து தன் குமறலை அவளிடம் கொட்டினான்.

 

‘ குட்டிமா நான் உன்ன தப்பு சொல்லல… பட் என்னோட இடத்துல இருந்து யோசிச்சி பாரு, நான் உன்னை எவ்வளோ நம்புறேன் தெரியுமா… பட் ஏன் உனக்கு அந்த நம்பிக்கை என் மேல் வரல என்று அவளை கேள்வி கேட்க.

 

‘மாமா உங்க மேல எனக்கு நம்பிக்கை வரலைன்னு நீங்க சொல்றிங்களா? நீங்க நம்பிறிங்களா நான் உங்க மேல நம்பிக்கையா இல்லன்னு, மாமா உங்க மேல நம்பிக்கை இருந்ததால தான் மாமா எங்க அம்மா அப்பாவ விட்டுட்டு  உங்க பின்னாடி வந்தேன்’ என்று கூற அவனுக்கு சாட்டையால் அடித்ததுப் போல் இருந்தது.

 

முதல் முறை  கார்த்தி தன் தவறை உணர்ந்தான். அவள் கூறியது உண்மை என்று அவனுக்கு புரிந்தது. பின்பு அங்கு நிற்க  பிடிக்காமல் உறங்க சென்றாள். வெகு நேரம் ஆகியும் அவன் அறைக்கு வராததை எண்ணி அவள் காத்துக்கொண்டிருக்க…

 

தன் பொறுமையை காற்றில் பறக்கவிட்டவள் . அவனை நாடிச் சென்றாள்.அவனைக் கண்டவள் என்ன நினைத்தாலோ அவளின் கோபத்தை மூட்டைக்கட்டி வைத்து  தன் தாய் மடியைத் தேடி ஓடும் கன்றுப்போல் அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

 

‘மாமா நான் பேசுனது உங்கள ரொம்ப கஷ்டப்படித்திருந்தா சாரி மாமா ப்ளீஸ்’ என்று அவனை அணைத்துக் கொண்டு அழுதாள். அவன் அப்படியே அசராமல் நிற்க, அவள் தன் கணவனை நிமிர்ந்து பார்க்க, அதில் அவன் என்ன கண்டான் என்று அவனுக்கே நினைவில்லை

 

அவளை அந்நிலையில் கண்டவன். அவளது முகம் முழுவதுமாக காதலில் வசப்பட்டிருக்க. தன் மௌனத்தை உடைத்து ‘ குட்டிமா எனக்கு ஒரு கஷ்டமில்லை சரியா  நீ எதுவும் நினைக்காம இரு உன்மேல எனக்கு கோபம் இல்லடா’ என்று கூறிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அவனுக்கு யாரோ உதைப்பதுப் போல் உணர்வுத் தோன்ற ஆனால் அவளோ அதை கொண்டாடும் மனநிலையில் இல்லை  தன் கணவனை சமாதானம் செய்யும் பொருட்டு அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

 

கார்த்தி அவளின் பேச்சை ஒதுக்கி வைத்துவிட்டு அவளிடம்’ குட்டிமா அம்மு அசையுறாடா’ என்று மகிழ்ச்சியில் அவன் அவளிடம் கூற அவளோ ‘ மாமா என்மேல் கோபம் இல்லையே’ என்று அவள் சந்தேகமாய் கேட்க

 

எனக்கு ‘ உன் மேல கோபம் இருந்தா  நான் உன்கிட்ட இப்படி பேசிக்கிட்டு இருப்பேனா குட்டிமா’ என்று அவள் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.

 

குட்டிமா உன்மேல கோவம்ல இல்ல  கொஞ்ச நேரம் அமைதியா இரு குட்டிமா’ என்று அவள் மாராப்பை விலக்கி அவள் வெற்று வயிற்றில் அவன் கைகளை நகர்த்தி தன் குழந்தையின் அசைவை உணர தனக்குள் மின்னல் வெட்டுவதுப் போல் உணர்வு தோன்ற அவன் கண்கள் ஆனந்த கண்ணீரில் பளப்பளத்தது.

 

தன் கணவனை கண்டவள் அவன் மகிழ்ச்சியைக் கண்டு தன் கண்களும் கலங்க அவனை பார்த்துக் கொண்டு நின்றாள்

 

 

அவனோ தன் மனைவியை அலேக்காக  தூக்கி தன் கைகளில் அவளை ஏந்திக்கொண்டு தங்கள் அறைக்கு வந்து அவளை மென்மையாக படுக்கவைத்து தானும் அவளுடன் படுத்துக்கொண்டு தன் குழந்தையின் அசைவை அணு அணுவாக ரசித்தான்.

 

அவளும் தன் கணவனின் மகிழ்ச்சியில் பங்கேடுத்துக் கொண்டாள். அவனோ குழந்தையை பற்றின கனவுக்குள் அவளையும் இழுத்துக்கொண்டான் . குழந்தைக்கு எதை வாங்க வேண்டும் ,எப்படி கையாள வேண்டும் ஒவ்வொன்றாக கேட்டு அறிந்துக் கொண்டான்.குழந்தைப்பற்றிய கனவுகள் அவளுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், மற்றோரு பக்கம் பயப் பந்து அவள் நெஞ்சை அழுத்தியது. தன் குழந்தை முகத்தை பார்க்கும் வரம் தனக்கு கிட்டுமா? தன்னால் சீராட்ட முடியுமா? என்றால் முடியாது. அவளின் விதி கெடு இன்னும் ஐந்து மாதங்களே இருக்க அவன் கனவுகளை அவளிடம் பகிர்ந்துக் கொள்ள அவளுக்கு பாரம் ஏறிக்கொண்டே சென்றது.

 

 

அவளுக்கோ பயம் வந்துவிட்டது ஏனெனில்  தனக்குள் இருக்கும் வலி பெரிய அளவில் தோன்றினால் இரத்த நாளத்தில் ஏற்பட்டிருக்கும் கசிவு அதிகமாகி வெடிக்க வாய்ப்புள்ளது.

 

இப்போதைக்கு இருக்கும் ஒரே வழி அமைதி  எதையும் யோசிக்காமல் இருந்தாள் மட்டுமே குழந்தை பிறக்கும் வரை ஆபத்தில்லை. இரத்தழுத்தம் குழந்தைக்கு நல்லதன்று எண்ணி தன் மனதை நிலைப் படுத்திக் கொண்டாள்.(இது மட்டும் கார்த்தி அறிந்தாள் அறை நிச்சயமே… என்ன நடக்குமோ ஆண்டவனுக்கே வெளிச்சம்)….

 

நன்றி தோழமைகளே

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி….




2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    There is a chance sir… cerebral aneurysm prblm starting stage only … there is a chance….let we c


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Super divi pilaikka vaippu illaiya pavam divi ilaikka vachchurungapa

error: Content is protected !!