Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 99

அத்தியாயம் – 99

தேவ்ராஜ் நிறைய மாறியிருக்கிறான். மனைவிக்காக தன்னுடைய விருப்பங்களை மாற்றிக்கொள்கிறான். உரிமைகளை வீட்டுக் கொடுக்கிறான். விருப்பமின்மையை சகித்துக்கொள்கிறான். அனைத்திற்கும் மேலாக கோபத்தை கட்டுப்படுத்துகிறான். அவனுடைய குணத்திற்கு இவையெல்லாம் இயலாத காரியம். ஆனால் இயற்றிக் காட்டியிருக்கிறான்… அவளுக்காக… – மதுராவின் மனம் குளிர்ந்தது. கூடவே அழுகையும் வந்தது…

எத்தனை பழிச்சொற்கள்! எத்தனை காயங்கள்! எத்தனை வலிகள்! சொல்லில் அடங்காத துன்பங்களுக்கு அவளை ஆளாக்கியிருக்கிறான். மன்னிக்கவே முடியாது என்று எண்ணியிருந்த அவனுடைய தவறுகள் மற்றும் நெறி தவறிய நடத்தைகளின் தாக்கம் இன்று அவன் மனதில் சிறிதும் இல்லை. மாறாக அவனுடைய சிறு முகவாட்டம் பெரிதாகத் தோன்றுகிறது. அந்த அளவிற்கா அவள் மனம் வெட்கம்கெட்டுப் போய்விட்டது! – தன்னை நினைத்து தானே வியந்தாள். ஆனாலும் அவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை. மனம் போராடியது. அவனை பார்க்க வேண்டும்போல்… அவனை சமாதானம் செய்ய வேண்டும் போல் மனம் உந்தியது. கட்டுப்படுத்திக் கொண்டாள். உணர்ச்சிவசத்தில் இப்படியெல்லாம் தோன்றுகிறது. உறங்கியெழுந்தால் இந்த உணர்வுகளெல்லாம் மட்டுப்பட்டுவிடும் என்று எண்ணி கண்களை இருக்க மூடிக் கொண்டு படுக்கையில் சாய்ந்தாள்.

மூடிய இமைகளுக்குள் தோன்றிய அவன் முகம், கோபப்பார்வையுடன் கொஞ்சல் மொழிப்பேசியது. இம்சை தாங்காமல் எழுந்து அமர்ந்தாள். அருகில் உறங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கம் பார்வை திரும்பியது. அவனுடைய குழந்தை… அவனுடைய இரத்தம்… ஆனால் இதுவரை இந்த குழந்தையின் நிழல் கூட அவனுடைய வீட்டில் விழுந்ததில்லை. சுருக்கென்று உள்ளே வலித்தது. அநியாயம் செய்கிறோமோ என்று தோன்றியது. இந்த பிரச்சனையெல்லாம் இல்லாமல் அனைத்தும் சுமூகமாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று மனம் ஏங்கியது.

அலைபேசியை எடுத்து ஏதேனும் மெசேஜ் அனுப்பியிருக்கிறானா என்று சோதித்தாள். ‘குட் நைட்’ மெசேஜ் கூட இல்லை… மனம் ஏமாற்றத்தில் சோர்ந்தது. அவன் மீதான ஏக்கம் இன்னும் அதிகமானது. பழைய மெசேஜ்களை திறந்து ஒவ்வொன்றாக வாசித்தாள்.

‘மிஸ் யூ மை லவ்…’ – ‘தூங்க முடியல ஸ்டராபி…’ – ‘வைட்டிங் ஃபார் மை ஃபேமிலி’ – போன்ற வாசகங்கள் அவள் கண்களைக் கலங்க செய்தன. அவன் மீதான ஏக்கம் மனதை அழுத்த, மறு நொடியே எதையும் யோசிக்காமல் ‘கால் பட்டனை’ சொடுக்கினாள்.

நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது. வெகுநேரம் உறக்கம் வராமல் புரண்டுக் கொண்டிருந்த தேவ்ராஜ் அப்போதுதான் கண்ணயர்ந்தான். சற்று நேரத்திலேயே அலைபேசி ஒலித்தது. அழைப்பது யார் என்று கூட பார்க்காமல், உறக்கக் கலக்கத்திலேயே எடுத்து காதுக்குள் கொடுத்து, “ஹலோ” என்றான் அதட்டல் தொனியில். தூக்கம் கெடுகிறதே என்கிற எரிச்சல் அவனுடைய குரலில் தெரிந்தது.

அவனுடைய கடுமையான குரல் மதுராவின் மனதில் சுருக்கென்று தைத்தது. ‘இன்னும் கோபம் போகல…’ – வருத்தத்துடன் நினைத்துக் கொண்டு, “நான்தான் பேசுறேன்” என்றாள் மெல்லிய குரலில்.

சட்டென்று போர்வையை விலக்கிவிட்டு எழுந்து அமர்ந்தான்.

“மது! என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?” – அவசரமாக வெளிப்பட்டது அவன் குரல். வழக்கத்திற்கு மாறாக நேரம்கெட்ட நேரத்தில் அழைக்கிறாள் என்றால் பயம் வரத்தானே செய்யும்.

சட்டென்று அவளுடைய மன இறுக்கம் தளர்ந்தது. அவனுடைய அக்கறை அவள் மனதை வருடியது. “இல்ல… அதெல்லாம் ஒண்ணும் இல்ல” என்று முணுமுணுத்தாள்.

“வேற என்ன?” – சந்தேகத்துடன் கேட்டான். ‘ஏதோ இருக்கிறது இல்லையென்றால் இந்த நேரத்தில் அழைக்க மாட்டாளே!’ – பதட்டத்துடன் மனைவியின் பதிலுக்காகக் காத்திருந்தான்.

ஓரிரு நிமிடங்கள் தயக்கத்திற்குப் பிறகு, “நா வீட்டுக்கு வர்றேன்” என்று மெல்லிய குரலில் கூறினாள் மதுரா.

சட்டென்று அவனுடைய உலகமே அழகாகிவிட்டது. மனதில் ஆனந்த மழை பெய்தது… உண்மைதானா! உண்மையேதானா! நம்ப முடியவில்லை அவனால். ஒருவேளை கனவாக இருக்குமோ! தன்னைத்தானே தொட்டுப் பார்த்தான். உணர்விருந்தது. ‘ஓ மை காட்!’ – உற்சாகத்தில் மனம் துள்ளியது. வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும் போல் இருந்தது. அத்தனை உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு, “சரி வா…” என்றான் இலகுவாக.

‘தட்ஸ் இட்!’ – கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகக் காத்திருந்தவனுக்கு அவளுடைய வருகை தரும் சந்தோஷம் இவ்வளவுதானா! மதுராவின் மனம் சுணங்கியது.

“காலையில ட்ரைவரை அனுப்பறேன். வந்துடு”

‘ட்ரைவரையா!’ – கண்கள் கலங்கின.

“வேண்டாம்… நானே… டாடிகூட… வந்துடறேன்” – தொண்டையை அடைக்கும் ஆத்திரத்தை விழுங்கி கொண்டுப் பேசினாள்.

“ஓகே… குட் நைட்” – அழைப்பை துண்டித்துவிட்டான்.

அவனுடைய விட்டேற்றியான பேச்சு அவள் கண்களைக் கசியச் செய்தது. ‘நாமாக வருகிறேன் என்று சொன்னதால்தான் இப்படி உதாசீனப்படுத்துகிறானா!’ – தவறு செய்துவிட்டோமோ என்று வேதனையுடன் நினைத்தவள் அழுகையில் கரைந்தபடியே உறக்கத்தைத் தழுவினாள்.

************************

அன்று இரவு மதுரா உணவருந்த மறுத்துவிட்டாள். தான் அவ்வளவு தூரம் சொல்லியும், ‘நா அபப்டித்தான் பேசுவேன். அவனுக்கு மரியாதை கொடுக்க மாட்டேன்’ என்று பிரபாவதி அழுத்தம் திருத்தமாகப் பேசியது அவள் மனதைவிட்டு நீங்க மறுத்தது. ஆனால் மகளின் எடுத்தெறிந்த பேச்சை பிரபாவதி மறந்துவிட்டாள். என்னதான் இருந்தாலும் தாய்மனம் அல்லவா… கோபத்தைவிட மகளின் பசித்த வயிறே அவளுக்கு பெரிதாகப் பட்டது.

மகன்களையும் கணவனையும் தூதுவிட்டுப் பார்த்தாள். பிறகு தானே நேரில் சென்றும் சமாதானம் செய்தாள். ‘பசிக்கல’ என்கிற ஒரே வார்த்தையோடு முடித்துக் கொண்டாள் மதுரா.

‘ஐயோ! தெரியாம பேசித் தொலைச்சுட்டோமே! இப்படி சாப்பிடாம கிடக்கிறாளே! பால் கொடுக்கற உடம்பு… எப்படி தாங்கும்…’ – கவலையோடு படுத்தவளுக்கு பாதி இரவில் அடிக்கடி விழிப்பு வந்தது.

அப்படி ஒருமுறை விழிப்பு வந்தபோது, எழுந்து தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்கு வந்தவள், கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திடுக்கிட்டாள்.

“யாரது?” – அதட்டலுடன் வெளிப்பட்டது அவள் குரல். ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு, “நான் தான்” என்றது தேவ்ராஜின் குரல். உடனே ஓடிச் சென்று கதவைத் திறந்தாள்.

“என்ன ஆச்சு? இந்த நேரத்துல?” – பதற்றத்துடன் கேட்டாள்.

சிறு புன்னகையுடன், “ஐம் சாரி… டிஸ்டர்ப் பண்ணிட்டேன்” என்றபடி அவளுடைய கேள்விக்கு பதிலளிக்காமல் மனைவியின் அறைக்குள் நுழைந்தான்.

விடிவிளக்கின் மங்கலான வெளிச்சத்தில், வரைந்து வைத்த ஓவியம் போல் குழந்தையை அனைத்துப் பிடித்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மதுரா. உதட்டில் தவழும் மென் புன்னகையுடன் வெகுநேரம் அந்த காட்சியை கண்டு மனதை நிறைத்துக் கொண்டவன், பிறகு மின்விளக்கை ஒளிரச் செய்துவிட்டு அவளை மீண்டும் பார்த்தான்.

வெளிச்சத்தில் அவளுடைய உறக்கம் களையும், விழித்துப் பார்ப்பாள் என்று எதிர்பார்த்துதான். ஆனால் அது நடக்கவில்லை. அவனுடைய புன்னகை மேலும் விரிந்தது. அருகில் சென்று மெத்தையில் அமர்ந்தான். அப்போதுதான் அதை கவனித்தான். கன்னங்களில் கண்ணீர் காய்ந்து கோடிட்டிருந்தது.

அந்த கண்ணீர் தடம் தன்மீது அவள் கொண்டிருக்கும் அன்பின் அடையாளம் என்பதில் அவன் மனம் கர்வப்பட்டது. காற்றில் களைந்து முகத்தில் சரிந்திருந்த அவளுடைய முடியை ஒதுக்கிவிட்டு நெற்றியில் இதழ்பதித்தான். அப்போதும் அவளிடம் அசைவில்லை. இப்போது இன்னும் அதிகமாக… சத்தம் வராமல் குலுங்கி சிரித்தான்.

‘கும்பகர்ணி…’ – மெல்ல முணுமுணுத்தபடி குழந்தையின் உள்ளங்காலை நிமிண்டினான். லேசாக காலை உதறிவிட்டு இன்னும் அன்னையோடு ஒட்டிக் கொண்டானே ஒழிய அவனும் விழிக்கவில்லை. அடுத்து காதில் துணியை நுழைத்து கூச்சப்படுத்தினான். எதிர்பார்த்தபடியே தொந்தரவு தாங்காமல் வேகமாக முண்டினான் குழந்தை. ஆனால் விழிக்கவில்லை.

‘காட்! நீயும் உங்க அம்மாவுக்கு குறைஞ்சவன் இல்லடா…’ – சிரித்துக் கொண்டே இன்னும் அதிகமாக தொந்தரவு செய்தான். இந்த முறை அவனுடைய முயற்சி வெற்றியடைந்தது. குழந்தை முனகலுடன் அழ துவங்கினான்.

‘அப்பாடா…’ – நினைத்ததை நடத்திவிட்ட திருப்தியோடு ஒதுங்கிநின்று வேடிக்கை பார்த்தான் தேவ்ராஜ்.

“ஒண்ணும் இல்ல… செல்லம்… தூங்குங்க…” – குழந்தையை சமாதானம் செய்தபடி சுருக்கிய இமைகளை லேசாக பிரித்தவள், கட்டிலுக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த மதுரைவீரனைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள். அது யார் என்பதே ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகுதான் புலப்பட்டது அவளுக்கு.

“நீங்களா! என்ன இந்த நேரத்துல” – வியப்புடன் கணவனைப் பார்த்தாள்.

“லைட்ட போட்ட உடனே குழந்தை முழிச்சுட்டான். நீ என்ன இப்படி தூங்கற! திருடன் வந்தாக்கூட என் பிள்ளைதான் உன்ன காப்பாத்தணும் போலருகே!” – மனைவியை கேலி செய்தபடி குழந்தையை தூக்கி தோளில் போட்டு தட்டிக் கொடுத்தான்.

மதுரா சுவர் கடிகாரத்தை பார்த்தாள். பிறகு அவனைப் பார்த்தாள்… “மணி ரெண்டரை ஆகுது. இந்த நேரத்துல நாய் நாரி கூட தூக்கிகிட்டு தான் இருக்கும்”

“சரி வா… நம்மளும் போயி தூங்கலாம்”

“எங்க!!!” – அவளுடைய வியப்பு இன்னும் அதிகமானது.

“வீட்டுக்கு”

“இந்த நேரத்துலேயா!”

“இப்பதானே நீ வீட்டுக்கு வர்றேன்னு சொன்ன?”

“ட்ரைவரை அனுப்பறேன்னு சொன்னீங்க?”

“ம்ம்ம்… அனுப்பியிருக்கலாம். ஆனா பையன் கோச்சுக்குவான். அதான்… நானே வந்துட்டேன்”

“அப்போ… எனக்காக வரலையா?”

“உனக்காகவே! உனக்காக நா ஏன் வரணும்… நீ ஒரு ராட்சஸி… பிடிவாதக்காரி…”

“அப்போ நீங்க? ராட்சஸனுக்கெல்லாம் இராட்சஸன்… உலகத்துலேயே ரொம்ப பெரிய இராட்சஸன்…”

“அப்படியா? சரி வா… நீ பெரிய இராட்சசியா… இல்ல நா பெரிய இராட்சசனான்னு வீட்ல போயி டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம்…” – அவளுடைய கையை பிடித்தான்.

“ஹலோ… நா வரல…”

“எனக்கு காது கேட்காது…” – தரதரவென்று இழுத்துக் கொண்டு அறையின் வாசல் வரை வந்துவிட்டான்.

“தேவ்… இருங்க… இந்த நேரத்துல எப்படி… ப்ளீஸ்…”

“இந்த நேரத்துலதான் நீ நல்ல முடிவை எடுத்திருக்க. நான் என்ன பண்ணறது.. வா…”

“ஐயோ… டிரஸ் கூட மாத்தல…”

“அதெல்லாம் வீட்ல வந்து மாத்திக்கலாம்”

“வீட்ல வந்தா! அதுக்கு எதுக்கு மாத்தணும்”

“அது என் பிரச்சனை இல்ல…”

“ஐயோ.. இது நைட் டிரஸ்…”

“நானும் நைட் டிரஸ்ல தான் வந்திருக்கேன். என்ன ஆயிடிச்சு இப்ப?” – ஹால் வரை இழுத்துக் கொண்டு வந்துவிட்டான்.

“கடவுளே! தேவ்…” – உள்ளுக்குள் டன் டன்னாய் மகிழ்ச்சி பொங்கினாலும் வெளியே அலுத்துக் கொண்டாள்.

புன்னகை மாறா முகத்தோடு இருவரும் எதிரெதிர் திசையில் இழுத்தபடி ஹாலுக்கு வந்ததை பார்த்து அவர்கள் ஏதோ விளையாட்டுத் தனமாக ஒருவரை ஒருவர் சீண்டிக்கொள்கிறார்கள் என்று புரிந்துக் கொண்ட பிரபாவதியின் முகத்தில் புன்னகை தோன்றியது.

‘சாயங்காலம் அப்படி அழுதுகிட்டு இருந்தா! இப்போ இப்படி சிரிச்சுக்கிட்டு வர்றாளே! அப்போ அது விளையாட்டு சண்டைதானா! அதுக்குத்தான் அவ்வளவு ரியாக்ட் பண்ணினாளா! ம்ஹும்… இதுங்க விஷயத்துல நாம நுழைஞ்சோம்… அவ்வளவுதான்…’ – தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு தன்னுடைய அறை பக்கம் நடந்தாள்.

“நாங்க கிளம்பறோம்… கதவை பூட்டிக்கோங்க” – தேவ்ராஜ்.

‘என்ன!’ – அதிர்ச்சியுடன் சட்டென்று திரும்பி மருமகனைப் பார்த்தாள்.

“எங்க?” – புரியவில்லை அவளுக்கு. ‘இந்த நேரத்துல எங்க கிளம்பரதா சொல்றான். அதுவும் நைட் ட்ரஸ்சோட!’ – குழப்பத்துடன் பார்த்தாள்.

“வீட்டுக்கு” – பிரபாவதியின் பார்வை மகளுடைய முகத்தில் பதிந்தது.

“இந்த நேரத்துலேயா?”

மதுரா சங்கடத்துடன் தாயைப் பார்க்க, “ஆமாம்…” என்று அழுத்தமாக சொன்னான் தேவ்ராஜ்.

“என்ன திடீர்ன்னு!!”

“நல்ல முடிவுதானே! எப்ப எடுத்தா என்ன?” – மனைவியின் முகத்தை பார்த்தபடி மாமியாருக்கு பதிலளித்தான்.

“குழந்தையை முதன் முதல்ல அந்த வீட்டுக்கு அனுப்பும் போது சில சடங்கெல்லாம் செஞ்சு நல்ல நேரத்துல அனுப்பனும் மது. என்ன அவசரம் இப்போ… அதுவும் நடு இராத்திரில…?”

“ம்மா… இல்ல… தேவ் ப்ளீஸ்… டாடி தூங்கறாங்க… காலையில…” – தடுமாறினாள் மதுரா.

“நீ எதுவும் பேச வேண்டாம்… என்னோட பையன் எப்ப என் வீட்டுக்கு வந்தாலும் அது நல்ல நேரம் தான். நீங்க பயப்படாதீங்க. காலையில வந்து மாமாவை பார்க்கறோம்… வர்றோம்…” – மனைவியின் பிடித்த கையை விடாமல் வெளிப்புறம் நோக்கி நடக்க எத்தனித்தான்.

“ஒரு நிமிஷம்” – விறுவிறுவென்று பூஜையறைக்கு ஓடினாள். இனி இவனிடம் வாதாடி பயனில்லை என்று அவளுக்கு புரிந்துவிட்டது. எப்படியோ நன்றாக வாழ்ந்தால் சரி என்று தாய் மனம் வாழ்த்த தயாராகிவிட்டது. விளக்கேற்றி திருநீர் குங்குமம் கொண்டு வந்து மகளுக்கு வைத்தாள். பிறகு மருமகனின் தோளில் உறங்கி கொண்டிருந்த குழந்தைக்கு வைத்தாள். சிறு தயக்கத்திற்கு பிறகு தேவ்ராஜின் நெற்றியிலும் வைத்தாள்.

“சந்தோஷமா இருங்க…” என்று மனதார வாழ்த்தினாள். சட்டென்று தாயை கட்டிக்கொண்ட மகள், “சாரி ம்மா” என்றாள் குரல் கறகறக்க….

“ச்சே… ச்சே… என்ன பேச்சு… நீ நல்ல இருப்ப… சந்தோஷமா போயிட்டு வா…” என்று வாழ்த்தி நிறைந்த மனதோடு வழியனுப்பி வைத்தாள்.

51 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vuinu Rajesh says:

  Will there be UD today?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   yes… 10 o’clock post pannuven…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  C Menaka says:

  Very nice story feeling good
  Happy moment.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kirthika Karthick says:

  Waiting for the episode thinking about the climax unable to concentrate on other works. Please update soon 😍😍

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  fathi rush fathi rush says:

  late analum parawala mam innum inda story knjm kondu ponga.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  admin says:

  கதையை கொஞ்சம் நீட்டிக்க சொல்லி நிறைய ரீடர்ஸ் கேட்கறதால இந்த எபிஸோட்ல நிறைய மாற்றம் செய்ய வேண்டியிருக்கு ஃபிரண்ட்ஸ்… எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க… முடிந்த அளவுக்கு உங்களை திருப்திப்படுத்தற மாதிரி அப்டேட் கொடுக்கறேன். டிலே ஆகுதேன்னு வருத்தப்படாதீங்க… எனக்கும் லேட் ஆகுதேங்கற டென்ஷன் இருக்கு…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Hadijha Khaliq says:

   No problem Nithya….take your own time….ungaluku thirupthi aana udan thaanga epi ya…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Chitra Moorthy says:

   Climax vendam inum konjam epi kondu ponga plz

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Suganya Samidoss says:

   Take your own time. இந்த கதை புத்தகமாக எப்போது வெளியாகும் என்ற தகவலையும் பதிவிடவும்.

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Kani Ramesh says:

   Nice sis…take ur time n cum sis…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Radhu Gopal says:

  Yepo next ud sis?

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sony Sri says:

  Nice ud

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kirthika Karthick says:

  Wow 😮 what a story?!!! Read about this story in Fb and thought reading it but after reading it unable to keep away my mobile 2 days doing all works at home and reading even when little time free. Excellent story but waiting for next epi

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Meena Vighneswar says:

  Oru romance epi vendum vendum

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  joy jas says:

  Very nice

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Indra Selvam says:

  Ennama prabhavathi ippadi orea epila undar balti adichitta. Ne grip pa irunthathana innum konjam episode varum nangalum dev madhura kuda time spend pannuvome. Ippo paru ne maritanala nithya end card podaporanga……. i am going to miss dev…… ennama ippadi pannitengalea ma

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vuinu Rajesh says:

  Super Dev.. will there UD today?

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   illa… Next epi final epi… So konjam time aagudhu pa… innum mudikkala… nalaikku thaan poda mudiyum nu ninaikkiren…

   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Hadijha Khaliq says:

    Kadhai mudiyapogudha😢 I thought 2,3 epiyachum varumnu

   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kani Ramesh says:

    Watt😱😱😱😱…final epi ya…inum oru 2,3 epi madhu n dev life pathi varumnu ninachane…mudiya pogutha😭😭😭😭

   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vithiyaa Ragupathy says:

    Ohhh! Nooooooo. How sad. We are going 2 miss Dev and Mathu

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nithya Yuvaraj says:

  Super dev

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  latha sundar sundar says:

  wow. Dev always adiradithan. superb

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sow Dharani says:

  சூப்பர் தேவ்…..பின்னி பெடல் எடுத்துட்டா

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sumithra Ramalingam says:

  Itha ethir parthen. Semma dialogue en payan eppo vanthalum adu nalla neram than

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  josephine mary says:

  Nithya a happy epi

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ragul ragul says:

  wowwwwwwwwwwwwwwwwww

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Saradha Sekar says:

  Awesome 👌 👌 👌

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  wowwww superrrrrrrrr vandi kelaambiruchhuuuuuuuuuuuu kuuuuuuuuuuuuuuuuuu

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  Super adhiradi….so sweet Dev…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Baladurga Elango says:

  superb nice update

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Semma epi… Let them live happily forever

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kani Ramesh says:

  Wow lovely 😍😍😍… Dev back to form luv la intha athiradi sema…ha ha dev madhu n kutty deva ezhupa panna muyarchi kutty deva pathu nee un ammaku melanu sonnathu sema sis😘😘😘

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jayashree swaminathan says:

  Thanks for a lovely update.Simply you rock with this narration.
  Mathura’s transformation and Dev’s reaction is exceelent.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  பிரபாவதி தேவ் கூட சுமூகமாக நடந்ததை நம்பமுடியவில்லை.

  நன்றி

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Suganya Samidoss says:

  Wow wow wow excellent. பொறாமையை உருவாக்குறீங்க நித்யா.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Deepika Vijayaganth says:

  Sema sema sema… eagerly waiting for next episode

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Jaya Bharathi says:

  Sema….dev entry

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Divya Suge says:

  Dev adanga matiya da ne….nyt 2 clk ha ha ha

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Subha Mani says:

  Semaya iruku super love Dev

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  கிளம்பிட்டாளா….

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Lovely 😍😍😍😍

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Chitra Moorthy says:

  Wow very nice. Superb

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Karthikaa Radhakrishnan says:

  Super

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Banu Priya says:

  Soo sweet family for dev

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Ai naathan firsta ,dev super mathuma avana paththi than unakku theriumula appuram matra natural ratthirila ph pannuna varaththan seivan .dev un anpu thellai thanga mutiyalappa.heeeeeeeee

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Suji Anbu says:

  Sema sissy dev superb mathu ur lucky😍😍😍😍😍😙😙😙😘😘😚😚

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jansi r says:

  So swt

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rozani Banu says:

  supero super

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Gaayathry Kiruba says:

  wow super☺

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sumi Rathinam says:

  Super….😍😍

You cannot copy content of this page