முகங்கள்-11
2263
10
முகங்கள்- 11
“ஷ்….ஷ்…நந்தினி. நான் ருத்ரன்… கண்னை திறந்து பார்.”
ருத்ரனின் குரல் கேட்டு கண் திறந்தவள், ஒரு கலவரத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். இருண்டு அடர்ந்திருந்த காடு இப்போது வெளிச்சமாய் இருந்தது. இது எப்படி சாத்தியம்??? மீண்டும் ஒருமுறை அவளது கண்கள் வட்டமடித்தன. ‘ச்சே….இது….காடு இல்லை…ஹோட்டல் ரூம்…. ஆ…ஆனால் எ….ப்படி..??? ‘
“ஆர் யூ ஒகே ” – தோள்களை பற்றி உலுக்கிய ருத்ரனை பார்த்தவள் சட்டென அவனை உதரித் தள்ளிவிட்டு எழுந்தாள்.
வேக மூச்சுக்களுடன் உடல் நடுங்கிய படி அவனிடமிருந்து விலகி நின்றவளை பார்த்தவன்
“ஓ..கே.ஓ..கே.. உன்னை தொடல, பெட்ல உட்கார் தண்ணி எடுத்துட்டு வரேன் ” அவளது பதிலை எதிர்பார்க்காமல் ஃபிரிட்ஜிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அதன் மூடியை திறந்து அவள் புறம் நீட்டினான். மறுக்கத்தோன்றாமல் தன் தாகம் தணியும் வரை கட கடவென குடித்தாள்.
குடித்து முடித்த பாட்டிலை பெற்றுக்கொண்டவன்.
“என்னாச்சு ?எதுக்கு கத்துன? ஏதாவது கெட்ட கனவு வந்ததா? ” அவளை கேள்வியோடு பார்த்தான்
அவனது கேள்வியை விடுத்து தன்னுள் சிந்திக்கலானாள். ‘எல்லாம் கனவுதானா?? அப்படியே உண்மை போல்…. சந்திரிகா அம்மா…. நந்தினி மேடம்…. கொலை… கொலைக்கு பழி..அடர்ந்த காடு… எல்லாம் கனவா??? கட்டிலில் இருந்து விழும் அளவுக்கு கனவின் வீரியம் இருந்திருக்கிறதே!!!!! இப்படியும் கனவு வரக்கூடுமா???
தீவிர சிந்தனையில் இருந்தவளின் முகத்தையே பார்த்தவண்ணம் கைகளை கட்டிக்கொண்டு நின்றான் ருத்ரன். அவளது முக உணர்வுகளை ஒரு டைரக்டராய் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான்.
இருவரின் கவனத்தை கலைத்தபடி கதவை இருமுறை தட்டிக்கொண்டு உள்ளே வந்தான் பிரகாஷ்.
இருவரையும் விசித்திரமாய் பார்த்தவண்ணம் ருத்ரனை நெருங்கியவன்.
“ருத்ரா நீ இங்கே????”
“இந்தப்பக்கம் ரூம்ல சத்தம்கேட்டு நீ வந்த மாதிரிதான் அந்தப்பக்க ரூம்ல இருந்து நான் வந்தேன் “
அவன் பதிலளித்துக்கொண்டிருக்கும்போதே பிரகாஷின் கவனம் சந்தனாவின் மேல் படிந்தது, அவளது அலறல் சத்தம் கேட்டு தான் அவன் வந்ததே, குழப்பமான அவளது முகத்தை பார்த்தவன்
“என்னாச்சி நந்தினி??? ” என்று கேட்டதுதான் தாமதம்.
இரு காதுகளையும் கைகளால் அழுந்த மூடிக்கொண்டு “ஐய்யோ!!!! ” என்ற அலறலுடன் மீண்டும் தரையில் விழுந்தாள்.
“நான் நந்தினியில்லை இல்லை இல்லை இந்த பெயரை கேட்டாலே உடம்பெல்லாம் கூசுது. நான் சந்தனா. இனி என்னால நடிக்க முடியாது . முடியவே முடியாது ” வேகமாக தன் தலையை இடமும் வலமுமாக ஆட்டினாள்
“சந்தனா”என்று அவள் புறம் முன்னேறிய பிரகாஷை தடுத்த ருத்ரன், அவள்முன் மண்டியிட்டு
“நந்தினி…. இங்கே பார்!!!! ” வேண்டுமென்றே நந்தினியில் ஒரு அழுத்தம் கொடுத்தவன். அவளது தோள்களை பற்ற கையை உயர்த்தினான்.அவனது கையை மின்னல் வேகத்தில் தட்டிவிட்டவள் அவனது கண்ணத்தை நோக்கி கைகளை உயர்த்தினாள்.
உயர்ந்த அவளது கையை லாவகமாக பற்றி அவளது முதுகிற்குபின் வளைத்து பிடித்து தன்புறம் இழுத்தான். இருவரது முகங்களும் வெகு அருகில் “நீ நினைச்ச நேரமெல்லாம் அடிவாங்க நான் என்ன உன் ஸ்டண்ட் மாஸ்ட்டரா? மதியம் வாங்கின அடி என் தொழிலுக்காக. அதில் எனக்கிருக்கும் ஈடுபாட்டிருக்காக கைநீட்டும் பழக்கம் இதுவே கடைசியா இருக்கனும் ஜாக்கிரதை”.
அவனது மூச்சுக்காற்று அவளது முகத்தில் பட்டு அவளது கோபத்தை மேலும் வலுபடுத்தியது.
பலம் கொண்ட மட்டும் அவனை ஒற்றை கையால் தள்ளிப்பார்த்தாள். ஆனால் முடியவில்லை. அவன் பிடித்திருந்த மணிகட்டில் இறுக்கம் அதிகமாகி வலியும் அதிகரித்தது.
“ச்…சீ…..விடு என்னை கொலைகாரா. நீ போலீசை ஏமாத்தலாம் ஆனா அந்த கடவுளை ஏமாத்த முடியாது.??? “தன்னை விடுவித்துக்கொள்ள பெரிதும் முயன்றாள்.
அவனது பிடி இரும்புப்பிடியாக மாறியது. ” அப்படியா??? அந்த கடவுள் என்னதான் செய்யுமின்னு நானும் பாக்கறேன். நீ துள்ளரத முதல்ல நிறுத்து ” இருவரது கண்களும் மிக அருகருகில் ஒன்றை ஒன்று எரித்து விட துடித்தது.
நிலைமையின் தீவிரம் விளங்க பிரகாஷ் ருத்ரபிரதாப்பின் காதருகில் “நாளைக்கும் ஷுட் இருக்கு ருத்ரா. சந்தனாவின் கையில் எந்த தழும்பும் வந்துடக்கூடாது, கண்டினியுட்டி மிஸ்ஆகிடும்!!! ” என்று முனுமுனுத்தான் அது சந்தனாவிற்கும் தெளிவாகவே கேட்டது.
ஓர் எரிச்சல் மிகுந்த பார்வையுடன் அவளை சட்டென விடுவித்தான்.
நிலை தடுமாறி விழ இருந்தவள் சமாளித்துக்கொண்டு தன்னை நிலை படுத்திக்கொண்டாள்.
அவளை ஒருமுறை முறைத்து பார்த்தவன். வாயிலை நோக்கி வேகமாக நடந்தான். அவனை பின் தொடர்ந்த பிரகாஷ் ‘அப்பாடி இங்க ஒரு போர் வராம காப்பாத்தியாச்சு,இவனோட மொழில பேசுனாதான் இவனுக்கு புரியுது, இப்படி நிறைய யோசிச்சு வெச்சுக்கனும் அப்பப்போ எடுத்து விட வசதியா இருக்கும் “
கதவு வரை வந்தவர்களை நிறுத்தியது சந்தனாவின் சொடுக்கு போடும் சத்தம், அதைத்தொடர்ந்து
“ஒரு நிமிஷம் ருத்ரபிரதாப்” அவளது தெளிவான குரலுக்கு அவனது கால்கள் தாமாக நின்றன. ஓர் ஆச்சர்ய பார்வையை அவள்மீது செலுத்தியவன் ‘நந்தினி’ என்று உச்சரிக்க,பிரகாஷ் சந்தனாவை ஒருவித கலவரத்துடன் பார்த்தான் ‘இப்போ உனக்கென்னம்மா பிரச்சனை அவன் விட்டாலும் நீ விடமாட்டேங்கறியே!!!!? ‘
முகங்களின் தேடல் தொடரும்
Tags: fiction Indra Selvam Tamil Novel
10 Comments
Santhana ena sola pora I am waiting
superrrrr ud sis
Hi mam
கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு பின் இந்நாவல் திரும்ப வாசிக்க கிடைத்துள்ளது,எங்களை மீண்டும் சந்திக்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி,சந்த்யாவால் ருத்திரன் எதிர்த்து வெற்றி பெற்று விட முடியுமா,அவர்கள்தான் மலைவிழுங்கியாச்சே,எவ்வளவு திட்டம் போட்டு சாதகபாதகத்தை அலசி கையில் வைத்திருக்கவேண்டியவர்களை வைத்திருந்து இந்த நாடகத்தை நடத்துகின்றனர்,அவர்கள் சந்தனாவை அவர்களுக்கு எதிராக விரலசைக்ககூட விடமாட்டார்கள், நந்தினி மாதிரி உருவம் இருப்பதால்தான் சந்தனாவுக்கு இந்நிலையா அல்லது வேறு ஏதாவது காரணமா.
நன்றி
ஒரு வருடத்திற்கு பிறகு இந்த நாவலுக்கான உங்கள் விமர்சனத்தை படிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே, உங்களின் ஆதரவிற்கு நன்றி, தொடர்ந்து ஆதரியுங்கள் – நன்றி
Super.oru pulling maan puliyaka maarutho. Ruthra un tholil phakthikkuu aleve illaia.
Thank u pa
Thozhil bakthi irukka vendiyathu thaan… Athukkaga ippadiya 😱
Enna pandrathu manufacturing defect
Nice ud
Than hadijha