Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-26

தன் ஆயுளுக்கு இன்னும் ஐந்தே மாதம் கெடு என்று நினைக்கும் போதே தன் இதயத்தை கத்தியால் குத்துவதுப் போல் வலியை உணர்ந்தாள்.தன் மனதை அழுத்தும் இந்த பாரத்தை யாரிடமும் கொட்ட முடியாமல் தனியே கண்ணீர் வடித்தாள்.

 

யாரோ வரும் அரவம் கேட்டு தன் கண்களில் வழிந்துக் கொண்டிருக்கும் நீரை அவசரமாக துடைத் தெறிந்தாள்.

 

கார்த்திதான் என்று அறிந்துக் கொண்டு தன் முகத்தில் புன்னகையை தவழவிட்டாள். கார்த்தி அவளை நெருங்கி அவளை இடையோடு அணைத்துக் கொண்டு தன் உரையாடலை துவங்கினான் ‘குட்டிமா அனு ப்ராப்ளம் பத்தி ஏதாவது ஐடியா இருக்கா’ என்று கூறி கலவரமாக அவள் முகத்தை ஆராய்ந்தான்.

 

அவளுக்கோ இருப்புக்கொள்ளாமல் அவனின் முகத்தைப் பார்த்து சிரித்தாள்…. அவனோ புரியாமல் ‘குட்டிமா ஏன் சிரிக்குற ‘ என்று அப்பாவியாக கேட்க அவளோ மாமா இந்திய அளவில் பெரிய தொழிலதிபர் நீங்கள் என்னிடம் யோசனை கேட்கலாமா என்று நக்கலாய் அவனை அவள் சீண்ட செல்லமாக அவள் காதை பிடித்து திருக அவளோ பொய்யாய் வலிப்பதுப் போல் நடிக்க அவளுக்கு உண்மையில் வலிக்கிறதோ என்று எண்ணி சாரிடா என்று கூறி அவள் செவி மடலில் முத்தம் வைத்தான்.

 

மாமா ‘ சும்மா சொன்னேன் எனக்கு வலிக்கலையே’ என்று கூறி அவனுக்கு பழிப்புக் காட்டினாள். அவனோ ‘ எனக்கு தெரியும் டி ராட்சசி நீ பொய் சொல்றேனு’ என்றான் . பின்பு அவனே தொடர்ந்தான் ஆண்கள் வெளியில் தொழிலில் சிறந்தவர்கள் என்றால், பெண்கள் குடும்ப பொறுப்பையும், குடும்பத்தைப் பற்றி ஆலோசிப்பதில் சிறந்தவர்கள் என்று தன் பாட்டி கூறியதாக கூறினான்.

 

மாமா ‘ நீங்க எங்கேயோ போய்டிங்க ‘ என்று தன் கணவன் கூறியது நூற்றுக்கு நூறு என்று அவள் மனம் அவனை மெச்சாமல் இருக்க முடியவில்லை புன்சிரிப்புடன் அவனை கண்களால் அழைப்பதுப் போலிருக்க அவனோ மங்கையவளின் பார்வயைக் கண்டவன் மோகத்தீ அப்ப அவளை பார்வையால் விழுங்கினான்.

 

அவள் தன் கணவனின் பார்வை அறிந்து ‘ மாமா எனக்கு ஒரு ஐடியா தோணுது சொல்லட்டா’ என்று அவள் பேச்சை மாற்ற அவனோ தன் பார்வையின் அர்த்தம் புரிந்துக் கொண்டு பேச்சை மாற்றுபவளின் புத்திசாலி தனத்தை எண்ணிக் கொண்டு , அவனோ படும் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு நான் ‘ வேணா போய் பேசி பார்க்கட்டா’ என்று கூற அவளோ அவன் முடிவை மறுத்து ‘ மாமா நீங்க இருங்க நான் போய் பேசிட்டு வரேன் நான்  போனால் சக்சஸ் ஆகிடும்’ என்று அவள் தீர்மானமாக கூற அவளை ஆழ்ந்து பார்த்தான் .

 

‘ குட்டிமா நீ தனியாலாம் போக வேண்டாம் நானும் கூட வரேன்’ அட கடவுளே இவன் வந்தாள் நாம் கையும் களவுமாக மாட்டிக் கொள்ளுவோம்.மருத்துவமனைக்கு போக இயலாது என்று அவனை சமாதானம் செய்யும் பொருட்டு ‘ மாமா நான் என்ன சின்ன பாப்பாவா நான் என்ன தனியாவா போறேன்  நம்ப கார்லதான போயிட்டு வரப்போறேன் உங்களுக்கே ஓவரா தெரில’ என்றாள்

 

அவனோ மீண்டும் ‘ குட்டிமா எனக்கு பயமா இருக்குடா’ என ‘ அட ராமா உங்களோட … ஏன் மாமா குழந்தை மாதிரி அடம் பண்றிங்க’ என்று அவனை உருட்டி திரட்டி… கொஞ்சம் கெஞ்சல்ஸ் கொஞ்சம் மின்ஜல்ஸ் என்று அவனிடம் அனுமதி வாங்கினாள்….

 

‘குட்டிமா அப்படினா ஒரு கண்டிஷன் எனக்கு அப்பப்போ நீ எங்க இருக்கனு கால் பண்ணனும் ஓகேவா… ஐ கான்ட் லீவ்யூ அலோன் குட்டிமா’ என்று அவளை அணைத்துக் கொண்டான்.

 

 

காலையில் கார்த்தி வேலைக்கு சென்றபின் திவ்யா ராஜை சந்திக்க கல்லூரிக்கு சென்றாள்… ‘ ஹாய் நீங்க ராஜ் அக்கா தான நான் ராஜ் பிரண்ட் அண்ட் கிளாஸ் மெட் நேம் ஆர்த்தி ‘ என்று அறிமுகம் செய்துக் கொண்டு ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என்று அவளின் மேட்டிருந்த வயிற்றைக் கண்டு அவளை அமரச் செய்துவிட்டு நகர்ந்தாள்.

 

‘ எக்ஸக்யூஸ் மி சார்’ என்று வகுப்பில் (Upperthorex) பாடம் நடந்துக் கொண்டிருக்க வகுப்பிலிருக்கும் அனைவரின் கவனம் ஆர்த்தி மேலிருக்க வகுப்பு ஆசிரியரிடம் ஏதோ கூற அவரோ ராஜை அழைத்து விவரம் தெரிவித்தார். சாரி சார் என்று கூறி வெளியேறினான்.அவனுக்கு யாராக இருக்கும் இப்படி வகுப்பு நேரத்தில் தம்மை அழைப்பது என்று சினம் எழ அனுவாக இருக்குமோ என்று எண்ணிணான். ஆனால் முன் போல் அவள் மேல் கோபம் வரவில்லை மாறாக ஒரு விதமான வெறுமையில் அவன் மனமிருந்ததை அவனே கவனித்தான்.ஏனெனில் முன்பே அனு தன் காதலை கூறிய பின் இத்தகையான உணர்வு ஏற்பட்டிருந்தாலும் அவனுக்கு  ஏனோ நிறைவாக இருந்தது அன்று அவளது கலங்கிய முகமே அவன் கண்முன் நிழலாடியது.

 

அவளையே நினைத்துக் கொண்டு வந்தவன் விசிட்டிங் ஹாலில் தன் தமக்கையை கண்டவன் மனம் பதறினான். அக்குட்டி சாத்தான் ஏதோ வில்லங்கம் செய்திருக்குமோ என்று அனுயாவை மனதில் அர்சித்துக் கொண்டிருந்தான். ராஜ் தன் தமக்கையை கண்டு புன்சிரிப்புடன் அவளை எதிர்கொண்டான்.

 

‘அக்கா ஏன் இந்த மாதிரி நேரத்துல… இப்படி ஸ்ட்ரைன் பண்ற  என்னனு சொல்லிருந்தா நானே வந்துருப்பேன் அக்கா’ என்று அக்கறையில் அவளை கடிந்துக்கொள்ள. அவளோ அது ‘ சரிப்பா எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசனும், அதான் பேசிட்டு உன்ன பாத்துட்டு போலாம்னு வந்தேன்’ என்றாள். ‘ அய்யோ சாரி அக்கா நான் வேற உன்ன நிற்கவச்சி பேசிக்கிட்டு இருக்கேன் பாரு வாக்கா பக்கத்துல  காபி ஷாப் இருக்கு அங்க போய் பேசலாம்’ என்று தன் தமக்கையை அழைத்துச் சென்றான்…

 

இரண்டு காபி ஆட்டர் செய்து அதனை கையோடு கொண்டு வந்தான் தனக்கொன்றும் தமக்கைக் கொன்றும் வைத்துவிட்டு தன்னை தேடி வந்ததற்காண காரணத்தை கேட்டான்   ‘ சொல்லுக்கா ஏதோ பேசனும்னு வந்த அமைதியா இருக்க’ என்று அவன் பீடிகை கூட்ட… அவளும் அனு என்று ஆரம்பிக்க … சரியான நேரத்தில் கார்த்தி திவ்யாவை தொடர்புக் கொண்டான்…..

 

‘குட்டிமா எங்க இருக்க என  திவியோ நான் ராஜை பார்க்க வந்தேன் மாமா’ என்று அவள் கூற ‘ என்னாச்சிமா எனிதிங் பாசிடிவ்  இல்ல மாமா இப்பத்தான் ஒரு பார்ம்க்கு வந்திருக்கேன்… அவன்கிட்ட பேசிட்டு இருக்கேன்… நான் பேசிட்டு கால் பண்றேன்’ என்று தொடர்பை துண்டிக்க சென்றவள் அவன் மறுமுனையில் அலறினான் ‘ ஏய் வச்சிராதடி’ என ‘ என்ன மாமா ராஜ்கிட்ட பேசுறிங்களா’ என்று கேட்க ‘ அதில்லை குட்டிமா பீ சேப்டா நீ வீட்டுக்கு வர வரைக்கும் ஐ வில் நாட் பீ ஆல் ரைட் ப்ளீஸ்  ஆப்பன் இன்பார்ம் மீ வேர் ஆர் யூ ஓகே’… என்று கூறி முடிவில் ‘ ஐ லவ் யூ குட்டிமா ‘ என கூறி அழைப்பை துண்டித்தான்.

 

அவன் கொஞ்சிய விதத்தில் அவள்  குங்குமமாய் சிவந்தாள், தன் தமக்கையின் முகம் கண்டவன் அவர்களின் காதல் சம்பாஷனைகள் சரி வர புரிய அவனுள் சிறு பொறாமைக் கூட எழுந்தது … அவன் தன் கனவுலகிற்கு சென்றான் தன்  இணையுடன் மனமோத்த தம்பதியராக இருக்க வேண்டுமென்று தோன்ற… ஒரு நொடி அவன் மனக்கண்ணில் அனுவின் முகம் வந்து சென்றது… என்னடா நினைப்பு இது என்று தோன்ற தன் தலையை குலுக்கினான்… பின் அந்த நினைப்பே அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது… திவ்யாவோ ராஜைப் பார்த்து ….

 

தம்பி நான் உனக்கு எது பண்ணாலும் நல்லது தானே பண்ணுவேன்…. என்மேல உனக்கு நம்பிக்கை இருக்காடா’ என்று அவனைப் பார்த்து கேட்க அவனோ ‘ ஏன் அக்கா உன்ன நம்பாம நான் யார நம்ப போறேன்  நீ எது பண்ணாலும் அதுக்கு ரீசன் இருக்கும் நான் நம்புறேன் பீ ஸ்ரெயிட் பார்வட் அக்கா’ என்றான்…

 

‘ ஓகேடா அனு உன்ன ரொம்ப லவ் பண்றா இது உங்க மாமாவுக்கு தெரிஞ்சிருச்சி அன்னைக்கு ஒரு நாள் இதே காபி ஷாப்ல வச்சி பார்த்தார். அவரு மட்டுமில்லை நானும் பார்த்தேன்…

 

 

ராஜ் நான் ஒன்னு சொல்லட்டா ஒரு பொண்ணு உண்மையா தன் காதலை ஏத்துக்க சொல்லி கெஞ்சி அழறானா அவளை விட ஒரு நல்ல பொண்ணு லைப்ல  கிடைக்க மாட்டா அழக பார்த்து காதல் வந்தா கொஞ்ச நாள்ல தோல் சுருங்கிடும் அப்புறம் அழகு போய்டும் அழகு மட்டுமில்ல காதலும் போயிடும்…. பணத்தை பார்த்து வரும் காதலும் அப்படித்தான்… உன்கிட்ட பணம் இன்னைக்கு இருக்கும்… நாளைக்கு போகும்…. பணமிருந்தா எதுவேனாலும் வாங்கலாம் ஒன்ன தவற அன்பு …. அன்பை மட்டும் விலைக்கு வாங்கவே முடியாது.

 

அனு காசுதான் பெரிய விஷயம்னு நினைச்சிருந்தா உன்னைய தேடி வந்திருக்க மாட்டா…. ஒரு பொண்ணோட பார்வையை வச்சே அவள கணக்கிடலாம்…. அவ எந்த மாதிரினு’…

 

எல்லா பெண்களையும் ஒரே மாதிரி எண்ணுவது குற்றம். நம் கையிலிருக்கும் விரல்கள் ஒரே மாதிரி இருப்பதில்லை அதேப்போல் தான் நாம் எல்லோரையும் ஓரே மாதிரியாக கணக்கிடுவது முட்டாள் தனம்….

 

இந்த முட்டாள் தனத்தை  என் தம்பி செய்யமாட்டான் என்று வாக்களித்து விட்டேன்…. என் மரியாதையை காப்பது உன் கையில்… முடிவு உன் கையில் என்று கூறி விடைப் பெற்று சென்றாள்…

 

தன் தமக்கை சென்று அரைமணி நேரம் கழித்தே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்….. ஒரு நல்ல முடிவுடன் சென்றான்….. அவன் அதரங்களில் மென்னகையை பாரபட்சம் பார்க்காமல் தவழவிட்டான்….

 

தன் தம்பிக்கு அறிவுரையை வழங்கி விட்டு சென்றவளின் நிலைமையோ பரிதாபம். விதியின் வழியில் அவள் சிக்கிக் கொள்ள செய்வது அறியாது கையறு நிலையாக நின்றது விதியின் கோலமா… இல்லை அவளின் நேரமா யாரறிவார்….

 

நேராக அவள் நரம்பியல் வல்லுநர் மருத்துவர் தீபாவை பார்க்க சென்றாள். ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் கூடுதல் விவரமறிய மருத்துவரை சந்தித்தாள். மருத்துவரை சந்திக்க செல்லும் முன்னே தன் மனதினை நிலைப்படுத்திக் கொண்டே உள்ளே சென்றாள்.அவர் கூறிய செய்தியை கேட்டு அவள் தலையில் இடி பலமாக விழுந்தது. பின் இச்செய்தியை எதிர் பார்த்தது தான் என்று எண்ணி தன்னை தேற்றிக் கொண்டு ஸ்கேன் ரிப்போட் மற்றும் மாத்திரை மருந்து என்று சகலத்தையும் வாங்கி குவித்துக் கொண்டு திரும்ப அவளுக்கு மீண்டுமொரு அதிர்ச்சி அதே மருத்துவ மனையில் கார்த்தியை சந்தித்தாள். ஆனால் அவன் தர்ஷனிடம் பேசி சிரித்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்தான். தர்ஷன் கார்த்தியின் பால்ய சிநேகிதன் இருவரும் வெவ்வெறு துறை என்றாலும் நெருங்கிய நண்பர்கள்.

 

கார்த்தி தன்னை நோக்கி வருவதை அறிந்து தன்னை ஒரு தூணுக்குப்பின் ஒலிந்துக்கொள்ள….. தன்னை பார்த்து யாரோ ஒலிய, யாராக இருக்கும் என்று அறிந்துக் கொள்ள ஆர்வமாய் பார்க்க சரியாக தெரியாமல் இருக்க திவ்யா நன்றாக ஒண்டினாள்.

 

ஆனால் அவளின் மேடிட்டிருந்த வயிறு அவளை காட்டிக் கொடுத்து விட்டது. அவனால் நம்ப முடியவில்லை சாட்சாத் தன் மனைவி திவ்யாதான் என்று அறிந்து தன்னைப் பார்த்து அவள் ஏன் மறையவேண்டும். அவள் இங்கு என்ன செய்கிறாள். யாரையாவது பார்க்க வந்திருப்பாலோ  இல்லை அவள் கையில் ரிப்போட்டை இருந்ததே  அவனால் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவித்தான்.அவனுள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள்…. விடையில்லை…..

 

தன் நண்பனிடம் விடைப்பெற்று சற்று தள்ளி நின்றான் அவளுக்கு தெரியா வண்ணம்…. தன் கணவன் சென்றுவிட்டான் என்று அறிந்து வாயில் புறம் நோக்கி நடந்துச் சென்றாள் முட்டாள் பெண். அவன் அவளை நன்றாக பார்த்தான் அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை நம்பித்தான் ஆகவேண்டும்…..

 

நன்றி  தோழமைகளே

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி
2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Thank u sir…..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Super karthiku therinthu vittatha natru. Inimel kathai sutu pitikkum.diviya karthi eppatiyavathu kappathiruvan.

error: Content is protected !!