Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

கனல்விழி காதல் 100

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 100

அத்தியாயம் – 100

அந்த கருநிற மெர்சிடிஸ் பூனை போல் வந்து பார்க்கிங் பகுதியில் நின்று போது வீடு நிசப்தத்தில் மூழ்கியிருந்தது. ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கி, மறுபக்கம் வந்து மனைவிக்கு கதவை திறந்துவிட்டான் தேவ்ராஜ். குழந்தையை அணைத்துப் பிடித்தபடி கீழே இறங்கினாள் மதுரா. வாயிலில் நின்ற துவாரபாலகர்களில் ஒருவனிடம் கார் சாவியை கொடுத்து, காரை கேரேஜில் விடும்படி கூறிவிட்டு மனைவியோடு உள்ளே செல்ல எத்தனித்தவன், சட்டென்று ஒரு யோசனைத் தோன்ற, “வெயிட் வெயிட்…” என்று அவளை உள்ளே செல்ல விடாமல் பின்னுக்கு இழுத்தான்.

“என்ன?” – மதுரா.

“ஒரு நிமிஷம் இங்கேயே வெயிட் பண்ணு…” – அவசரமாக உள்ளே ஓடினான். அவன் எதையோ போட்டு உருட்டும் சத்தம் வாசல்வரை கேட்டது. பிறகு ஒரு தட்டையும் கற்பூரத்தையும் கொண்டு வந்தான். தட்டில் ஆரத்தி கரைக்கப்பட்டிருந்ததைக் கண்ட மதுரா விழிவிரித்தாள்.

“இதெல்லாம் எப்படி தெரியும் உங்களுக்கு!” – ஆச்சர்யமாகக் கேட்டாள்.

“பார்த்திருக்கேன்… ஆனா ஒண்ணு மட்டும் புரியில. இந்த தட்டுலதானே இதை கொளுத்துவாங்க. ஆனா தண்ணியில வச்சா எப்படி எரியும்?” – குழப்பத்துடன் கற்பூரத்தை காட்டினான்.

“வெத்தலையை வச்சு அதுமேல கற்பூரத்தை வைக்கணும்”

“ஓ!” – ‘அதுக்கு எங்க போறது இப்போ!’ – அவன் யோசிக்கும் போதே , “சாமி பக்கத்துல இருக்கான்னு பாருங்க” – மதுரா ஐடியா கொடுத்தாள். சிறு பிள்ளை போல் உற்சாகமாக உள்ளே ஓடியவன் வரும் பொழுது கையில் வெற்றிலையோடு சந்தோஷமாக வந்தான்.

மனைவியின் ஆலோசனைப்படி ஆராத்தித் தட்டின் நடுவில் வெற்றிலையை வைத்து, அதன் மீது கற்பூரத்தை வைத்து ஏற்றியவன், ஒரு கணம் யோசித்தான். பிறகு, அங்கே நின்றுக் கொண்டிருந்த இன்னொரு துவாரபாலகனை அழைத்து அவன் கையில் ஆராத்தித்தட்டைக் கொடுத்துவிட்டு, மனைவியிடமிருந்து குழந்தையை வாங்கி கொண்டு அவளோடு சேர்ந்து நின்றுக் கொண்டான்.

“சார்!’ – அவன் புரியாமல் விழிக்க, “ம்ம்ம்… சுத்து” என்றான்.

“நானா!” – ‘துப்பாக்கியை பிடிக்கும் கையில் ஆரத்தி தட்டா! கத்தியை சுழற்ற வேண்டிய கை ஆரத்தியை சுற்றுவதா!’ – அவன் மனம் முரண்டியது.

“நா எப்படி சார்?” – தயங்கினான்.

“ஒண்ணும் இல்ல… ஜஸ்ட் தட்டோட சேர்த்து கையை ரொட்டேட் பண்ணு போதும். இப்படி இப்படி…. அவ்வளவுதான்… அப்புறம் பொட்டு வைக்கணும்… பையனுக்கு… மறந்துடக் கூடாது” – அவனுடைய மனநிலை புரியாமல் வெகு தீவிரமாக விளக்கம் கூறினான்.

பாதுகாவலனின் முகம் போனபோக்கைக் கண்டு, சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டாள் மதுரா. அவருக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல… விட்டுடுங்க…” – கணவனின் காதில் முனுமுனுத்தாள்.

“ப்ச்… இட்ஸ் நாட் எ பிக் டீல் மேன்… ட்ரை பண்ணு… யூ கேன் டூ இட்” – மனைவியின் கிசுகிசுப்பை கண்டுகொள்ளாமல், அந்த மாவீரனுக்கு ஊக்கம் கொடுத்தான்.

வேறு வழியின்றி, ஆரத்தி சுற்றுவதையே தனக்கு இடைப்பட்ட கட்டளையாக எண்ணி நிறைவேற்றியவன் மறக்காமல் குழந்தைக்கு திலகமும் இட்டான்.

“குட்…” – தேவ்ராஜ் அவனை சந்தோஷமாக பாராட்ட, “இதை கேட்டுக்கு வெளியில கொட்டிடுங்க…” என்றாள் மதுரா.

மனைவியின் கையைப் பிடித்து உள்ளே அழைத்து சென்றான் தேவ்ராஜ். வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் போது அவளுக்குள் ஒரு நடுக்கம் தோன்றியது. எத்தனையோ சுக துக்கங்களை இதே வீட்டில் அனுபவித்திருக்கிறாள். இனி எப்படி இருக்கப் போகிறது இந்த வீட்டில் அவள் வாழ்க்கை! – நடக்க முடியாமல் கால்கள் பின்னியது. அவளுக்குள் தோன்றிய இந்த உணர்வை பயம் என்று சொல்ல முடியாது. இது ஒருவித பதட்டம்… எதிர்பார்ப்பு…

தேவ்ராஜ் மனைவியின் முகமாற்றத்தை பார்க்கவில்லை. அவளுடைய தடுமாற்றத்தை கவனிக்கவில்லை. ஆனால் ஏதோ ஒரு உள்ளுணர்வு தூண்டியது… மனம் உந்தியது… ஒரு கையில் குழந்தையை வைத்திருந்தவன், மறுகையால் அவளை தோளோடு அணைத்துக் கொண்டான். அந்த கணம் அவள் மனதிலிருந்த அனைத்து குழப்பங்களும் கலைந்தோடிவிட்டன. பாதுகாப்பான இடத்தில் சரணடைவது போல் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்.

தங்களுடைய அறைக்கு வரும்வரை இருவரும் வாய்திறந்து எதுவும் பேசவில்லை. ஆனால் இதயங்கள் இரண்டும் மௌனமாய் ஆயிரம் உணர்வுகளை பரிமாறிக் கொண்டன. உள்ளே நுழைந்ததும் மின்விளக்கின் சுவிட்ச்சை தட்டினான் தேவ்ராஜ். நொடியில் அந்த அறை பிரகாசமானது… அவன் வாழ்க்கையைப் போல…

குழந்தையை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு அருகிலேயே அமர்ந்து அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான். உள்ளே ஏதேதோ உணர்வுகள்… அலையடிப்பது போல்… பொங்கிப் பெருகும் ஊற்று போல்… அடைமழை போல்… மகிழ்ச்சிதான்… மனம் தளும்பத்தளும்ப மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது. உள்ளத்தின் கொள்திறனை விஞ்சிய மகிழ்ச்சி…

அவனுடைய உணர்ச்சிவசப்பட்ட மனநிலை முகத்தில் தெரிந்தது… உதட்டைக் கடித்துக் கொண்டு இறுக்கமாக ஒரே நிலையில் அமர்ந்திருக்கும் அவனுடைய உடல்மொழியில் தெரிந்தது.

மெல்ல அவனிடம் நெருங்கி தோளில் கைவைத்தாள் மதுரா. சட்டென்று அந்த கையில் கன்னத்தை சாய்த்துக் கொண்டான். கண்கள் தானாய் மூடின. மூடிய இமைகளுக்குள்ளிருந்து இரு துளி நீர் மணிகள் உருண்டோடின.

“தேவ்… காம் டௌன்…ப்ளீஸ்…” – மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

“இன்னிக்கு நைட் இவனை… இங்க… இந்த பெட்ல பார்ப்பேன்னு நினைக்கல…” என்றவன், நிமிர்ந்து மனைவியின் கண்களைப் பார்த்து, “தேங்க்ஸ்” என்றான்.

அவனுடைய கண்களில் பளபளத்த கண்ணீர் அவளுடைய அடிவயிற்றை பிசைந்தது.

“ஐம் சாரி தேவ்…” – ஆத்திரம் தொண்டையை அடைத்தது.

தேவ்ராஜின் முகம் மாறியது. “நோ… டோண்ட் சே தட்… இன்னொரு தரம் அந்த வார்த்தை உன்கிட்டேருந்து வர கூடாது… ஐம் சாரி… ஐ… ஆ…ம் சாரி… வாழ்க்கை முழுக்க சாரி சொல்லிட்டே இருந்தாலும் போதாது…” என்றான் வருத்தத்துடன்.

மதுரா வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள். “இட்ஸ் ஆல் ஓவர்… விட்டுடுங்க… மறந்துடுங்க” என்றாள்.

அடுத்த சில நிமிடங்களுக்கு அவனுடைய பார்வை அவள் முகத்திலேயே உறைந்துவிட்டது. அவனுடைய வருத்தத்தை உடனே களைய வேண்டும் என்கிற அவளுடைய வேகம் அவனை மலைக்கச் செய்தது. தன்னை அடித்தவர்களை மறுகணமே மன்னிக்கும் தெய்வீக குணம் குழந்தைகளுக்கு மட்டுமே உரித்தானது. இப்போது மதுரா அவன் கண்களுக்கு குழந்தையாகத்தான் தெரிந்தாள்.

எழுந்து நின்று அவள் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணோடு கண் கலந்து, “யூ ஆர் மை ஏஞ்சல்… மை லைஃப்… மை லவ்… மை ஸோல்…” – ‘நீ என் தேவதை… என் வாழ்க்கை… என் காதல்… என் ஜீவன்…’ என்றான்.

மதுரா அழகாக சிரித்துக் கொண்டே, ‘இல்லை’ என்று தலையசைத்தாள். அவள் கண்களில் குறும்பு கூத்தாடியது. தேவ்ராஜின் மனநிலை இலகுவானது. மனைவியை சுவாரஸ்யமாகப் பார்த்தான்.

“நா ஏஞ்சல் இல்ல… இரா…ட்…சசி…” – என்று அழுத்தம் திருத்தமாக இராகம் போட்டாள். மனைவியின் விளையாட்டில் தேவ்ராஜின் கண்கள் பிரகாசமானது. முகத்தில் புன்னகை விரிந்தது.

“ஓ! அப்போ நா கூட யாருன்னு காட்டியாகணும்… இல்ல?” – அந்த இராட்சசனின் குரல் குழைந்தது… பார்வையில் கிறக்கம் கூடியது… மதுரா முகம் சிவந்தாள்.

விடிந்து வெகுநேரமாகியும் மகன் கீழே இறங்கி வரவில்லையே என்கிற சிந்தனையோடு நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்த இராஜேஸ்வரி மாடியில் குழந்தை சத்தம் கேட்டதும் திடுக்கிட்டாள். சற்று நேரம் எதுவுமே புரியவில்லை. ‘டிவியில் ஏதோ குழந்தை அழுகிறதோ!’ என்றுதான் முதலில் நினைத்தாள். ஆனால் அது டிவியிலிருந்து வரும் சத்தமல்ல என்பது சில நிமிடங்களிலேயே புரிந்துவிட, காட்ஸை பார்த்தாள்.

“நைட் யார் வந்தது?” என்றாள்.

“அஞ்சு மணிக்கு ஷிப்ட் மாறியிருக்கோம் மேம்… அதுக்கு பிறகு யாரும் வரல”

‘மதுரா வந்துட்டாளா! நைட்ல எப்படி! ஒருவேளை சண்டை ஏதும் போட்டுக்கிட்டு குழந்தையை மட்டும் தூக்கிட்டு வந்துட்டானோ!’ – குழப்பங்கள் பல மூளையை சூழ்ந்துகொள்ள அவசரமாக மாடிக்கு ஓடினாள் தாய்.

ஒரு பக்கம் மகன் மறுபக்கம் மனைவி… இருவரையும் இரு தோள்களில் தாங்கியபடி நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தான் தேவ்ராஜ். நெடுநாட்களுக்குப் பிறகு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனுக்கு குழந்தை அழும் சத்தமும் கேட்கவில்லை… கதவு தட்டப்படும் சத்தமும் கேட்கவில்லை. மதுராதான் அவசரமாக எழுந்து குழந்தையை தூக்கி சமாதானம் செய்தபடியே கதவைத் திறந்தாள்.

மருமகளைக் கண்டதும் ஆச்சரியப்பட்ட இராஜேஸ்வரி, “மது!!! எப்ப வந்த?” என்று கேட்டதோடு பதிலைக் கூட எதிர்பார்க்காமல், “கண்ணே! மணியே!” என்று பேரனை தூக்கிக் கொஞ்சத் துவங்கிவிட்டாள். அனைத்தையும் மறந்துவிட்டு பேரனின் அழகில் திளைத்துவிட்டது இராஜேஸ்வரியின் மனம்.

“நா குழந்தையை கீழ கொண்டு போறேன்… நீ குளிச்சுட்டு வா…” என்று கூறிவிட்டு பேரனோடு கீழே சென்றுவிட்டாள்.

44 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Congrats for the happy and successful 100 the epi.. lovely

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Manju La says:

  Super happy ud.Today ud irruka mam

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  latha sundar sundar says:

  Appa eppudio veetuku vanthachu. Very nice update mam

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Satham atichchachuuuuuuuuuu. Dev and mathu valthukkal.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Saradha Sekar says:

  Superb 👌 👍

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  Nithya 100th epi thottadharku congrats….super Dev…pillai, pondati vandachu…..nee Kalaku da

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sony Sri says:

  Very nice ud sis

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Anu tamil says:

  super sis sema waitng for next episode

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Chitra Moorthy says:

  Superb nice sissy

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Emily Peter says:

  Nice epi. Dev thanum oru anbana kanavan &appa yenbathai nirubithu vittan

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sow Dharani says:

  சூப்பர் மேம்… nice epi

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nithya Prabhu says:

  Sema sema sema update sissy
  100th episode enga manasa sandisatula thikumuku aada vachuthu
  Thank you

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rexi Anto says:

  Nice dev super

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ahila Iyadurai says:

  Wow ..superŕr….
  Aiyo intha Dev santhosam vanthalum overah panraneyy….

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sriranjana Niranjan says:

  Lovely update sis….😍😍😍😘😘😘

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  சந்தோசமான பகுதி.

  நன்றி

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ananthi Ananthi says:

  இத இத இத தான எதிர்பார்த்தேன்
  100 th episode கலக்கிட்டீங்க

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Deepika Vijayaganth says:

  Nice now only I am relax thank you

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jayashree swaminathan says:

  thanks for a beautiful update.The way you have narrated this update is simply awesome.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  saranya shan says:

  Rajimaa kitte samatha irupaanaa.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Buvi Mani says:

  Appada deva vida naa ippa nimmathiya irukken evlo sandai

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  vijaya muthukrishnan says:

  super ud. eagerly waiting for your next ud

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Dhivya Bharathi says:

  Long back super ud chance illa akka…. dev madura and kutty dev super

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kalai Mano says:

  Dev semma mass kaati alachitu vanthuta..inimel kondattam than unaku…enjoy..

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kani Ramesh says:

  Super sis😍😍😍…. lovable epi sis😍😍😍😘😘…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ambika V says:

  Super 😍

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  Wow super ud sis

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Chriswin Magi says:

  wow lovely 😘😍

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sasi Ganesh says:

  nice… how many more to go???

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Manju La says:

  Super

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kirthika Karthick says:

  Super episode but still they need understand properly about both of them. Still episode is there. Happy

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Divya Suge says:

  Dev mams ku arathi suthurathu kuda therinjuruku paran

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Priya says:

  super.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Banu Priya says:

  Sema nice mam both of them

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  மகிழ்ச்சி…தேவ்.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jansi r says:

  So sweet

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sumithra Ramalingam says:

  semma ud. dev traditional a welcome pannuran ,super situation.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ssankareswari sundaram says:

  lovely ud

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  selvipandiyan pandiyan says:

  தேவ் இப்போ நிம்மதியா இருப்பான்!

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Saru mathi says:

  Super

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Subadharshini Duraikannan says:

  Third

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vinayagam Subramani says:

  Wow episode. Relaxed..both are going to live a happy life.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vinayagam Subramani says:

  Second..

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Indra Selvam says:

  First

You cannot copy content of this page