Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-27

சாட்சாத் தன் மனைவியே தான் … ஆனால் ஏன் இங்கு யாரேனும் காண வந்தாளா…இல்லை வீட்டில் யாருக்காவது இல்லையே அப்படி இருந்திருந்தாள் தனக்கு தெரியப்படுத்தாமல் இருக்க வாய்ப்பில்லை…. ஒரு வேளை இவளுக்கு ஏதேனும் …. சச்ச…..சச்ச…. தன் எண்ணப்போக்கை  கடிவாளம் போட்டு நிறுத்தினான்….

 

ஒரு முடிவுக்கு வர முடியாமல் அவள் தலை மறையும் வரை காத்துக் கொண்டிருந்தான். பின்பு ரிஷப்ஷனில் அமர்ந்திருப்பவரிடம் விசாரிக்க ‘பேஷன்ட் பெயர் கன்சல்டிங் டாக்டர்’ தவிர  வேறெந்த குறிப்பையும் கொடுக்க கூடாது என்று அப் பெண்மணி அமைப்பு சட்டத்தைப் பற்றி கூற கடுப்பாகி போனவன்.

 

அவளை பரிசோதிக்கும் மருத்துவரை நாடிச் சென்றான்….

 

ஆனால் அங்கேயோ அதிர்ச்சியூட்டும் வகையாக  தீபாவை கண்டான் அவள் அவன் உயிர் நண்பனின் மனைவி . தீபாதான் அந்த கன்சல்டிங் மருத்துவர் என்று அறிந்து புன்னகையுடன் அவள் முன் அமர அவள் அவனிடம் நலம் விசாரித்தாள்.

 

ஒரே  ஒர்க் பிசியா? நான் உங்க ஒய்ப் திவ்யாகிட்ட கேட்டுட்டே இருப்பேன் ஹாஸ்பிடலுக்கு தனியா வரீங்க ஹஸ்பன்ட் எங்கேன்னு ரொம்ப ஹெவி ஒர்க்னு சொல்வாங்க நௌ யூ ஓகே .

 

எஸ் சம்வாட்…. ஹௌவ் இஸ் ஹெர் ஹெல்த் கண்டிசன் என்று விசாரிக்க… தீபாவின் முகத்தில் சந்தேகரேகைகள் விழ… ஏன் உங்கள் மனைவி உங்ககிட்ட எதுவும் சொல்லலையா என்று கேட்க… அவனோ அதனை சமாளிக்கும் பொருட்டு… ‘ நோ ஷி டோல்ட் மீ  இருந்தாலும் எனக்கு கொஞ்சம் ஃபர்தர் இன்பர்மேஷன் சொன்னா கொஞ்சம் நல்லாருக்கும் என்றான்….

 

ஓகே ஆல்ரைட் ‘ சீ கார்த்தி ஷீ ஹவ் கிளோட்டிங் இன் ஹெர் பிரைன்(அவங்களுக்கு இரத்தம் கசிஞ்சி கட்டியா மாறியிருக்கு)  இதை மெடிக்கல் தியரில சொன்னா  Cerebral aneurysm சொல்லுவாங்க… இது எப்படி அபேக்ட் ஆகும்னா…

 

1) பரம்பரை  இரத்த சம்பந்தமா வரலாம்…

2) அடி பட்டு மூளையின் இரத்த கசிவு ஏற்பட்டிற்கலாம்…. இரத்தம் வெளில வந்திருச்சினா பரவயில்லை… தே ஆர் சேப்னு அர்த்தம்… பட் அதுவே வராம உள்ளையே கிளாட்ஆகிடிச்சினா… சோ டேன்ஜர்ஸ்…

3)Highblood pressure (இரத்த அழுத்தம்)      இருந்தா மூளை குழாய் வெடிக்க. வாய்புகள் அதிகம் என்று கூறினாள்…

 

உங்க ஒய்ப்  செகன்ட் ஸ்டேஜ்… சோ வி யார் கோயிங் ஃபார் சர்ஜரி(அறுவை சிகிச்சை) மூலமா எடுக்க நான் அமெரிக்கன் நேர்வ் ஸ்பெஷலிஸ்ட்கிட்ட கேட்டுட்டு இருந்தேன்…

 

நான் உங்க மனைவி கிட்ட கேட்டா சர்ஜரி வேணாம்னு சொல்றாங்க… வாட் அபௌட் யூவர் ஒப்பினியன் என்று கேட்க தீபா கூறியதைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றிருந்தவன்

 

கடைசி செய்தி கேட்டு உலகமே சூழன்றுது. யாரோ தன் தலையில் இரும்புக் குண்டை கொண்டு அடித்தால் எப்படி வலிக்குமோ … அதே வலியை அவன் உணர்ந்தான். ஏனெனில் தீபா கூறிய செய்தி அவனை கவலைக்குள்ளாக்கியது.

 

.

இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டால் மட்டுமே அவள்  இந்த பூமியில் வாழலாம் என்று கூறுகையில் அவனுள் அளவு கடந்த ஆத்திரம் திவ்யாவின் மேல் எழுந்தது.

 

அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை அவளில்லாமல்  அவனா?… திருக்குறளில் இருக்கும் இரண்டாவது வரியை நீக்கினாள் எப்படி பொருள் தராதோ அதே அளவுக்கு … அவள் இல்லாமல் அவனது வாழ்வு. அவன் வாழலாம் ஒரு நடைபிணமாக மட்டுமே..

 

தன்னிடம் ஏன் மறைத்தாள். அவனுக்கு அவள் மேல் கண்மூடி தனமாக ஆத்திரம் பொங்கி எழுந்தது. அவன் வீட்டை அடைந்து நேராக தங்களின் அறைக்கு இரண்டிரண்டு படிகளாக தாவிச் சென்றான்… தங்களின் அறையில் அமைதியின் சிகரமாய் இருக்கும் தன் மனைவியை கண்டான்…’

 

எல்லாத்தையும் பண்ணிட்டு அமைதியா இருக்கிற மாதிரி  நடிக்கறியா … உன்னோட சாயம் வெளுத்திருச்சி’ என்று மனதில் எண்ணிக் கொண்டாலும் அவள் மேல் அவனுக்கு டன் டன்னாக ஆத்திரம் எழுந்தது….

 

அவன் உள்ளே வருவதைக் கண்டவள். அவனை புன்னகையுடன் எதிர் கொண்டாள்…’ மாமா வேலையெல்லாம் முடிஞ்சதா சீக்கிரமா வந்துட்டிங்க என… ஏன் நான் வந்ததாலா உன்னோட வேலை ஏதாவது பாதியிலேயே நின்னுடிச்சா’ என்று அவன் ஒரு மாதிரி அவளை கேள்வி எழுப்ப… ‘மாமா நீங்க சொல்றது எனக்கு ஒன்னும் புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்க’ என்றாள்…

 

இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட செல்லாது’ …. அவளோ குழம்பினால் ‘நீங்க என்ன சொல்றிங்கன்னு எனக்கு சத்தியமா புரியல மாமா’ …. ‘ஹோ அப்படியா சரி கொஞ்சம் தள்ளு’ என்று கூறி அவளது ரிப்போட்டை வாட்ரோபில்  வைத்திருப்பாள் என்ற நப்பாசையில் தேடினான்….தேடியும் கிடைக்காமல் போக கடும்கோபத்தில் இருந்தான். அவளோ  எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றுவதுப் போல் அவனிடம் ‘மாமா ஏதாவது டாக்குமெண்ட் மறந்து விட்டுடிங்களா அதை காணும் தான் இப்படி கத்துறிங்களா ‘ என்று அவள் கூற.

 

அவனோ ஆமா ரொம்ப முக்கியமான டாக்குமெண்ட் அது மட்டும் கிடைச்சதுனா அவங்கள ஏன் இப்படி பண்ணிங்கன்னு புரூப் ஓட நிற்க வச்சி கேள்வி கேட்கலாம் அதான்’  ….

 

அப்படி யாரு ‘ மாமா உங்கள ஏமாத்துற அளவுக்கு இருக்கா எவ்வளவு கிரேட் பிசினஸ்  லீடர்… உங்ககிட்ட சரி  அது யாருனாவது தெரிஞ்சதா நீங்க அவங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சு இருந்திருக்கக் கூடாது என்று அவள் கூற…..

 

ஆமா  ரொம்ப நம்பிக்கை வச்சிட்டேன் அதான்….. தெரியாம நம்பிட்டேன்… அதான் எனக்கே தெரியாம என்னை ஏமத்தாதிட்டு … அவங்கள அவங்களே ஏமாத்திட்டு இருக்காங்க எனக்கு தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்காங்க’ என்று அவளிடம் கூறினான்…

 

‘யாருனு தெரிஞ்சும் சும்மாவா இருக்கீங்க சம்பந்தப்பட்டவங்கிட்டையே கேட்க வேண்டியது தானே’….. என்று அவள் கூற…..

 

அவன் அவள் கண்களை நேருக்கு நேர் சந்தித்து… ‘ரைட் உன்னோட ஸ்கேன் ரிப்போட் எங்க’ என்றான்… அவளோ பிரக்னன்ட் ரிப்போட்டை எடுத்து கொடுத்தாள் …. இதுயில்ல ஐ வான்ட் நியுரோட்டீக் டிபக்ட் ரிப்போர்ட்(Neurotic defect) …. என்று கேட்க அவள் விழி பிதுங்கி வெளியில் தெறித்து விடும் அளவிற்கு அவனைப் பார்த்தாள்…..

 

கொடு என்று விடாமல் கேட்க….. அவளோ  தன்னை சமாளித்து …. என்ன ரிப்போர்ட் என்ன கேட்கறிங்க….. புரியாமல் பார்ப்பதுப் போல் பார்த்தாள்…..

 

அவன் பொறுமை பறந்தது…. ‘ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்க போன’ என்று கேள்வி எழுப்ப அவளோ மனதில் திகில் பிறந்தாலும்…. அவனிடம் காட்டிக் கொள்ளாமல்…. ரா… ராஜை பாத்துட்டு வந்தேன் என… அவள் தடுமாற்றத்தை அவன் அறிந்தான்….. ஆனாலும் கண்டுக் கொள்ளாமல்…. ‘அதுக்கு அப்புறம் எங்கே போன ‘ … என்று அவன் அவளுக்கு  எடுத்துக் கொடுக்க ….. அவளோ தொண்டைக் குழியில் இருக்கும் சுரபியை விழுங்காமல் விழுக்கிக் கொண்டு…நேர வீட்டுக்கு வந்ததாக கூறிமுடிக்கும் முன்பே …. காதில் கொயிங் என்று சத்தம் கேட்டு பொறி கலங்க…. கன்னங்கள் அனல் பறக்க….அவள் கண்களில் நீர் திரையிட்டு அவனின் பிம்பத்தை மறைத்தது….

 

அவள் அழுதுக் கொண்டிருக்க…அவனோ  அதை உணரும் நிலையில் இல்லை… கண்களில் அனல் பறக்க அவளை ரௌத்திரத்தோடு பார்த்தான்….அவன் கண்களை சந்திக்க முடியாமல்… குற்ற உணர்வில் தலையை தாழ்த்திக் கொண்டாள்…

 

மீண்டும் அவளிடம் ரீப்போர்ட்டைக் கேட்டான்… அவள் முகத்தில் இரத்தப் பசையின்றி வெளுத்ததுப் போல் காட்சியளிக்க…. அவன் அறைந்த இடம் சிவந்து கன்றிப்போய் காட்சியளித்தது….

ஆனால் அவனால் அவளை மன்னிக்க முடியவில்லை…..

நன்றி தோழமைகளே

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Super.interestinga pokuthu.

error: Content is protected !!