முகங்கள்-18
2320
4
அத்தியாயம் 18
“நானும் நடிகை நந்தினியும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் ” என்ற மிகப்பெரிய அறிவிப்பினை அந்த பத்திரிக்கையாளர் திரளுக்கு முன் அளித்த ருத்ரபிதாப், “சாரி நந்தினி ” என்று உறைந்திருந்த சந்தனாவின் கண்களை பார்த்து கூறினான், அவனது சாரியில் ஓர் அழுத்தமிருந்தது
‘இவன் ஏன் சாரி கேட்கிறான்? என்று சிந்தித்துகொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் அதனை கேட்கும்முன், “படம் முடிஞ்சதும் தான் இந்த அறிவிப்பை கொடுக்கனும்னு நந்தினி ஆசைப்பட்டாங்க. பட் நான் இப்பவே ரிவீல் பண்ணிட்டேன் ” என்று முடித்தான். அங்கே குழுமியிருந்த அத்தனை பேருக்குமே அதிர்ச்சிதான் என்றால், பிரகாஷ் அஷ்வின் சஞ்சய் மூவருக்கும் அது பேரதிர்ச்சியாய் இருந்தது.
அஷ்வின் தன் இருக்கையிலிருந்து எழுந்தே விட்டான், ஹாஸ்பிடலில் ருத்ரபிரதாப் நந்தினியின் கைகளை பிடித்துக் கொண்டிருந்த காட்சி ஏனோ அவன் கண்முன் தோன்றி மறைந்தது. அவனை நந்தினியிடம் நெருங்கவிடாமல் தடுக்கும் பொழுதே அவனுக்கு ஏதோ சரியில்லை என்பது புரிந்தது , ஆனால் இப்படி ஒரு அதிர்ச்சியை அவன் எதிர்பார்க்கவில்லை அவனுக்கு தெரியாமல் ஏதேதோ நடந்திருக்கிறது என்கின்ற உண்மை அவனுடைய கோபத்தை அதிகரித்தது,
பிரகாஷ் வாயை கூட மூடாமல் ருத்ரபிரதாப்பையே பார்த்துக்கொண்டிருந்தான் ‘அடப்பாவி நீ உண்மையை சொல்லப் போறியோன்னு நினைச்சா இப்படி ஒரு டுவிஸ்ட் கொடுத்துட்டியே. என்கிட்ட மட்டுமாவது சொல்லியிருக்கலாமே? ‘
சஞ்சய்யின் கை முஷ்டி இறுகியது.
பலர் கைதட்டி தங்கள் வாழ்த்தினை வழங்கினார்கள்
சந்தனாவின் முகத்தில் முழுவதுமாக உணர்வுகள் துடைக்கப்பட்டிருந்தது. காதுகளில் “யார் எது பேசினாலும் புன்னகை மாறக்கூடாது ” “நானும் நந்தினியும் திருமணம் செய்துகொள்ள போகிறோம் ” “அடிக்கடி அந்த வீடியோவ மறந்துடுறியே ” ருத்ரபிரதாப்பின் குரல் மாற்றி மாற்றி அவளை இம்சித்தது.
பத்திரிக்கையாளன் : வாழ்த்துகள் சார். கல்யாணமானா மேடம் நடிப்பை தொடர்வாங்களா?
ருத்ரன் : வாழ்த்துகளுக்கு நன்றி. நந்தினிக்கு கல்யாணத்திற்கு பிறகு நடிக்கனும்னு விருப்பமில்லை. ஆனால் விருப்பமிருந்தா தாராளமா நடிக்கலாம் என் தரப்பிலிருந்து பச்சை கொடிதான்.
பத்திரிக்கையாளன் : நந்தினி மேடம் நீங்க சொல்லுங்க. நீங்க நடிக்கலன்னா உங்கள் ரசிகர்கள் ஃபீல் பண்ணுவாங்களே!? ”
கேமிராக்கள் மொத்தமும் நந்தினியை பார்க்க அவளோ வாயடைத்து நின்றாள்
அதற்குள் அவளருகில் சென்ற ருத்ரபிரதாப் அவளது கரம் பற்றி எழுப்பி,தன் கையணைப்பில் நடக்கவைத்து மைக்கிற்கு முன்னால் நிறுத்தினான் பற்றியிருந்த கையில் அழுத்தம் வேறு.
அவளுக்கு முன் மைக்கருகில் முகத்தை கொணர்ந்தவன். “இப்பவே சொல்லிட்டேன்னு மேடம் ரொம்ப கோபமா இருக்காங்க.கேள்வியை பாத்து கேளுங்க அப்புறம் பின் விளைவுகளை நான் தான் சந்திக்கனும்” வசீகரபுன்னகையுடன் கூட்டத்தை பார்த்து பேசியவன் நந்தினியை பார்த்து ” சாரி டியர் “என்றான் மீண்டும்.
மீண்டும் ஒரு முறை கைகளை அழுத்தி “உனக்கு நடிக்க ஆசையிருந்தால் எனக்கு ஆட்சேபனை இல்லை நந்தினி ” என்று எடுத்துக் கொடுத்தான்
நந்தினி : “இ…இல்லை…. நடிக்கும் ஆசை இல்லை…..மீண்டும் மணிக்கட்டில் ஓர் அழுத்தம்”. அ…அதா…வது… எனக்கு ஹோம் மேக்கரா இருக்கத்தான் ஆசை. சோ தி ஸ் இஸ் மை லாஸ்ட் ஃபிலிம். ”
“உன்னுடைய ரசிகர்கள் என்னை அடிக்க போறாங்க,” என்று மீண்டும் சிரித்தபடியே எடுத்துக் கொடுத்தான்
“என்னுடைய ரசிகர்களை நானும் ரொம்ப மிஸ் பண்ணுவேன். பட் அவங்களுக்கு என்னுடைய திருமணம் ஒரு சந்தோஷ செய்தி தானே? ” துளியும் சந்தோஷமில்லாமல் பேசிமுடித்தாள்
ருத்ரபிரதாப் கூட்டத்திலிருந்த ஒரு பத்திரிக்கையாளனின் முகம் பார்த்து அர்த்ததுடன் கண்ணசைக்க உடனே புரிந்த கொண்ட அவனும்
” மிருதுளா திரைப்படம் பற்றி சில வரிகள் ருத்ரபிரதாப் சார் ” என்று ருத்ரன் அறிவுறுத்தியிருந்தது போல் பேச்சை படத்தின் பக்கம் திசை மாற்றினான்
ருத்ரன் : என்னுடைய படம் என்பதே போதுமானது தானே என்று முடித்தவன். திரைப்படம் சம்பந்தமான சில கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு,”இங்கே வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி என்றவன் பத்திரிக்கையாளர்களின் “சார் ” “சார் ” “ஒன் மோர் குவஷ்டின் ” “பிளீஸ் சார் ” என்ற பல குரல்களை புறம்தள்ளி நந்தினியின் கைப்பிடித்து முன்னேறினான். கேமராவின் பிளாஷ் வெளிச்சங்கள் அவர்களை படம்பிடிக்க கான்பரன்ஸ் ஹாலிலிருந்து வெளியேறினான்.
பத்திரிக்கையாளன் 1 : கொஞ்சம் தலைக்கனம் பிடிச்சவர் தானோ?
பத்திரிக்கையாளன் 2 : மண்டையில சரக்கு அதிகமா இருந்தா கொஞ்சம் தலைக்கனம் வர்றது இயற்கை தானே.
பத்திரிக்கையாளன் 1: அதுவும் சரிதான்.
முகங்களின் தேடல் தொடரும்…..

4 Comments
Koncham thimir illa niraiyave thimir pitiththavan pa antha thimirthan. Santhana viruppam illama avakita kekkama oru mutiva etukka vaikkithu.
Hi mam
ருத்திரனுக்கு சந்தனாவை பிடித்திருந்தால் திருமணம் செய்யட்டும் ,ஆனால் ஏன் நந்தினியின் மரணத்தை மூடி மறைக்கணும் அதில் ஏன் சந்தனாவை இழுத்து ஆள் மாறாட்டம் பண்ணணும்.
நன்றி
Rudhrapratap ippadi oru kidikipidi potitiye….paavam sandhana,,..ava evvalavu dhaan thaanguva…
Santhanava appadiye bommaiya pola aattuvukkuran .. Enna plane la kalyanam nu solran. .. adei Enna than da ninaikura .. un kooda irukkuravangaluke theriyala😜😜