Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-28

அவள் பேசாமலிருக்க அவளின்  தோளைப் பற்றி அவளை உலுக்கினான் ‘ ஏன் டி பொய் சொல்ற இன்னொரு அறைவிட்டேன் செத்துருவ… உனக்கு எவ்வளவு சுயநலம்டி..என்ன தனியா விட்டுட்டு போறேன் சொல்ற..என்னையும் நம்ப குழந்தையும் பத்தி யோசிக்காம சுயநலமா உன்ன பத்தி மட்டும் யோசிக்கிற… அவன் அவள் முன் நின்று கர்ஜித்தான்…

 

அவளோ கண்களில் நீர் வழிய அமைதியாய் நின்றுக் கொண்டிருந்தாள்…அவனே பேசினான் இப்போ சொல்றேன் கேட்டுக்கோ என்னோட அனுமதியில்லாம என்கிட்ட இருந்து உன்னையும் நம்ப குழந்தையும் பிரிக்க விடமாட்டேன்.அது அந்த கடவுளே இருந்தாலும் சரி. உன் உச்சி முதல் பாதம் வரை எனக்கே சொந்தம் நீயே நினைச்சாலும் என்னை விட்டு பிரியமுடியாது…கனவுல கூட நினைக்காத என்னை விட்டு போயிடலாம்னு ..அண்டர்ஸ்டான்ட்

 

 

அவளை ரிப்போட் எங்கே என்று கேட்டு உலுக்கினான். அவளோ என்ன சொல்வதென்று தெரியாமல் கண்களில் கண்ணீரோடு அவனைப் பார்த்தாள். அவளை ஆழ்ந்து நோக்கி கேட்டான் தன் பக்கத்தில் இருக்கும் கைப்பைப் பார்த்தாள்  அவள் பார்வையை அவனும் தொடர்ந்து பார்த்தான். அவன் அதை நோக்கி சென்றான்…

 

அவளோ மனதில் முடிந்தது எல்லாம் முடிந்தது என்று நினைத்து மௌனம் காத்தாள்….

 

அவளது கைப்பையை எடுத்து அதிலிருக்கும் ரிப்போர்டை வெளியில் எடுத்தான்… (NEUROTIC DEFECT)  என்று முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம்வரைப் பார்த்தான். அதனை கையோடு எடுத்துச் சென்றுவிட்டான். அவள் ‘ மாமா’ என்று கூப்பிட கூப்பிட அவன் காதில் கேட்காததுப் போல் சென்றுவிட்டான்.

 

அவன் எங்கே செல்கிறான் என்று கேட்கக் கூடத்தோன்றாமல் அப்படியே அமர்ந்து விட்டாள்

 

அவனோ நேரே தன் நண்பனை சந்திக்க மருத்துவமனைக்கு சென்றான். அங்கு தர்ஷனை சந்திக்க விசிட்டிங்கில் அமர்ந்திருந்தான்.தர்ஷன் அவனை அழைக்க உள்ளே சென்றான் ‘ ஏன்டா வெளில வெயிட் பண்ற ஸ்ட்ரைட்டா உள்ளே வரலாம்ல இட்ஸ் ஓகேடா நீ பேஷன்ட டிரிட் பண்ணிட்டு இருந்த அதான் வெயிட் பண்ணேன் நத்திங் டூ ஒர்ரி…

 

‘அது சரி என்ன விஷயாமா’இன்னைக்கு இங்கே விஜயம் என்றான்… ஒரு முக்கியமான விஷயமா பேசனும் என்று அவன் ஆரம்பிக்க அந்நேரம் பார்த்து கார்த்திக்கின் தொலைபேசி அடிக்க திவ்யா தான் என்று கடுப்பாகி போனவன்  அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.

 

ஆனால் அந்த தொலைபேசி எண்ணைக் கண்டவன் இரகசிய உளவுத்துறையிடமிருந்து வர  நெற்றியில் முடிச்சு விழ  தர்ஷனிடம் ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு தொலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான்.

 

அந்த ரகசிய உளவாளி கூறிய செய்தியை கேட்டு பிரமிப்பில் இருந்தாலும் தான் யூகித்தது சரியே என்று அவரிடம் விரைவில் நேரில் வருகிறேன் என்று பேசிவிட்டு தொடர்பை துண்டித்தான்..

 

தான் தமிழ்நாட்டிற்கு வந்தமையால் சரிவர அரசாங்க திட்டத்தை(Govt Project) முடிக்க முடியாமல் போகவே கார்த்தி  டென்டர் கைவிட்டு போகக் கூடாது என்னும் காரணத்தினால் ரோஷனிடம் பொறுப்பை தந்து விட்டு வந்த தன் முட்டாள் தனத்தை எண்ணி வருந்தினான்.ஏனெனில் அரசாங்க டெண்டரை தனியார் தொழில் செய்பவரிடம் கொடுத்து லாப பணத்தையும்,அரசாங்க உத்தரவின் படி டெண்டர் ரூபாய்க்கு இவ்வளவு கணக்கு விகிதம்  என்று அறிந்தும், மக்களின் வரிப் பணம் மூலம் வரும் அரசாங்க பணத்தை கொள்ளையடிப்பது குற்றம். இது அரசாங்கத்திற்கு தெரிந்தால் மிகப்பெரிய திட்டம் கையைவிட்டுப் போய்விடும் இது கம்பெனிக்கு பெருத்த அவமானம். அது மட்டுமின்றி சமந்தப்பட்டவர்கள் சிறைக்கு செல்ல வேண்டும். சிறைக்கு செல்ல வேண்டும் அல்லது  அரசாங்கம் கூறும் அபராதத் தொகையை கொடுத்தே ஆகவேண்டும்  இல்லையென்றால் தாரளமாக கம்பெனி மீதும் தொழில் மீதும் வழக்கு பதிவு செய்ய முழு உரிமை உண்டு.

 

கார்த்திக்கு நினைக்கும் போதே ரோஷனை அடித்து துவைக்க  கைகள் பரபரவென்று இருந்தது ஏனெனில் இருக்கின்ற பிரச்சனை போதாது என்று இவன் இப்படி செய்ததை நினைத்தவன் முஷ்டி இறுக அவன் மட்டும் நேரில் இருந்தாள் துவ்சம் செய்திருப்பான்.

 

தன்னை சமன் செய்துக் கொண்டு தர்ஷன் அறைக்குச் சென்றான்… தர்ஷன் கார்த்திக் கொண்டு வந்த ரிப்போட்டில் மூழ்கி இருந்தான். ரிப்போட்டை பார்த்துவிட்டு தர்ஷனோ ‘ இந்த ரிப்போட் திவ்யலட்சுமினு இருக்கு உன்னோட ஒய்ப் தான திவ்யா ஹவ் இஸ் திஸ் பாசிப்பில் எப்படி அவங்க இவ்ளோ வலிய தாங்குனாங்க  ஷீ டின்ட் சே எனிதிங் டு யு  கொஞ்சம் ரிஷ்கான ஸ்டேஜ்தான்’…

 

கார்த்தியின் முகத்தில் சோகம் சூழ்த்துக் கொள்ள அவனிடம் முழு விவரத்தை கூறினான். ‘ கார்த்தி இத பார்த்தா (Hemorrhage) இரத்தக்கசிவுனு சொல்லுவாங்க உன்னோட மனைவிக்கு (Hemorrhage)  ரத்தகசிவாலதான் சிவியர்  (Aneurysm) குருதி நாள நெளிவு ஏற்பட்டிருக்கு. நான் அமெரிக்கன் சீஃப் டாக்டர் டேனியல் பிரான்ஸிஸ்னு நியுரோடிக் ஸ்பெசலிஸ்ட் கன்சல்ட் பண்ணிட்டு சொல்றேன்’.

 

‘ பட் ஹவி பெயின் ஷீஸ் பெசிங்’… ‘ஷீ ஸ் ஹவிங் மல்டி நேர்வ்ஸ் இஷ்யூ’ அப்பொழுது தான் கார்த்திற்க்கு அவளின் நிலை புரிய இதில் வேறு தான் அடித்துவிட்டோம் என்று பச்சாதாபம் எழ… மீண்டும் அவள் மேல் ஆத்திரம் வந்தது.

 

ஆரம்பக் கட்டத்தில் கூறியிருந்தாள்  இதை வளரவிடாமல் முதலிலேயே தீர்வு கண்டு இருக்கலாம் என்று அவன் மனம் சமாதானம் அடையாமல் சிந்தித்தது…(Prevention is better than cure) வரும் முன் காப்பது நன்று  தெரிந்திருந்தால் அவளுக்கு பதிலாக அவன் எமனிடம் போராடியிருப்பானோ….

 

‘கார்த்தி ஹைய் ரிஸ்க் தான் பிகாஸ் கன்சிவா வேற இருக்காங்க பாக்கலாம் இன்றைய உலகில் மருத்துவத்துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளது கண்டிப்பா அதற்கான தீர்வை காணலாம் என்று தன் நண்பனுக்கு ஆறுதல் அளித்தான்…

கார்த்தியோ அரைமனதாக கிளம்பி சென்றான். வீட்டிற்கு செல்ல மனமில்லாமல் தன் மனைவிக்காக புதிதாக கட்டும் ரெஸ்டாரன்டிருக்கு சென்றான். அதன் அமைப்பு முழுவதும் கிளாஸிக் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்ட ரெஸ்டாரன்ட் இது சம்பந்தமாக முழு வேலையையும் தன் மனைவியிடமே விட்டுவிட்டான்.

 

அவள் பிடிவாதமாக மறுக்க அவனோ அவளுக்கு மேல் பிடிவாதமாக நின்று அதன் வடிவமைப்பிலிருந்து கட்டிட நுட்பம் வரை அவளையே தேர்வு செய்ய கூறினான்.அவளின் ரசனையில் மயங்கி ‘ குட்டிமா நீ லேட்சுரர் படிக்கிறதுக்கு பதிலா ஆர்கிடேக் (கட்டிடக்கலை) படிச்சிற்கலாம்….

 

‘ அட மாமா ரசனை இருந்தாலே போதும் அதுக்கு படிக்கனும்னு அவசியம் இல்லை’ என்று அவள் அவன் கண்களில் மோகம் கொண்டு அவளைப் பார்க்க அவள் தன் நினைவையும் சுற்றுப் புறத்தையும் மறந்து அவன் மார்பில் சாய்ந்துக் கொள்ள,அவனோ அவள் முகத்தை தன் கைகளில் ஏந்த, அவளோ தன் இரு கண்களையும் மூடிக் கொள்ள அவள் நின்றிருந்த தோற்றம் அவனைத் தாக்க , அவன் பார்வை அவள் கண்களிலிருந்து தாவி அவள் இதழ்களில் வந்து நின்றது அதற்கு மேல் பொறுக்க முடியாமல் போக அவன் உணர்வுகளை தட்டி எழுப்பிய அவள் இதழைச் சிறை பிடித்தான்.

 

நொடிகள் நிமடங்களாக மாற… பூக்களில் உள்ள தேனை உண்ணும் வண்டுப் போல் அவள் இதழ்களை அவன் சுவைத்த வண்ணமிருக்க, சுற்றுப் புறத்தை உணர்ந்து  அவள் அவனை விட்டு விலக, அவனோ என்ன என்பதுப் போல் பார்க்க , அவளோ சுற்றுப்புறத்தை நோக்கினாள் அவனோ தனக்குள் சிரித்துக் கொண்டான்.மீண்டும் அவளது முகம் பார்த்து குனிய ‘ மாமா பொது இடத்துல நின்னுட்டு என்ன பண்றிங்க ‘ என்று அவனைப் பார்த்து கேட்க அவனோ ‘ ஹும்… என் பொண்டாட்டி கூட நான் ரொமன்ஸ் பண்றேன் எவன் என்னைய கேட்பான்’ என்று பேசி அவன் மீசையை முறுக்க. அவள் கிலுக்கிச் சிரித்தாள்….

 

அவள் முகம் சிவக்க அவனைப்பார்த்து தன் மனதிலும் கண்களிலும்  நிறைத்துக் கொண்டாள்…

 

அவள் இதுநாள் வரையிலும் அவளுடன் மகிழ்ச்சியாக இருந்த ஒவ்வொரு நொடியும் அவனை இம்சித்தது.இந்த மகிழ்ச்சியும் அவளின் காதலிலும், அவளின் அன்பிலும் கடைசி உயிர் பிரியும் வரை அவள் தன் வாழ்கைக்கு வேண்டுமென்று அவன் மனம் வேண்டியது… தன் குட்டிமா தனக்கு வேண்டுமென்று அவன் மனம் முழுவதும் பிராதித்தது…..

 

அவள் தன்னை பிரிந்து செல்ல. எப்படி முடியும் அவள் தன்னை தனிமரமாக வெறும் கூடாக விட்டுச் செல்ல முடிவெடுத்தன் காரணம் என்ன ???… அவன் மனம்  இக்கேள்வியில் மருகி நின்றது….

 

எவ்வளவு தடுத்தும் அவன் கண்கள் ஆற்று நீர்ப்  போல் பெருகுவதை அவனால் தடுக்க முடியவில்லை….

 

 

நன்றி தோழமைகளே

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி
3 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Dhivya Bharathi says:

  Kandipaa akka nxt episode ….. Bettera kuduga try paren… thanks For ur comments ….


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Romba sogama iruku.. then ore madiri pora madiri iruku.. konjam speed up aana nalla irukumo…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Dhivya Bharathi says:

  Comments please friends…. apathan story yepudi poguthunu yenaku theriyum!!!

error: Content is protected !!