Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-25

முகங்கள் – 25

 

சந்தனாவை அணைக்கத் துடித்த கைகளை அடக்கிக் கொண்டு, சில நொடிகள் கண்களை மூடித்திறந்தவன், ஒரு பெருமூச்சுடன், “இங்கே பார் சந்தனா ” என்று நிறுத்தினான்.

 

அவனது சந்தனா என்ற அழைப்பில் ஈர்க்கப்பட்டு சட்டென அவன் புறம் திரும்பியவளின் கோபம் சற்று தணிந்திருந்தது.

 

“நான் பேசப்போவதை சந்தனா, நந்தினி இப்படி யாராகவும் இல்லாமல் சாதாரண மனிஷியா இருந்து கேட்டாத்தான் உனக்கு புரியும்”

 

மீண்டும் அவளது முகம் கோபத்தில் சிவந்தது , ஏதோ பேச முயன்றவளை முந்திக்கொண்டு பேசலானான்.

 

“இரு நான் முடிச்சிடறேன், அப்புறம் நீ பேசலாம்” – மெதுவாக என்றாலும் அழுத்தமாகவே கூறினான்.

 

அவனது வார்த்தையின் சக்தி எப்போதும் போல் அவளை மௌனமாக்கியது.  அவளது மௌனத்தை சம்மதமாக ஏற்றவன் தொடர்ந்தான்.

 

“இந்தப் படம் என்னோட கேரியர்ல ரொம்ப இம்பார்டென்ட் தான். பட் உன்னோட இந்த பேச்சுக்கு பிறகு நான் இந்த படத்துலயிருந்து விலகிக்கிறேன். ஜஸ்ட் பத்து கோடி லாஸ் அவ்வளவுதான். பட் இது என்னை,  சஞ்சய்யை, மித்ரனை மட்டும் பாதிக்காது. அப்படி பாதிச்சாலும் நாங்க மறுபடியும் சீக்கிரமா எழுந்துடுவோம். ஆனா மத்த வர்க்கர்ஸ்? அவங்க நிலைமை? இந்தப் படத்தோட மியூசிக் டைரக்டர் புதுசு. உயிரை கொடுத்து மியூசிக் போட்டிருக்காரு. இரண்டு பாடலாசிரியர் புதுசு. நிறைய புது சிங்கர்ஸ்க்கு சான்ஸ் கொடுத்துருக்கோம். அவ்வளவு ஏன்… உனக்கு ஃப்ரண்டா நடிக்கிறாங்களே தன்வன்யா அவங்களுக்கு நடிப்புதான் பேஷன்… இந்த ஃபீல்டுல பெரிசா சாதிக்க துடிக்கிறாங்க… அவங்க கண்ணுல மிதக்கும் கனவு உனக்கு தெரியலையா? அவங்கள மாதிரியே சின்ன ரோல்ல நடிக்கிற அத்தனை பேரோட கனவை கலைப்பது சரியா? அவங்களோட உழைப்பு வீணாப்போகிறதுக்கு நம்ம காரணமா இருக்கலாமா?” – அவளது முகம்பார்த்து ஏற்ற இறக்கத்துடன் பேசிக்கொண்டே வந்தவன் இறுதியில் அவளது மென்மையான கரம்பற்றி அவளது கண்களை ஊடுருவினான்.

 

அவளும் அவனைத்தான் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் “பத்து கோடி லாஸ்” – “தன்வன்யாவின் கனவு” – “எல்லோரது உழைப்பும் வீணாக நாம காரணமா இருக்கலாமா?” – அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவளை சிந்திக்க வைத்தது.

 

அவள் சிந்திப்பதை தனக்கு சாதகமாக ஏற்று, பற்றிய அவளது கரத்தை மென்மையாக வருடியவன், தன் கைகளுக்குள் அழுந்தப் புதைத்துக்கொண்டு, “இப்போ உன் முடிவு எல்லோருடைய வாழ்கையையும் திருப்பிப் போடும், நல்ல வகையிலா, அவல நிலையிலான்னு நீ சொல்லப்போர பதில் தீர்மானிக்கும்” என்றவன், அவளது கண்களில் பதித்த பார்வையை சிரிதும் விலக்காமல் அவளது பதிலை எதிர்பார்த்து காத்திருந்தான்.

 

என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்தவளை பார்க்க அவனுக்கே பாவமாக இருந்தது.

 

இதயத்தில் இரக்கம் இருக்கிறது, இனி கவலையில்லை என்று உள்ளுக்குள் நிம்மதி அடைந்தவன் தொடர்ந்தான்.

 

“உன் பதில் எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே தான்” என்று முடித்தவனின் கைகளில் தன்னுடைய கை சிக்குண்டிருப்பதை அப்போது தான் உணர்ந்தாள் சந்தனா. மின்சாரம் தாக்கியது போல் சட்டென கையை விடுவித்துக்கொண்டவள் தன்னை சமனப்படுத்திக்கொள்ள இடது புறமிருந்த கண்ணாடி வழியே வெளியே பார்க்கலானாள்.

 

ருத்ரனும் தன்னுடைய இருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டு அவளது பதிலுக்காக காத்திருந்தான். அவன் காரை எடுக்கவில்லை, அவள் பதிலளிக்கும் வரை இங்கேயேதான் என்று சொல்லாமல் சொல்வதுபோல் கையை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

 

வேறு வழியின்றி “இ…இ…வ்வளவு யோசிக்கர நீங்க ஏன் நந்தினியை கொ….கொலை செ….செஞ்சீங்க” கேட்டே விட்டாள். ஆனால் அவனை பார்க்கவில்லை.

 

மார்புக்கு குறுக்கே கட்டியிருந்த அவனது கைமுஷ்ட்டி இறுகியது. முகம் சூடேரியது, அன்று நடந்ததும் அதன் தொடர்ச்சியாக நடந்ததும் ஓர் படம் போல் அவன் கண்முன் வந்துசென்றது, அவளது முடிவு தனக்கு சாதகமானதாக நிச்சயம் இருக்கும் என்று நம்பித்தான் அந்த கேள்வியை அவன் கேட்டதே, ஆனால் அதற்கு முற்றிலும் மாறுபட்ட, அவனால் பதிலளிக்க முடியாத கேள்வியை அவள் கேட்கவும் அவன் உள்ளுக்குள் அதிர்ச்சியடைந்தான், ஆனால் இது அவளுக்கு தெரிந்துவிட கூடாதே என்று எப்போதும் அவளை நடுங்கச்செய்யும் கோபத்தை கையிலெடுத்தான்,  “தட் இஸ் நன் ஆப் யுவர் பிசினஸ், பட் இனி உன்னுடைய பதில் தேவையில்லை, முடிவுகள் என்னுடையதாய் தான் இருக்கும் எப்போதும்போல ” காரை ஆன் செய்து கீரை வேகமாக ஒடித்தவன் ஸ்டியரிங்கில் தன் ஒட்டு மொத்த வேகத்தையும் காட்டி திருப்பினான்

 

அவனை பார்க்க சந்தனாவிற்கு பயமாகவே இருந்தது. தாறுமாறாக சாலையில் ஓடியது அவனது கார். ஒருவித திகிலுடன் சாலையை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

*******************

 

இப்போது இரவா என்று சந்தனாவை ஆச்சர்யபட வைத்தது ஷூட்டிங் ஸ்பாட். பகல் போல் வெளிச்சம் பிரகாசமாக இருந்தது. ஷாட் எடுக்கும் பொழுது மட்டும் பலவிளக்குகள் அணைக்கப்பட்டு சில மட்டுமே எரிந்தன.

 

ஆங்காங்கே வேலை செய்பவர்கள் படுபிசியாக இருந்தார்கள். செட்டில் ஏதோ கோளாறு என்று எல்லோரும் அதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தனர். எப்பொழுதும் நைட் ஷூட் இருந்தால் பகலில் எல்லோரையும் ஓய்வெடுக்க சொல்லிவிடுவான் ருத்ரன். ஆனால் இன்று மித்ரன் செய்த கோமாளித்தனத்தால் தன் நேரமும் விரயம், மதியத்திற்கு மேல் தூங்க முயன்றவனால் தூங்கவும் முடியவில்லை, காப்பாத்தி என்ன பண்ண போறீங்க?’ – ‘வெளக்கு புடிச்சா பொருத்தமா இருக்கும்’ – ‘நந்தினிய ஏன் கொன்னீங்க?’ – அவளது குரல் அவனது செவியைவிட்டு அகலவேயில்லை. அவனுள் கோபம், வெறி, எரிச்சல் என அத்தனை உணர்வுகளும் கலந்திருந்தது.

 

ஸ்கிரிப்ட் சொல்லி தரும் தீனாவை அழைத்து “பர்ஸ்ட் பிக்ஸ் பண்ண ஸ்கிரிப்ட் அன்ட் சீன்ஸையே போட்டுக்கோ” என்று சொல்லி அனுப்பினான்.

 

அவனருகில் இருந்த பிரகாஷோ, “டேய் இறுக்கமா கட்டிபிடிக்கிற சீன் வேண்டாம்னு நீ தானடா மாத்தின!” என்றான்.

 

“இப்பவும் நான் தான் மாத்தியிருக்கேன்” – சாதாரணமாக பேச முயன்றும் அவனால் முடியவில்லை.

 

“அவங்க மேல என்னடா கோவம் அவங்களால இதெல்லாம் முடியாதுடா, பாவம் டா…” பிரகாஷ் பேசிக்கொண்டிருக்கும் போதே,

 

“ஷ்..ஷ்…ஷட்டப், டூ வாட் ஐ சே, எனக்கு பாடம் எடுக்கிற வேலை எல்லாம் வேண்டாம்” என்று கோபத்தில் தீயை கக்கினான்.

 

***********************

 

ஹவுசிங் போர்ட் போல் செட் போடப்பட்டிருந்தது, கதாநாயகனும் கதாநாயகியும் அங்கே தான் நடுஇரவில் சந்திக்கிறார்கள். கதாநாயகி தைரியமானவள், அவள் ஒரு அனாதை பெண்னை  பலாத்காரத்திலிருந்து காப்பாற்றுவாள் அப்படி காப்பாற்றுகையில் ரௌடிகள் கதாநாயகியை துரத்த அவள் ஓட… செல்போன் வழியாக கதாநாயகனுக்கு தகவல் சொல்லிவிடுவாள். அவன் அவளைத் தேட இவள் அவனிடம் ஓடிவிட துடிக்க அப்போது இருவரும் சந்தித்தால் என்ன ஆகும், இந்த காட்சிகள் தான் அன்றைய படப்பிடிப்பு.

 

பலாத்காரத்தை தடுப்பது ரவுடிகளிடமிருந்து தப்பித்து ஓடுவது, இது எல்லாமே ருத்ரன் எப்படிச் சொல்கிறானோ அப்படியே நடித்தாள். பல காட்சிகளை அவள் சர்வசாதாரணமாக ஒரே டேக்கில் முடித்துவிட்டதை எண்ணி ருத்ரபிரதாப்பே அதிசயித்தான், ஆனால் அதனை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை,தான் நினைத்தது போல் காட்சிகள் சரியாக வருவதை நினைத்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டவன், வெளியே இறுக்கமாகவே இருந்தான்,  அவ்வப்பொழுது அவள் அவனது முகத்தை பார்த்தாள். அங்கே பாறாங்கல் தான் இருந்தது, அப்படியொரு இறுக்கத்துடன் வளையவந்தான் ருத்ரன். அன்றைய ஷூட் முழுவதும் பிரகாஷிற்கே சரமாரியாக திட்டு விழுந்தது. மற்ற ஊழியர்கள் அவனை நெருங்கவும் பயந்தார்கள்… மித்ரன் உட்பட…

 

இறுதியில் சற்று நெருக்கமான காட்சியின் படப்பிடிப்பு மட்டுமே மிச்சமிருந்தது. அப்படித்தான் யோசித்திருந்தானா அல்லது இவளுக்காக கடைசியில் மாற்றி வைத்தானா… என்பது அவனுக்கே வெளிச்சம். தள்ளிப்போடலாமே தவிர தவிர்க்க முடியாதே!

 

காலை மணி மூன்று இன்னும் இரண்டுமணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் அல்லது விடிந்துவிடும், எல்லோர் முகத்திலும் ஒரு பரபரப்பு இருந்தது, ருத்ரனோ டென்ஷனின் உச்ச கட்டத்தில் இருந்தான், யார் நெருங்கினாலும் கடித்து குதறினான்.

 

இதனைகண்ட மித்ரன் மனதிற்குள் ஒரு திட்டமெழுந்தது. காலை தன்னை நிராகரித்து ருத்ரபிரதாப்பின் பின்னால் ஓடிய நந்தினியை பழிவாங்கும் திட்டம்.

 

முகங்களின் தேடல் தொடரும்…

Next ud-Monday




8 Comments

  • Thadsayani Aravinthan says:

    Hi mam

    மித்திரன் ஏதோ வில்லங்கமாய் யோசிக்கின்றார் ருத்திரனிடம் நல்ல அடி வாங்கப்போகின்றார்.

    நன்றி

  • Nataraj Nataraj says:

    Engata alukku alu santhanava paata patuthiringa .ruthra unakke ithu atukkuma.

  • ugina begum says:

    superrrrrr

  • Hadijha Khaliq says:

    Adapavi mithran, rudhran thittam potu sandhana va paduthuradhu pidhadhunu ippa neeyum thittam potu avala padutha poriya😡

  • Lalitha Vasudevan says:

    nice.

  • Sony Sri says:

    Nice ud sis…..
    Chandhu pavam…..

  • Punitha. Muthuraman. says:

    ருத்ரா ஆரம்பிச்சுட்டியா உன் ருத்ரதாண்டவத்தை.நடுவுல இந்த மித்ரன் என்ன சொதப்பபோறானோ.

  • saranya shan says:

    Rutra unakke appadika poraanaa mitran.sandanaavai kaaptra yaaravathu vaangappa

You cannot copy content of this page