Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி -31

 

அவன் உள்ளே நுழைந்த வேகத்தில் அவளை அணுகினான்…. உள்ளே சென்றவன் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான்….ஏனெனில் மூக்கில் இரத்தம் கசிந்து வழிந்திருந்த அடையாளத்தை கண்டவன் அவளை நெருங்கினான் அவளோ மருந்தின் வீரியத்தில் உறங்கிக் கொண்டிருந்தாள்…

 

தன்னை காணாமல்… தன் புறக்கணிப்பால்… சற்று மெலிந்த தோற்றத்தைக் கண்டவன்… தன் மேலே அவனுக்கு கோபம் வந்தது… நான் தான் இவளின் நிலைக்கு காரணம் என்று  எண்ணி வருந்தினான்… அவளை நெருங்கியவன்

 

அவளது நெற்றியில் முத்தமிட்டு மருத்துவரை நாடிச் சென்றான். மருத்துவர் அறைக்கு வந்தவன்… மருத்துவரை அணுகினான்… ‘மிசஸ் கார்த்தியோட ஹஸ்பண்ட்… என்ன சார் இவளோ கேர்லசா இருக்கீங்க… பிரக்னன்ட் வுமன் சார் ஹை பிரஷர் ஆகி லோவா ஆகியிருக்கு… அதான் (Nostril) மூக்கிலிருந்து இரத்தம் வடிந்ததற்கான காரணம் என்றார்…

 

டையட் புட், மற்றும் சத்தான சாப்பாடு,  பழம், நடைப் பயிற்சி முக்கியமாக மேலும் சில அறிவுரையை கூறினார்… பின்பு பார்த்துக் கொள்ளுமாறு கூறினார்.. அவனோ சரி என்று விடைப்பெற்று ‘ தன் (மனைவி) குட்டிமா’ இருக்கும் அறைக்கு சென்றான்…

 

அவள் கண்முழித்துக் கொண்டிருக்கும் வேலையில்… அவன் அவள் அருகில் சென்று ‘ குட்டிமா’ என்று அவளை அழைக்க… அவளுக்கோ நீண்ட நாட்கள் கழித்து கேட்கும் அந்த வார்த்தையை கேட்டவள்… கண்கள் ஓரத்தில் நீர் கசிந்தது….

 

அவளோ ஒரு வார்த்தைக் கூட பேசாமல் கண்களை முடிக்கொண்டாள்… அவனோ அவள் சோர்வில் கண்களை முடிக்கொண்டாள் என்று எண்ணி மென்மையாக அவள் நெற்றியில் இதழ் பதித்தான் அவளுக்கு கண்ணீர் இமைகளுக்கு வெளியில் கசிந்தது… அவளின் கண்ணீரைக் கண்டவன்… துடைத்துவிட்டு அவளின் மனதினை அறிந்தவனாய் மீண்டும் அவளுக்கு முத்தமிட்டு வெளியில் வந்தான்…

 

மேலும் இரண்டு நாட்கள் அங்கையே தங்குமாறு மருத்துவர் கூற… கௌரி மட்டும் இரவில் துணையிருக்க… கார்த்தி கௌரியிடம் வந்து தான் பார்த்துக் கொள்ளுவதாக கூறி….தன் அன்னையை வீட்டிற்கு அனுப்பினான்…. ஏனெனில் தன் தந்தைக்கு சரிவர எதுவும் தெரியாது அனுவோ சிறுப்பெண் என்பதால் தன் அன்னையை அனுப்பி வைத்தான்…

 

அடுத்த மாதம் வந்தால் திவிக்கு ஒன்பதாம் மாதம். மருத்துவ மனையில் இருக்கும் வரையிலும்… பின்பு வீட்டிற்கு வந்த பிறகும் அவள் அவனிடம் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை… அவனோ தன் மேல் கோபமாக இருக்கிறாள்… கோபம் தீர்ந்த பிறகு தன்னிடம் பேசுவாள் என்று நினைத்தான்…

 

அவளோ அவனிடம் பேசவில்லை … இரண்டு வாரம் சென்றுவிட்டது… அவளோ அவன் இருக்கும் பக்கம் திரும்பவே இல்லை மருத்துவர் கூறியதை அவள் கடைப் பிடிக்காமல் வேண்டுமென்றே இருந்தால்… கார்த்திக்கிற்கு சற்று கோபம் வந்தது… செய்வதெல்லாம் செய்துவிட்டு இப்போது அவளை அவளே வருத்திக் கொள்வது பார்க்க முடியாமல்…

 

கார்த்தியோ அவளிடம் பேசினான் ‘ குட்டிமா எழுந்துவா கொஞ்ச தூரம் நடக்கலாம்’ என அவளோ அடிபட்ட பார்வை பார்த்தாள்,  அவள் பார்வையை சந்தித்தவன் அதில் ஆயிரம் கேள்விகள் அவனை நோக்கி அவள் கேட்பதுப் போல் உணர்ந்தான்… அவள்  உள்ளே எப்படி நொறுங்கிருப்பாள் என்று  வருந்தினான்…

 

அவளோ மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டான்… அவனோ ‘ உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன் எழுந்துவா’ என்று அவள் கையை பிடித்து இழுக்க அவளோ அவன் கையை தட்டி விட்டாள்… அவனோ ‘ கோபமிருந்தா என் மேல் காட்டு குட்டிமா… ஏதாவது பேசு டீ  இப்படி மௌனமா  இருந்து என்ன கொல்லாத … எனக்கு பயமா இருக்கு குட்டிமா… ப்ளீஸ் டி என் தவிப்பு உனக்கு புரிலையாடி … ஏன்டி என்னை பழிவாங்கிறதா நினைச்சிட்டு உன்னையும் குழந்தையும் போட்டு வருத்திக்கிற….

 

குட்டிமா நீ எழுந்து வராட்டி நான் உன்ன தூக்கிட்டு போவேன்’ என்று அவன் அவளை நெருங்கி கையில் தூக்க முயலும் போது அவனை தடுத்து… அவளே எழுந்துச் சென்றாள்… அவள் சென்றதை பார்த்தவன் அவள் பின்னோடு சென்று அவள் கையில் தன் கையை கோர்த்துக் கொண்டு நடந்து சென்றான்…

 

அவனை தடுக்கும் எண்ணம் வராமல் அவள் அமைதியாக அவனுடன் நடந்துச் சென்றாள் … என்ன செய்தாலும் அவன் பிடிவாதத்தை வெல்ல முடியாது என்று எண்ணம் தோன்ற அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றாள்… அவளோ தன் கணவன் தனக்காக செய்யும் வேலையை அறியாமல் அவன் மீது கோபத்தோடு இல்லை ஆதங்கத்தோடு இருந்தாள்…

 

அவனோ இதற்கிடையில் நியுரோடிக்  மருத்துவர் டேனியல் பிராண்ஸ்ஸின் மெயிலைப் பார்த்தான் அவரோ எழுபது சதவிதம் காப்பாற்றி விடலாம் என்றும்… அதற்கான வழிகளையும் அவனுக்கு புரிவதுப்போல் விளக்கமாக விரிவுரையை அனுப்பினார்…

 

அவனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை ‘தன் குட்டிமாவை எப்படியாவது காப்பாற்றி விடலாம்’ என்று அவனுள் புதிதாக ஒரு தன்னம்பிக்கை தோன்ற இறைவனிடம் மனதார வேண்டிக் கொண்டான். அவளை எப்படி காப்பாற்ற போகிறோம் என திணறிக் கொண்டிருந்தவனுக்கு இச்செய்தி இனிப்பாக இருந்தது…

 

 

தன் கணவன் தனக்காக  படும்பாடு அறியாமல் இருந்தாள்…

 

அறிந்திருந்தால் அவனின் அன்பும் அவனின் காதலின் ஆழத்தையும் அவள் உணர்ந்தே இருப்பாள்… ஆனால் விதியை வெல்ல யாரால் முடியும்….

 

அன்று காலை வீடே ஜெகஜோதியாக காட்சியளிக்க அனைவரும் விருந்து சமைக்க ஆண்கள் எல்லோரும் மேற்பார்வை பார்க்க பெண்கள் அனைவரும் கேலி கிண்டல் என்றிருக்க… அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது…. கார்த்தியின் குடும்பமும் திவியின் குடும்பமும் சூழ்ந்திருக்க அவ்விரு குடும்பமும் தங்களின் மகிழ்ச்சியை இதில் மீட்டேடுக்கும் வண்ணம் இருதரப்பினரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்…

 

அதே மகிழ்ச்சியோடு சீமந்தம் நன்றாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது… அவர்களின் செல்வ செழிப்பு ஒவ்வொரு பொருளிலும் தெரிந்தது… சுந்தரத்திற்கு கர்வமும் கூட அழகான குடும்பம்… அழகான அடக்கமான பெண்…அனைவரிடமும் சுந்தரமும் கௌரியும் தங்களின் மருமகளின் பெருமையை பேசினர்… இதனை கேட்ட திவியின் பெற்றோர் மனம் குளிர்ந்தது…

 

தங்கள் வளர்ப்பில் எந்த குறையுமில்லை என்று அனைவரும் அவரவர் மகிழ்ச்சியில் பங்கேடுத்துக் கொண்டு இருந்தனர்… பின்பு சுபகாரியம் முடியும் வேளையில் ஐயர் கார்த்தியும் திவியையும் அழைத்து ‘ பெரியவா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கோங்கோ ‘ என்று கூற இருவரும் தம்பதியராக நின்று தன் குடும்ப பெரியவர்கள் தாய்,  தந்தை,  மாமி, மாமனார் அனைவரிடமிருந்து ஆசிப் பெற்று வணங்கினார்…

 

அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க ஏனோ இருவர் மனதிலும் வெறுமை சூழ்ந்திருந்தது… எல்லா வேலையும் முடிந்து இரவு படுக்க வரும் வேளையில்… அவளுக்கு இடுப்பு வலி ஏற்பட்டது…. வலிதாங்க முடியாமல் முனகிக் கொண்டிருந்தாள்… கார்த்தியோ சத்தம் கேட்டு எழுந்து அவள் பக்கம் திரும்பினான்… அவன் என்னவாயிற்று என்று கேட்க அவளோ பதில் பேசாமலிருக்க விளக்கை போட்டவன் தான் கேட்டும் பதில் வராமலிருக்க அவளை பிடித்து தன் பக்கம் இழுத்தான் அவளோ அவன்  பிடித்து இழுத்ததில் வலி ஏற்பட்டு கத்தினாள் ‘ எனக்கு இடுப்பு வலிக்குது விடுங்க என்னை’ என்று கூற அவன் அவளின் செயலை தடுத்து அவள் இடையிலும் முதுகுப்புறத்திலும் மென்மையாக நீவி விட்டான்…..

 

அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு அமைதியாக விசும்பி அழுதாள்….

 

மறுநாள் காலையில் திவியின் பெற்றோர் விடை பெற்று சென்றனர்…. ஏனோ அவள் கண்கள் கலங்கியது தன் தாயின் நினைவில்… அவர்களோ  சம்மந்தி அடுத்த வாரம் பிரசவ தேதிக்கு முன்னே ‘வந்து அழைத்து செல்கிறோம் என்று கூற கார்த்தியின் முகம் இருண்டது…

 

அவனோ அவள் இங்கேயே இருக்கட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூற… கார்த்தியின் அன்னையோ அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் மனஸ்தாபம் தீர்ந்துவிட்டது என்று நினைத்து மகிழ்ந்தார்….

 

கார்த்தி இவ்வாறு கூறியதை வைத்து அவளோ தன் தாயைப் பார்த்து சரி என்று கூற… திவியை ஒரு மாதிரியாக பார்த்தவன்… பின்பு தன் அன்னையிடம் ஏதோ கூற வரும் முன்…கௌரியோ அவனை அடக்கி இதுதான் சாஸ்திரம் சம்பிரதாயம் என்று கூற அவனோ ‘ என்ன சாஸ்திரம் சம்பிரதாயமோ’ என்று மனதில் திட்டிக் கொண்டிருந்தான்…

 

தன் மனைவியை எரித்துவிடும் பார்வையை அவள் மீது வீசினான்….

 

நன்றி தோழமைகளே

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Dhivya Bharathi says:

    Friends indha episode pathi unga commentsa solunga friends!!!

error: Content is protected !!