Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

“பணம்”

மனத்தை மழுங்க வைத்து, மதியை மயங்க வைக்கும் – பணம்

வறியவர்களின் வயிற்றை வாிக்கோடுகளாய், வருடி செல்லும் வறுமையின் வலியை தீர்க்க தேவை – பணம்

பாவம் என்றும் பாராமல், பலரை பரதேசியாக பரிதவிக்க வைக்கும் – பணம்

பிச்சை பாத்திரத்திலும், பிறா் பிாியத்தால் பிரதிபலிக்கும் – பணம்

இறைவனிடம் கூட இருக்கிறது, இருட்டு அறைக்குள் – பணம்

பாசத்தை பங்குப்போட்டு, காசு இல்லை என்றால் கச்சிதமாய் கலட்டி விடும் – பணம்

விதி செய்த வேலையில், நிதி நிலையின் வீதியில் நிா்கதியாய் நிற்க வைத்த – பணம்

பாசத்தோடு, பகட்டாய் பலா் பழக்க தேவை – பணம்

கடைவீதியின் தெருவோரம், காலையில் தேடும் தேநீருக்குள் தேங்கி நிற்கும் – பணம்

ஏழையை ஏக்கச்சக்கமாய் ஏங்கி வைக்கும் – பணம்

பிறப்பின் தொடக்கத்தில் தொடங்கி, இறப்பின் இடையிலே இடைஞ்சலாக இருக்கும் – பணம்

இறந்தப்பின், நெற்றியில் ஒற்றை காசாய் காட்சி அளிக்கும் – பணம்

உறவுகளோடு ஒன்றி வாழ, தேவை உறைக்குள் ஒளிந்து இருக்கும் – பணம்

எங்கும் – பணம்,

எதற்கும் – பணம்,

எதிலும் –  பணம்,

எவா்க்கும்  -பணம் ,

பணம், பணம், பணம்,

பணம் உலகை படைத்த பொருளா,

இல்லை, உலகம் படைத்த பொருளா,

பணம் தேவை இல்லை, மனம் தேவை என்ற நிலை வரும், அன்று பணம் மட்டுமே  உங்கள் பக்கத்தில் இருக்கும், மனங்கள் இல்லை மறந்து விடாதே……..!

பணம் இல்லாத ஒவ்வொருவனுக்கும் நடைமாடும் – பிணம்

நானோ, நடந்து, நடந்து நடை தளா்ந்துப்போனேன் – தினம்

                 – மீனாக்ஷி சிவக்குமாா்




Comments are closed here.

error: Content is protected !!