Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி-32

அவளை தனிமையில் வைத்து பார்த்துக்கொள்வோம் என்று முடிவுடன் இருக்க… அச்சமயம் அவனுக்கு அழைப்பு வர அலைப்பேசியை எடுத்துக் கொண்டு நகர்ந்துச் சென்றான்… அவளோ அவனை பழிவாங்கும் பொருட்டு ஏதோ நினைவில் கூறிவிட்டோம் ஆனால் எப்படி அவனைவிட்டு  இருப்பது என்று மனம் சோர்ந்தாள்…

 

கார்த்திக்கு  வந்த அழைப்பில்  இரு விஷயங்கள் காத்திருந்தது ஒன்று சொன்ன தேதி படி அரசாங்க டென்டர் நல்ல முறையில் முடிந்து கொடுத்ததால் அவன் கம்பேனிக்கு  லாபம் மற்றும் நல்ல பெயர் கிடைத்தது

 

பின்பு கூறிய செய்தியால் அவன் முகம் இருண்டது… ஏனெனில் ரோஷன் பரோலில் வெளியில் வந்துவிட்டான் என்றும் கார்த்தியை கொல்ல ஆள் ஏற்பாடு செய்திருப்பதாகவும் தகவல் கிடைத்தது…

 

‘தாங்ஸ் பார் யூவர் இன்பர்மேஷன்’ என்று கூறி தொடர்பை துண்டித்தான்… இரவின் தனிமையில் தங்கள் அறைக்கு வந்தபின் அவளிடம் மிகுந்த கோபத்துடன் ‘ என்ன பழிவாங்குறியா’ என்று அவளை பார்த்து கேட்க அவளோ ஒன்றும் பேசாமல் சென்று படுத்துவிட்டாள்…

 

அவனும் மறுபக்கம் சென்று படுத்துவிட்டான் அவனோ இவளை இப்படியே விட்டால் இவள் போக்கிலே சென்று விடுவாள் என முடிவுடன்… அவளை நெருங்கி அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்… அவள் சற்று நேரம் மூச்சு விட மறந்தவளாக அப்படியே அசையாமல் இருந்தாள்….

 

அவனோ அவளை அவன் புறம் திருப்பி அவளை தன் முகம் காணச் செய்தான்… பின்பு…

 

‘ குட்டிமா சாரிடா என்ன மன்னிச்சிரு… நான் உன்கிட்ட அப்படி நடந்திருக்க கூடாது… நீ உன்னோட மிஸ்டேக்க ரியலைஸ் பண்ணணும் தான்’ அப்படி செய்தேன் என்று ஒரு நீண்ட விளக்கவுரையை அவளிடம் கூறினான்…

 

‘என்ன எனக்கு தெரியாம இவ்ளோ வேலையா பாத்திங்க’ என்று தன் வீம்பை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு அவன் இவ்ளோ தூரம் இறங்கி வருகையில் தான் முறுக்கிக் கொள்வது தப்பாய் பட அவனிடம் அவள் தன் மௌன யுத்தத்தை உடைத்தெறிந்தாள்…

 

அவனோ ‘ குட்டிமா என்ன. மன்னிச்சிட்டியா என்று அவளிடம் கேட்க அவளோ நான் எதுக்கு உங்கள மன்னிக்கனும் … நீங்க என்ன தப்பு பண்ணிங்க …. பண்ணதெல்லாம் நான் என்று கூறி சமாதானம் அடைந்தார்கள்…

 

 

கடிகாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தான்… அப்பொழுது தான் விளங்கியது அது கனவு என்று… ‘ சே கனவா… பச் என்ன இது… நான் நிஜம்னு நினைச்சேன் ‘ என்று கூறிவிட்டு அருகில் அழகாக உறங்கும் தன் மனைவியைப் பார்த்தான்…

 

என்ன தோன்றியதோ அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டு அவனை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்பதுப் போல் அவன் அணைப்பு இறுகியது… அவளுக்கோ மூச்சு முட்டுவதுப் போல் உணர… தூக்கம் கலைந்து எழுந்தால் இல்லை, இல்லை விழித்தாள்..

 

அவன் ஏதோ கூறியதுப் போல் தோன்ற அசையாமல் கூர்ந்துக் கேட்டாள்… ‘ குட்டிமா நீயே விலகி போனாலும் நான் உன்ன விடமாட்டேன்… நீ எவ்ளோ தூரம் போறியோ போ… நானும் சலைக்காம உன்ன தொந்தரவு பண்ணிக்கிட்டே தான் இருப்பேன்… இன்னொரு விஷயம்… நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சிக் கூட பார்க்க முடியாது குட்டிமா… என் வாழ்நாள் முழுமைக்கும் எனக்கும் நீ வேணும்… ஐ லவ் யூ டி குட்டிமா’ என்று அவள் நெற்றியில் இதழ் பதித்து அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான்…

 

அவன் உறங்கிவிட்டான்… அவள் தூக்கமோ பறிபோனது தன் கணவன் கூறிய வார்த்தைகளை கேட்டு தன் இதயத்தில் இரத்தம் வடிவதுப்போல் உணர்ந்தாள்… தன் இருகைகளைக் கொண்டு வாயருகில் வைத்து தன் அழு குரல் வெளியே கேட்காதவாரு அழுதாள்….

 

அவனோ சற்று அசைய அவள் இதயம் ஒரு நிமிடம் படுவேகமாக அடித்தது…. பின்பு தன்னை சமாதானம் செய்துக் கொண்டு உறங்கினாள், இல்லை முயன்றாள்..

 

 

காலையில் எழுந்து குளித்து முடித்து காபி கோப்பையுடன் அவனை எழுப்பினாள்… இதில் எல்லாம் அவளை குறைச் சொல்ல முடியாது கணவனுக்காக தன்னை வருத்திக் கொள்வாளே தவிர அவன் மீது சிறு கோபத்தை கூட அவள் இதுநாள் வரையிலும் கார்த்தி மீதோ இல்லை தன் புகுந்த வீட்டாரின் மீதோ ஒருநாளேனும் காட்டியதில்லை….

 

அவள் சுயநலத்தோடு நடந்ததுமில்லை… இது கார்த்தியும் நன்கு அறிந்ததே..கணவனுக்கு நல்ல மனைவியாக இதுநாள் வரையிலும் எந்த குறையும் வைத்ததில்லை… அதே நேரம் தேவை தவிர்த்து அவனிடம் வேறு பேசுவதில்லை… கார்த்தியின் மனம் சிறிது சமாதானம் அடைந்தது… முன்புக்கு இது பரவாயில்லையென்றாலும் … அவனது மனமோ சிறிதளவு உருத்திக் கொண்டிருந்தது….

நன்றாக மேடிட்டிருந்த வயிறுடன் தலைகுளித்து முடியை அழகாக விரித்துவிட்டு நடுவில் கிளிப்போட்டு செந்தாமரை நிறத்தில் புடவை அணிந்து நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து மகாலட்சுமிப் போல் காட்சியளித்தாள்….

அவன் கண்கள் திறந்து அழகாக தேர் அசைந்து வருவதுப்போல் கையில் கோப்பையுடன் வருபவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்( பின்ன என்ன செய்வான் மிட்டாய் கடையைப் பார்பதுப்போல் வாயை பிளந்துக் கொண்டு பார்த்தான்)….

காலையிலே அவன் கண்களுக்கு விருந்தாக காட்சியளித்தவளை இழுத்து அணைக்க பரபரவென்று துடித்துக் கொண்டிருந்தான்….

நன்றி தோழமைகளே

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி
4 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vats says:

  Paavam ava


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks fr ur comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Super


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thank u fr ur comments sir….

error: Content is protected !!