Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

ப்ரியசகி 35

கௌரி மற்றும் அனைவரின் கவனமும் செவிலியர் கையில் இருக்கும் சிசுவிடம் திரும்ப… அதனை ஆவலோடு எதிர் கொண்டு அருகில் சென்றனர்…

 

செவிலியர் பெண் குழந்தை என்று கூறி அவர்களிடம் கொடுத்து பார்த்துவிட்டு தருமாறு கூறினார்… ஏனெனில் எடை சற்றுக் குறைவாக காணப்பட குழந்தையை இன்குபெட்டரில் வைக்கு வேண்டும் என்று கூறிச் சென்றார்… அழகாக கண்கள் சிமிட்டி ரோஜா பூ நிறத்தில் தேகங்கள் பளபளக்க… சிப்பி இமைகளை சிமிட்டி கவிதைப் படைத்துக் கொண்டிருந்தாள் அவர்களின் செல்ல மகள்.. கார்த்தியின் புதல்வி… அவனுக்கு தந்தை என்னும் அந்தஸ்த்தை தந்தவள்…

 

அழகாக பூச்செண்டுப் போன்ற அவளை கௌரி தாங்கி கொண்டு கார்த்தியிடம் வந்து ‘ டேய் குழந்தையப் பாருடா’ என்று கூற அவனோ… ‘ வேண்டாம் அம்மா’ என்று கூற…’ என்னடா இப்படிப் பேசுற’ என்று அவர் அதிர… ‘அம்மா எல்லார் கிட்டையும் நான் ஒரு பெரிய விஷயத்த மறைச்சிட்டேன்’ என்று அவன் கூற… மொத்த குடும்பமுமே அவனை திகிலுடன் பார்க்க…

 

குழந்தையை அவர் கையில் தாங்கிக் கொண்டு அவனைப் பார்த்து கேள்வி கேட்டார் ‘என்னடா கார்த்தி… என்னடா சொல்ற ஒன்னும் புரியலடா… டேய் ஏதாவது உலறாதடா… இப்பதான் டாக்டர் தாயும் சேயும் நலம்னு சொல்லிட்டு போறாங்க நீ என்னடா ஏதோ புதுசா சொல்ற… அவளுக்கு ஒன்னுமில்லை நல்லாதான இருக்கா…

 

இல்லமா அவ நல்லாயில்லை… ஒவ்வொரு நாளும் செத்துப் பிழைக்கிறா… எல்லாரும் கொஞ்சம் மனச தேத்திக்கோங்க’ என்று அவன் கூறும் போதே… ஏதோ விபரிதமாக உணர அனைவரின் பார்வையும் அவன் மீதே நிலைத்து நின்றது…

 

‘ ஆமா அவளுக்கு மூளைல (Hemorrhage) இருக்கு… உங்களுக்கு புரியுர மாதிரி சொல்லனும்னா கிளாடட்’ என்று கூற அனைவரின் அதிர்ச்சிக்கு அளவேயில்லை… கௌரியோ இதையேன்டா எங்ககிட்டிருந்து மறைச்சிங்க ‘ என்று கேட்டார்…

 

‘அவ என்கிட்டையே சொல்லலம்மா… நானாதான் கண்டுபிடிச்சு கேட்டேன்… அதனாலதான் எங்களுக்குள்ள கொஞ்சம் பேச்சு வார்த்தையே இல்லை’ என்று முடித்தான்… மகளின் கதையை அறிந்த தாய் மனமோ பதறியது… என்ன மாப்பிள்ளை சொல்றிங்க என்று கேட்டவர் மயக்கம் போடாத குறைத்தான்…

 

‘நான் அவகிட்ட கேட்டதுக்கு அவ முட்டாள் தனமான காரணத்தை சொன்னா… அவள யாரும் நோயாளியா பார்க்ககூடாதாம்… அதனால தான் அவ யார் கிட்டையும் சொல்லி எல்லாரோட சந்தோஷத்த கெடுக்க விரும்பலனு சொன்னா’ என்று அவன் கூறி முடிக்கும் முன்… அவனோ ‘ மாமா ஹாட் பேஷன்ட் அப்படி இப்படி அவ ஏதோ ரிசன் சொல்றா… இதுலாம் சரிபட்டு வராதுனு தான் நான் அவளுக்கும் உங்க யாருக்கும் தெரியாம அமெரிக்கன் நியுரோடிக் ஸ்பேஷலிஸ்ட் டாக்டர்.டேனியல் பிரான்ஸிஸ் கிட்ட பேசினேன்… அவளோட நிலைமை இன்னும் கிரிட்டிகலா போக கூடாதுனா  உடனே சர்ஜரி ஏற்பாடு பண்ண சொல்லிற்காங்க…

 

அதனால உடனடியா  சர்ஜரி பண்ணினாதான்… அவ… அவள உயிரோட பார்க்க முடியும்னு டாக்டர் சொல்லிட்டாருமா’ … என்று அவன் சுவர் புறம் திரும்பி நின்றுக் கொண்டு கதறி அழ… அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்…

 

கௌரியோ ‘ஏது வேணாலும் இருக்கட்டும்டா… அதுக்கு குழந்தையோட முகத்தக் கூட பார்க்காம இருக்காத கார்த்தி கொஞ்சம் பாருடா’ என்று அவர் கூற… அவனோ அம்மா என்னை இதுக்குமேல கம்பல் பண்ணாதிங்க… அவ பிரைன் ஆப்ரேஷன் நல்லபடியா முடிச்சி… அவ என்கிட்ட ஒரு வார்த்தையாவது பேசனும் அதுக்குப் பிறகு எதுவாயிருந்தாலும் நான் செய்றேன் அதுவரைக்கும் என்னை கம்பல் பண்ணாதிங்க ப்ளீஸ்’ என்று மறுத்துவிட அவரோ செய்வது அறியாமல் நின்றுக் கொண்டிருக்க… கௌரியிடமிருந்து குழந்தையை செவிலிப் பெண் வாங்கிக் கொண்டு சென்றார்…

 

அவனது மனமும் அவனது கண்களும் செவிலியப் பெண் எடுத்துச் செல்லும் தன் குழந்தை மீதே இருக்க… தனது இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்து… ஓரமாக போடப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்ந்துக் கொண்டான்… லட்சுமியோ கடவுளிடம் வேண்டுதல் விடுத்தார்… என்ன செய்வது எவ்வளவு மனிதர்கள் இருந்து  ஆறுதல் அளித்தாலும்… கடவுளிடம் முறையிட்ட பின்பே மனதுக்கு ஆறுதல் கிடைப்பது மனிதனின் குண இயல்பு… அனைவரும் மனமுறுக இறைவனை பிராத்தித்து கொண்டனர்….

 

மருத்துவரோ குழந்தையிடம் ஒருவர் இருக்குமாறு கூற லட்சுமியும் கார்த்தியின் தாயார் கௌரியும் அப்பொறுப்பினை ஏற்றுக் கொள்ள… இரண்டு நாள் அப்சர்வேஷனில் இருந்தவளை அனஸ்திசியா கொடுத்து மூளை அறுவை சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்… அவளது கண்கள்  கணவனை  தேடி கண்டுக் கொண்டது..

 

அங்கு ஒரமாக கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்தவனைக் கண்டவள் அவனை அழைத்தாள்… அவனோ நொடியும் தாமதிக்காமல் அவளின் அருகில் சென்றான்… அவளோ ‘ மாமா குழந்தை எட குறைவா இருக்கா நீங்க பாத்திங்களா’ என்று கேட்க… அவனோ இல்ல ‘ குட்டிமா’ என்று கூற… ஏன் என்னாச்சி… ஏன் பாக்கல ‘ மாமா இன்னும் என் மேல உங்களுக்கு கோபம் போகலையா’ என்று கேட்க… அவனோ அப்படிலாம் இல்லடா

 

 

நீ… நீ…. நல்லப்படியா ஆப்ரேஷன் முடிச்சிட்டு வாடா குட்டிமா அப்புறம் பார்த்துக்கலாம்… மாமா  சப்போஸ் எனக்கு ஏதாவது ஆகிடுச்சினா’ என்று அவள் முடிக்கும் முன்… அவள் வாயை தன் கைக் கொண்டு முடியவன்… ‘ மாமா என்ன கொஞ்சம் பேச விடுங்க அப்புறம் பேச முடியாம போய்ற போது’ என்று கூற… ‘சே ஏன்டி என்ன இப்படி வார்த்தையால கொல்ற’ என்று அவன் ஆதங்கத்தோடும்  கண்ணீரோடும் அவன் கூற… நம்ப குழந்தைய பாத்திங்களா யாரு மாதிரி இருக்கா’ என்று அவனிடம் கேட்க… அவனோ குட்டிமா இங்க பாரு நீ..நீ எதுவும் பேச வேண்டாம் சரியா… எனக்கு நீ தான்டா முதல் குழந்தை அப்புறம் தான் நம்ப அம்மு…. எனக்கு முதலும் நீதான் முடிவும் நீதான் இத மட்டும் நல்லா புரிஞ்சிக்கோ…

 

‘குட்டிமா நல்லபடியா ஆப்ரேஷன் முடிச்சிட்டு வா உனக்காக, உனக்கே உனக்குனு உன்னோட கார்த்தி அதாவுது உன்னோட’ மாமா ‘ அந்த ஒத்த வார்த்தைகாக என்னோட ஜீவன் காத்திருக்கும்… என்ன ஏமாத்திடாம என்னோடு வந்துரு டி… என்று கடைசி வார்த்தை கூறி முடிக்கும் முன் அவன் உடைந்து அழ… அவளோ தனக்கு ஆறுதல் தேடி அவனிடம் வந்தாள்… அவன் குழந்தையாக மாறி போய் அவளை கட்டிக் கொண்டு தேம்பி அழ… அவன் தன் முன் இப்படி அழுவது முதல் முறையாக பார்க்க… அவன் அழுவதை தாங்க முடியாமல் ‘ மாமா இங்க பாருங்க… என்ன பாருங்க… மாமா’ என்று கூறி அவன் தலையை நிமிர்த்தி ‘ மாமா என்னோட முழு பலமே நீங்கத்தான் நீங்களே கண் கலங்கினா… என்னோட நம்பிக்கை முழுசும் ஆட்டங்காணுது மாமா’ அவள் இவ்வாறு கூறியபின்… தன் முகத்தை அழுந்து துடைத்து பின் அவளை நேருக்கு நேர் சந்தித்து…

 

‘ இல்ல குட்டிமா…. நா…நான் அழல… நான் உனக்காக’ காத்திருப்பேன் குட்டிமா என்று கூறி அவள் நெற்றியில் முத்தம் வைத்து அவளுக்கு தைரியமூட்டினான்…

 

என்னத்தான் அவளுக்கு அவன் ஆறுதல் அளித்தாலும்… அவனுள் இன்னும் பயம் தெளியாமலிருந்தது…

 

சிஃப் நியூரோடிக்  ஸ்பேஷலிஸ்ட் டாக்டர் டேனியல் வந்துவிட… மூளை அறுவை சிகிச்சைக்காண ஏற்பாடு தொடங்கியது… நான்கு மணி நேர போராட்டத்திற்கு பின்பு அறுவை  சிகிச்சை முடிந்து… மருத்துவர் கூறும் செய்திக்காக அனைவரும் காத்திருக்க… மருத்துவர் வெளியில் வந்த நேரம் கார்த்தி அங்கு இல்லாததை யாரும் கவனிக்கவில்லை…

 

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர் நோஸ் பீசையும் தலையில் மாற்றிருந்த ஹேட் க்லௌஸ்சையும் கழற்றிய வண்ணம் அனைவரையும் பார்த்தார்… ‘ வேர் இஸ் ஹேர் ஹஸ்பண்ட்’ என்று மருத்துவர் கேட்க அனைவரின் முகத்திலும் கலவரம் தோன்ற… அதே திகிலுடன் மருத்துவரைப் பார்த்தனர்… ‘ டாக்டர் … என்ன… என்னாச்சி… பேஷன்ட் நல்லா இருக்கங்களா’ என்று கேட்க அவரோ சிறு இடைவேளைவிட்டு ‘ எஸ் ஷிஸ் ஆல்ரைட்’ என்று கூறியபின் தான் அவர்களுள் மூச்சே வந்தது…

 

மருத்துவரோ ‘ பட்  ஷி வான்ட் டூ டேக் கம்ப்லீட் ரெஸ்ட்… டோசேஜ் அதிகமா கொடுத்து இருக்கோம் சோ ஒரு மூனு மணி நேரமாகும் கண்விழிக்க அதுக்கப்புறம் நீங்க போய் பார்க்கலாம் என்று கூறிவிட்டு சென்றார்… மருத்துவரின் வார்த்தையில் மகிழ்ந்தவர்கள் ‘எல்லா கடவுளுக்கும் நன்றி தெரிவித்த வண்ணமிருக்க மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர்… பின்பு எல்லோரும் ஒருவாறு பழைய மனநிலைக்கு திரும்ப அப்பொழுது தான் கார்த்தி அங்கு இல்லாததை அனைவரும் உணர… எங்கு சென்றிருப்பான் என்று ஆளுக்கு ஒரு திசையில் தேடினர்… அனுவும் ராஜும் ஒருபுறம்  சென்று பார்க்க… லட்சுமியோ குழந்தையின் அருகிலிருக்க… குமரன் ஒரு பக்கம் தேட… கௌரியும் சுந்தரமும் மறு பக்கம் தேடினர்… பின்பு அவர்களின் தேடல் வீணாகாமல் கார்த்தியை கண்டுப்பிடித்தனர்….

 

அவனோ மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று… தன் மனைவிக்காக பிராத்தித்துக் கொண்டிருந்தான்… தன் மகனை பார்த்த மாத்திரத்தில் கௌரி அவனை அழைக்க… கௌரியின் செயலை தடுத்த சுந்தரம் தன் மனைவியிடம் ‘ விடு கௌரிமா… அவன் அழட்டும்… மனசார வேண்டட்டும்… அப்படியாவுது அவனோட பிடிவாதம் கொஞ்சமாவுது’ கண்ணீரில் கரையட்டும் என்று விட்டுச் சென்றார்…

 

‘ டேய் இந்த கடவுள் சாமி எல்லாம் ஒரு மூட நம்பிக்கை தான்… தன்னோட உழைப்ப மட்டும் நம்பி மேல வரனும்… அத விட்டுட்டு சாமியாம் கடவுளாம்’ என்று கூறியவன் … இன்று தன் மனைவிக்காக கடவுளிடம் வேண்டிகொண்டான், அவள் மீது அவன் வைத்திருக்கும் காதலை கடவுளின் பாதத்தில் காணிக்கையாய் வைத்து முறையிட்டுக் கொண்டிருந்தான்…

 

‘காதல்’ என்பது ஒரு உயிர் அதனை மனதால் உணர்ந்தவர்கள் தங்கள் காதலை திருமணம் என்னும் பந்தத்தில் முடிப்பதில்லை அதையும் தாண்டி, நல்ல புரிதல், விட்டுக் கொடுத்தல், அவளுக்காக அவனின் விருப்பத்தையும் அவனுக்காக அவளின் விருப்பத்தையும் விட்டுக் கொடுத்து வளரும் காதல், பிணைப்பு, அன்பு ஆசா பாசங்கள் இவைகளே ‘ காதல் ‘ என்னும் சொல்லுக்கு முழு அர்த்தத்தை உணர்த்துகிறது…

 

‘ ஐசியூ’ வார்டிலிருந்து மாற்றி பொது அறைக்கு மாற்றப்பட்டவள் மருந்தின் வீரியமும்… மயக்கமும் தெளிய எழுந்தாள்… அவள் மயக்கத்திலிருந்து தெளிந்துவிட்டால் என்று செவிலிய பெண் கூற அனைவரும் சென்று பார்த்தனர்… அவள் கண்கள் மெல்ல விரிந்தது… அவளது கண்களோ தன் கணவனை அலச… மிக சிரமத்துடன் கௌரியை அழைத்தவள் ‘ அத்தை  அவரு எங்க ‘  என்று திக்கி திணரி கேட்டாள் அவரோ வெளில இருக்காமா என்று கூற அவர கூப்பிடுங்க என்று அவரை அனுப்பினாள் அவனை அழைத்து வர…

 

கார்த்தி உள்ளே நுழைந்த வேலை அவர்களுக்கு தனிமை கொடுத்து அனைவரும் விலகி சென்றனர்… அவனது கண்களோ தலை முதல் கால் வரை அவனது பார்வை அவளை வருட… அவளும் தன் இமைகளை தாழ்த்தாது… தன் கணவனின் மௌனமான கேள்விக்கு தன் பார்வையால் அவனுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாள்… அவள் அருகில் வந்தவன் அறுவை சிகிச்சை நடந்து முடித்து கட்டுப் போட்டிருக்கும் தலையை வருடிக் கொடுத்த வண்ணம் அவள் அருகிலிருக்கும் நாற்காலியில் அமர போக… அவள் அவனை தடுத்து… தன் பக்கத்தில் அமருமாறு வேண்டினாள்… அவனும் அவள் சொல்வதை செவ்வனே செய்தான்….

 

‘மாமா’ என்று அவனை அழைக்க அவனும் அவனுள் புது இரத்தம் பாய்வதுப் போல் உணர்ந்தான் அவளது கையை எடுத்து தன் கைகளுக்குள் பொருத்திக் கொண்டவன்… ஊசி குற்றிருக்கும் அவள் கையில் முத்தமிட்டு ‘ வலிக்குதா குட்டிமா’ என்று கேட்க… அவளும் ஆமாம் என்று தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்… மீண்டும் அவளது கையை விலக்கி அவள் தலையில் போடப் பட்டிருக்கும் கட்டைக் கண்டவனின் இதயத்தில் வலித்தது… ரொம்ப வலிக்குதா குட்டிமா’ என அதற்கும் ஆமாம் என்று கூற … அவன் முகத்தை பாவமாக வைத்துக் கொள்ள… அவளோ எனக்கு இதுலாம் வலியா இல்லை… இங்கத்தான் வலி அதிகமா இருக்கு என்று தன் இதயத்தை காண்பிக்க ‘ குட்டிமா’ என்று அவன் குழம்பிப் போக… ‘டாக்டரை கூப்பிடவா ‘ என்று அவன் எழ அவளோ அவனைக் கண்டு புன்னைகிக்க… அதெல்லாம் இல்லை நீங்க என்கிட்ட பேசாம , என்ன ஒதுக்கி வச்சப்போ நான் ரொம்ப வேதனைப்பட்டேன் எப்படி தெரியுமா அழுதேன்… எனக்கு காய்ச்சல் வந்ததுக்கு அதான் காரணம்’ என்று அவனை குற்றம் சாட்டினாள்…

 

 

‘குட்டிமா நான் கூட பயந்துட்டேன் நீ வலிக்குதுன்னு சொன்னப்போ… ‘டேய் கார்த்தி ஏன்டா என்னைய பேஷன்ட் மாதிரி பாக்குற… கொன்றுவேன் உன்ன’ என்று அவள் முதல் முறையாக அவனை அப்படி அழைத்ததைக் கண்டு அவனோ எழுந்து அவள் தலையை ஆராய… ‘ மாமா என்ன பாக்குறிங்க என்று கேட்க… இல்ல குட்டிமா சர்ஜரி தப்பா பண்ணிட்டாங்கனு நினைக்கிறேன் நான் போய் டாக்டர கூட்டிட்டு வரவா என்று  கேட்க… அவளோ சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தாள்… அவளது சிரிப்பை ஆசையாக பார்த்தவன்… ‘ ஏய் ஏன்டி சிரிக்கிற… அப்போ கன்பார்மா நட்டு கழண்றிச்சு போல’ என்று அவனும் சற்று சூழ்நிலையை மாற்ற அவளுடன் பேச இறங்கினான்…

 

‘ ஏய் பொறுமையா சிரி ரெண்டு ஆப்ரேஷன் பண்ணிற்காங்க ‘ என்று கூறினான்… சரி சரி நான் சிரிக்கல… எந்த கேப்ல இந்த வேலையெல்லாம் பாத்திங்க… எனக்கே தெரியாம’ என்று அவள் கேட்க… நீ கூடத்தான் எனக்கு தெரியாம எவ்ளோ பெரிய வேலைய பாத்த’ என்று அவன் கூற அவள் முகம் இருண்டது… அவனோ அவள் முகம் மாறுதலை கண்டவன் ‘ குட்டிமா போனத விடுடா… பேசாத… ப்ளீஸ்’ என்று வேண்ட… அவளோ ‘ மாமா நான் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறேனா ‘ என்று அவள் ஒருமாதிரி கேட்க…

 

‘ குட்டிமா என்னைக்குமே நான் உன்ன சுமையா நினைச்சது இல்லடா… இனியும் நினைக்க மாட்டேன்… நீ எனக்கு கெடச்ச வரம்டா எனக்கே எனக்கான தேவதை… என்ன எப்பவும் தொல்லை பண்ணும் என்னோட அமைதியான ராட்சசி… இன்னும் உண்மைய சொல்ல போனா நீ வந்த பிறகுத்தான் எனக்கு வாழ்க்கைனா என்ன அன்பு, காதல் எல்லாம் உன்ன பாத்த பிறகு தான் வந்துச்சு… தொழிலில் மட்டும் முன்னேறுவது வெற்றி இல்லடா… வாழ்க்கையில முன்னேறுவது தான் உண்மையான வெற்றி…

 

‘ மாமா நான் நிறைய விஷயம் உங்ககிட்ட மறச்சிருக்கேன் என அவனின் உயிர் காதலி ஆருயிர் மனைவி தன் வாய்யை திறந்தாள்… அவனுக்கு எல்லாம் தெரியும் ஆனாலும் தன் மனைவி வாயால் அப்பதில் வர வேண்டுமென்று காத்திருந்தான் … அவளோ நா… நான் மையூரிகிட்ட உங்கள கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன் ‘ என்று கூற… அவனோ தெரியும் என்று ஆமோதித்தான் … அவளோ எப்படி என்று  கேட்க… எல்லாம் நானறிவேன் என்று முழுக் கதையையும் கூறி முடித்தான்…

 

‘ மாமா நான் கேட்டதுக்கு  நீங்க இன்னும் பதில் சொல்லவேயில்ல… என்ன பதிலென்று அவன் கேட்க… நீங்க நான் டெலிவரி பேயின்ல இருக்கும் போது ரோஷன்னு ஏதோ சொன்னிங்க அப்புறம் தலையெல்லாம் கலைஞ்சி என்னாச்சி என்று கேட்க… அதையும் அவன் கூறி முடிக்கும் முன் அவளின் மனநிலையை அவளால் கணக்கிட முடியவில்லை… அவள் உடல் சற்று நடுங்கியது என்ன சொல்றிங்க …  ‘குட்டிமா ரிலாக்ஸ்…. அதான் ஒன்னும் ஆகலைல… விடுடா’ என்று சமாதானம் கூறினாான்..

 

பின்பு கதவை திறந்துக் கொண்டு லட்சுமி குழந்தையோடு உள்ளே வர… இருவருக்கும் அப்பொழுது தான் குழந்தையின் நியாபகம் வர அவளது பார்வை தன் குழந்தைமீது பட்டது … அவளை ஆவலுடன் வாங்கினாள்… கையில் வாங்கியவள் ‘ மாமா உங்க பொண்ணு அப்படியே உங்களை மாதிரி’ என்று கூற… பாவம் அவனே இப்பொழுது தான் தன் மகளை காண்கிறான் அப்படியா ‘ குட்டிமா ‘ என்று வினவ… அவளோ நீங்க குழந்தையை பாக்கவேயில்லையா’ என்று வேதனையுடன் கேட்க… இல்லடா நீ எழுந்து ஒரு வார்த்தையாவது என்கிட்ட பேசுனாதான் குழந்தைய பார்ப்பேனு சொல்லிட்டேன் என்று கூறினான்… அவனின் அன்பில் அவனின் காதலில் அவள் மடிந்து சுகமாக அந்த மழையில் நனைந்தாள்…. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது….

 

தன் மனைவியின் கையில் உள்ள தன் மகளை முதன் முதலில் தன் கையில் வாங்கினான்..இனம் புரியாத மகிழ்ச்சி… அவனுள்ளே புதிய பரவசம்… அப்பூச்செண்டை வாங்கியவன் அதற்கு முத்த மழை பொழிந்தான்

 

நாட்கள் உருண்டோடின மெல்ல… மெல்ல தேறி வந்தாள்… கார்த்தியோ அவளை கைத் தாங்கலாக பிடித்து நடக்க வைத்தான்…. தன் மனைவிக்கு தந்தையாக , தாயாக , தோழனாக , காதலனாக , கணவனாக  எல்லாமுமாக இருந்து அவளை பாதுகாத்தான்… நாட்கள் மாதங்களாக உருண்டோடியது அவள் தலையில் போடப்பட்டிருந்த கட்டு அவிழ்க்கப் பட்டது… அவளோ வெறும் தலையாக காணப்பட முகத்தை உர்றேன்று வைத்துக் கொண்டாள்…. அவனோ தன் மனைவியின் முக மாற்றத்தை கண்டவன்…. என்ன என்பதுப் போல் பார்க்க… அவனுக்கு பதில் அவளின் தலையசைப்பு மட்டுமே பதிலாக வந்தது…

 

அன்று இரவு  குழந்தையுடன் தங்களின் அறைக்கு வந்தாள்… கார்த்தி கணினியில் வேலைச் செய்துக் கொண்டிருந்தான்… குழந்தைக்கு பால் புகட்டி விட்டு… அருகிலிருக்கும் தொட்டியில் குழந்தையை கிடத்தினாள்… குழந்தையை தூங்க வைத்தவள்… தன் இடத்திற்கு வந்து சுருண்டு அமைதியாக படுத்தாள்… கார்த்தியோ கணினியில் வேலை செய்துக் கொண்டிருந்தாலும்… 360 டிகிரி அவன் பார்வை… தன் மனைவி உள்ளே வந்தது முதல்… தன்னைக் கண்டுக்கொள்ளாது படுத்தது வரை கவனித்தவன்… அவள் இன்னும் தூங்கவில்லை என்று உணர்ந்து … கணினியை அணைத்து வைத்தவன்… தன் மனைவி பக்கம் இருக்கும் தன் குழந்தையை ஒரு முறை எட்டி பார்த்துவிட்டு திருப்தி அடைந்தவனாக தன் மகளை பார்த்துவிட்டு  அவளின் அழகை கண்களில் நிரப்பிக் கொண்டவன்… அவளது அழகிற்கும்… அவனுக்கு தந்தை என்கிற ஸ்தானத்தையும்… அவனது உயிரில்… அவனது இதயத்திலும் என்றும் நீங்காமல் வீட்றிருக்கும்… தன் மனயாளை நாடினான்… அவள் பக்கம் சென்று படுத்துக் கொண்டவன்…. அவளை நெருங்கி  தன்னோடு இறுக்கிக் கொண்டான்… அவள் அசையாமல் படுத்திருக்கவும்… அவளை தன் புறம் திருப்பினான்…

 

தன் புறம் திருப்பியவன் அவளது கண்ணீரைக் கண்டான்… கண்டவன் பதறியடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்து ‘ அவளையும் அமரச் செய்து குட்டிமா ஏன்டா அழற… இப்பத்தான் எல்லா பிரச்சனையும் முடிஞ்சிருக்கு’ பனிமூட்டம் விலகியதுப் போல் வாழ்க்கை இயல்பு நிலைக்கு மாறியிருக்கு.. மீண்டும் என்ன என்று அவன் கேள்வி கேட்க…

அவளோ தாமதிக்காமல் தன் கையை மட்டும் மேலே தூக்கி அவளது தலையை அவள் சுட்டிக் காட்டினால்… அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை அவனோ ‘ ஏன்னடா வலிக்குதா’ என்று கேட்க…

‘ மாமா’ என்று அவள் சிணுங்கலாக அவனை அழைக்க  ‘தலைல முடி’ …. என்று அவள் கூற வருவதை அனுமானித்தவன்… சிறு புன்னகையுடன் அவளை பார்த்திருந்தவன் சரி அதுக்கு என்ன இப்போ’… என்று அவன் சாதரணமாக கேட்க… அவளோ எனக்கு முடி இல்லாம பிடிக்கல… என்று சிறுக்குழந்தைப் போல் அவனிடம் அவள் முறையிட ‘ ஏய் லூசு  குட்டிமா இதுக்கா அழுத… இன்னும் கொஞ்ச நாள்ல வளர்ந்துறப் போது… இதுக்கு போய் யாராவது அழு வாங்களா’ என்று கூறி அவள் கண்ணீரை துடைத்தவன்… அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்… அவளோ அவன் நெஞ்சிலிருந்து தன் முகத்தை நிமிர்த்தி ‘ உங்களுக்கு கஷ்டமா இல்லையா என்று கேட்க… அவனோ இதுல கஷ்டப்பட என்னயிருக்கு ‘ குட்டிமா’ என்று அவன் முடிக்க ‘ அதுயில்ல மாமா எனக்கு முடியில்ல… நா..நான் அழகாயில்ல’ என்று ஒருவாரு தன் தயக்கத்தை அவனிடம் பகிர்ந்துக் கொண்டாள்…

 

அவனோ அவளைப் பார்த்து சிரித்தான் குட்டிமா அழகு என்பது நம்ப பாக்குற பார்வைத்தான்டா…  அழக பார்த்து வர காதல்  உண்மையான காதல் இல்லடா… தோல் சுருங்கின பிறகு அழகு போயிடும் … அந்த மாதிரி காதல்ல உயிர் இருக்காது … உயிர் இல்லாத வாழ்க்கை வாழ்றது நல்லா இருக்காதுடா…  உன் மீதான என்னோட காதல் மனச பாத்து வந்ததுடா’ என்று கூறி அவளை நேரில் சந்திக்கும் முன் அவளது மீதான காதலை அவன் இன்று கூற அவள் கண்களை விரித்து அவனைப் பார்த்தாள்…என்ன புரிஞ்சிதா இந்த மரமண்டைக்கு என்று கூறி அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்…

 

ஆஆஆ… வலிக்குது ‘ என்று கூறி மூக்கை தேய்த்துக் கொண்டவள்… அவனைப் பார்த்து அப்போ என்ன உங்களுக்கு அவ்ளோ பிடிக்குமா’ என்று சந்தேகமாக கேட்க… அதனை நிருபிக்கும் பொருட்டு அறை முழுவதையும் கண்களால் ஒரு அலசு அலசியவன்… அவளை இழுத்து அவளின் இதழில் அழுத்தமாய் முத்தம் வைத்தான்… அப்பா என்ன வேகம்… என்ன குட்டிமா டவுட் கிளியரா … இன்னும் டவுட் இருக்க என்று கேட்க… சாமி போதும் என்பதுப் போல் கையெடுத்து கும்பிட… அவன் பலமாக சிரித்தான்…

 

நன்றி தோழமைகளே

ப்ரியசகி தொடரும்

திவ்யபாரதி
Comments are closed here.