Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


Recent Updates

ப்ரியசகி-36 (நிறைவு பகுதி)

‘ மாமா இன்னொரு டவுட்’ என்று அவள் மீண்டும் வம்பை விலைக்கு வாங்க

 

‘ என்ன குட்டிமா ‘ என்று அவன் சரசமாக பேச

 

‘ இருங்க அதுயில்ல… இது வேற….ம்ம்ம் என்ன??? என்று அவன் கேட்க… ‘சரி…. சார்… எப்போ எங்க மனசுல விதை விதைசாரம்’ என்று அவனைப் பார்த்து கேட்க

 

அவனோ ‘ அடி என் அழகு ராட்சசி… கரக்டா மாமனோட பாயிண்ட பிடிச்சிட்ட… அதுவா நீ அன்னைக்கு அனுகிட்ட உங்க அண்ணன் வரலையானு கேட்டல… நான் அங்கத்தான் நின்னுட்டு இருந்தேன்’ என்று அவன் அந்நாளின் நிகழ்ச்சியை கூற… அவளோ இம்முறை அவன் முன் அசடு வழிந்தாள்..

 

.

 

‘மாமன் மேல அவ்ளோ லவ்வா டி உனக்கு’ என்று கேட்க… அவளோ கண்களில் நீருடன் உங்க காதலுக்காக என்னோட உயிர பணயம் வச்சேன் மாமா’ என்று கூற அவனும் அந்நாளின் நினைவுகளின் அவன் கண்கள் கலங்கின… அவளை காற்றுக்கூட புகாதப்படி அணைத்துக் கொண்டான்… அவளுக்கோ ஏன்டா மீண்டும் பழைய நினைவுகளை தூண்டிவிட்டோம் என்று தோன்ற அவனின் முகத்தை கையில் ஏந்தினாள் அவன் நெற்றியில் முத்தமிட்டு…

 

 

‘ மாமா உங்களுக்கு ஒன்னு தெரியுமா… உங்கல பாத்த முதல் நாளே நான் அவுட்டு ‘ என்று கூற… அவன் அதிர்ச்சியில் கண்களை விரித்து அவளைப் பார்க்க… அவளோ வெட்கம் என்னும் ஆடையை அணிந்துக் கொண்டு அவனின் விஷம பார்வையை சந்திக்க முடியாமல் அவனின் மார்பில் முகம் புதைத்தாள்…

 

‘அடி என் கள்ளி’… என்று அவன் கண்களில் மோகமுடன் அவளை நாட… அச்சமயம் பார்த்து அவர்களது செல்ல மகள் சிணுங்கினாள்… அவனோ ‘ ஹும்…. எனக்கு விதி எந்த ரூபத்தில சதி செய்யுது என்று வருந்தினாலும்’… தன் மகளுக்கு தந்தையின் கடமையிலிருந்து விலகாமல் அவளை தொட்டிலிருந்து லாவகமாக எடுத்து தன் மனைவியிடம் கொடுத்தான்… அவளோ சிரிப்பின் ஊடே தன் கணவனின் கையிலிருந்து குழந்தையை வாங்கியவள் பால் புகட்டினாள்… அவர்களது மகளோ மீண்டும் உறங்கிவிட… கார்த்தி தன் மனைவியை பார்த்து இப்போ எந்த தடையுமில்லையே’ என்று கூற… அவளோ அழகாய் தலையசைத்து தனது சம்மதத்தை அவனுக்கு தெரிவித்தாள்…. அவளை அவன் அள்ளிக் கொண்டான்…

 

 

ஐந்தாண்டுகள் கழித்து

தடபுடலாக திருமண ஏற்பாடுகள் நடக்க… ராஜ் தன் மருத்துவ படிப்பு முடிந்து மருத்துவனாக வேலையில் அமர்ந்த பிறகு தங்களின் காதலை வீட்டில் எல்லோருக்கும் தெரிவிக்க… அனைவரும் ஒப்புக்கொண்டு… இரு குடும்பமாக இணைந்து திருமண ஏற்பாடுகளை செய்தனர்…

 

மங்கள கீதங்கள் முழுங்க… மந்திரங்கள் உச்சரிக்க… சொந்த பந்தங்கள் கூடி இருக்க … சுபமுகூர்த்த நன்னாளில் ராஜ் அனுவின் கழுத்தில் மங்கள நாணைப் பூட்டினான்…

 

இரு  குடும்பங்களுடன் சேர்ந்து கார்த்தியும் திவியும் அவர்களது செல்வ மகள் நிவி என்னும் நிவேதித்தா அறுந்த வாலாக… தன் தந்தையை படுத்தி எடுத்துக் கொண்டிருந்தாள் ‘ அப்பா…. அம்மா ஸ்டோமக் ஏன் வீங்கியிருக்கு அம்மாக்கு… மாமாட்ட சொல்லி மெடிசன் கொடுக்க சொல்லலாமா’ என்று தன் தந்தையிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்துக் கொண்டிருந்தாள் அவர்களது செல்வ மகள்… அவனோ அதுவோ… இதுவோ என்று சமாளித்தான்… அவள் விடுவதாய் இல்லை… பின்ன கார்த்தி மகளா கொக்கா… அவனோ தன் மனைவியை துணைக்கு அழைத்தான்…

 

ஆம் இது அவளுக்கு ஐந்தாம் மாதம்…. இம்முறை அவளுக்கு விட்டு கொடுத்துவிட்டான் கார்த்தி போன முறை தன் ஆசைப்படி பெண் பிறக்க இம்முறை அவள் ஆசைப்படி புதல்வன் வேண்டும் என்று கேட்க… விட்டுக்கொடுத்து விட்டான்…

 

இப்பொழுதுதான் யோசித்தான் பேசாமல் இதுவும் ஆண்பிள்ளையாக இருந்திர்களாமென்று… பெரிய பிஸ்னஸ் மேன்… பெரிய சாம்ராஜியத்தை கட்டி ஆளும் அவனுக்கே சவால் விட்டால் அவனது செல்ல மகள்… வீட்டின் குட்டி தேவதை… அனைவருக்கும் பிரியமான ‘ அம்மு குட்டி ‘ கௌரி, சுந்தரம், லட்சுமி, குமரன், ஏன் ராஜ் அனு என்று அனைவரும் பாரபட்சம் பார்க்காமல் அவனின் நிலையை கண்டு நகைக்க… அவனது உள்ளத்தை கொள்ளைக் கொண்டவள் அவனுக்கு மட்டுமே செல்லமாக விளங்கும்  குட்டிமா அவனுக்கு துணை நின்றாள் ‘ ரொம்பத்தான் என் புருஷன கிண்டல் பண்ணாதீங்க’ என்று சிரிப்புடன் அவளும் கேலியாக பேசினாலும்… அவளது கண்களில் காதலைக் கண்டான்….

 

இருவரும் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் காதல் வாழும்… என்றும் பிரியாமல் அவளுக்கு அவனும்… அவனுக்கு அவளும் என்றும் அவன் வாழ்வில் அவள் பிரியாத சகியாக(ப்ரியசகி) வாழும் அவர்களை வாழ்த்தி நாமும் விடைபெறுவோம்…

 

 

சுபம்

ப்ரியசகி 35
11
Leave a Reply

avatar
6 Comment threads
5 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
7 Comment authors
admin Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Member

Nice love story…

Member

Hi bharathi mam,
Story was awesome. Really karthick love was amazing. It’s really painful when we came to know that our love one was suffering..story short and sweet ah irukku …

Member

super ending. nice.

admin
Admin

Congrats Divya… Super… 🙂

Member

Azhagana niraivu thangachi .supera irunthuchu kathai.azhagan kaathal marakkave mutiyaathu pa

Member

Super story, but sekirama mudichiduchi

error: Content is protected !!
Don`t copy text!