Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-37

முகங்கள் 37

 

புதுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் – கிரைம் பிரான்ச்

கிருபாகரனுக்காக காத்திருந்தான் அஷ்வின் அவனெதிரில் ஒரு கோப்பையில் தேனீர் இருந்தது.

 

அப்போது கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த கிருபாகரன் தனது தொப்பியை கழட்டியபடி அஷ்வினை சுற்றிக்கொண்டு வந்து தன் இருக்கையில் அமர்ந்தான்

 

“சாரி அஷ்வின் என்னால உங்களுக்கு ஒன் அவர் வேஸ்ட்டாகிடுச்சு, சைட்ல வொர்க், பாதில ஸ்டாப் பண்ண முடியல ”

 

“தட்ஸ் ஓகே ” என்றவன் கிருபாகரன் தன் இருக்கையில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள காத்திருந்தான்.

 

“டீ குடிங்க அஷ்வின் ” என்ற கிருபாகரனின் குரலுக்கு இசைந்தான்

 

அவன் டீ குடித்து முடிக்கும் வரை காத்திருந்த கிருபாகரன் பேச்சை துவங்கினான்

 

“சொல்லுங்க அஷ்வின் இவ்வளவுதூரம் என்னை தேடிவந்திருக்கீங்கன்னா கண்டிப்பா முக்கிய காரணமாதான் இருக்கும் ”

 

“எஸ் சார், பட் அதை எப்படி சொல்றதுன்னுதான் புரியல ”

 

“எதுவா இருந்தாலும் சொல்லுங்க அஷ்வின், என்னை நம்பி வந்துட்டு இப்படி யோசிச்சா எப்படி? ”  ஊக்கப்படுத்தினான் கிருபாகரன்.

 

“வந்து …..வந்து …. என்கிட்ட இது சம்பந்தமா சாட்சி எதுவும் இல்லை, பட் ஏதோ சரியில்லைன்னு மட்டும் கன்பார்மா தெரியுது ”

 

“எது சரியில்லை? ”

 

“அ…அ…அது நந்தினி …. நந்தினி இஸ் நாட் நார்மல் ” ஒருவழியாக சொல்ல வந்ததை சொல்லிவிட்டான்

 

“எதை வச்சு அப்படி சொல்றீங்க? ” அஷ்வினை யோசனையாக பார்த்தான் கிருபாகரன்

 

“ஐ கேன் ஃபீல் இட் ” என்றான் முகத்தை சுருக்கியபடி

 

“இத சொன்னா ஜட்ஜ் சிரிப்பார் அஷ்வின் ” சன்னமாக சிரித்தான் கிருபாகரன்

 

“ஐ நோ, பட் இட்ஸ் டிரூ ” தன்னை உண்மையாக்க முயன்றான்

 

“உங்களுக்கு அப்படி ஃபீல் ஆக ஏதாவது ரீசன் இருக்கனுமே”

 

“எஸ், நான் சுவிட்சர்லாத்துல இருந்துந்து வந்ததுல இருந்தே ஏதோ சரியில்லை, நந்தினியும் நானும் மீட் பண்ணவே முடியல, அட்லாஸ்ட் ருத்ரபிரதாப்போட பிரஸ் மீட்லதான் என்னால நந்தினிய பாக்கவே முடிஞ்சது, பட் இந்த கல்யாணத்துல நந்தினிக்கு துளியும் விருப்பமில்லை,  அதை என்னால உணர முடிஞ்சது, என்னையும் நந்தினியையும் பார்க்க விடாதது தற்செயலா நடந்த மாதிரி தெரிஞ்சாலும் எங்களை பர்பஸ்ஸா மீட் பண்ண விடாத மாதிரி தோணுது,  ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்க கிருபாகரன் ”

 

அதுவரை அவனது வாக்குமூலத்தை இடையூறு இல்லாமல் கேட்டவன், இப்போது ஒரு பெருமூச்சுடன் ஆரம்பித்தான்

 

“இப்படி தோணுச்சு,  பீல் பண்ண முடிஞ்சது,  உணர முடிஞ்சதுன்னு உங்கள் தரப்பிலிருந்து பேசினா செல்லாது அஷ்வின், எனக்கும் தான் அந்த கேஸ்ல ஏதோ நெருடலா இருக்கு, அதனால தான் அதை கிளோஸ் பண்ணாம வெச்சிருக்கேன், பட் அதை எப்படி சாட்சியா காமிக்க முடியும்?, வேற ஏதாவது  நந்தினி கிட்ட உங்களுக்கு நெருடலா தோணுச்சா? “அஷ்வினின் நினைவுகளை  கிளர முயன்றான்

 

“ஆ…ங்…. கல்யாணத்தை பத்தி பேசும்போது அவளோட கண்ணு கலங்குச்சு, ஃபோன்ல எப்போ பேசினாலும் அவளா பேசற மாதிரி இருக்காது,  யாரோ சொல்லிக்கொடுத்து பேசுரதாத்தான் தோணும்” நிறுத்தினான்

 

“ம்… அப்புறம் வேற ஏதாவது? ”

 

“எங்க ஃபீல்டுல ஹக்கிங் எல்லாம் ஒரு விஷயமேயில்ல, நானே நிறையதடவ நந்தினிய ஹக் பண்ணியிருக்கேன், தப்பான எண்ணத்துல இல்ல, ஃபிரண்ட்லியா, பட் கடைசியா அவங்களோட கல்யாணத்தை பத்தி பேசும்போது அவங்க அழுதாங்களேன்னு அவங்களை ஆறுதல்படுத்த ஹக் பண்ணினேன், பட் அவங்க வயலன்ட்டா ரியாக்ட் பண்ணினாங்க, எனக்கு ஒன்னுமே புரியல,  உடனே மயக்கமாயிட்டாங்க ”

 

“அப்போ வேற யாராவது கூட இருந்தாங்களா? ”

 

“இல்ல, பட்…அவங்க மயங்கி விழுந்ததும் ருத்ரபிரதாப் கால் பண்ணார் ,”

 

“வெய்ட், வெய்ட்,  அது எப்படி நந்தினி மயங்கி விழுந்ததும் ருத்ரபிரதாப் கால் பண்ணினார்? ”

 

“தற்செயலாகவும் இருக்கலாம், ”

 

“பட் போலீஸ் பிரைன் அப்படி யோசிக்காது, சரி அப்புறம், ”

 

“டாக்டர் சியாமளா வந்து செக் பண்ணாங்க, பிபீ இன்கிரிஸ் ஆகிட்டதா சொன்னாங்க ”

 

“வாட் எ ரிப்போர்ட், கல்யாணம் நிச்சயமானா பொண்ணுங்க சந்தோஷப்படுவாங்க,  இப்படி பிபீ ஷுட் ஆகி ஹாஸ்பிடல் போக மாட்டாங்களே,  அப்புறம் நீங்க ஹக் பண்ணதும் வயலன்ட்டா ஆனாங்கன்னு சொல்றீங்க அப்போ ஏதாவது ஹராஸ்மன்ட் (பலாத்காரம்) மேட்டரா இருக்குமோ? ”

 

அஷ்வினின் புருவம் முடிச்சிட்டிருந்தது அவனுக்குள்ளும் பல குழப்பங்கள் தான், அன்று நடந்ததை மீண்டும் நினைவிற்கு கொண்டு வரமுயன்றான் ”

 

அதேநேரம் கிருபாகரனும் தீவிரமாக சிந்தித்துக்கொண்டுதான் இருந்தான், ஏதோ பொறிதட்ட அஷ்வினை ஏறிட்டவன்

 

“எப்போதும் யாரோ சொல்லி கொடுத்து பேசுறது போல தோணுச்சின்னு சொன்னீங்க அப்போ அன்னிக்கு அவங்க மயக்கமாகி விழும்போது அவங்க ஹெட் போன் இல்ல பிளூடூத் இப்படி ஏதாவது போட்டிருந்தாங்களா?” கேசின் ஆனிவேரை பிடித்தான்

 

சில நொடி நெற்றியில் கைவைத்து சிந்தித்தவன் முகத்தில் குழப்பரேகை கூட “ஆ…ஆமாம் சார்,  பிளூ டூத் போட்டிருந்தாங்க, அப்புறம் நான் உள்ள நுழைஞ்சதும் குட்மார்னிங் சொன்னேன், அப்போ அவங்க ‘குட் மார்னிங் அஷ்வின்னு சொல்லு ‘சொன்னாங்க அப்போ அந்தப்பக்ம் யாரோ பேசியிருக்காங்கன்னு தானே அர்த்தம்” மீண்டும் அவனது புருவங்கள் முடிச்சிட்டன

 

கிருபாகரனின் முகம் பிரகாசமானது, சுழல்  நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டு ஓர் அறைவட்டமடித்துக்கொண்டு

“குட்,  த கேம் ஸ்டாட்ஸ் நவ், கெட் ரெடி ருத்ரபிரதாப்” மானசீகமாக ருத்ரபிரதாப்பிற்கு சவால் விட்டான்

*************************************

சந்திரிகாவின் அழுகுரல் அந்தமார்பிள் ரெசார்ட்டையே அதிரச்செய்தது.அவளருகில் தண்ணீர் பாட்டிலுடன் செய்வதறியாமல் நின்று கொண்டிருந்தான் பிரகாஷ், கேரவனில் ஏறும்பொழுது ‘நான் வர்ற வரைக்கும் இங்க எல்லாத்தையும் நீ தான் பார்த்துக்கனும், எல்லாருக்கும் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தாச்சு,  ஏதாவது டவுட்னா கூப்பிடு, வி வில் பி ஆல்வேஸ் கணக்டட் ‘ என்று அர்த்தமாய் செல்போனை காண்பித்து விட்டு போனவன் தான்,  எத்தனை முறை முயன்றும் நாட் ரீச்சபிள் என்றுதான் வருகிறது

 

‘இந்த ஹிந்திகார ஆன்ட்டியை எப்படி சமாளிக்கிறதுன்னே தெரியலையே, பாகுபலில கட்டப்பா மகேந்திர பாகுபலிகிட்ட ‘உன் அப்பா மாதிரி யோசின்னு ‘ சொல்லுவான், அந்த லாஜிக் படி நான் எவ்வளவு யோசிச்சாலும் ருத்ரனை மாதிரி யோசிக்க முடியலையே ‘ தனக்குள்ளேயே புலம்பித் தீர்த்தான் பிரகாஷ்.

 

“என் பேட்டியை நீ ஏதோ பண்ணிட்ட, துஷ்மன் ” என்று மூக்கை உறிஞ்சி ஒப்பாரிவைத்தார் சந்திரிகா

 

‘அட அந்த துஷ்மன் நான் இல்லம்மா, அது பொள்ளச்சியை நோக்கி போய்கிட்டு இருக்கு, நானே கடுப்புல இருக்கேன் இதுல நீ வேற ‘ இதையெல்லாம் அவனால் மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது

 

சந்திரிகாவோ புலம்பலை நிறுத்தவேயில்லை கடைசியாக

 

“நான் போலீஸ்ல கம்பிளைன்ட் கொடுக்க போறேன், என் பொண்ணை கடத்தி எங்க வெச்சிருக்குது? ” என்று பிரகாஷை பார்த்து சாடவும் அவனது பொறுமை காற்றில் பறந்தது

 

“இப்போ என்ன போலீஸ்ல கம்பிளைன்ட் கொடுக்கனுமா? தாராளமா கொடுக்கலாம், வாங்க நானே கூட்டிட்டு போறேன். ” என்று கார் சாவியை பாக்கெட்டிலிருந்து ஆவேசமாக உறுவியவன் தொடர்ந்தான்

 

“ஆனா ஒன்னு, ரெண்டுநாள் முன்னாடிதான் ரெண்டுபேரும் கல்யாண அனவுஸ்மென்ட் கொடுத்திருக்காங்க, நந்தினிக்கும் இதுல சம்மதம்னு எல்லாருக்கும் தெரியும், உங்க கேஸை யாரும் எடுக்க மாட்டாங்க” ஒரு மூச்சு கத்தி முடித்தான்

 

சந்திரிகா கப்சிப் என்று அமைதியாகிவிட்டாள். ஏனோ அதுவும் அவனுக்கு கஷ்டமாக இருந்தது

 

“இங்க பாருங்க சந்திரிகா மேடம், அவங்க ரெண்டுபேரும் முக்கியமான வேலையா வெளியூர் போயிருக்காங்க,  நாளைக்கு இல்லை நாளை மறுநாள் வந்திடுவாங்க, நீங்க கவலைபடாம வீட்டுக்கு போங்க ” என்று சந்திரிகாவை சமாதானப்படுத்த முயன்றான்

 

“எந்த ஊருக்கு போயிருக்காங்க? ” – சந்திரிகா மூக்கை உறிஞ்சி டிஷ்யூவால் துடைத்தபடியே கேட்டார்

 

“தெரியலை, ருத்ரன் சொல்லலை, இப்போ எனக்கு செட்ல வேலையிருக்கு, நீங்க வீட்டுக்கு போங்க நந்தினி வந்ததும் உங்களை மீட் பண்ணுவாங்க ” என்று முடித்தவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றான்

 

முகங்களின் தேடல் தொடரும்….

 




4 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    Hi mam

    கிருபா திரும்பவும் ருத்திரன் நோக்கி வரப்போகின்றார் ,ஆனால் அங்கு அதற்கு சாதகமாய் ஏதாவது இருக்குமா,முன்பானால் சந்தனாவை ருத்திரனை காட்டிக்கொடுத்திருப்பார் ,ஆனால் இப்போ ருத்திரன் மேல் காதல் கொண்ட சந்தனா என்ன முடிவெடுப்பார் என்றே தெரியவில்லை.

    நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Aiyo mantai kayuthe.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Daisy Mary says:

    waiting to c the end of the game….


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    saranya shan says:

    kiruba @@ruthraa

You cannot copy content of this page