Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-39

 

முகங்கள் : 39

 

நடுங்கிக்கொண்டிருந்த சந்தனாவை தாங்கிப்பிடித்த ருத்ரபிரதாப் மெதுவாக அவளை மீண்டும் சோபாவில் அமர வைத்தான்.

 

தன் கோட் பாக்கெட்டிலிருந்த கர்ச்சிப்பை அவளிடம் நீட்டி “இட்ஸ் ஓகே நந்தினி, சந்தனா நம்ம கூட இருந்தது கொஞ்ச நாள் தான்னாலும் நம்ம மனசோட ஒன்றிட்டாங்க,….. ” சந்தனாவின் மாலையிட்ட படத்தை ஒருமுறை பார்த்தான் ” ஈவன்  ஐ மிஸ் ஹர் ” ஏனோ அவனது கண்களும் பனித்து விட்டன.

 

இங்கும் அங்கும் பார்த்து கண்ணீரை கண்களுக்குள்ளேயே கரைத்தான்

 

எதிரில் நின்ற சித்தியம்மாளும் புடவைத்தலைப்பால் வாய் பொத்தி குலுங்கினாள்.

 

அது உண்மையா  அல்லது ஊருக்காக வடிக்கும் முதலை கண்ணீரா என்று அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

 

 

அந்த ஊர் பெரியவர்கள் போல் இருந்தவர்கள் எல்லோரும் ருத்ரனிடம் நலம் விசாரித்தார்கள், சித்தியும் தான் தன் பருமனான உடலை தூக்கிங்கொண்டு ருத்ரபிரதாபிற்கு விழுந்து விழுந்து சேவை செய்தாள்.

 

எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று தன்னுள் நினைத்த சந்தனாவின் கண்கள் சாந்தியையே சுற்றிச் சுற்றி வந்தது. அவளது பேச்சை, சிரிப்பை, கண்களை  கைகளை என்று தனித்தனியாக உற்று கவனித்தாள். மனதில் உணர்வுகளின் போராட்டம், பல கேள்விகள் நுனி நாக்கில் தேங்கி நின்றன. யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவளது மன அழுத்தம் படபடப்பாக மாறியது.

 

சாந்தியிடம் உண்மையை சொல்லிவிடலாமா?  என்று பலமுறை யோசித்து செயல்படுத்த தைரியமின்றி விட்டுவிட்டாள்.

 

ஊர் பெரியவர்களிடம் பேசிவிட்டு ருத்ரபிரதாப் வரும் பொழுது சந்தனாவை சுற்றி மாபெரும் கூட்டம் நின்று கொண்டிருந்தது. சிலர் கையேழுத்து என்றார்கள் சிலர் செல்பி என்றார்கள் . அந்த கூட்டத்தில் நின்றாலும் அவளது கண்கள் ருத்ரனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தன.

 

பேப்பர் நீட்டியவர்களுக்கு ஏதோ கிறுக்கி தள்ளினாள். பாவம் அவர்களுக்கு தான் நந்தினியின் கையெழூத்து தெரியாதே. போட்டோக்களுக்கு சிரித்து வைத்தாள். அவளது பார்வை ‘என்னை காப்பாத்தேன் ‘ என்று ருத்ரனிடம் சொல்லாமல் சொல்லியது.

 

உடனே எங்கிருந்து தான் டிரைவர் வந்தான் என்று தெரியவில்லை கூட்டத்தை விலக்கி அவளை கேரவனை நோக்கி பாதுகாப்பாக அழைத்துச் சென்றான்

 

கேரவனில் நுழைந்ததும் “நான் என்னோட வீட்ல தங்கனும், கேரவன் வேண்டாம் ” என்றாள் உறுதியான குரலில்

 

“வாட்.????, தங்க போறியா?  நோ வே!!!! “திட்டவட்டமாக மறுத்தான்

 

“இல்ல, நான் என்னோட தங்கை கல்யாணத்தை பார்க்கனும் ” அவளது கண்கள் கலங்கின

 

அவளது முகத்தை விட்டு பார்வையை அகற்றியவன் “ப்ளீஸ் புரிஞ்சிகோ, அங்க ஏகபட்ட வேலை இருக்கு, ஐ கான்ட் வேஸ்ட் மை டைம் ”

 

அவனுக்கு முன்னால் சென்று நின்றவள் “ப்ளீஸ், இது என்னோட ….. கடைசி ஆ…. ” முடிக்க முடியாமல் திணறினாள். காரணம் அவள் ருத்ரபிரதாப்பின் இரும்புக் கரங்களினுள் இறுக்கமாக சிக்குண்டு இருந்தாள்

 

மூச்சு விடவும் முடியாத நெருக்கம்.

 

அது ஏன் என்று அவள் சிந்திக்கும் பொழுதே மெது மெதுவாக அவனது பிடி விலகியது.

 

அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தியவனின் நுனி மூக்கும் கண்களும் சிவந்திருந்ததை பார்த்தாள். அவளுக்கு முது காட்டி நின்று கேரவனில் எதையோ தேடுவது போல் இங்கும் அங்கும் பார்த்தவன் பழைய மேகசின் ஒன்றை கையிலெடுத்தான்.

 

அவளது கண்களை சந்திக்காமல்  “ஓகே பட்…. 6.00 :7.30 முகுர்த்தம் முடிஞ்சதும் பேக்கப் ஒகே??? ” புத்தகத்தின் பக்கங்களை இலக்கில்லாமல் திருப்பிக்கொண்டிருந்தான்.

 

சந்தனாவால் நம்பவே முடியவில்லை, இந்த பாறையும் உருகுமா? உண்மையிலேயே ஒத்துக்கொண்டானா. அவளது வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து விட்டானா? எப்போதும் ருத்ரதாண்டவம் ஆடும் ருத்ரபிரதாப்பா இது?  கண்கள் அவனை விட்டு சிரிதும் அகலவில்லை.

 

அதற்குள் தன்னை நிலைப்படுத்திக்கொண்ட ருத்ரன் புத்தகத்தை விட்டு பார்வையை விலக்கி அவளது முகத்தை ஏறிட்டான்.

 

அவள் தன்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்பது புரிய தன் புருவங்களை உயர்த்தி கேள்வியாய் “என்ன? ” என்றான்

 

அவனது குறும்பு பார்வை அவளுள் ஏதோ செய்ய கேரவனை விட்டு வெளியேற கதவில் கைவைத்தாள்

 

“எங்க போற? ”

 

“சா…..ந்…….தி கி….ட்….ட ”

 

புத்தகத்தை மூடி மீண்டும் இருந்த இடத்தில் வைத்தவன்

 

“மேரேஜ் அட்டன்ட் பண்ண தான் பர்மிஷன் கொடுத்தேன், சாந்தி கூட தங்க இல்ல ”

 

“நா…………வ…..ந்….து ”

 

“நோ மோர் எக்ஸ்கியூசஸ், இப்போ போ, பட் சீக்கிரம் வந்து தூங்கனும், ஓகே??? ” என்று அக்கரையாய் கேட்டவனுக்கு முடியாது என்று சொல்ல அவளுக்கு நா எழவில்லை.

 

“ஓ……கே ….” என்றாள் சன்னமான குரலில்

 

“நான் டிரஸ்சிங் ரூம்ல தூங்கிறேன், நீ இங்க சோபால தூங்கு, குட் நைட் ” என்றான்

 

ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் அவளும் “கு……ட்…. நை….ட் …. ” என்றாள்

 

 

 

********

 

சந்தனாவிற்குள் இருந்த கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ளவே அவள் சாந்தியுடன் இரவு தங்கினாள். ஆனால் அவளது துரதிஷ்டம் நந்தினியை பார்க்கவேண்டும் அவளுடன் பேச வேண்ணடும் என்று பெண்கள் வந்து கொண்டே இருந்தனர். அது மட்டுமல்ல நந்தினி நடித்த படங்களை பற்றிய கருத்தரங்கமே அரங்கேறியது.

 

இரவு ஒரு மணியாகியும் பெண்களின் பேச்சும் கும்மாளமும் குறையவேயில்லை. வெறுத்து போனாள் சந்தனா. இங்கே இருந்து இனி ஆகப்போவது எதுவுமில்லை என்றுணர்ந்தவள் கேரவனை நோக்கி நடக்கலானாள்….

 

வீட்டுக்கு சற்று தள்ளியிருந்தது கேரவன். வீட்டிற்கு வெளியே பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது, ஊர்மக்கள் திருமணத்திற்கான வேலைகளை செய்த வண்ணம் பரபரப்பாக இருந்தனர்.  சந்தனா தன்னுள் தீவிரமாக சிந்தித்துக்கொண்டு நடந்ததால் எதிரில் வந்த ஒரு நபரின் மீது தவறுதலாக இடித்து விட்டாள்.

 

“ஓ…. ஐ ஆம்…சாரி….” என்று சந்தனா அந்த நபரிடம் மன்னிப்பு கேட்க அவரோ அவளது கையை பிடித்து அதனுள் ஓர் காகிதத்தை திணித்தார்.

 

முதலில் அந்த முகம் தெரியாத மனிதன் கையை பிடித்து இழுக்கையில் கத்த எத்தனித்த நந்தினி அவர் காகிதத்தை திணிக்கவும் துணுக்குற்றாள்.

 

வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்த அவன் அதற்கு சம்பந்தமில்லாமல் முகத்தை முழுவதும் மறைத்த வண்ணம் தொப்பி அணிந்திருந்தான்.

 

‘யார் இவன்? ‘ என்று சந்தனா உற்று பார்க்க

 

“நான் தான் கிருபாகரன் நந்தினி மேடம் ” என்ற குரலை கேட்டதும் திடுக்கிட்டு இரண்டடி பின்னடைந்தாள் சந்தனா.

 

“ஷ்………ஷ்……… ப்ளீஸ் காம்  டவுன். நான் சொல்லப் போறதை அமைதியா கேட்டுக்கோங்க நம்மகிட்ட அதிக டைம் இல்ல ”

 

“நீங்க ஏதோ பெரிய பிரச்சனைல இருக்கீங்கன்னு நல்லா தெரியுது. அஷ்வின் இப்போ என் கூட தான் இருக்கார்”

 

காகிதம் சொருகிய அவளது கையை சுட்டிக்காண்பித்து “உங்களுக்கு உதவி செய்ய நான் காத்துகிட்டிருப்பேன் ” என்று முடித்தவன் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனான்.

 

சில நொடி வேரூன்றி விட்ட சந்தனா தன்னைத்தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டு கேரவனை நோக்கி நடந்தாள்.

 

கேரவனின் கதவில் கைவைக்க அவள் எத்தனிக்கையில் உள்ளே நர்சின் குரல் கிசுகிசுப்பாய்

 

“மேடம் இன்றைய மாத்திரையை என்னால பேஷன்டுக்கு கொடுக்க முடியல ”

 

“….”

 

 

” நான் எப்பவும் போல பால்ல கலந்து கொடுத்தேன் மேடம், பட் அங்க விளையாடிகிட்டு இருந்த குழந்தை அதை தட்டிவிட்டுடுச்சு.”

 

“இல்ல அதுக்கப்புறம் அவங்க பக்கத்துல கூட போக முடியல. அவங்களை சுத்தி ஒரே கூட்டம். தவறுதலா வேற யாராவது குடிச்சிட்டா பெரிய பிராப்ளம்”

 

 

“இல்ல மேடம் அப்படி எதுவும் ஆகலை. அந்த மாத்திரரையோட வீரியம் தெரிஞ்ச நான் எப்படி மேடம் கேர்லெஸ்சா இருப்பேன் ”

 

யாருடனோ பேசிக்கொண்டிருந்த நர்சின் குரல் கிசுகிசுப்பாக இருந்தாலும் சந்தனாவிற்கு அது தெளிவாக புரிந்தது. யாருடனோ என்று நினைப்பது கூட தவறு, எதிர்முனையில் நிச்சயம் சியாமளாதான்

 

ஆனால் அவர்கள் எந்த மருந்தை அவளுக்கு கொடுக்கிறார்கள்? அதன் விளைவுதான் அவளுக்கு எல்லாம் மறந்து போனது போல் இருக்கிறதா? என்னை வைத்து ஏதேனும் ஆராய்ச்சி செய்கிறார்களா?  இது ருத்ரனுக்கு தெரிந்தால் இவர்களை சும்மா விடமாட்டார் என்று உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த சந்தனாவின் தலையில் இடி போல் விழுந்தது நர்சின் அடுத்த வாக்கியம்

 

“நான் மாத்திரை கொடுக்கலைன்னு ருத்ரபிரதாப் சாருக்கு தெரியாது மேடம். ப்ளீஸ் நீங்களும் சொல்லீடாதீங்க. தெரிஞ்சா நான் அவ்வுளவுதான் ” அவளது குரலில் உண்மையான பயம் இருந்தது.

 

சந்தனாவின் கால்களுக்கடியில் பூமி நழுவியது.

 

முகங்களின் தேடல் தொடரும்…….

 

Next ud- Monday

 




19 Comments

  • MUTHU SELVI says:

    Today ud Ilaya?

    • Indra Selvam says:

      Ud type pannitene sis but ennoda phone la edho problem…. mail pogala….. so ennala nithya mail panna mudiyala…… so ud upload panna mudiyala…… inniki kandippa morning kulla upload panna try pandrene… appadi illanalum innaiku two episodes pottuduvene… ok.. sorry for the delay sis

  • Jenni Nila says:

    Today epi update irruka?????

  • Punitha. Muthuraman. says:

    முடிச்சை இறுக்கிட்டே போறீங்க.எப்பதான் அவிழ்க்க போறீங்க.

  • Thadsayani Aravinthan says:

    Hi mam

    சந்தனா ருத்திரன் மேல் கோபம் கொள்ளப்போகின்றார்,மருந்து விடயம் தெரிந்துவிட்டது ஆனால் ருத்திரன் அதற்கான விளக்கம் கொடுக்கும் பட்சத்தில் சந்தனாவால் புரிந்துகொள்ளமுடியுமென்று நினைக்கிறேன்.

    நன்றி

  • Daisy Mary says:

    ஹய்யோ போச்சி.. ருத்ரா மேல உள்ள காதல் கோபமா ஆக போகுது….
    என்ன நடந்தாலும் எனக்கு ருத்ரனை பிடித்திருக்கிறது…

    கண்டிப்பா சரியான காரணம் ருத்ரன் கிட்ட இருக்கும்….

    என்ன ஆனாலும் ருத்ரன் இந்த மர்ம யுத்தத்தில் வெல்வான்…

  • Rajee Karthi says:

    Pavam pa sandhana

  • Lalitha Vasudevan says:

    nice ud.

  • ugina begum says:

    NICE UD SIS

  • saranya shan says:

    ruthranai eppadi nambure sandanaa……..ruthra brabha valaiyil maattuviyaa…………….

    • Indra Selvam says:

      Pengalin manam ilagiyathu thanea….. adhuvum kadhal vizhayathil…. parkalam…. mattum meen illayea rudran

You cannot copy content of this page