முகங்கள்-43
2017
5
முகங்கள் 43
சந்தனாவின் வினோதமான நடவடிக்கை பிரகாஷினுள் ஒருவித கலவரத்தை ஏற்படுத்திய பொழுதும் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை, காரணம் சந்திரிகா, எது செய்தாலும் அவருக்கு உண்மை தெரிந்து விடும், இப்போது தெரியவேண்டுமா இல்லை தெரியப்படுத்தவே கூடாதா என்பதை ருத்ரன் தான் முடிவு செய்ய வேண்டும்,அதுவரை சந்திரிகாவை இவன் சமாளிக்க வேண்டும் அவ்வளவே,
நர்ஸ் என்ன ஆனாள் என்பதும் புரியாத புதிராக இருந்தது, ஆனால் சந்திரிகா அருகிலிருக்க எதையும் வெளிப்படையாக விசாரிக்க அவனால் முடியாதே,
அதனால் தான் சியாமளாவிடம் போனில் பேசாமல் குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பி வைத்தான். அங்குதான் விதி விளையாடியது, ருத்ரபிரதாப் மதி நிறைந்தவனாக இருந்த பொழுதிலும் அவனால் விதியை வெல்லமுடியாமல் போனது.
குறும்செய்தி வந்த உடனே சியாமளா அதனை பார்த்திருந்தால் ,சந்தனா அந்த ரெசார்ட்டை விட்டு வெளியேறாமல் தடுத்திருக்கலாம் , ஆனால் குறுஞ்செய்தி வந்தபொழுது சியாமளா தன் கணவருடனும் குழந்தைகளுடனும் பேசிக் கொண்டிருந்தார், முக்கால் மணிநேரமாக நீண்டிருந்த அந்த உரையாடலை அவர் துண்டித்து விட்டு அவர் குறுஞ்செய்தியை பார்த்து சந்தனாவின் அறைக்குள் நுழையும் பொழுது அவள் அங்கே இல்லை, நர்சின் நம்பருக்கு போட்டால் அது ஸ்விட்ஆப் என்றது, என்ன செய்வதென்று புரியாமல் விழித்தார் சியாமளா
பிரகாஷ் சந்திரிகாவுடன் அந்த அறையை விட்டு அகன்றதும் கிருபாகரனை தொடர்பு கொண்டாள் சந்தனா, அவனும் மார்பிள் ரெசார்ட்டை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தான்,
ருத்ரபிரதாப் விஜபி லிஸ்ட்டில் இருப்பவன் அவனை குற்றவாளியாக ஆக்க வேண்டுமென்றால் தகுந்த ஆதாரம் வேண்டும், இதுதான் நடந்ததென்று தெரிந்துவிட்டது இனி அதற்கான ஆதாரத்தை திரட்ட வேண்டும் அவ்வளவே, முதல் ஆதாரமாக சந்தனாவின் வாக்குமூலம், அதனை அவன் பதிவு செய்ய வேண்டும், அதற்காகவே இரவோடு இரவாக பயணம் செய்து மார்பிள் ரெசார்ட்டை நோக்கி வந்துகொண்டிருந்தான் அப்போதுதான் சந்தனாவின் அழைப்பு வந்தது.
அவளை ரெசார்ட்டின் வெளியே வருமாறு கூறியவன், காரின் வேகத்தை கூட்டி சந்தனா வெளியே வருவதற்குள் மார்பிள் ரெசார்ட்டின் மெயின் என்டரன்சிற்கு வந்துவிட்டான், நல்லவேளை தேவ்நாயர் அந்தமான் சென்றிருந்தான் இல்லையேல் சந்தனாவால் வெளியே வந்திருக்கவே முடியாது, அவள் கேட்டை நெருங்குகையில் அங்கிருந்த செக்யூரிட்டி மரியாதையுடன் எழுந்து நின்று வணக்கம்வைத்து கேட்டை திறந்துவிட்டான். செல்வது நடிகை நந்தினியாயிற்றே.
அவனை சந்தனா நிமிர்ந்தும் பார்க்கவில்லை, அவளது மனதிற்குள் இருந்ததெல்லாம் எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க வேண்டும் அவ்வளவே,வேறு எதுவும், யாரும் அவள் கண்களுக்கு தெரியவேயில்லை.
வேக வேகமாக வெளியேறியவள் கிருபாகரனின் காரில் ஏறி அமர்ந்துகொண்டாள், கார் அருகிலிருந்த ரெஸ்டாரண்டை நோக்கி விரைந்தது
ஹோட்டல் லெமன் டிரீ,
எதிர் எதிர் இருக்கையில் கிருபாகரனும் சந்தனாவும்
பேரர் இரண்டு தண்ணீர் பாட்டிலை வைத்து விட்டு ஆர்டருக்காக அருகில் நின்றான்.
“ரெண்டு காஃபி …” என்று கிருபாகரன் கூற
“இல்லை, எனக்கு ரொம்ப பசிக்குது ” என்றாள் சந்தனா
அவளது துவண்டிருந்த முகம் பசியால்தான் என்பது இப்போது கிருபாகரனுக்கு புரிந்தது, அவளை பார்க்கவே பாவமாகவும் இருந்தது, ருத்ரபிரதாப்பின் மீது எல்லையில்லா கோபம் மூண்டது.
சில நிமிடங்களில் சந்தனாவிற்கு வேண்டுவன ஆர்டர் செய்யப்பட்டு வந்தன,அதனை அவள் உண்டு முடிக்கும் வரை காத்திருந்தான் கிருபாகரன்
உணவுப்பொருட்களை வேக வேகமாக அவள் உண்டவிதமே அவளது பசியின் அளவை சொல்லாமல் சொல்லியது
‘தன் சுயநலத்திற்காக ஒரு பெண்ணின் அடையாளத்தையே மாற்றியிருக்கிறான், அந்த பெண் சாப்பிட்டாளா இல்லையா என்று கூட பார்க்க நேரமில்லையா நம் ஹீரோவிற்கு? ‘ கிருபாகரனின் மனம் ருத்ரபிரதாப்பை இகழ்ந்தது
சந்தனா கைகழுவிக்கொண்டு வந்து அமர்ந்ததும் தான் அவனது விசாரணையை தொடங்கினான்.
ஃபோனில் வீடியோவை ஆன் செய்தவன் அவளது முகத்தை ஃபோக்கஸ் செய்து அதனை நிறுத்தி வைத்தான்
“சொல்லுங்க சந்தனா, முதலிருந்து எல்லாத்தையும் சொல்லுங்க ”
குகைக்குள் ருத்ரபிரதாப் நந்தினியை கொன்றது, அவளை கிளோரோபார்ம் கொடுத்து மயக்கமடைய செய்தது, ஷர்மாவை கைக்குள் போட்டு வைத்துக்கொண்டு அவளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி, வாய்ஸ் தெரபி இப்படி எல்லாம் செய்தது, கடைசியில் அவளை நந்தினியாக முழுசாக மாற்ற மாத்திரை கொடுத்தது, அதன் தாக்கமாக அவளுக்கு நியாபக மறதி அதிகரித்தது, இரண்டு நாட்களாக அவள் மாத்திரையை நிறுத்திவிட்டது, சாப்பிடாதது, இப்படி எல்லாம் ஒரே மூச்சாக சொல்லி முடித்தாள்
எந்த இடையூரும் இன்றி அமைதியாக கேட்டுக்கொண்டான் கிருபாகரன்.அவள் முடித்ததும் கேமிராவை ஆப் செய்துவிட்டு
“ருத்ரபிரதாப்புக்கு உங்க மேல காதல்னு எதைவெச்சு சொல்றீங்க? ”
“அவரோட நடவடிக்கைகள் வைச்சுதான் ”
“அதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா? ”
“இ…….ல்……லை ” என்றாள் தலைகுனிந்தபடி
“ஓகே ஓகே…..நோ பிராப்ளம், கல்யாண அனவுன்ஸ்மென்ட்டே போதும், அதுவே ஒரு ஆதாரம் தான் ”
“நந்தினி மேடம் ருத்ரபிரதாப்பை காதலிச்சாங்கங்கிறதுக்கு என்ன ஆதாரம்? ”
“இதோ இந்த ஃபோட்டோஸ் அதுக்கு பின்னாடி இருக்கிற நந்தினியோட கையெழுத்து, அவங்க ருத்ரபிரதாப் மேல அளவுக்கதிகமா அன்பு வைச்சிருந்தாங்க, பட்…. அவங்களை ஒரு பொண்ணா கூட ருத்ரபிரதாப் பார்க்கல, பாவம் சார் ”
அவளது முகத்தில் எல்லையில்லா சோகம் அப்பிக்கிடந்தது
“ஓகே மேடம் இப்போ இது போதும், அடுத்தகட்ட நடவடிக்கை என்னனு நான் கூடிய சீக்கிரம் உங்களுக்கு இன்பார்ம் பண்றேன் ” என்று எழுந்து கொண்டான் கிருபாகரன்
கலவரமானாள் சந்தனா “அப்……போ……நா….ன் எங்க போகனும், மறுபடியும் ரெசார்ட்டா???!!!!! ” அவளது கண்கள் பயத்தில் விரிந்தன உடலும் கூட நடுங்குவது போல் தோன்றியது கிருபாகரனுக்கு
மீண்டும் இருக்கையில் அமர்ந்த கிருபாகரண் “வேணும்னா ஒன்னு செய்யலாம் நீங்க நந்தினி மேடம் வீட்ல ஸ்டே பண்ணிக்கோங்க, யாரும் எதுவும் கேக்க மாட்டாங்க, உங்களுக்கு சேஃப் ஆன இடம் அதுதான் ”
“இல்லை, அங்க நான் போகமாட்டேன்……” திட்டவட்டமாக மறுத்தாள்
வேறு என்ன தான் செய்வதென்று கிருபாகரன் யோசிக்கையில், சந்தனாவே பேசினாள்
“நான் ரெசாட்டுக்கே போறேன், பட் நீங்க சீக்கிரம் வந்து என்னை காப்பாத்துவீங்கன்னு நம்பி போறேன் ” என்று எழுந்து கொண்டாள்
முகங்களின் தேடல் தொடரும்……
5 Comments
Very interesting pa.super ra pokuthu.ini ruthravin natavatikkai ya paappom.
Ruthra avlo esiyaa new maatiduve
என்ன சொல்ல…
நடக்கிறது எதுவும் சரி இல்லை…
santhana எப்போ தான் இந்த காதலை புரிஞ்சிக்க போறாளோ….
உண்மை தான் கடைசியில் வெல்லும்..
ஆனா என்னோவோ ருத்ரா தப்பானவன் அப்டின்னு சொல்றது என்னால ஏனோ ஏற்று கொள்ள முடிய வில்லை…
ஒரு வேளை ருத்தரனின் அடாவடியான தந்திரமான நடவடிக்கை எனக்கு பிடித்திருக்கிறதோ என்னவோ…
சீக்கிரம் முடிவு வரட்டும்….
காத்து கொண்டிருக்கிறோம்…
Hi mam
நன்றாக இருந்தது இப்பகுதி.
நன்றி
Interestinga poguthu ruthra Ena pana poranga pakalam