Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-1

முள்ளோடு முத்தங்கள்

அத்தியாயம்1

ஆங்காங்கே… பெரிய பெரிய கட்டிடங்கள்… பிரமிக்க வைக்கும் அலங்காரங்கள்… கட்டிடங்களின் அமைப்புகள் பார்ப்பவர்களை பிரமிக்க மற்றும் சற்று மிரள வைக்கும் IT கம்பெனிகள், எப்பொழுதும் எறும்புகள் போல சுறு சுறுசுறுப்பாக இயங்கும் அன்றாட வாழ்க்கைக்காக ஓடும் மனிதர்கள்…

கலை கல்லூரிகள், பொழுது போக்கிற்கு சற்றும் அசையாமல் இயங்கிக் கொண்டிருக்கும் கடை வீதிகள் பார்ப்பவர்களின் கண்களை கவரும் ஆடை அணிகலன்கள் என்றும்… வீதி முழுவதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும் கலை பொருட்கள் என்று அனைவரையும் வீழ்த்தும் அழகுடன் காட்சியளித்து ஆர்ப்பரிக்கும் பேரலையோடும் மாலை வெயிலுக்கு குளிர்ச்சியூட்டும், இயற்கையோடு கைகோர்த்து உறவாடி கொண்டிருக்கும் மெரினா கடற்கரை வீற்றிருக்கும் புகழ்பெற்ற மாநகரமாக விளங்கும் சென்னை மாநகரம்

‘டேய் கீர்த்திவாசா சீக்கிரம் வாடா… என்னடா பண்ற… போர்ட் மீட்டிங்கிற்கு டைம் ஆச்சி…(ஏன் சேஸினி உன்னவ்) என்று கேசவன் சலித்து கொண்டார்..’டேய் வந்துட்டேன்டா’ என்று கீர்த்திவாசன் கேசவனுடன் கைகோர்த்து சென்றார்… பள்ளி பருவம் முதல் கோர்த்த கையை நண்பன் என்னும் பந்தத்தை தொடர்ந்து இன்று ஒரே வீட்டில்… ஒரே குடும்பமாக இருவரும் வாழ்கின்றனர்…

தொழிலிலும் கைகோர்த்து கொண்டு கே.கே குரூப்ஸ் ஆஃப் கம்பெனியின் எம்டிகள் இருவரும்… இன்று இந்திய அளவில் கொடி கட்டிப்பறக்கும் நம்பர்.1 கம்பெனிகளில் இதுவும் ஒன்று… அந்த ஒன்றை என்னும் வார்தையிலிருந்து நம்பர் ஒன் என்ற பெயரை வாங்க இரவு பகல் என்று பாராமல் உழைத்து கொண்டிருக்கும், குடும்பத்தின் ஆணி வேர் கமலம்மாளின் புதல்வன் கீர்த்திவாசன் மற்றும் மருமகன் கேசவன்..

கமலம்மாள் கோபாலகிருஷ்ணனின் மனைவி … கோபாலகிருஷ்ணன் கால் பாதிக்காத தொழிலே இல்லை,தொட்டதெல்லாம் வெற்றியே… அவர்களுக்கு மூத்த மகன் கீர்த்திவாசன் இரண்டு மகள்கள் மூத்த மகள் சாந்தி வீட்டின் கடைக் குட்டி  தீபா… தன் தந்தை உட்பட வீட்டிலிருக்கும் அனைவருக்கும் கடைக்குட்டி…

கீர்த்திவாசன் பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை கேசவனும் கீர்த்தியும் நெருங்கிய நண்பர்கள்… கீர்த்திவாசன் பயிலும் நேரத்தில் சாரதா மீது காதல் வயப்பட்டார்.. கோபாலகிருஷ்ணாவிற்கு அவ்வப்போது உடல் நிலை சரில்லாத காரணத்தினால் தன் மகனான கீர்த்தியை அழைத்து தொழிலை கற்றுத் தருமாறு தன் பிஏ விடம் அறிவித்தார்..

 

ஒருநாள் காலையில் கோபாலகிருஷ்ணனின் உயிர் பூவுலகிலிருந்து பிரிந்து சென்றது… கமலம்மாவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது ஆனால் பிள்ளைகளின் முன் தன் துன்பத்தை மறைந்தார்… ஈருயிர் ஓர் உடலாய் வாழ்ந்தவர்கள் ஓர் உயிர் பிரிந்தத்தில் மிகவும் வருந்தினார் ….

 

எப்படித்தான் மறுத்தாலும் தன் மகன் முழுவிவரம் அறிந்தவன் என்றும் அவன் வளர்ந்து விட்டான் என்றும் அத்தாய் உள்ளத்திற்கு தெரிந்தாலும்… தன் மகனை இன்றும் குழந்தையாகவே பார்த்தார் இரண்டு மகள்கள் ரெண்டாம்கட்டான் வயது…’ என்னங்க என்ன இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போய்ட்டீங்களே…இந்த ரெண்டு பொட்ட புள்ளைகள இப்படி அனாதையா விட்டுட்டு போய்ட்டீங்களே’… என்று அவர் நீண்ட நேரம் அழுதுகொண்டே இருந்தார்…

 

தன் நண்பனின் துக்கம் துடைக்கும் பொருட்டு… கேசவனின் வரவு நாளுக்குநாள் அதிகமாக… கமலமாவிற்கு கேசவனின் குணம் நன்கு தெரியுமாதலால் தங்களின் தொழிலிலும் கீர்த்தியுடன் இணைந்து சரிசமமாக பணிபுரியுமாறு வற்புறுத்தினர்… முதலில் கேசவன் மறுக்க.. கீர்த்தி தன் நண்பனான கேசவனை சம்மதிக்க வைத்தார்… நாட்கள் உருண்டோடின கேசவன் தந்தை தாய் அற்றவர் என்று அனைவருக்கும் முன்பே தெரியுமாதலால்… கமலம்மாள் கேசவனை அழைத்து தங்களுடன் தங்குமாறு ஒரே குடும்பமாக இருப்போம் என வற்புறுத்த அவரும் கமலம்மாளின் விருப்பத்திற்கு இணைந்தார்…

 

சாந்தியும் தீபாவும் தங்களது கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்தனர்… இதற்கிடையில் தீபாவும் கேசவனும் தங்கள் பார்வையை பரிமாறிக்கொண்டும்… அந்நான்கு கண்களிலும் காதல் வழிய மௌன பாஷைகள் அவர்களுக்குள் சென்று கொண்டிருந்தது…மறுபக்கம் சாந்தி தான் படிக்கும் அதையே கல்லூரியை சேர்ந்த தர்மராஜ் என்பவரை காதலித்து வந்தார்…

 

ஒருதலை காதல் என்றால் பிரச்சனையில்லை… இது இருதலை கொல்லியாக அமைந்தது… தர்மராஜ் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் விஷயம் ஓரளவுக்கு கசிந்தது… கமலமாவிற்கோ பயம் தொற்றிக்கொள்ள… அவரோ சாந்தியை அழைத்து பேசினார் … அவரோ வாயை திறக்காமல் நிற்க… பொறுமை இழந்து சாந்தியை அறைந்து விட்டார்…

 

தன் அன்னையா தன்னை அறைந்தார் என்று சர்வமும் அடங்கி நிற்க… இதுவே முதல் அடி இதுவரை தன் அன்னை தன்னை அறைந்தது இல்லை என்று கோபத்தினால் ஒரு விபரீதமான முடிவெடுத்தார்…

 

அன்று இரவே தர்மராஜை அழைத்து …. தங்கள் வாழ்க்கையை புதுவிதமாக ஆரம்பிக்க எண்ணி அவரிடம் கூற தர்மராஜாவோ அவரின் காதலின் மனதை அறிந்து ஆசையை தூண்டிவிட்டு .. தன்னுடன் வருமாறு அழைத்தார்… இச்செய்தியை தீபா கேட்டு கொண்டே விரைந்து கேசவனிடம் விஷயத்தை கூறினார்…

 

அவர்கள் இருவரும் கையும் களவுமாக பிடிபட.. கமலம்மாள் ஒரு முடிவுக்கு வந்ததுபோல் … ‘ கீர்த்திவாசா கேசவா இங்க வாங்க … நான் ஒரு முடிவு எடுத்தா சரியா இருக்கும்தான என்றார் இருவரையும் பார்த்து… கீர்த்திவாசனோ ‘ அம்மா நீங்க என்ன சொல்றிங்களோ நாங்க கட்டுப்படறோம்’ என்று இருவரும் கமலம்மாளின் இருப்புறமும் ஒருவர் இடது புறமும்…மற்றொருவர் வலது புறம் என்று கம்பிரமாக நிற்க … அவரோ கேசவா நான் உனக்கு ஒரு கட்டளையிட்டால் நீ சம்மதிப்பாயா என்றார்…

 

கேசவனோ சரி என்று வாக்குறுதியை அளித்தார்…

 

சரி என்ற கமலம்மாள் ‘கேசவா உனக்கும் சாந்திக்கும் நாளைக்கு காலைல முருகன் சன்னதியில் கல்யாணம்… இதுதான் என் முடிவு… என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல…நான் சொன்ன மாதிரி எல்லாம் நடக்கணும்… சொந்தபந்தங்கள் பத்தி கேள்வி எழுப்ப வேண்டாம்… வரவேற்புக்கு அழைச்சிகலாம்…

 

‘ கீர்த்திவாசா கேசவா  இது நம்ம வீட்டு சுபகாரியம் நாம தான் பார்த்து செய்யணும்… சரி ஏற்பாடு பண்ணுங்க’… என்று உத்தரவிட அனைத்து வேலைகளும் மளமளவென்று ஆரம்பித்தன… தீபாவோ கமலம் கூறிய வார்த்தையைக் கேட்டு அறைக்குள் முடங்கியவள் தான்… பின்பு வெளியே வரவில்லை.. கேசவனோ துடித்து போனார்…

 

தீபாவின் அமைதியைக் கண்டு விஷயம் கை மீறி சென்றுவிட்டதை இருவரும் உணர்ந்தனர்

 

இந்த நிமிடம் முதல் அவர்கள் வாழ்வில் விதி விளையாடத் தொடங்கியது…

 

காலை வேளையில் பிரம்மமுகூர்த்தத்தில்… சுபபோக நாளில் கேசவன்  சாந்தியின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்து… தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார்… சாந்தியின் நிலையோ நெருப்பின் மேல் நிற்பதுபோல் உணர்ந்தார்… தன் மனதில் தர்மராஜாவின் முகம் ஒரு நொடி வந்து சென்றது… எவ்வளவு ஆசையாக தன் மணநாளை எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு இத்திருமணம் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியது…

 

தர்மராஜுடன் தன் வாழ்வை எண்ணி சாந்தி கனவு மாளிகை கட்டிவைத்திருந்தாள் எல்லாம் ஒரே நேரத்தில் தரைமட்டமாக இடிந்து விழுந்தது…

 

சாந்தியின் முடிவை கண்டு முதலில் அதிர்ந்தார் கமலம்மாள் … அவரோ காதலுக்கு எதிரியல்ல.. தர்மராஜை விசாரிக்கையில் அவன் மீது நல்ல அபிப்பிராயம் தோன்றாமல் இருக்க தன் மகள் வீட்டை விட்டு ஓடிவிட முடிவு செய்த பின் தன்னையே நொந்து கொண்டார்… சுமுகமாக பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்று எண்ணிய போது…

சாந்தியின் முடிவு அவரை அதிரவைக்க… கமலம்மாள் இதற்குமேல் சென்றால் தன் குடும்பத்திற்கு தலை குனிவு என்றெண்ணிய பின்… அவரது முடிவு திருமணம் என்ற எண்ணத்தில் திளைத்து நின்றது…

இங்கு கேசவனோ தான் தீபாவுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும்… தான் தீபாவுக்கு கொடுத்த வாக்கு தவறி விட்டதாக எண்ணி மன வேதனைக் குள்ளானார்… சாங்கியங்கள் சம்பிரதாயங்கள் முடிந்த வேளையில்… சாந்தியின் மறுபக்கத்தை பார்க்க நேர்ந்தது அக்குடும்பத்தினரால்…

திருமணம் முடிந்த இரண்டு மாதத்தில் சாந்தி கருவுற்றாள்… கேசவனுடன் சேர்ந்து குடும்பமே மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்… ஆனால் சாந்தியால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை

 

கமலம்மாள் கருவுற்ற தன் மகளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டார் … ஆனால் சாந்தியின் மனமோ நெருப்பாய் எரிந்தது

 

நன்றி தோழமைகளே

திவ்யபாரதி

முள்ளோடு முத்தங்கள் தொடரும்…
7 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  vasanthi vasu says:

  Very Nice start


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Hi thangachi super start ya menmelum. Thotara vaalthukal pa.


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks brother😃😃😃


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Bala says:

  Very mature writing
  This is bala sundar


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thank u akka 😃😃😃


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Daisy Mary says:

  தர்ம ராஜ் தான் குழந்தைக்கு அப்பாவா?!!!!


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   No sis kesavan only… santhi forced by her mother due to some conditions… so she jst hav baby of kesavan …. upcoming read pana ungalku puriyum… tq!!!😊

error: Content is protected !!