Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-44

முகங்கள் 44

 

மார்பிள் ரெசார்ட் :

 

சந்திரிகாவை அமரவைத்து தண்ணீர் கொடுத்தான் பிரகாஷ்,

 

தண்ணீரை மறுக்காமல் வாங்கிக் குடித்தவர் , குடித்து முடித்ததும் கேட்ட முதல் கேள்வி  “என் பொண்ணுக்கு என்ன ஆச்சு? ”

 

“நீங்க கவலைப்படுற மாதிரி எதுவுமில்லை மேடம் ” அவரை எப்படி சமாளிப்பது என்று உள்ளுக்குள் அவன் யோசிக்கும் பொழுது சந்திரிகாவே பேச்சை தொடர்ந்தார்

 

“அப்போ , அவ ஏன் ‘நான் சந்தனான்னு சொல்லனும்? ”

 

“அ…..து…..வ….ந்….து ….”  ‘கடவுளே இந்த சிக்கலை எப்படி சரி செய்வது? ‘ மனதிற்குள் கடவுளிடம் மன்றாடினான்

 

சிறிது நேரம் அமைதியாக இருந்து எதையோ தீவிரமாக சிந்தித்த சந்திரிகா, திடுமென ஒரு கேள்வியை கேட்டார்

“சந்தனா !!!!!!அந்த குகையில செத்துப்போன பொண்ணு தான?”

 

அவரது முக பாவமே பிரகாஷை கலவரபடுத்தியது, அதனை மறைத்து “ஆ……..ஆ…..ஆமாம் மே……..டம் ” என்றான் திணறலாய்

 

 

சந்திரிகாவின் கண்கள் விரிந்தன “அப்படின்னா!!!!!!!!!!  அந்த பொண்ணோட ஆ……..வி……..!!!!” பயத்தில் அவரது முகம் வெளிரியது

 

“………” பிரகாஷிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை,  ஆனால் இதுவும் ஒருவகையில் நல்லது தான், சந்திரிகாவின் வழியிலேயே சென்று அவரை சமாளிப்பது ஈசி தானே

 

பிரகாஷ் அமைதியாக இருப்பதை பொருட்படுத்தாமல் சந்திரிகாவே தொடர்ந்தார் “ஆமாம் இது ஆவியேதான், என் பொண்ணு இப்படி நடந்துகிட்டதேயில்ல, அந்தமான் போயிட்டு வந்ததுக்கப்புறம் தான் நந்தினி இப்படியெல்லாம் நடந்துக்கிறா ”

 

“அய்யோ!!!!!  ஆவியா?  ” பயந்ததுபோல் சந்திரிகாவிற்கு சிந்துபாடினான் பிரகாஷ்

 

“ஆவியே தான், நான் சந்தனான்னு தெளிவா சொல்லுதே! ” அவரது வெளிரிய முகம் மேலும் வெண்மையுற்றது

 

பிரகாஷிற்கே லேசாக உள்ளே சிலிர்த்தது,  பேய் என்றால் அவனுக்குமே பயம் தான், என்னதான் நவீன யுகமானாலும் பழமையில் ஊரிய ரத்தம் தானே உடலில் ஓடுகிறது.

 

உண்மை தெளிவாக தெரிந்த பொழுதும் பிரகாஷின் உள்ளே படபடத்தது இருக்கையிலிருந்து வேகமாக எழுந்து கொண்டார் சந்திரிகா

 

“ஜல்தி, ஜல்தி,  பாபாஜியை  கூப்பிட்டு பூஜை போடனும், சந்தனாவுக்கு ஏதாவது நிறைவேறாத ஆசையிருந்தா அதை நிறைவேத்தனும், அப்படி நிறைவேத்திட்டா அந்த ஆவி என் நந்தினியை விட்டு போயிடும்,  ருத்ரபிரதாப் எங்க? அவருக்கு தெரியுமா? ” பிரகாஷை துரிதப்படுத்தினாள்

 

“ருத்ரனுக்கு உடம்பு சரியில்லை தூங்கிறான் ” பிரகாஷின் தலை வலித்தது, நைட் ஷூட் முடிந்து அவன் களைப்பாக இருந்தான், போதாததற்கு இந்த சந்திரிகா வேறு,  ருத்ரன் அவன் பாட்டில் சோக கீதம் பாடிக்கொண்டு சாய்ந்துவிட்டான், இந்த சந்திரிகாவை எப்படி சமாளிப்து என்று அவன் சிந்திக்கும் போதே சந்திரிகா அவனை அவசரப்படுத்தினாள்

 

“போய் ருத்ரபிரதாப்பை எழுப்பு, என் பொண்ணு எனக்கு வேணும்” சந்திரிகா கத்திக்கொண்டிருக்கையில் பிரகாஷின் செல்பேசி அடித்தது

 

திரையில் சியாமளாவின் பெயரை பார்த்தவன் சந்திரிகாவை பார்த்தான்,  இப்போது பேச முடியாது என்று நினைத்து கட் செய்தான்

 

மீண்டும் மணியடித்தது ஏதோ பிரச்சனை என்று உள்ளே ஒரு குரல் கேட்க, போனை எடுத்து காதுக்கு கொடுத்தான்

 

எதிர்முனையில் சியாமளாவின் பதட்டக்குரல் நடந்தவற்றை கூற

 

“வாட்!!!!!?????”கலவரத்துடன் எழுந்தான் பிரகாஷ்

 

“…….”

 

“இதோ வந்துட்டேன், டோன்ட் வொர்ர்ரி ”

 

“மேடம் ஒரு முக்கியமான வேலை இப்போ வந்துடுறேன் ”  என்றவன் சந்திரிகாவின் பதிலை எதிர்பார்க்காமல் அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறினான்

 

*********

சந்தனாவின் அறை வாசலில் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார் சியாமளா.

 

அவரிடம் வேகமாக விரைந்தவன்

 

“வாட் ஹேப்பன்ட்? ”

 

“ஷீ இஸ் மிஸ்சிங் ” சியாமளாவின் கண்களில் பயம் தெரிந்தது

 

” ஹௌ கேன் திஸ் ஹேப்பன்? உங்க நர்ஸ் எங்க?”

 

“தெரியலை சார், ஷீ இஸ் ஆல்சோ மிஸ்சிங் ”

 

“இப்படி ர்ரெஸ்பான்சிபிளா இருக்கீங்களே ” பிரகாஷினுள்ளும் பயம் துளிர்த்தது

 

தனது செல்போனை எடுத்து செக்யூரிட்டியின் எக்ஸ்டென்ஷனுக்கு தொடர்பு கொண்டான்

 

“நந்தினி மேடம் வெளிய போனாங்களே வந்துட்டாங்களா? ” நேரிடையாக கேட்காமல் தலைகீழாக கேட்டான்

 

“இல்லை சார் இன்னும் வரலை ”

 

“ஓ ……ஓ…கே,  அவங்க கூட அசிஸ்டன்ட் யாராவது போனாங்களா? ” செக்யூரிட்டியின் வாயை கிளர முயன்றான்

 

“இல்லை சார் மேடம் தனியா தான் போனாங்க ”

 

“ஓகே, தேங்க்ஸ் ” என்று தொடர்பை துண்டித்தவன்

 

“ஷீ இஸ் அவுட் ஆப் த கேம்பஸ் ” என்றான் செய்வதறியாமல்

 

மேலும் கலவரமானாள் சியாமளா  “அவங்க ரெண்டு நாளா மெடிசின் எடுத்துக்கலை, இப்போ ஷீ இஸ் மிஸ்ஸிங், இட் இஸ் வெரி வெரி டேஞ்ஜரஸ் சார்”

 

“காட்!!!! ” வேகமாக தலையில் அடித்துக்கொண்டான் பிரகாஷ். இனி அவனால் தனியாக எதையும் சமாளிக்க முடியாது ருத்ரபிரதாப்பை எழுப்பித்தான் ஆக வேண்டும்.

 

எவ்வளவு எழுப்பியும் ருத்ரபிரதாப் எழுந்தானில்லை செய்வதறியாமல் நின்றான் பிரகாஷ்

 

முகங்களின் தேடல் தொடரும்…….

 

 




8 Comments

You cannot copy content of this page