Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-4

  அத்தியாயம் 4

 

 கதறி அழுதுக்கொண்டே அவர்களை நெருங்கஅவரின் செயலை அறிந்து இரண்டு போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்…  வெங்கட்ராமனும் தன் மனைவியை சமாதானம் செய்தார்

 

டேக் தி பாடிஸ் டு  மார்ச்சுரிஎன்று மேல் அதிகாரி உத்தரவிடஆம்புலன்ஸ்சில் உடல்களை அப்புறப்படுத்தி கேரளாவை ஒட்டியுள்ள சிறிய கிராமம் பாலக்காட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது

 

அங்கு மருத்துவர் பரிசோதிக்கமூன்று உயிர் உடலைவிட்டு பிரிந்திருந்த சமயம் நான்காவதாக மித்ராவை பரிசோதித்த டாக்டர் பல்ஸ் இருப்பதை அறிந்து உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்பின்பு ஆக்சிடெண்ட் கேஸை ஹாண்டில் செய்யும் போலீஸ் அதிகாரியை அழைத்து கொண்டு வந்த விபத்து கேஸ்சில், ஒருவருக்கு மட்டும் உயிர் இருப்பதாகவும் ஒரு ஆறுவயது ஒட்டிய சிறுமிக்கு மட்டும் உயிர் இருப்பதாகவும் தெரிவித்தார் ஆனால் அதையும் உறுதியோடு கூற முடியாது என்றும் முடித்துவிட்டார்

 

ஏன் என்று போலீசார் கேட்க பல்ஸ் இஸ் லக்கிங் ,அப்டர் 24 ஹார்ஸ் ஒன்லி கேன் சே எனிதிங்.. வி வில் வெய்ட் அன்டில்இட்ஸ் காட்ஸ் க்ரேஸ்ஷீ வில் ரேக்கவர் சூன்

 

இறந்த உடல்களை உரிமையுள்ளவர்களிடம் ஒப்படைக்க பின்பு ஸ்டேட்மெண்டை எழுதி வாங்கிக் கொண்டு உடல்கள் அனுப்பப்பட்டது வீட்டிற்கு வந்து இறங்கிய உடல்களை பார்க்க துணிவின்றி கமலம்மாள் அறைகுள்ளிருக்க தீபாவும் அவருடைய கணவர்  வெங்கட்ராமனும் வந்து இறங்கிய உடல்களில் மூன்று உடல்களே இருக்க மித்ரா எங்கே என்று அவர்களுள் கேள்வி எழுந்தது

 

அவர்கள் போலீசாரை தொடர்புக்கொண்டு விசாரிக்கபோலீசார் தான் விசாரித்து கூறுவதாக தெரிவித்தனர்அவர்களுக்கு துக்கம் ஒரு புறம்மிருந்தாலும், மறுபக்கம் சிறிது மகிழ்ச்சியாக இருந்ததுஅவர்கள் இறைவனிடம் தங்கள் பிராத்தனையை பலமாக வைத்தனர்மித்ரா உயிரோடு இருக்க வேண்டும் என்று அவர்கள் பிரார்த்தனை கடவுள் செவிக்கு எட்டியதோ என்னவோ மித்ரா ஆபத்து கட்டத்தை தண்டிவிட்டாள்

 

(சம்பாஷனைகள் முழுவதும் மலையாளத்தில் நடந்துக் கொண்டிருந்ததுஅதனை தமிழாக்கம் செய்துள்ளேன்)

 

பக்கத்தில் உட்கார்ந்திருந்த செவிலியரோமித்ரா கண்விழிக்க மருத்துவரை அழைத்து கொண்டு வந்தார் டாக்டர்டாக்டர்ஷீ இஸ் ரெஸ்பாண்டிங்என்று கூறமருத்துவர் விரைந்து சென்று பரிசோதித்த டாக்டர்  காவலாளிக்கு அழைத்து விஷயத்தை தெரிவித்தார்.. காவலரோ விரைந்து மருத்துவமனையை அடைந்தார்

 

காவலரை வைத்துக்கொண்டே மருத்துவர் பரிசோதிக்க காவலரிடம்ஷீ இஸ் நார்மல்பல்ஸ் நல்லாயிருக்குபட்???… பட் என்று காவலர் எடுத்து கொடுக்க( she lost her hearing power and one leg got damage)  அவள் கேட்கும் திறனை இழந்து விட்டாள்.. பின் ஒரு கால் மற்றும் அதன் செயல்பாட்டை இழந்து விட்டது என்று மருத்துவர் கூறியப்பின்…. ஸ்டேட்மெண்டை எழுதி வாங்கிக்கொண்டுஓகே டாக்டர் நான் இந்த பொண்ண பத்தி அவங்க வீட்டுக்கு இன்போர்மேஷன் கொடுத்துஅழைச்சிட்டு போக சொல்றேன் என்றார்

 

மித்ரா குழந்தைகள் வார்டிற்கு மாற்றப்பட்டால்அங்கும் அவளைப்போல் குழந்தைகள் அனுமதிக்கப் பட்டிருந்தனர்அவர்கள் அனைவரும் தாய்,தந்தை உற்றார் உறவினர்கள் என்று அனுமதிக்கப்பட்டோர்அவர்கள் அனைவரும் குருகுலத்தை சேர்ந்தவர்கள்

 

 ஏனெனில் இரண்டு நாட்கள் முன் கனமழையின் காரணமாகபாறைகள் இடிந்த வேளையில்ரோடு இரண்டாக பிளந்ததில்பேருந்தில் சென்றுக்கொண்டிருந்த குருகுல பிள்ளைகள் அனைவரும் பேருந்தில் இருக்கபேருந்து ஓட்டுநர் நிலைதடுமாறியதில்பேருந்து மண் சரிவில் கவிழ்ந்ததுநல்ல வேலையாக சரிவு பாதை அகலமாக இருந்ததால்..உயிர் சேதங்களின்றி தப்பித்தனர் அனைவரும்

 

கேரளா மாநிலம் காவல் துறையினரிடமிருந்து தீபாவுக்கு அழைப்பு விடுக்கஅங்கையோ துக்க நாள் முடிந்து ஒருவாரம் சென்றிருக்கவீடே அமைதியாக மனிதர்கள் அரவமின்றி காட்சியளித்தது

 

கே.கே குரூப்சின் ஆடிட்டிங்கிலிருந்து ஏற்றுமதி இறக்குமதி வரைக்கும்வேலைப்பாடுகள் அப்படியே முடங்கி கிடந்தனதீபாவோ  பிள்ளைகள் மூவரையும் தன் மடியில் போட்டு உறங்க வைத்துக் கொண்டிருக்க

 

ஆதியோ சித்தி அப்பா எப்ப வருவாருஎன்று அவளை கேள்வியால் துளைத்தெடுத்தான் பாவம் தாய் பிறந்ததும் விட்டு சென்றார் தந்தையும் விதிக்கு பொறுக்காமல் அழைத்து கொண்டது என்று மீண்டும் மீண்டும் கண்களில் கண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்க

 

அப்பொழுதுதான் அவர் மண்டையில் சம்மட்டியால் அடித்துப்போல் மித்ரா பத்தின என்னோட்டம் நினைவு வர..’ ஐயோ கடவுளேஎன் பிள்ள அங்க என்ன நிலைமைல இருக்கானு தெரியலையேகடவுளே நாங்க உனக்கு என்ன பாவம் பண்ணினோம்என்று வாய்விட்டு அழக்கூட முடியாமல்பிள்ளைகள் முன் அழுதாள் பயந்து விடுவார்கள் என்றுமனதில் புலம்பி அழுதார்

 

அந்நேரம் பார்த்து சரியாக அழைப்பு வர யாராக இருக்கும் என்றுபின் மித்ராவின் நியாபகம் வர.. பிள்ளைகளின் உறக்கம் கலையா வண்ணம் அவர்களை மென்மையாக சோபாவில் கிடத்திஅலரிக் கொண்டிருந்த அலைபேசியை எடுத்து ஹலோஎன்றார்

 

மறுமுனையில் இருந்த காவலர் (மேடம் இவ்விட ஒரு பெண்குட்டி ஆக்சிடெண்ட் கேஸில் அட்மின் செய்துதமிழில் காண்போம்)… மேடம் இங்க ஒரு சின்ன பொண்ணு ஆக்சிடெண்ட் கேஸில் அட்மிட் ஆகியிருக்காங்க இல்லையா அவங்க நார்மலா இருக்காங்கசோ நீங்க வந்து கூட்டிட்டு போலாம்என்று கூறிமுடித்தார்..

 

தீபா இந்த விஷயத்தை தன் வீட்டாரிடம் தெரிவிக்ககமலம்மாள் உடல் நிலை சற்று தேறிவந்ததை அடுத்து அவர் மட்டுமின்றி தீபாவும் வெங்கட்டும் காலையில் விரைவாக காரை கிளப்பி கொண்டு பாலக்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையை சென்றடைந்து ரிஸப்ஷானில் அறிந்து கொண்டு மித்ரா இருக்கும் இடத்திற்கு சென்றனர்ஆனால் அங்கு விதியின் சதியோ இல்லை அவர்களின் கெட்ட நேரமோஅங்கு மித்ராவை காணவில்லை

 

அவர்களின் மகிழ்ச்சி நீரூற்றுப்போல் பொங்கி அடங்கியதுபின் காவலரிடம் விரைந்து கூறகாவலர் விசாரித்ததில் அங்கு அதே வார்டில் அட்மின் செய்யப்பட்ட குருகுல குழந்தைகளுடன் சென்றிருக்க கூடும் என்று கூறிஅது எந்த ஆஷ்ரமம் என்று அறிய சரியாக தகவல் கிடைக்காததால் மீண்டும்  ஏமாற்றதோடு திரும்பிச் சென்றனர்

 

கமலம்மாளிடம் விஷயம் தெரிவிக்க அவருக்கு அதிர்ச்சியின் காரணமாககை கால்கள் ஒரு பக்கம் இழுத்துக்கொண்டு வலிப்பு வந்துவிட்டதுஅன்றிலிருந்து அவருக்கு ஒரு கை தன் செயல்பாட்டை இழந்தது

 

கேரளா மாநிலம் திரிச்சூரில் உள்ள நாராயண சர்மா தபுவனம் என்னும் ஆஷ்ரமத்தில் குழந்தைகளோடு குழந்தையாக மித்ராவை அவர்களே அழைத்து சென்றனர்ஆறு வயது சிறுமிக்கோ தான் எங்கு இருக்கிறோம் என்று புரியாமலிருக்க… ஆஷ்ரமத்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் இவளிடம் விசாரிக்க அழுகை எட்டி பார்த்தது உதட்டை பிதுக்கிக்கொண்டு அம்மா,அப்பா கார் விழுந்து தலைல ரத்தம் என்று வார்த்தைகளை கோர்க்க முடியாமல் அழத்தொடங்கிவிட்டால் அவள் கூறியதை வைத்து அப்பெண்மணிக்கு புரிந்து போனது இவளின் பெற்றோர்கள் விபத்துக்குள்ளாகி இறந்து விட்டனர் என்று

 

அப்பெண்மணிக்கு இவளை தனியாக விட மனமில்லாமல் அவருடன் சேர்த்து மித்ராவையும் தங்களுடன் அழைத்துக்கொண்டு ஆஷ்ரமத்திற்கு வந்தனர்

 

மித்ராவுக்கு தான் பேசுவதே கேட்கவில்லை பின்பு வலதுகாலை அசைக்க முடியவில்லைஅந்த ஆஷ்ரம பெண்மணியின் பெயர் அம்பிலி அவரே மித்ரா நன்றாக குணமாகும் வரை பார்த்துக்கொண்டர் கால் மற்றும் முழங்கால் கருவியின் உதவியோடு அசைக்க (knee crutch its flexible to move legs as natural apart from damaged) முடிந்தது

அங்கு உள்ள அனைவருமே தங்கள் வாழ்க்கையை தொலைத்து தங்களையே தொலைத்து அடைக்கலம் வேண்டி வந்தவர்கள் தான்அங்கு இருப்பவர்கள் அனைவருமே எல்லோரிடமும் அன்பாக இருக்கமுகத்தில் எந்நேரமும் சோகத்தை சுமந்துக்கொண்டு இரவின் தனிமை பழக்கமில்லாததால் அம்மாஅம்மா என்று இரவில் அரற்றிக் கொண்டிருக்க.. அம்பிலியே அவள் சோகமாக இருக்கும் நேரம் அவளின் சோகத்தை துடைத்துஇரவில் அவளுடன் தங்கிக்கொள்வார்

 

அவளோ தூக்கத்தில் தன் அன்னை என்று அவர்மேல் கால் போட்டு ஒரு கையால் அவர் கழுத்தை கட்டிக்கொண்டு உறங்கிவிட்டாள்

 

டேய் ஆதி உங்க அம்மா நீ பிறந்ததும்உண்ண விட்டுட்டு போயிடங்களாமேயாரு கூட ஓடிப் போனாங்க என்று தினேஷ் குமார் எம்.ஆர் கம்பெனியின்(MD & chairman)  ராமநாதனின் ஒரே மகன் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன்

 

ஆதி மற்றும் ஜெகதீஷ் இவர்களுடன் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவன்தன் தந்தையின் புத்தியையும் , தேள் கொட்டும் பேச்சையும் அச்சு வார்த்தது போல் கொண்டிருந்தான்அவன் தன்னை சீண்டவது சகஜமென்று எண்ணி விலகும் ஆதி இன்று தனக்கு பிடிக்காத அன்னையை பற்றி பேசியதும்  பொறுமையை இழந்தான்… கை முஷ்டி இறுக அவனை பார்த்து ஒரு அடி எடுத்து வைத்தவனின் முகத்தைக் கண்ட ஜெகா அவனை தடுக்க

 

அவனின் கையை உதறிக்கொண்டு சீறி பாய்ந்து அந்த இளங்கன்றுஅவன் அவனை அடித்ததில் அவன் மூக்கு உடைந்து ரத்தம் கொட்ட தொடங்கபெரிய கலவரமாக மாறியதுபின் இருவரும் ப்ரின்சிபல் ரூமில் தலை கலைந்து, பள்ளி சீருடை கிழிந்து மூக்கில் ரத்ததோடு தினேஷும்கையில் சிராய்ப்போடு ஆதியும் என இருவரும் நின்றிருந்த கோலத்தை கண்ட ப்ரின்சிபல் அவர்களை வார்ன் செய்து வகுப்பிற்கு அனுப்பினார்

 

பின்பு வீட்டிற்கு வந்து இருவரும்உள்ளே நுழைந்த வேளையில் தீபா ஆதியை கண்டு பதறி அவன் அருகில் வந்தார் என்னடா ஆதி என்னாச்சுஎன்று கேட்க மிகுந்த கோபத்தில் அவர் பேச்சை சட்டை செய்யாதுவிறுவிறுவென்று மாடி படியேறி தன் அறைக்கு சென்று கதவை தாழிட்டான்

 

அவன் சென்றதையே இருவரும் பார்த்திருக்கதீபா ஜெகதிஷுடம் திரும்பி என்னடா ஆச்சிஏன் அவன் இவளோ கோபமா போறான் என்று தீபா தன் மகனிடம் கேட்கஅவனோ எப்பவும் போல தினேஷுக்கும் இவனுக்கும் சண்டைதான்ஆனா இன்னைக்கு ரொம்ப முத்திடிச்சி

 

சோ போத் ஆஃ தேம் வெர் டேக்கென் டு ப்ரின்சிபல் ரூம்மாம் இரண்டு பேரையும் ப்ரின்சிபல் வான் பண்ணி அனுப்பினார் என்று முழு கதையை தன் அன்னையிடம் கூறி முடித்தான்

 

தீபா ஒரு முடிவுடன் இவனை இப்படியே விட்டால் சரிவராது என்று தன் கணவர் வந்த பிறகு கலந்துபேசி ஆதியையும், ஜெகதீஷையும் ஸ்டேட்ஸில் படிக்கவைக்க திட்டமிட்டார்

 

தன் கணவரும் வந்துவிட இச்செய்தியை கூறஅவரும் இந்தாண்டு முடிந்து இருவரையும் ஸ்டேட்ஸிற்கு தன் தங்கை வீட்டிற்க்கு அனுப்புவதாக கூறினார்மீண்டும் தீபாவிற்கு குழப்பம் சூழுந்து கொள்ள ஏங்க ஆதிக்கு நம்ப நல்லதுதான் பண்றோம்அவன் நம்பல தப்பா நினைக்கமாட்டானேஏன் கேட்கிறேன்னாநாம இழந்தது போதும்அந்த தினேஷ் அப்பா ரொம்ப பொல்லாதவர்அவன் வேற செல்ல மகன் அவருக்குஇன்னைக்கு நடந்தது எனக்கு பயமா இருக்குஇதுக்கு மேலையும் நம்ப சும்மா இருக்கிறது சரிவராதுங்கஎன வெங்கட்ராமனோ சரிம்மா பசங்க எக்ஸாம் முடிக்கட்டும் அதுவரைக்கும் கொஞ்சம் வெய்ட் பண்ணு என்று கூறினார்தீபா தன் கணவரிடம் ஆதியை ரகசியமாக கண்காணிக்க ஒரு ஆளையும் போட சொன்னார்….USA செல்லும் வரை எந்த வம்புக்கும் போகாத படி செய்தார்

 

 எக்ஸாம் முடிந்து கோடை விடுமுறை இருவரும் நன்றாக ஊரை சுற்றிவிட்டு தன் நண்பன் ஒருவனின் பிறந்தால் கொண்டாட்டத்தை கொண்டாடிவிட்டு நள்ளிரவில் இருவரும் வீடு திரும்பஜெகதீஷ் காலிங் பெல்லை அழுத்த அவன் செய்கையை தடுத்த ஆதிடேய் நீயே மாட்டிவிட்ருவ போல நகறு நான் ஓபன் பண்றேன் என்று கூறி தன் பாக்கெட்டில் இருக்கும் விட்டு கல்லா சாவியை கொண்டு ஜெகதிஷிடம் கொடுத்து கதவை திறக்க செய்தான்..டேய் ஆதி பண்றதுலாம் நீ ஆன என்ன மட்டும் தெளிவா மாட்டிவிடு என்று சலித்துக் கொண்டு கதவை திறந்து

 

பூனைப்போல் பதுங்கி சென்று கதவை உட்புறமாக சாற்றிவிட்டு திரும்பியவர்கள் கால் மேல் கால் போட்டுக்கொண்டு அவர்களின் செயலை கவனித்து கொண்டிருந்தார் வெங்கட்ராமன்ஜெகாவோ அதிர்ச்சியில் உறைந்து நிற்கஆதி தலை நிமிர்ந்து எங்கயோ வேடிக்கை பார்ப்பதுபோல் நின்றிருந்தான்

 

அவனின் நின்றுந்த தோற்றமே தான் யாருக்கும் பயபடமாட்டேன் என்றிருக்கஅவர்களின் அருகில் சென்றவர்நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு மறுநாள் ஸ்டேட்ஸ்க்கு கிளம்புறீங்க டிக்கெட் புக் பண்ணியாச்சி அங்க உங்க ரெண்டு பேரையும் பிக்கப் பண்ண ஆள் வரும் என கூறும்போதே ஆதி பேச முயற்சிக்ககை கொண்டு தடுத்தவர் என் பேச்சுக்கு மறுபேச்சு பேசக்கூடாது இது நான் எடுத்த முடிவு இல்ல தீபா எடுத்த முடிவு என்றார் தன் சித்தியை பற்றி கூறியதும் சட்டென்று அடங்கினான் ஆதி

 

ஜெகாவோ அனுப்பினா இவன மட்டும் அனுப்பவேண்டியது தான நான் என்ன இவனுக்கு இலவச இணைப்பா என்று தோன்ற தன் தந்தை எடுத்த முடிவு மாற்றப்படாது என்று அமைதியாக சரி என்றான் ஜெகதிஷும்ஓகே கைஸ் பி ரெடி.. குட் நைட்என்று கூறி சென்றார்

நன்றி தோழமைகளே

 

முள்ளோடு முத்தங்கள்  தொடரும்

 

திவ்யபாரதி

 
3 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  vasanthi vasu says:

  Super


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  NICE UD SIS


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Super