Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-5

அத்தியாயம் 5

 

சுதந்திர தேவி சிலை(statue of liberty), மத்திய பூங்கா(central park), எம்பையர் ஸ்டேட் கட்டிடம்(emipre state building), சதுர முறை ( time and square), கலை அருங்காச்சியம், (metropolitan mesum of art),புரூக்ளின் பாலம் (brooklyn brodge 19th century bridge) மிக அழகாக காலை வெளியுலகுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில் நீரூற்று சலசலப்பும் பறவைகளின் மத்தியில் பார்ப்பவர்களை அழகாக கவரும் வண்ணத்தோடு அமர்த்திருந்தது அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் நியூயார்க் மாநகரம்…

 

(என்னடா இவ இவளோ பில்டப் கொடுக்குறானு பாக்குறிங்களா நீங்க நினைக்கிறது சரிதான் நம்ப ஹீரோ என்ட்ரி ஆயாச்சி😊😊😊)

நீல நிறம்  மாக் லாரின் (mc laren) 570 s கார் ரேஸ் டோர்னமெண்ட் அண்ட் பிராக்ட்டிஸ்  ஸ்பாட் (car race tournament and practise spot) என்ற இடத்தில் காரில் ஆயிரத்திற்கும் அதிகம் உள்ள cc வாகனம் புயல் வேகத்தில் காற்றைக் கிழித்திக்கொண்டு வேகமாக சென்றுக்கொண்டிருக்க அதனை தொடர்ந்து பின்னால் அதே வேகத்திற்கு  ஈடுகொடுத்து  ஷைன் சில்வர் நிறம் கொண்ட போர்ஷீ கேமன் ( porsche cayman) 718

மாக் லாரின் காரின்  பின் அதே வேகத்திற்கு வந்துக்கொண்டிருந்தது… அங்கு பார்த்துக் கொண்டிருந்த மக்களும் மிக ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க காரின் வேகம் காற்றைவிட வேகமாக கேட்போரின் செவிகளை கிழித்துக் கொண்டு சென்றது…

மக்கள் ஆரவாரத்துடன் கோஷங்கள் எழுப்பி கூச்சலிட்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்க ஒரு கட்டத்திற்குமேல் ஆரவாரங்கள் எல்லாம் அடங்கி மிகுந்த பதட்டத்துடன் வெற்றியாளர் யார்?? என்று அதிக ஆர்வத்தோடும் மிகுந்த பதட்டத்தோடும் வெற்றியாளரை எதிர்க் கொண்டிருக்க அதே சமயம் நேரமும் முடிந்துக்கொண்டிருக்க வெற்றி கோட்டை தோடுபவர் யார்? என்று பார்த்திருக்க பார்ப்பவர்களின் எண்ணத்தில் மண்ணு விழுவதுப்போல்… இரண்டு கார்களும் ஒரே நேரத்தில் வெற்றி கோட்டை தொட்டது… இரண்டு கார்களுக்கும் பின் வந்த கார்கள் வேகம் குறைக்கப்பட்டது…

 

கோட்டைத் தோட்ட பின்பு நீல நிற மாக் லாரின் 570s காரிலிருந்து  ஆறடிக்கும் மூன்று அங்குலம் குறையாமல் பிறை நெற்றி கூர்மையான மூக்கு, அடர்ந்த கேசங்கள் ,அகன்ற மார்பு என பார்ப்பவரை வசீகரிக்கும் கண்கள் சரியான உடற்பயிற்சி காரணத்தால் முறுக்கேரியிருந்த தேகம் சிவந்து விரியும் அழுத்தமான உதடுகள் என்று பார்ப்பவர்களை அடித்து  வீழ்த்தி போதைக்கொள்ளச் செய்யும் வசீகரமான தோற்றத்தைக் கண்டு காரிலிருந்து இறங்கிய ஆதித்திய வர்மனைக் கண்டு மக்கள் கூட்டங்கள் ஆர்பரித்தது…

அதனின் பக்கத்தில் வந்து நின்ற போர்ஷி கேமன் 718 காரிலிருந்து அதே ஆறடிக்கும் அசறாமல், அகன்ற மார்பும்,சற்று மாநிறத்திலிருந்து  தேகம் கொண்டு, தன் புன்னகையிலையே அசத்தும் அழகுடன் காரிலிருந்து இறங்கிய ஜெகதீஷ் வர்மன் ஆதியுடன் அருகில் வந்து நின்றுக்கொண்டான்…

அவர்களை பேட்டி எடுக்க அங்கு மீடியா மற்றும் பத்திரிகையாளர்கள் என்று சூழ்ந்துக்கொண்டு தங்கள் கேள்விகளையைக் கேட்க தொடங்கினர்… ‘சார் நீங்க ரெண்டு பேரும் பிரதர்சா ‘ என்று கேட்க ஒரே வரியில் இல்லை என்று மறுத்துவிட… பின் அவளது பக்கத்தில் நிற்கும் பெண்மணியோ நீங்க ரேசர்சா என்று கேட்க அதற்கும் இல்லை என்று தலையசைத்தனர்…

 

பின்பு அக்குழுமமே குழப்பத்தில் ஆழ என்ன சார் என்ன கேட்டாலும் இல்லன்னு சொல்றீங்க என இருவரும் சேர்ந்து அவர்களை சிறிது நேரம் குழப்பிவிட்டனர்… ‘ சார் வி ஆர் ரெக்வஸ்டிங் சார்’ என்று கேட்க…. ‘ஓகே ஓகே வெய்ட் மை செல்ப் ஆதி ஆதித்திய வர்மன் ஹி இஸ் ஜெகதீஷ் வர்மன்’ என்று ஆதி கூறும் முடிக்கும் முன் ‘ சார் நீங்க… நீங்க ரெண்டு பேரும் கே.கே குரூப்ஸ் MD’s தான சார் என்று அனைவரும் ஆச்சிரியத்தில் ஆழ்ந்தனர்…

ஸ்டேடியத்தில் உள்ள அனைவரின் கவனமும் மக்கள் கூட்டமும் மீடியா பத்திரிக்கையாளர் என்று அனைவரின் கவனமும் அவர்கள் மீது நிலைத்திருக்க… சார் சொல்லுங்க எப்படி இந்த ஒரு வருஷத்துல இவ்ளோ பெரிய அபார வெற்றியைச் சந்திச்சிருக்கீங்க என்று பலவாரு கேள்விகள் எழுப்ப…. ‘ வெய்ட் வெய்ட் பொறுமையா கேளுங்க என்று கூறிக்கொண்டிருக்கும் போதே மக்கள் கூட்டத்தை அப்புறப் படுத்திவிட்டு ஆதியையும், ஜெகாவையும் பாதுக்காக்க காட்ஸ் வந்துவிட…

 

கூட்டத்தின் ஊடே நின்றிருந்த இருவரையும் பாதுகாத்து அழைத்து செல்லும் வேளையில்… ஒரு பத்திரிகையாளர்’ சார் நீங்க ரெண்டுபேரும் இண்டஸ்ட்ரியல் மீட்டிங் அவார்ட் பங்க்ஷனில் விருது வாங்கியதை பற்றியும், தொழிலில் ஒரே வருடத்தில் வெற்றி அடைந்ததை பற்றி சொல்லுங்க” என வற்புறுத்தினார்…

ஆதியோ ‘வி வில் மீட் யு  சூன் கைஸ்’ என்று கூறி கூட்டத்தின் ஊடே இருவரும் விடைபெற்று சென்றனர்…

 

 

12ஆம் வகுப்பு முடிந்து ஸ்டேசுக்கு வந்த புதியதில் இருவரும் தொழில் நுட்ப சம்பந்தமான பாடப்பிரிவை எடுத்து அமெரிக்காவில் புகழ்பெற்று விளங்கும் அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் தங்களின் ஆறு வருடப்படிப்பை  முடித்துக்கொண்டு இருவரும் தங்களின் கல்வியறிவைக் கொண்டு பிசினசில் கால் பதித்தனர்… அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  கே.கே குரூப்ஸின்  ப்ரான்சை புதிதாக ஆரம்பித்து இருவரும் ஒரே வருடத்தில் அபார வளர்ச்சி அடைந்தனர். அவர்களின் சாதுரியமும், அறிவுக்கூர்மையும், ஆசாத்திய உழைப்பும் ஒரே வருடத்தில் பல கம்பெனிகள் போட்டியில் முன்னனியில் இருக்க அவர்களால் எளிதாக வெற்றி பெற முடிந்தது…

 

அத்தனை கம்பெனிகளை புள்ளிகள் விகிதத்தில் அடித்து வீழ்த்தினர் எனவே அவர்களின் அசாத்திய திறனைக் கண்டு தொழில் நுட்ப குழுமம் அனைவரும் ஒருங்கிணைந்து அவர்கள் இருவரையும் கௌரவிக்கும் வகையில் 2018 இந்த ஆண்டுக்கான சிறந்த விருதான ‘ இண்டஸ்ட்ரியல் பெஸ்ட் அவார்டை’ தட்டிச் சென்றது கே.கே குரூப்ஸ் ஆப் கம்பெனி…

 

இருவரும் படிப்பு முடிந்ததும் இந்தியாவிற்கு சென்று தங்களின் பணியை தொடர வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்க… தீபா இவர்களின் திட்டத்தை அறிந்து ‘ ஆதி ஜெகா நீங்க சொல்றது சரிதான் பட் இருந்தாலும் பழக்கம் இல்லாத இடத்துல தொழில் தொடங்கிறதுக்கு  கொஞ்சம் காலமாகலாம்… சோ நீங்க ரெண்டு பேருக்கும் பிசினஸ் ஸ்டார்ட் பண்றது நியூயார்க் தான் பெஸ்ட்’ என்று அவர்களின் இந்திய வரவை ராமநாதனிற்கு பயந்து தீபா தடுத்தார் ….

ஓகே சித்தி என்று கூறியவன் தன் சித்தி சொல்லிற்கு மறுபேச்சு பேசாமல் சம்மதித்தான்… தங்களின் அதித உழைப்பால் வெற்றியும் கண்டனர்…

Every day discovering something brand new
I’m in love with your body

Oh I oh I oh I oh I
I’m in love with your body
Oh I oh I oh I oh I
I’m in love with your body
Oh I oh I oh I oh I
I’m in love with your body

ஆங்கில பாணியில் எட்ஷேரின் பாடல் அலைபேசியில்  ஒலித்துக்கொண்டிருக்க தூக்கத்தின் ஊடே அலைபேசியைக் கைகளால் அலசி வெற்றிகரமாக கண்டெடுத்தவன் ஸ்க்ரினில் ஒலித்துக்கொண்டிருந்த பெயரைக்கண்டு முன்முறுவல் பூத்து பச்சையா சிகப்பா என்று அலைபேசி தேர்ந்தெடுக்கச் சொல்லி அவனை அழைக்க அவனோ பச்சையை தேர்ந்தெடுத்து தன் காதில் பொறுத்திக்கொண்டு ‘ ஹலோ நேஹா பேபி ‘ என்று குழைய அவளோ ‘ ஹலோ டார்லிங்’ என்று மறுமுனையில் இவளும் குழைந்தாள்…

அவனோ அழைத்துவிட்டு உறங்கிவிட… மறுமுனையில் அவளோ ‘ ஹலோ ஹலோ’ என்று மீண்டும் கத்த தூக்கம் களைந்தவனாக… ‘சொல்லு பேபி என்றான்…

அவளோ பேபி இன்னைக்கு எனக்கு காலேஜ் இல்ல…  ஈவினிங் எனக்கொரு மாடல் அட் இருக்கு சோ நீங்களும் என்கூட வரணும் என்று அவள் கெஞ்ச…

பேபி இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு சோ இட் இஸ் நாட் பாஸ்சிபல் பேபி இன்னொரு நாள் வரேன்  ப்ளீஸ்’ என்று அவளிடம் இவன் வேண்ட… அவளோ எனக்குத் தெரியும் நீ இப்படித்தான் சொல்லவேணு ‘ ஐ ஹேட் யூ ஆதி’ என்று சொல்ல கோபம் கொண்டு கொஞ்சுவதுப் போல் அவனிடம் கூறி அழுவதுப்போல் குழைய ….

அவனோ ‘ ஐ லவ் யூ பேபி ‘ என்று கூறி முத்தம் ஒன்றை வைத்து தொடர்பை துண்டித்தான்…..

(ஹீரோயின் என்ட்ரி)

ஷீரடி சாய்பாபாவின் காயத்ரி :

ஓம் ஷீரடி ஸாயி நிவாஸாய வித்மஹே
ஸர்வ தேவாய தீமஹி
தந்தோ ஸர்வப்ரசோதயாத்

ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:

ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:

ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:

ஓம் சேஷ சாயினே நம:

ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:

ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:

ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:

ஓம் பூதாவாஸாய நம:

ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:

ஓம் காலாதீதாய நம:

ஓம் காலாய நம:

ஓம் காலகாலாய நம:

ஓம் காலதர்பதமனாய நம:

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:

ஓம் அமர்த்யாய நம:

ஓம் மர்த்யாபயப்ரதாய நம:

ஓம் ஜீவாதாராய நம:

ஓம் ஸர்வாதாராய நம:

ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:

ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:

ஓம் அன்னவஸ்த்ரதாய நம:

ஓம் ஆரோக்ய÷க்ஷமதாய நம:

ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:

ஓம் ருத்திஸித்திதாய நம:

ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:

ஓம் யோக÷க்ஷமவஹாய நம:

ஓம் ஆபத்பாந்தவாய நம:

 

108 மந்திரங்கள் முடிவடைய ‘ ஹேமாவோ அடியேய் மித்ரா ஏண்டி மனுஷன காலையிலேயே வெறியாக்கிற’ …. அந்த பாட்டை ஆப் பண்ணு இல்லாட்டி சவுண்ட் கம்மியா வையுடி’ என்று உறக்கத்தின் ஊடே கத்திக்கொண்டிருக்க அவளோ எதும் காதில் விழாததுப்போல் அமைதியாக தன் வேலையை கவனித்துக்கொண்டிருக்க… தூக்கம் கலைந்த ஹேமாவோ அடியேய் என்று

எழுந்து வந்து அவள் அருகில் தன் இரு கைகளைக் கொண்டு இடுப்பில் வைத்து முறைத்துக் கொண்டே அவள் அருகில் சென்றாள்… தன் தலையில் அடித்துக்கொண்டாள் உண்மையாகவே மித்ராவுக்கு காதில் விழவில்லை ஏனெனில் அவள் காதில் பொருத்தியிருக்கும் கேட்கும் கருவி அவள் கழுத்தில் கிடந்தது …

 

கேட்கும் கருவியை எடுத்து அவள் காதில் பொருத்தி அவள் மீது கோபம் கொள்ள முடியாமல் ‘ மித்ரா நான் உன் காலில் வேணுனாலும் விழுறேன் டி ப்ளீஸ் டி எது செஞ்சாலும் தயவு செய்து உன்னோட ஹியரிங் டூல்ஸை போட்டுக்கிட்டு வேலை பாருடியம்மா’ என்று தன் இரு கைகளை கூப்பி அவளிடம் வேண்ட ‘ மித்ராவோ  சாரி டி… சத்தியமா கேட்கலைடி… மன்னிச்சிக்கோ டி’ என்று தன் தோழியிடம் வேண்ட… அவளோ சரி டி இது என்ன இன்னைக்கு நேத்தா நடக்குது… கடந்த பத்து வருஷமா இதே  டையலாகத்தான் நீயும் சொல்ற.. நானும் அதே மாதிரிதான் சொல்லிட்டு இருக்கேன் ஓகே டி மச்சி யூ கேரி ஆன்… நானும் என் தூக்கத்தை கன்டினியு  பண்றேன்’ என்று கூறிவிட்டு உறங்க சென்றுவிட்டாள்… மித்ரா ஆஸ்ரமத்தில் சேர்ந்த முதல் இன்று வரை அவர்களுக்குள் தோழியைத் என்பதை தாண்டி நல்ல பிணைப்பு இருந்தது…

அதனை தொடர்ந்து இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தனியே விடுதி எடுத்து க் கொண்டு இருவரும் சென்னையில் உள்ள ‘ மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில்’ அக்கவுண்ட்டிங் இறுதியாண்டு படிப்பை படித்து வந்தனர்…

காலை 10 மணி வகுப்பு ஆரம்பிக்க ‘ மே ஐ கமின் சார்’ என்று இருவரும் ஒரு சேர குரல் கொடுக்க இருவரைக்கண்டு ஆசிரியர் ‘ கேட்டின் ஆல்வேஸ் லேட்’ என்று வசைப்பட தொடங்க சாதிக்கின் கண் மித்ரா உள்ளே வரும் போதே அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்…

அவன் பார்வையை ஒன்றும் மித்ரா அறியாமலில்லை ஆனால் அவனைக் கண்டுகொள்ளாது தன் இருப்பிடத்திற்குச் சென்றாள்….

 

நன்றி தோழமைகளே

 

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

 

திவ்யபாரதி
4 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  vasanthi vasu says:

  Very Nice ud


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Sema entry


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Meenakshi Sivakumar says:

  Semma ga akka. Unga writing rmba nalla irukkunga akka. All the best, congratulations go ahead


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  Nice ud sis