Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-6

அத்தியாயம் 6

உள்ளே நுழைந்து தங்கள் இருப்பிடத்திற்கு சென்றனர்…. ‘ஹேமாவோ ஏய் சிண்டக்ஸ் டாங்க் நாவுருடி’ என்று அதே சிட்டிங் பெஞ்சில் அமர்ந்திருக்கும் காயத்ரியை ஏச… அவளோ ம்க்கும் என்று நொடித்துக்கொண்டு நகர்ந்து அமர’ ஹேமாவோ பாத்துடி கழுத்து சுளிக்கிக்க போகுது  ‘என்றபடி  இருவரும் அமர்ந்து பாடத்தை கவனித்தனர்…

 

அதே நேரத்தில் கல்லூரிக்கான போட்டி என்று பத்து மாணவ மாணவிகள் வாசலில் நின்றுக்கொண்டு ‘ சார் ஒரு இன்போர்மேஷன் சார்’ என்று கூற… சாரோ ஆகமொத்தம் என்ன பாடம் எடுக்க விட்றதா இல்ல  என்று கூறினாலும் அவர்களை மறுக்காமல் உள்ளே அழைத்தார்…

 

உள்ளே வந்த மாணவர்களைக் கண்டு அமர்ந்துள்ள சக மாணவர்கள் என்ன என்று ஆர்வத்தோடு பார்த்திருக்க ‘ ஹாய் பிரண்ட்ஸ் நம்ப காலேஜூக்கு ஒரு சர்குலர் வந்திருக்கு என்னன்னா டெலன்டியே’20 (Talentiyea’20) போட்டி.  இது ஒரு நேஷனல் லெவல் காம்படிஷன்”

எங்களுக்கு நேம் லிஸ்ட் வேணும் பிரண்ட்ஸ்… எல்லாரும் கலந்துக்கணும்னு நம்ப காலேஜ் (chairman and correspondent) சார் சொன்னாங்க என்ன கையிஸ் சொல்றீங்க என்று கேட்க…

 

அங்கு அமர்ந்திருந்த சகமாணவர்கள் எல்லோரும் கூச்சலிட்டு கொண்டிருக்க… அங்கு நின்றுக்கொண்டிருந்த மாணவர்களோ நேம் கொடுத்துட்டு என்ஜாய் பண்ணுங்க என்று கூற. விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பெயரைக் கொடுத்தனர்… ஹேமாவோ மித்ராவை வற்புறுத்தினால்… மித்ராவும் தன் பெயரை பதிவுசெய்ய பெயரை பட்டியல் பெற்று  மாணவர்கள் விடைப்பெற்று சென்றனர்…

 

மாலை கல்லூரி முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்க ஹேமாவும் மித்ராவும் கல்லூரி வளாகத்தை விட்டு பார்க்கிங் செய்யும் இடத்திற்கு அருகில் வந்துக்கொண்டிருக்க… அவர்களுக்கு மிக அருகில் க்ரீச் என்று  சத்தத்துடன் வந்து நின்ற காரைக் கண்டு மித்ரா, ஹேமா இருவரும் அதிர்ந்து நின்றனர்…

யாராக இருக்கும் என்று பார்ப்பதற்குள் காரிலிருந்து இறங்கி புன்னகையுடன் அவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தான் சாதிக்…

 

ஹேமாவோ ‘ ஏய் மித்ரா என்னடி இவன் திருந்த மாட்டானா ? சும்மா சும்மா எப்பப்பாரு லூசு மாதிரியே பண்றான் டி… பாரு இன்னைக்கு இருக்கு அவனுக்கு’ என்று மித்ரா ஹேமா அவள் காதில் கிசுக் கிசுக்க…

அவர்களை நோக்கி அவன் “ஹாய் “ சொல்ல ஹேமாவோ வீணா போனவனே உனக்கு ஹாய் ஒரு கேடா ‘ என்று முனகினாள்.ஹேமாவோ மித்ரா இன்னைக்கு நீ இவனுக்கு ஒரு முடிவுகட்ற இல்ல நான் இவன வச்சிசெய்றேன் இவனை என்கிட்ட விடு இவன என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்களை நெருங்கியவன் ‘ என்ன… என்ன பத்திதான் பேசுறீங்க போல’ என்று கேட்டான்.

ஹேமாவோ “ஆமா சார் உங்கள பத்திதான் புகழ்ந்து பேசிட்டு இருந்தேன்” என்று செயற்கையாக அவனைப் பார்த்து சிரித்து வைத்தாள்…

 

அவனோ என்ன ‘ மித்ரா நீ எதுவும் பேச மாட்டேங்கிற’ என்று வருத்தத்தோடு கூறினான்’

மித்ரவோ‘ இல்ல சார் எனக்கும் உங்களுக்கும் ஒத்து வராது சார் ப்ளீஸ் என்று அவனிடம் கெஞ்சினாள் “

அவனோ ஹேமா ஒரு ரெண்டு நிமிஷம் நான் மித்ரா கூட கொஞ்சம் பேசணும் என ஹேமா மித்ராவை பார்த்து கண்களால் இன்னைக்கு ஒரு முடிவோடு பேசி முடிச்சிருடி என்று கண்களால் அவளுக்கு ஜாடை கட்டினாள்…

சரி என்று மித்ரா ஹேமாவிடம் சைகை செய்தாள்…

சாதிக் கல்லூரியின் சேர்மன் மகன் .முதலாம் ஆண்டு கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் சாதிக் மண்டையில் அடிபட்டு ரத்தம் வழிந்துக் கொண்டு கீழே கிடக்க, மாணவர்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டும் கோஷங்கள் எழுப்பிக் கொண்டும்இருந்தனர் மித்ரா சாதக்கின் அருகில் சென்று தன் சுடிதார் துப்பட்டாவை கொண்டு அவன் தலையில் இரத்தம் வந்த இடத்தில் அழுத்தி கட்டிவிட்டு அவனை அம்புலன்ஸில் ஏற்றிவிட்டாள்…

அரை மயக்கத்தில் இருந்தாலும் மித்ராவின் முகம் அவன் மூலையில் பதிந்தது… மருத்துவமனையில் அனுமதித்து ஒரு மாதம் சென்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மித்ராவை சந்தித்து நன்றி கூறினான்…

அவளோ பரவாயில்லை சார் என்று கூறிவிட்டு சென்றாள். சாதிக் மித்ராவின் மீது காதல் கொண்டான் அவனது மனதை அழகாக கொள்ளைக் கொண்டாள் ஆனால் ஒரு வருடம் சென்றுவிட்டது அவள் அவன் காதலை ஏற்கவில்லை…

இன்றும் அவளைத் தேடி வந்து மீண்டும்  காதலை யாசிக்க கடுப்பானவள்” சார் நான் திரும்பவும் சொல்றேன்” என்று அவள் ஆரம்பிக்க சாதிக் அவளை தடுத்து “ப்ளீஸ் மித்ரா இந்த சார் வேண்டாமே கால் மீ சாதிக் ஆர் ஜஸ்ட் நீ வா போ சொல்லி கூப்பிடு இட்ஸ் எனப்ப்” என.

சார் என்று அவள் ஆரம்பிக்க இதை மாத்த முடியாது போல என்று சாதிக் நினைத்துக்கொண்டு… அவள் பேச்சுக்கு செவி சாய்த்தான்… சார் நான் திரும்பவும் சொல்றேன் நான் அன்னைக்கு உங்கள காப்பாத்தனது ஒரு மனிதாபிமானத்துல தான் சார்…

சார் உங்கள நீங்களே  கன்பியுஸ் பண்ணிக்காதிங்க. நான் உங்கள ஹேர்ட் பண்ணிருந்தா சாரி சார் … என்று கூறி அவன் பேச்சுக்கு காத்திருக்காமல் அவள் சென்றுவிட அவனோ  நொறுங்கிப்போனான்…

மித்ரா வருவதை ஹேமா பார்த்திருக்க ‘ என்னடி என்று கேட்டக… மித்ராவோ நான் சொல்றது சொல்லிட்டேன் டி இதுக்குமேல நான் என்னடி பண்றது ‘ என்று தோழியிடம் கேட்க… ஹேமாவோ விடு டி பார்த்துக்கலாம்’ …

“சரி டி நீ டேலன்டியே’20க்கு பிராக்டீஸ் பண்ணு டி” என்று கூறிவிட்டு விடுதியை நோக்கிப் பயணப்பட்டனர்….

கே.கே குரூப்ஸ் கம்பெனி ஊழியர்கள் மிக ஆர்வமாக காத்துக்கொண்டிருக்க, கே.கே குரூப்ஸின் மிக பிரமாண்டமான நுழைவாயிலை கடந்துக்கொண்டு   ஜாகுவார் xj மற்றும் மசாட்டி குவாடியோ போர்டி இரண்டு கார்களும் நுழைந்த வேளையில் அங்குள்ள ஊழியர்கள் வாயை பிளந்துகொண்டு பார்த்திருக்க சார்க்கோல் ப்ளாஸர் ப்ளூ ட்ரெஸ் ஷிர்ட், பிளாக் சினோஸ் பிரவுன் லெதர் ஷூ, லெப்ட் சைடு வ்றிஸ்டில் டைடன் டைமொண்ட் வாட்ச் ( charcoal blazer blue dress shirt, black chinos, brown leather shoe, left side wrist titan diamond watch) பாந்தமாக கம்பீரத்தோடு இறங்கி வந்தான் ஆதித்ய வர்மன், மாஸ்ட் அண்ட் ஹாபெர் ஒயிட் சாலிட் ஸ்லிம் பிட் ப்ளாஸர்ருடன்(mast and harbour white solid slim fit blazer) இறங்கினான் ஜெகதீஷ் வர்மன்…

அவர்களின் கம்பீர அழகில் அனைவரின் இதயமும் சிக்கிக் கொண்டு வாயை பிளந்து  பார்த்து கொண்டிருக்க கே.கே குரூப்சின் பிஏ பிரபா அவர்களை அழைத்துக் கொண்டும் MD அறைக்கு சென்று அவர்களுக்கு தொழிலைப் பற்றி சொல்ல

ஆதியோ பிரபா ‘ வி ஆர் ஆல்ரெடி காட் இன்டு தி பிசினஸ் பிபோர் இட்செல்ப்  சோ நீங்க அட் ப்ரசென்ட நம்ப கம்பெனி அக்கோன்டிங்,ஷார்ஸ் ப்ளா ப்ளா டீடெயில்ஸ் அது மட்டும் சொல்லுங்க குய்க்  என்று கூற பிரபாவோ சற்று நேரம் நடுங்கிவிட்டான். அவனது கம்பீரம் கலந்த குரலில் சமாளித்துக் கொண்டு ஆதி கேட்ட விவரத்தை எடுத்துக் கூறினான்…

கமலம்மாளின் வற்புறுத்தலே அவர்கள் இருவரும் இந்திய வர காரணமாக இருந்தது… தீபாவும் வெங்கட்ராமனும் மறுப்பேச்சின்றி அவர்கள் இந்தியா வர சம்மதித்தனர்…

இந்தியாவிற்கு வந்ததும் கம்பெனி பற்றிய முழுவிவரம் அறிந்து அதன் செயல்பாட்டில் இறங்கி ஒரு மாதம் சென்றிருந்தது. வர்ஷா தீபாவின் மகள் ஜெகாவின் உடன் பிறந்த தங்கை, ஆதியின் செல்ல தங்கை .வர்ஷா, தீபா,வெங்கட்,ஜெகா என்று அனைவரும் மாலை கார்டனில் அமர்ந்து மாலை சிற்றுண்டி அருந்திக்கொண்டிருக்க…

வீட்டின் வளாகத்தில் கார் நிறுத்தும் சத்தம் கேட்டு… அனைவரின் பார்வையும் கார் வந்த திசையில் நிலைத்து நிற்க… வசீகரிக்கும் சிரிப்புடன் காரிலிருந்து இறங்கி அவர்களைக் நோக்கி வந்துக்கொண்டிருந்தான் ஆதித்யன்… தீபா ‘ வாடா ஆதி ரொம்ப டையர்டா இருக்க’ என்று கூறி அவனுக்கு தேனீர் கலந்துக் கொடுத்தார்… ‘ யெஸ் சித்தி சயிட்ல ஹேவி ஒர்க் இன்னைக்கு’ என்று கூறி அவர் கலந்து கொடுத்த தேநீரை பருகினான்…

 

வர்ஷாவோ ‘ சரி ஓகே எல்லாரும் இங்க இருக்கீங்க அதனால உங்க எல்லாருக்கும் ஒரு நியூஸ் சொல்லப் போறேன்’ என்று பலமான பீடிகையுடன் ஆரம்பிக்க எல்லாரும் ஆர்வமாக அவளைப்  பார்த்திருக்க… ஜெகவோ என்னடி ஏதாவது சப்ஜெக்ட்ல புட்டுக்கிச்ச என்று அவளை பார்த்து ஆர்வமாக கேட்க… ஆதியும் சொல்லு அம்மு காசுக் கொடுத்து பாஸ் பண்ணிக்கலாம் என்று இருவரும் அவளை பாரப்பச்சம் பார்க்காமல் தீவிரமாக கிண்டல் செய்ய…

 

வர்ஷவோ “அட என் அருமை லூசு அண்ணங்களா, நல்லா வருவிங்க டா… அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று கூற”  மீண்டும் ஜெகாவோ அய்யோ என்று கூறி அவள் அருகில் சென்று ஏன் டி யாரையாவது காதலிக்கிறியா என்று கேட்க கடுப்பாகி போனவள் அம்மா இவன பாருங்க அம்மா என்ன சொல்றனு என்று அழுவதுப்போல் கூற …

தீபாவோ ஜெகா சும்மா இருடா அவளை சொல்ல விடு டா என்று அவனை அதட்ட…

ஓகே மாம் இட்ஸ் ஜஸ்ட் பார் பன்’ என்று கூறினான்…

நீ சொல்லு அம்மு என்று கூற அவளோ நான் நேஷனல் லெவல் டெலண்டியே’ 20 அரங்கேற்றம் பண்ண போறேன் எல்லாரும் கண்டிப்பா வரணும் என்று கூற

தீபாவோ “வர்ஷா குட்டி நான் பாட்டிக்கூட இருக்கணும்டா  சோ நீங்க உங்க செல்ல அண்ணன் ஆதியையும் ஜெகாவையும் கூட்டிட்டுப் போயிட்டுவாங்க என்று கூறிவிட…

அவளோ சிறிது நேரம் யோசித்து ஹ்ம்ம் சரி என்றாள்…

மாலை 5.30 மணி இடம் சென்னை கலாலையா அரங்கம், கருப்பு நிற  ஜாகுவார் xj மிக பிரம்மாண்டமாக கம்பிர தோற்றத்தோடு    கலாலையா வளாகத்திற்குள் சென்று பார்க்கிங்கில் வந்து நின்றது…. அதிலிருந்து கண்ணில் கூலர்ஷுடன் கேஷ்வல் வியர் ப்ளூ ஜீன்ஸ் அண்ட் புல் ஹண்ட் ஒயிட் வித் ஓவர் கோட் என்று ஆதியும், கேஷ்வல் மென்ஸ் வியர் கிரே நிறத்தில் ஜெகாவும், பரதநாட்டிய உடையில் வர்ஷாவும் காரிலிருந்து இறங்கி   கலாலையா சபையை நோக்கிச் சென்றிக் கொண்டிருந்த அதே நேரத்தில் தனது தோழியுடன் ஸ்கூட்டி பேப் ப்ளசில் ஹேமா ஓட்ட மித்ரா அமர்ந்துக்கொண்டு கலாலையா அரங்கிற்குள் வந்து சேர்ந்தனர்…

‘குட் ஈவினிங்  எவ்ரி ஒன் அண்ட் ஆல் கதேரேட் ஹியர்’ என்று கூறி நீங்க அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடன நிகழ்ச்சி இன்னும் சிறிது நேரத்தில் துவங்க உள்ளது… இன்னும் பத்து நிமிடத்தில் நடன நிகழ்ச்சி ஆரம்பிக்க உள்ளது என்று கூறி கவுன்டவுன் ஸ்டார்ட் செய்யப்பட்ட்டது…

கவுன்டவுன் ஸ்டார்ட் செய்து நிமிடங்கள் குறைந்து கொண்டிருக்க… வர்ஷா ஆதியையும், ஜெகாவையும் ரிசர்வ் செய்த முன் சீட்டில் அமர வைத்துவிட்டு மேக்கப் செய்யும் அறைக்கு சென்று தன்னை சரி செய்துக் கொள்ள சென்றாள்…

வர்ஷா சென்று ஐந்து நிமிடத்தில் சிகப்பு விளக்கு எரிந்து கௌண்டவுண் முடிய போகிறது என்று வலியுறுத்த… பேக் ஸ்க்ரீனிலிருந்து ஒரு குரல் லாட் எண்ணின் படி… அந்த லாட்டின் நபர் தன்னை தயார் படுத்தி கொள்ளுமாறு கூற…

தற்செயலாக அந்த லாட்டின் நபர் தயாராக இல்லாத நிலையில்… லாட் நம்பர் மூன்று என்று அறிவிக்கப்பட்டது… லாட் நம்பர் மூன்று என்று கூறிவிட மித்ராவுக்கு தூக்கிவரிப்போட்டது… ஹேமாவோ ஏய் மித்ரா நீதாண்டி… சீக்கிரம் என்று கூற… தெரியுது டி’ என்று மித்ரா ஹேமாவிடம் கூற… சரி கால்ல( knee crutches) போட்டிருக்கும் கிளிப் ஒழுங்கா இருக்கான்னு பாத்துக்கோ… அப்புறம் ஹெரிங் டூல்ஸ் விழாம பாத்துக்கோ’ என்று ஹேமா கூற… மித்ரா மீண்டும் ஒருமுறை தன்னை சரிசெய்துக் கொண்டு அரங்கத்திற்குச் சென்றாள்…

லாட் நம்பர் அறிவித்ததும் வராமலிருக்க நேரம் கடந்துவிட்டால் போட்டியாளர்கள் வெளியேற வேண்டும் என்று நிபந்தனைகள் இருக்க… கவுன்டவுன் ஸ்டார்ட் செய்யப்பட்டது… ‘ 5,4,3,2 என்று முடியும் முன் அரங்கத்தில் ஏறியிருக்க…. மக்கள் கூட்டத்தின் சத்தம் கதைக்கிழித்துக் கொண்டிருந்தது அரங்கம் திரை நீக்காமலிருக்க ஆடியின்ஸ் பொறுமையிழந்து கத்ததொங்கினர்…

திரை நீக்கப்பட்டு விளக்கு இல்லாமல் அரங்கம் முழுவதும் இருட்டாக காட்சியளிக்க என்ன நடக்கிறது என்று புரியாமல் மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்….

ஜெகாவும் ஆதியும் ஆர்வமே இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்க… அரங்கில் ஏறியும் நடன நிகழ்ச்சி தொடங்காமலிருக்க கோபமுற்ற ஆதி, ‘ஜெகாவிடம் நான் வெளில இருக்கேன் வர்ஷா டர்ன் வரும்போது சொல்லு’ என்று கூறி எழப்போனவனின் காதில் சலங்கை ஒலிக்கும் சத்தம் கேட்டு தன் பார்வையை ஸ்டேஜ் பக்கம் திருப்பியவன் என்ன நினைத்தானோ அமர்த்துவிட்டான்…

“தத்திதான தஞ்சுமி…தக்க்ஷம் தாம் தஜம் தகிட தகிததம்….தகிட தகிட தகிஞ்சதும் “””””

அரங்கம் மட்டும் அழகாக இல்லாமல் மேடையில் மெல்லிய கொடி இடையால் நடராஜர் சிலைக்கு முன் நின்று பணிந்து பூக்களால் பூஜித்து… அரங்கத்ததை தொட்டு வணங்கி தன் நடனத்தை ஆரம்பித்தாள்….

இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே
இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து
இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க
சதுரிடு வா அமுதே – அமுதே
சதுரிட வா அமுதே

அச்சில் வார்த்த பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

தோம் தோம் தனன..

அச்சில் வார்த்த பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

தகிட தகிட..

இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே


எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்

எழுவாய்

ஹ்ம்ம்..ஹ்ம்ம்

வருவாய்

ஹ்ம்ம்..ஹ்ம்ம்

திருவாய்

ஹ்ம்ம்ம் ..ஹ்ம்ம்ம்

தருவாய்

ஆ.ஆ.ஆ…

சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்
முகிலாய் இருந்தேன் மழையாய் செய்தாய்

தோம் தோம் தனன தோம் தோம் தனன …

உன் அழகாய் தூண்டிவிடு
என் அழகை ஆண்டுவிடு
முத்ததால் கொன்று விடு
மூச்சு மட்டும் வாழ விடு

தோம் தோம் தனன தோம் தோம் தனன …

இன்னிசை அளபெடையே அமுதே
இளமையின் நன் கொடையே

இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே

இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே

இருகையை விரித்து இறக்கையும் சிலிர்த்து
இருகையில் வா அமுதெஏ

சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிரக்க

சதுரிடு வா அமுதே அமுதே
சதுரிட வா அமுதே

அச்சில் வார்த்த பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

தோம் தோம் தனனன…

அச்சில் வார்த்தை பதுமையும் நீயே
கச்சில் கிடக்கும் கர்வமும் நீயய்

தகிட தகிட தக…

இன்னிசை அளபெடையே…..

https://www.galatta.com/tamil/music/varalaru/47/( hai frnds try out this link I given here song innisai alapedei)

அவள் ஆடத்தொடங்கிய பின் பார்வையால் அவளை விழுங்கிக்கொணருந்தான் ஆதித்ய வர்மன்… தன்னை அறியாமலேயே அவள் நடனத்தில் தன்னை தொலைத்தவன்… மெல்லிய கொடியிடையாளின் அழகிய மேனி அசைந்து அவளது வளைவில் தன்னை தொலைத்து… அவள் சிரிக்கும் உதட்டை அடக்கும் வழி தெரியாமல் பார்த்துக்கொண்டிருந்தான்… அவனின் கண்கள் மங்கையவளின் மேனியில் நிலைத்து நிற்க தன் பார்வையை திருப்ப முயன்றும் திருப்ப முடியாமல்… அவள் அழகிய மயில் போல் அசைந்து ஆடும் அழகில்… அவளது உடலின் ஒவ்வொரு பாகங்களும் அசைந்த அழகில் தன் இதயம் சிக்குண்டு நின்றான்…

அவன் கண்கள் பெண்வளின் மேனியை அலச… தன் கண்கள் சென்ற திசையை நோக்கி ஒரு நிமிடம் தன்னை சமாளித்தவன்… தன் தலையை அழுந்த கோதி நேர நிமிர்ந்து அமர்ந்தவன்… மீண்டும் அவனது சோதனைக் காலம் முடியவில்லை என்பதுபோல்…

அவளோ பாடலின் வரிகள் ஏற்றபடி தன் கைகளை முன் நீட்டி தன் அழகிய கண்களால் ‘ எழுவாய் வருவாய்…

திருவாய் தருவாய்… மீண்டும்

எழுவாய் வருவாய்’ என்று  ஆரம்பிக்க அவளின் செயலில் தன்னை தொலைத்து ஆணி அடித்தார் போல் இருக்கையில் அமர்ந்துவிட…

அடுத்து வந்த வரியில் தன்னை முழுமையாக தொலைத்தான்…

‘சொல்லாய் இருந்தேன் இசையை வந்தாய்…

கல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்….

முகிலாய் இருந்தேன் மழையை செய்தாய்…

உன் அழகாய் தூண்டிவிடு…

என் அழகை ஆண்டு விடு…

முத்தத்தால் கொன்று விடு…

மூச்சு மட்டும் வாழ விடு’….

அவ்வளவு தான் இதற்குமேல் இங்கிருந்தால் சரிவராது என்று முடிவு செய்து தன் தலையை இடது கரத்தால் கோதிவிட்டு… இருக்கையை விட்டு எழுந்தவன் ஜெகதீஷ் பக்கம் திரும்ப அவனோ இவ்வுலகத்தில் இல்லை என்பதுபோல் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட அறியாமல் அவனது கண்கள் முழுவதும் அரங்கில் ஆடிக்கொண்டிருந்தவளின் மீது இருந்தது. ஒரு நிமிடம் இவள் மேலோகத்து ரம்பையோ தப்பித்தவறி பூமியில் விழுந்துவிட்டாலோ என்று யோசித்தவன் ஜெகாவை உலுக்கி ‘ டேய் என்று அவனை நடப்பு உலகத்திற்கு அழைத்து வந்தவன்…ஆர் யூ ஓகே’ என்று ஆதி ஜெகாவை பார்த்து கேட்க அவனோ புன்சிரிப்புடன் ‘ யெஸ்’ என்ற ஒற்றை வார்த்தையை கூறி மீண்டும் தன் பார்வையை சென்ற திசைக்கே திருப்பினான்…

அவள் ஆடி முடித்தவுடன் அரங்கில் எழுந்த  கைத்தட்டல் பலமாக அவளை வரவேற்றது… தன் மலர்க்கரங்களால் நன்றி கூறி கீழிறங்கிச் சென்றாள்….

வர்ஷாவும் ஆடி முடித்துவிட…டெலண்டியே’20 டைட்டில் வின்னர் யார்?? என்று அறிவிப்பதற்கு காத்துக்கொண்டிருக்க…

அந்நேரம் பார்த்து ஆதிக்கு ஒரு முக்கியமான அழைப்பு வர அதனை எடுத்து தொடர்பு கொண்டவன் விரைவில் வருமாறு தொழிலடத்திலிருந்து அழைப்பு வர ஜெகாவிடம் கூறி வர்ஷாவை அழைத்து செல்லுமாறு கூறிவிட்டு அரங்கை விட்டு வெளியேறும் நேரம்…

அவனது கண்கள் மீண்டும் ஒருமுறை மேடையை அலசியது..அந்நேரம் தன் முன் பக்கம் பார்க்காமல் பின் புறம்  பார்வையை செலுத்திக்கொண்டு வந்தவன்…

முன் புறம் திரும்பாமல் வந்ததன் விளைவு எதிரே வந்துக்கொண்டிருந்தவளின் மீது மோதினான்…

 

அவளும் எதிரே வந்துகொண்டிருப்பவன் மீது தான் பார்வை செலுத்தாது மோதியதில் மித்ரா நிலை தடுமாறி கீழே விழபோக… கீழே விழப்போனவளை சட்டென்று ஒரு வலிய கரம்  இடையை இறுக பற்றியதில் கண்கள் இரண்டையும் மூடி தன் பயத்தை வெளிக்காட்டி கொண்டிருக்கையில்…

ஆதியோ தன் மேல் பூங்கொத்துப்போல் மோதியவளை..அவனது கையில் அவளை அழகாக எந்தியவன் அப்பொழுதுதான் கவனித்தான் அவள் முகம் தன் முகத்திற்கு வெகு அருகில் இருப்பதை…

அவள் பயத்தில் நடுங்கி கண்களை இருக்க முடியத்தில் ஆதியின் மனம் மயங்கி தன் கண்களால் அவள் கண்களை கண்டவனின் பார்வை மெல்ல கிழேறங்கி ரோஜா பூ நிறம் கொண்டு சிவந்து விரிந்த அதரத்தில் நிலைத்து நின்றது…

 

நன்றி தோழமைகளே

 

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

 

திவ்யபாரதி
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Nataraj Nataraj says:

    Super thangachi.

error: Content is protected !!