முகங்கள்-48
2774
7
முகங்கள் 48 :
சந்தனாவின் வாக்கு மூலத்தை கேட்ட ருத்ரபிரதாப்பின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் பிரகாஷ் , அதில் அவனுக்கு என்ன தெரிந்ததோ , பெட்டிலிருந்து விருட்டென எழுந்து கிருபாகரனின் முன் வந்து நின்றான்.
“இப்போ உங்களுக்கு உண்மை என்னன்னு தெரியனும் அவ்ளோ தானே, நான் சொல்றேன் ” என்று உணர்ச்சி பிம்பமாக பேசியவனின் கை ஓர் வலிய கரத்தால் பிடித்து இழுக்கபட்டது.
பிரகாஷ் என்னதான் பேசப்போகிறான் என்று கேட்க ஆர்வமாக இருந்தான் கிருபாகரன்.
தன் கையை பற்றியிருந்த ருத்ரனின் முகத்தை பார்த்த பிரகாஷ் மேற்கொண்டு எதுவும் பேசாமல் பழையபடி அவன் இடத்திலேயே சென்று அமைதியாக அமர்ந்துகொண்டான்.
இருவரது நடவடிக்கையையும் பார்த்து கடுப்பானான் கிருபாகரன்
“நீங்க எதுவுமே சொல்ல வேண்டாம் சார், சந்தனாவோட இந்த வாக்குமூலமே போதும் உங்களை உள்ள தள்ள, நான் கிளம்பறேன்” சடாரென இருக்கையிலிருந்து ஆவேசமாக எழுந்த கிருபாகரனை நிறுத்தியது ருத்ரபிரதாப்பின் கம்பீரக் குரல்
“மனநலம் பாதிக்கப்பட்ட ஒருத்தரோட வாக்குமூலம் எந்த கோர்ட்டுலயும் செல்லாது மிஸ்டர் கிருபாகரன் ” முடித்தவன் கூலாக தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்
கால்களில் வேரூன்றியது போல் நின்றுவிட்டான் கிருபாகரன்.
உடனே தன்னை சரிபடுத்திக்கொண்டவன் ருத்ரபிரதாப்பை ஏளனமாக பார்த்து
“நீங்க நல்ல கதாசிரியர்தான் ”
அவனது கிண்டல் தெளிவாக புரிந்தபோதும் அமைதியாகவே
“என் பேச்சு கதையா தோணுதா? பாரவாயில்லை, வெய்ட் ” என்று தன் போனை எடுத்து காதுக்கு கொடுத்தான்
“டாக்டர் ஷர்மா, மிஸ் நந்தினியோட மெடிகல் ஹிஸ்டரியை நீங்களே உங்க நம்பர்ல இருந்து மிஸ்டர் கிருபாகரன் நம்பருக்கு வாட்ஸ் அப் பண்ணிடுங்க,அதிக விவரம் தேவைபட்டா அவர் ஹாஸ்பிடல் வருவார் அவரை கரெக்டா கைய்ட் பண்ணுங்க ,ஓகே தேங்க்யூ ” தொடர்பை துண்டித்தவன்,கிருபாகரனை பார்க்க
அவனோ “என்ன இது புது டிராமாவா? ” என்று அசராமலே கேட்டான், ஏனென்றால் ருத்ரனின் ‘கரெக்டா கைய்ட் பண்ணுங்க ‘ வில் ஏனோ அழுத்தம் கொடுத்தது போல் தோன்றியது, பணம் பத்தும் செய்யும் என்பது போலீசுக்கு தெரியாதா என்ன?
“வாட் டிராமா? ” ருத்ரன் பேசிக்கொண்டிருக்கையில் கிருபாகரனின் ஃபோனில் மணியடித்தது, அதனை கேட்டு தொடர்ந்த ருத்ரன்
“இதோ டாக்குமென்ட்ஸ் வந்தாச்சு, ஒரு லைன் விடாம படிங்க மிஸ்டர் கிருபாகரன் ”
சரி இது என்னன்னு தான் பாத்துடலாம் என்று நினைத்து மீண்டும் இருக்கையில் அமர்ந்து டாக்குமென்ட்டை படிக்கலானான்
ஆரம்பத்தில் பேஷன்ட் அவரது வயசு விலாசம் எல்லாம் வரிசையாய் வர அதனை மேலோட்டமாக பார்த்தவனது கண்கள் கூர்மை பெற்றது, முகத்தில் குழப்பம் சூழ்ந்தது, புருவமுடிச்சிகள் இறுகின, ஓர் இடத்திற்கு மேல் கண்கள் அசையவேயில்லை நிலைகுத்தி நின்றுவிட்டன
கொட்டை கொட்டை எழுத்தில் “மல்ட்டிபிள் பர்சினால்ட்டி டிஸ் ஆர்டர்” என்ற வாக்கியத்தை மீறி வேறு எதுவும் கிருபாகரனுக்கு படிக்க தோன்றவேயில்லை
கிருபாகரனின் முகத்தை பார்த்துக்கொண்டே பேசினான் ருத்ரபிரதாப்
“சந்தனாவும் நந்தினியும் ரொம்ப கிளோஸ் ஃபிரண்ட்ஸ், சந்தனாவோட மறைவை நந்தினியால ஏத்துக்கமுடியல, டிப்ரஷன்ல அவங்க தன்னையே சந்தனாவா நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க ”
‘அடப்பாவிங்களா, உங்க சுயநலத்துக்காக ஒரு பெண்ணை பைத்தியம்னு பட்டம் கட்டுறீங்களே ‘ மனம் உலைகளமாக கொதித்த போதிலும் அதனை முகத்தில் காட்டிவிடாமல் எழுந்து கொண்டான், இனி இங்கே இருந்தால் தனது கோபத்தை அடக்கமுடியாது என்று அவனுக்கு தெளிவாக தெரிந்துவிட்டது
“ஓகே மிஸ்டர் ருத்ரபிரதாப், தேங்க்யூ ஃபார் யுவர் கோஆப்ரேஷன்”என்று கை குலுக்கினான்
அவனுடன் கைகுலுக்கிவிட்டு “இட்ஸ் மை டியூட்டி ” என்றான் ருத்ரபிரதாப்
“ரொம்ப ஸ்மார்ட் மூவ் தான், பட் டிஎன்ஏ டெஸ்ட் உங்க உண்மையான முகத்தை இந்த உலகத்துக்கு காட்டும் ”
“இஸ் இட்? ” புருவத்தை உயர்த்தி அவன் கேட்ட விதத்திலேயே துணுக்குற்றான் கிருபாகரன்
“டிஎன்ஏ ரிசல்ட்டை உங்க பணத்தை வெச்சு மாத்திடலாம்னு கனவு காணாதீங்க மிஸ்டர் ருத்ரபிரதாப், ஐ வில் நாட் மேக் தட் ஹேப்பன் ” அடிக்குரலில் எச்சரித்தான்
“புரொசீட் ” என்று முடித்துக்கொண்டவன், கிருபாகரன் வேகநடையுடன் வெளியே சென்றதும், சாவதானமாக இருக்கையில் அமர்ந்து கால்மேல் கால்போட்டுக்கொண்டு பிரகாஷை அர்த்தத்துடன் பார்த்தான்.
*******
சந்தனாவின் அறைவாயிலில் நின்றிருந்தனர் பிரகாஷூம் ருத்ரபிரதாப்பும்
“தேவ்நாயர் எப்போ வருவான்னு தெரியல, இந்த கிருபாகரன் வேற நடுவுல புகுந்து தொல்லை பண்றான், இப்போ என்னதான் பிளான் ” தன் மனதில் இருக்கும் படபடப்பை கொட்டித் தீர்த்தான் பிரகாஷ்
“டி என் ஏ ரிசல்ட் நாளைக்கு வந்துடும், பட் தேவ் நாயர் வருவானான்னு தெரியல, ஆனா கிருபாகரன் நிச்சயம் வருவார், அதுக்குள்ள இந்த படத்தை முடிச்சாகனும் ”
எத்தனை நெருக்கடியான நேரமிது, தன் மீது ஒரு கொலை பழி, ஆள்மாராட்டம் என்று ஏகபோகமாக இருப்பது பற்றி இவன் சிறிதும் கவலைபடவில்லையே, படத்தின் மீது தான் அவனது கவனம் இருக்கிறது, இதனை டெடிகேஷன் என்று சொல்லவேண்டுமோ? உள்ளுக்குள் ஏதேதோ தோன்றியபொழுதும்
“மத்த எல்லாம் ஓகே ருத்ரா, பட் ஹீரோயின் சீன் இருக்கே! ” அவனது முகத்தில் கலவரம் வந்து சென்றது
“அதை நான் பாத்துக்கிறேன், நீ போய் செட் ரெடி பண்ணி கேமிரா ஆங்கிள் செட் பண்ணு, நான் நநநினியோட வரேன் ” என்று கூறியவனின் முகத்தில் உறுதியிருந்தது. பிரகாஷ் லிப்ட்டை நோக்கி நகர ருத்ரபிரதாப் சந்தனாவின் அறைக்குள் நுழைந்தான்
முகங்களின் தேடல் தொடரும்
7 Comments
Hi mam
இப்பகுதி நன்றாக இருந்தது.
நன்றி
தொடக்கம் முதல் விறுவிறுப்பா நந்தினி ஏன் கொலை செய்யப்பட்டா என்ற நீண்ட ஒரு கேள்வியோடே அருமையா கதை நகருது…. உங்க எழுத்தும் சில இடங்களில் வெளிப்படும் கருத்தும் அருமை….
ஆவலுடன் அடுத்த எபி படிக்க காத்திருக்கும் நான்…
Wen ll be the next update
Next ud ?? Waiting…..
Hi
Read all episodes today
muthal aththiyayathil irrundhu ippo varai thiriller element maintain panni irrukkeenga
romba vithiyasamana kadhai kalam
interesting
But Rudhran…. not so bad person… but why did he kill Nandhini…. not very clear… waiting
Nice neit episode when
தற்போது உயிருடன் இருப்பது சந்தனாவா?நந்தினியா?படிக்கிறவங்களே குழம்பிபோறோம்.ருத்ராவின் கான்பிடென்ஸை பார்த்து.சரியான எம்டன்.