Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-8

அத்தியாயம் 8

அப்பொழுதான் குளித்து முடித்து வந்தவன்… தலையில் நீர் சொட்டச் சொட்டச்… பனிக்காலத்தில் புல் மேல் பூத்திருக்கும் நீர்த்துளிப்போல்… அவன் உடம்பில் நீர் பூத்திருக்க… அவனின் சிவந்த தேகமும் அகன்ற மார்பும் கட்டுக்கோப்பான உடம்பும்  இடுப்பை சுற்றி வெறும் டவல் மட்டுமே இருக்க…

 

அவனை அந்நிலையில் கண்டவள் குங்குமமாய் முகம் சிவந்து தலை கவிழ்ந்தாள்… மீண்டும் தன் தொண்டையை செருமிக் கொண்டு காபி என்று கூற …

 

அவளிடம் சாதாரணமாக… ‘ ஏன் நீங்க இந்த வேலையெல்லாம் செய்யுறிங்க… கண்ணம்மா இல்லையா’ என்று கூற… அவங்… அவங்க இல்ல சார் … அதான் நான் கொண்டு வந்தேன்’ என்று கூறினாள்…

 

‘ஓகே ரைட் அங்க வச்சிட்டு போங்க’ என்று கூற… காபியை அருகிலிருந்த மேசையில் வைத்துவிட்டு விடு விடுவென்று வெளியே வந்தவள்… இழுத்து வைத்திருந்த தன் மூச்சை  ஒரு முறை நன்றாக இழுத்து விட்டவள்…தன்னை நினைத்தே அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது…

 

இன்னொரு புறம் மகிழ்ச்சியாய் இருக்க… அவளின் வேண்டுதல் படி அவளின் ஆதி பாவாவை கண்டவள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினால் அதே மகிழ்ச்சியோடு ஜெகாவின் அறைக்கு காபி ட்ரெயுடன் சென்றவள்… ‘எக்ஸ்க்யூஸ் மீ’ என்று குரல் கொடுக்க உள்ளே வந்தவளை நிமிர்ந்து பார்த்தவன் சற்று நேரம் இமைக்க மறந்தான்… ‘ சார் காபி கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்’  காபியை வைத்து விட்டு திரும்பியவளை ‘ கொஞ்சம்… நில்லு.. அன்னைக்கு… நீதானே கிளாசிக்கல ஸ்டேஜ் பேர்பார்மன்ஸ் பண்ணது’ என்று கேட்க…

 

அவளோ ‘இங்ன’ என்று விழித்தாள் ‘ என்ன  இவன் எதை  கேட்டக்கிறான்னு தெரியலையே’ என்று குழம்பியவள்…

 

‘சார் புரியல… நீங்க என்ன கேட்கிறீங்க’ என்று கேட்டாள்.

 

’ பச்… ஐ…மீன் …. கலாலையா டெலண்டியே’ 20 டைட்டில் வின் பண்ணிங்களே’ என்று அவளுக்கு நினைவு படுத்த… அது ‘ சாரி சார் ஏதோ நியாபகத்துல மறந்துட்டேன்’ என்று கூறியவளை ஆழ்ந்து நோக்கிக் கொண்டே ‘ இங்க என்ன பண்றிங்க’ அவளைக் கண்ட சந்தோஷத்தை வெளிப்படுத்தாமல் ஆர்வமாய் அவளைப் பார்த்து கேட்டான்…

 

அன்று அவளின் அழகில் மயங்கியவன் தன் மனதில் அவள் முகத்தை பத்திரமாக சேமித்து வைத்தவனின் கனவுகன்னியாகி போனவள்… இன்று தன் முன் தங்க சிலைப்போல் நின்று பேசுபவளைக் கண் கொட்டாமல் பார்த்தான்…

 

‘இங்க பாட்டிக்கு கேர்டேக்கரா  வந்திருக்கேன் சார்… சரி சார் நான் வரேன்’ என்று கூறி சென்றுவிட்டாள்.. ஜெகவோ அவளை கண்டு விட்ட மகிழ்ச்சியில் ‘ யாஹூ’ என்று கூறி தன் குஷியை வெளிப்படுத்தியவன்…. விரைவில் அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த காத்திருந்தான்…

 

ஆதியின் அலைபேசி ஒலிக்க…. அதனை எடுத்தவன் ‘ ஹலோ பேபி… என்ன பண்ற’ என்று நேஹாவின் குரல் ஒலிக்க… ஆதியோ ‘ ஆஃபீஸ்க்கு கிளம்பிட்டு இருக்கேன் பேபி’ என்று கூற நேஹாவோ ‘ அதுலாம் முடியாது… நான் இன்னக்கி வீட்டுக்கு வரேன்… அப்டர்நூன் லன்ச் அங்கதான்…. நீ எங்கையும் போக கூடாது சரியா…. வித்தின் பிப்டீன் மினிட்ஸ்… நான் அங்க இருப்பேன்’ என்று நேஹா கூற….

 

ஆதியோ ‘ பேபி ப்ளீஸ் இன்னக்கி ஒரு க்ளையன்ட் மீட்டிங் இருக்கு’ என்று பேசிக்கொண்டிருக்கும் போதே நேஹா ‘ அப்போ… நாளைக்கு நம்ப கல்யாணத்துக்குப் அப்புறம் கூட… இப்படித்தான் இருப்பியா பேபி!!! எனக்குன்னு முக்கியத்துவம் நீ தரவே மாட்ட அப்பிடித்தான…

 

இன்னும் நம்ப கல்யாணத்துக்கு ஒரு மாசம்தான் இருக்கு… எனக்காக இன்னைக்கு ஒரு நாள் இருக்க மாட்டியா’ என்று கூற…. கடுப்பாகி போனவன் ‘ பச்…. பேபி இங்க பாரு உனக்காகத்தான் பேபி… இந்த மேரேஜ் அரேன்ஜ்மெண்ட் சீக்கிரமா வைக்க சொன்னது…. சும்மா… சும்மா இதுவே சொல்லி டென்ஷன் ஆக்காத பேபி….

 

ஓகே ஐ வில் பி ஹியர்’ என்று கூறி தொடர்பை துண்டித்தான்…

 

நேஹாவோ அப்படிவா வழிக்கு என்று கூறி தனக்குள் வெற்றி புன்னகை பூக்க கே.கே வீட்டிற்கு சென்றாள்…

 

வித்தியாசமான ஹாரன் சத்தத்துடன் நேஹாவின் கார் கே.கே வீட்டின் வளாகத்திற்குள் நுழைந்தது… மித்ரா கமலம்மாளின் அறையிலிருந்தவள் வித்தியாசமாக கார் சத்தம் கேட்டதும்… எழுந்து ஜன்னல் வழியாக தன் பார்வையை பதித்தவளின் இதயம் சுக்குநூறாக உடைந்தது…

 

அவள் கண்ட காட்சி அவளின் காதல் கொண்ட மனம் ஏற்க மறுத்தது…

 

புதிதாக காரை கண்டவள் யாராக இருக்குமென்று பார்த்தவளின் கண்களில் உடலோடு ஒட்டி இறுக்கமாக இருந்த சிகப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடை மற்றும் கண்களில் சன்கிலாஸ் அணிந்து பாந்தமாக காரைவிட்டு கீழே இறங்கியவள்…

 

தன்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த ஆதி மற்றும் வர்ஷாவை கண்டவள் ‘ ஹாய்’ என்று கூறி ஆதியை ஓடிச்சென்று கட்டியணைத்து தன் உதட்டைக் குவித்து அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்தவளின் செயலைக் கண்ட வர்ஷா தன் முகத்தை சுளித்து ‘ ச்சை…. இவ ஒரு ஆளு… பாக்க நல்லா ஐட்டம் மாதிரி இருக்கா… இவள போய் எங்க அண்ணன் காதலிக்கிறான்… என்ன சொல்றது’ என்று தன் மனதில் நினைத்தாலும்… புன்னகை சாயல் மாறாமல் நின்றிருந்தாள்…

 

நேஹா வர்ஷாவிடம் சென்று அவளையும் கட்டியணைக்க வர்ஷவோ ‘ நோ தாங்க்ஸ்’ என்று கையை மட்டும் குலுக்கினாள்…

 

இக்காட்சியை கண்ட மித்ராவின் உள்ளம் கண்ணாடி துகள்கள் போல் சுக்குநூறாக உடைந்தது… தன் காதல் கொண்ட மனம் மௌனமாக கண்ணீர் வடித்தது…

 

ஆதியுடன் இணைந்து நேஹா மற்றும் வர்ஷா வீட்டிற்குள் நுழைய… தீபாவை கண்ட நேஹா அவர் காலில் விழுந்து வணங்கினாள் ‘ தீர்க்காயுசா இருமா’ என்று  அவளை வாழ்த்தி எழுப்பினார்… ‘ தாங்ஸ் ஆண்ட்டி’ என்று கூறியவள்.. ‘ ஆன்ட்டி  பாட்டி எங்க இருக்காங்க’ என்று கேட்க தீபாவோ மேல ரூம்ல இருக்காங்கமா’…

 

‘ ஆன்ட்டி நான் பாட்டிய பார்த்துட்டு வரேன்’ என்று கூறி கமலம்மாளின் அறைக்குள் நுழைந்தவளைக் கண்ட மித்ராவிற்க்கு திக்கென்றிருக்க மித்ராவை கண்டுக்கொள்ளது..’ பாட்டி… பாட்டி’ என்று நேஹா எழுப்ப மித்ராவோ ‘ பாட்டி இப்பத்தான் தூங்கினாங்க… அவங்கள எழுப்பாதிங்க ‘ என்ற குரல் தனக்கு பின் புறத்திலிருந்து வர நேஹா அவளை திரும்பிப் பார்த்தாள்…

 

பார்த்தவளின் கண்களில் சொல்ல முடியாத ஏளனம் தெரிய… அவளோ மித்ராவின் அருகில் வந்தவள்’ ஹு ஆர் யூ ’ என்று ஏளனப் பார்வையுடன் கேட்க… மித்ரா ‘ நான் இங்க பாட்டிக்கு கேர்டேக்கரா வந்திருக்கேன்’ என்று கூறியவளை பார்த்தவள் ‘ ஓஹோ …. அந்த….கேர் டேக்கர்….நீ தானா… கேர்டேக்கரா வந்த நீ… அந்த வேலைய மட்டும் பாரு… இங்க வந்து உன்னோட அதிகாரத்த காட்டாத மைன்ட் இட்’ என்று கறாராக பேசிவிட்டு வெளியே சென்றுவிட்டாள்…

 

கே.கே வீட்டில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் வெகுவாக ஆரம்பித்தது… நேஹா அவளின் மாடல் ஷூட்டை சிறிதுகாலம் தள்ளிவைத்தாள்…

 

‘ ஹலோ ஜான்… நான் நேஹா பேசுறேன்… இங்க எனக்கு இன்னும் டூ வீக்ஸ்ல மேரேஜ் சோ… நான் சொன்ன டேடுக்கு ஷூட் வசிக்கலாம்… இப்ப நான் பிஸி ஜான்’ என்று கூற ‘ ஹாய் ஹனி … (வாட் ஆர் யூ சேயிங்) என்ன சொல்ற…( ஆர் யூ கோயிங் டூ கெட் மேரிட் ) என்று ஆங்கிலத்தில் கேட்க அவளோ ‘ யெஸ் ஹனி… ஏன் உனக்குத் தெரியாதா… உன்கிட்ட சொல்லிட்டு தான வந்தேன் ஹனி ‘ என்று அவள் உருகினாள்… ‘ ஹனி இப்படி கொஞ்சாத… தென் ஐ நீட் யூ பாட்லி’என்று கூறினான்…

 

ஜான் நேஹா மாடல் செய்யும் கம்பெனியின் சிஃப் அசிஸ்டண்ட் மானேஜர்’ நேஹாவின் அழகில் ஜான் மயங்கினான்… ஓரு நாள் அவளிடம் நேரடியாகவே கேட்டான் ‘ நேஹா ஹனி ஐ வான்ட் டேட் வித் யூ’ என்று கூற… நேஹாவும் ஓகே என்று அவனுக்கு பதிலளித்தாள்….

 

ஆனால் அவள் கேட்ட தொகையை கண்டு ஜான் வாயைபிளந்தான்… ஆனாலும் அவளைவிட மனமில்லாமல் அவளின் அழகை ஆண்டுவிட வேண்டுமென்று அவன் மனம் ஏங்க அவளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு… அவள் கேட்ட தொகையை அளித்தான்…

 

ஜான் மட்டுமின்றி நேஹாவின் வலையில் விழுந்தவர்கள் பலப்பேர் என்றாலும்… ஆதியை கூறி வைத்ததின் காரணம் பேர், புகழ், பணம் இம்மூன்றிற்கு ஆசைப்பட்டவள் தன் அம்பை ஆதியை நோக்கி எய்தாள்…

 

ரம்பையின் அழகில் இந்திரலோகத்து மன்னன் இந்திரனே மயங்கினான் என்றால் இவன் மட்டும் விதிவிலக்கா என்ன…

 

நேஹாவின் சூழ்ச்சியில் அழகாக வந்து சிக்கினான் ஆதித்ய வர்மன்… ஜெகதீஷ் முயன்ற மட்டும் நேஹாவை தவிர்த்தான் அவளின் எண்ணங்கள் அவனுக்கு நன்கு தெரியவர அவளை ஒதுக்கியவன் ஆதியிடம் கூறினான்…

 

ஆனால் நம் ஆதி கேட்க கூடியவன் அன்றோ… எதை வேண்டாம் என்று கூறினாலும் அவன் அதுதான் வேண்டுமென்று இரும்பு பிடியாக நிற்பான்…

 

பிறப்பிலிருந்தே பிறந்த தன் பிடிவாதக் குணத்தினால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை அறியாமலிருந்தான்…

 

இப்பிடிவாத குணமே தன் வாழ்க்கையை அழிக்கப் போவதை அவன் அறியவில்லை…

 

கண்களை கூசச்செய்யும் வண்ண விளக்குகளின் அலங்காரம்… அழகழகாக தொங்கும் வண்ண மலர்க்கணங்கள் என்று வர்ணனைகள் கொண்டு அழகாக மிளிர்ந்து  இரவில் கூட கண்களில் ஒளிவீசச் செய்யுது தங்க மாளிகைப் போல் ஜொலித்து காணப்பட்டது கே.கே குரூப்சின் இல்லம்…

 

உறக்கத்திலிருந்து எழுந்த கமலம்மாவை கண்ட மித்ரா அவசரமாக எழுந்து அவருக்கு அருகில் சென்றாள் ‘ பாட்டி ஏதாவது வேணுமா’… அவரோ ‘ குடிக்க கொஞ்சம் தண்ணிக் கொடும்மா’ என்று அவளிடம் கேட்க… தனக்கு பக்கத்திலிருக்கும் மேஜையில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஜக்கை எடுத்துக்கொண்டே யோசித்தால் யாருக்கு திருமணம்? யாருக்கு நிச்சயதார்த்தம்? என்று தனக்குள் பலவாறு கேள்விகள் கேட்டவள்…

பாட்டியிடம் கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்தவள் ‘ தண்ணீரை ஊற்றி அவருக்கு கொடுத்தாள்…

‘ பாட்டி கல்யாணம் யாருக்கு’ என்று ஒருவாறு கேட்டு முடித்தாள்… ‘ மித்துமா கல்யாணம் யாருக்குன்னு தெரியாத மாதிரி கேட்கிற’ என்று தண்ணீரை குடித்துக்கொண்டே அவளிடம் வினவ’ இல்லையே பாட்டி… தீபா மேடம் கல்யாணம்தான் சொன்னாங்க ஆனா… யாருக்குன்னு சொல்லல பாட்டி’ என்றவளை ஆழ்ந்து பார்த்தவர்… ‘ மித்துமா ஆதிக்குதான்டா கல்யாணம்… நாங்க எவ்ளோ பொண்ணு பார்த்தோம்… அதுலாம் வேண்டாம்னு சொல்லிட்டு எவளோ நாடகக்காரிய காதலிக்கறதா சொன்னான்… சரி நாங்களும் அவன் ஆசைப்படியே விட்டுட்டோம்… என்னோட ஆசை பேரன்… அவனோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம்…

 

நாங்களும் எதும் சொல்லலம்மா… அவன் இஷ்டப்படியே விட்டாச்சி’ என்று கூறி முடித்தார்…

 

அவர் கூறிய செய்தியை தன் செவிகள் ஏற்க மறுத்தது… நிச்சயமாக பொய்த்தான் என்று அவள் மனம் கூச்சலிட்டது… ‘ என் ஆதி பாவா என்ன ஏமாத்த மாட்டார்… அவருக்கு நான் எப்பவும் அவரோட மித்ராதான்… அவரு என்னைக்கும் எனக்கு மட்டும் பாவாதான்’ ஒருவேளை தன் செவிகளில் கோளாறோ என்று எண்ணியவள்…

 

பாட்டி என்ன சொல்றிங்க…. ஆதி சாருக்கா கல்யாணம்??? இல்ல ஜெகா சாருக்கா பாட்டி’ என்று தன் சந்தேகம் தீரும் பொருட்டு அவரிடம் மீண்டும் ஒரு நப்பாசையில் கேட்க… அந்நேரம் பார்த்து தீபா தன் தாயை தேடி வர… மித்ரா மற்றும் கமலம்மாளின் உரையாடலை கவனித்துக்கொண்டு வந்தவர்…

 

‘ என்ன மித்துமா பலமான பீடிகை போட்ற’ என்று கேட்டவர்… இல்ல மேடம் சும்மா பாட்டி கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன் என்று மழுப்பியவளை கண்டவர் ‘ என்கிட்ட பொய் சொல்றியா’ என்று கேட்டவர் சிரித்த முகமாகவே அவளுக்கு பதிலும்மளித்தார்…

 

‘ ஆமாடா நம்ப வீட்டுக்கு நேஹானு ஒரு பொண்ணு வருவா அவளுக்கும் நம்ப ஆதிக்கும் இன்னும் ரெண்டு நாள்ல நிச்சயதார்த்தம்… அப்புறம் ரெண்டு வாரத்துல கல்யாணம்டா… கண்டிப்பா நீ கல்யாணம் முடியுற வரைக்கும் எங்கையும் போக கூடாது சரியா இங்கதான் இருக்கணும்’ என்று தீபா கூற மித்ராவோ இதையே என்னால பாக்க முடியல்ல… கல்யாணம் வரை இங்கையே வா!!! நினைத்து பார்க்கவே பயங்கரமாக இருக்க… வேண்டவே வேண்டும் என்று ஒதுக்கினாள்…

 

இல்ல மேடம் அன்னைக்கு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. என்னால எப்படி வரமுடியும் என்று கூறியவளை முறைத்து பார்த்த தீபா ‘நீ இல்லாம எப்படி மித்துமா… பாட்டி பாவம்ல.. அதனால உன்னோட வேலைய கல்யாணம் வரைக்கும் கொஞ்சம் ஆற போடு பிறகு பார்த்துக்கலாம் சரியா ‘ என்று கூறிவிட்டு எழுந்து சென்றார்…

 

அதையே யோசித்துக் கொண்டிருந்தவள் யாரோ தன் கழுத்தை நெறித்து… மூச்சு முட்டுவதுப்போலிருக்க அறையை விட்டு வெளியே வந்தவளின் மனம் முழுவதும் பாறாங்கல் போல் கணக்க வீட்டிற்கு அருகிலிருக்கும் மல்லிகை மற்றும் முல்லைக் கொடிப் படர்ந்து விரிந்திருக்கும் தோட்டத்திற்கு சென்றவள்… அங்கு போடப்பட்டிருக்கும் கல் பெஞ்சில் தொப்பென்று அமர்ந்தவளின் இதயம் சொல்ல முடியாத வேதனையை அவள் உடல் மொழி வெளிப்படுத்தியது…

 

துக்கம் தொண்டையை அடைக்க கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது…

 

காலையில் எழுந்து தன் சோம்பலை முறித்துக்கொண்டு… இள வெயிலின் சூட்டை அனுபவிக்க ஜன்னல் பக்கம் வந்த ஜெகதீஷின் கண்களில் அழகிய ஓவியமாய் ரவிவர்மன் தீட்டிய வதனம் போல் அழகிய எழில் கொண்டு அமர்ந்திருந்தவளின் அழகைக் கண்டு…

 

காலையிலேயே இப்படி கண்களுக்கு அழகாய் காட்சியளிப்பவளின் மதி முகம் காணாது அவனுக்கு முதுகுக்காட்டி அமர்ந்திருந்தவளின் முகத்தை காண எண்ணியவன்… உடனே தன்னறையிலிருந்து வெளிப்பட்டவன் தோட்டத்திற்கு சென்றான்…

 

அவளுக்கு அருகில் வந்து மித்ரா என்றைழைக்க தாரை தாரையாக வழிந்து கொண்டிருக்கும் தன் கண்ணீரை அவசரமாக துடைத்தெறிந்தவள்… தன் முகத்தை சீர் செய்துக்கொண்டு முயன்று புன்னகையை வரவழைத்து விருட்டென்று எழுந்தாள்…

 

அவனோ பார்த்து பொறுமையா மித்ரா… ஏன் இவ்ளோ பதட்டம் என்று கூறியவன் அவளுக்கு மிக அருகில் சென்றான்… ஒரு நொடி தன் உடல் இறுக நின்றவள்.. ஒரு அடி பின்னே சென்றவளை கண்டவன் சிரித்தான் ‘ உக்காந்து பேசலாமே மித்ரா’ என்று கூற அவளும் வேறு வழியின்றி அமர்ந்தாள்… அவள் அமர்ந்தது தான் தாமதமென்று அவளுக்கு அருகில் ஓட்டியும்… உரசாமலும் ஒரு இன்ச் கேப் இடைவெளி விட்டு அமர்ந்தான்…

 

மௌனங்கள் கணங்கலாய் நீடிக்க… மௌனத்தை உடைத்தான் ஜெகா என்னும் ஜெகதீஷ் வர்மன் ‘ மித்ரா உங்க ஹெல்பிங் டெண்டன்சி அப்புறம் எங்க குடும்பத்து மீதான உங்களோட அக்கறை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு… பை தி பை’ என்று ஆரம்பித்தவன் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் என்று தொண்டையை செருமிக்கொண்டு தன் பேச்சை தொடர … அதை கேட்கும் மனநிலையில் அவள் இருந்தால் தானே..

 

இவர்களின் உரையாடலை மேலிருந்து கவனித்து கொண்டிருந்தான் ஆதித்யா… மித்ராவிடம் ஜெகா பேசுவதை வெறுத்தவன் மித்ரா மீது அளவுக்கடந்த கோபம் கொண்டான்… அந்த கோபம் ஏனென்று தெரியவில்லை தான் ஏன்? கோபம் கொள்கிறோம் என்று அவனுக்கு புரியாமல் இருந்தாலும்… தன் கோபம் அர்த்தமற்ற கோபமாக இருந்தது என்றாலும்…

 

அவனால் ஒதுங்கிக் கொள்ளவும் முடியாமல் தவித்தவன்… சகித்துக் கொள்ளவும் முடியாமல் போகவே அவர்களை தேடிச் சென்றான்…

 

‘ மித்ரா … ஐ.. திங்க் … நான் உங்கள…’ என்ற ஜெகதீஷின் பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்ததுப்போல்… ஆதியின் குரல் ஓங்கி ஒலித்தது ‘ ஜெகா இங்க என்ன பண்ற’ என்று ஆதியின் குரல் அவள் செவிகளை எட்டி விட மித்ரா எழுந்து நின்றாள்… மித்ரா எழுவதை தொடர்ந்து தானும் அவளுடன் எழுந்தவன் ‘ அடப்பாவி…நல்லா நந்தி மாதிரி வந்து காரியத்தையே கெடுத்துட்டியே’ என்று ஆதியை தன் மனதால் சபித்தவன்..

 

‘ என்ன வேணும் ஆதி’ என்று தன் எரிச்சலை மறைத்து ஜெகா ஆதியை பார்த்து கேட்க… ஆதியோ ‘ உன்ன சித்தி கூப்பிடறாங்க போ’ என்று ஜெகாவிடம் கூற… நான் போறேன்டா… ‘ஒரு நிமிஷம் நான் மித்ராகிட்ட பேசிட்டு வரேன்’ என்று அவன் தாமதிக்க…

 

பொறுமை இழந்த ஆதி மித்ராவிடம் தன் கோபத்தைக் காட்டினான் ‘ ஏய் இங்க என்ன பண்ற நீ…  உள்ளே போய் வேலைய பாரு… வந்த வேலைய விட்டுட்டு மத்த வேலையெல்லாம் நல்லா பாரு’ என்று அவன் குத்தலாக பேச…

 

ஏற்கனவே மனமுடைந்திருந்தவள்… இவனின் குத்தலான பேச்சைக் கண்டவளின் கண்களில் நீர் கோர்த்து குளம் கட்டியது… தன் கண்ணீரை மறைத்து கொள்ள முயன்றவள் தோற்றுப் போக கண்ணீரோடு அவ்விடத்தை விட்டுச்சென்றாள்…

 

அவள் கண்களில் நீரை கண்டவன் சற்று மகிழ்ந்தான்… ஏனெனில் தன் மனம் உலைப்போல் கொதித்து கொண்டிருந்த தருணம் அவளின் கண்ணீர் அவனை குளிர்வித்தது…

 

ஜெகவோ ‘ ஆதி ஆர் யூ மேட்… இப்ப ஏன் அவள திட்டின… அவளா ஒன்னும் என்கிட்ட பேசல… நாதான் அவகிட்ட பேச வந்தேன்’ என்று அவன் கூறி முடிக்கையில்…

 

சடாரென்று அவனைப் பார்த்தவன் ‘ ஐம்… நாட்… மேட் …. நீ தான் மேட் மாதிரி … நோ… நோ டீனேஜ் பாய் மாதிரி நடந்துக்கிற… யஸ்டர்டே ஆஃபீஸ் லேப்ல கம்பெனி ஷார்ஸ் டீடெயில்ஸ் எல்லாத்தையும் என்ன டாக்குமெண்ட் பேரு போட்டு சேவ் பண்ணனு… எனக்கு தெரியும்… அது தெரிஞ்சிதான் பேசுறேன்… யூ ஆர் தி லுசர் நௌ’ என்று அவனிடம் கூற…

 

அப்பொழுதுதான் உணர்ந்தான் தன் தவறின் காரணம் புரிய… தன் தலையை அழுந்த கோதி ‘ ஐ வில் சேஞ்ச ரைட் நௌ’ என்று கூற ஆதியோ ‘ நோ நீட் போல்டர் மாத்தியச்சி’…( பி காண்சியஸ் வித் வாட் யூ ஆர்) நிதானத்தோடு இருக்க கத்துக்கோ ஜெகதீஷ் வாழ்க்கைக்கு நிதானம் ரொம்ப முக்கியம்…

 

எல்லார்கிட்டையும் நின்னு பதில் சொல்ல வேண்டியதாயிருக்கும் டாக்குமெண்ட் ஷார் ஆகியிருந்தா…. டோன்ட் பி சில்லி…  யூ கேன் கோ நௌ’ என்று ஏதோ ஒரு காரணத்தைக் பிடித்துக் கொண்டு ஜெகாவை சாடியவன்….

 

தன் காரை  நோக்கிச் சென்றான்… ஏனோ அவன் மனம் இன்னும் அமைதியடைய வில்லை என்று தெரிந்தவன்… நேரே கெஸ்ட் ஹௌசிற்கு தன் காரை செலுத்தியவன்… தன் அலைபேசியை எடுத்து நேஹாவிற்கு அழைக்க நினைத்தான்… ஏனோ மனம் அதற்கும் இடம் கொடுக்காமலிருக்க தன் அலைபேசியை அனைத்து வைத்தவனின் எண்ணம் முழுவதும் மித்ராவையே ஆக்ரமித்திருக்க…

 

அவளை தனவளாக்கிக் கொள்ள அவன் இதயம் ஒரு நொடி நினைத்தது… ‘ என்ன நினைப்பு இது’  என்று தோன்ற தன் எண்ணத்திற்கு கடிவாளமிட்டு நிறுத்தியவன்…தனக்கு இன்னும் ரெண்டே வாரத்தில் நேஹாவுடன் திருமணம் என்று நினைத்தவன்…

 

யார்? யாரை காதலித்தாலும், திருமணம் செய்தாலும் நமக்கென்ன என்று நினைத்தவன் வலுக்கட்டாயமாக நேஹாவை தன் நினைவிற்கு கொண்டு வந்தான்….

 

நன்றி தோழமைகளே

 

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

 

திவ்யபாரதி
Comments are closed here.

error: Content is protected !!