Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-9 & 10

அத்தியாயம் 9

 

எம்டியின் அறைக்குள் கலவர முகத்துடன் நுழைந்தவனை கண்ட ஆதி ‘ என்னாச்சு பிரபா ஏன் இவ்ளோ பதட்டமா போன் பண்ணி வரச் சொன்னிங்க’ என்று ஆதி தன் முகத்தினை தீவிரமாக வைத்து கொண்டு கேட்க ‘ சார் நம்ப  நியூயார்க் ப்ரான்ச்ல ஒரு டீலர்ஷிப்  ப்ராபலம் சார்… இம்போர்ட் அண்ட் எக்ஸ்போட்ல ஏதோ குளறுபடி ஆகிற்கு சார்… நம்ப ஸ்டாக்கை பான் பண்ணிட்டு அதே மாதிரி வேற ரெடி பண்ணி லோட்க்கு அனுப்பினதால கொஞ்சம் ப்ராபலம் வந்திற்கு சார்’ என்று ஆதியிடம் கூற… தன் யோசனையில் இருந்தவன்… தன் அலைபேசி அழைக்க திரையில் ‘ தீபா சித்தி’ என்ற பெயரைக் கண்டவன் தாமதிக்காது அழைப்பை ஏற்றவன் ‘சொல்லுங்க சித்தி’ என்ற ஆதியின் குரல் கோபமாய் ஒலிக்க ‘ கடவுளே விஷயம் தெரிந்து விட்டதோ… தினேஷ் தான் செய்தான் என்று தெரிந்து விட்டாள்… அவனை இவன் கொல்லவும் தயங்கமாட்டான்’ என்ற சிந்தனையில் இருந்தவரை ஆதியின் குரல் கலைத்தது ‘ ஹலோ சித்தி… நம்ப நியூயார்க் கம்பெனில ப்ராப்லம் போல சித்தி.. பட் யாரு பண்ணாங்கன்னு தெரியலை… உங்களுக்கு ஏதோ இன்போர்மேஷன் வந்திச்சா’…

 

தீபாவோ ‘ இல்ல… இல்லையே கண்ணா எனக்கு ஏதும் வரலையே’ என்று அவரது குரல் தடுமாற யூகித்தவன் நெற்றியில் முடிச்சுவிழ ‘ ஓஹோ அப்போ ஏதோ நடந்திருக்கு’ என்ற முடிவுக்கு வந்தவனாக ‘ ஓகே ரைட் சித்தி நான்

 

பிரபா என்றழைக்க அவன் குரலுக்கு காத்திருந்தவன் போல் ‘சார்’ என்றபடி உள்ளே நுழைந்தான் ‘ பிரபா… ஐ… நீட் அபிஷ்யல் டீடெயில்ஸ்… இன்னும் ரெண்டு நாள்ல எல்லா டீடைல்சும் இதுக்கு பின்னாடி யாரு என்னனு வித்தின்(48 hours) நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் ஏன் டேபில்ல இருக்கணும்… ஆர் யூ கிளியர் பிரபா’ என்ற ஆதியின் குரல் அந்த அறை முழுவதும் ஒலிக்க… அவனது குரல் உயர்ந்ததில் திடுக்கிட்டவன் ‘ எஸ் சார்’ என்றான் பவ்யமாக…

 

மித்ரா …. ‘அடியே மித்ரா… விடிஞ்சி ரொம்ப நேரமாகுது இன்னும் விடியலையா உனக்கு’ என்ற ஹேமா  அவளை எழுப்பிய வண்ணமிருக்க சிறிய விசும்பல் சத்தம் கேட்டவள் பதறிக்கொண்டு மித்ராவின் போர்வையை விலக்கி விட்டாள்

 

‘ மித்து …. மித்துமா என்னடியாச்சி ஏன் அழர… இங்க பாரு எழுந்திரி’ என்றவள் அவளை எழுப்பி அமரவைத்தவள்…

 

அவளின் கண்களிலிருந்து வரும் கண்ணீரைக் கண்டவள் தனது மனதில் கொஞ்ச நாளாக குமைந்துக் கொண்டிருந்த கேள்வியை அவளை நோக்கி தொடுத்தால் ‘ இங்க பாரு மித்து நானும் கொஞ்ச நாளா உன்ன கவனிச்சிட்டுத்தான் வரேன் உன்னோட முகம் சரியில்ல… நீயும் சரியில்ல என்கிட்ட சொல்ல கூடாதுனு ஏதாவது இருக்கா மித்து… நானும் பாத்துட்டுத்தான் வரேன் ஏதோ பறிகொடுத்தாப்ல இருக்க’ என்று கூறிய தன் தோழியின் மடியில் தஞ்சம் புகுந்திருந்தாள் மித்ரா…

 

கதறி அழுபவளைக் கண்டவள் ‘ மித்து… மித்து இங்க பாரு ஏண்டி இப்படி அழர … ஏய் ப்ளீஸ் டி … அழாதடி எதுவா இருந்தாலும் சரி பண்ணிக்கலாம் அவளின் அழுகை கூடியதோ ஒழிய குறையவில்லை அவளை தேற்றும் வழியறியாது அமர்ந்திருந்தவள் விசும்பல் சத்தம் குறைய…

 

‘சரி இப்போ சொல்லு என்ன பிரச்சனை’ என்று ஹேமா கேட்க… மித்ரா ஹேமாவின் விழிகளை சந்தித்தவள்

 

‘ ஹேமா உனக்கே தெரியும் நான் எப்படி ஆஸ்ரமத்துக்கு வந்து சேந்தனு’ ஹேமவுக்கோ ஒன்றும் புரியவில்லை மிகுந்த குழப்பத்தின் ஊடே அவளை பார்த்தவள் ‘சரிடி நீ அழரத்துக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்… ஒன்னும் புரியல… கொஞ்சம் தெளிவா சொல்லுடி என்க ‘ ஹேமா நான் இப்போ கேர் டேக்கரா வீட்டுக்கு வேலைக்கு போறேன்ல… அது… அது என்னோட குடும்பம் டி… நான் சின்ன வயசுல தொலைச்ச என்னோட குடும்பம்…. என்னோட சந்தோஷத்த மீட்டுக் கொடுத்த  கடவுள் இப்போ திரும்பவும் பரிச்சிட்டாரு… நான் யாருக்காக என்னோட உயிரை இழக்கமா ஒரே ஆகாரமாக வாழ்ந்துவந்தேனோ… அந்த உறவே எனக்கு சொந்தமில்லனு ஆகப்போறது நினைச்சாலே எனக்கு இந்த நொடியே செத்தாக்கூட பரவால்லனு தோணுது’ என்று கூறிய மித்ராவின் வார்த்தையை கேட்டவளால் அவளின் குடும்பத்தோடு சேர்ந்ததை எண்ணி ஒரு புறம் மகிழ்ந்தாலும்…

 

மற்றொரு புறம் அவள் கூறிய வார்த்தையை கேட்டு அதிர்ந்தாள்…

 

‘ ஏண்டி எப்ப பாரு கிறுகுத்தனமாதான் யோசிப்பியா… இப்ப என்ன உன்னோட பிரச்சனை உன்னோட ஆதிக்கு வேற ஒரு பொண்ணு கூட கல்யாணம் அதுதான … சரி நீ ஏன் உன்னை பத்தின உண்மையை மறச்ச? என்று ஹேமா கேட்க… மித்ராவோ அவளை அதிர்ச்சியாய் பார்க்க… மித்ராவே தொடர்ந்தாள்…

 

‘ யாரு டி நம்புவா… நான் சொன்னாலும்.. இத்தன வருஷம் இல்லாத உறவு இப்போ என்ன புதுசா கொண்டாட வந்துன்னு கேட்டா… நான் சொன்னாலும் எப்படி அவங்க நம்புவாங்க… கொஞ்சம் யோசிச்சி பாரு உனக்கே புரியும்’ என்று கூற மித்ராவின் கூற்றை ஆமோதித்தாள் ஹேமா…’ யோசிக்க வேண்டிய விசயமடி மித்ரா’ என்று கூறிய ஹேமாவை தீர்க்கமாக பார்த்தால் மித்ரா..

 

சரி இன்னும் மேரேஜ்க்கு ஒரு வாரமிருக்கு… நீ கவலைப்படாத… நேஹா கூட உன்னோட பாவாக்கு கல்யாணமாகாது சரியா’… இதுக்கு நான் கேரண்டி என்றவள் பீரிதிக்கி நான் கேரண்டி என்ற பாணியில் கூற மித்ரா அவளை தன் விழிகள் தெரித்து வெளியே விழுந்துவிடும் அளவிற்க்கு விழித்தாள்…

 

‘ என்ன சொல்ற ஹேமா என்ன செய்ய போற’ ஒரு விதமான திகிலுடன் கேட்க..’ வெய்ட் அண்ட் வாட்ச் டியர் சஸ்பென்ஸ்’ என்று ஹேமா கூற மித்ராவிற்க்கு இது சரியா படாததால் ‘ வேண்டாம் டி… நான் ராசி கேட்டவ … பரவால விடு டி… எனக்கு விதிச்சதுனு வாழ்த்துட்டு போறேன்… கடவுள் எனக்கு எதை டி நிரந்தரமா கொடுத்து இருக்கார்…. விடு டி நீ தேவையில்லாம மாட்டிக்காத’ என்று கூறிய தோழியை ஆற்றாமையுடன் பார்த்தாலும்… அவளது மனமோ சமாதானம் அடையாததைப் பொருட்டு கடவுளிடம் தன் தோழியின் வேண்டுதலை விடுத்தாள்….

 

‘சரி டி ‘ ஏதோ உன்னிஷ்டம் என்று கூறியவள் தனது தோழியிடம் திரும்பி’ மித்து… நீ எதுவும் அப்படி நினைக்காத… சரியா எல்லாம் நன்மைக்கே’ என்று கூறியவளிடம் வலிகள் மிகுந்த புன்சிரிப்போடு அவளை எதிர்கொண்டாள்..

 

ஹேமவுக்கோ எப்படி ஆறுதல் கூறுவது என்று தெரியாமல் மித்ராவை தட்டி கொடுத்துவிட்டு தன் வேலைக்கு சென்றாள்…

 

திருமண ஏற்பாடுகள் தடப்புடலாகப் ஆரம்பித்தன… மித்ரா உடலில் உயிரிருந்தும் நடைப்பிணமாக நடக்க ஆரம்பித்தாள்… மித்ராவின் முகத்தை கண்ட தீபா ‘ மித்துமா… என்னடா உடம்புக்கு ஏதும் முடிலையா’ என்ற மிகுந்த அக்கறைக் கொண்டு கேட்டவர் அவளுக்கு அருகில் வந்து தொட்டுப்பார்க்க ‘ அதுலாம் எதுவும் இல்ல மேடம்… சும்மா தலைவலிதான்’ என்று மித்ரா பொய் கூற…

 

தீபாவோ ‘ அது என்ன மேடம்… வாய் நிறைய அத்தைன்னு கூப்பிடு’ என்று அவளுக்கு கட்டளையிட அவளோ ‘ ங்ன’ என்ற பாணியில் அவரைப் பார்த்து விழிக்க அவரோ சிரித்துக்கொண்டு என்னடா ‘ மித்து கண்ணு அப்படி பாக்குற… சாக்கிங்கா இருக்கா… இன்னும் உனக்கு நிறைய ஷாக் இருக்கு… இதுக்கே இப்படி திகைச்சி போய்ட்டா எப்படிமா’ என்றவர் சிரித்து கொண்டு செல்ல… மித்ரா  ஒன்றும் புரியாமல் பதுமையாய் நின்றிருந்தாள்…

 

‘ ஆதி பிரபா விடம் கூறியதுபோல்… நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் அவனுக்கு அனைத்து தகவலும் வந்துவிட… தன் கம்பெனிக்கு விரைந்து சென்றவன் தனக்காக பிரபா காத்துக்கொண்டிருக்க… சைகையால் அவனை அழைத்து உள்ளே வரச்செய்தான்…

 

‘ சொல்லுங்க பிரபா… என்னாச்சு எல்லா இன்போர்மேஷன் கேதர் பண்ணியச்சா’ என்று ஆதி பிரபாவை பார்த்து கேட்க.. அவனும் தாமதிக்காது ‘ யெஸ் சார் இந்த பைலில் டீடெயில்ஸ் இருக்கு சார்’ என்ற பிரபா தான் கண்டறிந்த விஷயங்களை சேகரித்து ஆதியிடம் கொடுத்தான்…

 

அதனை பார்வையிட்டவன்…’ யெஸ் வெல் டன்… நான் சந்தேக பட்டது சரியா போச்சி இல்லையா… அப்போ திட்டம் போட்டுத்தான் மூவ் பண்ணிற்கான் எம்.ஆர் குரூப்ஸ் நியூ எம்டி தினேஷ் ராமநாதன்… எம் ஐ ரைட் பிரபா’ என்க… அவனோ ‘ யெஸ் சார் … நான் வெளில விசாரிச்சத்துல அவங்க டெண்டர் நம்ப கைக்கு வந்தது லாப பங்கு அவங்களுக்கு சரிஞ்சதுனால இப்படி நம்ப பிஸ்னெஸ்ச ப்ளாக் பண்றாங்க சார்… அதுமட்டுமில்ல சார்’ என்ற பிரபாவின் பேச்சு முற்று புள்ளி அடைந்தை… தன் கையில் பேப்பர் வெயிட்டேஜ் ஸ்டோனை தன் டேபிள் முன் வைத்து சிந்தனை சிதறாது அதனை கவனமாக விளையாடி கொண்டிருந்தவன்….

 

பிரபாவின் பேச்சு முற்றுப்புள்ளி விழுந்ததை கண்டு… தன் தலை நிமிராது தன் புருவத்தை மட்டும் உயர்த்தி கண்களால் என்ன என்று கெட்டவன் ‘யெஸ் பிரபா கேன் யூ ப்ரோசிட்… அதுமட்டுமில்லாம’ என்றவனுக்கு  ஆதி  எடுத்துக் கொடுக்க…

 

‘சார் அது வந்து நம்ப பிஸ்னெஸ் டீடெயில்ஸ் எம்.ஆர் கம்பெனினுக்கு கொண்டு போய் கொடுத்தது ஒரு பொன்னுசார்…. அதுவும் உங்களுக்கு வேண்டபட்டவங்க’ என்று அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே தீபா ஆதியை அழைக்க ‘ வெய்ட் அ மினிட் பிரபா… இப்போ நீங்க கொடுத்த இன்போர்மஷன் போதும்… சோ நியூயார்க் பிஸ்னெஸ் டீலர்ஷிப் முடியும் வரை அங்க கண்டிப்பா ஆள் இருக்கணும்…

 

சோ நீங்களும் ஜெகாவும் இம்மிடியட்டா கிளம்புங்க… நான் ஜெகா கிட்ட சொலிட்றேன்’ என்று கூறியவன் அந்தோ பரிதாபம் எதையும் முழுமையாக கேட்காமல் அவசரத்தால் தனது வாழ்க்கை,காதல்,மகிழ்ச்சி என்னும் சந்தோஷ  ஆலைகள் ஒரே நேரத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப் போகிறது என்பதை அறியாதவனாய் இருந்தான்…

 

தீபாவின் அடிமனதில் பயப்பந்து உருண்டது என்ன நடக்குமோ என்று தோன்ற அவனின் வரவுக்காக காத்திருந்தார்… ஆதியின் கார் வந்துவிட்டதை அறிந்தவர் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டார் ஆதியின் முகத்திலிருந்து தீவிரத்தைக் கண்டவர் ‘ என்ன கண்ணா… ரொம்ப டென்ஷனா இருக்க’ என்று தீபா தன் பயத்தை மறைத்து அவனிடம் வினவ ஆதியோ ‘ சித்தி பிஸ்னெஸ்  டீலர்ஸ் பிரச்சினை பண்ணது இந்த எம்.ஆர் கம்பெனி புதிய எம்டி தினேஷ் தான் சித்தி சோ நானே நியூயார்க் போலாம்னு இருந்தேன்… பட் இங்க நம்ப கம்பெனில முக்கியமான மீட்டிங் இருக்கு… சோ நான் இங்க இருந்தே ஆகனும் அதுனால நம்ப கம்பெனி பிஏ பிரபாவும் அண்ட் நம்ப ஜெகாவும் போகட்டும் சித்தி… அந்த தினேஷ என்ன பண்ணனும்னு தெரியும் அப்போ இருக்கு அவனுக்கு’ என்று அடிக்குரலிருந்து கர்ஜித்தவனை  மனம் பதைப்பதைக்க கண்டவர்…

 

‘ கண்ணா இங்க பாரு… சொல்றத கேளு கல்யாணத்த வச்சிக்கிட்டு அங்கலாம் போக வேண்டாம் கண்ணா ஜெகாவும் பிரபாவும் பாத்துபாங்க… நீ எதுக்கும் கவலைப்படாத அழகா மணப்பையன் தோற்றத்துக்கு மாறு… சரியா கலயணத்துக்கு அப்புறம் நியூயார்க் போலாம்… அதுவும் பிஸ்னெஸ்க்கு இல்ல கண்ணா தேன்நிலவுக்கு சரியா’ என்றவர் அவனுக்கு எவ்வளவு சமாதானம் எடுத்துறைத்தாலும் அவனின் முகத்தில் கோபத்தின் தீவிரம் சிறிதுக்கூட குறையவில்லை…

 

‘ கண்ணா மூஞ்சிய இப்படி வைக்காத எனக்காக சரியா’ என்றவரை பார்த்து உதட்டளவிலே தன் புன்னகையை தவழ விட்டவன் தன் அறையை நோக்கிச் சென்றான்…

 

ஜெகவோ தன் நியூயார்க் பயணம் தொடங்குவதற்கு முன் மித்ராவிடம் தன் காதலை வெளிப்படுத்த காத்திருந்தவன் மித்ராவை தேட அவளோ தன் அன்னையிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவன் தற்செயலாக பார்ப்பதுபோல் அவளை நோட்டம் விட்டு மீண்டும் திரும்புகையில்… தீபா அவனை கண்டுவிட்டார்… ‘ ஜெகா இங்கவா… என்ன வேணும்’ என்றவர் மித்ராவை வைத்துக்கொண்டே கேட்க ஜெகாவோ மித்ராவின் மீது பதித்த தன் பார்வையை விலக்க முடியாமல் போகவே… மீண்டும் தீபாவின் அழைப்பில் தன் நடப்புக்கு வந்தவன்…

 

‘மாம்… சொல்லுங்க மாம்  என்ன வேணும்’ என்று ஜெகா தன் அன்னையை பார்த்து கேட்க… தீபா அவனை முறைத்துக்கொண்டே ‘ நான் உன்னைய கேட்டா நீ என்னைய கேட்குறியா’ அவனை முறைத்துக் கொண்டே கேள்வி கேட்க…

 

அவனோ தன் அன்னையின் முன் அசடு வழிந்து நின்றான்…

 

அங்கு நின்ற மித்ரா அவர்களின் உரையாடலை கண்டவள் தனக்குள் சிரித்துக் கொண்டே  நகர்ந்து சென்றாள்… அவள் செல்வதற்கே காத்திருந்தவர் போல் ‘ சொல்லுடா மித்ராகிட்ட என்ன சொல்லணும்… அவளைப் பாக்கத்தான வந்த’ என்க

 

‘மாம்… நீங்க என்ன சொல்றிங்க’ என்று பாவமாய் அவரைப் பார்த்துக் கேட்க தீபாவும் எதுவும் தெரியாததுப் போல் முகத்தை வைத்துக்கொண்டு ‘ அப்போ… மித்ராவ நீ பாக்கவரல… சரி விடு… உனக்கே இஷ்டமில்லாதப்போ … நான் ஏன் மித்ராகிட்ட உன்னைப் பத்தி பேசணும்… மித்ராவ உனக்கு எப்பிடியாது கல்யாணம் பண்ணிவைக்கலாம்னு நினைச்சோம்…சரி விடு’ என்று தன் அன்னை கூறுவதைக் கேட்டு சிலையென நின்றிருந்தவனை கடந்து செல்ல முற்பட..

 

ஜெகாவோ ‘ மாம்…மாம் நீங்க சொல்றது உண்மையா’ என்று சந்தேகமாய் கேட்க அவரோ ‘ அட இதுல போய் யாராவது பொய் சொல்வாங்களா ஜெகா’ என்று கேட்க ‘ இல்ல மாம்… உங்களுக்கு எப்படி தெரியும்… நான் மித்ராவை லவ் பண்றது’ என்றவன் சிறியதாய் வெட்க பட்டுக்கொண்டு கேட்க அவரோ ‘டேய் மோச புடிக்குற  நாய் மூஞ்சப் பாத்தா தெரியாது’ என்றவரை கண்டு அசடுவழிந்தான்…

 

 

அத்தியாயம் 10

 

‘மாம்… மேரேஜ் டேட் பிக்ஸ் பண்ணிட்டீங்களா’ ஆர்வமாய் தன் அன்னையை பார்த்துக் கேட்க ‘ யாரோ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தெரியாத மாதிரி இருந்துட்டு இப்போ இப்படிக் கேட்குறாங்கப்பா அவங்கள நீங்க பாத்திங்களா’ என்று தீபா கேட்க… அவனோ ‘ கம்  ஆன் மாம்… ப்ளீஸ் சொல்லுங்க…எப்போ எங்களுக்கு மேரேஜ் ஆதி கூடயேவா’ என்று குறும்போடு கேட்க…

 

‘ டேய்… இவ்ளோ அவசரமா…அதலாம் எதும் இல்ல நீ நியூயார்க் போயிட்டு வா… நீ வந்ததும் மேரேஜ் வச்சிக்கலாம்… ஒகேவா நான் இன்னும் மித்துகிட்ட பேசல… நீ போயிட்டுவா… வந்து பாத்துக்கலாம் நான் மித்துகிட்ட பெர்மிஷன் வாங்குறேன் அது என்னோட பொறுப்பு நீ கவலைப்பாடாம போயிட்டுவா’ என்று தன் மகனிடம் கூற…

 

‘மாம்…ஐ.. ட்ரஸ்ட் யூ…. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு’ என்று கூறி அவரை கட்டியணைத்து அவரது கன்னத்தில் முத்தம் வைத்து விடைபெறும் நேரம்  தீபாவின் கணவர் வெங்கட் வந்துவிட ‘ டேய் என் பொண்டாட்டி பாவும் டா விடு அவள’ என்று  அவனை விளையாட்டாக சாடினார்… ‘ ஹலோ  அவங்க எங்க மாம் என்று வர்ஷாவும் ஜெகாவுடன் கூட்டு சேர்ந்து கொள்ள… வெங்கட்ராமன் டேய் வாலு பசங்களா ஆள விடுங்கடா தெரியாம சொல்லிட்டேன் என்று அவர் பாவமாய் பார்க்க வர்ஷாவும் ஜெகனும் ஒன்று சேர்ந்த குரலில் அது அந்த பயம் இருக்கட்டும்’ என்று  கூறிய தன் மக்களை கண்டவர் வாய்விட்டு சிரித்தார்….

 

அனைவர் முகத்திலும் புன்னை பூத்திருக்க ஜெகன் விடை பெற்றுச் சென்றான் ‘ஓகே பை டேக் கேர் ‘ என்று கூறி பறந்து சென்றான்… தன் மகனின் மகிழ்ச்சியை கண்டவர் அக மகிழ்ந்தனர்….

 

விமான நிலையத்திற்கு கிளம்பும் நேரம்… ஜெகாவின் எண்ணங்கள் முழுவதும் மித்ராவை சுற்றிக் கொண்டிருக்க… மித்ராவை தனிமையில் சந்திக்க அவனது மனம் துடித்தது… ஆதியின் குரல் அவனை கலைத்தது.. ‘ ஜெகா ரெடியா டா… இந்தா பைல்ஸ் இதுல ஆடிட்டிங் ஷார்ஸ் பத்தின்ன பைல்ஸ் அப்புறம் முக்கியமான டீலர்ஸ் சம்மந்தபட்ட பைல்ஸ் இருக்கு பத்திரம்… அங்க போய் லேண்ட் ஆனதும்… காண்டக்ட் மீ’ என்று ஆதி கூறிக்கொண்டிருக்கும் போதே ஜெகாவை கண்டவன் அவன் எண்ணங்கள் அவனிடம் இல்லை என்று யூகித்தவன்…

 

அவன் முன் ‘ சோடக்கு போட்டு… டேய் ஜெகா… நான் உன்கிட்டதான் பேசிக்கிட்டு இருக்கேன் சரியா… வேர் ஆர் யூ மேன்’ என்று கூற ‘ நத்திங்… ஆதி… ஷால் வி கோ’ என்றவன் தன் உடைகள் நிறைந்த ட்ராலியை கொண்டு வந்து காரில் ஏற்றியவன் ஆதியிடம் திரும்பி ‘ஒரு நிமிஷம் ஆதி நான் மித்ராகிட்ட சொல்லிட்டு வரேன்’ அவன் மித்ராவை காண வேண்டும் என்று கூறும் போதே ஆதிக்கு கோபம் எழ என்ன செய்வதென்று தெரியாமல் அமைதியாய் நின்றான் .

 

மித்ரா கிச்சனில் கண்ணம்மாவிற்கு உதவிக் கொண்டிருந்தவளை கண்டவன்… அவனின் பார்வை அவளின் மேல் மேய்ந்தது… ஒரு நிமிடம் தன்னை சமன் செய்துக்கொண்டவன்… மித்ரா என்றழைக்க குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள்… கிச்சன் வாயிலில் ஜெகாவை கண்டவள் ‘ சொல்லுங்க சார்… ஏதாவது வேணுமா’ என்று புன்னகையுடன் கேட்க அவளது புன்னகையில் மயங்கியவன் தன் மூச்சை ஆழ எடுத்துவிட்டு… ஹ்ம்ம் நீதான் வேணும்’ என்று அவன் மனம் மௌனமாய் அவளிடம் பேசியது…

 

வெளியே நின்றுக்கொண்டிருந்த ஆதியின் உள்ளம் நெருப்பு குழம்புப் போல் கொதித்துக்கொண்டிருக்க… அதற்குமேல் பொறுக்க முடியாது என்பதுபோல்… ஆதி ஜெகாவைத் தொடர்ந்து உள்ளே வந்தான்… வந்தவனின் கண்ணில் மித்ரா புன்னகையுடன் ஜெகாவிடம் பேசிக் கொண்டிருந்ததை வெகு தூரத்திலிருந்து வரும் போதே கவனித்துக்கொண்டு வந்தவன்…

 

ஜெகாவை அழைத்தான் ‘ அவனோ இவனுக்கு வேற வேலையே இல்லப்போல’ என்று சலித்துக்கொண்டு திரும்பியவன் கண்களில் தன் காதலை சொல்ல முடியாத வலியை ஆதி ஜெகாவின் கண்களில் சந்தித்தான்…

 

‘ ஜெகா இட்ஸ் ஆல்ரெடி லேட்… இன்னும் ஒன் ஹார்ல நீ அங்க இருக்கணும் என்று கூற… ஜெகாவிற்கு  வேறு வழி தெரியாமல் மீண்டும் மித்ராவைப் பார்த்தவன்.. என்ன நினைத்தானோ ஒன் மினிட் ஆதி என்று கூறியவன் மித்ராவிற்கு அருகில் சென்றவன் மித்ரா நீங்க என்கூட ஏர்போர்ட் வரைக்கும் வர முடியுமா’ என்று ஒருவாறு தன் தயக்கத்தினை உடைத்து அவளிடம் அவன் இவ்வாறு கேட்க…

 

அவளோ’ என்ன இவன் என்ன எதுக்கு கூப்பிட்றான்… அதுவும் பிளைட்க்கு வேற டைம் ஆச்சினி ஆதி பாவா சொல்றாரு’ நான் எதற்கு என்ற தன் எண்ணத்தில் இருந்தவளை ஜெகாவின் குரல் கலைத்தது ‘ மித்ரா ப்ளீஸ் மறுத்துராதிங்க… டைம் வேற இல்ல எனக்காக’ என்று அவன் கெஞ்ச  வேறு வழியில்லாமலும்  அவனுக்கு போதுமான நேரமில்லாமலும் போகவே அவள் அவனுடன் வர சம்மதித்தாள்…

 

ஜெகாவுடன் வர சமதித்தவளை கண்ட ஆதிக்கு கோபம் தலைக்கேற கை முஷ்டிகள் இறுகியது ‘ என்ன நெஞ்சழுத்தம் இருந்தா அவன் கூப்பிட்டதுக்கு இவளும் வர சம்மதிப்பா… இன்னக்கி இருக்கு இவளுக்கு’ என்று தன் மனதில் கருவிக்கொண்டவன் அவர்களை நோக்கி கிளம்பலாமா என்று கேட்க… அவர்கள் இருவரும் முன்னே சென்றதை தீபாவும் வெங்கட்ராமனும் ஜெகாவை வழியனுப்ப வந்தவர்கள் மித்ராவும் ஜெகாவும் சேர்ந்து செல்வதைப் பார்த்தவர்கள் ‘ஜோடிப் பொருத்தம் அருமையா இருக்குல்ல’ என்றவர்கள் பேச்சு ஆதியின் காதில் தெளிவாக விழுந்தது… பொறாமைத் தீ அவனுள் மூண்டது…

 

செய்வதறியாது அவர்களை தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தவனின் மனதில் சொல்ல முடியாத வேதனை அவனை ஆட்கொண்டது இன்னும் இரண்டு நாளில் தான் வேறு ஒருத்திக்கு  சொந்தமாக போவதை அறியாமல்… அவனது மனம் முதல் தடவையாக ஏங்கியது அதுவும் ஒரு பெண்ணிற்காக என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…

 

அவனின் இரும்பு இதயத்தில் மித்ரா அழகாக சிம்மாசனமிட்டு அமர்ந்ததை அவன் எங்கனம் அறிவான்….

 

தொழில் விவகாரத்தில் புலியாக இருப்பவனின் அறிவுக்கு எட்டவில்லை… நேஹாவின் மீது இருப்பது வெறும் ஈர்ப்பென்று… காலம் அவனுக்கு உணர்த்துமா ?

 

மூவரும் காரில் சென்றுக்கொண்டிருக்க… தனக்கு போதுமான தனிமை கிட்டாததால்… ஜெகா ஒரு காகிதத்தை எடுத்து கடிதமாக மாற்றி அதில் தன் மனதில் உள்ளதை எழுத்துக்களால் உணர்த்திடும் பொருட்டு எழுதியவன் மித்ராவிடம் கொடுக்க எண்ணினான்…

 

இமிகிரஷன்ஸ் முடிந்து ஜெகா பிளைட் ஏறி செல்லும் பொழுது… மித்ராவிடம் அக்கடிதத்தை கொடுத்து படிக்க சொல்லி சென்றான்… அவன் கொடுத்ததை புரியாமல் வாங்கியவள் அதனை தன் பக்கத்து இருக்கையில் வைத்துவிட்டு… ஜெகாவை வழியனுப்ப சென்றவள் அதனை மறந்தாள்….

 

இவர்களின் உரையாடலை பொறுமையே இல்லதாவன் மிகுந்த பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தான்… மித்ரா எழுந்து முன்னே செல்ல… அவளுக்காக காத்திருந்தவன் போல் அவள் இருக்கையில் ஜெகா கொடுத்த கடிதத்தை கண்டவன்… அவளைப் பார்க்க அவளின் பார்வை இங்கு இல்லை என்பதை உணர்ந்தான்…

 

அவளின் பார்வையோ தன் முழு உயரத்திற்கு மேல் உயர்ந்து நிற்கும் கண்ணாடிற்கு அந்த பக்கத்திலிருக்கும்  விமானத்தில் தன் பார்வையை செலுத்தியவள் ஆதி தன்னை விழுங்குவதைப் போல் பார்த்ததையும் ஜெகா கொடுத்த கடிதத்தையும் அவன் எடுத்ததை அவள் அறியவில்லை…

 

ஜெகாவை வழியனுப்பி விட்டு வந்தவள் ஆதியின் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காது… காரை நோக்கி நடந்தாள் அவளின் பார்வை தன் மேல் படாததைக் கண்டவன் ஆத்திரமடைந்தான் மனதிலோ ‘ அவன்கிட்ட மட்டும் நல்லா பேசுற… என்ன பாத்தா மட்டும் உனக்கு ஏளக்காரமா இருக்கா… இருடி உன்னோட  திமிர அடக்குறேன்’ என்று கருவிக் கொண்டவன் சிறிது நேரம் அவளுக்கு ஆட்டம் காட்டலாமென்று தோன்ற அவளுக்கு முன்னே சென்றவன்… அவளிடம் திரும்பி ‘ நீ இங்கையே பார்கிங்க்ல நில்லு நான் கார எடுத்துட்டு வரேன்’ என்று கூறிச்சென்றவன் அடுத்து ஒருமணி நேரம் கடந்தும் அவன் வராததை நினைத்து சிறிது பயம் எட்டிப்பார்க்க…

 

பார்க்கிங்கில் நின்று அவனின் காரை  எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள்…

 

ஆனால் அவன் வந்த பாடில்லை வரும் அவசரத்தில் கையில் அலைபேசியை எடுக்காமல் வந்ததில் தன் முட்டாள் தனத்தை எண்ணி வருந்தினாள்… யாரிடம் கேட்பது? என்ன என்று கேட்பது? எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டு அங்கையே நின்றாள்… காலில் (knee crutches) காலில் பொறுத்திருக்கும் கருவி வேறு வலியெடுத்தது வலி தாங்க முடியாமல் கண்களில் நீர் அரும்பியது புது மனிதர்கள் புது இடம்… மேலும் நிற்க முடியாமல் அங்கு ஓரமாக போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்தாள்….

 

மேலும் அரைமணிநேரம் அவளை தவிக்கவிட்டவன் ஒருவழியாக வந்து சேர்ந்தான்…அவளின் முகத்தினை கூர்ந்து நோக்கிக் கொண்டு வந்தவன்… அவளின் முகம் பயத்தில் வெளிறிக் காணப்பட நிம்மதி உற்றவனாய் அவளை நெருங்கினான் ‘ போலாமா மித்து’ என்று அவன் கேட்க முதல் முறையாக அவன் தன்னை அழைத்ததுமில்லாமல் மித்து என்ற அழைப்பில் அவனை வியப்பாக பார்த்தாள்… அவள் கண்களின் மொழியை புரியாமல் பார்த்திருந்தான் ஆதி…

 

அவளும் ஏதும் பேசாமல் அவனை தொடர்ந்து சென்றாள்… ஆதிக்கு கோபம் கட்டைத் தாண்டி பறந்தது… தன் பேச்சிக்கு மறுப்பேச்சு பேசாமல் தன்னுடன் வருபவளை நினைத்து கோபம் பன்மடங்காக பெருகியது… அதே கடுப்புடன் காரில் ஏறியவன் அவள் பின்பக்கமாக ஏற அவளைத் தடுத்தவன் ‘ நான் என்ன உன்வீட்டு ட்ரைவர்ன்னு நினைச்சியா… அப்படியே மகாராணி மாதிரி பின்னாடி போய் ஏற போற… நான் உனக்கு எஜமான் சரியா … அது நியாபகத்துல இருக்கட்டும்… வந்து முன்னாடி ஏறு’ அவனது குத்தலான பேச்சும் மிரட்டலும் அவளுக்கு உடல் முழுவதும் உதறல் எடுக்க தொடங்கியது…

 

அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தவள் அவனின் முகத்தை பார்க்காது அவன் அருகில் அமர்ந்தாள்… அவள் அமர்வதற்காக காத்திருந்தவன் போல் கார் ஆட்டோமேட்டிக் லாக் ஆனதும்… சாலையில் கார் புயல் வேகத்தில் பறந்தது… அவளோ சீட் பெல்ட் போடாமல் அமர்ந்ததின் விளைவு டேர்னிங்கில் திரும்பும் போது காரின் வேகம் குறையாமலிருக்க அவளோ தன்னை சமாளிக்க முடியாமல் அவன் மீது மோதிக் கொண்டாள்…அவன் மீது மோதியவளால் எழ முடியாமல் போனது…

 

அவளின் பூவுடல் தன் மேல் மோதியதில்… அவளின் மென்மை… அவளின் நறுமணம் அவன் நாசியைத் தூண்ட… பாதி உடல் அவன்மீது இருக்க… அதில் போதை கொண்டான்… அவளோ அவன் மீது விழுந்த பயத்தில் எழ முடியாமல் அப்படியே அவன் மீது சாய்ந்து கொண்டிருக்க அதை இன்பமாக அனுபவித்தவன்… தன் காரின் வேகத்தை குறைத்து… இருள் படர்ந்த சாலையின் ஓரமாக தன் காரை நிறுத்தியவன்… அவளை தன்னிடமிருந்து பிரித்து அவள் முகத்தை தன் கையில் ஏந்தினான்…

 

அவளது கண்கள் இன்னும் பயத்தில் பளபளக்க அதைக் கண்டவன் அவள் நெற்றியின் மேலிருந்த முடியை கோதிவிட்டவன்…

 

மென்மையாக அவள் நெற்றியில் இதழ் பதித்தான்… பெண்ணவள் அதை அனுபவித்து கண்களை மூடினாலும் கடமை தலை தூக்க அவன் பிடியிலிருந்து வலுக்கட்டாயமாக தன்னை மீட்டுக் கொண்டவள் காரை விட்டு இறங்க முயன்றாள்…

 

என்ன முயற்சி செய்தும் முடியாமல் போனது… அவள் செய்வதைக் சிறு புன்னகையுடன் பார்த்திருந்தவன் அவளின் கையை பிடித்து இழுத்தான்… அவள் தட்டிவிட அதில் கோபமுற்றவன் ‘ ரொம்ப ட்ரை பண்ணாத… இது ஆட்டோ லாக்… கார் சாவியை எடுத்தா தான் திறக்கலாம்’ என்று கூற கார் சாவி மீது தன் பார்வையை செலுத்தியவள் அதை எடுக்க முயற்சி செய்தவளை அடக்கிய போது அவளின் துப்பட்டா நழுவி கீழே விழுந்தது….

 

துப்பட்டா இல்லாமல் அவளை வெகு அருகில் பார்த்தவன்… அவளின் அழகில் இன்னும் தன்னைத் தொலைத்தான்…

 

அவன் கண்களின் மாற்றதை கண்டவள் அவன் பார்வை சென்ற திசையைப் பார்த்தாள்… அப்பொழுதுதான் கவனித்தால் தன் துப்பட்டா நழுவி கீழே விழுந்ததை… என்ன முயன்றும் தன் கைகளை அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ள முடியவில்லை…

 

‘ சார் ப்ளீஸ் சார் கை வலிக்குது சார்… விடுங்க சார் ‘என்றவள் கண்களில் நீர்கோர்க்க முதல் முறையாக அவனின் முகத்தைப் பார்த்து கேட்டவளின் அழகையும்… அவளின் கண்கள் தன்னை யாசித்தத்தையும்… அவள் இதழின்  துடிப்பையும் கண்டவனின் இதயம் தடம் புரண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்ல… அதில் போதை கொண்டவன் மீண்டும் பெண்ணவளின் முகத்தை தன் முகத்திற்கு அருகில் கொண்டு வந்தான்…

 

நன்றி தோழமைகளே

 

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

 

திவ்யபாரதி

 

 

 
4 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kayathri says:

  Mam please link kodunga mam


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Next epi seekiram podunga


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  NICE UD


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  He super ya