முகங்கள்-50(1)
2809
7
முகங்கள் – 50 கிளைமேக்ஸ்
நடு இரவை தாண்டியும் அந்த பார்ட்டி நீண்டுகொண்டே இருந்தது, ஆனால் கூட்டம் இல்லை, அங்கொருவர் இங்கொருவராக நின்றிருந்தனர், அவர்கள் கிளம்பும் வரை ருத்ரபிரதாப் இருந்துதான் ஆகவேண்டும் என்பதில்லை, ஆனால் பொறுப்பு என்று ஒன்று உண்டுதானே, அவனுடன் பிரகாஷூம் இருந்தான்,
முன்பே சந்தனாவை ரூமிற்கு போகச்சொல்லிவிட்டான் ருத்ரபிரதாப்.
‘காலையில் சந்திரிகா வந்து விடுவார், நேற்று அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்புவதற்குள் பிரகாஷ் பட்டப்பாடு அவனுக்கு மட்டுமே தெரியும் , அவர் நாளை வந்ததும் மீண்டும் பேய் ஓட்டவேண்டும் என்று ஆர்பாட்டம் செய்யக்கூடும், அப்போது என்ன செய்வது?, எப்படியும் சந்திரிகாவோடு என்னைத்தான் கோத்து விடுவான் இந்த ருத்ரன், பிரகாஷ் “ஆல் இஸ் வெல் ” என்று தனக்கு தானே பிரகாஷ் தைரியம் கூறிக்கொண்டிருக்கையில் ருத்ரபிரதாப் வேறு சிந்தித்துக்கொண்டிருந்தான்
‘கிருபாகரன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் எடுத்து வருவதற்குள் தேவ் நாயர் வந்து விட வேண்டும், ஷர்மாவிடம் விபரம் கூறி தயாராக இருக்கச்சொல்ல வேண்டும், சந்திரிகாவுடன் அவரது மகளை மகளாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும், ஆனால் இவள் போவாளா?????
நல்லவேளையாக பார்ட்டியில் தன்வன்யாவை பயன்படுத்தி ஜூசில் அன்றைய மாத்திரையை கலந்து கொடுத்துவிட்டான் , இந்நேரம் அவள் தூங்கியும் இருப்பாள். நாளைய விடியல் எல்லாவற்றிற்கும் விடையளித்து விடும். ‘ சிந்தனையினூடே தன் செல்போனை எடுத்து “நாளை மார்பிள் ரெசார்ட் வந்ததும் நேரே வந்து என்னை சந்தியுங்கள் – மிக முக்கியம் ” என்ற குறுஞ்செய்தியை சந்திரிகாவிற்கு அனுப்பிவிட்டான்.
ஒருவாறு பார்ட்டிக்கு வந்த எல்லோரும் சென்றுவிட்டதும் இருவருமே ருத்ரனின் அறைக்கு வந்து படுத்துவிட்டனர், பார்ட்டியில் அருந்திய மது அவர்கள் தூங்க துணைபுரிந்தது. இல்லையென்றால் இருவருக்குமே தூக்கம் வந்திருக்க வாய்ப்பில்லை.
*******
காலிங்பெல் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்க முதலில் எழுந்தது ருத்ரபிரதாப் தான். கட்டிலில் குப்புற படுத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பிரகாஷை இரண்டு முறை தட்டிவிட்டு கதவை நோக்கி நடந்தான், போகும் வழியில் சேரில் இருந்த டீ சர்ட்டை எடுத்து அணிந்து கொண்டு கதவை திறந்தவனுக்கு முன்னால் சந்திரிகா நின்றிருந்தார்.
மணிக்கட்டை திருப்பி பார்த்தவன் “காட்…..இட்ஸ் ஈலெவன் ” என்று முணுமுணுத்தபடி தலையில் கைவைத்தான்.
சந்திரிகா அவனை புரியாமல் பார்க்கவும் “உ…..உள்ள வாங்க…. ” அவருக்கு வழிவிட்டு உள்ளே நடந்தான். பிரகாஷ் அதற்குள் எழுந்துஅமர்ந்திருந்தான்
சந்திரிகாவிற்கு சோபாவை காட்டிவிட்டு “மேடம் நான் டூ மினிட்ஸ்ல வந்திடுறேன்” என்று பெட்ரூமினுள் நுழைந்தவன்
“பிரகாஷ் சந்திரிகா மேடமுக்கு சாப்பிட ஏதாவது ஆர்டர் பண்ணிட்டு ஃபிரஷ் ஆயிட்டு வந்திடு,” பேசிக்கொண்டே குளியலறைக்குள் புகுந்தான்
‘காலையிலயேவா? ‘ அலுப்புடன் சந்திரிகாவிற்கு வேண்டியதை ஆர்டர் செய்துவிட்டு அவனது அறைக்கு சென்றான் பிரகாஷ்
*******
சந்திரிகாவின் எதிரே ஒருவித அமைதியின்மையோடு அமர்ந்திருந்தான் ருத்ரபிரதாப். ‘எங்கிருந்து தொடங்குவது, எப்படி தொடங்குவது, ஒரு தாயாய் இவரது மனநிலை எப்படி பாதிக்கப்படும் ‘ என பல யோசனை அவனுள் அலைமோதிக்கொண்டது. இப்படிபட்ட நாளை அவன் எதிர்பார்த்திருந்தான் தான் ஆனால் அந்த நாள் வந்துவிட்ட பொழுது தடுமாற்றமாகத்தான் இருந்தது.
தொண்டையை செருமிக்கொண்டு அவன் பேச எத்தனிக்கையில் காலிங்பெல் சத்தம் கேட்டது.
பிரகாஷ் சென்று கதவைதிறக்க அவனை தள்ளிக்கொண்டு மிகுந்த சினத்துடன் உள்ளே நுழைந்தான் கிருபாகரன். உடன் அஷ்வினும் வந்திருந்தான்.
அவர்களை பார்த்து எழுந்து நின்றான் ருத்ரபிரதாப்.
வேகமாக உள்ளே வந்த கிருபாகரன் கையிலிருந்த காகிதத்தை டீபாயின் மீது விசிறியெரிந்து
“உங்க பணம் கவர்மென்ட் ஹாஸ்பிடல் லேப் வரைக்கும் பாய்ஞ்சிருக்கே!!! ச…பா…ஷ்ஷ்….” என்று கைதட்டி கர்ஜித்தான், அஷ்வினும் ருத்ரனை ஓர் புழுவை பார்ப்பதுபோல் பார்த்தான்.
ருத்ரனின் பார்வையோ கிருபாகரன் தூக்கி எரிந்த அந்த காகிதத்திலேயே நிலைத்திருந்தது.
பொத்தென சேரில் அமர்ந்தவன் அந்த காகிதத்திலிருந்து விழிகளை அகற்றாமலே
“இந்த ரிப்போர்ட் என்னை நிரபராதின்னு சொல்லலாம் பட் ….ஐ ….ஆம் ….எ …பி….ளடி கி….ல்….லர்” ஆற்றாமையுடன் பேசிய ருத்ரனின் தோள்பற்றி “ப்ளீஸ் கண்ட்ரோல் ருத்ரா, தேவ் நாயர் இன்னும் வரலை ” என்றான்
“சோ வாட்??? இட்ஸ் த டிரூத் ” என்ற ருத்ரனின் பேச்சில் இடைபுகுந்து
“இங்க என்ன தான் நடக்குது? பிளீஸ் எக்ஸ்பிளைன் ” என்று தவிப்போடு கேட்டார் சந்திரிகா
“அதை நான் சொல்றேன் மேடம் ” அஷ்வின் முன் வந்து “நம்ம நந்தினியை இந்த ருத்ரபிரதாப் கொன்னுட்டான் மேடம், துடிக்க துடிக்க கொன்னுட்டான் “முடிக்கையில் அவனது கண்கள் பனித்திருந்தன.
பெரும் இடி விழுந்தது போல் அமர்ந்து விட்டார் சந்திரிகா, அவரால் எதையும் நம்பமுடியவில்லை, சொல்வது அஷ்வின் என்பதால் நம்பாமலிருக்கவும் முடியவில்லை, ஆனால் அவரது உள்ளுணர்வு நந்தினி இறந்துவிட்டாள் என்பதை நம்ப மறுத்தது.
பிரகாஷ் ருத்ரனை பார்க்க அவனோ தன்னுள்ளேயே மூழ்கிவிட்டது போல் தோன்றியது, ஏன் அஷ்வின் கூறியது அவன் காதில் விழுந்ததா என்பது கூட சந்தேகம்தான். இனி பிரகாஷ்தான் பேசியாகவேண்டும், பிரகாஷ் அஷ்வினை எதிர்த்து பேச எத்தனிக்கையில் மீண்டும் காலிங்பெல் சத்தம்கேட்டது.
தேவ்நாயராகத்தான் இருக்க வேண்டும் என்று மிகுந்த ஆவலில் தான் பேசவந்ததையும் நிறுத்திவிட்டு விரைந்து சென்று கதவை திறந்தால் வெளியே ஷர்மா நின்றிருந்தார், சிறு ஏமாற்றம் இருந்த பொழுதும் இப்போது இவரும் முக்கியமானவரே என்று வழிவிட்டு “வாங்க சார் ” என்றான்.
ஷர்மா உள்ளே வருவதற்கும் சந்திரிகா தன்னை கட்டுப்படுத்தமுடியாமல் உடைந்து அழுவதற்கும் சரியாக இருந்தது.
“இல்லை ….என் பொண்ணு சாகலை, நீ பொய் சொல்ற அஷ்வின் ” அழுகையினூடே பிதற்றினாள்.
உள்ளே நுழைந்த ஷர்மாவால் ஓரளவிற்கு நிலைமையை யூகிக்க முடிந்தது. கிருபாகரன் அஷ்வின் இருவரும் ஷர்மாவை பார்க்க
சந்திரிகாவை நெருங்கிய ஷர்மா “நீங்க சொல்றது தான் கரெக்ட் உங்க பொண்ணுக்கு எதுவும் ஆகலை மேடம் நந்தினி பக்கத்து ரூம்லதான் இருக்காங்க” என்று ஆதரவாக சந்திரிகாவின் தோள் பற்றினார்
சந்திரிகா பதில் பேசும்முன் கிருபாகரன் “வாட் நான்சன்ஸ், நீங்களும் இந்த அநியாயத்துக்கு துணையா டாக்டர் ” என்று பாய்ந்தான்
“கூல் டவுன் கிருபாகரன், ஃபர்ஸ்ட் எல்லாரும் உக்காருங்க ஐ கேன் எக்ஸ்பிளைன்” என்றவர் டீபாயின் மீதிருந்த ரிப்போர்ட்டை பார்த்தார், அதனை கையிலெடுத்ததுமே தெரிந்துவிட்டது அது டிஎன்ஏ ரிப்போர்ட் என்று. கிருபாகரனும் அஷ்வினும் சந்திரிகாவின் அருகில் அமர்ந்து கொள்ள ஷர்மா ருத்ரனின் அருகில் அமர்ந்து கொண்டு கையிலிருந்த ரிப்போர்ட்சை அசைத்து காண்பித்து
“இதோ உன்மை இங்கேயே இருக்கே, இதுக்குமேல என்ன புரூப் வேணும் கிருபாகரன்? ”
“இல்லை,இது உண்மையில், ருத்ரன் இந்த ரிப்போர்ட்சை மாத்திட்டார் ” கிருபாகரனை முந்திக்கொண்டு அஷ்வின் பதிலளித்தான்.
“ஓ கே, அப்படியே வச்சுக்கலாம் அப்போ உங்க தரப்பு உண்மை என்ன? ” கேள்வியை அவர்களிடமே வைத்தார்.
“உண்மை இது தான் ” தன் செல்போனை எடுத்து சந்தனா கொடுத்த வாக்குமூலத்தை எல்லோருக்கும் போட்டு காட்டினான் கிருபாகரன்.
அதனை பொறுமையாக பார்த்தார் ஷர்மா, விசும்பலுடனும் அழுகையுடனும் பார்த்த சந்திரிகாவை தன் தோளோடு அணைத்துக்கொண்டான் அஷ்வின். வீடியோ முடிந்ததும் முதலில் வெடித்தது சந்திரிகாதான்
“என் பொண்ணுக்கு பேய் தான் பிடிச்சிருக்கு, அந்த சந்தனாவோட ஆவிதான் என் பொண்ணை ஆட்டிப்படைக்குது, அஷ்வின் நம்ம நந்தினி சாகலை, நீ போய் பேய் ஓட்டரவங்கள கூட்டிட்டு வா ” குரல் தழுதழுக்க அஷ்வினின் சட்டையை பிடித்து உலுக்கினார்.
கிருபாகரன் அஷ்வின் பிரகாஷ் எல்லோரும் சந்திரிகாவை பார்க்க
“ம்……கரெக்ட் அம்மாக்கு தன் பிள்ளை தெரியாம இருக்கமுடியுமா? ” – பூடமாக பேசினார் ஷர்மா
“வாட்டூ யூ மீன் ” கிருபாகரன்
அவனை தொடர்ந்து ருத்ரனை தவிர அந்த அறையிலிருந்த அனைவரும் ஷர்மாவின் முகம் பார்க்க, அவரோ பொறுமையாக
“நந்தினி சாகலை, செத்தது சந்தனா, இந்த டேப்ல நந்தினி பேசினது போல என் கிட்ட நிறைய வீடியோ இருக்கு, தேவைபட்டா போட்டு காமிக்கிறேன்”
கோபத்தோடு ஷர்மாவின் பேச்சில் இடைபுகுந்தான் கிருபாகரன்
“என்ன எல்லாரும் சேர்ந்து நடிக்கிறீங்களா? டாக்டர் ஷர்மாக்கு எத்தனை சி கொடுத்தீங்க ருத்ரபிரதாப் ” ருத்ரனின் விழிகளை நேருக்கு நேர் பார்த்து முறைத்தான்
“மைன்ட் யுவர் வேர்ட்ஸ் கிருபாகரன்” கிருபாகரனை பார்த்து எச்சரித்த ஷர்மா தொடர்ந்து “ஃபர்ஸ்ட் என்னை பேசவிடுங்க யாரும் இடையில பேசகூடாது, வேணும்னா ரெக்கார்ட் பண்ணிக்கோங்க கிருபாகரன்” என்றவர் தன் வாக்குமூலத்தை ஆரம்பித்தார்
முகங்களின் தேடல் தொடரும்……
அன்பு தோழமைகளே, ஒரே எபிசோடில் கிளைமாக்ஸை முடிக்க எவ்வளவோ பாடுபட்டேன் ஆனால் முடியவில்லை அதனால் ஒரே காட்சியை இரண்டாக பிரித்துவிட்டேன்,இன்று ஒரு பாகம் நாளை ஒரு பாகம் தாமதத்திற்கு மன்னிக்கவும்,நாளை நிச்சயம் முகங்கள் முற்றுபேரும்
நன்றி
இந்திரா செல்வம்
7 Comments
Hi mam
நன்றாக இருந்தது இப்பகுதி .
நன்றி
so ippa sharma kuzhapa poraara illai unmaiyaa ……….
Aka final vanthirichi unmai therinthurum.
இந்த எபியில் எதுவுமே ரிவில் ஆகல…..இன்னும் குழப்பம் தான்….
நாளை எல்லா குழப்பங்களும் தீர்ந்துவிடும் தோழி, நாளை சந்திப்போம்
Brain transplant???
Onnum puriyalai
Brain transplant???? Nalai ellam purinthu vidum sis