Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-50(2) Final

 

ஷர்மா தனது வாக்குமூலத்தை ஆரம்பித்தார்

 

“குகைக்குள்ள என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது பட் உயிரோட இருக்கிறது நந்தினி தான்,” She is suffering from multiple personality disorder. ” ஷர்மா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே கிருபாகரன் இடையிட்டு பேசமுயன்றான்,  அவனை கையசைவால் தடுத்தவர்

 

“ப்ளீஸ் லெட் மீ பினிஷ்” என்று தொடர்ந்தார்

 

“நான் சொல்லப் போறது எல்லாமே என்னோட ஹிப்னாட்டிசம் செஷன்ல வெளிவந்த உண்மைகள், அதற்கான வீடியோ ஆதாரங்கள் இந்த ஃபையில்ல இருக்கு. நந்தினி நடிப்புத்துறைக்கு ஆசைபட்டுதான் வந்திருக்காங்க பட் அவங்களோட முதல் பட அனுபவம் அவங்க வாழ்கையையே மாத்திடுச்சு

 

படத்தை பத்தின டிஸ்கஷன்னு சொல்லி நந்தினியை தனியா வரச்சொன்ன அந்த படத்தோட புரோடியூசர் சந்திரசேகரன் அவளை பலவந்தப்படுத்தியிருக்கார்,  இதுதான் நந்தினியோட மனசு பலவீனப்பட்டதற்கான அடித்தளம்,

 

அதிலிருந்தே நந்தினிக்கு தன்னை பற்றிய தாழ்வு மனப்பான்மையும் ஆண்களிடம் நம்பகமின்மையும் ஆணி அடிச்ச மாதிரி பதிஞ்சிடுச்சு. ஆனால் ருத்ரன் பெண்கள் கிட்ட நடந்துக்கிறமுறை அவர் மேல அவங்களுக்கு ஒரு ஈர்ப்பு வர காரணமா இருந்தது. பாலியல் தொல்லைகளும் அவங்களை தொடர்ந்துச்சு, ஒருதரம்பட்ட சூடே அவங்களோட நிம்மதியை அடியோட கெடுத்துவிட்ட போது அடுத்ததா?? நந்தினி தன்னைத்தானே பாதுகாத்துக்கிட்டாங்க, நந்தினியோட பல படங்கள்ல ருத்ரன் அசிஸ்டன்ட் டைரக்டரா வொர்க் பண்ணியிருக்கார், அவங்க நட்பு தொடர்ந்துச்சு. ” நிறுத்திவிட்டு எல்லோரையும் பார்த்தார் எல்லோரும் அடுத்து என்ன என்பதுபோல் அவர் முகத்தையே பார்த்தார்கள்

 

“அப்போதான் சந்தனா நந்தினியோட வாழ்க்கையில வந்தாங்க, ருத்ரன் அறிமுகப்படுத்தியதால சந்தனா நந்தினிக்கு ரொம்ப நல்ல பிரண்ட் ஆகிட்டாங்க, சந்தனாவோட விளையாட்டு குணம், அவங்களோட வெகுளித்தமான பேச்சு,எல்லாத்துக்கும் மேல அவங்களை ஒரு பரிசுத்தமான பூ மாதிரிதான் நந்தினி பாத்தாங்க, அப்போதான் அவங்களுக்கு தாழ்வுமனப்பான்மை அதிகமாச்சு,  எப்போ ருத்ரன் சந்தனா மேல இன்டரஸ்டடா இருக்காருனு தெரிஞ்சதோ நந்தினி ஒடஞ்சிட்டாங்க.  ஆனா வெளிய காட்டிக்கல ருத்ரனுக்கு உதவியும் செஞ்சிருக்காங்க, அதுக்கு ஒரு படி மேல போய் ருத்ரனுக்கு சரியான துணை சந்தனாதான்னு முடிவே பண்ணிட்டாங்க, ஆனா அடி மனசுல ருத்ரனை மறக்கமுடியாம அவஸ்த்தை பட்டாங்க .சந்தனாவா தான் ஏன் இல்லாமல் போயிட்டோம்னு அவங்க மனசுல ஆழமா தோனினது அப்போதான். குகைக்குள்ள வெர்ட்டிகோ பிராப்ளம் இருந்த சந்தனா மயங்கி பாறை மேல விழுந்து இறந்துட்டாங்க, ஆனா நந்தினியோட மனசு சந்தனா செத்துட்டதை நம்பலை, தனக்குள்ள சந்தனாவா முன்னமே நடிக்க ஆரம்பிச்சிருந்த நந்தினி இந்த அதிர்ச்சியால முழுசா சந்தனாவா மாறிட்டாங்க, இதை நீங்க மல்டிபிள் பர்சனாலிட்டின்னு எடுத்துகிட்டாலும் சரி இல்ல சந்தனாவோட ஆவி நந்தினிக்குள்ள இருக்குன்னு நம்பினாலும் சரி, விஷயம் இதுதான், நந்தினி சாகலை ”

 

முடித்துவிட்டது போல் சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டார் ஷர்மா

 

“எல்லாம் சரிதான் ஷர்மா சார், பட் குளோரோபார்ம் தடவிய கர்ச்சிப்பை மூக்குல வெச்சதா சொல்றாங்களே அதுக்கு என்ன எக்ஸ்பிளனேஷன்?  ” குறுக்குக்கேள்வி கேட்டான் கிருபாகரன்

 

ஷர்மா ருத்ரனை பார்க்க, அவன் மௌனமாக அமர்ந்திருந்தான்

 

‘டேய் தேவ் நாயர் எங்கடா இருக்க ‘ மனதில் நினைத்து மணிக்கட்டை திருப்பிப் பார்த்தான் பிரகாஷ்.

 

காலிங்பெல் அடித்தது.

 

முகத்தில் நிம்மதி பரவ வேகமாக ஓடிச்சென்று கதவை திறந்தான் நல்லவேளையாக இந்த முறை அவன் ஏமாறவில்லை, தேவ் நாயர் தான் நின்றிருந்தான், அவனது கையைபற்றி வேகமாக உள்ளே இழுத்து வந்து கிருபாகரனின் முன் நிறுத்தி

 

“நீங்க கேட்ட கேள்விக்கான பதில் இவன் கிட்ட இருக்கு ” என்று கையை நீட்ட அதில் ஒரு மெமரிகார்டை திணித்தான் தேவ்நாயர்,

 

உடனே அந்த மெமரிகார்டில் இருந்த காட்சி டிவியில் விரிந்தது,  ‘இது என்ன புது கதை? ‘ என்று தான் கிருபாகரனும் அஷ்வினும் பார்த்தனர்

 

பொதுவாக முக்கியமான காட்சிகள் எல்லாவற்றிலும் சுற்றிலும் கேமிரா வைப்பது ருத்ரபிரதாப்பின் வழக்கம், அப்படித்தான் அந்த குகைக்குள்ளும் வைத்திருந்தான்.

 

அதில் ஒன்றில் தான் அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி பதிவாகியிருந்தது, எல்லோரது கண்களும் கூர்மையடைந்தன,

 

படப்பிடிப்பு முடிந்து ருத்ரன் “டேக் ஓகே ” சொன்னதும் பாறைக்கு பின்னால் உடைமாற்ற செல்கிறாள் சந்தனா, நந்தினி ருத்ரனுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்,  ஒரே கேமிராமேன் என்பதால் பிரகாஷ் ஒவ்வொரு கேமிராவாக ஆப் செய்து பேக் செய்து கொண்டிருந்தான், அப்போது பாறைக்கு பின்னால் சென்றிருந்த சந்தனா உடைமாற்றி வெளியே வந்தாள், வந்தவள் தன் ஈர உடைகளை பையில் வைக்க கீழே கிடந்த பையை எடுக்க குனிந்து நிமிர்ந்தபோது தடுமாறி கீழே விழுந்து விட்டாள்,  விழுந்த வேகத்திலேயே பாறையில் தலைப்பட்டு ரத்தம் வெளியேறியது,  நிலைமையை உணர்ந்து ருத்ரன் நந்தினி பிரகாஷ் எல்லோரும் சந்தனாவை நெருங்க,  சந்தனாவின் ரத்தத்தை பார்த்ததும் அப்படியே சிலையாக நின்றுவிட்டான் ருத்ரபிரதாப், பிரகாஷ் அவசரமாக சந்தனாவின் அருகில் மண்டியிட்டு நாடியை பிடித்துப் பார்த்தான், பார்த்தவன் நிமிர்ந்து  இடமும் வலமுமாக பரிதாபமாக தலையசைத்தான் ருத்ரனின் கால்கள் அசைக்கவும் முடியாமல் வேரூன்றிவிட்டன. அப்படியே அசைத்தாலும் எங்கே கால் தடுமாறி விழுந்துவிடுவோமோ என்று அஞ்சினான்

 

அப்போது அதிர்ச்சியுடன் நின்றிருந்த நந்தினி மயங்கிச்சரிய தன்னிச்சையாய் அவளை கைகளில் ஏந்திக்கொண்டான்

 

இந்தக்காட்சியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த அத்தனை முகங்களிலும் ஓர் அதிர்ச்சி.

 

கிருபாகரன் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டான். காட்சியை உன்னிப்பாக பார்க்கலானான்

 

ருத்ரன் ஏதோ சைகை செய்ய பிரகாஷ் எழுந்து வந்து நந்தினியை பிடித்துக்கொண்டான், ருத்ரன் வெளியே ஓடிச்சென்று மேக்கப் மேன் ரன்வீரை அழைத்துவந்தான். சந்தனாவை தூக்கிக்கொண்டு ருத்ரன் வெளியேற நந்தினியை ஏந்திக்கொண்டு அவனை பின் தொடர்ந்தான் பிரகாஷ்,

 

கேமிராவை ஆப் செய்யத் தெரியாமல் அப்படியே கழட்டி பேக் செய்யலானான் ரன்வீர், அதற்குபிறகு டிவியில் எதுவும் வரவில்லை.

 

பிரகாஷ் தொடர்ந்தான்

 

“ரன்வீர் கேமிராவை பேக்செய்யும் போது இந்த கேமிராவோட மெமரிகார்ட் மட்டும் கீழ விழுந்துடுச்சு அதை நாங்க யாரும் கவனிக்கலை, குகைகக்குள்ள என்ன நடந்ததுன்னு ஒரே ஆதாரம் இதுதான், நிலச்சரிவுனால இவ்வளவு நாள் அந்த குகைக்குள்ள போகமுடியாம இருந்தது, பட் இந்த கார்ட் கிடைச்ச தகவல் வந்ததும் தேவ்நாயரை உடனே அனுப்பிட்டோம் ” முடித்தவனை தொடர்ந்தார் ஷர்மா

 

” மயங்கிய நந்தினி ஹாஸ்பிடல்ல தான் முழிச்சாங்க, அவங்க எழும்போதே ருத்ரனை கொலைகாரன்னுதான் சொன்னாங்க, இப்போ இந்த ஃபூட்டேஜை வெச்சு பாத்தா அது அவங்களோட ஹாலுசினேஷன்னு தெரியுது, சந்தனாவா தான் இருக்கக் கூடாதான்னு அவங்க மனசுல இருந்த ஏக்கம், ருத்ரன் மேல இருந்த காதல், அவங்க தொழில்ல அவங்களுக்கிருந்த அளவுக்கதிகமான மனஅழுத்தம் எல்லாம் சேர்ந்து அவங்களை, தான் சந்தனான்னு நினைக்க வெச்சிருக்கு, சந்தனாக்கு ருத்ரன்மேல இருந்த கோபம் அவங்களுக்குள்ள இருக்கிறதா கற்பனை செஞ்சுகிட்டாங்க, டேப்ளட்ஸ் கரெக்டா ஃபாலோ பண்ணப்போ நல்ல இம்ப்ரூவ்மன்ட் இருந்தது, அந்த இம்ப்ரூவ்மென்ட்ட வெச்சிதான் சந்தனாவோட வீட்டுக்கு அழைச்சிட்டு போக சொன்னேன், அது அவங்களோட வீடு இல்லைன்னு அவங்க உணருவாங்க, பழையநினைவு எதுவுமே வரலைன்னு அவங்க யோசிக்கும்போது கவுன்சிலிங் கொடுக்கலாம்னு நினைச்சேன்,  பட் அப்ப அவங்களுக்கு மாத்திரை விஷயம் தெரிய வந்து எல்லாமே ஸ்பாயில் ஆகிடுச்சு,  அதுக்கப்புறம் அவங்க அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகிட்டாங்க, இனி மறுபடியும் அவங்களூக்கு கன்டினியூஸ் மெடிகேஷன் அன்ட் கவுன்சிலிங்க தரனும் ” நீண்ட தனது உரையை முடித்தார் ஷர்மா

 

கிருபாகரனும் அஷ்வினும் என்ன கேட்பதென்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

 

சந்திரிகாவோ  “ஹே ஈஷ்வர் என் பொண்ணுக்கு ஏன் இதெல்லாம் நடக்குது? ” வாய்பொத்தி கதறினார்

 

அதுவரை இறுகியிருந்த ருத்ரன் அப்போதுதான் வாய்திறந்து

 

“முஜே மாஃப் கர்தோ மாத்தாஜி ” (என்னை மன்னிச்சிடுங்க அம்மா)  என்று இறுகிய குரலிலேயே கூறினான்

 

“நான் தப்பு செஞ்சிருக்கேன் தெரிஞ்சோ தெரியாமலோ ரெண்டு பெண்களோட வாழ்கை பாழாக நான் காரணமாயிட்டேன், சந்தனாவை நான் ரொம்ப நேசிச்சேன், அவளோட மறைவு என் மனசுல ஆராத ரணத்தை ஏற்படுத்திடுச்சு, அவளை என்னால் என்னைக்கும் மறக்கமுடியாதுதான், ஆனா அந்த துக்கத்திலிருந்து நான் மீள முக்கிய காரணம் நந்தினிதான்,  என்னோட துக்கத்தை ஒதுக்கி வெச்சுட்டு நந்தினியை பத்தி நிறைய யோசிச்சேன், அவளை பாதுகாக்கனும் குணப்படுத்தனும்னு மட்டும் தான் என் மனசு சிந்திச்சது, நந்தினியோட லட்சியம், மத்த ஆர்டிஸ்ட்டோட கேரியர், எல்லாத்துக்கும் மேல நந்தினியோட சேப்ட்டி, இந்த நிலைமையில அவளுக்கு எந்த ஆபத்தும் வந்திட கூடாதுன்னு எத்தனையோ முறை அவகிட்ட கடுமையா நடந்திருக்கேன், என்னோட கண் பார்வையிலேயே அவளை வெச்சிருந்தேன், இதுக்கெல்லாம் காரணம் படப்பிடிப்பு தான்னு எனக்கு நானே சொல்லிகிட்டேன், ஆனா எப்போ எப்படின்னு தெரியல நந்தினி என் வாழ்கையில பிரிக்கமுடியாத அங்கமாயிட்டா, இனி எதுக்காகவும் அவளை என்னால விட்டுக்கொடுக்க முடியாது, அவ கடைசி வரைக்கும் குணமாகாம இருந்தாலும் சரி, ஷீ இஸ் மைன் ” முடிக்கையில் அவனது குரல் தழுதழுத்திருந்தது, கண்கள் சந்திரிகாவை அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன

 

சந்திரிகா ருத்ரனை எதிர்த்து எதுவும் பேசவில்லை ஆனால் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது

 

சந்திரிகாவிடம் பேசிமுடித்தவன் கிருபாகரனை பார்த்து தொடர்ந்தான் ” நான் எந்த தப்பும் செயலைன்னு எனக்கு நல்லாவே தெரியும், நந்தினியோட கனவை நிறைவேத்துறது மட்டும் தான் என் லட்சியமா இருந்தது, அந்த நேரத்துல நந்தினியை பத்தின உண்மை வெளிவந்தா அது அவளுக்கு பாதுகாப்பானதா இருக்காதுன்னுதான் மறைக்க வேண்டியதா போயிடுச்சு, அதனால என்ன “கொலைகாரன்னு ” அவ சொல்றதை கேட்க வேண்டியதாப் போச்சு, அது எனக்கு பெரிய விஷயமாவே தோனலை ” என்று தோள்களை குலுக்கியவன்

“அடிக்கடி  நீங்க வேற வந்து விசாரிப்பீங்க, உங்க கிட்ட கொடுக்க ஆதாரம் இல்லாததாலையும் நீங்க வந்து போகும் போதெல்லாம் நந்தினியோட மனநிலை பாதிக்கப்பட்டதாலயும் உங்களை வான்ட்டாட டைவர்ட் பண்ண வேண்டியதா போச்சு, இப்போ உங்களுக்கு எல்லாமே புரிஞ்சிருக்கும்னு நம்புறேன் “என்று முடித்தவன் கிருபாகரனின் பதிலுக்காக காத்திருக்க

 

அவனை முந்திக்கொண்டு அஷ்வின் பேசினான்

 

“அப்போ சஞ்சய் நேத்து ஃபுல் போதைல எனக்கு கால் செஞ்சு ருத்ரன் சந்தனாவ நந்தினியா நடிக்க வைக்கிறான்னு சொன்னாரே ” குழப்பத்துடன் வினவினான்

 

ருத்ரனின் கைமுஷ்ட்டி இறுகியது முகம் சிவந்தது

“சஞ்சய் மாதிரியான ஆட்கள் இருக்குறதாலதான் எங்க ஃபீல்டுக்கே கெட்டபேரு, இவங்களுக்கு நடுவில்தான் நானும் இருக்கேன்னு நினைச்சா அசிங்கமா இருக்கு, என்னோட பிரையாரிட்டி நந்தினியோட ஸ்சேப்ட்டிதான் அவன்கிட்டே இருந்து நந்தினிய காப்பாத்ததான் சந்தனான்னு பொய் சொன்னோம், அப்போ அவன் வாலாட்ட மாட்டான்னு நினைச்சோம் ஆனாலும் அந்த ராஸ்கல்…….” பற்களை கடித்தான் ருத்ரபிரதாப்

 

உடனே எழுந்துவிட்ட அஷ்வின் ருத்ரனை ஆரத் தழுவிக்கொண்டான், ருத்ரன் குழப்பமுறுகையில் “உங்க தவிப்பு உண்மையானது சார், என்னால புரிஞ்சிக்க முடியுது, எங்க மேடமை நல்லா பார்த்துக்கோங்க, தேங்க்யூ ” என்றான் மனப்பூர்வமாக.

 

“நீ ரொம்ப நல்லவன் அஷ்வின், உன் கிட்ட நந்தினியோட விஷயங்களை மறைச்சிருக்க கூடாதுதான் ஆனா அப்படியே ஒவ்வொருத்தரா எல்லார்கிட்டயும் சொல்ல வேண்டியதாகிட கூடாதேன்னு தான் சொல்லலை, உங்களை மாதிரி ஒரு டெடிகேட்டட் மேனேஜர் கிடைச்சது நந்தினியோட அதிர்ஷ்டம்  ” என்று அஷ்வினை உளமார பாராட்டினான்

 

கிருபாகரனும் எழுந்து கைகுலுக்ககி “நந்தினிக்காக நீங்க காட்டும் கன்சர்னை நான் மதிக்கிறேன், ஆல் த பெஸ்ட், நாளைக்கே இந்த கேசை கிளோஸ் பண்ணிடுறேன், நந்தினி சீக்கிரம் குணமாகிடுவாங்க டோன்ட் ஒர்ரி, கல்யாணத்துக்கு நிச்சயம் கூப்பிடனும் ” என்று கிருபாகரன் முடிக்க

 

“நிச்சயம் கூப்பிடுவேன், உங்க கன்சர்னுக்கு  தேங்க்ஸ், பட் நந்தினி குணமடையுறதுக்கு நீங்க எல்லாரும் எனக்கு ஹெல்ப் பண்ணனும் ” என்றவன் தானும் ஷர்மாவும் சேர்ந்து போட்டு வைத்த திட்டத்தை எல்லோருக்கும் விளக்கிக் கூறினான்

 

ஷர்மாதான் பேசினார்

 

“முதல்ல நம்ம நந்தினி சொல்றதை நம்பனும், அவங்க சந்தனான்னு ஒத்துக்கனும், அவங்க முன்னாடியே கிருபாகரன் ருத்ரபிரதாப்பை அரஸ்ட் செய்து கூட்டிட்டு போகனும் அதை நந்தினி பார்க்கனும் ”

 

பிரகாஷ் இடைபுகுந்து “நம்ம சைட் ஆக்டர்ஸ் ரிப்போர்டர்ஸ் மாதிரி கேமிரா கிளிக்ஸ் வீடியோ கேள்விகள்னு ரியல் அரெஸ்ட் மாதிரி காட்டிடுவாங்க ” என்றான்

 

ஷர்மா சந்திரிகாவை நெருங்கி “நந்தினியை கன்வின்ஸ் பண்ணி யுஎஸ் கூட்டிப் போகிறது உங்க பொறுப்பு, அங்க என்னோட ஃபிரண்ட் நந்தினிக்கு கவுன்சிலிங் கொடுப்பார், புது சூழல் அவங்களுக்கும் ஒரு மாற்றமா இருக்கும், அவங்களுக்கு தெரியாம மாத்திரையை கண்ட்டினியு பண்றதும் உங்க பொறுப்புதான் ” என்றவர் “இதுக்கும் மேல கடவுள் பார்த்துப்பார் ” என்று முடித்தார்

 

******

 

ஷர்மா கூறியதுபோல் எல்லாம் நடந்தது.

கிருபாகரன் ருத்ரனை கைதி செய்து அழைத்துச் செல்வதை தன் அறைவாயிலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி, தான் நினைத்ததுதான் நடக்கிறது ஆனாலும் இதயத்தின் ஓரத்தில் வலித்தது ஏன் என்று அவளுக்கே புரியவில்லை, கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் கொட்டியது, ருத்ரனும் இவளைத்தான் விழியகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தான் இனி எப்போது பார்க்கப் போகிறோம் என்கின்ற ஏக்கம் அவன் கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது. அவனது அந்த பார்வை அவளுள்ளும் ஏதோ செய்தது கையிலிருந்த செயினை இறுக பிடித்துக்கொண்டாள். அவன் நியாபகமாய் அவளிடமிருக்கும் விலைமதிப்பில்லா பரிசல்லவா?

 

சந்திரிகா நந்தினியிடம் “என் பொண்ணு எனக்கு வேணும் சந்தனா, நீயும் எனக்கு ஒரு பொண்ணு மாதிரி தான் என் கூட வந்திடேன் ஒரு மகளோட பாசத்துக்கு ஏங்குற அம்மாவா கேட்கிறேன் ” என்று கண்ணீர் மல்க கேட்டது தான் தாமதம் சந்திரிகாவை கட்டிப்பிடித்து கதறிவிட்டாள் நந்தினி

 

அந்த வாரத்திலேயே சந்திரிகாவும் நந்தினியும் யுஎஸ் சென்றுவிட தன் படத்தில் மும்முரமாக இருந்தான் ருத்ரபிரதாப், நந்தினி தூரத்தில் இருப்பதுபோலவே அவனுக்கு தோன்றவில்லை, நாளெல்லாம் அவள்முகம்தான், பெரிய பெரிய திரையில், எடிட்டிங் டப்பிங் இப்படி எல்லாம் நந்தினியாகத்தான் இருந்தாள்.

 

நாட்கள் வேகமாக உருண்டோடியது, நந்தினி குணமாகிக்கொண்டிருந்தாள் படம் முடிந்து ரிலீஸ் ஆனது, யூ டியூப் ரெவ்யூக்களில் நல்ல ரேட்டிங்கை பெற்றது “மிருதுளா ” ருத்ரன் எதிர்பார்த்த சிறந்த நடிகைக்கான நேஷனல் அவார்ட் நந்தினிக்கே என்ற குறிப்பு அவனுக்கு வந்ததும் உடனே புறப்பட்டு விட்டான்.

 

*******

 

USA

 

ருத்ரனை சந்தோஷமாக வரவேற்ற சந்திரிகா “மாடில தான் இருக்கா போய் பாருங்க ” என்றார்.

 

ஒருவருடம் ஓடிவிட்டது,

 

நந்தினியை பார்த்து கிட்டத்தட்ட ஒரு வருஷமாகிவிட்டது, அவளை பார்க்கும் ஆவலில் படிகளை இரண்டிரண்டாக தாவி ஏறினான் ருத்ரபிரதாப்.

 

நந்தினியின் அறை திறந்துதான் இருந்தது உள்ளே முதுகு காட்டியது போல் டிரஸ்சிங் டேபிளில் அமர்ந்திருந்தாள் நந்தினி.

 

கதவை இரண்டுமுறை மென்மையாக தட்டினான்

 

திரும்பிப்பார்த்தவள் மின்சாரத்தை தொட்டதுபோல் சடாரென எழுந்து நின்றாள்.கருவிழிகள் அசைவற்று ருத்ரனின் முகத்திலேயே நிலைத்திருந்தன, கண்களில் தேங்கிய கண்ணீர் பார்வையை மறைத்த போதிலும் சிமிட்டாமல் அவனையே பார்த்திருந்தாள்

 

அவளை பார்த்து விட்ட சந்தோஷத்தில்”நந்தினி” என்று ருத்ரன் வேகமாக அவளை நோக்கி முன்னேற அதே வேகத்தில் பின்னடைந்தாள் நந்தினி

 

புரியாமல் நின்றவன், அவளது செயலை பின் தள்ளி “நந்தினி ஹவ் ஆர்யூ ” என்று ஆவலாக கேட்டான்

 

ஆனால் அவளோ அவனுக்கு முதுகு காட்டி “இங்க எதுக்கு வந்தீங்க? ” என்றாள்

 

அவளது கேள்வியில் குழப்பமுற்றான் ருத்ரபாரதாப் இருப்பினும்

“நவ் நந்தினி இஸ் பெர்பக்ட்லி ஆல்ரைட் ” என்ற ஷர்மாவின் குரல் ஒரு புறம், “நந்தினி நல்லாவே மாறிட்டா நீங்க போட்ட செயின் அவ கழுத்துல சில நேரமும் கையில சில நேரமும் இருந்துகிட்டேதான் இருக்கு, நீங்க சீக்கிரம் வாங்க ” என்ற சந்திரிகாவின் குரல் மறுபுறம் என்று அவனுக்கு நம்பிக்கையூட்ட நந்தினியை நெருங்கினான்

 

“உன்னை பார்க்கத்தான் நந்தினி ” பேசிக்கொண்டே அவளை நெருங்குகையில்

 

“என்னை பார்க்கனும்னு என்ன அவசியம்?  எனக்கு யாரையும் பார்க்க வேண்டாம்?  ” என்றாள் திட்டவட்டமாக

 

அவளது கோபம் ஒரு குழந்தையின் கோபம் போல் தோன்றியது அவனுக்கு.

 

” அவசியம் இருக்கிறதால தான் வந்தேன், ஏன் வந்தேன்னு உனக்கே தெரியும் நந்தினி ” பேசிக்கொண்டே அவளை நெருங்கிவிட்டான்

 

“நீங்க எதுக்காக என்னை பார்க்கனும்? ” கோபத்தோடு திருப்பியவளின் மிக அருகில் ருத்ரபிரதாப் நின்றிருந்தான் இதனை எதிர்பாராததால் தடுமாறினாள் நந்தினி

 

அவளது கண்களை ஊடுருவி அவள் மனதை படிக்க அவன் முயல்கையில் அவனது பார்வையை தவிர்த்து வேறுபுறம் பார்க்கலானாள்

 

அவளது தாடையை பற்றி தன்புறம் திருப்பியவன் “சரி நானே சொல்றேன் நா…..ன்…உன்… னை ……..”

 

“வேண்டாம்!!! அந்த வார்த்தையை சொல்லாதீங்க ” தன் காதுகளை இரு கைகளால் அழுந்த மூடிக்கொண்டாள் “நீங்க சந்தனாவைதான் காதலிச்சீங்க ”

 

குரல் தழுதழுக்க உதடுகள் துடிக்க பேசியவளை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொள்ள பரபரத்த கையை அடக்கிக்கொண்டான், இது பேச வேண்டிய நேரம்

 

அவளை மேலும் நெருங்கி காதுகளிலிருந்த கைகளை பற்றி அழைத்து வந்து கட்டிலில் அமர்த்திவிட்டு அவனும் அமர்ந்தான்

 

“நான் சொல்றதை நல்லா கேடுக்கோ நந்தினி, நான் சந்தனாவை காதலிச்சது எவ்வளவு உண்மையோ அதே அளவு உன்னை நேசிக்கிறதும் நிஜம், சந்தனாவை காதலிச்சதால உன்னை காதலிக்க நான் தகுதியில்லாதவனா? ” அவனது கேள்வியில் துடித்து விட்டாள் நந்தினி

 

“தகுதியில்லாதவள் நான் தான் ” வெடித்து அழுதாள் நந்தினி

 

“ப்ளீஸ் ருத்ரா போயிடுங்க, யூ டிசர்வ் த பெஸ்ட் ” என்றாள் அழுகையினூடே

 

“என்ன தகுதி? ஆண்கள் தெரிஞ்சே தப்பு செஞ்சாலும் அதை ஒரு ஆக்சிடன்ட்னு சொல்லிடறாங்க, அதுவே ஒரு பொண்ணு பலவந்தப்படுத்தப்பட்டா அவ அழுக்கா, இது என்ன நியாயம், இந்த சமுதாயம் எப்போ மாறும்? மாத்த நான் முயற்சி செய்றேன் எனக்கு ஹெல்ப் பண்ண மாட்டியா?  என்றான் ஏக்கத்துடன்

 

அவன் முகத்தைபார்த்து தளர்ந்த தன் இதயத்தை கட்டுப்படுத்திக்கொண்டு

 

“உங்கள் தியாகம், கருணை, சமுதாய சீர்திருத்தம் எல்லாம் எனக்கு தேவையில்லை, நன்றி ” என்றாள் எங்கோ பார்த்தபடி

 

ருத்ரனுள் கோபம் மூண்டது

 

“தியாகமா? நான் தியாகம் செய்ய வரல, என் மனசை உனக்கு புரிய வைக்க வந்தேன்,என்னை பார் ” என்று அவளது தாடையை ஆவேசமாக தன் பக்கம் திருப்பினான்,  அவனது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சிட்டவுடிற்குள் ஓடினாள், லேசான மழை பெய்ந்து கொண்டிருந்தது.

 

அவள் நனைகிறாள் என்பது புரிய உள்ளே ஓடிச்சென்று ஒரு குடையெடுத்து வந்து அவள் நனைந்துவிடாமல் பிடித்தான்,

 

அதனை வேகமாக தட்டிவிட்டாள்,  மீண்டும்  அவளை குடைக்கு கீழ் இருத்திக்கொள்ள முயன்றான் பொறுமை இழந்தவளாய்

 

“கெட் அவுட் ஆப் மை வே ” என்று கத்தினாள்

 

“நான் போகமாட்டேன் ” என்றன் பிடிவாதமாக

 

“யூ ஆர் நத்திங் டு மி ” அவனது கண்களை பார்த்து அலட்சியமாக கூறினாள்

 

“பட் யூ ஆர் எவிரிதிங் ஃபார் மி ” கரகரப்பாக பேசினான்

 

அவனது கண்களை சில நொடி பார்த்தவள் “கெட் லா…….” முடிக்க முடியாமல் நிறுத்தினாள் காரணம் ருத்ரனின் வலிய கரம் அவளது வாயை அழுந்தப் பற்றியிருந்தன

 

“நான் ரொம்ப ரசிச்சு ரசனையோட எழுதுன டயலாக் தான், பட் அதை நீ பேசி கேட்க என் மனசுக்கு கஷ்டமா இருக்கு, போதும், எல்லாமே போதும் என்னால இதுக்கு மேலயும் உன்னை பிரிஞ்சு இருக்க முடியாது, ஐ வான்ட் யூ நந்தினி “எனக்கு நீ வேணும் நந்தினி என் காதலாய் என் காயங்களுக்கு மருந்தாய் ” என்று குரல் தழுதழுக்க பேசியவனின் கண்களில் எதை படித்தாளோ அடுத்த நொடி ருத்ரபிரதாப்பின் இருகைகளுள் சந்தோஷமாக சிக்குண்டிருந்தாள் நந்தினி,

 

*****

 

“சிறந்த நடிகைக்கான விருதை பெறுபவர் மிசஸ் நந்தினி ருத்ரபிரதாப் ” என்று மேடைப் பெண் கூற கரகோஷம் வானை பிளக்க மேடையேறி பெருமையோடு தேசிய விருதை பெற்றுக்கொண்டவள் ” இந்த விருது எனக்கு கிடைக்க முழு காரணம் என்னுடைய ஹஸ்பன்ட் ருத்ரபிரதாப் தான், ஐ வான்ட் ஹிம் டு ஜாயின் மீ ” என்றதும் மீண்டும் ஒரு மாபெரும் கரகோஷத்திற்கு நடுவில் அந்த பிரம்மாண்ட மேடையேறினான் ருத்ரபிரதாப்

 

“அப்பாடி ஒருவழியாய் எல்லாம் நல்லபடியா முடிஞ்சது, நாளை முதல்வேளையா அந்த திருப்பதி ஏழுமலையானுக்கு ஒரு அட்டென்டன்ஸ் போட்டுடனும், கொஞ்ச நாளா மல்ட்டிபிள் பர்சன், பேய், பிசாசுன்னு ஒரே திகிலும் மர்மமுமா, அப்பப்பா ஏழுமலையானை பார்த்தாத் தான் எனக்கு நிம்மதி ” என்று மேடையை பார்த்தவாரு  கைகளை தட்டிக்கொண்டே தன்னுள் முடிவெடுத்தான் பிரகாஷ்

 

முகங்கள் முற்று பெற்றது.
21 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  preethi vellingiri says:

  super story mam


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Samri Thi says:

  Wow sis story semma👏 very different narration ungalodathu superb 👍 6hours ah 50 epi um vidama paduchu muduchuten remba virurupa pochu… Nanthiniya marriage pannathu remba nalla visayam tha but Santhana character remba piduchu erunthatu Ava than iranthathunu sonnathu remba kastama aaituchu… We miss Santhana very much…. Last heart la lite she vali varatha thaduka mudila… Very nice story… Remba azhaga kondu vanthu muduchutinga….👍


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Kavitha John says:

  Wow semma story yesterday afternoon I came to know about this story in FB ore naala 50 episodes mudichitten thrilling and nice love story 👌


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Gayathri sankar says:

  கதை நன்றாக இருந்தது.. இப்போ இறந்தது நந்தினியா இருந்தா final epi எப்படி இருந்திருக்கும்?


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Jasha Jasha says:

  நல்ல கதைக்கு லாஜிகோட முடிவு ….
  எந்த இடமும் சொதப்பல சந்தீப் சந்திரசேகர் உள்பட…
  விறு விறுப்பு குறையாம கதை நகர்வு…


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Jasha Jasha says:

   இன்னொரு நன்றி கருத்து பதிவு கருத்தில் கொண்டு நன்றி பகிர்ந்த நட்பிற்கு..
   இன்றைய கருத்தும் என்னை கவர்ந்தது ஆண் தவறுதல் ஆக்சிடண்டா கொள்வதும் அதே பெண் பலவந்தப்பட்டா அழுக்கா இது எப்ப மாறும் மாத்த நினைக்கும் ருத்ரன் கருத்தாக வந்த வாக்கியம் என் வாசிப்பில் எண்ணம் எடுத்து சென்ற கருத்து…
   இது போன்ற கதைகளோடு நட்பில் ரசனையோடு காத்திருக்கும் தோழியாய் உங்க எழுத்தின் விசிறியாய் நான்


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lalitha Vasudevan says:

  appadi!!! at last you have cleared the suspense… very thanks and interesting story.. expecting a new one from you…….


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  வித்தியாசமான அதே நேரம் புதிர்கள் நிறைந்த சுவாரசியமான ஒரு காதல் நாவல்.எங்களுக்கு இந்நாவல் தந்தமைக்கு நன்றி.

  நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Indra Selvam says:

   நன்றி தாட்சாயனி, ஆரம்த்திலிருந்தே முகங்களுடன் பயனம் செய்ததற்கும், தொடர்ந்து கமட் கொடுத்து என்னை ஊக்குவித்தற்கும் நன்றி


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Meena Vighneswar says:

  Different story.. suspense suspense..story full suspense.. very well finished… when is ur next story..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Indra Selvam says:

   Thank u soooooo much meena…. my next story sembaruthi pen oruthi will come soon…… thanks for ur support….


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lashmiravi VIJAYALAKSHMI says:

  வெகு நாட்களுக்கு பிறகு ஒரு வித்தியாசமான கதை படித்த நிறைவு… அருமை இந்திரா…. வாழ்த்துகள் 💐


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Indra Selvam says:

   நன்றி vijayalakshmi, உங்களின் நிறைவே எங்களின் சந்தோஷம்


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  wowwwwwww superrrrrrr ending sissssssss


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  admin says:

  ஹாய் இந்திரா,

  முகங்கள் – ரொம்ப அழகான கதை… கடைசிவரைக்கும் சஸ்பென்ஸோட எடுத்துட்டு வந்து ருத்ரன் கேரக்டரை கரெக்ட்டா ஜஸ்டிஃபை பண்ணிட்டிங்க. அதைவிட முக்கியமா முடிந்த அளவுக்கு தினமும் அப்டேட் கொடுத்தீங்க… வாழ்த்துக்கள்… அடுத்து செம்பருத்தி பெண்ணொருத்திக்காக வைட்டிங்… 😛 சீக்கிரம் வாங்க… 😀


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Indra Selvam says:

   செம்பருத்திப் பெண் ஒருத்தியா? நித்யா …… மீ பாவம், என்னோட லீவ் லெட்டரை உங்களுக்கு மெயில் பன்னியிருக்ருகேன் பாருங்க!! Ha ha ha…… just for joke, கண்டிப்பா சீக்கிறம் வருவாள் செம்பருத்தி பெண் ஒருத்தி.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Appo evlav naal irunthathu nanthini thana. Santhana iranthathu romba kashtama irukku Medam. Ivalav naal Suspens supera metain panninga. Anal En manasula santhana than rudhranukku pair ah pathivagi irunthathu. Ananl final supera irunthathu. Rudhran kolaikaran Illai. Sema thirillinga pochu. Inimel rudhran, santhana, nanthini romba miss pannuvom. Sekkerama next story podunga. Bye 👋 👋 👋


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Indra Selvam says:

   Thank u soooo much raji…. santhana எப்பவுமே ருத்ரனை நிமிர்ந்து கூட பாத்ததில்லை, ஆனா நந்தினி அவனையே நினைச்சு தன்னைதானே வருத்திகிட்டா, சோ நந்தினி ருத்ரன் சேந்தாத்தான் சரின்னு தோனிச்சு.
   உங்கள் ஆதரவிற்கு நன்றி


   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Daisy Mary says:

    அப்படினா ருத்ரனோட காதல்….
    he also feel ,care about santhana….

    அவர் அவர்களுக்கு அவரவர் காதல் பெரிது தானே…..????!!!
    நான் santhana மேல வருத்ததுல இருக்கேன்…..😢😢😢

    கடைசி பதிவு ஏதோ நாடக தனமா எனக்கு feel ஆச்சி….

    கமல் sir படம் மாதிரி திரும்ப ஒரு தடவை வாசித்தால் கதை முடிவு மனதில் பதியுமோ?!


    • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
     Indra Selvam says:

     உங்கள் விமர்சனத்திற்கு நன்றி,, ருத்ரனுக்கு வலிதான், ஆனால் காதல் தோல்வி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் தானே, சந்தனாவின் பங்கு இந்த கதையில் மிக குறைவுதான், ஆனால் சந்தனாவின் பெயர் நம்மை ஆட்கொண்டுவிட்டது, கடைசி அத்தியாயம் வரை சஸ்பென்ஸ் மெயின்டெய்ன் பன்னி கடைசியா ஒரே எபிசோட் ல எல்லாம் கிளியர் செய்யும்போது உங்களுக்கு அப்படி தோனியிருக்கும் – கமல் படத்தோடு ஒப்பிட்டதற்கு நன்றி