Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-11 & 12

 

அத்தியாயம் 11

 

பெண்ணவளின் முகத்தை மீண்டும் தன் முகத்திற்கு அருகில் கொண்டு வந்தான் ‘சார்… வேண்டாம் சார் இது … இது தப்பனு படுது…. விடுங்க ஆதி சார்’ என்றவள் முடிந்த மட்டும் அவனுடன் போராட அது எல்லாம் வீண் என்பதுப் போல் அவன் செய்கை இருந்தது…

 

பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுப் போல்… அவளின் மென்மையான ரோஜாப்பூ இதழை மென்மையாக தன் இதழால் மூடியவனின் மென்மை காற்றில் பறந்து வன்மையை மேற்கொண்டது நொடிகள் நிமிடங்களாக கரையத் தொடங்க பெண்ணவள் மூச்சிக்கு திணறினாள்… தன் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி அவனை தன்னிடமிருந்து பிரித்தெடுக்க போராடியவள் அவன் மார்பில் தன் கையை வைத்து தள்ளிவிட்டாள்… அவனைப் பார்க்க கூசி தன் முகத்தை இரு கைகளால் புதைத்துக்கொண்டு அழுதாள்.. அவள் தள்ளிவிட்டதில் தன் உணர்வுகள் அறுபட்டு அவளை நோக்கியவன்’ யூ…டாமிட்… என்னடி ரொம்பத்தான் பண்ற’ என்று கூறியவனுக்கு விளக்கம் கொடுக்கக் கூட சக்தியற்றவளாய் தன் முகத்தை மூடிக் கொண்டு அழத் தொடங்கினாள்…

 

ஆதியின் முகத்தில் வெற்றி புன்னகை தோன்றி மறைந்தது அவளின் அழுகையை ஒரு கலாரசிகன் போல் பார்த்துக்கொண்டிருந்தவனின் ரசனையை கலைப்பதுப்போல் நேஹாதான் அவனை அழைத்திருந்தால் ‘ பச்… யாரது? இந்த நேரத்துல என்ற சலிப்போடு அழைப்பை பார்த்தவன் நேஹா பேபி என்று திரையில் ஒலிர…  வேண்டுமென்றே அழைப்பை துண்டிக்காமல் ஏற்றவன் ‘ ஹலோ சொல்லு பேபி’ என்றவனின் பேச்சில் அழுதுக்கொண்டிருந்தவள் கப்பென்று அடங்கி அவனை ஏறிட்டாள்… அவளுக்கு நன்றாக புரிந்தது மறுமுனையில் பேசிக்கொண்டிருப்பது நேஹா  என்று…

 

இருந்தும் மித்ரா தன் அதிர்ச்சியிலும் தன் எண்ணங்கள் உடனும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு சிலையென அமர்ந்திருந்தாள்… மித்ராவிடம் அசைவின்றி போகவே அப்பொழுதுதான் கவனித்தான் அவளின் ஊசி முனைப் பார்வை தன் மேல் பாய்ந்ததை எண்ணியவன் ‘ நேஹா… டென் மினிட்ஸ்ல வரேன்’ என்ற ஒத்த வார்த்தையோடு அழைப்பை துண்டித்தவன் மேலும் அவளை நெருங்கினான்…

 

அவளை நெருங்கியவன் மீண்டும் அவள் முகம் நோக்கி குனிய மித்ரா அவனை தள்ளிவிட்டால் ‘ சீ… உனக்கு மனசாட்சியே இல்ல… என்ன காரியம் பண்றிங்க’ அவனை  தள்ளிவிட்டவள் மீண்டும் அழுகையில் அவள் உடல் குலுங்கியது…

 

ஆதியின் உக்கிரப் பார்வையும் கோபக் குரலும் மித்ராவை நடப்பிற்கு அழைத்து வந்தது ‘ஏய்… நிறுத்துடி சும்மா ஸீன் கிரியேட் பண்ணாத… நான் என்ன உன்ன ரேப் பண்ண மாதிரி ஸீன் போடற… ஜஸ்ட் ஒரு கிஸ்தான்… அது ஒன்னும் உனக்கு பிடிக்காத மாதிரியே தெரிலையே’ என்றவன் அவளைப் பார்த்து தன் புருவத்தை மேல உயர்த்தி கன்னக் குழி விழ அழகாய் சிரித்தான்…

 

அவளது மனமோ ‘உண்மைதான் அவனின் அணைப்பில் இருக்க தன் ஒவ்வொரு அணுவும் ஏங்கியது ஒத்துக்க வேண்டிய உண்மை ஆனால்  நாளை அவன் வேறு ஒருத்திக்கு சொந்தமாக இருப்பவனின் அணைப்பில் தான் நெகிழ்வது அவளுள் குற்ற உணர்வை அதிகரிக்க செய்தது… அவன் மட்டும் வேறுயாருக்கும் சொந்தமாகாமல் தன் ஆதி பாவாவாக மட்டும் இருந்திருந்தால் அவனுக்கு தானே முன் வந்து உரிமையுடன் அவனிடம் அவளை முழுமையாக கொடுத்திருப்பாள்…

 

அவன் கேட்டத்தின் நிதர்சனம் புரிய மலங்க மலங்க விழிக்கும் அவளின் அழகிய கருவிழி அவனிடம் கவிதை கற்பித்ததுக் கொண்டிருந்தது… அவளை வைத்த கண் வாங்காமல் விழிகளால் அவளை விழுங்கிக் கொண்டிருந்தான் பெண்ணவளின் இதயத்தை அழகாய் படித்தவன் முன் தன் முகபாவனையை வெளியில் காட்டாத வண்ணம் தலைகுனிந்துக் கொண்டாள்… அவளின் தாடையை பற்றி இழுத்து தன்னை நோக்கச் செய்தவன் ‘ இங்க பாரு இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோ நீ என்னோட உரிமை… நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்… நான் உன்னை எடுத்துக் கொள்வதற்கு உன்னோட அனுமதி தேவையில்லை’ என்று கூறியவனின் வார்த்தையில் அவள் காதல் கொண்ட இதயம் காயமடைந்தது…

 

அவளுக்கே புரியவில்லை அவளின் மனது… நேற்றுவரை அவளைக் கண்டாலே எள்ளுகொள்ளும் வெடித்து விடுவதுப்போல்  இருந்தவன் இன்று தன்னை அவன் ஆளுமையில் அடக்கியது மட்டுமில்லாமல் தன்னை உரிமை கொண்டாடும் அவனின் மாற்றம் கண்டு அவளுக்கு உள்ளுக்குள் அச்சமாக இருந்தாலும்… அவளின் காதல் கொண்ட இதயம் அதனை வரவேற்றது…

 

அவனோ அவளிடம் தன் உரிமையை நிலைநாட்டி விட்டதின் அதீத திருப்தியில் மீண்டும் காரை அதே புயல் வேகத்தில் கிளப்பினான்… வீட்டை அடைந்தவர்களின் மனநிலையோ வெவ்வேறு திசையில் பயணித்தது…

 

ஆதி தன் காரை விட்டு கிழே இறங்கிய பிறகும் மித்ரா இறங்காமலிருக்க அவள் புறம் வந்தவன் ‘ என்ன… மகாராணிக்கு கார் கதவை திறந்துவிட்டாத்தான் இறங்குவீங்களோ கெட் டௌன் சூன்’ என்று உரக்க கத்தியவன் குரலில் திடுக்கிட்டு காரைவிட்டு இறங்கியவள் காரின் மேல் தடம் அவளின் தலையை பதம் பார்த்து விட சிறியதாய் இரத்தம் கசிந்தது ‘ இஸ் ஆ’ என்று வலிமிகுதியில் கத்தியவளை

 

கண்டவன் சிறிதும் யோசிக்காது அவளது தலையிலிருந்து கசியும் இரத்தத்தை மென்மையாக தன் கை குட்டையால் இரத்தம் வரும் இடத்திலிருந்து அழுத்தி எடுத்தான்… சற்று நேரத்திற்கு முன் அவளிடம் கோபம் கொண்டு கர்ஜித்தவனின் மற்றோரு முகத்தைப் பார்த்தால் மென்மையிலும் மென்மை இதுதான் ஆதியின் குணம் எவ்வளவு முரட்டு தன்மையிருந்தாலும் அவனுள் ஒரு குழந்தை தன்மையும், அதே ஈட்டிற்கு ஒரு தாய்மையின் குணமும் ஒளிந்திருந்தது…

 

தன்னையே பார்த்துக்கொண்டு இருந்தவளின் கண்களை சந்தித்தவன்… அவள் கண்களில் தன் மீதான கோபம் போய் மாறாக கனிவும் காதலும் தென்பட்ட உடனே தன் கையை அவளிடமிருந்து எடுத்தவன்… அவள் கண்களின் மொழி தனக்கு நன்கு தெரிந்திருந்தாலும் இது சாத்தியமாற்றவை என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டிருந்த சமயம்…

 

‘ஆதி பேபி… அங்க என்ன பண்ற’ என்க நேஹாவின் வருகையை உணர்ந்து முதலில் சுதாரித்தது மித்ராதான்… அவன் கையை சட்டென்று உதறிவிட்டு விலகி நின்றாள்… நேஹாவின் கண்களோ மித்ராவை கூறுப்போடும் அளவிற்கு தன் முழு கோபத்தையும் கண்களில் தேக்கி வைத்திருந்தவள்… ஆதியிடம் திரும்பி ‘ பேபி…. இவக்கூடலாம் ஏன் வெளில போற… தீபா அத்த சொன்னாங்க ஜெகதீஷ் பிஸ்னெஸ் விஷயமா நியூயார்க் போயிற்காராமே… பேபி இனிமேட்டு இவக்கூடலாம் போகாத பேபி இதுவே பர்ஸ்ட் அண்ட் லாஸ்டா இருக்கட்டும்… இவள பாத்தாலே எனக்கு எரிச்சலா வருது… இன்டீசென்ட பெல்லோ’ மித்ராவை முறைத்துக் கொண்டே ஆதியை தன்னுடன் அழைத்துச் சென்றாள்…

 

நேஹாவின் வார்த்தை கூட மித்ராவை காயப்படுத்தவில்லை… ஆனால் நேஹாவின் வார்த்தையைக் கேட்டு மௌனமாய் நின்ற ஆதியின் செயலில் தான் அவள் மிகவும் அடிப்பட்டுப் போனாள்… அவர்கள் இருவரின் பிம்பம் மறையும் வரை தன்னை சமாளித்தவள் … அதற்குமேல் முடியாமல் போக கண்களில் நீர் அரும்பியது அவளுக்கே தெரியவில்லை தான் ஏன் இவ்வாறு அழுகிறோம் என்று எப்படியும் அவன் எட்டாக்கனியாக இருந்தும் அவனின் அன்பையும் தன் மீதான அவனின் காதலையும் ஏன் எதிர்பார்கிறேன் அவன் கூறிய அதே உரிமை தன் மீது இருந்திருந்தால் அவன் கேட்டிருக்க மாட்டானா என்று நினைக்க மற்றோரு மனமோ என்ன நினைப்பு இது அவனோ நேஹாவுடன் திருமணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் அவன் ஏன் தனக்காக பேசவேண்டும் கனவுலகில் வாழ்ந்தது போதும் இனி நடக்கவிருப்பதை எதிர்கொண்டு வாழக் கற்றுக்கொள்வோம் என்று நினைத்தவளுக்கோ அது சாத்தியப்படுவது எளிதல்ல என்று அவளது மனம் கூச்சலிட்டது…

 

என்னத்தான் தன் நினைவை அவள் புறம் தள்ளினாலும்… அவளின் கண் முன் நேஹாவும் ஆதியும் கை கோர்த்துக் கொண்டு சென்ற காட்சியே அவளின் மனக்கண்ணில் தோன்றி இம்சிக்க… உறக்கம் தூரச் சென்றது…

 

மறுநாள் காலையில் எழுந்தவளுக்கோ மனம் முழுவதும் கணமாய் கனத்தது அவளிருந்த மனநினையில் அவளிடம் ஒரு வார்த்தைக் கூட கேட்காமல் திருமணத்தைப் பற்றி தீபா ஜெகாவின் சம்மதத்தை மட்டும் வேண்டி தனியாளாய் நின்று முடிவெடுத்தார்… ஏனென்றால் மித்ராவின் மீது அவருக்கு அளவுக் கடந்த நம்பிக்கை தன் பேச்சிற்கு மறுப்பேச்சு கூறமாட்டாளென்றும் மித்ரா வேலைக்கு சேர்ந்த நாளிலிருந்து அவருக்கு அத்தகைய எண்ணமிருந்தது உண்மையே….

 

தன் மகனின் சம்மதத்தை ஒரு அன்னையாய் கேட்டுத் தெரிந்தவர் மித்ராவிடம் ஒரு வார்த்தையேனும் கேட்க வேண்டுமென்ற எண்ணம் ஏழவில்லைபோலும்…

 

தன் முடிவைப் பற்றி அன்னையிடம் கூற கமலம்மாளின் கண்களும் சந்தோஷத்தில் பளபளத்தது ‘ தீபாம்மா நானே இத சொல்லலாம்னு இருந்தேன்… நீயே முடிவு பண்ணிட்ட …. நீ முடிவு பண்ணா சரியதாண்டா இருக்கும்…இருந்தும் மித்ரா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுகிறது நல்லது ஏன்னா நாளைக்கு வாழ போறது அவதான்… நல்லது கெட்டது எது இருந்தாலும் நம்பத்தாண்டா பொறுப்பு’ என்று அவர் முடித்துவிட… ‘சரிம்மா… நான் கண்டிப்பா ஏன் மருமக கிட்ட கேக்குறேன் அவ சம்மதம்தான் முக்கியம்’ தன் அன்னையிடம் கூறியவர் யோசனையில் முனைந்தார்…

 

கையில் சத்துமாவு கஞ்சியுடன் உள்ளே நுழைந்த மித்ராவை கண்ட தீபா இத்திருமண ஏற்பாட்டை பற்றி பேச எண்ணினார்… மித்ராவோ பாட்டியின் அருகில் வந்தவள் அவருக்கு சத்துமாவு கஞ்சியை புகட்டிக்கொண்டிருந்தாள் அவள் வந்த வேலை முடிவதற்காக காத்திருந்தார் போல் தீபா மித்ராவை அழைத்து ‘ மித்துமா’ என்றவரை ஆழ்ந்து பார்த்த மித்ராவின் முகம் புன்னகையில் விரிந்தது ‘சொல்லுங்க அத்த… ஏதோ கேட்கணுமா’ என்ற யோசனையின்படி தீபாவை பார்த்தாள்….

 

தீபாவும் அதற்கு ஏற்றார்ப்போல் ‘மித்துமா… இங்க வாயேன்… இப்படி வந்து பக்கத்தில் உக்காரு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்’ என்ற தீபாவின் பேச்சில் தீவிரத்தை உணர்ந்து அவர் அருகில் வந்தமர்ந்தவள்… பரிவாய் அவரின் முகத்தை ஏறிட்டாள்’ மித்துமா நான் ஒன்னு கேட்பேன்… ஆனா நீ சரின்னு சொல்லணும் என்னோட வாக்க காப்பாத்தனும் இது நான் சுயநலமா எடுத்த முடிவுதான்… ஆனா இதுல உன்னோட நலமும் அடங்கியிருக்கு மித்துமா… நீ என்னோட பேச்ச மீற மாட்டேன்னு நான் வாக்கு கொடுத்திருக்கேன்’ என்று நீண்ட வசனம் பேசிமுடித்தவரின் பேச்சில் மித்ராவிற்கு  சற்று உள்ளுக்குள் உதறல் எடுத்தது என்னவாகயிருக்கும் என்று யோசித்தவளுக்கு…

 

அந்த கஷ்டத்தை கூட கொடுக்காமல் தீபாவே தொடர்ந்த்தார்’ ஒன்னுமில்ல மித்துமா ஜெகாவுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன்’ என்று நிறுத்திய தீபாவின் பேச்சில் புரியாமல் விழித்தாள் மித்ரா…

 

 

அத்தியாயம்12

 

‘ அதுக்கு என்னத்த ஜமாய்ச்சிடலாம்… அமர்க்களமா பண்ணிட்டா போச்சி… யாரு அத்த பொண்ணு’ என்றவள் ஆர்வம் குறையாமல் கேட்க அவரோ சிறிதும் சலனமில்லாமல் ‘ பொண்ணு எல்லாம் பார்த்தாச்சிடா… ஜெகன்தான் பார்த்தான்…. அவனோட செலக்க்ஷன் எப்பவும் சூப்பரா இருக்கும்… ரொம்ப நல்ல பொண்ணு எங்களுக்கும் அவளை ரொம்ப பிடிச்சிருக்கு… பொண்ணு அவ்ளோ அழகு’ அவரின் பேச்சில் அத்துனை மகிழ்ச்சியை கண்டவள்’ அத்த கடைசி வரை பொண்ணு யாருனு சொல்லவே இல்லையே’ வருத்தத்துடன் கூறியவளை கண்டவர் ‘ அப்படியா பொண்ணு இங்கதான் இருக்கா’ என்றவர் அவளை அழைத்துச் சென்று கண்ணாடிக்கு முன் நிறுத்தி ‘ பாரு இவத்தான் பொண்ணு எவ்ளோ அழகாயிருக்கா இல்ல… என் கண்ணே பட்டுடும் போலிருக்கு’ என்று கூறி அவளது கன்னம் வழித்து உச்சியில் முத்தமிட்டார்…

அவளது தலையில் யாரோ சம்மட்டியால் அடித்ததுப்போல் உணர்ந்ததாள் திக்பிரம்மை பிடித்து நின்றிருந்தவளை உலுக்கிய தீபா மேல தொடர்ந்தார் ஜெகாவுக்கு அவள் மீதான காதலைப் பற்றி கூற அவள் செய்வதறியாது திகைத்து நின்றிருந்தாள்… இதையே தாங்கிக் கொள்ளாமல் நின்றிருந்தவளின் இதயத்தில் இடி மேல் இடி இறங்கியதுப்போல் உணர்ந்தாள்…

 

இதுநாள் வரை ஜெகாவை மனதளவில் சக தோழனாகத்தான் பாவித்து வந்தாள் இன்று ஜெகதீஷின் மனைவியாக என்று நினைக்கவே அவளது மனமும் உடலும் கூசியது….

 

ஏன்? ஏன்? தனக்கு மட்டும் இவ்வாறு நடக்கிறது… இப்போது தான் என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு விடைத்தான் தெரியவில்லை….

 

அவள் தனது சிந்தனையில் இருக்க கமலம்மாள் ‘ மித்ரா’ என்றழைக்க அவசரமாக அவள் அருகில் சென்றவள்… துயரம் தாங்காது அவர் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டாள் ‘ மித்துமா.. என்றவரின் கை அவளது தலையை வருடிக் கொடுக்க… அதில் ஆயிரம் அர்த்தங்களை உணர்ந்தவள் போல் தன் பாட்டியை நிமிர்ந்துப் பார்த்தால் அவரது பார்வையில் தான் அத்தனை கனிவு ‘ மித்துமா… தீபா உன்ன கேட்காம முடிவு எடுத்தது தவறு தான்டா… ஆனா பாரு அவளுக்கும் தன் பிள்ளையோட கல்யாணத்த பார்க்கணும்னு அவ்வளவு ஆசை… அதாண்டா சுயநலமா முடிவெடுத்துட்டா… அவளை தப்பா நினைக்காத’ என அவர் முடிக்கும் முன் ‘ ஐயோ பாட்டி நான் ஏதும் நினைக்கல… நீங்களா ஏதும் நினைக்க வேண்டாம்’ என்றவள் மீண்டும் அவர் மடி மீதே தலை கவிழ்ந்தாள்…

 

தன் எண்ணங்கள் அவளை அழைத்துக்கொண்டது மனதளவில் ஒருவனுடன் வாழ்ந்து விட்டு அவனிடம் பறிகொடுத்த மனதை எப்படி இன்னொருவனிடம் கொடுப்பது… அதுவும் கணவன் என்ற அந்தஸ்தை அடைபவனுக்கு இது இழுக்கு அன்றோ… அப்படியே ஏற்றுக் கொண்டாலும் தான் அவனுக்கு உடலளவில் மட்டுமே சுத்தம் மனதளவில் கேட்டாள் இல்லையென்றுதான் அவள் மனதின் குரல் ஓங்கி ஒலித்தது….

 

மற்றொரு மனமோ தன் குடும்பத்தை மேலும் இழக்காமல் ஏற்றுக்கொள் என்று அவளை அதட்ட…. மனதினை தேற்றியவள் போதும் நான் இழந்தவரைக்கும்… இனி தனது குடும்பம்தான் முக்கியம் என்று முடிவெடுத்தவள் தனது குடும்பத்தின் நன்மையை முன்னிருத்தி மலையளவில் பாரம் தனது மனதை கணத்தாலும் அவர்களின் மகிழ்ச்சிக்காக தான் எதை வேண்டுமென்றாலும் இழக்கலாம் என்றுதான் தோன்றியது….

 

பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக’ எனக்கு…எனக்கு… சம்மதம்தான் பாட்டி’ என்றவள் அவரைக் கட்டிக்கொண்டாள் துக்கம் தொண்டையை அடைக்க கூறியவளின் வார்த்தையில் கமலாம்மா’ள் மட்டுமின்றி தீபாவும் அவளது பதிலில் மகிழ்ந்து போனார்…

 

இப்பொழுதே இந்த மகிழ்ச்சியான செய்தியை ஜெகாவிடம் கூறவேண்டுமென்று தோன்ற… அவனுக்கு விஷயத்தை தெரிவிக்க தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு சென்று விட்டார்….

 

அந்நேரம் பார்த்து ஆதி தொலைக்காட்சியில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருந்ததை கவனித்தவன்… அப்பாடல் வரிகள் அவன் அடி நெஞ்சு வரை சென்று தித்தித்தது…

 

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே ததை வருவாளா

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே….

பாடலைக் கண்டவன் மனதில் மித்ராவின் முகமே வந்து நின்றது…

பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்

ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்

ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்

இரவும் பகலும் என்னை வாட்டினாள்

 

இதை கேட்டுக்கொண்டிருந்தவனின் மனதில் சிறு குறுகுறுப்பு தோன்ற அவன் தனக்குள் சிரித்துக் கொண்டான்… பின்பு வந்த வரியில் அவன் தன்னை மறந்து தொலைக்காட்சியில் பார்வையை பதித்தான்..

 

இதயம் அவள் பெயரில் மாற்றினாள்

காதல் தீயை வந்து மூட்டினாள்

நான் கேட்கும் பதில் இன்று வாராத

நான் தூங்க மடி ஒன்று தாராத

தாகங்கள் தாபங்கள் தீராத

தாளங்கள் ராகங்கள் சேராத

வழியோரம் விழி வைக்கிறேன்…

 

அவன் பார்வை மட்டும்தான் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தது மனமோ அவளின் பால் ஈர்த்து தத்தளிக்க தொடங்கியது… அவன் நினைவோ தான் அவளுக்கு கொடுத்த முதல் இதழ் முத்தத்தில் திளைத்து நின்றது… மீண்டும் அவனுள் தாபங்கள் எழ தனது மனதினை அடக்க தெரியாமல் திண்டாடினான்…

 

ஏனோ மனம் முழுவதும் ஒருவித நிம்மதி பரவ… நெஞ்சம் முழுவதும் மித்ராவின் மீதான காதல் அவனை ஆட்டிப்படைத்தது அவளைப் பார்க்க வேண்டுமென்று அவன் மனம் துடிக்க தன் அறையிலிருந்த இன்டெர்க்காம் பெல்லை அடித்து மித்ராவை காபிக் கொண்டு வருமாறு கூறினான்…

 

கண்ணம்மா மித்ராவிடம் காபியைக் கொண்டுச் செல்ல கூறினார்… அவளோ எப்படி இதை தவிர்ப்பது என்று யோசித்தவள் ‘ கண்ணம்மா… நீங்களே எடுத்துட்டு போங்க’ என்றவளை கேள்வியாக பார்க்க ‘ அம்மா… அவரு சொன்னதை செய்யலன்னா… அப்புறம் நான் வேலைய விட்டு போக வேண்டியதுதாமா… எனக்குன்னு ஒரு  பொட்டப்புள்ள இருக்குமா’… என்க மித்ராவோ மனதில் பயமிருந்தாலும் ‘ சரி கண்ணம்மா அப்படியெல்லாம் எதும்மாகாது… கொடு நானே கொண்டு போறேன்’ என்றவள் காபியைக் வாங்கிக் கொண்டு ஆதித்யாவின் அறைக்குச் சென்றாள்….

 

‘எக்ஸ்…. எக்ஸ்கியுஸ் மீ சார்’ என்று கதவை தட்ட… ‘எஸ் கம் இன்’ என்ற குரலில் என்றும் கம்பிரம் இருக்க இன்று ஏனோ குழைந்திருந்தது அத்தனை மகிழ்ச்சி அத்தனை எதிர்பார்ப்பு புன்னகை முகம் மாறாமல் அவளை அனு அணுவாக தலை முதல் கால்வரை ரசித்தான்…. பூமியின் மேல் அழகிய வதனமாய் நிற்கும் தன்னவளின் கால்களிருந்து தன் பார்வையை தொடர்ந்தவன் அவளது மெல்லிய இடை சங்கு கழுத்து என வலம்வர கழுத்திற்கு கீழ் மெல்ல ஏறி இறங்கும் அவளின் பெண்மையில் வந்து நின்றவனின் பார்வை அவ்விடத்தை விட்டு அகல மறுத்தது….

 

தான் வந்து நீண்ட நேரமாகியும் அவனிடமிருந்து பதில் வராமலிருக்க… தன் தலையை நிமிர்ந்து பார்த்தவள்… அவன் தன்னை அங்குலம் அங்குலமாக அளவெடுப்பதைக் கண்டவள் தன்னை சமாளித்துக் கொண்டு அவனிடம் காபிக் கோப்பை நீட்டினாள்… அவளது கையிலிருந்த காபியை சிந்தாமல் வாங்கி மேஜை மீது வைத்தவன் அவளின் கையை விடாமல் பிடித்து இழுக்க…

 

அவள் சுதாரிக்கும் முன் அவளை தன்னுடன் இழுத்துக்கொண்டு கட்டிலில் சரிந்தான்… எதிர்பாராத விதமாக நடந்த இத்தாக்குதலில் அவள் நிலைகுலைந்து போனாள்… அவளை அப்படியே அள்ளிக்கொண்டவனின் தாபங்கள் மேலும் தீ முட்டிவிட… அவனின் உணர்வுகள் அவளுள் புதைய ஏங்கியது…

 

மித்ராவின் இதயம் அதிவேகமாக துடித்தது… அவளின் இதய துடிப்பின் வேகம் அறை முழுவதும் எதிரொலிக்க… அவளை இம்மியும் அசைய விடாமல் கைது செய்திருந்தான் ஆதி… அவன் கண்களில் வழிந்த தாபத்தை கண்டவளுக்குகோ முலையில் அபாய மணி அடித்தது… அவளின் முகத்தை நோக்கி குனிந்தவனின் செவியில் கதவு தட்டப்படும் ஓசை கேட்க…

 

தீபாவின் குரலில் களைந்தவன் அவளை விட்டு விலகி எழுந்தான்’ சே… ஜஸ்ட் மிஸ்’ என்றவனின் வார்த்தையை கேட்டு அரண்டு போய் எழுந்தாள்….

 

:இவனுக்கு புத்தி ஏன் இப்படி போகுது… ஐயோ இவன பத்தி தெரிஞ்சும் நம்ப வந்திருக்க கூடாது’ தனது முட்டாள் தனத்தினால் தீபா அத்தை தன்னை தவறாக எண்ணிவிடுவாரோ என்று நினைத்தவளின் முகத்தில் பயம் குடிக்கொள்ள… உள்ளே வந்த தீபா மித்ராவை கண்டு ‘ மித்துமா நீ இங்கதான் இருக்கிறதா கண்ணம்மா சொன்னா… நான் ஜெகாகிட்ட சொல்லிட்டேன் நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சதா…அவன் ரொம்ப சந்தோஷப்பட்டான்… உன்கிட்ட பேசனும்னு சொன்னான் இப்ப எதோ மீட்டிங்ல இருக்கானாம்… ஈவ்னிங் பேசுறேன் சொன்னான்… சரி மித்துமா பாட்டி உன்ன கூப்பிட்டாங்க… நீ போய் என்னனு பாருடா’ என்றவரிடம் வெறும் தலையசைப்போடு விடைபெற்றவள் ஆதியை நிமிர்ந்து கூட பார்க்காமல் அறையை விட்டு வெளியே சென்றாள்….

 

தன்னை கடந்து சென்றவளின் முதுகு மறையும் மட்டும் பார்த்திருந்தவன்… தீபா கூறிய செய்தியைக் கேட்டு அவனின் முகம் இருண்டது…அப்பொழுது முடிவு செய்தான் தன்னவளை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டேன் என்று…

 

மித்ராவிற்க்கு ஜெகதிஷுடனான திருமணத்தை நினைத்தவளின் உள்ளம் ஏரிமலைப் போல் வெடித்து சிதறியது….

 

இதற்கிடையில் ஆதித்யா மற்றும் நேஹாவின் திருமண நாளும் வந்தது….

 

நன்றி தோழமைகளே

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

திவ்யபாரதி

 

 

 
3 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Mani Mekalai says:

  Nice when u ll publish next episode I am waiting


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Nataraj Nataraj says:

  Ai super super super


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Wow nice

error: Content is protected !!