Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-13 & 14

அத்தியாயம் 13

 

இதற்கிடையில் ஆதித்யா மற்றும் நேஹாவின் திருமண நாளும் இனிதே வந்தது… திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு திருமணத்திற்க்கே உரிய கலகலப்பு அங்கு தொற்றிக்கொள்ள மணமக்கள் அழைப்பு சொந்த பந்தங்கள் உற்றார் உறவினர்கள் என்று அனைவருமிருக்க சபை நிறைந்து காணப்பட்டது… மணமகன் மற்றும் மணமகளை அழைத்து நலுங்கு வைத்தனர்….

 

நேஹாவின் மனமோ குதுகலித்தது ‘ ஒரே அடியில் ரெண்டு மாங்கா’ ஆதியும் கிடைத்தாயிற்று அவனின் மனைவி என்ற உரிமையும் அவனின் சொத்துக்கள் அனைத்தும் தனக்கே உரியது என்று நினைத்தவளுக்கோ நாளைய விடியல் பொழுது தனக்கானது என்ற கர்வம் அவளது மனதில் ஆழப்பதிந்தது…

 

ஆனால் ஆதியின் மனமோ இதில் எதிலும் ஈடுபாடு இல்லாமல் மித்ராவின் நினைவில் திலைத்திருந்தான்… சபையில் இருந்த படியே அவனது கண்கள் தன்னவளை தேடியது… அவளைக் காணாமல் அவன் இதயம் துடித்தது… நலுங்கு முடியும் மட்டும் பொறுத்திருந்தவன் இதற்குமேல் முடியாது என்று தோன்ற நேஹாவிடம் முக்கியமான அழைப்பு வந்துள்ளதாக கூறினான்… தன்னவளை தீவிரமாக தேடினான்….

 

(இன்னும் இவனுக்கு புரியல போல அவன் மித்ராவை காதலிக்கிறது சுத்தம் சரியான மேட்ரிக்ஸ் மண்டையா இருப்பான் போல… கீழ விழுந்தாலும் மீசையுல மண்ணு ஒட்டலன்னு சொல்றவன என்ன பண்றது????)

 

தேடியவனின் கண்ணில் அழகு பாவையவள் இருள் மரித்த நிழலில் தன்னவளின் வதனம் மீது அழகாக வீசிய நிலவொளியில் அவள் அழகு மென்மேலும் அவனை போதைக் கொள்ளாச் செய்தது… அவள் அருகில் சென்றவனின் கைகள் தன்னவளை உரிமையோடு அணைக்க முற்பட… தன்னை சமன் செய்துக்கொண்டவன்’ மித்ரா’ என்றழைக்க அங்கு எதிர்பாராத விதமாக ஆதியை கண்டவள் உடல் விரைத்து நின்றாள்…

 

‘மித்து… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்’ என்று அவளை நெருங்கியவன் அவனைப் பற்றி அறிந்தவள் தன்னை அவனிடமிருந்து காத்துக்கொள்ள தன் எட்டுக்களை பின் நோக்கி எடுத்து வைத்தவள் அந்த இடத்தை விட்டு நகர முயன்றாள்…

 

அவள் செல்வதை கண்டவன் வேகமாக சென்று அவள் கையை பிடித்து இழுத்தான்… அவன் கை தன்மணிக்கட்டை இறுக்கமாக பிடித்ததில் வலி ஏற்பட்டு தன் கையை அவனது பிடியிலிருந்து உதறினால்… விடிந்தால் அவனுக்கு திருமணம் இந்நேரத்தில் அவன் இப்படி தன்னிடம் நடந்துக்கொள்வதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று எண்ணியவள் ‘சார் நா…நான் போகனும் யாராவது பார்த்தா எனக்குத்தான் பிரச்சனை… என்ன போக விடுங்க’ தன் கையை அவனிடமிருந்து விடுவிக்க போராடியவள் அவனிடம் கெஞ்சும் குரலில் கூற அவன் செவியில் அவள் கொஞ்சுவதுப்போல் கேட்க அவனது பிடி தளர்ந்து அவன் உதட்டில் புன்னகை தோன்றி மறைந்தது….

 

அவளின் எண்ணத்தை படித்தவனாய் ‘ நான் உன்ன ஏதும் பண்ணமாட்டேன்… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்… நான் பேசின பிறகு நீ தாராளமா போலாம்’ அவளிடம் கட்டளையிடும் தொனியில் பேசியவனை கண்டவள் அவன் மேல பேசும்முன் மித்ரா அவனை எரித்து விடுவதுப்போல் பார்த்தாள் ‘ ஒரு பொண்ணுகிட்ட… எப்படி நடந்துக்கணும்னு முதல்ல தெரிஞ்சிக்கோங்க அவளை உடலளவில் ஜெயிக்கிறது மட்டும் ஆம்பள தனமில்ல… மனசலளவில ஜெயிக்கணும்… ஹ்ம்ம் அதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போது… எந்த உரிமையுல என்கிட்ட இப்படி நடந்திங்க… உங்களுக்கு யாரும் அந்த உரிமைய கொடுக்கல… கொடுக்குற அளவுக்கு நீங்க எனக்கு எந்த வகையிலும் உரிமையுள்ளவரும் கிடையாது’ தனது மனதில் இத்தனை நாள் குமைந்து கொண்டிருந்த கோபத்தை இல்லை…. இல்லை தனது மனதின் ஆதங்கத்தை அவனிடம் கொட்டினாள்….

 

அவனிடம் தன் மனம் சற்று இலகினால் கூட அவள் அவனிடம் முழுமையாக சரணடைந்து விடுவாள் இத்தனை நாள் இல்லாத துணிவு… இன்று அவளிடம் வந்தது அதற்கு காரணமும் அவனே… அவள் பேச்சை கேட்டவனின் புருவம் மேலே எழுந்தது ஆச்சிரியத்தில்… அவள் பேச்சை கேட்டு இறங்கி வந்தால் அவன் ஆதித்ய வர்மன் இல்லையே…

 

தன்னை கடந்து செல்பவளை மீண்டும் கையை பிடித்து நிறுத்தியவன் ‘ என்னடி ரொம்பத்தான் பேசுற… என்ன…என்னடி சொன்ன…. என்ன உரிமைன்னு கேட்கிறியா… என்னோட உரிமை உன் அளவில் என்னன்னு நான் சொல்லவா இல்ல செயலில் செஞ்சி காட்டடுமா… பேபி’ என்றவைக் கண்டவள் பயப்பந்து அவளுள் உருள தொடங்கியது…

 

இதற்கிடையில் மேடையில் அமர்ந்திருந்த நேஹாவின் அலைபேசிக்கு சிறிய குறுந்தகவல் வர… தன் அலைபேசி ஒலிருந்து அமர்ந்ததைக் கண்டவள்… தன் அலைபேசியை உயிர்ப்பித்து அக்குறுந்தகவலைப் பார்த்தவள் சப்தமும் அடங்கிவிட அவளது முகம் பயத்தில் வெளிறிக் காணப்பட… இந்த வேலையை யார் செய்திருப்பார்கள் என்று யோசித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை… தன் முகத்தை இயல்பாய் வைத்துக்கொண்டவள்… சுற்றும் முற்றும் தன் பார்வையை சுழலவிட்டவள் மற்றவர்களின் பார்வை தன் மீது படுகிறதா என்பதையும் அவள் கவனிக்க தவறவில்லை….

 

*****************************************

ஹ்ம்ம் …. என்ன அப்படியே பிரீஸ் ஆகிட்ட என்று தன் புருவத்தை உயர்த்தி கேட்க… அதில் அவளது முகம் அந்தி வானமாய் சிவந்தது… அவளது அருகில் நெருங்கியவனின் வெப்ப மூச்சுக்காற்று அவள் முகத்தினை உரச… பாவையவள் தன் கட்டுப்பாட்டை தளர்த்தினால் அவள் இடையைப்பற்றி தன் அருகில் இழுத்தவனின் அணைப்பு மேலும் இறுகி அவளுக்கு வலி ஏற்பட அந்த நிமிடம் அவளுக்கு உணர்த்தினான் அவள் எந்தளவுக்கு அவனுக்கு தேவையென்று…. அவளை மேலும் தன்னுள் புதைக்கச் சொல்லி அவன் மூளை அவனுக்கு கட்டளையிட….

 

அதனை செயல்படுத்தாமல் முதல் முறையாக தன் மனம் சொல்வதை செயல்படுத்தினான்… அவளின் முன்னுச்சி முடியை எடுத்து அவளது காதிற்கு பின் சொருகியவன்… அவளது காதிற்கு மிக அருகில் சென்று கிசுகிசுப்பான குரலில்’ பேபி….இந்த ஆதி யாருன்னு உனக்கு இன்னும் புரியலையே பேபி… ஒரு பொருள் வேணும்னாஎப்படி என்னோட தக்கவச்சிக்கணும்னு எனக்கு தெரியும்….

 

அதே வேணானாலும் அது எவ்வளோ பெரிய பொக்கிஷமா இருந்தாலும் தூக்கி ஏறிஞ்சிட்டு போயிட்டே இருப்பேன்… வெய்ட் அண்ட் வாட்ச் பேபி… இப்போ நீ போலாம்’ மனச குழப்பிக்க வேண்டாம் யோசிக்கவும் வேண்டாம் என்றவன் அவளது கன்னத்தில் தட்டிவிட்டு சென்றவன் பின் அவளை திரும்பி பார்த்து’ நீ சொன்ன அதே உரிமையை தான் இப்போ நான் உன்கிட்ட சொன்னேன்’ என்றவள் அவளை தெள்ள தெளிவாக குழப்பிவிட்டு சென்றான்…

 

******************************************

தனது அலைபேசிக்கு குறுந்தகவல் வந்த எண்ணிற்கு அழைத்தவள்… மிகுந்த படபடப்புடன் காத்திருந்தாள் மறுபக்கத்தில் அழைப்பு எடுக்கப்பட்டது’ ஹலோ… ஹலோ யா…யார் நீங்க…உங்களுக்கு எப்படி இந்த போட்டோ கிடைச்சது… நீங்க யாரு’ அவளின் இரத்தழுத்தம் ஏறி இறங்குவது மறுமுனையில் இருந்தவனுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது அவனோ வாய்விட்டு சத்தமாக சிரித்தான்… அவனின் சிரிப்பை கேட்டவளுக்கு சப்தநாடியும் அடங்கியது….

 

‘ தினேஷ்’ என்ற பெயரை உச்சரித்தவளின் குரல் உள்ளே சென்றிருக்க பரவாயில்லையே கண்டுப்பிடிச்சிட்ட… ரொம்ப புத்திசாலிதனமா நடந்துகிட்டனு நினைப்பா டார்லிங்… இந்த  தினேஷ அவ்ளோ சீக்கிரம் ஏமாத்த முடியுமா என்ன… என்ன டார்லிங் என்னைப்பத்தி தெரிஞ்சும் நீ இப்படி பண்ணலாமா’ என்றவன் பலமாய் சிரித்தான்…

 

‘தினே… தினேஷ் இங்க பாரு நீ சொன்னத தான் நான் இப்போ வரைக்கும் பண்ணிட்டு இருக்கேன் இருந்தும் நீ இப்படி பண்ணக்கூடாது… அந்த போட்டோச வச்சி ஏன் என்ன பிளாக்மெயில் பண்ற… ப்ளீஸ் தினேஷ் இந்த போட்டோஸ் மீடியாக்கு போச்சுன்னா… என்னோட மார்க்கெட் என்ன ஆகுறது’ நன்றாக யோசித்து பார் என்றவளிடம்…

 

அதையே தான் நானும் சொல்றேன் உன்னோட மார்க்கெட் போக கூடாதுனா இந்த கல்யாணத்த நிறுத்திட்டு வா…. நான் கொடுத்த காசுக்கு நீ நடிச்ச வரைக்கும் போதும்…. அவனோட மானம் மரியாதை எல்லாம் போனும் அவன பிஸ்னஸ்ல இருந்து ஒதுங்கனும் அவமானம் தாங்க முடியாம அவன் தலை குனியனும்…. அதுக்குத்தான் நான் காத்திருந்தது… இதுதான் என்னோட பிளான்…. டிராமால உன்னோட ரோல் முடிஞ்சிறிச்சி…. நீ பாலன்ஸ் அமௌண்ட வாங்கிகிட்டு கொஞ்ச நாள் அவன் கண்ணுல படாம தலைமறைவா இரு சரியா’ என்று கூற மறுமுனையில் சத்தமின்றி நிசப்தம் நிலவியது….

 

‘ என்ன நேஹா…. ஒன்னும் பேச்ச காணோம்’ தினேஷ் கேட்க நேஹா அவனிடம் ஆதி வந்து விட்டதால்… தான் நேரில் வந்து பேசுவதாக தொடர்பை துண்டித்தாள்… தினேஷின் கோபம் உச்சிக்கே சென்றது…. அவளின் நடிப்பை தன்னிடம் காட்டுகிறாள் என்று எண்ணியவன் மீண்டும் குறுந்தகவலை அனுப்பலானான் ‘ இன்னும் அரைமணி நேரத்துல… என்னோட ஆஃபீஸ்க்கு வரணும் இல்லைனா… இந்த போட்டோஸ் உலகம் முழுக்க பார்த்து ரசிப்பாங்க… உன்னோட ப்ரோபஸ்னா இல்ல ஆதியானு நீயே முடிவு பண்ணிக்கோ… ஆப்ஷன் இஸ் யூர்ஸ்’ என தன் நிபந்தனைகளுக்கு அவளை அடிப்பணிய வைத்தான்….

 

மித்ரா ஆதியின் முதுகு மறையும் மட்டும் அவனையே பார்திருந்தவள் அவன் கூறிச் சென்ற ‘உரிமை’ என்னும் வார்த்தை அவள் காதில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது…. சத்தியமாக அவளுக்கு புரியவில்லை அவன் எதைபற்றி கூறினானென்று…. ஆனால் அவன் தன்னிடம் கூறிய உரிமையின் பொருள் ஏதுவாக இருக்கும் என்று யோசித்தவளுக்கு அவன் கூறிச் சென்ற உரிமைக்குள் இருக்கும் மறைப் பொருளை அவள் அறிய முற்படவில்லை அதற்கு அவள் முயற்சியும் எடுக்கவில்லை…. அவள் அவனை காயப்படுத்த வேண்டுமென்று கூறிய வார்த்தை கூறிமாறி அவளை தாக்கியது அதில் அச்சம் தலைதூக்க அவனின் முடிவு என்னவாக இருக்கும்… அதைப்பற்றி யோசித்தவளுக்கு ஒரு விதமான பதற்றம் தொற்றிக்கொண்டது….

 

தினேஷ் எதிர்பார்த்ததுப்போல் அவனின் நம்பிக்கையை வீணாக்காமல் நேஹா அவனைத் தேடி வந்தாள்….

 

‘தினேஷ் நீ பண்றது சுத்தமா சரியில்ல எதுக்கு இப்படி பண்ற… நம்பளோட பிளான நீ சுத்தமா மறந்துட்டு பேசுற தினேஷ்… நம்பலோட டீலிங் என்னன்னு உனக்கே தெரியும்… இருந்தும் நீ இப்படி பண்றது எந்த விதத்தில் நியாயம்’ என்றவளை நக்கலாக பார்த்தவன்….

 

நியாயம் அநியாயத்த பத்தி நீ பேசுறியா… அந்த நினைப்பு உனக்கு இருக்கா… எனக்கு அந்த மாதிரி தெரியலையே நேஹா…. அப்ப… அப்படி நான் உன்னை என்ன பண்ணேன் தினேஷ் இந்த மாதிரி போட்டோ எடுத்து வச்சி இப்படி கேவலமா பிஹேவ் பண்ற’ என்று போலியாக கண்ணீரை கசக்கியவளை கண்டு அவனுள் கோபம் சுறுசுறுவென்று ஏற ’ யூ… ஜஸ்ட்… ஷுட்ட்டட்ட்ட…அப் இடியட்… என்னடி அப்படியே பத்தினி மாதிரி ஸீன் போட்ற…

 

நான் என்ன இல்லாததையா போட்டோ எடுத்து வச்சிருக்கேன்… நீ அடிச்ச கூத்தத்தான் போட்டோ எடுத்து வச்சிருக்கேன்… இன்பாக்ட் இதை அனுப்பனது கூட இதுல சமந்தபட்டவன் ஐ மீன் உன்னோட முன்னால் காதலன் ஜான் தான்… நீங்க அடிச்ச கூத்துதான் மஹாபலிப்புரமே பேசுது… இதுல போட்டோவாலத்தான் உன் மானம் கப்பலேற போகுதா… இங்க பாரு உன்ன ஆதிகூட பழகிவிட்டது அவனோட ஆஃபீஸ் டீடெயில்ஸ் எடுக்கிறதுக்கு இங்கப்பாரு அவன்கூட குடும்ப நடத்துறியோ இல்ல*** என்ன டாஷ் வேணாலும் பண்ணிக்கோ அது பத்தி எனக்கு கவலை இல்ல… நான் உன்னை அனுப்பினது அவனோட கம்பெனி டேட்டா எடுத்துட்டு வரச்சொல்லி அனுப்பினேன் நீ என்னடான்னா சொன்ன வேலைய விட்டுட்டு… அவன கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகலாம்னு ஐடியா போட்டுட்ட போல …. சோ பேட் உன்னோட ஐடியா என்ன ஆஃப்செட் பண்ணிடுச்சி டார்லிங்’….

 

‘யூ…. ஜஸ்ட்…. ஸ்டாப்… இட் தினேஷ் நீ கேட்ட டீடெயில்ஸ் நான் தான் கொடுத்துட்டேன்ல அப்புறம் ஏன்? என் வாழ்க்கையில விளையாடுற  ஹாஹாஹா என்று பலமாக சிரித்தவன் ‘நேஹா வாட் யூ மீன் உனக்கு வாழ்க்கையா…. தெருவிளக்குலாம் குத்து விளக்கு ஆகமுடியுமா… அதே போலத்தான் நீ…. என்னைக்கும் உன்னோட நிலை இதுதான் அது எப்பவும் மாறாது’… தன்னை அசிங்க படித்தியவனை இப்பொழுதே கொன்றால் என்ன என்பதுபோல் அவளுள் கோபம் எழுந்தாலும் தனது குடுமி அவன் கையில் இருப்பதால் வேறுவழியின்றி அமைதி காத்தாள்….

 

இவனை பிறகு வைத்துக்கொள்வோம் என்ற முடிவுடன் அவனிடம் மீண்டும் போராடினால்’ தினேஷ் உண்மையா இதுக்கு அப்புறம் வேறெந்த டீடெயில்சும் இல்ல என்ன நம்பு’ என்றவளை தீர்க்கமாய் பார்த்தவன்…

 

அவளின் பேச்சில் பொய் இல்லையென்பதை உணர்ந்தவன்’ அப்போ சரி… நீ இந்த கல்யாணத்தை நிறுத்திடு… ஆல்ரைட் இதுக்குமேல நீ ஏதாவது பேசுனா… நான் சொல்லிட்டு இருக்க மாட்டேன் செஞ்சிட்டுதான் பேசுவேன்….இந்த போட்டோஸ்லாம்,பேஸ்புக்  ,ட்விட்டர், யூ ட்யூப்னு இருக்குற எல்லா சோசியல் மிடியாக்கும் போகும் அதுமட்டுமில்ல நீ பண்ண தில்லாலங்கடி வேலையெல்லாம் இதுல இருக்கு…. இலவச இணைப்பா நீயும் ஜெயில்க்கு போவ எப்படி வசதி… ஒழுங்கா மீதி பணத்த வாங்கிட்டு போய் பொழைக்குற வேலைய பாரு…. யூ அண்டெர்ஸ்டாண்ட்…சாய்ஸ் இஸ் யூர்ஸ் டார்லிங்’ நீ போகலாம் என்றவன் அவள் முன் நாய்க்கு எலும்பு துண்டு போடுவதுப்போல் பணத்தை எடுத்து வீசினான்… அதில் அவள் கண்கள் பளபளக்க… பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்…

 

அத்தியாயம் 14

திருமண மண்டபமே மிகுந்த கலவரத்துடன் காணப்பட்டது… மணப்பெண் காணவில்லை என்னும் செய்தி காற்றில் தீயாய் பரவி அங்குள்ளவர்களை சென்றடைய கமலம்மாவிற்கும் தீபாவிற்கு தலையில் இடி இறங்கியது… அவளது எண்ணிற்கு அழைத்தாள்…. அலைபேசி அணைக்கப்பட்டுள்ளது என்று கணினியில் பதிவு குரல் வந்தது…. சர்வமும் அடங்கி தலையில் கைவைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார்… ருத்ரமூர்த்தியாக மாற வேண்டியவனோ அங்கு அமைதியாக வலைய வந்துக் கொண்டிருந்தான் ஆதித்யவர்மன்… அவனின் செயல் அவருக்கு புரியாத புதிராக இருந்தது… இருப்பினும் தங்கள் குடும்பத்தின் கௌரவத்தை இப்படி சந்தி சிரிக்க வைத்துவிட்டு சென்றுவிட்டாளே என்ற கோபம் நேஹாவின் மேல் எழ… செய்வதறியாது திகைத்து போய் நின்றார்…. குடும்ப கௌரவமே இதில் அடங்கிருக்க… பார்ப்பவர்கள் கண்,மூக்கு.காது வைத்து ஆளாக்கொன்று பேசிக்கொண்டிருக்க விடிந்தால் கல்யாணம் எந்த பிரச்சனையும் எளிமையாக கையாள்பவருக்கு இப்பிரச்சனை பூதாகரமாக தெரிய அதில் பொறுமையுற்றவர்….

 

அதே சமயம் நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்… மேலும் அவர்களுக்கு தன் குடும்பத்தின் நிலையை கட்சிப்பொருளாக்க எண்ணாதவர் அந்த செயலை செயல்படுத்தினார்….

 

இதனால் தனக்கு நேரப்போகும் மனவருத்தம் கூட பெரிதாக உணராமல் தன் குடும்பத்தின் நிலையும் தொழில் வட்டாரத்தில் அவர்களுக்கென்று ஒரு மரியாதை இருப்பதை உணர்ந்தவர் இவ்வுலகத்தில் நேஹா ஒருத்தி தான் பெண்ணா வேறுயாருமில்லையா என்று யோசித்தவருக்கு மின்னல் வெட்டுவதுப்போல் மித்ராவின் முகம் அவர் மனக்கண்ணில் வர… மித்ராவால் மட்டும்தான் தன் குடும்ப மானத்தை மீட்டெடுக்க முடியும் என நினைத்தவர்… தன் அன்னையிடம் கூற அவரும் வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்தார்…

 

மித்ரா இருக்கும் அறையை நோக்கிச் சென்றார்… இது எதையும் அறியாத மித்ரா தன் மனதில் ஏற்பட்டிருந்த காயங்களின் வடு ஆறாத ரணமாய் மாறியிருக்க அவள் விட்டத்தை வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள் தீபாவின் குரலில் விழித்தவள் நிகழ்காலத்திற்கு திரும்பினாள்’ அத்தை வாங்க இந்த நேரத்துல… இங்க வந்திருக்ககீங்க ஏதாவது வேணும்னா என்ன கூப்பிட்டிருக்கலாமே நானே வந்ததிற்பேன்’ என்றவள் அவர் முகத்தை உற்று நோக்க அதில் தெளிவில்லாமல் இருக்க’ ஏதாவது பிரச்சனையா ‘ என கேட்க

 

அவளை ஆராய்ச்சி பார்வையை பார்த்தவர் ‘ நீ என்கூட வா… உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்’ என்றவர் மித்ராவின் கையைப் பிடித்துக்கொண்டு கமலம்மாவின் அறைக்கு சென்றனர்…

 

அழைத்து வந்தவருக்கோ இந்த பேச்சை எப்படி தொடங்க இதை எப்படி அவள் ஏற்கக்கூடும் என தன் சிந்தனையில் இருந்தவரை கமலம்மாளின் குரல் கலைத்தது ‘ மித்துமா… இந்த குடும்பத்த பத்தி நீ என்ன நினைக்கிற’ என்றவரின் அருகில் சென்றவள் அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து ‘ நான் நினைக்க என்ன இருக்கு பாட்டி… இந்த குடும்பம் எனக்கு எல்லா சொந்தத்தையும் மீட்டு கொடுத்திற்கு இன்னும் உண்மைய சொல்லனும்னா… நான் இங்க வந்த பிறகு ரொம்பவே சந்தோஷமா இருக்கேன்’ என்று கண்கள் கலங்க கூறியவள் அவர் மடியில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்….

 

சரி பாட்டி எதுக்கு இந்த தீடீர் ஆராய்ச்சி’ என மித்ரா கேட்க அவரோ ‘ எல்லாம் காரணமாத்தான் மித்துமா… சரி ஆதிய பத்தி நீ என்ன நினைக்கிற’  தீடீர் என்று இந்த ஆதி எங்கிருந்து வந்தான் என நினைத்தவள் அவன் மீது சற்று பயமிருந்தாலும் ‘ அவரு உங்க பேரன் பெரிய பிஸ்னஸ் மேன்’ அப்புறம் என்று பார்த்தவள் ‘ எனக்கு தெரிஞ்சவரைக்கும் சொல்லிட்டேன் பாட்டி’….வேற ஏதும் இல்லை என்றும் அவனை பத்தி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று நாசுக்காக அவனின் பேச்சை தவிர்த்தாள்

 

மித்துமா என்றவர் அவளது கையை பிடித்துக்கொண்டு இந்த குடும்பக் கௌரவத்தை நீதான்மா மீட்டெடுக்கணும் கமலம்மாளின் பேச்சு அவளுக்கு சுத்தமாக விளங்கவில்லை… தன்னால் எந்த வகையில் கௌரவத்தையும் மகிழ்ச்சியையும் மீட்டெடுக்க முடியும் என்று நினைத்தவளுக்கு இங்கு என்ன நடக்கிறது எனக்கு சுத்தமா புரியலையே என்று தன் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மேலும் என்னை குழப்ப வேண்டாம் என்பதுபோல் இருந்தது அவளது பார்வை….

 

தீபாவோ’ சரி நேரா விஷயத்துக்கு வருவோம்’ என நினைத்தவர் திருமண பெண்ணான நேஹா மண்டபத்தில் இல்லை என்றும் கே.கே குரூப்சின் இல்லத் திருமண விழா நின்றுவிட்டால் தன் குடும்ப மானம் ஊரார் முன் சிரிக்க வேண்டிய அவலம் வராமலிருக்க… அதே சமயம் எக்காரணத்தை முன்னிட்டு இத்திருமணம் நின்றுவிடாமல் குறித்த தேதியில் திருமணம் நடந்து வேண்டுமென்றும் குடும்ப கௌரவத்தை முன்னிறுத்தி இந்த முடிவை எடுத்தார்….

 

மித்ராவிற்கு பெரும் அதிர்ச்சியாக இருக்க… ஜெகாவின் விஷயத்திலும் தன் முடிவைக் கேட்காமல் தானே முடிவெடுத்தார்… இப்போதும் ஆதியுடனான இத்திருமணத்திலும் அவரே முடிவெடுத்துவிட்டார்…

 

தீபா மித்ராவின் கையைப் பிடித்துக்கொண்டு’ மித்துமா… நான் உன்கிட்ட கேட்கிற இந்த உதவிய மட்டும் செய்யுடா… உன்னோட தயக்கம் எனக்கு புரியுது… ஜெகாகிட்ட நான் பேசிக்கிறேன்… வேண்டாம்னு மட்டும் மறுத்துடாத  உன் கையை காலா நினைச்சி’ என்று முடிப்பதற்குள் ‘ ஐய்யோ அத்த… என்ன பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க… உங்களுக்காகவும் இந்த குடும்பத்துக்காகவும் என் உயிரைக்கூட கொடுக்க தயாராக இருக்கேன்…. இப்படி பெரிய வார்த்தையெல்லாம் பேசி ஏன் என்ன அந்நியப்படுத்துறிங்க’  அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிய தீபா அவளை ஆறுதலாய் அணைத்துக்கொண்டார்….

 

‘எனக்கு ரொம்ப சந்தோஷம் நீ இதுக்கு சம்மதிச்சதுக்கு…சரிடா போய் தூங்கு காலைல  சீக்கிரமா ரெடி ஆகணும்…. நீ போமா ‘ என்று அவளை அனுப்பி வைக்க மித்ராவின் மனதில் சூராவலியாய் ஆதியின் முகமே பிரவேசித்தது…

 

அப்போதுதான் அவள் கவனித்தால் இதை எப்படி நான் மறந்தேன் ஆதி நேஹாவை காதலித்தவன் இருப்பினும் தன்னை மணந்துக் கொள்ள எப்படி இதற்கு சம்மதித்தான்…. இதைப்பற்றி நான் எப்படி யோசிக்க மறந்தேன்… தன்னிடம் விருப்பத்தைப் பற்றி கேட்டறிந்தவர்கள் அவனிடம் கேட்டார்களா இல்லை கௌரவத்தின் அடிப்படையில் தன்னை சூழ்நிலை கைதியாக மாற்றிவிட்டானோ என்று நினைத்தவளுக்கு மனம் வலித்தது….

 

ஏன் அவன் தன்னுடனான திருமணத்தை ஏற்க வேண்டும்? அவன் தன்னை மனதார ஏற்றுக்கொண்டானா? இல்லை வெறும் கடமைக்காகவா? இல்லை அன்று அவன் கூறிய உரிமையை உணர்த்துவதற்காக இந்த திருமணமா? பல கேள்விகள் அவளுள் எழுந்து பேயாட்டம் போட்டது….

 

மங்கள கீதங்கள் முழங்க நாதஸ்வரங்கள் இன்னிசைக்க… மந்திரங்கள் உச்சரிக்க அவன் சிவந்த தேகத்திற்கு பொருத்தமாய் அமைந்திருந்த பட்டு வேஷ்டியில் அவனின்  கம்பீரம் சிறிதும் குறையாமல் ஆண்மைக்குரிய பேரழகில் கழுத்தில் மாலையோடு வந்து அமர்ந்தவன் மனம் நிறைவாய் இருந்தது…. எதையோ சாதித்து விட்டதுப்போல் உணர்ந்தான் அவளின் வரவிற்காக காத்திருந்தான்…

 

‘ நேரம் ஆயிடுத்து பொண்ண அழச்சிண்டு வாங்கோ’ என்று அர்ச்சகர் கூச்சலிட… சிகப்பு வண்ண அரக்கு நிறத்தில் அவளின் மேனிக்கு பொருத்தமாய்  இருந்த புடவையை அணிந்து மிதமான அலங்கரிப்பில் தேவதைப்போல் காட்சியளித்தவளின் அழகில் சொக்கித்தான் போனான் ஆதித்ய வர்மன்… பட்டு ஜரிகை மினுமினுக்க காலில் அணிந்திருக்கும் கொலுசு சப்தமிட புதுமண பெண்களுக்குரிய வெக்கமா இல்லை பயமா என்று விவரிக்க முடியாமல் அவள் முகூர்த்த மேடைக்கு வந்துக்கொண்டிருக்க…. அவளின் அழகை கண்களால் பருகியவன் அவனுள் பலவிதமான உணர்வுகள் எழுந்து அவனை ஆட்டிவித்தது….

 

வானுலக மங்கையர்களின் மொத்தழகையும் சேர்த்து வடித்த சிலைப்போல் காட்சியளித்தவள் மெல்ல நடந்து வந்து அவன் அருகில் அமர்ந்தாள்… பெண்ணுக்குரிய அச்சமும்,கூச்சமும் மேலொழுங்க அவனிடமிருந்து சற்று தள்ளி அமர்ந்தவளைக் கண்டவன் மனதில் அத்தனை நேரமிருந்த இணக்கம் குறைந்து அவள் மீது கோபம் கொண்டான்…

 

உத்திர நட்சத்திரம் சுபயோக சுபதினத்தில் விருட்சக லக்கனத்தில் முடிவு செய்த திருமணம் அமோகமாக நடக்க…

மாங்கல்யம் தந்துனானேன

மமஜீவன ஹேதுநா!

கண்டே பத்நாமி ஸுபகே

தவஜீவ சரதஸ்சதம்!!

 

கெட்டி மேளம் என்ற அர்ச்சகரின் குரல் ஒலிக்க அக்னியை சாட்சியாக வைத்து அவளது சங்கு கழுத்தில் தன் கரம்கொண்டு மங்கள நாணை பூட்டினான்…

 

அவள் முகத்தை கண்டவன் மேலும் கோபமானான்… ‘இப்ப எதுக்குடி முகத்த இப்படி வச்சிருக்க… என்ன ஜெகதீஷ் நியாபகமா’ என்றவன் அவளது நெற்றியில் குங்குமமிட சென்றவனின் கையில் அவளது கண்ணீர் துள்ளிப்பட்டுத் தெறித்தது…அதனைக்கண்டவன் அவளை திரும்பி பார்த்து… உன் கழுத்தில் தாலி கட்டுனது இந்த ஆதித்யா உன்னோட கணவன்… நீ என்னோட மனைவி அதாவது நம்ப பாஷையில் சொல்லனும்னா நீ  என்னோட உரிமை…என்ன புரிஞ்சதா’ என்றவனின் பேச்சில் மிகவும் அடிபட்டு போனாள்… மீண்டும் அவளது மனதை காயமாக்கினான் வார்த்தையால்…. அவன் கிடைக்க வேண்டுமென்று தானே அவள் தவமாய் தவமிருந்தாள் அவன் மீது உயிரையே வைத்திருப்பவளின் மனதில் உள்ளதை அறியாமல் கத்தியைவிட கூர்மையான வலிமை மிகுந்த நாவினால் அவளது மனதை குத்திக் கிழித்தான்…

 

அவளது காதலை இவன் உணர்வானா இல்லை வெந்நீர் ஊற்றி கருகச் செய்வானா பார்க்கலாம்…

 

நன்றி தோழமைகளே

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

திவ்யபாரதி

 

 

 
4 Comments