Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-15 & 16

 

அத்தியாயம் 15

 

திருமணம் முடிந்து அனைவரும் புதுமண தம்பதியுடன்  வீடு திரும்பினர்ஜாகுவார் xj காரில் தம்பதியனரை மட்டும் தனித்துவிடுத்து அனைவரும் முன்னே சென்றிக் கொண்டிருக்கஆதியும் மித்ராவுமின்றி அங்கு யாருமில்லாததால் ஊதக்காற்று முகத்தில் வீச தன் துன்பமெல்லாம் நீங்கிச் சொல்வதுப்போல் மனம் லேசாக உணர்ந்தாள் மித்ராகாரை ஓட்டுபவனோ நொடிக்கு ஒரு பொழுது தன் மனையாளின் அழகை கண்களில் நிரப்பிக் கொண்டு அவளை திரும்பிப் பார்த்துக்கொண்டே வாகனத்தை செலுத்தினான்….

 

பயணம் முழுவதும் இருவரிடமும் எந்த பேச்சுமில்லை பெருத்த மௌனமே நிலவியது அவளோ இயற்கையின் அழகை ரசிக்கும் வண்ணமிருக்க அவனோ தன்னவளின் அழகை அனு அனுவாக ரசித்துக் கொண்டு வந்தான்இருவரின் மௌன மொழி இவர்களை தாக்கியதோ இல்லையோ

 

இயற்கை அவர்களின் மௌனத்தை கலைக்க வேண்டுமென்ற முடிவுடன்கார்மேகங்கள் சூழ்ந்து வெளிச்சத்தை மறைத்து இருள் சுமந்த வெளிச்சம் போல் காட்சியளித்தது….

 

கார்மேகங்கள் சூழ்ந்திருந்த வண்ணம் காரின் கண்ணாடிகள் ஏற்றப்படாமலிருக்க மழைத் தூரல்கள் கொட்டத் துவங்கின

 

மழைச் சாரலைக் கண்டவளின் மனமோ சிறிது நேரம் முன்பிருந்த இறுக்கம் குறைந்து மனம் குதுகலிக்க ஆரம்பித்ததுதன்னை மறந்து தன் சுற்று புறத்தை மறந்தவள் மழையை ரசித்த வண்ணம் மழைச் சாரல் தன் முகத்தில் படுமாறு அதற்கு ஏதுவாக முன்னே நகர்ந்து சாரல் துளிகளில் தன் முகத்தை நனைத்தாள்

 

அவளின் செய்கையில் சட்டென்று திரும்பியவன் பார்வையில் அவளின் முகத்தில் மழை துளி பனித்துளிப்போல் காட்சியளிக்கஇயற்கையாகவே சிவந்திருக்கும் அவளின் அதரங்கத்தில் பனிக்காலத்தில் ரோஜாப்பூவின் மேல் பூத்திருக்கும் நீர்மணிகளைக் கண்டவன் தன் இதழ் என்னும் வண்டால் அவளின் சிவந்த அதரங்கம் என்னும் பூக்களில் உள்ள தேனை உருஞ்சுவதுப்போல் அவன் பார்வையில் மோகம் அப்பிக்கொள்ளசடாரென்று பிரேக்கை அழுத்தி காரின் வேகத்தை குறைத்து ஓரமாக நிறுத்தியவன்…. அவளின் புறம் திரும்பினான்….

 

கார் நின்றதைக் கண்டு தன் சுயநினைவிற்கு வந்தவள் அவனைத் திரும்பி பார்க்க அவன் கண்களில் வழிந்த தாபத்தை கண்டவள் தன்னையே நொந்துக்கொண்டாள்என்ன காரியம் செய்துவைத்திருக்கிறேன் நான்அவன் தன்னுடன் இருப்பதை எப்படி நான் மறந்தேன் என்று நினைத்தவளுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருக்க

 

அவளை கண்டவனுக்கோ உதட்டில் புன்னகை விரிந்ததுஅவளின் மனதினை படித்தவன் போல் அவளை நெருங்கினான்…. அவளோ கண்கள் படப்படவென அடித்துக்கொள்ள நெஞ்சம் முழுவதும் அச்சத்தில் தடதடவென துடித்துக்கொண்டிருக்கஅவளின் வெற்றிடையை பற்றி தன்னை நோக்கி இழுக்க இழுத்த வேகத்தில் அவன் மீது மோதியவளின் மென்மை அவனை சுயநினைவிழக்கச் செய்து வேக வேகமாக அவள் மென்பட்டு அதரங்களை தன் வலிமைவாய்ந்த இதழால் சிறை செய்தான்

 

பெண்ணவள் முழுவதுமாக அவன் வசம் சாய்ந்தாள்இவன் தன் கணவன் என்ற எண்ணம் மட்டும் மேலோங்கஅவன் வசம் தன்னை தொலைத்தாள்…. ஆடவனோ அவளிடமிருந்து வரும் பிரத்தேக நறுமணம் மற்றும் பெண்ணவளின் மென்மை அவனை தாக்க அவள் இதழ் வழியே கசியும் உயிர் தனக்கு மட்டுமே சொந்தம் என்றபடி அவளின் உயிரை உறிந்து தன் உயிருக்குள் பத்திரமாக பூட்டிவைத்தான்

 

உன் இதழ் ரேகையில் தேடுகிறேன்          என் ஆயுள்  ரேகையை

 

நீண்ட நேரம் கழித்தே அவனை தன்னிடமிருந்து விடுவித்தவன்…. அவளின் முகத்தை பார்த்தான் பெண்ணவளின் முகம் குங்குமமாய் சிவந்திருந்ததைக் கண்டவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்முதல் முறையாக முழு உரிமையோடு தன்னவளை அணுகியதை நினைத்து பார்த்தவனுக்கு மனம் நிறைந்தது….

 

அவளோ அவனை பார்க்க முடியாமல் தலைகுனிந்துக் கொண்டாள் ஒற்றை விரலைக் கொண்டு அவள் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவன்தன் முகம் காணச் செய்து பேபிநீஅன்னைக்கு கேட்டியே …. எனக்கு உன்கிட்ட  என்னஉரிமை இருக்குன்னுஅதுக்கு பதில் இப்போ சொல்றேன் கேட்டுக்கோஇதோ உன் கழுத்துல நான் கட்டுன தாலி இருக்குஅப்புறம் இப்போ நடந்தது இது எல்லாமே என்னோட உரிமையை உன் அளவில் உணர்த்தியாச்சிநானும் என்னோட உரிமையை  உன்கிட்ட நிருபிச்சிட்டேன்….இப்போ உன்னோட கேள்விக்கு பதில் கிடைச்சுது    இல்லையாஇகழ்ச்சியாக கூறி பலமாக சிரித்தான்

 

அவள் மனதில் ஊசினூல் தைப்பதுப்போல்    சுருக்கென்று வலித்தது….

 

அவளது கண்கள் நீர் கோர்த்து கலங்கிவிட்டது….’ அப்போ அவன் உரிமைக்காகதான் தன்னை மணந்ததுஅன்று தான் பேசிய வார்த்தையை வைத்துக்கொண்டு தன்னை பழிவாங்கத்தான் திருமணம் செய்துக்கொண்டானா!!!… என்என் காதலை அவன் புரிந்துக் கொண்டது அவ்வளவு தானா?…. தன் மனதினைப் பற்றி அவன் அறிந்துக் கொண்டது அவ்வளவு தானா? என்று நினைத்தவளுக்கு மனம் மருகியது தன் நினைவுகளில் இருந்தவளுக்கு எப்போது வீடு வந்து சேர்ந்தோம் என்றுக்கூட நினைவில்லை….

 

கருப்பு நிற ஜாகுவார் xj காரிலிருந்து கம்பீரமாக இறங்கியவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி பொங்கி வழிய மறுபக்கம் வந்து கார் கதவை திறந்தவன்அவளை உலுக்கிவீடு வந்துவிட்டது காரைவிட்டு இறங்க மனம் வரவில்லையா இல்லை இன்னும் கனவு நியாபகமாஎன்றவரின் வார்த்தையில் அசடுவழிந்தாலும் தன்னிலை உணர்ந்து காரைவிட்டு இறங்கும் சமயம் ஆதி அவள் அருகில் வந்தவன் அவள் தலை மீது கைவைத்து பாத்து இறங்கு இடிச்சிக்காதகரிசனத்துடன் கூறியவனின் வார்த்தையில் பிரமித்து நின்றாள்ஒரு நேரம் வார்த்தையால் சுடச் செய்கிறான்மற்றோரு நேரம் தன் மனதினை குளிர்விக்கிறான்இவனை நான் எப்படி புரிந்துக் கொள்ளவது என யோசித்தவள் பெரு மூச்சு ஒன்றை வெளியிட்டுகாரை விட்டு இறங்கினாள்….

 

இவர்களின் வரவுக்காக காத்திருந்தவர்கள் போல்தீபா கண்ணம்மாவை அழைத்து ஆரத்தி தட்டை எடுத்து வரச் செய்தார்கண்ணம்மா கையில் ஆரத்தி தட்டோடு நிற்க அவரை மட்டுமின்றி தீபா,வர்ஷா,கமலம்மாள் தீபாவின் கணவர் வெங்கட்ராமன் என அனைவரும் காத்துக்கொண்டிருக்க….

 

காரிலிருந்து இறங்கியவள் ஆதியை கடந்துச் செல்லஅவளைத் தடுத்தவன் அவளை தன்னோடு இருக்கி தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் அதே நிலை மாறாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்

 

இருவரையும் ஒன்று சேர நிறுத்தி ஆரத்தி எடுத்துக்கொண்டு கண்ணம்மா சென்றுவிட…. கண்ணம்மாவை தொடர்ந்து தீபா  அவர்களின் அருகில் வர ஆதி தன்னை அணைத்துக்கொண்டு நிற்பது கூச்சமாக இருக்கஅவள் சங்கோஜத்துடன் நெளிய ஆரம்பித்தாள்அவனோ என்ன என்று ரகசியமான குரலில் அவளது காதுக்கருகில் சென்று வினவ….

 

அவளோ கையை எடுங்க பாவாஅத்த மாமானு எல்லோரும் இருக்காங்கஇப்ப நீங்க கைய எடுக்கப் போறீங்களா இல்லையாஎன அவனை மிரட்டும் பாணியில் கேட்க அவனோ அவளின் பாவா என்றழைப்பில் உருகி  நமட்டு சிரிப்புடன் அவள் மீதிருந்த தன் கையை சற்று விலக்கினான்அவளுக்கு நினைவில்லை அவனை தான் பாவா என்று அழைத்ததுஅவனோ கையை எடுத்தபாடில்லைஅவன் செய்துக் கொண்டிருக்கும் வேலையை கண்டவள் வெளியில் கோபம் போல் காட்டிக்கொண்டாலும்உள்ளுக்குள் அதனை ரசிகத் தொடங்கினாள்….

 

தீபா மித்ராவை அழைத்து வலதுக்கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் வருமாறு கூறமித்ரா தன் வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே வந்தவள் நேராக பூஜையறைக்கு சென்று விளக்கேற்றி கடவுள் முன் நின்று வேண்டினாள்இத்திருமணம் அவசரத்தால் நடந்ததோ இல்லை தன் பாவாவின் சுயநலத்தால் நடந்ததோ எதுவாக இருந்தாலும் சரிஇது உண்மையான திருமணம் என்பதால்தங்களுக்கும் தன் குடும்பத்துக்கும் எந்த பாதகம் வராமலிருக்க வேண்டும்என்று மனதார வேண்டிக்கொண்டாள்….

 

கர்மசிரத்தையாக கடவுளிடம் வேண்டும் தன் மலையாளின் அழகு அவனை சுண்டி இழுக்கசுற்று புறம் அறிந்து தன்னை சமாளித்துக் கொண்டான்பூஜையை முடித்துக்கொண்டு வெளியே வருபவளுக்காக காத்திருந்தவன் போல் அவளுடன் இணைந்து கமலம்மாளின்றி தீபா வெங்கட்ராமனின் ஆசியையும் சேர்ந்தே பெற்றனர்….

 

பதினாறு செல்வங்கள் பெற்று பெரு வாழ்வு வாழ்க ஆசீர்வதித்த சமயம் ஆதித்ய வர்மன் மித்ராவின் காதில்பதினாறு போதுமாடிநான் நிறையால எதிர்பாத்தேன்என்று கூற அவளது முகம் அந்திவானமாய் சிவந்தது…. இதனை கண்டவர்களின் மனதில் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது….

 

கமலம்மாவிற்கு மனம் நிறைந்தது ஒரு கடமை முடிந்த மகிழ்ச்சியில் இருந்தார்பின்னே ஆசை பேரனின் வாழ்வு திசைமாறி சென்றுவிடுமோஎன்று எண்ணியவருக்கு மித்ராவைப்போல் அன்பும்,பாசமும் நிறைந்த நல்ல குணவதி பெண் தன் பேரனுக்கு மனைவியாக கிடைத்த சந்தோஷத்தில் மகிழ்ச்சி கடலில் மூழ்கினார்

 

ஆதியையும் மித்ராவையும் தனக்கு அருகில் அழைத்தவர் ஆதியின் கையை எடுத்து மித்ராவின் கையோடு இணைத்தவர் ஆதி கண்ணா இன்னைக்கு கோர்த்த இந்த கைய என்னைக்கும் விட்டுறாத கண்ணாஎன்றவரை ஆழ்ந்து பார்த்தவன் பாட்டி என் பொண்டாட்டிய பாத்துக்க எனக்கு தெரியும்நீ இதுல இந்த மகாராணிக்கு ரெக்கமெண்டேஷன் வேறையா என்று கூறி சிரித்தான்…. அவரோ எப்படியோ உன் பொண்டாட்டிய பத்திரமா பாத்துகிட்டாசரிதான்டா என்பவரை வம்பிழுக்கும் பாணியில் அட பாரு பாட்டிநான் வேற இவள காக்கா தூக்கிட்டு  போயிரும்னு இரும்பு வலையெல்லாம் செய்ய சொல்லிருக்கேன்நீ கவலைய விடுஎன்று கூறியவனின் வார்த்தையில் விஷமங்கள் பொங்கி வழிய

 

கமலம்மாவோ சரியான போக்கிரி படவாஎன்று நினைத்தாலும் அவர்களை மனமார்ந்து வாழ்த்தினார்

 

மணமக்களுக்கு பால் பழம் கொடுத்து சடங்குகள்  அனைத்தையும் முடித்துமித்ராவை எளிமையாக அலங்கரித்து பருத்தி புடவையை அணிவித்துதலைநிறைய மல்லிகைச் சரத்தால் அலங்கரித்து கையில் பால் சொம்புடன்ஆதியின் அறைக்கு அனுப்பிவித்தார் தீபா

 

மித்ராவிற்கோ இது வரை நடந்ததெல்லாம் கனவு போலும் நடந்துக் கொண்டிருப்பதையும் நம்ப முடியாமல் ஏதோ கனவு உலகில் சஞ்சரிப்பதுப்போல் தோன்றஆதியின் செயலைக் கண்டவளுக்கோ மனதில் பயம் குடிக்கொண்டதுஇப்போது அவன் தன்னை என்ன செய்ய காத்துக் கொண்டிருக்கிறானோ என்று நினைத்தவளுக்கோ உடல் முழுவதும் வியர்வை துளிகள் பூக்கமிகுந்த அச்சத்துடன் ஆதியின் அறையை நோக்கிச் சென்றாள்….

 

 

அத்தியாயம்16

 

இதையாவும் தெரியாத தினேஷ் ஆதியின் திருமணம் தன் திட்டப்படி நிறுத்தியாயிற்று என்றும் அவனுக்கு தலைகுனிவு ஏற்படுத்தியாயிற்று என நினைத்தவனுக்கு ஆதியின் சொல்ல முடியாத நிலையை கண்குளிர காணவேண்டும் என்று எண்ணியவன்அவனின் விரக்கத்தியான குரலையாவது கேட்டு மகிழலாமென்று  தோன்ற அவன் எண்ணிற்கு தொடர்புக்கு கொண்டான்

 

ஆதியோ மித்ராவின் வரவுக்காக காத்துக்கொண்டிருந்தவன் தனது அலைபேசி அலருவதைக் கண்டவன் யாரென்று பார்க்க தினேஷ் என்ற பெயரை கண்டவன் ருத்ரமூர்த்தியாக மாறிப்போனான்

 

தனது அலைபேசியை உயிர்பித்து காதில் வைத்தவன் தினேஷின் சிரிப்பு சத்தத்தில் மிகுந்த கோபம் கொண்டு பற்களை நரநரவென கடித்து தன் கோபத்தை அடக்கியவன் இப்ப எதுக்குடா போன் பண்ணஎன்றவனின் குரல் கோபமாய் ஒலிக்க ஹாஹான்…. ஆதி மரியாத மரியாதையா பேசுஎன்க தினேஷின் குரலில் கடுப்பானவன்உனக்கெல்லாம் என்னடா மரியாதை வேண்டி கிடக்குசொல்லவந்த விஷயத்தை சொல்லிட்டு போனை வைமிகுந்த கோபம் கொண்டு கர்ஜித்தவனின் வார்த்தைகள் பற்களுக்கிடையில் கடித்துத் துப்பினான்

 

என்ன ஆதி ரொம்ப சூடா இருக்க போலஅப்பா இங்க வரைக்கும் சுடுது ஆதிஎவ்வளோ ஹாட்டா இருக்க செல்லம் இவ்ளோ கோவம் வந்தாஉன்னோட உடம்பு தாங்காதுபோபோய் தண்ணிக்குடி செல்லம்என அவனை மேலும் வெறுப்பேற்றியவன்… ‘ மீண்டும் சரி சரி ரொம்ப கோவப்படாத உன்னோட கல்யாணம் நின்றதுக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள்என்று கூறி முடிக்கும் முன் ஆதித்யவர்மன் தன் சிரிப்பை அடக்க பெரும்பாடுப்பட்டு சத்தமாக சிரித்தான்அவனின் சிரிப்பை கண்டவனுக்கோ ஒன்றும் புரியாமல் அமைதிக் காத்தான்

 

…. ஹலோ தினேஷ் இருக்கியாஎன்று தன் சிரிப்பின் ஊடே கேட்டவன் தினேஷின் அமைதியை கண்டு இன்னும் சிரிப்பு பீரிட தாங்ஸ் தினேஷ்உன்னோட ஆழ்ந்த அனுதாபத்திற்குஎன்ன தினேஷ் அந்த நேஹா அங்க வந்தாளாரொம்ப நல்லது என்னோட வேலைய நீ ரொம்ப சுலபமாகிட்ட உனக்கு நன்றி சொன்னா மட்டும் பத்தாதுஏதாவது பெருசா செய்யணுமே…. ஹ்ம்ம்…. என்ன செய்யலாம்ஹ்ம்ம்எஸ் உன்னோட  இம்போர்ட் பிஸ்னெஸ் எப்படி போதுநான் கேட்கவே மறந்துட்டேன் அப்புறம் உங்க அப்பா நலம்தானேநான் கேட்டதா சொல்லுதினேஷுக்கு சர்வமும் அடங்கியது அவன் என்ன பேசிக்கொண்டிருக்கிறான்.. ஒருவேளை தன்னை மிரட்டுகிறானோ இதில் பிஸ்னசும் தன் தந்தையும் வந்ததின் காரணம் புரியாமல்என்ன ஆதி என்ன சொல்ற கொஞ்சம் தெளிவான பதில் வேண்டும்என்றவனின் வார்த்தையில் திமிரும் தெனாவட்டும் அப்பட்டமாக காணப்பட

 

ஆதியோஉன் திமிர தெனாவட்ட அடக்கலைனா நான் ஆதித்ய வர்மன் அல்லவே என நினைத்தவன்எவ்ளோ அசிங்க பட்டாலும் திருந்த மாட்டேங்கிற தினேஷ் செல்லம்நீ போட்ட பிளான்லநீயே விழுந்திட்டியேசோசேட்அவ எங்க அங்கதான் இருக்காளா இல்ல உன்னோட பூச்சாண்டி தனத்த பாத்து ஓடிட்டாளாதினேஷ் நீ எட்டடி பாஞ்சா நான் முப்பத்திரண்டு அடி பாயுவேன் உன்னோட பிளான் எனக்கு முன்னவே தெரியும் கல்யாணம் வரைக்கும் கொண்டு போறதுதான் என்னோட பிளானும்பட் நீ எதிர் பார்த்த மாதிரி கல்யாணம் நிக்கலகுறிச்ச தேதில அதே முகூர்த்தத்தில் நடந்து முடிஞ்சிருச்சிஇந்த ஆதிகூட மோதுறதுக்கு ஒரு தராதரம் வேண்டும் தினேஷ்தராதரம் பார்த்து மோது சரியாசோ இப்போ நீ என்னோட மூட கெடுக்காம போன வச்சிட்டுபோய் யோசி அடுத்து என்ன பண்ணலாம்னுசில்லி தனமா உன்னோட ரேஞ்சுக்கு யோசிக்காம இந்த ஆதியோட லெவலுக்கு யோசிசரியா செல்லம்இன்னக்கி வேற எனக்கு ப்ர்ஸ்ட் நைட்நீ சொன்னமாதிரி நான் ரொம்ப ஹாட்டா தான் இருக்கேன்என்னோட ரொமான்டிக் மூட கெடுக்காதஎன்றவன் தாமதிக்காது அலைபேசியை துண்டித்து தன் அறைக்குள் நுழைந்தவனின் பார்வையில் தன் மனையாள் படஅத்தனை நேரமிருந்த கோபம் எல்லாம் மறைந்து நிர்மலமான மனதுடன் தன் மனைவியை நோக்கி காலடி எடுத்து வைத்தான்

 

அவனோ  அவளின்  அருகில் வர நெஞ்சு கூட்டிற்குள் இருக்கும் இதயம் வெளியே வந்து விழுந்துவிடும் அளவிற்கு துடித்ததுஅவனை கண்டவள் பால் சொம்பை மேஜை மீது வைத்துவிட்டு அவன் காலில் விழ போனவளை சட்டென்று தடுத்தவன் அவளின் முகத்தை கூர்ந்து பார்த்தான்அவள் கண்ணில் அவன் அன்று கண்ட காதல் துளியுமில்லை மாறாக பயமும்,கடமையும் மட்டுமே மாறி மாறி காணப்பட்டது

 

அவளை தன்னுடன் அழைத்து வந்தவன் கட்டிலில் அமரச் செய்து பேபி நமக்குள்ள இனிமே இந்த மாதிரி பார்மல்டிஸ்லாம் வேண்டாம் பேபிஎன்றவன் திடுமெனஹேய் என்ன நீ என் ரூம்குள்ள என்ன கேட்காம வந்துட்டஎந்திரிடிபரஸ்ட் என் ரூம விட்டு வெளில போடிஎன்று கோபம் கொண்டு பேசுபவன் போல் அவனை செல்லமாக மிரட்டியவனின் பேச்சில் அவள் உண்மையென நம்பி வெடுக்கென்று கட்டிலிருந்து எழுந்தவள்இப்பவோ அப்பாவோ என்று கண்களிலிருந்து கீழே விழ தயாராக இருந்தது அவளது கண்ணீர்மிக சிரமப்பட்டு தன்னை தேற்றிக்கொண்டவள்…. அவன் முகம் காணாது வெளியே சென்றவள் அவன் அறையை விட்டு வெளியே வந்தவளை திடுமென இரண்டு வலிய கரங்கள் தன்னை எந்திக் கொண்டதை தொடர்ந்து

 

அவளோ இந்த திடீர் தாக்குதலில் சற்று தடுமாறியவள் சட்டென்று தன் கைகள் அவன் கழுத்தில் மாலையென  கோர்த்துஅவனின் அகன்ற மார்பில் தன் முகத்தை புதைத்துஅவனின் ஸ்பரிசத்தை தன்னுள் நிரப்பியவள் அவனை நிமிர்ந்து பார்க்கஅவனின் விஷமம் நிறைந்த சிரிப்பை கண்டவளுக்கோ அந்த மாயக்கண்ணனே தன் முன் தோன்றியதுப் போல் உணர்ந்தவள்தன் கீழுதட்டை கடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்

 

அவனோ அவள் பற்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட அவளின் அதரங்கத்தை கண்டவன்பேபி அதபோட்டு ஏன் இந்த பாடு படுத்துறஅது என்ன பாவம் பண்ணிச்சிஎன்று கூறியவன் அவளின் சிவந்த அதரங்கத்திற்கு அவள் கொடுக்கும் தண்டனையிலிருந்து விடுத்தவன்

 

அவளை தன் கைகளில் ஏந்தியவன் அவளிடம் குனிந்து தன் காதல் பொங்கும் விழிகளால் அவளைப் பார்த்து தன் ஒட்டுமொத்த காதலையும் அவள் உணர வேண்டுமென்று எண்ணியவன் அவளிடம் வெல்கம் டூ அவர் ரூம் பேபிஅவள் காதில் கிசுகிசுப்பான குரலில் கூறியவனை கண்டவள் தன் முட்டைக் கண்ணை விரித்து வைத்து அவனைப் பார்த்தாள்ஹேய் பேபி…. பாத்து கண்ணு வெளியே விழுந்துற போதுபரஸ்ட் மீ டூ சொல்லு நான் உன்ன நம்ப ரூம்க்கு வெல்கம் பண்ணிருக்கேன்சோ சொல்லு பேபிநீ சொன்னதுக்கு அப்பறம் உன்னோட பார்வையால் என்னை கபளீகரம் பண்ணிக்கோஐயோ தன்னை கண்டுக்கொண்டனே என்று எண்ணியவள் அவனைப் பார்க்க அவனோ  தன் பேச்சில் இரும்பு பிடியாக நின்றான்….

 

அவளோ அவனின் குணம் அறிந்திருந்ததால் மீ டூ பாவா என்றவள் தன் நாக்கை கடித்துக்கொண்டு சா..சாரி தெரியாம சொல்லிட்டேன்என இறைஞ்சும் பார்வையில் கூறியவளை கீழே இறக்கி விட்டவன்இப்ப எதுக்கு சாரி கேட்ட? ‘ என்றவனின் புருவம் கேள்வியால் மேலே எழுந்து நிற்க அவன் கோபம் கொள்கிறானோ என்று பார்த்தவளுக்குஅவன்  முகத்தில் எந்த வித உணர்ச்சியும் வெளிக்காட்டாமலிருக்க நான்நான் உங்கள பாவானு சொன்னேன் அதுக்குத்தான்…. சாரி கேட்டேன் என்றவளோ அவன் முகத்தை பார்த்து பதில் பேசாதுஅங்குள்ள பொருட்களை பார்த்து கூறியவளை தன் முகம் காணச் செய்து…. உன் பாவா இங்கிருக்கேன்இங்க பாத்து பேசு….

 

சாரிங்கநான் அப்படி கூப்பிட்டதுக்குதெரியாம சொல்லிட்டேன்மன்னிப்பு கேட்கும் குரலில் கெஞ்சியவளை கூர்ந்து பார்த்தவன்பேபி நீ கூப்பிட்டது இது முதல் தடவ இல்ல பேபிகீழ வச்சும் நீ இப்படித்தான் கூப்பிட்டஎன்க அவனைப் பார்த்து அவள் பேந்த பேந்த விழித்தாள் அவனோ பேபி நீ என்ன அப்படியே கூப்பிடுஎனக்கு இதுதான் ரொம்ப பிடிச்சிருக்குநீ எனக்கு தரும் தனி உரிமை….. எனக்கு மட்டும் சொந்தமான உரிமைஎன்றவன் அவளை பார்த்து கண்ணடித்து கூறினான் ரொம்ப டயர்ட் இருக்கே பேபி வா தூங்கலாம்என அழைக்க அவளோ நான் இங்கையே கீழையேஎன்றவளின் பேச்சு தடைபெற்றதுஆதியின் கோபக்கணல் பார்வையை சந்தித்தவள் மௌனமாய் நின்றாள் இங்க பாரு பேபி …. இனிமேட்டு நீயும் நானும் வேறல்லஎனக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை உனக்குமிருக்குநீ என்னோட பாதிநமக்கிடையே எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது’… அதாவது நீ என்னுள் சரிபாதி என்றவன் மேலே பேசாமல் அவளை அழைத்துக்கொண்டு உறங்கச் சென்றான்

 

அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றவள்அவனின் செயலைக் கண்டு விக்கித்து நின்றதுதான் மிச்சம்அவனை கணக்கிட முடியாமல் பாவையவள் குழம்பி நின்றாள்அவனோ உறங்கி விட்டான்பெண்ணவளின் நினைவுகள் முழுவதும் தன்னவனை சுற்றிக்கொண்டிருக்கஆதித்ய வர்மன் அவளுக்கு புரியாத புதிராக??? இருந்தான்

 

மித்ராவை அனுப்பிவைத்துவிட்டு தன் அறைக்கு வந்தவர் முகத்தில் சந்தேக ரேகைகள் சுமந்திருக்கதன் மனையாள் குழப்பத்தில் இருப்பதை உணர்ந்த வெங்கட்ராமன் என்ன என்பதுபோல் கேள்வி எழுப்ப அவரோஇல்லைங்கநான் என்ன நினைக்கிறேனாஎன்பவரின் தோளைத்தொட்டுஎனக்கு புரியுது நீ என்ன நினைக்கிறேன்னுநம்ப ஜெகாக்கு என்ன பதில் சொல்றதுனு தான யோசிக்குறஅவன் நம்ப பையன்மாஎன்னைக்கும் தப்பா நினைக்க மாட்டான்என்று கூறியவரை நிமிர்ந்து பார்த்தவர்இல்லைங்க எனக்கு பயமா இருக்கு அவன் இது வரைக்கும் என்கிட்ட இந்த மாதிரி எதுவும் கேட்டதும்மில்லஆனா எனக்கு ஒன்னும் மட்டும் புரியல்லநீங்க ஆதிய கவனிச்சீங்களா இல்லையான்னு எனக்கு தெரியலஆனா நான் அவன கவனிச்சிக்கிட்டுத்தான் இருந்தேன்

 

நேஹா மண்டபத்தில் இல்லைனு தெரிந்த முதல் மித்ராவை திருமணம் செய்யும் வரை அவனிடம் எந்த வருத்தமுமில்லை மாறாக அவனிடம் மகிழ்ச்சி மட்டுமே காணப்பட்டதுஎன்று கூறியவர் தன் கணவரைப் பார்க்க

 

நீ சொல்றது உண்மையா இருந்தா எனக்கு இதைவிட சந்தோஷம் வேறு எதுவும் இல்ல தீபாஎன்றவரை புரியாமல் கேள்வியால் பார்க்கஉண்மைதான் தீபாஏன்னா நம்ப ஜெகாவுக்கு ஒண்ணுனா ஆறுதல் சொல்ல அம்மாவா நீயிருக்கதோல் கொடுத்து சாய தகப்பன் நானிருக்கேன்….ஆனா ஆதித்யா பத்தி யோசிச்சி பாரு விவரம் தெரியும் முன்னே தாய் பாசத்தையும் இழந்தான்விவரம் தெரிந்த பின் தந்தை பாசத்தையும் இழந்தான் அவனுக்கு நல்லது கேட்டது செய்தாலும் சொல்லிக்கொடுத்தாலும்தாய் தந்தை பாசத்துக்கு ஈடாகுமா இல்ல நிகராகுமா

 

அதுமட்டுமில்லாம சாந்தி செய்த வேலையாள இந்த சமுதாயத்தில் அவன் அடைந்த வேதனை கொஞ்சமா தீபாஅவன் மித்ராவை மணந்த போது துளிக் கூட என் மனதில் வருத்தமில்லை மாறாகபாலைவனமாக இருந்த அவன் வாழ்க்கையை புதுப்பித்து சோலைவனமாக மாற்ற வந்தவள் என்றும் மித்ராதான் ஆதிக்கு ஏற்ற பொருத்தமென்றும் என் மனம் மகிழ்ந்ததுஎன்று தன் மனதில் தோன்றியதைக் தன் மனைவியிடம் கூறியவர் தன் மனையாளைப் பார்த்து நீ ஒரு அம்மாவா அவனிடத்திலிருந்து யோசிக்கிற எனக்கு புரியுது உன் மனசு சொன்ன வார்த்தையை காப்பாத்த முடியாம என்ன பாடுபடும்னு என்னால புரிஞ்சிக்க முடியுதுஇருந்தாலும் தன்னலம்மா யோசிக்காம பொதுநலமா யோசிச்சா உனக்கே புரியும்நீ செய்தது தப்பே இல்லனும் சரியாதான் செய்திருக்கனு உன் மனசு சொல்லும்

 

ஜெகா இந்தியா வர வரைக்கும் மித்ராபத்தியோ ஆதிபத்தியோ இங்கு நடந்த கல்யாணத்த பத்தியோ எதுவும் பேச வேண்டாம்தெரியவர நேரத்தில் தெரிந்தால் போதும்அவனே அதப்பத்தி கேட்டாலும் உளறி வைக்காதபிஸ்னெஸ் பீல்டுல எவ்வளவோ பேர சமாளிச்சது பெருசு இல்லநம்ம மகனை எப்படி சமாளிக்கலாம்னு யோசிஎன்றவர் தீபாவை எதுவும் யோசிக்காமல் உறங்கச் சொல்லிச் தானும் உறங்கச் சென்றார்

 

ஆதியை பத்தி யோசித்தவர் நான் எப்படி மறந்தேன் அவனின் நிலையைதனக்கு என்று வரும் போது தான் அந்த இடத்தில் பொதுநலம் தன்னலமாக உருமாறி சுயநலமாக பிரவேசிக்கிறதுதன் பிள்ளைக்கு ஒரு அன்னையாக மட்டும் யோசித்த செயலை தன் கணவன் கூறியதை வைத்து பார்த்தவர் பசிவந்தால் வேறு வேறு வயிறுதான் என்பதை தானும் உணர்த்திவிட்டேன் போலும்தானும் சுயநலத்தின் அடிப்படையில் சிக்கிக்கொண்டதை நினைத்து தனக்குள் வெட்கினார்கண்களிலிருந்து கண்ணீர் பெருகமனதளவில் மனதார ஆதியிடம் மன்னிப்பு கேட்டார்

 

நன்றி தோழமைகளே

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

திவ்யபாரதி
12 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Karthikaa Radhakrishnan says:

  Mam next ud yeppo mam


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya bharathi says:

   Hai mam on the way mam five episodes


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Hi mam next epi eppo than poduvinga. Ple regulara update panunga ples


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Meena PT says:

   next update on nov28 will give regular updates after that


   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Rajee Karthi says:

    OK tq pa


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya bharathi says:

   Hai sister sorry sister konjam velaiya la vara mudila 5 episode sethu potruken sister varum sister


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thaya Seelan says:

  Wow pls update next part


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya bharathi says:

   Thanks mam


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  r.sharmila r.sharmila says:

  nice ud


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya bharathi says:

   Thanks mam


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Fathima Muthu says:

  Super sis


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya bharathi says:

   Hai mam sorry for late reply unga msglam yenaku ippothan arrive aagudhu😓

error: Content is protected !!