Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal episode 27

உயர் அதிகாரி கிளம்பியதும் ராஜன் தனது வண்டியில் கடைக்கு கிளம்பினான். ‘ஒன்னேகால் மணிநேரம் காத்திருந்திருக்கிறாள் ஸ்ரீ’ என்றது அவன் கைக்கடிகாரம். அவ்வளவு நேரமா? இருக்காது! என்று கடையின் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை அவன் பார்த்தபோது அதுவும் ‘உன் கைக் கடிகாரம் சரியாதத்தான் சொன்னது.’ என்று அவனைப் பார்த்து இளித்தது.
ஒன்றும் பேசாமல் அமைதியாகச் சென்று பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு அவளிடம் மூன்று நிமிடங்களுக்கு பிறகே “வா ஸ்ரீ போலாம். ” என்றான். ஸ்ரீ நகராமல் தரையைப் பார்த்து நிற்கவும் “லேட் ஆகிடுச்சு. டி.ஐ.ஜி கூப்பிடும்போது போகாமல் இருக்க முடியுமா சொல்? ” என்றான்.
ஸ்ரீ ஒரு எட்டு எடுத்து வைத்ததும் அப்பாடா என்று மூச்சு வாங்கியவன் வெளியே சென்றதும் துரையை அருகில் அழைத்து ஏதோ பேசினான். சிறிது நேரத்தில் துரை கிளம்பினார்.
செல்லும் வழியில் ராஜன் நான்கு இட்லி வாங்கினான். வீட்டிற்குள் சென்றதும் ஸ்ரீ ராஜனிடம் ஒன்றும் பேசவில்லை. வீட்டிறகுள் நுழைந்ததும் வாங்கி வந்த பார்சலைப் பிரித்து தான் வாங்கியதை எடுத்துக்கொண்டு நேராக பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.
ராஜனுக்கு சங்கடமாக போய்விட்டது. ‘ச்ச! மடையன் போல நடந்துட்டேன். அவர் சாப்பிடக்கூப்பிட்டபோது போகாமல் இருந்திருக்கணும். அவள்தான் எனக்கு ஒன்று அவசரமாக வேணும் என்று சொன்னாளே?’ என்று யோசித்தவாரே கையில் இருந்த கைப்பேசி திரையை பார்ப்பதுபோன்ற போலியான செய்கையில் ஈடுபட்டான்.

மறுநாள்
மறுநாள் ஸ்ரீயிடம் தானாக வந்து பேசினான். ஸ்நேகாவை அவனாக ஃபோன் போட்டு அழைத்து அவளிடம் துணையிருக்கச் சொன்னான். காலை இட்லிக்குப் பதில் பொங்கல் வந்தது. மதியம் ஒருநாளும் வராத பிரியாணி வந்தது. காரணமாக ‘ஸ்நேகா இருக்கால்ல’ என்றான். பகலில் அவள் பொழுதுபோக்க என்று சொல்லி கடல்புறா யவனராணி புத்தகங்களைக் கொண்டுவந்து அவள் கைகளில் திணித்தான். இது சிடுமூஞ்சி ராஜனா? என்று ஸ்ரீயை பலமுறை தன்னிடம் கேட்க வைத்தான். ஒருநாள் அவன் டியூட்டிக்கு லேட்டானபோது தனது யுனிஃபார்மை அயர்ன் செய்யச் சொன்னான். அதுவும் ஒரு ‘ப்ளீஸ்சுடன்.’ ஸ்ரீ லேசான சுருக்குடன் அயர்ன் செய்தபோதும் ஐயாதுரை ஒன்றுமே சொல்லவில்லை தாங்ஸைத் தவிர எதுவுமே சொல்லவில்லை.
அந்த இரண்டு நாட்களில் ஸ்ரீக்கு அவள் கைகளை கிள்ளிப்பார்ப்பதைவிட ராஜனின் கைகளை கிள்ளிப்பார்த்தால்தான் நடப்பது நிஜமா? அல்லது கனவா? என்று புரியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையே வந்துவிட்டது.
கிள்ள நான் ரெடி நீ ரெடியா? என்றுகூட அவள் கைகள் அவளிடம் கேட்டபோது எங்கே ஆர்வக்கோளாறில் கிள்ளிப் பார்த்துவிடுவோமோ என்ற பயத்தில் அறைக்குள் ஓடி தாமாகவே
ஒளிந்துகொண்டாள். அங்கேயும் ஒருநாள் ராஜன் வந்தான். அவள் கட்டிலில் படுத்திருக்கும்போது என்றுமே உள்ளே வராதவன் அன்று வந்தான்.
அவளிடம் ரொம்ப முக்கியம் போல இரண்டு புதுப் பட டி.வி.டி கொடுத்துவிட்டு “போயிட்டு வர்றேன். ” என்றான்.
சினிமா படங்களை என்றுமே ரசித்துப்பார்க்காதவளால் அந்த படங்களை பார்க்கும்போதே தூக்கம் தூக்கமாக வந்தது. அப்படியே வசதியாக ஹாலில் படுத்து தூங்கிவிட்டாள். ராஜனுக்குதான் அது வசதியாக இல்லாமல் போய்விட்டது. தண்ணீர் குடிக்க பாத்ரூம் போக காலையில் கதவைத் திறக்க என்று போன போதெல்லாம் ஸ்ரீயின் கழுத்தும் இடுப்பும் கால்களும் தெரியவேயில்லையே..
ஆனால் ஏதாவது கண்ணில் பட்டுவிடுமோ என்று அவன் பயந்து பயந்து அவளைக் கடந்ததால் ஸ்ரீ அங்கே படுத்தது அவனுக்கு வசதியில்லாமல் போனது. கடுகளவுகூட வசதியில்லாமல் போனது.
ஒரு நாள் அமைதியாக கழிந்தது. ஆனால் அந்த அமைதி அந்த வீட்டின் சுவர்களுக்கே பிடிக்கவில்லைபோலும் மறு நாளே இருவருக்கும் வாக்குவாதம் தொடங்கியது.
“ஸ்ரீ இந்த பேப்பர்ஸில் சைன் பண்ணு.” என்று அவள் முன்னே வந்து நின்றான் ராஜன்.
“எதுக்கு? ”
“பவித்ராவின் டெட் சர்டிபிகேட். ”
“ஓ! பவித்ரா கேஸ்? ”
“அதை முடிச்சாச்சு. அக்சிடென்ட் கேஸ் என்று முடிச்சாச்சு. ”
“அப்படின்னா நான் சைன் பண்ணமாட்டேன். உனக்கு இது சரின்னு படுதா? ”
“எனக்கென்னவோ சரின்னுதான் படுது. அவள் மேலதான் பணம் திருட்டுப்போன கேஸ{ம் இருக்கு. அவள் இறந்ததை உறுதி செய்தால் நாலு நாளில் பணம் தொலைந்த கேஸையும் மூடிடலாம். உன்னையும் எப்படியாவது தப்பிக்க வைத்திடலாம். ”
“அவள் பணத்தை திருடல. கௌன்சிலர் மச்சினன் திலிப்தான் கொடுத்தான். நாற்பது லட்சமோ ஒரு கோடியோ இல்லை. எட்டு லட்சம் தான் கொடுத்தான். ”
“அந்த எட்டு லட்சம்? ”
“அதை பவித்ரா எங்க வச்சிருந்தாள் என்று எனக்கு தெரியாது. அவள் இறந்த நாளில் அம்மாவும் இறந்துவிட்டதால் அந்தப் பணத்தை தேடக்கூட டைம் இல்லை. இறுதி சடங்கிற்கு கூட மத்தவங்ககிட்ட கையேந்திதான் நின்னுகிட்டுயிருந்தேன். கையில காலில இருந்ததை விற்றுதான் சடங்கையே செய்தேன். உனக்கும் விசாரிச்சப்ப இது தெரியும்தானே? ”

“அந்த எட்டு லட்சம்? ”
“அதை பவித்ரா எங்க வச்சிருந்தாள் என்று எனக்கு தெரியாது. அவள் இறந்த நாளில் அம்மாவும் இறந்துவிட்டதால் அந்தப் பணத்தை தேடக்கூட டைம் இல்லை. இறுதி சடங்கிற்கு கூட மத்தவங்ககிட்ட கையேந்திதான் நின்னுகிட்டுயிருந்தேன். கையில காலில இருந்ததை விற்றுதான் சடங்கையே செய்தேன். உனக்கும் விசாரிச்சப்ப இது தெரியும்தானே? ”
“ஸ்ரீ. இந்த கேஸை நான் எவ்வளவு சீக்கிரம் முடிக்கிறேனோ அவ்வளவு நல்லது உனக்கும் உன் ப்ரண்ட்ஸ{க்கும். நீ சைன் பண்ணலைன்னா அப்புறம் உன்னை எப்படி இந்த கேஸிலிருந்து ரிலிவ் பண்றது? நம்மால் கௌன்சிலரிடம் மாட்டவேண்டாமே என்று பார்க்கிறேன். அன்றைக்கு மேஜிஸ்ரேட் முன்பு என்னைக் காட்டிக்கொடுக்காமல் என் வேலையையும் எட்டையா வேலையையும் காப்பாற்றியதற்காக உன்னை என் வீட்டில் வைத்து பாதுகாப்பு தந்திட்டிருக்கேன். பவித்ராவும் ஒரு காரணம். எப்படா உன்னை சென்னைக்கு அனுப்பப் போறேன் என்றிருக்கு. ப்ளீஸ் எனக்கு மேலும் டென்ஷன் தராதே.” என்று ராஜன் முடித்த நொடி ஸ்ரீ கையெழுத்திட்டாள். இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே காலிங்பெல் சத்தம் கேட்டது. காலிங்பெல்லின் குருவிச் சத்தம் ராஜனும் ஸ்ரீயும் மேலே தர்க்கம் பண்ணாமல் ஸ்ரீ கையெழுத்திட உதவியது.
வந்திருப்பவர் ராஜனுக்கு புதியவராக இருக்க வேண்டும். ஏனெனில் யாராகயிருந்தாலும் அவன் பெயரை ராஜன் சார் என்று சொல்லாமல் காலிங்பெல் அழுத்தமாட்டார்கள்.
இதனை உணர்ந்த ஸ்ரீ ராஜன் கதவைத் திறக்கும் முன் அமைதியாக தனது அறைக்குச் சென்று கதவை லேசாகத் திறந்து வைத்துவிட்டு கதவின் பின் சென்று நின்றுகொண்டாள். இது ராஜன் சொல்லிக்கொடுத்த பாடம். ஸ்ரீ தான் சொல்லிக் கொடுத்ததை ஒழுங்காகச் செய்தாளா? என்று பரிசோதித்த ராஜன் அதில் திருப்தியானபிறகே கதவைத் திறந்தான். அவன் கதவைத் திறந்த வேகத்தில் அவனை இறுக்கியது ஒரு ஆறடி ஆண் உருவம்.

தன்னை இறுக்கி அணைத்த உருவத்தை உற்று நோக்கினான் ராஜன். இரண்டு நிமிடத்தில் தானும் அதனை இறுக்கி அணைத்தான். பிறகு சிரிப்பு சத்தம் கேட்க ஆரம்பித்த பிறகு தான் ஸ்ரீயால் கதவின் பின்னால் மனஅமைதியுடன் நிற்க முடிந்தது. பிறகு இரண்டு ஆண்களும் பேசியதை சுவாரசியமாக கேட்டாள் ஸ்ரீ. ராஜன் சிரித்ததே ஒரு ஆச்சரியம் என்றால் அவனை தாறுமாறாக வைதுகொண்டே பேசிய ஒருவனிடம் அவன் மறுப்பாய் எதுவுமே சொல்லாமல் இருந்தது அவளுக்கு பேராச்சரியம்.
“டேய் சோம்பேறி. உனக்கு ஒரு ஃபோன் கூட பண்ண முடியாதா? என்னை மறந்திட்டீல? போடா போ. இன்னைக்கு நான் வேற வழியில்லாம உன்னைத் தேடி வந்தேன்ல்ல அதுபோல நீயும் ஒரு நாள் என்னைத் தேடி வருவீல்ல? அப்ப வச்சிக்கிறேன். ‘சார் பிஸி பிஸின்னு’ என் பி.ஏ யை விட்டு சொல்ல வைக்கிறேன். ”
“போதும்டா டேவிட். என்னைத் திட்டத்தான் டிரைன் ஏறி பத்து மணி நேரம் டிராவல் பண்ணி வந்தியா? வந்த காரியம் உன் கல்யாண விஷயம் தானே? ”
“ஆமாம். ஆமாம். ஏய் ராஜன் என்ன உன்னைப் பற்றி இந்த குவார்டஸில் எல்லோருக்கும் தெரிந்திருக்கு? நீ பேசவே காசு கேட்பியே? எப்படி? எப்படி உனக்கு இவ்வளவு விளம்பரம்? ம்? ”
“போலீஸ் வேலைக்கு வந்ததிலிருந்து தான் இந்த விளம்பரம். இந்த வேலையில் நான் போசாமல் இருக்க முடியுமா சொல்லுடா?ஏ.டி. எம் கார்ட்டு வேலை செய்யலைனாலும் இங்கதான் வர்றான். கரன்ட் கட் ஆனாலும் இங்கதான் வர்றாங்க. என்ன பண்ணச்சொல்ற? நானும் பேசிப்பழகிட்டேன். வாடா உள்ளே. முதல்ல உட்கார். என்ன சாப்பிடுற?” என்று அவனிடம் கேட்டுக்கொண்டே கைபேசியில் யாரிடமோ இரண்டு ஆரன்ஜ் ஜுஸ் ஆர்டர் செய்தான்.
கைபேசியில் பேசியவரிடம் “அவன்கிட்ட ஆரன்ஜ் பழத்தில் பத்து ஸ்பூன் சீனி போடச் சொல்லாதே. பழம் புளிப்பா இருந்தால் ஆப்பிள் ஜுஸ் போடச் சொல்லு! ” என்று கூறிவிட்டு சோபாவில் உட்கார்ந்திருந்தவனிடம் “ஆப்பிள் புடிக்கும்தானே? ” என்று கேட்டான்.
“அதெல்லாம் புடிக்கும். முதலில் தண்ணி கொடு. என்ன வெயில்? வெயிலில் மனுஷன் ஏன் சாகிறான்? என்பதை இப்பத்தான் நம்பமுடியுது.”
டேவிட் தொப்பலாக வியர்த்திருப்பதை பார்த்ததால் ராஜன் ஹாலைத்தாண்டி அடுக்களைக்குள் நுழையும் முன்னே ஸ்ரீயின் அறைக் கதவை நன்றாகத் திறந்து வைத்தான். ஸ்ரீயின் அறையில்தான் மூன்று சன்னல்கள் இருந்தன. கதவைத் திறந்ததும் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தது. வெப்பக்காற்றாக இருந்தாலும் வியர்த்து வடிந்தவருக்கு அது இதமாகவே இருந்தது. அடுக்களைக்குள் சென்று தண்ணீர் மொண்டபோது தண்ணீர் பானையில் குறைவாக இருப்பது ராஜனுக்கு தெரிந்தது. கொஞ்சம் வடிகட்டி கொஞ்சம் சிந்தாமல் பிடித்து என்று ஏதோ சமாளித்தவன் சாமர்த்தியமாக ஒரு செம்பு தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து நண்பனிடம் கொடுத்தான். டேவிட் தண்ணீரைக் குடித்துவிட்டு அடுத்து வந்த இனிப்பு கம்மியாக இருந்த ஆரஞ்ஜ் ஜுசையும் குடித்து முடிக்கும் முன் மூன்று வருடக் கதையை ராஜனிடம் அழகாக விவரித்தான். ராஜன் கொஞ்சம் சிரித்து கொஞ்சம் ஆச்சரியப்பட்டு கொஞ்சம் சிந்தித்து பதில் தந்தபோதெல்லாம் டேவிட் அவனிடம் இன்னும் பல விபரங்கள் தந்தான். “சரிடா நான் கிளம்புறேன். சிறுவர்கள் மறுவாழ்வு மையம் பேகணும். அப்புறம் மைனர் ஜெயில் போகணும். இந்தா புடி என் கல்யாணப் பத்திரிக்கை. சுர்ச்சில் வைத்து கல்யாணம். நீ அவசியம் வரணும். ” என்றான்.

 
Comments are closed here.

error: Content is protected !!