Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள் 17-21

அத்தியாயம்17

 

இரவு முழுவதும் தூங்காமல் தன் கணவனின் நடவடிக்கைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து யோசித்தவளுக்கு விடை சுத்தமாக புரிய வில்லை… மறுபக்கம் திரும்பி தன் கணவனைப் பார்த்தவள் இறுக்கமான தாடை மற்றும் அழுத்தமான உதடுகளை கொண்டு உறங்குபவனை கண்டவள் மனதில் சற்று குழப்பத்தின் ரேகைகள் நீங்க மெல்ல அவளது விழிகள் உறக்கத்தை தழுவியது…

 

காலை வெயிலின் இளஞ்சூடு அவள் முகத்தில் விழ… லேசாக கண்களை திறந்து பார்த்தாள்… சுற்றும் முற்றும் பார்த்தவள் தனது அறை இது அல்லவே என்றவள் அரண்டு அடித்துக்கொண்டு எழுந்தாள்…. எழுந்தவளுக்கு நேற்று நடந்த நிகழ்ச்சி எல்லாம் கண்முன் படமாக ஓடியது… அப்பொழுதுதான் கவனித்தால் தனது கழுத்தில் கனமான தாலிச் சடரைக் கண்டவளுக்கு கண்ணை முட்டிக்கொண்டு அழுகை வந்தது கானல் நீராய் சென்றுவிடும் என்று நினைத்த தன் காதல் கைக்கூடி விட்டதை தொடர்ந்து….

 

தன்னவனின் கைகளால் தாலியை வாங்கிக்கொண்டதை நினைத்து ஆனந்த கண்ணீரில் மூழ்கினாள்…

 

எல்லாம் சரி என்று தோன்ற… அவளுள் ஏதோ ஒரு செய்தி உறுத்திக்கொண்டிருந்தது… அது என்னவென்று யோசித்தவளுக்கு தன் பக்கத்தில் படுத்திருக்கும் கணவனை ஏறிட்டால் திருமணம் முன்பே அவன் தன்னை நாடியது என்ன???…

 

ஆனால் நேற்று இரவு கணவன் என்ற முழுவுரிமை கிடைத்தும் கூட அவன் தள்ளி நிற்கும் மாற்றத்தை நினைத்தவளுக்கு… வேண்டாத விருந்தாளியாக நேஹாவின் முகம் அவள் மனக்கண்ணில் தோன்றியது… நேஹாவை பற்றி நினைத்தவளுக்கு தனது இனிமையான கனவு கருகியதுப்போல் இருந்தது… ஒருவேளை இன்னமும் தன் கணவன் மனதில் நேஹாவின் மீது காதல் இருக்கிறதோ? என்று யோசித்தவளுக்கு வேண்டாம் எதுவும் யோசிக்க வேண்டாம் யோசித்தால் குழப்பம் மட்டுமே மென்மேலும் அதிகரிக்கும்… பின்பு வாழ்க்கையை வாழ சிரமப்பட வேண்டியிருக்கும் என யோசித்தவள்… தன் வாழ்க்கையை அதன் போக்கில் விட சம்மதித்தாள்…

 

தன் கணவனின் தூக்கம் கலையா வண்ணம் மெல்ல கட்டிலிலிருந்து இறங்கி குளியல் அறைக்குள் புகுந்துக்கொண்டாள்… குளித்து முடித்தவள் நேரே பூஜையறைக்கு சென்று விளக்கேற்றி கடவுளின் துதிப்பாடியவள் தனது மாங்கல்யத்தை வெளியே எடுத்து திலகமிட்டவள்… தன் நெற்றிவகிட்டிலும் வைத்துக்கொண்டு தங்களின் வாழ்வு சிறக்க வேண்டி கடவுளிடம் மனமுருக வேண்டினாள்…

 

( ஆனால் அவள் வேண்டியது பாவம் கடவுளின் செவிக்கு எட்ட வில்லை போலும்)

‘ என்னம்மா மித்ரா காலையே எழுந்தாச்சா… ம்ம்ம்… பேஷ் பரவாயில்லையே’ காலையில் குளித்து முடித்து மஹாலக்ஷ்மி போல் காட்சியளித்த தன் மருமகளை மெச்சிக்கொண்டவர்….

 

‘ மித்துமா… ஒரு காபி கிடைக்குமா’ என்றவரை பார்த்தவள் ‘ இதோ கொண்டுவரேன்… மாமா’ என்று கிச்சனுக்குள் விரைந்து சென்று பால் காய்ச்சி அனைவருக்கும் காபி கலந்து எடுத்து வந்தாள்…

 

தீபா மித்ராவை கண்டவர் கன்னம் வழித்து’ என் கண்ணே பட்டுடும் போலிருக்கு… அவ்வளவு லக்ஷ்ணமா இருக்கே மித்துமா’ என கூறி உட்சிமுகர்ந்தார்..

 

‘ ஹாஹாஹா… அண்ணி அம்மாவுக்கு உங்களால ஏதாவது வேலை ஆகணும் போல… அதான் காலைலயே… ஒரு கூட நிறைய ஐஸ் வைக்கிறாங்க… அண்ணி பாத்து ஜலதோஷம் பிடிச்சிக்க போகுது’ வர்ஷாவின் பேச்சில் வெங்கட்ராமன் பலமாக சிரிக்க தொடங்கினார்’ ஆமா வர்ஷிமா… கரெக்டா சொன்ன’ என்றவரை தீபா முறைக்க  வெங்கட்ராமனோ சரண்டர் என்ற பாணியில் வாய்பொத்தி அழகாக மனைவியின் முன் நிற்க… வர்ஷாவிற்கும் மித்ராவிற்கும் தங்களின் சிரிப்பை அடக்க முடியாமல் போனது….

 

பின்னே வயது வந்த பிள்ளைகளை வைத்துக்கொண்டு அவர்கள் இருவரும் செய்யும் செல்ல சீண்டல்களை கண்டு கண்களில் நீர் வரும் அளவிற்கு சிரித்தனர்…

 

தீபா தன் கணவரை கண்டு’ உங்க அலப்பறைக்கு அளவே இல்லாம போச்சு வெங்கட்… ரூம்க்கு வாங்க… இருக்கு’ என்றவர்  தன்னை முறைத்துக்கொண்டு பேசும் மனைவியை கண்டுகொள்ளாது…

 

பாத்தியா மருமகளே’ உங்கள வச்சிக்கிட்டு… உன் அத்த பேசுற பேச்சை பாரு’ அவர் கூறிய செய்தியின் அர்த்தம் வர்ஷாவை விட மித்ராவிற்கு புரியவர சிரிப்பு பீரிட… முகம் சிவந்து அவர்களை கடந்து சென்றாள்… வர்ஷாவும் தனது கல்லூரிக்கு செல்ல ஆயுத்தமானால்…

 

தீபா தன் கணவனின் அருகில் வந்தவர் ‘ ஏங்க… பிள்ளைங்க முன்னாடி என்ன பேச்சிது… உங்களுக்கு வர வர கொஞ்சம் கூட  விவஸ்தையில்லாம… போச்சு… உருட்டு கட்ட ட்ரிட்மெண்ட் தான் சரிவரும் போல’ என கூறியவரின் பேச்சை ஆமோதித்து அப்படியே ஆகட்டும் தாயே என மீண்டுமொரு முறை மனைவியை சீண்டி விட்டு அலுவலகம் சென்றார்…

 

முகம் கொள்ளா சிரிப்புடன் தங்கள் அறைக்கு கையில் காபி கோப்புடன் சென்றவளின் நினைவில் ஆதியின் முகம் தோன்றியது தன்னவனின் முகம் நினைவுக்கு வர புன்னகை உதட்டளவிலேயே நின்றும் போனது… அவன் தன்னை முழுவதுமாக ஏற்றுக்கொண்டானா??? அல்லது கடமையின் காரணமா??? தனது அறிவு எட்டும் அளவிற்கு யோசித்தால் விடை புலப்படவில்லை…

 

தனது எண்ணங்களில் உழன்றுக் கொண்டிருந்தவளை ஆதியின் குரலே அவளை நடப்பிற்கு அழைத்து வந்தது… அவள் முன் சுடக்கு போட்டு’ பேபி என்ன அப்படி ஒரு யோசனை’ என்றவன் அப்பொழுதுதான் கவனித்தான் தன் மனைவியின் அழகை… தலைக்கு குளித்து… தலைமுடியின் நுனியடியில் நீர்சொட்ட… அருவிப்போல் அழகாக விரிக்கப்பட்டிருந்த பட்டு கூந்தல், நேற்று அவன் அணிவித்த புத்தம் புது மாங்கல்யம் அவள் மார்போடு ஒட்டி உரசிக்கொண்டு உரிமையோடு ஊஞ்சலாடுவதை நினைத்தவன் பெருமூச்சுவிட்டான்… பின்பு அவள் நெற்றியில் வேர்வை துளிகளோடு மிலிர்ந்த குங்குமத்தை கண்டவனின் பார்வை கணவன் பார்வையாக மாறிப்போனது…. இவள் தன்னவள் என்ற எண்ணம் மட்டும் அவனது மனதில் அழுத்தமாய் பதிந்தது…

 

அவள் கூந்தலில் முகம் புதைத்து அவளின் வாசத்தை தனக்குள் நிரப்பி… அவளை ஆண்டு முடிந்துவிடும் அளவிற்கு தன் உணர்வு போராட்டங்களோடு தத்தளித்துக் கொண்டிருந்தான்… அவனுக்கு ஒன்று மட்டும் தெள்ள தெளிவாக புரிந்தது… மென்மேலும் அவளின் மனதின் விருப்பம் அறியாமல் அவளை தொடுவது தனக்கு இழுக்கன்றோ இல்லையோ… ஆனால் பெண்ணவளின் பெண்மையை மென்மையாக களவாட வேண்டும் என்று எண்ணிய அந்த கள்வன் தன் உணர்வுகளை அடக்க பெரும் பாடுபட்டான்…

 

தனது கணவனின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளாத முட்டாளாக… வேறு எதையோ நினைத்துக்கொண்டு… தன்னை வருத்திக்கொண்டால்’ பாவா காபி’ என்றழைக்க அவளது பாவாவில்  மேலும் பித்தனாகினான் தன்னவளின் மேல்… அவசரமாக வேலைக்கு செல்லும் கணவனை இமைக்காது பார்த்தவள்…

 

மனதில் ஏதோ வெறுமையாக காணப்பட்டது… தனது மனைவியின் பார்வை முழுவதும் தன்மேல் இருப்பதை உணர்ந்தவன்… தன்னவளை மேலும் சோதிக்க விடாமல்’ பேபி… நேத்து உன்கிட்ட ஒரு பைல் கொடுத்து வைக்கச் சொன்னேன்… எங்க வச்ச பேபி… சீக்கிரமா தேடி கொடு… நான் ஆஃபீஸ் போகணும்’ என்க எந்த பையிலை எப்பொழுது அவர் என்னிடம் கொடுத்தார் என்று யோசித்தவளின் செவியில் மீண்டும் ‘ பேபி’ என ஆதியின் குரல் விழ… ‘ வந்துட்டேன் பாவா’ என்றபடி தங்களின் அறைக்கு விரைந்து சென்றாள்…

 

அத்தியாயம் 18

ஆதியின் சிரிப்பு சத்தமும் நக்கலாக பேச்சும் மீண்டும் மீண்டும் தினேஷின் காதில் விழுந்தது… தன் கையில் மது கோப்பை வைத்துக்கொண்டு… கண்கள் பழிவாங்கும் வெறியில் துடிக்க… அவனது கை முஷ்டிகள் இறுகி பச்சை நரம்புகள் புடைக்க வெறிக்கொண்டவன் போல் காட்சியளித்தான்….

 

அவனது மூளையோ அவனை பழிவாங்கிட யோசித்துக் கொண்டிருந்தது… தனது திட்டத்தை எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்றும் அவனுக்கு எங்கு அடித்தால் பலமாக வலிக்கும் என்று யோசித்தவனுக்கு தொழில் துறையில் அவனை வீழ்த்துவது சத்தியப்படுவதாய் தெரியவில்லை… தனது இயலாமையை நினைத்து தன் மேலே அவனுக்கு கோபம் வந்தது… அவனை அடியோடு அழிப்பது என்றால் அவன் என்றோ செய்திருப்பான்… ஆனால் அவனை அவ்வளவு லேசில் கொன்றுவிட்டால் ஐந்து நிமிடத்தில் உயிர் துறப்பான்…

 

ஆனால் இதையாவும் வேண்டாத தினேஷ் அவனை எல்லாம் இழக்கச் செய்து… அவனை ஒரு நடைப்பிணமாக மாற்றவேண்டுமென்று கருவிக்கொண்டு தன் திட்டப்படி தனது முதல் அடியை எடுத்து வைத்தான்…

 

அவன் அழைத்தத்தின் அவசரம் எண்ணி விரைவாக அவள் அறைக்குள் நுழைந்த சமயம் அங்கு தன் கணவன் இருக்கும் சுவடே தெரியமலிருக்க… யோசித்தவளின் செவியில் கதவு தாழிடப்படும் சத்தம் கேட்டு… திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள்…

 

சாட்சாத் அவள் கணவனின் வேலைதான்’ பாவா கதவ ஏன் பூட்டினிங்க?? ‘ என்றவளின் குரல் அவளுக்கே கேட்காமல் உள்ளே சென்றது… தனது பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘ அப்புறம் பாவா ஏதோ பைல் கேட்டிங்க பாவா… அத எப்போ நீங்க என்கிட்ட கொடுத்…’ என பேசியவளின் வார்த்தைகள் தடைப்பட கணவனை ஏறிட்டாள்…

 

அவனோ அழுத்தமான காலடிகளோடு தன்னை நோக்கி வரும் கணவனைக் கண்டவளின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது… அச்சோ ‘ இவர நான் ரொம்ப நல்லவருன்னு நினைச்சேனே… கல்யாணம் முடிஞ்சு பர்ஸ்ட் நைட் அன்னைக்கு கூட கண்ணியமா நடந்திக்கிட்டாரு… அந்த நம்பிக்கையில் தான அவரை நம்பி வந்து தனியா மாட்டிக்கிட்டேன்’ தன்னவன் தன் உணர்வுகளை மதிக்கிறான் என்றல்லவா எண்ணியிருந்தேன்… தனது மனதுக்குள் பெரும் போரே நடந்துக்கொண்டிருக்க அவளது கணவனோ அவளை மேலும் நெருங்கி’ பேபி… ஏன் எப்பப்பாரு இப்படி நின்னுக்கிட்டே கண்ண திறந்துக்கிட்டு தூங்கிறதே உனக்கு வேலையா போச்சி… இரு உனக்கு நான் கொஞ்சம் ட்ரைனிங் கொடுக்கணும் பேபி…. கொஞ்சமில்ல ரொம்பவே’ என்று தனது மனதினில் கூறிக்கொண்டவன் அவளது செவியில் ‘ பேட்லி…. மேட்லி  ஐ நீட் யூ பேபி’ என கொஞ்சும் குரலில் தன் ஒட்டு மொத்த தாபத்தை திரட்டி கூறியவனின் வார்த்தைகள் பெண்ணவள் செவிவழியே சென்று அவளுள் பலவிதமான இரசாயண மாற்றங்களினால் ஏற்பட்ட உணர்வுகளை அடக்க பெரும்பாடு பட்டவள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்….

 

ஆதிக்கோ அவள் கண்களை மூடிக்கொண்டு நிற்பதை கண்டவன் அன்று அரங்கில் அவளை சந்தித்த முதல் நாள் அவன் நினைவுக்கு வந்தது… அன்றும் இதே போல் தான் தன்னை சமாளித்துக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள்….

 

அவளின் உணர்வுகளை துல்லியமாக படித்தவன் பயத்தில் துடித்துக்கொண்டிருக்கும் அவளது இதழை மென்மையாக வருட அதில் தன் கண்களை திறந்தவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள்… அவனது கண்களில் என்னக் கண்டானோ துடிக்கும் அவளது இதழை மிகுந்த ஆவலோடு தேடி அதன் துடிப்பை தன் வலிமையான உதட்டினால் அடக்கினான்… அவனுக்கு மிகுந்த ஆச்சிரியமாக போயிற்று தன் தொடுகையில் அவளது உடல் விரைப்பதற்கு மாறாக அவளது உடல் அவன் கையில் குழைய தொடங்கியது…

 

முதன் முதலாய் தன் அணைப்பில் விரும்பி அடங்குபவளை சட்டென்று எடுத்துக்கொள்ள அவன் மிகவும் யோசித்தான்… அவளது உடலை வெல்வதை விட அவளின் மனதினை அறிந்து செயல் பட வேண்டுமென்று யோசித்தவனுக்கு தன்னால் அதை ஒரு போதும் செய்ய முடியாமல் போகும் என அவன் கனவிலும் எண்ணவில்லை…

 

அவளை தன்னிடமிருந்து விடு வைத்தவனின் முகம் பார்க்க கூசி அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள் ‘ அவளது தாடையை பற்றி தன்னை காணச்செய்தவன் ‘ பேபி இப்பவாது உனக்கு புரிஞ்சிதா… இந்த ஆதி மனசுல என்ன இருக்குனு… நீ சொல்லலனாலும் உன் மனதில் உள்ளதை உன் உடல் மொழியாக’ ஆதாரபூர்வமாக அதை உணர்ந்துக் கொண்டேன் இப்பொழுதாவது எதையும் யோசிக்காமல் உன் மூளைக்கு சிறிது நேரம் ஓய்வுக் கொடு என்று விட்டுச் சென்றவனின் பதிலே அவள் காதில் ஒளித்துக்கொண்டிருக்க எப்படி தன் மனதை அறிந்துகொண்டானாம்? இப்படி என் உணர்வுகளை தூண்டி விட்டு குளிர்காய்வதுதான் இவன் வேலையாக போய்விட்டது என்றவளின் கண்கள் கலங்கியது…

 

அலுவலகம் முடிந்து மாலை வீட்டிற்கு வந்தவனை மனைவியின் புன்னகை முகமே அவனை வரவேற்றது… நேரே வீட்டிற்குள் சென்றவன் அனைவரும் முன்னறையில் ஒன்று கூடி ஏதோ தீவிரமாக பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்து’ என்ன விஷயம் ஏதோ பெரிய பஞ்சாயத்து இருக்கும் போலவே…. என்ன இந்த வர்ஷி குட்டி சைத்தானும்  கூட இருக்கு… ஐயோ இன்னக்கி பஞ்சாயத்து கான்பார்ம்… ஏதோ பெருசா பிளான் பண்றாங்களோ… என்ன பிளானிங்லாம் பயங்கரமா இருக்கு ஹ்ம்ம் நானும் என்னால் முடிஞ்ச ஐடியா தரேன்’ மிகுந்த ஸ்வரசியத்தோடு அவன் கேட்ட கேள்வியில்… ஆதியை திரும்பி பார்த்த தீபா’ இது நாள் வரையில் அவன் இப்படி இலகுவான தன்மையில் அவன் பேசியதே இல்லை… இந்த மாற்றத்திற்கு காரணம் அவன் வாழ்க்கையில் வந்த மித்ரா அல்லவா….

 

‘ஆதி கண்ணா மேரேஜ்  ரிசப்ஷன் பத்திதான் பேசிக்கிட்டு இருக்கோம் உனக்கு என்கேஜ்மெண்ட் இல்லாத நாளில் வச்சுக்கலாம்… நீ என்ன சொல்ற கண்ணா’ ஆதியை பார்த்து தீபா கேட்க… அவன் முகம் இருண்டது அவரது கேள்வியில் ‘ சித்தி இப்போ ரிசப்ஷன் வேணாம்… அது அவசியமுமில்ல’ என்றவன் இத்துடன் இந்த பேச்சு முடிந்தது என்றதுப்போல் தன் அறையை நோக்கி சென்றான்…

 

மித்ரா அவனது வார்த்தையில் அடிப்பட்டுப்போனாள் தன்னை அவன் எல்லோரிடமும் அறிமுகப்படுத்துவதை கேவலமாக எண்ணுகிறானோ? தன்னை பற்றி முழுவதும் அறிந்தால் தான் ஒரு ஊனமுற்றவள் என அறிந்தால் தன்னை முழுவதுமாய் ஒதுக்கிவிட்டு சென்றுவிடுவானோ? அச்சோ நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது….

 

தீபாவின் நெற்றி கேள்வியில் சுருங்கியது மித்ராவிடம் திரும்பியவரின் பார்வை அவளும் அதே குழப்பத்தில் இருப்பதை கண்டவர் மித்ராவிடம் இலகுவாக பேச்சைக் கொடுத்தார் ‘ மித்துமா உனக்கும் ஆதிக்கும் இடையே பிரச்சனை எதுவும்மில்லையே’ அவரின் கேள்வியில் அப்படியேதும் இல்லை என்று மறுத்தவள் அவருக்கு இஷ்டமில்லாததை செய்ய வேண்டாம் விட்டு விடுங்கள் என்று மறுத்துவிட்டு தங்களின் அறைக்கு சென்றாள்…

 

தீபாவுக்கு புரிந்தது கட்டாயத்தின் அடிப்படையில் இவ்விரு துருவங்களையும் திருமணம் என்னும் பந்தத்தில் இணைத்து வைத்தவருக்கு நன்றாக புரிந்தது அவர்களுக்கு வாழ்க்கையின் அனுபவத்தை விட வாழ்க்கை பாதையில் எதிர்கொள்ளும் திருப்பங்களே சிறந்த அனுபவமென்றும்… அவர்களின் மனதை அறிந்தவர் அவர்களின் விருப்பத்திற்கேற்ப விட்டுச்சென்றார்…

 

அத்தியாயம்19

கே.கே குரூப்ஸ் ஆஃ நியூயோர்க் கன்ஸ்ட்ரெக்க்ஷன்ஸ் அண்ட் இம்போர்ட் & எக்ஸ்போர்ட் மிக பிரமாண்டமான மீட்டிங் ஹாலில் விறுவிறுப்போடு மீட்டிங் நடந்துக்கொண்டிருந்தது… மிக சாதுரியமாக மீட்டிங்கை கையாண்ட வண்ணம் வெற்றிகரமாக கையோடு முடித்துக்கொண்டு வெளியே வந்த ஜெகதிஷின் மனதில் சொல்லொன்ன துயரம் எட்டிப் பார்த்தது இன்னும் ஒரு மாதம் நீடித்த தன் பயணத்தை கண்டவன் அறவே வெறுத்தான்…

 

தன்னவளை பார்க்கும் எண்ணம் நாளுக்குநாள் அவனுள் அதிகரித்தே சென்றது…. தன்னவளின் பிம்பம் தன் கண்முன் நிழலாடியது… அவளுக்கு தொடர்புக்கொண்டு பேசினால் என்ன என்ற எண்ணம் மேலோங்கியது… இத்தனை நாட்கள் அவளுக்கு பேசாது இருந்து அமைதிக்காத்தவனால்…. மேலும் தன் பயணம் ஒரு மாதக் காலம் தொடர்வதை நினைத்து மிகவும் வருந்தினான்…

 

அவளுக்கு தொடர்புக்கொண்டு பேசும் எண்ணத்தை கைவிட்டவன் தன் அன்னைக்கு அழைத்தான்… ரெண்டே அழைப்பிலையே அழைப்பு எடுக்க பட்டதை உறுதி செய்தவன் ‘ ஹலோ மாம் ஜெகதீஷ் ஹியர்… ஹௌ ஆர் யூ?’ என்று தன் மகனின் கேள்வியில் மனம் பூரிக்க ‘ நான் நல்லாயிருக்கேன்… நீ நல்லாயிருக்கியா… அப்புறம் ஒழுங்கா சாப்பிடு கண்ணா… வேலை வேலைன்னு இருக்காத… சரி கண்ணா வேலை டூ வீக்ஸ்ல முடியுதுன்னு சொன்ன என்னாச்சு கண்ணா ஏதாவது ப்ராப்ளம்மா’ …..

‘ நோ மாம் அப்பிடில்லாம் எதுவுமில்ல… ஆனா ஏன் இன்னும் ஒருமாசம் மீட்டிங்கை எக்ஸ்டேன்ட் பண்றாங்கன்னு தெரியல மாம்… பட் கமிட்டி மீட்டிங்கினால எல்லாரும் இருக்கணும்… யாராவது ஒருத்தர் இல்லனாலும் மீட்டிங் எக்ஸ்டேன்ட் ஆகிட்டே போகும்… மாம்… மித்… மித்ரா எப்படி இருக்கா? நல்லாயிருக்காளா? மகன் மித்ராவை பற்றி கேட்டதும் அமைதிக்காத்தார் என்ன சொல்லி  சமாளிப்பது என்றும் யோசித்தார்….

 

மறுப்பக்கத்திலிருந்து பெரும் அமைதி நிலவியது அடுத்து தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணியவன் ‘ஹலோ மாம்… ஆர் யூ தேர்’ என்க ‘ கண்ணா சிக்னல் வீக்கா இருக்கு’ நான் பிறகு பேசுகிறேன் என்றவர் அழைப்பை துண்டித்து பெரும் யோசனையில் ஆழ்ந்தார் இங்கு நடந்த அவசர திருமணம் பற்றி கேள்விப்பட்டாள் என்ன நடக்கும்??? எப்படி சமாளிப்பது??? பெரும் போராட்டமே மனதினுள் எழுந்தது…

 

ஜெகதிஷ்க்கோ ஒன்று ஒன்று ரெண்டு என்பதுபோல் தன் அன்னையின் பேச்சில் தெளிவில்லாமல் இருந்ததையும் இங்கு கம்பெனியின் கமிட்டி மீட்டிங் நீடித்ததை நினைத்தவன் அவனுள் பல கேள்விகள் எழுந்தது… இது திட்டமிட்ட வேலையாக இருக்குமோ ? வேண்டுமென்றே நாட்கள் கடத்துவதின் காரணம்?? யோசித்தவன் அதனை அறிய முற்பட்டான்…

 

அன்று மாலை வீடு பெரும் அமைதியாக மயான தோற்றத்தை கொண்டது… வீட்டிலிருக்கும் அனைவரும் தங்களின் நினைவில் ஆழ்ந்தனர்… அந்த கொடிய நாளை அவர்கள் வாழ்வில் உயிருள்ளவரை மறக்க முடியாத நாளாக அமைந்தது மூவரும் பிரிந்து சென்ற நாள்… தீபாவை வெங்கட்ராமன் சமாதானம் செய்தார்…

 

கமலம்மாளின் நினைவோ கீர்த்தி கேசவன் மற்றும் தன் மருமகளான சாரதா இவர்களின் நியாபகத்தில் இருந்தவர் இன்றுடன் அவர்கள் இறந்து இருபது வருடங்கள் சென்றடைந்ததும்… மித்ரா மட்டும் உயிருடன் இருப்பதாகவும் செய்தி மட்டுமே அவர்களை  சென்றடைந்தது… அவளையும் தவறிவிட்ட நாள் அல்லவா!!! எங்கு இருக்கிறாளோ???… என்ன செய்துக்கொண்டிருக்கிறாளோ?? என்று நினைத்தவருக்கு கண்ணீர் ஆறுப் போல் பெருகி ஓடியது…

 

அதே நேரத்தில் தோட்டத்தில் போடப்பட்டிருக்கும் கல்பெஞ்சில் அமர்ந்த மித்ரா இருள் சுமந்த வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்… தன் மகிழ்ச்சியையும் தனது உயிருக்கு இணையானவர்கள் தன்னை விட்டு  பிரிந்து சென்ற நாள்… யாரும் அற்ற அனாதையாக  நிற்கதியில் நின்ற அந்நாளை மறக்கவே முடியாமல் போனது… அவளது கனவில் என்றும் அந்த கொடூர சம்பவம் தோன்றி அவளை அலைகழித்து…  பலநாள் இரவின் தனிமை பழக்கப்படாததால்  தூக்கத்தை தொலைத்து எத்தனை நாள் இரவு தனிமையில் தவித்திருக்கிறாள்… வானத்தை வெறித்தவள் ‘ அம்மா… அப்.. அப்பா… எனக்கு படுக்க உங்க மடி வேணும்… நான் ஆறுதலா சாய ஒரு தோள் வேணும்… எனக்கு அப்பா அம்மா பாசம் திரும்ப வேணும்…. ஏன்?? ஏன்??? என்னை விட்டுட்டு போனிங்க… ஏன் ப்பா… நான் ஏதும் தப்பு பண்ணிட்டேனா… அம்மா எதுக்கு  எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை’ என்றவள் கண்களிலிருந்து நீர் மணித்துளிகள் உருண்டு அவள் மேலாடையை நினைத்தது… துக்கம் தொண்டையை அடைக்க அவளது கண்ணீர் நீரூற்றுப்போல் பெருகியதே  ஒழிய நின்றபாடில்லை… வெகுநேரம் சென்றே வீட்டிற்குள் நுழைந்தவளை அந்த அமைதியான சூழலே அவளை வரவேற்றது…

 

தங்களது அறைக்கு சென்றவள் அங்கு தன் கணவனை காணாது எங்கே சென்றிருக்க கூடும் என சிந்தித்தவள் சுற்றும் முற்றும் தன் பார்வையை செலுத்தினாள் அவர்களது அறையை ஒட்டியே அமர்ந்திருக்கும் அவனது ஆஃபீஸ் அறையில் விளக்குகள் ஒளிர்வதைக் கண்டவள் தன்னைப் போல் தன் கணவனும் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறானோ? என்றெண்ணி கதவை தட்ட… பதிலில்லாமல் போனது கதவை திறந்துக்கொண்டு உள்ளே செல்லலாம் என முடிவெடுத்தவள் தன் கணவனுக்கு பிடிக்காதே என்று  பின்வாங்கினால்… மற்றோரு மனமோ அவனுக்கு ஒரு கஷ்டமென்றால் அது பெண்ணவளுக்கும் தானே… தன் துயரத்தைக் கூட. மறந்து தன்னவனின் துன்பத்தை போக்கும் பொருட்டு அவள் தாயாக மாறினால்…

 

பின்பு ஒரு வேகா மூச்செடுத்தவள் அறைக்கு உள்ளே சென்றவளின் மனமும் உடலும் சேர்ந்தே அதிர்ந்தது கண்கள் அழுதழுது சிவந்து ஒரு கையில் மது கோப்பையும் மற்றோரு கையில் சிகரெட்டையும் வைத்துக்கொண்டு சூழல் நாற்காலியில் தன் தலையை நன்றாக பின்னுக்கு சாய்த்துக் கொண்டு கண்கள் மூடி படுத்திருந்தான்….

 

‘பாவா’ ,என்றவளின் அழைப்பில் அவளை திரும்பி பார்த்தவனின் பார்வையில் தான் அத்தனை துயரம் தன் முகத்தை சீர் செய்துக்கொண்டவன் தாய் மடித்தேடி ஓடும் கன்றுப்போல் ‘ பேபி’ எனக் கூறிக்கொண்டு அவளை கட்டியணைத்துக்கொண்டான்… ஆண்ணவனின் இறுகிய அணைப்பு பெண்ணனவளின் எலும்புகள் நொறுங்கியதுப்போல் வலி உணர்ந்தாலும் தன் கணவனின் துயரம் துடைக்கவேண்டி அமைதிக்காத்தாள்…

 

தன்னை பிடிவாதமாக குழந்தைப் போல்  அனைத்திருக்கும் கணவனின் செயலை எண்ணியவளாய்’ பாவா என்னதிது குழந்தை மாதிரி எழுந்திரிங்க… இங்க பாருங்க பாவா நான் இருக்கிற வரைக்கும் நீங்க இப்படி உடையக்கூடாது… வாங்க பாவா’ ,என்றவள் தன் கணவனை அணைத்த வாக்கிலையே அழைத்து சென்றவள் அவனை தன் மடிமீது சாய்த்துக்கொண்டாள்…

 

அவனோ அவள் மடியில் அமைதியாக படுத்துக்கொள்ள பெண்ணவளின் கை தாமாக ஏறிச்சென்று தன் கணவனின் கேசத்தை வருடியது…

 

அவனுக்குமே இந்த மாதிரி அரவணைப்பு தேவையாக இருந்தது ‘ தி கிரேட் ஆதித்ய வர்மன் எவர் முன்னிலையிலும் தலைவணங்காமல் தன் மன மாற்றத்தை வெளிப்படுத்தாமல் கர்வத்தோடு வலம் வருபவன்’ இன்று ஒரு சேயாக மாறி தன்னவளின் மடியில் தஞ்சம் புகுந்து தன் மனபாரத்தை தன்னவளிடம் சிறு கர்வமின்றி இறக்கிவைத்தான்( உயிருக்கு உயிரான தன் தந்தை பிரிந்து சென்ற நாள் அல்லவா) அவளும் எதுவும் கேட்காமல் அவனை அரவணைத்துக் கொண்டாள்…

 

மயில் இறகைப்போல் தன்னை வருடிச்செல்லும்… தன் மனைவியின் கை மென்மை தந்த இதத்தில்.. அவனின் இத்தனை காலத் துன்பம் ஒரு நொடியில் காணாமல் போனதுப்போல் உணர்ந்தான்…

 

பாவையவளின் விழிகளில் சந்தித்தவன் என்ன நினைத்தானோ அவளது வயிற்றில் முகம் புதைத்து அவளை இடையோடு அணைத்துக்கொண்டான்… அவளது வயிற்றில் அவனின் கண்ணீர் சூடாக படுவதை உணர்ந்தவள் தானும் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்….

 

“ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு நேர் இவரோ…

தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ…

மூச்சிப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்

நிழலுப்பட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்

தூங்காம நீ விளக்கி தூங்காமத் தூங்கு கண்ணே

ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே

ஆராரோ ஆரிராரோ… ஆரிரோ ஆரிரரோ…

ஆராரோ ஆரிராரோ… ஆரிரோ ஆரிரரோ”

 

அவன் உறங்கும் வரை அவனது தலையை வருடிக் கொடுத்து… சிறு குழந்தைக்கு தாலாட்டுப் பாடுவதுப்போல் பாட்டுப் பாடி அவனை தூங்க வைத்தாள்… அவளது கனிவான குரலில் கசிந்த பாடல்கள் அவனை சென்றடைய துக்கம் தூரப்போனது… நித்ராதேவி அவனை சுகமாக தழுவிக் கொண்டாள்… அவனோ தன் மனதில் அவளுக்கு நன்றி சொல்லிக்கொண்டான்…

 

அத்தியாயம்20

 

காலையில் விழிப்பு தட்ட எப்பொழுதும் போல் துயல் கலைந்து எழுந்த மித்ராவால் எழ முடியாமல் போனது… என்னவென்று பார்த்தவளுக்கு கணவனின் கையணைப்பில் தான் இருப்பதை பார்த்தவள் வெட்கம் பிடுங்கி திங்க தன் இருக்கையால் அவள் முகத்தை மூடிக்கொண்டு அவனின் அணைப்பை இதமாக ரசித்தாள்… அவளுள் மண்டிக் கிடந்த அவன் மீதான காதல் மெல்ல மேலே எழுந்தது…

 

அதுவும் நேற்று நடந்த நிகழ்வுகளால் ‘ பாவா  என்ன உங்களுக்கு பிடிக்குமா… ஆனா பாவா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்… இன்னக்கி நேத்து இல்ல பாவா விவரம் தெரிஞ்ச நாள் முதலா… நீங்க  என்ன பிடிக்காம கடமைக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்தாலும் பாவா என்னோட காதல் உண்மையானது அது என்கிட்ட உங்கள கொண்டு வந்து சேர்க்குமுன்னு ‘நான் நம்புகிறேன் என்று தன் கணவனுக்கு கேட்காத வண்ணம் கூறியவள் குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்…

 

அந்தோ பரிதாபம் அவள் அவனிடம் கூறியிருந்தால் கூட பரவாயில்லை அவளின் காதலை அவன் புரிந்துக்கொள்ள முயற்சி செய்திருப்பான்… ஆனால் விதியின் கோர தாண்டவ விளையாட்டை யாரால் மாற்ற முடியும்…

 

சிறிது நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு தன் கணவனுக்கு காபி கொண்டு வந்தவளுக்கு கணவன் அலுவலக உடையுடன் அவளை வரவேற்றான்’ பாவா… சீக்கிரமா ஆபிஸ் கிளம்பிட்டிங்க ஏதாவது முக்கியமான மீட்டிங்கா’ என்றவளை ஆழமாக பார்த்தவன்… அவளின் இயல்பான பேச்சில் அதிர்ந்தவன்… தனது மனைவி அவளின் கூட்டை விட்டு மெல்ல வருவதை உணர்த்தவனின் பார்வை கணவன் பார்வையாக மாறியது…

 

அவனது பார்வை வீச்சை தாங்கமுடியாமல் வெட்கம் கொண்டு தலைகுனிந்து நின்றாள்… அவளது வெட்கத்தை உணர்ந்தவன்’ பேபி இன்னக்கி ஈவினிங் நம்ம வெளிய போறோம்… சீக்கிரம் கிளம்பி ரெடியா இரு’ என்றவன் அவளது கன்னத்தை வருடி விட்டு சென்றான்… எங்கே என்றுகூட கேட்க தோன்றாமல் அவளின் எண்ணப்படி தனது வாழ்க்கை அமைந்ததை நினைத்தவளுக்கு நெஞ்சம் கொள்ளா உவகை தோன்றியது…

 

மாலையில் விரைவாக வேலையை முடித்துக்கொண்டு வந்தவன் மனைவி ரெடியாக கிளம்பி கொண்டு வரவேற்பில் அமைந்திருந்ததை கண்டு புன்னகை பூத்தவாரே ‘ பைவ் மினிட்ஸ் பேபி ரெடி ஆகிட்ட வரேன்’  என்று விட்டுச் சென்றவன் இன்னமும் அவன் தன்னை எங்கே கூட்டிக்கொண்டு செல்கிறான் என ரகசியமாகவே வைத்திருந்தான்…

 

( ஆனால் இன்று தன் வாழ்க்கை அடியோடு மாறப்போவதை உணராது மங்கையவளின் முகத்தில் காதலின் பிரதிபலிப்பு பிரகாசமாக சுடர்விட்டு எரிந்தது… அந்த பிரகாசமான ஜோதியை தன் மனம் கவர்ந்தவனே அழிக்கப்போகிறான் என்பதை அவள் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை… விதி கைத்தட்டி சிரிக்கலானது அவர்களின் நிலையைக் கண்டு)

 

இருபத்தி ரெண்டு தளம் கொண்டு… வெள்ளை மாளிகைப்போல் போல் காட்சியளித்து சென்னை மாநகர் மத்தியில் வீற்றிருக்கும் புகழ் பெற்ற உணவகம் முன் தன் காரை நிறுத்தி தன் மனைவியை இடையோடு அணைத்து பதிமூன்றாம் தளத்தில் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு சென்றான்…

 

மங்கிய வெளிச்சத்தில் மெல்லிய இசை காற்றில் மிதந்து அறை முழுவதும் குளிர்சாதனப் பெட்டியாலும் ஏர் பிரேஷுனராலும் மனம் வீசிக்கொண்டிருந்தது ஏசிக் காற்று முகத்தில் அறைய கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவளின் பார்வையில் முதலில் பட்டது அங்குள்ள கலை பொருட்கள்… செல்வகளின் செழிப்பைப் பார்த்தவள் பிரமித்தாள் … மனைவியின் பார்வை உணர்ந்தவன் புரிந்தாற்போல்’ பேபி இது பிஸ்னெஸ் பார்ட்டி நடக்கும் இடம் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்லும் இடம் … அப்புறம் பிஸ்னஸ் மீட்டிங் இன்னும் நிறைய ஆனா நம்ப இங்க இப்போ கப்புலா வந்திருக்கோம்’ என்றவன் அவளை அழைத்து சென்று தங்களுக்கென்று ரிசர்வ் செய்யப்பட்ட இடத்திற்கு வந்தவன் மனைவியை அமரவைத்து’ பேபி இங்க வெயிட் பண்னு ….நான் ஆர்டர் கொடுத்திட்டு வரேன்’ என்று  சென்றவன் அவளுக்கு திருமணத்தின் பரிசாக தன் அன்பளிப்பை சஸ்பென்ஸோடு கொடுக்க வேண்டுமென்று அவளை தனித்து விட்டு சென்றான்…

 

அதே நேரத்தில் அங்கு மீட்டிங்கை முடித்துக்கொண்டு வந்த சாதிக் மித்ராவைக் கண்டு அதிர்ச்சியுற்றான்… மீண்டும் தன் கண்ணை நம்ப முடியாமல் தனது கண்ணை தேய்த்துக் கொண்டு பார்த்தவனுக்கு சத்தியமாக புரிந்தது அவளேதான்… மித்ராதான் என்பதை ஊகித்து அவளை நோக்கி வேக நடை எடுத்து வைத்தான்….

 

பின்னே ஆறுமதமாக அவளைத்தனே அவன் வலைப்போட்டு தேடிக்கொண்டிருந்தான்… கல்லூரி முடிந்த நாட்களோடு சரி அவளை கடைசியாக பார்த்தது இன்றுதான் பார்க்கிறான்…

 

சிகப்பு நிறம் கொண்டு கண்ணாடி கற்கள் பதித்து அழகிய வேலைப்பாட்டு செய்திருந்த ஷிப்பான் புடவையில் பேரழகியாக அமர்ந்திருந்தவனின் அருகே சென்று… மித்ரா என்றழைக்க அதில் தூக்கிவாரிபோட்டு எழுந்து நின்றாள் அப்பொழுதுதான் அவன் கவனித்தான் அவளது கழுத்தில் அணிந்திருக்கும் தாலிச் சரடையும் நெற்றியில் வீற்றிருக்கும் குங்குமத்தை கண்டவனின் தலையில் இடி இறங்கியது…

 

மித்ரா சாதிக்கை கண்டவள் … அவளது கண்கள் தன் கணவனை தேடியது… அவன் வராமலிருக்க… மித்ரா அவனை கடந்து போக முயற்சி செய்தால்… அவனோ அவளது செயலை அறிந்து அவள் கையை பிடித்து இழுத்தான்…

 

மித்ராவிற்கு கோபம் சுறு சுறுவென்று தலைக்கேறியது ‘ சாதிக் ஒழுங்கா கையை விடுங்க பப்ளிக் ப்லேசில் என்ன பண்றிங்க… என் ஹஸ்பண்ட் இங்கத்தான் இருக்காரு… அவரு பாத்தா உங்களுக்குத்தான் பிரச்சனை…கையை விடுங்க’ என்றவளை சாதிக் அடிப்பட்ட பார்வை ஒன்றை பார்த்தான்…

 

‘அப்போ நான் யாரு மித்ரா… உன்னையே காதலிச்சு.. உன்னையே நினைச்சி வாழ்த்துட்டு இருக்கேனே… அப்போ நான் யாரு மித்ரா’ இம்முறை அதிர்வது இவளது முறையாயிற்று…

 

‘சாதிக் என்னோட முடிவ நான் அன்னைக்கே  உங்ககிட்ட சொல்லிவிட்டேன்… நீங்க முட்டாள் மாதிரி நினைச்சிக்கிட்டு இருந்தா நான் பொறுப்பல்ல… ப்ளீஸ் கைய விடுங்க’

 

‘என்ன சொன்ன முட்டாளா ஆமா நான் முட்டாள் தான் மித்ரா… முட்டாள் தான் இன்னும் நான் முட்டாளா இருக்க விரும்பலை’

 

அத்தியாயம்21

அவளது கேட்ட நேரமோ என்னவோ ஆதித்யன் கையில் பூங்கொத்துடன் அழகிய கப்புல் ரிங் கொண்ட இரு மோதிரம் அடங்கிய பெட்டியுடன் தன் மனைவியை நெருங்கி வந்துக் கொண்டிருந்தவனின் பார்வையால் தன் மனைவின் கையை பிடித்துக்கொண்டு கெஞ்சி பேசிக்கொண்டிருந்தவனை பார்த்தவனின் ரத்தழுத்தம் எகிரியது…

 

அவர்களின் சம்பாஷணைகளை கேட்டுக்கொண்டே வந்தவனின் உள்ளம் எரிமலையாய் சிதறியது… அவன் கையில் எடுத்துவந்து பூங்கொத்தையும் கப்புல் ரிங்கையும் வீசி ஏறிந்தவன்…

 

கைகள் முஷ்டி இறுக முகம் முழுவதும் கோபத்தில் சிவந்திருக்க அவர்களை நோக்கி அடி எடுத்து வைத்தவனின் உள்ளம் நெருப்பு குழம்புப் போல் வெடித்து சிதறியது…

 

‘ மித்ரா’ என்ற ஆதியின் கோபம் தொனித்த குரலின் அழைப்பில் சர்வ நாடியும் அடங்கியவளின் முகம் பயத்தின் சாயலை தத்தெடுத்துக் கொண்டது… ‘ பாவா’ என்ற அவளது வார்த்தை காற்றில் கலந்து அவன் செவியை எட்ட மறுத்தது…

 

சாதிக்கோ தன் முன் ருத்ர மூர்த்தியாக நிற்பவன் தனக்கு யாரென்று தெரியாமலிருக்க ‘ ஏய்… யாரு நீ இங்க வந்து உரிமையோடு பேசிக்கிட்டு இருக்க உன்னோட வழியைப் பாத்துக்கிட்டு போ’ என்று கூறியவன் மீண்டும் விடப்பட்ட மித்ராவின் கையை பிடிக்கப்போக… ஒரே எட்டில் தாவி சாதிக்கின் சட்டை காலரை பிடித்திருந்தான் ஆதி ‘ அவ என்னோட பொண்டாட்டி நீ தான்டா வழியப் பாத்துகிட்டு போகனும்’ என்க

 

சாதிக்கின் முகம் வெளிரிக்காணப்பட்டது… ஆயினும் தன் பேச்சில் நிலையாய் இருந்தவன் ‘ உனக்கு முன்னாடி இவ என்னோட காதலி மிஸ்டர்’ எனக் கூறியவன் பேச்சை கண்டவன் கோபத்தின் உச்சிக்கே சென்றான் ‘ இருக்கலாம் உன்னோட காதலியாக இருக்கலாம்… ஆனா இப்போ அவ கழுத்துல இருக்கும் தாலிக்கு, அவளோட குங்குமத்துக்கு சொந்தக்காரன் நான்… அவள் என்னோடு உரிமை அதாவது திருமதி. மித்ரா ஆதித்ய வர்மன் இப்போதாவது புரிஞ்சிற்கும் அவளுக்கு எனக்குமான உறவு என்றவன் தன் மனைவியை எரித்து விடும் பார்வையை பார்த்தான்… அவனது பார்வையில் அவள் தலைக் குனிந்தாள்…

 

அவன் முன் சுடக்கு போட்டு’ லிசன் ஹியர்’ உன்னோட காதலி இன்று மட்டுமல்ல என்றும் என்னோட மனைவி இது எப்பொழுதும் மாறாது… அதே போல் ‘ ஒரு நாளும் என்னோட மனைவி உன் காதலியாக முடியாது’ நினைவில் வைத்துக்கொள் என்றவன் அவளை பிடித்து இழுக்காத குறையாக நடந்தவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் புடவை தலைப்பு சிலுப்பி கிழே விழுந்தாள்…

 

கீழே விழுந்த அதிர்வில் அவள் காலில் பொறுத்திருக்கும் செயற்கை கால்( knee crutches) கருவி கழன்றி கிழே விழுந்தது நிலை தடுமாறி அவளும் கிழே விழுந்தாள்…

 

விழுந்தவளை முதலில் பார்த்தது சாதிக்த்தான். அவர்கள் இருவரும் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தவன் பார்வையில் மித்ரா கீழே விழுந்ததை பார்த்தவன் உண்மையாகவே உதவும் மனப்பான்மையில் தான் அவன் அவளை நெருங்கி வந்தது…

 

ஆனால் அதற்குள் ஆதி அவளை தன் இருக்கையில் எந்தியிருந்தான்… தன் பின்னே வந்துக்கொண்டிருந்த மனைவியை காணவில்லை என்று திரும்பி பார்த்தவனின் உள்ளமும் உடலும் சேர்ந்தே அதிர்ந்தது… ஆனால் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாது தன் மனைவி என்ற எண்ணம் மட்டுமே இருக்க அவளை எந்தியவன் சாதிக்கை நோக்கி ஏளனப் பார்வை பார்த்தான்…

 

பின்பு காரை நோக்கி விறைந்தவன் ஓட்டுனரின் உதவியோடு அவளை சீட்டில் அமரவைத்து  அவளது காலில் செயற்கை காலை பொருத்தினான்… எந்த சலனமுமின்றி காரை ஓட்டுனரிடம் இருந்து வாங்கியவன் தானே காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான்…

 

கார் சென்ற வேகத்தில தெரிந்தது அவனது கோபத்தின் வீரியம்… பயப்பந்து அவளுள் உருள தொடங்கியது… நேரே வீட்டிற்கு வந்தவன் அவளை இறங்கச் சொல்லி மீண்டும் அதே வேகத்தில் கார் புயலென கிளம்பி சென்றது… அவன் கார் கண்ணைவிட்டு மறையும் வரை பார்த்திருந்தவள் எங்கு செல்கிறான் என்றதைக்கூட அவளிடம் கூறாமல் விடைபெற்றான்…

 

அவளோ தங்கள் அறைக்கு வந்தவள் உடைமாற்றக் கூட தோன்றாமல் அப்படியே படுத்துவிட்டாள்… தன் கணவனுக்காக காத்திருந்தவள் அவன் வெகு நேரம் சென்று வராமலிருக்க…  அப்படியே உறங்கியும் போனாள்…

 

அவளை இறக்கி விட்டவன் நேரே’  பாருக்கு வண்டியை விட்டவன் தன் நெஞ்சில் எரிந்துக் கொண்டிருந்த தீ அணையும் வரை குடித்தான்… கடை மூடவேண்டுமென்று ஒருவன் கூற… அவனை முறைத்து விட்டு கால்கள் தள்ளாடும் போதையோடு வெளியே வந்தவன்… தன் காரை கிளப்பிக் கொண்டு வீட்டிற்கு வந்தான்…

 

கண்கள் குடிபோதையில் சிவந்து தலையெல்லாம் களைந்து அலங்கோலமாய் காட்சியளித்தான்… தள்ளாடிய நடையோடு  தங்கள் அறைக்கு வந்தவனின் கால்கள் பிரேக் அடித்ததுப்போல் நின்றது… தன்னவளின் அருகில் வந்தவன் அவளது கால்களை மெல்ல வருடினான்…

 

அவன் பார்வை சற்று மேலே ஏறிச்சென்றது… தூக்கத்தில் தன்னை மறந்து உறங்கியவளின் மேலாடை விலகி அவளின் அபாயகரமான அங்கங்கள் எல்லாம் தெரிய… அதில் மதிமயங்கியவன் குடிபோதையில் தன்னை மறந்து அவளை அணு அணுவாக ரசித்தான்…

 

பின்பு சாத்தான் வேதம் ஓத அவன் அறிவு குடிபோதையில் திரையிடப்பட்டு மிருகமாக மாறினான்…

 

அவளது நெஞ்சில் ஆள முகம் புதைத்தவனின் அணைப்பில் காதல் துளியும்மின்றி வெறித்தனமும்  காமமும் மட்டுமே நிறைந்து வழிந்தது…

 

தன்னை யாரோ இறுக்கவதுப்போல் உணர்ந்தவள் மூச்சுக்கு சிரமப்பட்டு கண்விழித்தாள் தன் கணவனின் செயலைக் கண்டு அதிர்ந்தவள் அதிலும் அவனிடமிருந்து வந்த மது வாடை மற்றும் சிகரெட் புகையின்  வாடை அவளுக்கு உமட்டிக்கொண்டு வர… அவனை தன்னிடமிருந்து பிரித்தெடுத்தாள் .. அவளது செயலில் கோபம் கொண்டு ‘ ஏன் டி என்ன தள்ளிவிடற… என்ன ரொம்ப ஸ்மெல் வருதா இல்ல என்னோட தொடுகை உனக்கு பிடிக்கலையா’

 

‘அச்சோ பாவா என்ன பேசுறீங்க ப்ளிஸ் தூங்குங்க எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்’ இப்போ நீங்க இருக்கும் நிலையில் இது வேண்டாமே என்று மன்றாடியவளின் பேச்சைக் கேட்டவனின் பார்வையில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது…

 

போதா குறைக்கு தினேஷின்  நக்கலான பேச்சும் சாதிக் தன்னிடம் செய்த விதண்டாவாதம் எல்லாம் நேரெங்கேட்ட நேரத்தில் அவனுக்கு நியாபகம் வந்து தொலைத்து’ என்ன சொன்ன… வேண்டாமா ஏன்? ஏன் வேண்டாம்? என்ன சகித்துக்கொள்ள உனக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கு இல்ல வேற பிளான் இருக்கா… ஏனெக்கென்னடி குறைச்சல்… நான் உன்னோட முன்னாள் காதலனை விட நல்லாத்தான் இருக்கேன்… இதுவே அவனா இருந்தா நீ  மறுத்திருப்பியா… என்னடி சொல்லு மறுத்திருப்பியா’ என்றான் இரக்கமே இல்லாமல் கொடூரமான வார்த்தையால் அவளை கொன்றுக்கொண்டிருந்தான் அவளது மனதை யாரோ சம்மட்டியால் அடித்ததுப்போல் வலித்தது… என்ன வார்த்தை சொல்லிவிட்டான்?

 

கடவுளே தனது நெஞ்சை யாரோ இரண்டாக பிளப்பதுப்போல் உணர்ந்தாள்…

 

அதன் பிறகு அவளாலும் அவனை மறுக்க முடியாமல் போனது எப்படி ஆரம்பிக்க வேண்டிய தாம்பத்தியம்… புனிதான உறவை கொச்சை படுத்தியது மட்டும் அல்லாமல் அவளை உயிரோடு கொன்று குவித்தான்… அவளது இதழ்களை முரட்டுத்தனமாக சிறை செய்தவன்.. உயிருள்ள பறவையின் சிறகை பிய்த்தெடுத்தல் அது எவ்வாறு வலியில் துடிக்குமோ அதைவிட அதிகமாக மித்ரா அவன் தொடுகையில் உயிரற்ற ஜீவனாய் கிடந்தாள்… அவளது அங்கங்கள் முழுவதும் வழியெடுக்க… அவனது மனதில் எரிந்து கொண்டிருந்த தீ சற்று அணைந்ததில்  அவனது விழிகள் உறக்கத்தை தழுவியது சுகமாய்…

 

பெண்ணவளோ உறங்க முடியாமல் வலியில் தவித்தாள்… அந்நிலையில் இருந்தவள் மயங்கி சரிந்தாள்…

 

துளிர்விட்டு அழகாக மலர்ந்த அவன் மீதான காதல் சுகமாக மணம் வீசிய தருணத்தில் கொடியோடு பிடிங்கி வீசி எரிந்துவிட்டான்…

 

நன்றி தோழமைகளே

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

திவ்யபாரதி
4 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Superb and fantastic waiting for the next part eagerly


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya bharathi says:

   Nxt part potachi mam padichitu sollunga mam


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Sooooper


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya bharathi says:

   Thank u sister

error: Content is protected !!