Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-26

அத்தியாயம்26

 

கூடல் முடிந்து அவள் உறங்கிவிட…. ஆதித்யன் மிகுந்த மகிழ்ச்சியில் உறக்கமின்றி தன் மனைவியின் மதி முகத்தினைப் பார்த்திருந்தான்… அவளது நெற்றியில் முத்தமிட்டவன் ‘ தாங்ஸ் டி பேபி… நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் டி’ என்றவன் அவளை அணைத்து கொண்டு மெல்ல உறங்கச் சென்றவனை நித்ராதேவி தழுவிக்கொண்டாள்….

 

மன்னவனின் நெஞ்சை தலையனையாய் மாற்றி அதில் முகம் புதைத்து  உறங்கிக் கொண்டிருந்தவளின் துயில் மெல்ல கலைந்ததை அடுத்து தலைநிமிர்ந்து பார்த்தவளின் பார்வை கணவனின் முகத்தில் படர்ந்தது… அவனது முகத்தை கண்டவள் மேலும் வெட்கப்பட்டு இரு கையால் தன் முகத்தை மூடிக்கொண்டாள்… பின்பு அவளின் மனக்கண்ணில் தன் மனம் கவர்ந்த மன்னவனின் தாபம் குறையா தீண்டலில் திளைத்து நின்றது…

 

‘ பாவா என்னை உங்களுக்கு அவ்ளோ பிடிக்குமா என்ன’!!! என்ற கேட்டு தன் கணவனை ஏறிட்டால்… அவனின் முன்னுச்சி முடி காற்றில் அழகாக அசைந்தாட ஆண்மகனுக்குரிய கம்பீரமும்… அவனின் அழகிய வதனத்தில் அவளின் இதயம் சிக்குண்டு நின்றது… ஆண் மகனுக்கே உரிய இலக்கணத்தோடு கர்வமாய் இருந்தவனைக் கண்டு இவன் தன் கணவன் என்ற கர்வம் அவளுள் எழுந்தது… அவன் முடியை ஆசையாக கோதிவிட்டவளின் ஸ்பரிசம் உணர்ந்தோ அல்லது உறக்கம் கலைந்ததோ அவன் மெல்ல புரண்டு படுக்க… அதில் பெண்ணவள் அப்படியே சிலையாக இருந்தாள்… பின்பு அவன் எழுந்துக் கொள்ளவில்லை என்று உறுதி செய்தவள் மெல்ல கட்டிலைவிட்டு இறங்கி குளியல் அறையை நோக்கி விரைந்து சென்றாள்….

 

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நேரே எம்.ஆர் குரூப்ஸ் கம்பெனி எம் டி தினேஷின் கட்டளைப்படி நேஹா அங்கு வந்து சேர்ந்தால் ‘ சொல்லு தினேஷ்… திரும்பவும் என்ன எதுக்கு மறுபடியும் டிஸ்டர்ப் பண்ற…. நான் தான் எடுத்தது எல்லாத்தையும் உன்கிட்ட கொடுத்துட்டேன்… என்னோட வாழ்க்கையையும் உனக்கு பயந்து விட்டுட்டு போய்ட்டேன்…. ஏன் விடாம இப்படி என்ன டார்ச்சர் பண்ற’ என்று ஆதங்கத்துடன் அவள் வினவ…

 

‘ஏய் இங்க பாரு உன்னோட சீன்லாம் என்கிட்ட போடாத வாழ்க்கையாம் வாழ்க்கை… உன்னமாதிரி தே***** க்கு வாழ்க்கை ஒன்னுதான் கேடா’ என்றவனின் வார்த்தையை கேட்டவள் அவனை உருத்து விழித்தாள்… ‘ என்ன பார்வையெல்லாம் பலமா இருக்கு … நான் உனக்கு செஞ்சதெல்லாம் அதுக்குள்ள மறந்துட்டியா… இல்ல நியாபக படுத்தனுமா ‘ என்று அவன் கூறி முடிக்கையில் அவள் தேகமெங்கும் உதறல் எடுக்க… நான் இப்பொழுது இருக்கும் நிலையில் கோபப்படுவது சரியில்லை என்று நினைத்தவள்…

 

‘ சொல்லு தினேஷ் … இப்போ நான் உனக்கு என்ன பண்ணனும்… என்னால முடிஞ்சது நான் பண்றேன்’ அவள் புத்திசாலி தனத்தைக் கண்டு தனக்குள் மெட்சியவன்’ குட் தட்ஸ் மை கேர்ள்… பரவயில்லையே டக்குனு பாயிண்ட்டுக்கு வந்துட்டே’ சரியென்றவன் அவளை நேருக்கு நேர் நோக்கி தன் திட்டத்தை அவளுக்கு எடுத்துரைத்தான் ‘ சி நான் உன்னை திரும்பவும் கூப்பிட்டது என்னோட காரியமா இருந்தாலும் இதுல உன்னோட வாழ்க்கைனு சொன்னியே அதுவும் இதுல அடங்கி இருக்கு…

 

இதுல உனக்கும் எனக்கும் லாபம்தான்’ ஆகையால் நீதான் இதனை செய்யவேண்டும் என்று கூறியவனை பார்த்தவள் தன்னை வில்லங்கத்தில் மாட்ட வைப்பதே இவனுக்கு வேலையாய் போயிற்று…. இதில் தனக்கு நல்லதை பற்றி இவன் யோசிப்பதா?? நம்பமுடியவில்லையே என்னவாக இருக்கும் என  கேள்வியால் தினேஷை ஏறிட்டவள்

 

‘ எனக்கு புரியல… தினேஷ் இதுல என்னோட வாழக்கை பத்தி யோசிக்க என்ன இருக்கு இதுல எப்படி என்னோட வாழ்க்கைய காப்பாதிக்க முடியும்’ என்று எதிர் கேள்வியை அவனைப் பார்த்து தொடுக்க அவன் சத்தமாக சிரித்தபடி’ நேஹா ரொம்ப இன்னசென்ட் மாதிரி பிஹவ் பண்ணாத உன்னைப் பத்தி எனக்கு தெரியும்… யூ நோ சம்திங்…. ஆதிக்கு மேரேஜ் ஆகிடிச்சி… அதாவது உனக்கு தெரியுமா… எனக்கு என்னமோ இந்த கல்யாணத்துல உங்க ரெண்டு பேரு மேலத்தான் சந்தேகமாயிருக்கு’ ….

 

அவன் கழுகு பார்வையால் அவளை நோட்டமிட… அவளோ ‘ ஐயோ தங்களது திட்டத்தை இவன் அறிந்துக் கொண்டானோ… இல்லையே தங்களது திட்டம் இவனுக்கு தெரிய வாய்ப்பில்லையே… ஆதிக்கும் தனக்கும் இடையிலான பேச்சு இவனுக்கு தெரிய வாய்ப்பேயில்லை இவன் தன்னிடம் போட்டு வாங்குகிறான் என நினைத்தவள் ‘ என்ன சொல்ற தினேஷ்… ஆதிக்கு மேரேஜ் ஆகிடிச்சா’ அதிர்ச்சி நிறைந்த பார்வையோடு அவள் அவனைப் பார்த்துக் கேட்க…

 

அவனோ நம்பாத பார்வை பார்த்தான்… அவன் பார்வையை உணர்ந்தவள் ‘ தினே…. தினேஷ்… உண்மையாவே எனக்கு தெரியாது இப்போ நீ சொல்லித்தான் எனக்கு தெரியும்’ என்றவள் முதலைக் கண்ணீர் வடித்தாள்… அவளோ தன் வழக்கமான நடிப்பின் திறமையைக் கொண்டு நாடகமாட… முதலில் நம்பாதவன்…

 

பின்பு அவள் கண்ணீர் பொய்யல்ல என்ற முடிவுக்கு வந்தவனாய் ‘ ஓஹோ…  உனக்கு தெரியாது ம்ம்ம்… அதான் இப்போ தெரிஞ்சிடிச்சே இப்போ என்ன பண்ணப்போறதா இருக்க… எனக்கு வாழ்க்கை பிச்சை கொடுன்னு அவன் காலுல விழுந்து கெஞ்ச போறியா’ அவளை தூண்டி விடும் பொருட்டு அவன் கேள்வி அம்புகளை அவள் மேல் தொடுத்தான்… அவள் யாரோடு வாழ்ந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாதவன் இப்பொழுது அவளால் தனக்கு ஒரு காரியம் ஆகும் பொருட்டு அவளை ஆசைக்காட்டி தூண்டிவிட முடிவு செய்தான்….

 

அவளோ தனக்குள் சிரித்துக்கொண்டவள் “அட போடா பைத்தியம்… நான் ஏண்டா அவன் காலுல போய் விழனும்… அவன் வேணா என் காலுல வந்து விழுவான் அவன் முன்னவே என் பின்னாடி வந்தவன்  என்னோட அழகுல மயங்கி நின்னவன் தானே… இப்பமட்டும் என்ன புதுசாவா ஒதுங்கிடுவான்… திரும்பவும் அவன் என்னோட வழிக்கு வரவைக்க எனக்கு தெரியும்’ எப்பொழுதுமே அவள் அழகில் அவளுக்கு என்றும் கர்வம் உண்டு அதனால் தான் அவன் மீது அவளுக்கு அசாத்திய நம்பிக்கை ஏற்பட சபதம் கொண்டாள்….

 

குளித்து முடித்து வெளியே வந்தவளை பின்னாலிருந்து அணைத்துக் கொண்டவன்… அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் ‘ பாவா என்னதிது காலைலேயே இப்படி பண்றீங்க… ப்ளீஸ் விடுங்க பாவா… நேரம் ஆகிடிச்சி பாட்டிக்கு கஞ்சி கொண்டு போகணும் ப்ளீஸ்” என அவனோ விடாப்பிடியாக அவளது கழுத்தில் முகம் புதைத்தபடியே பேபி இப்போ நான் ஒன்னும் பண்ணலையே… நீ தாராளமா போகலாம்… போ ‘ என்று அவளை போக சொன்னவன் விடாமல்  அவளை பிடித்துக்கொண்டு இருந்தான்….

 

அவனது அணைப்பில் இருந்தபடியே “ பாவா இப்படி பிடிச்சிவச்சிக்கிட்டா நான் எப்படி போறது’ என பாவம் போல் கேட்ட மனைவியின் அழகில் சித்தம் கலங்கி போனவனாய்… அடுத்து தாக்குதலுக்கு தயாரானவன் போல் அவனது இதழ்களும் அவள் மேனியில் செவ்வன தன் பணியை தொடர்ந்தது…

 

அவனது  செயலைக் கண்டு திகைத்தவள் ‘ பாவா…. நேத்தி முழுசும் தூங்காவிடலை… இப்பவும் இப்படி பண்றீங்க’ என்று தன் மனதில் எழுந்ததை சாதாரணமாக கூறவந்தவள் தான் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என நிதானித்தவள் வெட்க்கப்பட்டு சட்டென நிறுத்திக்கொண்டாள்…. ‘ அச்சோ போச்சி சும்மாவே அவங்க சும்மா இருக்க மாட்டாங்க நான் வேற இருக்க முடியாம வாய கொடுத்து மாட்டிக்கிட்டேனே’ தன்னையே நொந்துக் கொண்டு அமைதியாக நின்றாள் மித்ரா….

 

அவளிடமிருந்து எந்த பேச்சும்மின்றி போக “பேபி… என்ன சொன்ன கம் அகையின்???….  நேத்தி என்ன நடந்திச்சி…. ஏன் நீ தூங்கலை???’ அவளிடம் வம்பிழுக்கும் பொருட்டு அவளை சீண்ட… அவன் வேண்டுமென்றே தன்னை சீண்டுகிறான் என நினைத்து மங்கையவள் வார்தைகளின்றி அவன் முன் மௌனமாக நின்றாள்…. அவனோ மீண்டும் வம்புக்கு இழுக்க’ பச்…. போங்க பாவா… ப்ளீஸ் பாவா… என்ன விடுங்களேன்’ என்று கெஞ்சி கேட்ட மனையாளின் அழகில் சொக்கியவன் அவளை தன் கைகளில் ஏந்தி வீர நடையோடு ஆர்பாட்டமான சிரிப்புடன் கட்டிலை நோக்கி நடந்தான்….

 

அவளைப் படுக்கையில் கிடத்தி அவளுடன் சரிந்தவனை தடுத்தவள் ’பாவா….. நான் குளிச்சிட்டேன் ப்ளீஸ் திரும்பவும் என்னால குளிக்க முடியாது’ என்று பாவம் போல் கூறியவளை கண்டவன்’ பரவயில்லை பேபி நான் உன்னை குளிப்பாட்டி விடறேன் சரியா…. நோ டென்ஷன் பேபி கூல்’ இந்த அடியேன் இருக்க பயம் ஏன்??? என்று வீர வசனம் பேசியவன் அவளிடமிருந்து தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்ட பிறகே அவளை விடுத்தான் ‘ ச்சே… போங்க பாவா நீங்க ரொம்ப மோசம்’ ,என்றவள் விட்டால் போதுமென்று ஓடியேவிட்டாள்… அவனை விட்டு ஓடியவளை அவனது சிரிப்பொலியும் விடாது அவளை துரத்தியது…..

 

‘பிரபா நான் உங்களுக்கு கொடுத்த வேலை முடிஞ்சதா…. நான் அந்த வேலையை சொல்லி இன்னையோடு ஒரு வாரமாகுது நீங்க தாமதிக்கிறத பார்த்தா எனக்கு உங்கமேல சந்தேகமா இருக்கு ‘  தனது நாற்காலியில் அமர்ந்தபடியே சந்தேக தொனிக்க அவனைப் பார்த்து கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தான் ஜெகதீஷ் வர்மன்… ‘ இல்ல சார் எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நான் இன்னும் இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணிக்கிட்டுத்தான் சார் இருக்கேன்… கமிட்டி மேம்பேர்ஸ் வரை ஆளுங்கள வச்சி ஒவ்வொரு மூவ்மெண்டையும் உங்களுக்கு சொல்லிடுத்தான் சார் இருக்கேன்… என்னை நம்புங்க சார்” மிகவும் கெஞ்சிய குரலில் கேட்ட பிரபாவை பார்த்த ஜெகதீஷ் ‘ அப்போ சரி… உங்களை நான் நம்புறேன்… கமிட்டி கிட்ட  இன்பர்ம் பண்ணிருங்க அதாவது இன்னும் டூ வீக்ஸ்ல இங்க இருக்கிற எல்லா மீட்டிங்ஸ், ஆடிட்டிங்ஸ் எக்ஸ்ட்ரா… எல்லாம் கிளீயர் ஆகணும் அண்ட் லிஸன் இந்தியா ரிட்டர்ன் டிக்கெட் போட்டுடுங்க… யூ அண்டெர்ஸ்டான்ட்’ எஸ் சார் என்றவன் ஜெகதீஷ் கூறியதுபோல் விரைவில் எல்லா வேலைகளையும் முடிக்குமாறு தகவல் இன்றே அனுப்பும் படி  தெரிவித்து அறையை விட்டு வெளியேறினான்….

 

அறையைவிட்டு வெளியே வந்தவன் தன்னை யாராவது தொடர்ந்து வருகிறார்களா எனப் பார்த்துக்கொண்டே சென்றவன்…  சிறிது தூரம் சென்றபின் தனது தொலைபேசியை எடுத்தவன் தனக்கு இந்த வேலையை  உத்திரவிட்டவனுக்கு அழைத்தான் மறுப்பக்கத்தில் அழைப்பு எடுத்ததை அடுத்து “ சார்… நான் பிரபா பேசுறேன் சார்… எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு சார்… அவருக்கு என்மேல சந்தேகம் வந்திருச்சி சார், நான் இப்போ சமாளிச்சிட்டேன் ஆனா அவரு இன்னும் ரெண்டு வாரத்துல வேலைய முடிக்கணும் இந்தியா திரும்பணும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு சார்” மிகுந்த அச்சத்தோடு வார்த்தைகள் குளறிக்கொண்டு வெளியே வந்தது….

 

‘பிரபா நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம்… நான் பாத்துக்கிறேன்(பெயர் குறிப்பிட வில்லை) நான் சொன்னதை மட்டும் நீங்க செஞ்சா போதும்’ என்றவன் மறுப்பேச்சின்றி தொடர்பை துண்டித்திருந்தான்….

 

‘தினேஷ் நீங்க சொல்ற மாதிரி பண்ணினா எனக்கு எந்த பிரச்சனையும் வராதே ‘  அவளைப் பார்த்து இகழ்ச்சியாக சிரித்தவன் ‘ நான் சொன்னதை பண்ணலைன்னாதான் உனக்கு பிரச்சனை அதைவிட நீ ஒன்னும் இது எனக்காக பண்ணலை… உனக்காகத்தான் நீ செய்யுற அதை புரிஞ்சிக்க… ஹ்ம்ம் உன்னை மாதிரி என்னை நினைச்சியா… சொல்றதை செய்யுறதும்…. செய்யப்போறத சொல்றதும் தான் இந்த தினேஷ் ஸ்டைல் சொல்லாம செய்யுறதா, இந்த தினேஷ் அகராதியிலே கிடையாது மைண்ட் இட்’ தினேஷின் குரல் அவளுள் குளிரெடுக்க சரி என்று தலையாட்டி தன் விருப்பத்தை தெரிவித்தாள்…

 

அவனோ பலியாடு பூஜைக்கு தயாராகிவிட்டது என்பதை ஊர்ஜித்தவன் வெற்றி களிப்போடு அவளை உடனடியாக ஆதியின் அலுவலகத்தை அணுகுமாறு கட்டளையிட்டான் நேஹா உன்னோட முதல் வேலையை அங்கிருந்து தொடங்கு… அடி சருக்குனா தன்னால வழிக்கு வருவான்’ அவனை எங்கு அடித்தால் எங்கு வலிக்குமென்று  பதம் பார்த்து அடிக்க குறி வைத்தான் தினேஷ்….

 

ஆதி லேட் தி கேம் ஸ்டார்ட் நவ் …. இட்ஸ் மை டர்ன் ஹாஹா…. இதுக்கு அப்புறம் தெரியும் இந்த தினேஷ் யாருனு’ என்றவன் தனக்குள் சிரித்துக்கொண்டான்…..

 

அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தவன் தனது அறைவாயிலை நொடிக்கு ஒருப்பொழுது எதிர் நோக்கி காத்துக்கொண்டிருந்தான்… அவன் குளிப்பதற்கு முன் கீழே சென்றவள்… அவன் அலுவலகம் செல்வதற்கு தயாராகியும் அவள் வராததை நினைத்து கடுப்பாகியவன்’ பேபி… டைம் ஆகிடிச்சி பிரேக்பாஸ்ட் ரூம்க்கு எடுத்துட்டுவா”  என அவளோ கிச்சனில் கண்ணம்மாவுக்கு உதவிக் கொண்டிருந்தவள் காதில் விழுந்தாலும் தன் மனதில் கணவன் எதற்கு அழைக்கிறான் என்று அறிந்தவள் காலை உணவுகள் நிறைந்த தட்டை கண்ணம்மாவிடம் கொடுத்து அனுப்பினாள் ‘ கண்ணம்மா… நான் பாட்டிக்கு கஞ்சி கொடுக்கணும் .. அதுனால அவருக்கு சாப்பாடு நீங்க கொண்டுபோய் கொடுத்துடுங்க’ என்றவளை புன்னகையுடன் எதிர்கொண்ட கண்ணம்மா ‘ சரிம்மா நான் கொண்டுபோறேன் நீங்க போய் உங்க வேலையை பாருங்கம்மா’ என்று கூறியவர் மித்ரா கொடுத்த உணவை எடுத்துக்கொண்டு ஆதியின் அறைக்கு சென்றார்….

 

வாயிலில் அரவம் கேட்டு உதட்டில் நமுட்டு சிரிப்பு தவழ பின்னால் திரும்பி பார்த்தவன் வெகுவாக அதிர்ந்தான் “பெரியய்யா மித்ரம்மா உங்களுக்கு உணவு கொடுக்க சொன்னாங்க’ என்று கண்ணம்மா கூற” “சரி கண்ணம்மா அங்க வச்சிட்டு போ”  என்று மேஜையை சுட்டிக்காட்ட அவரும் எந்த பேச்சிமின்றி உணவை வைத்துவிட்டு வெளியேறினார்…

 

அவனோ “ ராட்சசி உன்னை கொண்டு வர சொன்னா நீ ஆள விட்டு அனுப்புறிய…இருடி உன்னை வச்சிக்கிறேன்” என்றவன் தன்னை தயார் செய்துக்கொண்டு கீழே கிளம்பி சென்றவனின் கண்ணில் அவனது மனையாள் பாடுவேனா என்று அவனுக்கு சவால் விட தன் மனைவியை தேடிக் கொண்டு கமலம்மாளின் அறைக்கு சென்றான். அவன் தேடி வந்த சிஸ்ட்டி கேஜி தாஜ்மஹால் அங்கேத்தான் இருந்தாள்… உள்ளே வந்தவனை பார்த்து நக்கல் சிரிப்பு சிரிக்க அவனோ ‘ சிரிக்கரியா இருடி இன்னைக்கு உனக்கு இருக்கு ‘ என்று கருவிக்கொண்டவன்…

 

கமலம்மாளின் அருகில் சென்றவன் அவரிடம் பேசிக்கொடுக்கும் விதமாக தன் மனைவியை பார்வையால் விழுங்கியப்படி’ பாட்டி என்ன சாப்பாடுலாம் ஆச்சா’ என என்றும் இல்லாத நாளாய் அவன் விசாரித்த விசாரிப்பில் அது தனக்கு இல்லை மித்ராவைத்தான் அவன் ஜாடையாக கேட்கிறான் என்று உணர்ந்தவர்… அவரோ அவனை சீண்டும் பொருட்டு’ மித்துமா… வெளில எங்கையாவது மழை வருதா பாரு… இன்னைக்கு விசாரிப்பெல்லாம் பலமா இருக்கே…டேய் ரொம்ப ஐஸ் வைக்காத உன்னோட பொண்டாட்டிய பார்க்கத்தான வந்த போ… போ அவ வருவா’ என்றவர் சிரிப்புடன் கூற அவரது கூற்றில் அவன் தான் அசடுவழிந்து நின்றான்… பின்பு தன்னை சமாளித்துக் கொண்டு எழுந்தவன் தன் பாட்டிக்கு நன்றி கூறிவிட்டு  தன் மனைவியை நோக்கி வருமாறு கண்களால் சைகை செய்து சென்றான்….

 

அவன் சென்ற சிறிது நேரத்தில் தன் வேலைகளை முடித்துக்கொண்டு கிச்சனுக்குள் சென்றவளை கையை பிடித்து இழுத்தவன் அவளை சுவற்றின் மீது சாய்த்து தன் இரு கைகளால் அவளை கைது செய்தான்’ பாவா என்ன பண்றீங்க இங்க ஆளுங்க வந்து போற இடம்… விடுங்க என்ன… ஹ்ம்ம் அவனை முறைத்தவள்  என்ன விடப் போறீங்களா இல்லையா’ கண்களை விரித்து அழகாக பேசியவளை கண்டவனின் பார்வையில் கிரக்கம் மட்டுமே இருக்க… அவளது கருவிழி இரண்டும்  அவனிடம் கவிதைப் படைப்பதுப்போல் தோன்றியது ‘ ஹ்ம்ம் காலைல இருந்து எனக்கு தண்ணி காட்டிட்டு இருந்தால… கூப்பிட்டா மேடம் வரமாட்டீங்களோ…. அவ்ளோ உஷாரு… ஹ்ம் பாவம் இப்போ மாட்டிக்கிட்ட இப்போ என்னடி பண்ணுவ எங்க ஓடு பார்க்கலாம்… அது என்ன அப்படி ஒரு சிரிப்பு நான் மாட்டுனதுல உனக்கு அவ்ளோ சந்தோஷமா சிரிச்ச இந்த லிப்ஸ்க்கு பனிஷ்மெண்ட்  கொடுத்தே ஆகணும்… என்ன கொடுத்துரலாமா’ என்றவன் அவள் கைகள் மீது தன் கைகளை வைத்து அழுத்தம் கொடுத்தவன் மேலும் அவளிடம் நெருங்கினான்…

 

அவளுக்கும் அவனுக்கும் நூல் அளவிலான இடைவேளியை குறைக்க… அவளின் இடையைப்பற்றி தன்னருகே இழுத்தவன்… ஒரு நிமிடம் தாமதித்து மறுநொடி அவள் இதழை தன் வசமாகியிருந்தான் பாவையவள் முதலில் பயந்தாலும் அவன் ஆளுமையில் மயங்கி கண்கள் மூடிக் கொண்டு அதை ரசிக்கும் வண்ணமாய் அவன் தலையை கோதியப்படி அவளும், அவள் வெற்றிடையை இறுக பற்றியப்படி அவனும் சுற்று புறத்தை மறந்து இருவரும் ஒருவருக்குள் ஒருவர் கரைந்துக் கொண்டிருந்த நிமிடம் கிச்சனின் வாயிலில் அரவம் கேட்டு சட்டென இருவரும் மூச்சுவாங்கியப்படி விலகி நின்றனர்…

 

மித்ராவிற்கோ வெட்கம் பிடுங்கி திங்க குனிந்த தலையை நிமிர மறுத்தால் அவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்த வர்ஷா’ ஹ்ம்ம் இதெல்லாம்  சரியில்ல… கிட்சனுக்குள்ள இந்த பூனைங்க தொல்லை தாங்கமுடியலைப்பா… எங்க போனாலும் சுத்தி சுத்தி திருட்டுத்தனமா பாலைக் குடிக்கிறதே வேலையாப் போச்சி’ என ஆதியோ ‘ உனக்கு இங்க என்ன வேலை ஒழுங்கா படிக்கிற வேலையைப் பாரு அதைவிட்டுட்டு இப்படி பெரிய மனுஷி தனமா பேசக்கூடாது சரியா’ என்று தன் தங்கைக்கு அறிவுரை கூறியவன் அவளது காதை திருகியப்படி பேசிக்கொண்டிருக்க அதில் வர்ஷாவிற்கு வலி ஏற்பட அவள் வலியால் அலறினாள்….

 

‘ விடுங்க ஆதி அண்ணா வலிக்குது’ என்றவள் அவனிடமிருந்து தன் காதை பாதுக்காத்தவள் ‘ ம்ம்ம் நீங்க ரெண்டு பேரும் இப்படி ரொமான்ஸ் பண்ண கிச்சன்தான் கிடைச்சிதா… அதுவும் சின்ன பொண்ணு முன்னாடி’ என்று தன் தலையில் அடித்துக்கொண்டு விளையாட்டாய் குற்றம் சாட்டியவளை செல்லமாக முறைத்தான்… மீண்டும் தன்னை அடிக்க வந்தவனிடமிருந்து சிட்டாக பறந்து சென்றாள்… இத்தகைய மனநிறைவுடன் அலுவலகம் சென்றவனின் நிம்மதியை குலைக்க வேண்டி அங்கு விதி சதி செய்ய காத்திருந்தது….

 

நன்றி தோழமைகளே

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

திவ்யபாரதி
4 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Waiting for the next episode sis


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   dhivya bharathi says:

   On the way sis


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Nice update…………..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks sister 😍😍😍

error: Content is protected !!