Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-27,28

அத்தியாயம் 27

 

உதட்டில் புன்னகை தவழ மனம் முழுவதும் தன்னவளிடம் சிக்கிக்கொண்டு சிரித்த முகமாகவே அலுவலக அறைக்குள் நுழைந்தான் ஆதித்ய வர்மன்… என்றுமே ஒருவித இறுக்கத்துடனும் கடமையே கண்ணாக இருப்பவனின் இந்த புன்னகை முகம் அனைவருக்குமே புதியது பணிப்புரியும் ஊழியர்கள் அனைவரும் ஏதோ எட்டாவது அதிசயம் போல் வாயை ‘ஆ’ வெனப் பிளந்துக்கொண்டு பார்திருந்தனர்… அதே தோரணை கலையாமல் தன் அறைக்குள் சென்றவன் சுழல் நாற்காலியை ஸ்டைலாக சுழற்றி அதில் அமர்ந்தவன் முதல் வேலையாக தன் மனைவிக்கு அழைத்தான்…

 

முதல் அழைப்பிலையே அலைபேசியை உயிர்பித்தவள் ‘ பாவா…. சொல்லுங்க பாவா ஏதாவது முக்கியமான பைல்ஸ் மறந்துட்டீங்களா…வேணும்னா ஆஃபீஸ் பையன அனுப்பிவிட்றிங்களா கொடுத்துவிடறேன்…ஹலோ,,,, ஹலோ’ மறுபக்கதிலிருந்து எந்த பேச்சுமின்றி போக…. மீண்டும் ‘ ஹலோ பாவா’ என்றாள்…

 

அவளது அன்பு கணவனோ வார்த்தைகளை கடித்து துப்பினான் “என்னடி மனுஷன் ரொமான்டிக் மூடுல இருந்தேன்… பேசலாம்னு போன் பண்ணா நீ எனக்கு என்னோட வேலைய பாருனு சொல்லாம சொல்லி நியாபகம் படுத்துறியா… என்னடி பேபி… கொஞ்சம் கூட ரொமான்ஸ் இல்லாம இருக்க’ என்றவனின் கூற்றில் அழகாக வெட்கப்பட்டவள் தன் கணவன் தனக்காகத்தான் அழைத்திருக்கிறான் என்று தோன்ற அவளுள் சொல்ல முடியாத சுகம் பரவியது…

 

‘ என்ன பேபி  பேச்சையே காணோம் என்ன வெட்கப்படுறியா’ என அவளோ கண்களை அழகாக விரித்தாள் ஆச்சிரியத்தில்… எப்படி அவர் தன்னைப் பார்க்காமலேயே சொல்கிறார் என்றவள் அறை முழுவதிலும் தன் பார்வையை சுழற்றினால் ஏதாவது கேமரா வைத்திருக்கிறானா என்று சிந்தித்தவளின் எண்ணப்போக்கை கவனித்தவன்…

 

‘ என்ன பேபி கேமராவ தேடி பாக்குறியா… ஹ்ம்ம் கரெக்ட்… நான் நம்ப ரூம்ல உனக்கு தெரியாம கேமரா வச்சிருக்கேன்… அதுலதான் நான் உன்ன தினமும் உண்ண வாட்ச் பண்றேன்’ என கூறிக்கொண்டிருக்கும் போதே அவன் காதில் விசும்பல் சத்தம் கேட்டது…

 

‘ஹேய் பேபி அழுகிறியா என்ன’ அவன் கேட்க அவளோ ‘ ஹ்ம்… ஹ்ம்ம் ஆ…. ஆமா… கேமரால எல்லாமே தெரியுமா’ என்று கேட்க அவள் கூற வருவதை புரிந்துக்கொண்டவன்… ‘ ஹ்ம்ம் ஆமாம் பேபி’ என்று அவன் பரிதாபம்போல் கூறி சத்தமாக சிரித்தான்…அவனது பேபியோ ‘ ஏன்…. ஏன் இப்படி பண்றிங்க’ என்றவள் மேலும் வார்தைகளின்றி தேம்பினாள்….

 

அச்சோ ரொம்ப விளையாடிவிட்டோமோ பாவம் அழுகிறாளே என நினைத்தவன் அவளிடம்’ பேபி … எது சொன்னாலும் நம்புவியா… உனக்கு  அறிவிருக்கா ரூம்குள்ள அதுவும் நம்ப ப்ரைவேட் ரூம்குள்ள…. நான் ஏன்டி கேமரா வைக்க போறேன் இதுலாம் யோசிக்க மாட்டியா பேபி’ அதுவும் நான் உன்னை விளையாட்டாக சீண்டுவதற்கென்று கூறிய ஒன்றை நம்புவியா என் அழகு பேபி என்று அவன் கொஞ்ச

 

‘சாரி பாவா…. நீங்க  சொன்னதெல்லாம் உண்மையா இருந்திச்சா… அதான் பாவா நான்  கொஞ்சம் பயந்துட்டேன்…. சாரி பாவா’ வார்த்தைக்கு வார்த்தை அவளது சாரி பாவாவில் உறுகியவன் ‘ பேபி சாரி இப்படியா சொல்வாங்க… வேறுமாதிரி எனக்கு சாரி சொல்லணும்னு சொல்லிருக்கேன் பேபி… எத்தனை தடவை கிளாஸ் எடுத்தாலும் வேஸ்ட் வந்து உனக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கிறேன்’ என்று கூற…

 

அவளோ’ அப்படியா!!! கண்டிப்பா!!! கிளாஸ்க்கு நான் ரெடிப்பா…. சொல்லும்போது பாடத்தை ஒழுங்கா சொல்லிக் கொடுங்க மறக்காத மாதிரி’ என்று வார்த்தையில் அவள் அழுத்தம் கொடுக்க அவளது பேச்சில் வாயடைத்து போனவன் ‘ உனக்கு வர வர கொழுப்பு கூடிட்டே வருது வரேன் …. வரேன்… வந்து சொல்லித்தரேன்’ என்றவன் இருப்பொருள் பட பேசிவிட்டு பறக்கும் முத்தமொன்றை அவளுக்கு கொடுத்து அலைபேசியை துண்டித்தான்…

 

பின்பு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தவன்…. சிறிது நேரத்தில் அதில் முழ்கியும் போனான்….

 

‘ஏய் மீரா ஆடிட்டிங் பைல்ஸ் எடுத்துக்கிட்டு சீக்கிரம் போடி… அவரு நல்ல மூட்ல இருக்கிறப்பவே போய் சைன் வாங்கிட்டு வந்துரு’ என்று மீராவுடன் பணிப் புரியும் தோழி சுகுணா அவளிடம் கூற… ‘ என்னது நானா ஏற்கனவே வாங்கி கட்டுனது பத்தாதா… நான் போய்த்தான் ஆகுனுமா என்ன… வேறு வழியில்லையே என்று எண்ணியவள் கோப்புகளுடன் உள்ளே சென்றாள்…

 

‘ எக்ஸ்யூஸ் மீ  சார்’ என்று கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்று… அவனது முகத்தை ஆராய்ந்தவள் அவனின் சிரித்த முகத்தைக் கண்டு நிம்மதியுற்றவளாய் ‘ சார்…இந்த பைல்ஸ் ஒர்க் எல்லாம் ஓவர் சார்… இதுல சைன் மட்டும் பண்ணிட்டிங்கன்னா… பைல்ஸுலாம் அனுப்பிடலாம் சார்’ என  ‘ ஓகே ஷுயர் ‘ கோப்புகளை வாங்கி பார்வையிட்டவன் அதன் பின்பே கையழுத்திட்டான்… மீராவோ மனதில் இரும்பு பாறைக்குள்ளும்  இதயமிருக்கும் போலும்… பாலைவனத்தில் கூட மலர் பூக்கிறதே!!!

 

அவன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான் என்றால் அவன் மனைவி ரொம்ப சாதுவாக இருப்பாளோ தன் பாஸ்ஸை பற்றி கணித்துக்கொண்டிருந்தவளின் நினைவை கலைத்தது ஆதியின் குரல்’ டேக் ஓவர் தீஸ் பைல்ஸ்’ என்றவன் மீண்டும் தன் வேளையில் மும்மரமானான்…

 

கோப்புகளை கையில் எடுத்துக்கொண்டு திரும்பி சென்றவளை ஆதியின் குரல் தடுத்தது’ என்ன மீரா ஏதாவது கேட்கணுமா’ என்று தன் தலையை கோப்புகளிடமிருந்து நிமிர்த்தாமலே கேட்க… அவளோ தன்னை நிதானித்து’  இப்போ எல்லாம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கீங்க… அதாவது உங்க கல்யாணத்துக்கு பிறகு… இந்த மகிழ்ச்சிக்கு காரணம் உங்க மனைவினு தெரியுது… நீங்க எப்பவும் இப்படியே இருக்கணும் சார்’ என்று கூறியவள் ஏதோ ஒரு வேகத்தில் பேசிவிட்டோம் கோபமாக ஏதாவது பேசப் போகிறார்… நீ யார் எனது சொந்த விஷயத்தில் தலையிடுவது என்று கேட்கப் போகிறார் தான் அதிகப்படியாக பேசிவிட்டோமோ என நினைத்தவளை நோக்கி நிமிர்ந்தவன் கோபம் கொள்ளாது மனநிறைவுடன்’  தாங்ஸ்’ என்று கூறி புன்னகை சிந்தியவனை கண்டவள்… தனது கையில் அடங்கியிருந்த கோப்புகளோடு வெளிய சென்றாள்….

 

மீண்டும் அவன் நினைவில் அவனது மனையாளே வலம் வந்தாள்… உண்மைத்தான் வாழ்க்கையில் எந்த பிடிமானமுமின்றி வாழ்ந்தவன் அவன்… துடுப்பிருந்தும் பயனின்றி காற்றில் கரைசேரும் படகுப்போல் தான் அவன் வாழ்த்து வந்தது…

 

அவனுக்கென்று ஒரு குடும்பம் மனைவி அமைவது சாத்தியமில்லை என்று எண்ணியிருந்தவன் வாழ்க்கையே வெறுத்தான் ஏனென்றால் முக்கிய காரணம் அவனது அன்னை பச்சிளம் குழந்தையை பால் வண்ணம் கூட மாறாத அந்நிலையிலும் தன் வாழ்க்கைத்தான் பெரியது என்று நினைத்து இரக்கமின்றி அவன் அன்னை அவனை விட்டு சென்றுவிட்டாள்… அன்னையின் அரவணைப்புக்கு , அன்புக்கும் ஏங்கியவன்… தனது அன்னை  தன்னை விட்டு சென்ற காரணத்தை அறிந்தவனால் அந்த வலி கொடுத்த காயம் அவனது மனதில் ஆறாத ரணமாய் மாற பெண்கள் மீதான அவன் மதிப்பு குறைந்தது… பின்பு அவன் பழகிய பெண்களின் வட்டாரம் எல்லாமும் சேர்ந்து அவனின் பூ போன்ற இதயத்தை முற்றிலுமாக மாறி இரும்பு கோட்டையாக மாற்றியது…

 

அதிலிருந்து பெண்கள் என்றாலே ஒரு பூடக பொருளாய் கருதியிருந்தவனின் எண்ணத்தை முற்றிலுமாக உடைத்தெறிந்து அவனது மனதைக் கொள்ளைக் கொண்ட அவனுக்கு மட்டுமே உரிமையான அவன் காதல் மனைவி மித்ரா ஆதித்யவர்மன்….

 

திருமண வாழ்க்கையே வேண்டாமென்று வெறுத்திருந்தவனின் இரும்பு கோட்டையை இடித்து பொடிப்பொடியாக்கி அவன் இதயத்தில் ராணியாக சிம்மசானமிட்ட முதல் பெண்ணும் கடைசி பெண்ணும் அவனின் மனையாளே!!!

 

அவன் எதிர்பாராத ஒன்றை சாத்தியப்படுத்தியது அவனது மனைவி… அவளின் அழகான மௌனமும் இக்குடும்பத்தின் மீது அவள் கொண்டுள்ள அக்கறை மற்றும் எந்நேரமும் அவளிடம் தென்படும் சாந்தம் இவை அனைத்துமே அவனை கவர்ந்தது தான்…. அதை இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை…

 

ஆனால்  ஈகோ அவனின் காதலை தடுத்து அந்த காதலை உரிமை என்னும் போர்வையில் அவளிடம் நிலைநாட்டியதை நினைத்தவனின் மனம் வருந்தத் தான் செய்தது… ஆனால் இந்த வருத்தம்கூட அவனுக்கு சுகமான வலியாக இருந்தது…

***************************

 

அவனின் மனைவியின் சிந்தனையில் இருந்தவனை அலுவலக பியூனின் குரல் கலைத்தது குரல் வந்த திசையை பார்த்தான்… பியூனைக் கண்டு என்ன ??? என்று பார்வையால் கேட்டான்??? ‘ சார்… அது வந்து’… ‘ சொல்லுங்க என்னாச்சு’ என்று ஆதி கேட்க ‘ சார் உங்கள பார்க்க நேஹா மேம் வந்திருக்காங்க’ என்றவனின் பேச்சை தொடர்ந்து ஆதியின் நெற்றி கேள்வியால் சுருங்கியது’ எதுக்கு இங்க இப்போ வந்திருக்கா… ஒரு வேளை தினேஷ் அனுப்பிருப்பானோ… தினேஷ் அனுப்பிருந்தா… அவளுக்கு இந்நேரம் உண்மை தெரிந்து இருக்குமே…. ஹ்ம்ம் வேண்டாம் எதுவும் தெரியாமல் தாமே ஒரு முடிவுக்கு வர வேண்டாமென்று முடிவெடுத்தவன் பியூனை பார்த்து அவளை அனுப்பு என்று கூறியவன் அவள் வரவிற்காக காத்திருந்தான்…

 

உள்ளே வந்த நேஹா ஆதியைப் பார்த்து’ டார்லிங்’ என்ற கூவலோடு அவனை பாய்ந்து வந்து அணைத்துக் கொண்டாள்… அவனை தடுக்கச் சென்றவன் அவனின் கையை இரக்கி யோசித்தான் அவளின் நோக்கம் என்னவென்று தெரியாமல் நாம் செயல்படுவது தவறு என்று நினைத்தவனாய் அவளை ஆரத்தழுவிக் கொண்டு…

 

‘ ஹேய் வாட் அ சப்ரைஸ் டார்லிங்… நீ எப்போ வந்த இந்தியாக்கு’ அவனின் சகஜமான பேச்சில் உள்ளம் குளிர்ந்தவள் ’பேபி… உன்னோட ரூம்க்கு வரதுக்கு எனக்கு எதுக்கு அப்பாய்ண்ட்மெண்ட் இடியட்ஸ் அப்பாய்ண்ட்மெண்ட் கேட்டு டார்ச்சர் பண்ணிட்டாங்க’ என பொறிந்தவள் மேலே தொடர்ந்தாள்…

 

‘ பேபி எனக்கு தெரியும் நான் இல்லாம நீ இவ்ளோ கஷ்டப்பட்டிருப்ப… சரி அந்த காலு விளங்காதவளை இன்னும் துரத்தி விடாம… அவளை ஏன் இன்னும் வீட்டுல வச்சிருக்க’ அவள் பேச்சை கேட்டு ரத்தம் கொதித்தெழ… நேஹா தன் மனைவியை ஊனம் என்று கூறும் போதே கண்ணை மறைத்துக் கொண்டு ஆத்திரம் வந்தது… ஆனால் சூழ்நிலை புரிந்து அமைதிக்காத்தான்….

 

அவன் மனதை புரியாமல் நேஹாவும் அவள் பாட்டிற்கு அவனிடம் உலறிக் கொண்டிருந்தாள் ‘ பேபி நம்ப போட்ட பிளான் உனக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும்… ஆனா இந்த தினேஷ்க்கு நம்ம பிளான் தெரியிதுப்போல… நீ சொன்னப்படி பிசினஸ் ரீதியா தினேஷை அடிக்கணும்னு முடிவு பண்ணித்தான் அவனது கவனத்த முழுசா நம்ப பக்கம் திருப்பத்தான் இந்த போலி கல்யாணம் கூட ஒரு ட்ராமாதான்…

 

அவனால கல்யாணம் நின்னமாதிரியும் இருக்கணும்னு நீ சொன்ன, அதே மாதிரி போட்ட பிளான் கட்சிதமா முடிஞ்சது… அவனும் நம்பிட்டான்… நீதான் கடைசில குடும்ப கௌரவம் பிசனிஸ் பீல்ட்ல பதில் சொல்லணும் இதுல என்னோட பிரெஸ்டீஜ் அடங்கி இருக்குன்னு நீ சொன்னதால’ இந்த செல்லா கல்யாணத்துக்கும் உனக்கும் அவப்பெயர் வராமலிருக்கவும் மனைவி என்ற பெயரில் ஒருத்தி வேண்டும் என்பதற்காக பெயரளவில் நடந்த  திருமணம்  அதுவும் முக்கிய காரணமாக தினேஷ் ஏதாவது ‘என்ன பண்ணிடுவானு பயந்து தான் நீ அந்த பலியாடு கழுத்தில் தாலி கட்டுன… இந்த பிளான் எதுவும் தெரியாம அவன் லூசு மாதிரி என்னைய மிரட்டி உனக்கு எதிரா சதி வேலைச் செய்யச் சொல்லி என்னைய அனுப்பிருக்கான் யூஸ்லெஸ் பெல்லோவ்’ என்று அவள் கூற…

 

அவனின் சந்தேகம் சரியே அவன் யூகித்து சரி என  நினைத்தவன் தினேஷ்தான் இவளை தூண்டிவிட்டு இருக்கிறான் அதில் ஐயமில்லை என்ற முடிவுக்கு வந்தவன் … மேலும் அவளிடமிருந்து கேட்க வேண்டி இருப்பதை உணர்ந்து அமைதிக்காத்தான்’ டார்லிங்… நானேதான் பேசிக்கிட்டு இருக்கேன்… நீ ஏன் எதுவும் பேச மாட்டேன்ற’…அவனிடம் குழைந்த வண்ணம்’ பேபி நம்ப ரெண்டு பேரும் ஒண்ணாயிருந்து இவ்ளோ நாளாகுது… ஷால் வி கோ பார் டேட்டிங்’ என்று அவனை மேலும் உரசியவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தியவனை புதிதாகப் பார்த்தாள் நேஹா ‘ டார்லிங் ஏன் என்ன விலக்கி விட்ற… ஓஹோ கல்யாணம் ஆகாம இதுமாதிரி வேண்டாம்னு சொல்றியா … ஏன் டார்லிங் இதுக்கு முன்ன நம்ப இப்படி பண்ணாததா… இது ஒன்னும் நமக்கு புதுசு இல்லையே’ என

 

அவளது பேச்சில் அவன் முகம் சுருங்கியது… அன்று அவளுடன் சேர்ந்திருந்த நாட்களை நினைத்தவனுக்கு தன் மேலே அவனுக்கு கோபம் வந்தது… ‘ சீ’ தான் இவ்வளவு கேவலமாக நடந்துள்ளோமா அன்றைய நாளில் தான் செய்வது சரி என்று நினைத்தவனுக்கு…

 

இன்றைய நாளில் அவன் செய்த தவறு அவனுக்கு பூதாகரமாக தெரிந்தது… இதை தான் … தான் செய்தோமா என நினைக்க மனைவியின் முகம் மனக்கண்ணில் வந்து சென்றது… அவளுக்கு தெரிந்தால் என்னை வெறுத்து விடுவாளோ நிச்சயம் வெறுக்கக் கூடும் தான் அவளிடம் நடந்துக்கொண்ட முறையே சரியில்லாதப்போது…

 

அவளிடம் எந்த நம்பிக்கை கொண்டு மன்னிப்பை நாம் எதிர்பாக்கிறோம் அவன் மனதின் குரல் ஓங்கி ஒலித்தது…

 

இதை தெரியவிடக்கூடாது என்று முடிவுசெய்தான் ( நீ எப்படி முடிவு செய்யலாம்… செய்ய வேண்டியது நானடா என்று விதி அவனை கேலி கூத்தாக பார்த்து சிரித்தது) இதை பக்குவமாய் கையாளும் பொருட்டு இவளை பகைத்துக்கொண்டால் தன் வாழ்க்கை சிக்கல் என்பதை தொடர்ந்து நேஹாவை சகித்துக்கொள்ள முடிவு செய்தான்… ‘ இல்ல நேஹா தினேஷ் பத்தி யோசிட்டு இருந்தேன்’ என்று தன் அமைதிக்கு விளக்கம்மளித்தவனின் மீது சலுகையாக அவன் தோல் மீது சாய்ந்துக்கொண்டவள் ‘ டார்லிங்… அவனப்பத்தி ஏதும் நினைக்கவேண்டாம்… நம்பலப் பத்தி மட்டும் யோசி’ அந்த’ தினேஷ நான் பாத்துக்கிறேன்… நம்ப கல்யாணத்த எப்ப வச்சுக்கலாம்… சீக்கிரமே அந்த ஊனத்துக்கு ஏதாவதுக் கொடுத்து அத்துவிடுங்க டார்லிங்’ என்றவளின் மேல் கொலை வெறிகூட கைமுஷ்டி இறுக தன் கோபத்தை அடக்க பெரும்பாடுபட்டவன் பற்களை நரநரவென கடித்துக் கொண்டு நின்றிருந்தான்….

 

தன்னை சமளித்துக் கொண்டவன் முகமெல்லாம் புன்னகை பூக்க நேஹாவிடம் திரும்பி ‘ சீக்கிரமே டார்லிங்… நீ சொன்ன மாதிரியே அவளை வெட்டிவிட்டுடு’… உன்னை எனது சொந்தமாகிக் கொள்ளும் நாள் வெகு அருகில் உள்ளது என்று கூறியவனை நிமிர்ந்து பார்த்தவள் அதை கொண்டாடும் பொருட்டு அவனின் இதழை நோக்கி செல்ல அவளின் இதழ் மேல் கைவைத்து தடுத்தவன் கல்யாணத்திற்கு பிறகு என்று கூறி அலுவலகத்தில் வேலை உள்ளதாக காரணம் காட்டி அவளை அனுப்பி வைத்தான்.

 

**********************************

அத்தியாயம் 28

 

இரவு  11.30 மணி நெருங்கியிருந்ததைக் கண்டவள்… தன் கணவன் வழக்கமாக வரும் நேரம் கடந்து சென்றதை அடுத்து அவன் எண்ணிற்கு அழைக்க நினைத்தாள்… பின்பு அவன் வேலைபளுவை உணர்ந்தவளாய் அவனை தொல்லை செய்ய வேண்டாமென்று அவனுக்காக காத்திருந்தாள்…

 

மேலும் நேரம் சென்றுக் கொண்டிருக்க இன்னும் வரவேற்பில் விளக்கு ஒளிர்வதை கண்ட தீபா’மித்துமா இன்னும் ஆதி வரலையா….இவ்ளோ நேரம் என்ன பண்றான்….கால் பண்ணியா இல்லையா…. அவன் ஏதாவது ‘தகவல் அனுப்பினானா தாமதமாவதற்க்கு என்று கேட்டவரை பார்த்து’இல்ல அத்தை அவங்களுக்கு முக்கியமான வேலையா இருக்கும்… பரவாயில்ல…. நான் பாத்துக்கிறேன் நீங்க போய் படுங்க…. அவர் வந்ததும் அவருக்கு சாப்பாடு போட்டுட்டு’ பின்பு செல்கிறேன் என்றவளை பெருமிதத்தோடு பார்த்தார் தீபா….

 

இதற்காக தானே அவனை ஒரு குடும்பஸ்தனாக பார்க்க ஆசைப்பட்டது தனி மரமாக நின்னு பட்டமரமாகி விடுவானோ என்றல்லவா பயந்தது…

 

அவர் எதிர்பார்த்ததும் இதுதான் இனி ஆதியின் வழக்கையை பற்றிய கவலை தனக்கில்லை என்று தோன்ற மனநிறைவுடன் அறைக்கு சென்றார்….

 

ராட்சஷ அலைகள் கடலில் எழுந்துக் கொண்டிருக்க… நன்றாக கும்மிருட்டாக இருந்த கடலை நிலவொளியின் உதவியோடு கண் எட்டும் தூரம் வரை வெறித்துக்கொண்டிருந்தான் ஆதித்யவர்மன்.அதேப்போல் அவனது மனதிலும் எண்ண அலைகள் எழுந்து அவனை அலைகழித்துக் கொண்டிருந்தது…

 

தான் செய்த காரியத்தின் வீரியம் இப்படி தனக்கே திரும்பும் என்று அவன் கனவில் கூட எதிர்பார்க்கவில்லை இருப்பினும் தனது மனம் முழுவதும்  அவள் மீதான காதலில் மடிந்துக் கொண்டிருக்கும் இத்தருணம் வரை தனது செயல் அவனுக்கு தவறாக தெரியவில்லை… அவள் மீதுக் கொண்ட காதலினால் அவனின் கடந்த கால கசடுகளை மறைத்து …. உரிமையின் அடிப்படைக்கொண்டு தன்னவளை மணந்தது தவறுத்தான் என்றாலும் அவனை பொறுத்த வரை அது தவறு இல்லை என்றே தோன்றியது…

 

அவள் மீதான தன் காதலை வெளிக்கொணர்ந்தது  உரிமைதானே…  அப்படி இருக்கும் போது அது தவறாவானேன்… அவனது மனம் வாதித்துக் கொண்டிருந்தது…

 

அவளை சந்தித்த முதலாய் இன்று இந்த நொடி வரை தனக்காக அவள் பார்த்து… பார்த்து செய்யும் அனைத்தையும் தன் நினைவில் அசைப்போட்டுக் கொண்டிருந்தான்…. தான் அவளை துன்புறுத்தியும்… அவள் சம்மதம் சிறிதுமின்றி அவளிடம் தாம் நடந்துக்கொண்ட தகாத முறைக்கு கூட தன்மீது கோபம்கொள்ளவில்லை…

 

தன்னுடைய விலகல் கூட அவளால் தாங்கிக்கொள்ள முடியாமல் தானே அவளையே தனக்கு கொடுத்து தன் மீதான அவளது காதலையும் மீட்டெடுத்து தன் மனதில் புதைந்திருந்த அவள் மீதான காதலையும் மீட்டெடுக்க செய்தவள் அவனது மனைவி….

 

தனக்காக எதையும் செய்பவளுக்கு தான் இதுநாள் வரையிலும் அவளுக்கு என்ன செய்தோம்… மித மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே… அவளின் பரிசுத்தமான காதலுக்கு தான் இழைத்தது துரோகம் என்றாவது தெரியவந்தால் அவள் தன்னை மன்னிக்க கூடுமா… என நீண்ட நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தவன் ஒரு முடிவு எடுத்தவனாய்… அவளின் காதலுக்கு  அடிமை சாசனமாய் அவன் உயிருக்கு மேலான அவன் மனைவிக்காக தனது தகுதி, ஈகோ அனைத்தையும் விட்டு கிழே இறங்கி வர முடிவுச் செய்தான்…

 

அவளது காதலை நினைத்து மனம் பூரித்தவனாய்… தனது வாழ்நாள் முழுவதும் அவளை தன் காதலால் குளிப்பாட்ட வேண்டும் என்று ஆசைக்கொண்டான் இல்லை பேராசைக் கொண்டான்….

 

நேரம் ஆனதை தொடர்ந்து கடிகாரத்தை பார்த்தவன் மணி நள்ளிரவு 12.30 என்று காட்ட… மனம் பதறிக்கொண்டு ஓ ஷீட் டைம் இவ்ளோ ஆகிடிச்சா… எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பாளே’ என யோசித்தவன் தன் காரை வீட்டிற்கு விரைவாக செலுத்தினான்…

 

வரவேற்பறைக்குள் நுழைந்தவனை அவனது தூங்கும் மனைவி வரவேற்றாள்… உள்ளே நுழைந்தவன்  மெதுவாக பூனை நடையிட்டு மனைவிக்கு அருகில் சென்றான்… அழகாக உடம்பை சுருக்கி இரண்டு கைகளை தலையனையாய் கொண்டு சிறுப்பிள்ளைபோல் உறங்கியவளை அணு அணுவாக ரசித்தவன்…

 

வரவேற்பறையில் யாரும் இல்லையென்று உறுதி செய்துக் கொண்டவன் அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்…  அவள் தூக்கம் கலையா  வண்ணம் அவளை தன் கையில் ஏந்திக்கொண்டு அறையை நோக்கிச் சென்றவன்… அவளைப் படுக்க வைத்து நிமிர்ந்தவனின் கழுத்தை இழுத்து வளைத்து பிடித்தால் அவனது மனையாள் அதில் தடுமாறியவன் அவளுடன் சரிந்தான்’ ஹேய்… ஹேய்… பேபி என்னடி பண்ற நீ தூங்கலையா என்றவனை பார்த்து ‘ ஹம்ம் ஹும் இல்ல’ என்று தலையசைத்து  இறுக அணைத்துக் கொண்டாள்…அடி கள்ளி என்று அவளை கொஞ்சியவன் சரி ‘ நான் போய் பிரேஷ் ஆகிட்டு வரேன் பேபி… பாரு கசகசனு இருக்கு’ என்று கூறியும்…

 

அவள் தன் பிடியை தகர்த்தாமலிருக்க ‘ பேபி பசிக்குது டி… சரி நான் குளிக்க கூட வேண்டாம் …. பட் உன் பாவா பாவமில்லையா பசிக்கு சாப்பிடலாமில்லையா’ என்று பாவமாக கூற அவனை பிடித்திருந்தவள் அவன் பசியை  அறிந்து சட்டென விலகி ‘ பாவா நீங்க இன்னும் சாப்பிடலையா… சாரி பாவா… நான் உங்களுக்காகத்தான் காத்திருந்து தூங்கிட்டேன்… சாரி பாவா வாங்க சாப்பிடலாம்’ என்க அவனோ அவளைப் பார்த்து ‘ பேபிமா… நீ இன்னும் சாப்பிடலையா… இவ்ளோ நேரம் சாப்பிடாம இருப்ப’ என்று அவளைப் பார்த்து அவன் சத்தம் போட ‘ ஹ்ம்ம் இல்ல பாவா … நீங்க சாப்டிங்களா இல்லையான்னு தெரியாம நான் எப்படி சாப்பிட முடியும் அதான் நீங்க வர எவ்ளோ நேரமானாலும் பரவாயில்ல உங்கக்கூட சேர்ந்து சாப்பிடலாம்னு ‘ இருந்தேன் என்றவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான் அவளது கணவன்… மீண்டும் தன்மீதான அவள் அன்பையும் காதலையும் அவனுக்கு உணர்த்திக்  கொண்டே இருக்கும் தன் மனையாளின் மீது அவனுக்கு கர்வம் உண்டானது….

 

‘ பாவா நீங்க பிரேஷ் ஆகிட்டு  வாங்க நான் … உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்’ என்றவள் உணவு மேஜை நோக்கி நகர… அவனும் குளியல் அரைநோக்கி சென்றான்… சிறிது நேரத்தில் அவன் வந்துவிட அவனுக்காக காத்திருந்தவள் தட்டை அவன் முன் வைத்து உணவை பரிமாறினாள்… அவளை தடுத்தவன் ‘ நீயும் சாப்பிடு ‘ என்க அவளோ ‘ நீங்க சாப்பிடுங்க  பாவா … நீங்க சாப்பிட பிறகு நான் சாப்பிடறேன்’ அவள் முடிப்பதற்குள் கோபம் கொண்டு  பார்த்தவன் ‘ ஆல்ரெடி லேட்.. நீ எப்போ சாப்பிட்டு ரூம்க்கு எப்போ டி வருவ… எனக்கு வெயிட் பண்ணலாம் பொறுமையில்ல பேபி… சீக்கிரம் என் கூடயே சாப்பிட்டு … என்னைய கவனிக்குற வழியை பாரு’ என்று கூறி கண்ணடித்தவன் அவளுக்கு ஊட்டியும் விட்டான் அவனது செயலில் குங்குமமாய் சிவந்தாள்… முதலில் தயங்கியவள் பின்பு தயக்கத்தை விடுத்து அவனது அன்பில் மூழ்கியும் போனாள்…

 

‘ பேபி … நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன் உண்மைய சொல்லனும்’ என்று அவளது மடியில் தலைவைத்து அவள் முகத்தைப் பார்த்து கேட்க… ‘ என்ன விஷயம் பாவா… எதுவாயிருந்தாலும் கேளுங்க என்கிட்ட எதுக்கு தயக்கம்… ஏன் பாவா உங்களுக்கு வராத அடக்கத்த புதுசு புதுசா ட்ரைப் பண்றிங்க’ அவனது மனையாள் அவனைப் பார்த்து கேலி செய்ய…. அதில் மயங்கியவன் ‘ நேரம் டி பேபி… நீ பேசி நான் கேக்கணும்னு நேரம்’ என்று அவளைப் பார்த்து கூற…

 

அவளோ’என் பாவா என்னைக்கும் கெத்த மெயிண்டைன் பண்ணனும்… இப்படி வார்த்தையெல்லாம் தந்தி அடிக்க கூடாது… என் பாவாக்கு இது செட் ஆகல’ என காதலோடு கணவனைப் பார்க்க அவனோ தன் கர்வத்தின் மேல் காதல் கொள்ளும் மனைவி இவள் ஒருத்தியாகத்தான் இருக்கக் கூடும் என்றவனின் பார்வையும் காதல் மோகம் கொள்ள அவளை வளைத்து பிடித்தவன் அவள் இதழை நோக்கி அழுந்த முத்தமிட்டான்… நீண்ட நேரம் சென்ற பிறகே அவளை விடுவித்தவன் அவளை நோக்கி ‘ பேபி … நீ என்ன எந்தளவுக்கு என் மீது அன்பு, காதல்,நம்பிக்கை வச்சிருக்கியோ… அதே ஈடுக்கு எனக்கும் உன்மேல் காதல் அன்பு அளவுக்கு அதிகமாவே இருக்கு… இதுல உனக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்’

 

இப்போது எதற்கு பாவா ‘ இத பத்தி… பேச்சு’ அவளது பேச்சை தடுத்தவன் ‘ இரு நான்  பேசி முடிக்கிறேன் பேபி’ தன் கணவன் கூறியதற்கு அமைதிக்காத்தவள் ‘ இந்த காதல் கல்யாணம் வாழக்கை இது எல்லாம் நான் நினைச்சிக்கூட பார்க்காதது பேபி’… ஆனால் இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை உன்னால் மட்டுமே சாத்தியப்படப்பட்டது…பேபி சத்தியமா சொல்றேன் உன் கழுத்துல தாலி கட்டுன நாளிலிருந்து இந்த நாள் இந்த நிமிஷம் வரை’ நான் உன்னுடன் வாழ்ந்த வாழ்க்கை உண்மையே பேபி…

 

‘ நான் வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டவன்… என்னோட கடந்த காலம் என்ன அப்பிடி மாத்திரிச்சி ‘ தன் கடந்த காலத்தை அவன் தன் மனைவியிடம் விமர்சிக்க விரும்பவில்லை போலும்… அவன் அப்பொழுதே கூறியிருந்தால் அவனது மனைவி அவனை புரிந்துகொள்ள முயற்சித்திருப்பாளோ என்னவோ??? ‘ நீ வாழ்க்கையில் வந்த பிறகுதான் பேபி எனக்கு பறிபோன சந்தோஷம் திரும்பவும் கிடைச்ச மாதிரி இருக்கு’….உன்னோட வாழ்க்கையை எந்த நம்பிக்கையில் என்னிடம் ஒப்படைத்தாயோ அந்த நம்பிக்கையை நான் காப்பற்றுவேன் என்று கூறி முடித்தவன் கடைசியில்…

 

அவளிடம்’ பேபி எக்காரணத்தை  கொண்டும் என்னை விட்டு போயிடமாட்டியே’ என்றவன் தனது மனையாளின் விழிகளில் ஊடுருவி அவள் உயிரில் தனக்கு தேவையான விடை அறியும் பொருட்டு அவளை தன் விழியால் யாசித்துக் கொண்டிருந்தவனை… ஆவேசமாக அவனை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டவள் அவன் முகம் முழுவதிலும் முத்தமிட்டாள்… அவள் ஓயும் வரை அவன் முகமெங்கும் தன் முத்தத்தினால் குளிப்பட்டினாள்…

 

அவளது திடீர் தாக்குதலை கண்டவன் திகைத்தாலும் அதை மறுநொடி மௌனமாக ஏற்றுக் கொண்டான்… முத்த மழை ஓரளவுக்கு ஓய்ந்த பின் அவனது மனையாலோ’ பாவா ஏன் இப்படிலாம் பேசுறீங்க உங்க மேல நம்பிக்கை இல்லம்மாதான் நான் உங்கள காதலிக்கிறேனா…நீங்க இன்னும் பழச மறக்களையா பாவா… இங்க பாருங்க குணமிருக்கும் இடத்துலத்தான் கோபமிருக்கும் அதேப் போலத்தான் என் பாவாக்கு… என் பாவாக்கு என்ன கஷ்டப்படுத்த தெரியாது… அதேப்போல கஷ்டப்படுத்தினாலும்’ அந்த உரிமைக் கூட காதலின் வெளிப்பாடுத்தான் என்று கூறியவளை பார்த்தவன்…. தனது உள் உணர்வுகளை அழகாக புரிந்துக் கொள்ளும் மனைவி யாருக்கு கிடைப்பாள்… ஆனால் தனக்கு கிடைத்ததை  நினைத்தவன்

 

இந்த நொடிப் பொழுது ஆதித்யன் தன் வாழ்க்கை தன் வசமானதை நினைத்து மகிழ்ந்தான்… ஆழ் கடலில் முத்தெடுக்கும் பொருட்டு அவனது  மனைவிக்குள் முழ்கி முத்தெடுத்தான்… என்றும் வன்மையை மட்டுமே கடைப்பிடிக்கும் தன் கணவனின் இந்த மென்மையான அணுகுமுறை புதியதாய் தெரிய இருப்பினும் அவனை தன்னுடன் இழுத்து கொண்டால் ஆவேசமாய்… மனைவியின் செயலைக் கண்டவன் தேனுண்ட வண்டானான்…

கணவனின் பேச்சில் இருந்த உள்ளர்த்ததை கவனியாது அந்த பேதையவள் மதிமயங்கி தான் போனாள்… எந்த நம்பிக்கை கொண்டு அவள் அவன் கணவனுக்கு உங்களை விட்டு போகமாட்டேன் என்றாளோ அந்த வாக்குறுதியை தான் காப்பாற்ற போவதில்லை என்பதை அவள் அறியாள்…

 

ஆனால் விதியின் கோரத் தாண்டவம் இவர்களை சேர்ந்து வாழவிடுமா இல்லை பிரித்து வேடிக்கை பார்க்குமா பொறுத்திருந்து பார்ப்போம்….

 

நன்றி தோழமைகளே

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

திவ்யபாரதி
6 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Fantastic episode


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks sister😉😉😘


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Nice


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks rajee sis😍😍


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hephzibah says:

  Nice


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Thanks hephzi