Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள் டீசர்

ஹாய் பிரண்ட்ஸ்

உங்களுக்காக முள்ளோடு முத்தங்களின் ஒரு குட்டி டீஸர் இதோ

சன்டே நைட் அதுவும் மிட்நைட் தான் எபிசோட் வரும் பிரண்ட்ஸ்….முடிஞ்சா சீக்கிரமா போஸ்ட் பண்றேன் பிரண்ட்ஸ்….

நாட்கள் கடந்து மாதங்களாக கனிந்தது… மித்ரா மற்றும் ஆதியின் வாழ்க்கை எந்த கலங்கலுமின்றி தூய்மையான நீரோட்டம் போல் அவர்களே எதிர்பாராத விதத்தில் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்….

வாழ்க்கையின் பாதையை கற்பித்தவள் அவள் மனைவி என்றாலும்…. வாழ்வியலின் பாடத்தை கற்பித்துக்குக் கொண்டிருப்பவன் அவள் கணவன் அன்றோ…. மகிழ்ச்சியின் எல்லைக்கு வரைமுறையின்றி அவளை மகிழ்ச்சியின் ஆழ் கடலுக்குள் இழுத்து சென்று கரையை உடைக்கும் அவனின் ஆத்மார்த்தமான காதலில் கரைந்துதான் போனால் பாவையவள்…

நாளுக்குநாள் அவர்களுக்கிடையில் அன்பிற்கோ? காதலுக்கோ ?  எந்த பஞ்சமுமின்றி அதிகரித்துக்கொண்டே சென்றது…. தெளிந்த நீரோடைப்போல் வாழ்க்கை மிக அழகாக சென்றுக் கொண்டிருக்க… அவர்களுள் எண்ணிலடங்காத தூய்மையான அன்பு பரிமாணங்களும் பரிமாரப்பட்டது….

ஆனால் ஆதியின்  மனமோ ஏதோ ஒரு மூலையில் நிம்மதியடையாமல் அரித்துக் கொண்டிருந்தது தன்னைப்பற்றிய உண்மையை அவளிடம் கூறிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தவன் அதற்கான தருணத்திற்காக காத்திருந்தான் …

‘பேபி இன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு…. சோ லன்ச்க்கு இன்னக்கி வீட்டுக்கு வரமுடியாது பேபி எனக்காக வெய்ட் பண்ணாம சாப்பிடு…சரியா… நான் ஆஃபீஸ்க்கு போய்ட்டு போன் பண்றேன்…. சி யூ பேபி’  என்று வாயில் வரை சென்றவன் பின் மனைவியை பார்த்து இங்க வருமாறு அழைக்க… அவளோ என்னமோ ஏதோவென்று அவனுக்கு அருகில் வர …. அவனோ அவளை இடையோடு இழுத்து அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்….

அவளோ பதறியவளாக’ பாவா… என்னதிது… நடு  ஹாலில் வச்சு இப்படி பண்றிங்க…. யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க’ என்று தன் முட்டைக்கண்ணை அழகாக உருட்டி உருட்டிப் பேசுபவளைப்  பார்த்தவன்…

‘ ஹலோ பொண்டாட்டி பேபி ஹாலில் இருந்தனாலத்தான் டி நீ தப்பிச்ச…. ஜஸ்ட் மிஸ் ஆகி கன்னத்துக்கு போய்டிச்சி கிஸ்சு… இதுவே நம்ப ரூமா இருந்து இந்த கேள்விய நீ கேட்டுப்பாரு நடக்கிறதே வேறு’ என மொழிந்தவனை பார்த்தவள்’ வர வர உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தயில்லாம போச்சி பாவா’ என்று பொய்யாக கோபம் கொண்டு கூறுவதுப்போல் பேச தொடங்கியவளின் வார்த்தை கடைசியில் கொஞ்சலிலே முடிந்தது…

அவளது அன்பிற்குரியவனோ’ பாத்தியா… பாத்தியா…. ரெண்டு வார்த்தை கோபமா கூட பேசத் தெரியலையே பேபி உனக்கு….. இதுல நீங்க என்ன கேள்வி கேட்கிறிங்களாக்கும்’ என்றவன் அவளது தோள் மீது தன் இருகைகளையும் போட்டுக் கொண்டு சரசமாக பேச… அவனது மனைவியோ ’ ம்ஹுக்கும்  போங்க பாவா… உங்களுக்கு ஒன்னு தெரியுமா… எனக்கு கோபமே படத்தெரியாது பாவா… அதுலையும் உங்க மேல எனக்கு எப்படி கோபம் வரும் பாவா’ என ஆற்றாமையோடு கூறியவளின் காதலில் விரும்பியே கரைந்தவன் அந்த காதலுக்கு அச்சாரமாக இமைக்கும் நேரத்தில் மீண்டும் அவள் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு பறந்து சென்றான்…

மீட்டிங்கை மிக விறு விறுப்போடு கையாண்ட ஆதி பங்கு தாரர்களுடன் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தவனின் தொலைபேசி ஒளிர்ந்து அணைந்ததுமாய் இருக்க… வேலையின் நடுவே இடையூறு வராமல் இருப்பதிற்காக அவனது தொலைபேசி என்றும் சைலேண்ட் மோடில் போடப்பட்டிருப்பது வழக்கம் ….. அலைபேசியோ  அசராமல் மீண்டும் மீண்டும் ஒளிர்ந்து அணைந்ததை கவனிக்க தவறினான்….

தனது பேச்சை முடித்துக் கொண்டு தனது இடத்திற்கு வந்தவன் பங்கு தாரர்களின்  கருத்துக்களை அமல்படுத்திக் கொண்டிருக்கையில் தனது கைபேசியை கவனித்தவன்…. தனது வீட்டு தொலைபேசி எண் என தெரிந்து…  அவர்களிடம் ‘எக்ஸ்கியூஸ் மீ’ கேட்டுக்கொண்டு வெளியே வந்தவன் தனது அலைபேசியை உயிர்ப்பித்தான்….

‘ ஹலோ ஆதி கண்ணா நான் தீபா சித்தி பேசுறேன் பா…. கொஞ்சம் சீக்கிரமா ஹாஸ்பிட்டலுக்கு வரமுடியுமா’ என்று கேட்க…. அவனோ யாருக்கு என்னவாயிற்று என்று கேட்டவன் செவியில் தீபா கூறிய செய்தியில் அதிர்ந்தவன் ‘ சித்தி என்னாச்சு மித்ரா…. மித்ராக்கு என்னாச்சு ஏன் மயங்கிட்டா’ சொல்லுங்க என்று பதட்டமாக பேசுபவனை கண்டவர்

‘பதட்டப்பட நேரமில்லை கண்ணா…. கொஞ்சம் சீக்கிரமா வரியா’ என்றவரை தொடர்ந்து எந்த மருத்துவமனை என அறிந்தவன் விரைவாக காரை கிளப்பிக்கொண்டு மருத்துவமனையை அடைந்தான்….

நன்றி தோழமைகளே

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

திவ்யபாரதி
11 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Mani Mekalai says:

  When ur update this story….write ur story continously or otherwise u lose ur reader

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Sorry sister due to my health issue and my grand maa passed away so tat reason I can’t able to give update continuesly…. For past 4 months she has been lacking for her soul… Atlast she met her dead so tat reason I were going for everything tats the reason I can’t do my work properly….

   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Mani Mekalai says:

    Ok sissy i don’t know about it i just expose readers view ..

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
     Dhivya Bharathi says:

     It’s ok sister i understood ur point of view thanks for understanding me sisy here after will
     give regular ud 😊😊😊

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Waiting for the next episode…….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Sorry sis ….. Soon I’ll post

   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    K take ur own time…..

    • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
     Dhivya Bharathi says:

     Ud potachi sister

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Next Episode eppo poduvinga

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Dhivya Bharathi says:

   Konjam wrk sis… Soon I’ll post

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Waiting………

You cannot copy content of this page