Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal episode 39

விஷமப்புன்னகையில் ஈர்க்கப்பட்டவள் நகர நினைத்தபோது.. அவன் வலுவாகவே அவள் கைகளைப் பற்றினான்.

அவள் முகத்தை மறைத்து திரும்பி நடக்க ஆரம்பித்தபோது..“ ஸ்ரீ.. ” என்றான் ராஜன்
ஸ்ரீ பதில் தரவில்லை.

“ஸ்ரீ நீ தனுவுக்கு கால் பண்றேன் என்று சொல்லலாமா? ”

ஸ்ரீ பதில் தரவில்லை.

“ஸ்ரீ என்னைப் பாரு! ”
அவள் முகத்தை வலுக்கட்டாயமாகத் திருப்பியவன் அவள் கன்னங்களில் கண்ணீர் தெரித்து நனைந்து கிடந்ததைப் பார்த்ததும் அவளை அருகில் இழுத்து இதழால் கன்னங்களைத் துடைத்தெடுத்தான்.

கண்ணீரின் மருந்தும் காரணமும் முத்தமோ?

அவன் இதழ்கொண்டு துடைக்கத் துடைக்க கண்ணீர் பெருகியதேன்? முதல் நொடியில் அடங்கிய கண்ணீர் மறு நொடியில் பெருகியதேன்?
கண்ணீரின் மருந்தும் காரணமும் முத்தமோ?

இதை அறிந்த ராஜன் ஸ்ரீக்கு வேறு நல்ல மருந்துகள் தரலானான்..

அமைதியாக ஸ்ரீ உறங்க ஆரம்பித்தபோது ராஜன் அவளிடம் சொன்னான் “ஸ்ரீ நீ சென்னைக்கு போகத் தேவையில்லை நானே பார்த்துக்குறேன். உனக்கு பிரச்சனை வராமல் நானே பார்த்துக்குறேன். ”

ஸ்ரீக்கு அவன் சொன்னது முழுவதும் நன்றாக கேட்டபோதும் தூங்குவதுபோல் பாசாங்கு செய்தபோது ராஜன் அவளிடம் “ஏய் நீ முழிச்சிருக்கன்னு தெரியும் பதில் சொல்லு ஸ்ரீ.”

என்றான்.
“நீ என்ன சொல்றன்னு எனக்குப் புரியவேயில்லை. தூக்கம் வருது ராஜன். ”

“ஏய் உன்கிட்ட ஒரே ஒரு கேள்வி அப்ப கேட்டது இல்லை. இது வேறு!” என்று அவன் சொன்னபோது அதே கேள்வியை வேற மாதிரிக் கேட்டால் கொட்டாவி விட்டு தூங்கிடவேண்டும் என்று முடிவெடுத்திருந்ததால் சொன்னாளஇ “சரி கேளு. ”

“உனக்கு தூக்கம் வருதா? ”
ம் என்றாள் லேசாக செயற்கையாய் கொட்டாவி விட்டுக்கொண்டு.

“ஸ்ரீ திருடனை நான் என்ன செய்வேன்? ”

“அரஸ்ட் பண்ணுவ! ”

“பொய் பேசும் திருடனை நான் என்ன செய்வேன்? ”

“அரஸ்ட் பண்ணுவ. ”

“கரெக்ட. ” என்றவன் அவள் இதழ் நோக்கி குனிந்தான்
“ராஜன் என்ன பண்ற? ”
“தூக்கம் வருதுன்னு பொய் சொன்ன திருடனை அரஸ்ட் பண்றேன். ” என்றான்.

மீண்டும் அவனுள் கரைந்த ஸ்ரீக்கு உடலோடு கலக்காத வணிகமில்லாத உயிரோடு கலந்த பிணைப்பின் அனுபவம் மகிழ்ச்சியடைச் செய்ததைவிட எதிர்காலத்தை நினைத்து மிகுந்த பயமே அடையச் செய்தது.

கப்பலுக்கு வழி காட்டும் கருவி படுவேகமாக எல்லா திசைகளையும் காண்பிப்பதுபோல தனது வாழ்க்கை எல்லா திசையிலும் சுழலுவதை உணர்ந்தாள் ஸ்ரீ.

ஸ்ரீ வழக்கம்போல் மொட்டை மாடியில் தனது துணிமணிகளை உலரவைக்கப் போனாள். பகல் ஒரு மணிக்கு சூரியனின் ஒளி தனது கடமையே கண்ணாக தனது வேலையைச் செய்தது. வெப்பம் தாங்காமல் தனது செருப்பைப் போட்டுக்கொண்டவள் ஏதோ சிகரெட் வாடை அடிக்கவும் திரும்பிப் பார்த்தாள்.

அங்கே ஏட்டையா ஒரு திண்டில் உட்கார்ந்து கொண்டு புகை வண்டியை கிளப்பிக் கொண்டிருந்தார்.

ஸ்ரீ அமைதியாக அவரிடம் சென்றாள். அவரும் ஸ்ரீயைப் பார்த்ததும் மலைத்தார். பிறகு சிரித்துக்கொண்டே அவளிடம் கேட்டார் “ஸ்ரீ பத்து ரூபாய் முப்பது காசு வீணாகணுமா? ”

ஸ்ரீ இல்லை என்று தலையசைக்கவும் சிகரெட்டை அணைக்காமல் மேலும் புகைத்தார்.

“ஆனால் உங்க மாத செக்கப்பிற்கு பத்தாயிரம் போச்சே என்று உங்க வைஃப் கீழே புலம்புறாங்களே அவுங்ககிட்ட கேட்கலாமா சார்? ஸ்ரீ பத்து ரூபாய் முப்பது காசு வீணாகணுமா? வேண்டாமான்னு அவுங்ககிட்ட கேட்கலாமா சார்? ”

சிரித்துக்கொண்டே தனது சிகரெட்டை கீழே போட்டு அணைத்தவர் சிரித்துக்கொண்டே ஸ்ரீயைப் பார்த்தார்.

“சார் ஸ்நேகாவை நினைத்து பார்த்தாவது இந்தப் பழக்கத்தை விடக்கூடாதா? ஒரு முறை அட்டாக் வந்திருக்காமே? அப்படியா? ”

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல ஸ்ரீம்மா. இந்த வேலையில் இருக்கும் டென்ஷன் உனக்குப் புரியாது. பதினைந்து வயதில் பழகினது. விடமுடியல . சில விஷயங்களை ஆரம்பித்தில் விடவில்லை என்றால் பின்னாடி விட்டுவிட நினைப்பதற்குகூட மனசு ஒத்துக்காது. உன்கிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி பேசணும் என்று நினைத்தேன். ஆனால் நேரமே கிடைக்கலை. இப்பதான் பத்து நாள் லீவுல்ல இருக்கேன். நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன் ஸ்ரீ. ஆனா போறதுக்கு முன்னாடி நம்ம பேங்க் அக்கவுன்ட் சொத்து பத்து எல்லாத்தையும் முறை படுத்துவோம்ல்ல? அது போல ராஜன் விஷயத்திலும் ஒரு காரியம் செய்யணும் என்று நினைக்கிறேன் ஸ்ரீ.”

முகம் வெளுக்க அவரிடம் “என்ன சார்?” என்று கேட்டபோது அவர் சொன்னார்இ “அதான் நீயே கண்டுபிடிச்சிட்டியே. உன் முகமே சொல்லுதே! ”

“நான் சென்னைக்கு போயிடுவேன் சார். இங்கயே இருக்கமாட்டேன். என்னால் ராஜனுக்கு பிரச்சனை வரக்கூடாது. ”

“பிரச்சனை எல்லாம் ராஜன் சமாளிச்சிடுவான். அவனுக்கு அது முடியும். ஆனால் வாழ்நாள் முழுதும் பிரச்சனை சமாளிக்க வேண்டாம் என்றுதான் சொல்றேன். கௌன்சிலர் வாழ்நாள் முழுதும் உனக்கு பிரச்சனை கொடுப்பான். ஸ்ரீ உன்னை பிடித்திருப்பது ஏழு வருட ‘ ழூழூ ’ . அந்த வார்த்தையை நான் சொல்ல மாட்டேன். ஏதோ சென்டிமென்ட் அதனால் சொல்ல மாட்டேன். ” என்றார் காமராஜர்.
ஸ்ரீ எதுவும் சொல்லாமல் அவரிடம் சிரித்துக்கொண்டே சொன்னாள் “பத்து ரூபாய் முப்பது காசு வீணாப் போனால் போகட்டும் சார். ஒரு உசுரு பிழைச்சிடுதுல்ல?”
“ஸ்ரீ நான் உன்னை துரத்தலைடா கண்ணு! ”
“புரியுது காமராஜர் சார். சார் அந்த அணிலைப்பாருங்க எவ்வளவு அழகாக இருக்கு! ” என்றாள்.
செய்கின்ற பணி கொடுத்த திடம் அவளிடம் துணிவுடன் கிளம்பச் சொல்லிவிட்டார். ஆனால் இரவில் அந்த வார்த்தைக்காக நிச்சயம் வருந்துவார் என்று அவருக்கே தெரிந்தபோதும் மனதைக் கல்லாக்கி சொல்லிவிட்டார்.
அவர் சென்ற பிறகும் ஸ்ரீ அந்த அணிலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனதுக்குள் பேரலைகள் அடித்துக் கொண்டிருந்தபோது கண்களுக்கு மட்டும் சும்மாவேணும் ஒரு வேலை கொடுத்தாள்.
Comments are closed here.

error: Content is protected !!