Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal episode 40

“ஸ்ரீ எங்கயிருக்க? ” என்று ராஜன் உரத்த குரலில் கூப்பிடவும் ஸ்ரீ “நான் மேலே மொட்டை மாடியில் இருக்கேன். ” என்று பால்கனி வழியாகக் கத்தினாள்.

அவள் பதிலைக் கேட்ட ராஜன் வேகமாக அவள் இருக்கும் இடத்திற்குச் சென்றான்.

அவன் கண்களில் சந்தோஷம். முகத்தில் கோபம் என்னும் சொல்லே அந்த முகத்திற்குத் தெரியாது எனச் சத்தியம் பண்ணத்தூண்டும் முகபாவம். இப்போது அவள் என்ன கேட்டாலும் கிடைத்துவிடும் என்று அவள் பந்தயம் கூட வைக்கலாம்.

“என்ன விஷயம்? ” என்று அவள் கேட்காமலே அவனே பதில் சொன்னான் “எங்க பிரான்ச்சில் இனி நான் சப் இன்ஸ்பக்டர் போஸ்டில் கன்டினியூ பண்ண முடியாது ஸ்ரீ. ”

அவளுக்கும் விஷயம் புரிந்து விட்டது. ஆனால் புரியாததுபோல அவனிடம் கேட்டாள் “ஏன் ராஜன்? ”

“ஏன்னா நான் இனி எங்க பிரான்ச் இன்ஸ்பக்டர் தெரியுமா? பத்து வருஷம் எக்ஸ்பிரியன்ஸ் பேசியிருக்கு! ”

அவனை நினைத்து பெருமையாக இருந்தது ஸ்ரீக்கு. இப்போது அவனிடம் கௌன்சிலர் ஆட்களால் எப்போதுமே எனக்கு பிரச்சனை அதனால் நான் மதுரையில் இருக்கப் போவதில்லை என்று சொன்னால் இன்ஸ்பக்டரிடம் போய் புடலங்காய் கௌன்சிலர் பத்தி பேசுறியே என்பான்.
ஏட்டையா சொன்னதை இவன் காது கொடுத்து கேட்கப்போவதில்லை. திருச்சிக்கு என்னை போக விடப்போவதேயில்லை.

இடியாப்பாத்திற்கு மேல் இடியாப்ப சிக்கல் என்று நினைத்து தன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த ராஜனிடம் சொன்னாள் “தனு என்னை சென்னைக்கு கூப்பிடுறா. நான் இப்பவே சென்னைக்கு போயிடுறேன். ஒரு இரண்டு மாசம் கௌன்சிலர் பிரச்சனை முடியட்டும். அப்புறம் வர்றேன். நான் உங்ககூட இருப்பது தெரிந்தால் உங்களுக்கு ஏட்டையாவுக்கு திலிபிற்கு என்று எல்லோருக்கும் பிரச்சனை.”

“யார் சொன்னா பிரச்சனை என்று? இரண்டு நாள் போகட்டும். சொல்றேன்.”

ஸ்ரீயிடமிருந்து பதில் வரவில்லை என்றதும் “எந்த கேனயன் உன்னை உடனே கிளம்பச் சொன்னான்? ”

ஸ்ரீ நிலைமை மோசம் அடைவதைப் புரிந்து கொண்டு அவசரமாக சொன்னாள் “நான் தான் சொல்றேன். எனக்கு தோணுச்சு. சொன்னேன். தனு சென்னையில் சேஃப்டியாக இருக்கலாம் என்று கூப்பிடுது. போவா? ”

“போயேன். உன்னை யார் இங்க இருக்கச் சொல்லி கெஞ்சப்போவது? போ போ.. ” என்றவன் மட மட வென்று படிக்கட்டில் இறங்கி வீட்டிற்குள் சென்று விட்டான்.

ஸ்ரீ வீட்டிற்குள் நுழைந்ததும “நீ இன்னும் பேக் பண்ணலையா? சென்னைக்கு டிக்கெட் எடுத்து தரவா? இல்லை நீயே எடுத்திட்டியா? இல்லை உன்னை பயமுறுத்திய கிழவர் காமராஜ் எடுத்துக் கொடுத்தாரா? ”

ஸ்ரீக்கு மகிழ்ச்சியும் அதற்குமேல் பெருமையும். ராஜன் அவளை அனுப்ப மனமின்றி காட்டிய கோபத்தால் வந்த பெருமை. ஸ்ரீக்கு சிரிப்புதான் வந்தது. போலீஸ்காரன் கண்டுபிடிச்சிட்டான்.
இனி அந்த கிழவரை காப்பாற்ற வேண்டுமே என்று பேச்சை மாற்ற எண்ணி “ராஜன் இந்த பறவையில் எது ஆண் எது பெண்? என்று சொல்லு பார்ப்போம்.. நான் கண்டுபிடிச்சிட்டேன். இதுதான் பெண். அது அந்த ஊஞ்சலில ஆடுது பார் அதுதான் ஆண்.” என்றாள்.

ராஜன் ஸ்ரீ கூறியதை காதில் வாங்கவேயில்லை.
ஸ்ரீ வேகமாக அடுக்களைக்குள் நுழைந்தாள் ‘என்கிட்டயேவா? சிரிக்கக் கூட மாட்டியா?’ என்று மனதில் நினைத்தவள் ஃபிரிஜ்ஜுக்குள் இருந்து மல்லிச்செடி நான்கு இனுக்கு கொண்டு வந்தாள்.

அந்த ஃபின்ச்சஸின் கூண்டிற்கு சென்றாள். அந்த பறவைகளைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் “ஏய் ராஜன் இந்த மல்லி இலையையாவது வீணாக்காமல் சாப்பிட்டு முடி. மல்லிச்செடி என்ன விலை தெரியுமா ராஜன்? பாவம் நம்ம சப் இன்ஸ்பக்டருக்கே இப்பதான் முடி நரைக்குதேன்னு இரக்கப்பட்டு இன்ஸ்பக்டர் போஸ்ட் கொடுத்திருக்காங்க. அட இருபத்தொன்பது வயதில் எவ்வளவுகஷ்டப்பட்டு வாங்கியிருக்கார்? நீ என்னடான்னா மல்லிச்செடியை வீணாக்கியே அவர் சம்பாதிப்பதை கரைச்சிடுவ போலயே? ‘வா ராஜன் ’ கூப்பிடுறேன்ல்ல வா வா! ”
‘பறவைக்கு என் பெயரை வைத்துவிட்டு அடிக்கிற லொள்ளைப் பார்’ என்று எண்ணிய ராஜனுக்கும் சிரிப்பு வந்தது.

அடுத்த நொடியில் அவளை நெருங்கியவன் அவளை இறுக்கமாக இறுக்கிக் கொண்டு சொன்னான் “சென்னைக்கு போகக்கூடாது. தனு உன்னை இப்படிக் கட்டிக்குமா? ”

“இல்லை ராஜன். நம்ம நல்லதுக்கு தான். ”

“நீ இங்கயிருப்பது யாருக்கும் தெரியப்போறதில்லை. ”

“இரண்டு மாதம்தானே போகப்போறேன். பிரச்சனை முடிந்த பிறகு வந்திடுறேன். ”

“வேண்டாம். விடு பேச்சை. ”

அதன்பிறகும் பேச்சை விடாது அவள் கௌன்சிலர் என்றபோது அவன் என்ன சொன்னான்? “கௌன்சிலர் ஒரு புடலங்காய்! ” என்றான்.

“உனக்காகத்தான் ” என்றபோது அவன் என்ன சொன்னான்?
“எனக்காக என்றால் நீ என்ன சாப்பிடணும் என்பதைப் பற்றி பேசணும்! எப்படிச் சாப்பிடுவது என்பதைப் பற்றி பேசணும்.” என்றான் சில்மிஷமாய் அவள் இதழ்களைப் பார்த்து!

“ஏட்டையாவுக்காகவும் தான்.. ”

“அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு! அவருக்கு எல்லாம் தெரியும்டி. எனக்குதான் தெரியாது! ”

அவள் “பிரச்சனை சரியாகமல் எப்படி சிரிச்சுப் பேசுற?” என்றபோது…ராஜன் பொறுமையிழந்தான்.

“ஸ்ரீ பிரச்சனை முடியவே முடியாது. பத்து வருஷம் ஆனாலும் கௌன்சிலர் விட மாட்டான். பணம் கிடைச்சிருந்தால்கூட ஏதாவது வழி இருந்திருக்கும். நீ கல் எறிஞ்சதால் வந்த வினை. இப்போதைக்கு பிரச்சனை வரவில்லை. வரும்போது ஒரு கை பார்த்திடுவோம். என்ன? சரியா? ” என்று கோபமாக ஆரம்பித்து இதமாக முடித்தான்.

ஸ்ரீக்கு காமராஜர் சொன்னபோது புரியாததுகூட இப்போது நன்கு புரிந்தது. அவளைப் பிடித்திருக்கும் ‘ **’ ஏழு வருடத்தில் கூட விடப்போவது இல்லை என்று.
Comments are closed here.

error: Content is protected !!