Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

Vedanthangal episode 42

இன்ஸ்பெக்டராக ராஜன்

இன்ஸ்பெக்டராக ராஜன் மதுரைக்குப் பக்கத்திலிருக்கும் திருப்பரங்குன்றத்தில் பணியைத் தொடங்கிய முதல் நாள் அவனுக்கு மறக்க முடியாத நாள்.

உள்ளே நுழைந்ததும் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைக் காவலர்கள் விபரங்களைத் தெரிந்து கொண்டவன் கிரைம் பிரான்ச் இன்ஸ்பக்டராக பதவி வகிக்கும் விக்ரமிடம் சில நமிடங்கள் பேசினான்.

இரவு ஒன்பது மணிக்குதான் அவனது கைபேசியை எடுத்துப் பார்க்கவே அவனுக்குத் தோன்றியது. அவனது செல்பேசி மசூத் அழைத்திருக்கிறான் என்று காண்பித்தது.

என்னவோ ஏதோ காரணம் ஏதும் சொல்லத் தெரியவில்லை அவனுக்கு ஸ்ரீயிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்தப் பிறகு அவன் மசூத்துடன் பேசுவதையே நிறுத்திவிட்டான்.

அவன் அழைத்தபோதெல்லாம் செல்பேசித் திரையை வேடிக்கை பார்த்தான். ஒரு முறை அப்படி வேடிக்கை பார்த்தபோது “சார் எடுக்கப்பிடிக்கலைன்னா ஆட்டோ ரிஜெக்ட் லிஸ்டில் போடுங்க சார். இப்படியே எதுக்கு ஸ்கீரினை பார்த்துட்டே இருக்கீங்க? ” என்றார் ஒரு கான்ஸ்டபிள்.

அவரிடம் என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் சும்மாதான் என்று மட்டும் சொன்னான். அன்று பத்து மணி ஆகிவிட்டதை கோபி அவனை அழைத்தபோதுதான் உணர்ந்தான். பணியின் முதல் நாள் தந்த எதிர்ப்பார்ப்பும் தேடி வந்த மாலை மரியாதைகளும் அவனை இரவு பத்து மணிக்கெல்லாம் சோர்வாக்கியது. கோபியின் அழைப்பை சுதாரிப்பின்றி எடுத்தவன் “என்ன கோபி சொல்லுடா” என்றான்
“என்ன கோபியா? முதலில் என்னைப் பார்க்க ஹோட்டல் பாண்டியனுக்கு வா! வேற எதுவும் கேட்காத! பேசவும் செய்யாத! ”

கோபியின் குரலில் என்றுமே இல்லாத கண்டிப்பு இருக்கவும் மேற்கொண்டு பேச்சை வளர்க்காமல் சரி என்று அழைப்பைத் துண்டித்தான்.
ஹோட்டலில் நுழைந்ததும் கோபி எங்கிருக்கிறான் என்ற விபரம் பணிப்பெண் வந்து சொன்னாள்.

அந்த அறைக்கு போனபிறகுதான் தான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே கோபி கோபமாக இருப்பது அவனுக்குத் தெரிந்தது. அவன் இன்ஸ்பக்டரான விஷயத்தை அவனிடம் தான் முதலில் சொன்னான். ஆனால் என்று அவன் பணி தொடங்குகிறது என்ற விஷயத்தை சொல்ல மறந்தே போனான்.
இந்த இரண்டு நாளில் மசூத்தின் அழைப்புகளால் வந்த எரிச்சல் ஸ்ரீயின் அணைப்புகளால் வந்த அதீத ஞாபக மறதி என்று இரண்டு முக்கிய காரணங்களே அதிலிருந்தன. மறந்திட்டேன் என்று அவனிடம் சொல்ல முடியாது என்பதை நன்கறிந்தவன் நியாயமான பொய் ஒன்றை தேடிக்கொண்டே அவன் அறைக்குள்ளே வந்தவன் அரவம் இன்றி கோபியின் அருகே உட்கார்ந்தான்.

தனது முதுகிற்கு பின்னே வந்து உட்கார்ந்த உருவத்தை திரும்பிப் பார்க்காமலே கோபி சொன்னான் “ஏதாவது பேசின கடிச்சிடுவேன். முதலில் எனக்கு ஒரு கிளாஸ் மிக்ஸ் பண்ணிக்கொடு. தெரியாதுன்னு சொல்லாத. நாலு வருஷமா நான் ஊத்திக் குடிக்கும்போது பார்த்திருக்கீல? ம்.. ஊத்திக்கொடு. ”

“டேய் வேண்டாடா கோபி. சொன்னால் கேளு. ஏற்கனவே நாலு ரவுன்ட் அடிச்சிருக்க. போதும் வா வீட்டிற்கு பேகலாம். வாடா. ”

“ஓ! அப்படியா விஷயம்? வீட்டிற்கு இப்ப நீ உடனே போணுமோ? ”

“கோபி நீ பேசுறது சரியில்லை. வேணாம். எப்ப பாரு தப்பாவே பேசுற! ”
“சாரி டா. ”

“நானும் சாரி டா. மறந்திட்டேன். காலையிலேயே கால் பண்ணி உன்னிடம் சொல்லியிருக்கணும். மறந்திட்டேன். ”

ஐந்து நிமிடங்கள் அமைதியாக கடந்தது. நண்பர்கள் இருவரும் அமைதியாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆறாவது நிமிடம் கோபி வேகமாக குளியலறை போனான். உவ்வே உவ்வே என்ற சத்தம் மட்டும் உள்ளேயிருந்து வந்தது. பூட்டிய அறையைத் தட்டி ராஜன் கத்தினான்

“டேய் கதவைத் திற. நான் உள்ளே வரவா? ”

“கத்தாதடா! காது கேட்குது. வாந்தி எடுத்திட்டு வரேன் .” என்றான்.

குளியலறையிலிருந்து வந்தவனை ராஜன் கைபிடித்து அழைத்துவந்து கட்டிலில் படுக்க வைத்து தலைக்கும் கால்களுக்கும் தலையணை வைத்துவிட்டு அவன் அருகே உட்கார்ந்து கொண்டான்.

கோபியின் கால் ஷுவைப் பார்த்தபோது தானாக அவனது ஷுவையும் பார்த்துக்கொண்டான். ராஜனின் ஷு பள பளவென்று இருந்தது. அப்போதும் ஸ்ரீயைத்தான் நினைத்துக்கொண்டான். கண்கள் எரிந்து படுக்கவேண்டும்போல் இருந்தது. அப்போதும் ஸ்ரீயைத்தான் நினைத்துக் கொண்டான்.

மயக்கத்தில் கோபி உளறினான் “டேய் ராஜன் வேண்டாம்டா ஸ்ரீயை விட்டிடு. யாராவது வேதாளத்திற்கு முதுகில் லிஃப்ட் கொடுப்பாங்களா? உனக்குதான் பொண்ணு பார்க்கிறாங்கல? நீ என்னடான்னா வேதாளத்தை கட்டிப் பிடிச்சிகிட்டு தூங்குற.. யாராவது வேதாளத்தைக் கட்டிப்பாங்க? மடையா! ” என்று போதையில் சிரித்தான் கோபி.
அப்போதுதான் அவனுக்கு கேட்கத் தோன்றியது ஏன் கட்டிக்க கூடாதா? என்று.

பிறகு கட்டிக்கத்தான் போறேன் என்று தாமே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லிக் கொண்டான். என்ன ஒரு வித்தியாசம் அவனது வேதாளம் தலையை விரித்துப்போட்டு கழுத்திலிருந்து கால் வரை வெள்ளை உடை அணியவில்லை.

அதேபோல் இன்னும் ஒரு வித்தயாசம் என்னவென்றால் அந்த வேதாளம் இஷ்டப்பட்டு விக்கிரமாதித்தனை விட்டுப் போகவில்லை.

ஆனால் இவனது வீட்டில் இருக்கும் வேதாளத்தை இவன் தன்னோடு இறுக்கமாக கயிறுகொண்டு கட்டி வைக்க வேண்டும். இரண்டு முறை தப்பிப் போன வேதாளமாயிற்றே! என்று நினைத்தான் ராஜன்.
Comments are closed here.