Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

நிழல்நிலவு – 6

அத்தியாயம் – 6

புது இடம் என்பதாலோ என்னவோ இரவு அத்தனை பாடுபட்டும் காலை விரைவாகவே விழித்துவிட்டாள் மிருதுளா. உறக்கம் கலைந்துவிட்டாலும் எழுந்துகொள்ள முடியாத அளவிற்கு உடலும் மனமும் சோர்ந்திருந்தது. சிரமப்பட்டு எழுந்தவள் படுக்கையில் கிடந்த அந்த கருப்பு கோட்டை கவனித்தாள்.

‘இது யாரோடது! எப்படி இங்க வந்தது!’ – குழப்பத்துடன் அதை கையில் எடுத்தாள். இரவு நடந்ததெல்லாம் பனியில் மறைந்த பிம்பம் போல் அரைகுறையாக நினைவிற்கு வந்ததே தவிர கோர்வையாக எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. முயன்று சிந்தனைகளை ஒன்றுதிரட்டி யோசித்தாள். தலை பயங்கரமாக வலித்தது. இரண்டு கைகளாலும் தலையை தாங்கிப் பிடித்துக் கொண்டு விடாமல் யோசித்தாள்.

அர்ஜுன் ஹோத்ராவின் வரவும் அவனுடைய உதவியும் நினைவிற்கு வந்தது. ஆனால் தனக்கு என்ன ஆயிற்று… ஏன் அப்படி நடந்து கொண்டோம் என்றுதான் அவளுக்கு புரியவில்லை. சற்றுநேரம் எதுவுமே செய்யத் தோன்றாமல் அமர்ந்திருந்தவள் பிறகு தன்னை மீட்டுக் கொண்டு குளியலறைக்கு சென்றாள்.

அவள் குளித்துவிட்டு வெளியே வந்த சற்று நேரத்தில் பூஜா அவளைத் தேடி வந்தாள்.

“குட் மார்னிங்… நைட் நல்லா தூங்கி எழுந்தியா?” – பூஜா.

வாய் திறந்து பதில் சொல்ல முடியாமல் தலையை மேலும் கீழும் ஆட்டினாள் மிருதுளா. வீங்கியிருந்த முகமும் சிவந்திருந்த கண்களும் அவள் இரவெல்லாம் சரியாக உறங்கவில்லை என்பதை காட்டிக் கொடுத்தாலும், அதைப் பற்றி மேலும் குடையாமல், “வா என்கூட” என்று சமையலறைக்கு அழைத்துச் சென்றாள்.

வழியில் தென்பட்ட வேலையாட்களின் பார்வையெல்லாம் மிருதுளாவை துளைத்தது. நேற்று அவள் செய்த ஆர்ப்பாட்டம், இவள் யார் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை அவர்களுக்கெல்லாம் தூண்டிவிட்டிருந்தது. சங்கடப்படுத்தும் அந்த பார்வைகளை சகித்துக் கொண்டு பூஜாவை பின்தொடர்ந்து சமயலறைக்கு வந்து சேர்ந்தாள்.

‘அவளை கம்ஃபர்ட் பண்ணு… ஃப்ரீயா மூவ் பண்ண வை… அவ என்ன செய்ய இங்க வந்தாளோ அதை செய்ய வை…’ – மிருதுளாவைப் பற்றி பூஜா ரிப்போர்ட் செய்த போது, அர்ஜுன் ஹோத்ரா பூஜாவுக்கு கொடுத்த அடுத்த வேலை இது. அதைதான் இப்போது செயல்படுத்திக் கொண்டிருந்தாள் பூஜா.

“இந்த பொண்ண கிச்சன்ல ஏதாவது உதவிக்கு வச்சுக்கோங்க மாஸ்ட்டர்” – தலைமை சமையல்காரரிடம் கூறினாள்.

‘என்ன!’ – திடுக்கிட்டு நிமிர்ந்தாள் மிருதுளா. ‘நா எப்போ இங்க வேலை கேட்டேன்… அதுவும் சமையல் வேலை!’ – அவள் மறுத்து எதுவும் பேசுவதற்குள் மாஸ்ட்டர் தன் மறுப்பை கூறினார்.

“இங்க தேவையான அளவுக்கு ஆளுங்க இருக்கங்கமா… வேற பக்கம் ஏதாவது பாருங்க” – முகத்தை திருப்பிக் கொண்டார். மிருதுளாவிற்கு இங்கு வேலை பார்ப்பதில் துளியும் விருப்பம் இல்லை என்றாலும் அந்த மனிதர் அவளை நிராகரித்த விதம் அவளை அவமதித்தது. எதுவும் செய்ய இயலாத கையறு நிலையில் உதட்டைக் கடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.

பூஜா தன்னுடைய அடுத்த முயற்சியை செய்தாள். “சரி அப்போ ஹவுஸ் கீப்பிங்ல சேர்த்துக்கோங்க” – வீட்டை பராமரிக்கும் குழுவின் தலைமை பொறுப்பாளி பானுவிடம் கூறினாள்.

“முடியாது முடியாது… இந்த பொண்ணு சரியில்ல… எங்க ஆளுங்க வீடு முழுக்க போவாங்க வருவாங்க… இவ ஏதாவது தப்பு பண்ணிட்டான்னா நா பதில் சொல்லணும். எனக்கு அந்த தலைவலி வேண்டாம். வேணுன்னா தோட்ட வேலை செய்ய அனுப்புங்க. அதுதான் வீட்டுக்கு வெளியே இருக்க வேலை. பிரச்சனை கம்மியாகும்” – கராறாகக் கூறினாள்.

அதே சமயம், “வாட்ஸ் த மேட்டர்…?” என்கிற கணீர்குரல் அவர்களுடைய விவாதத்தில் குறுக்கிட்டது.

*******************

அர்ஜுன் ஹோத்ராவின் தூக்கம் கோழி தூக்கம் தான். இரவெல்லாம் மிருதுளாவின் அறையில் விழித்திருந்துவிட்டு அதிகாலையில் வந்து படுத்தவன், ஓரிரு மணிநேரங்கள் மட்டுமே ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் எழுந்துவிட்டான். இது அவனுக்கு பழக்கமான ஒன்றுதான். எனவே சிவந்திருந்த கண்களைத் தவிர வேறெந்த மாற்றமும் இல்லை அவனிடம்.

காலைக்கடன்களை முடித்துவிட்டு டிராக் சூட்டை அணிந்துக் கொண்டு உடற்பயிற்சிக்கு கூடத்திற்குச் சென்றான். அங்கே அவனுக்காக சுஜித், மாலிக் மற்றும் டேவிட் மூவரும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

“ஹூ இஸ் மை பார்ட்னர் டுடே” – ‘இன்னைக்கு யாரு என்னோட பங்காளி?’ – உற்சாகமாக ‘பாக்ஸிங் ரிங்’கில் இறங்கினான்.

மற்ற மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “ஐம் ரெடி…” – வார்ம்-அப் செய்து கொண்டே ரிங்கில் எகிறி குதித்தான் டேவிட். இருவரும் காட்டுமிருகம் போல் மோதிக் கொண்டார்கள். இது வெறும் பயிற்சியா அல்லது போட்டியா என்று காண்போரை சிந்திக்க வைக்கும் அளவிற்கு இருந்தது அவர்களுடைய மோதல்.

இருபெரும் மலைகள் மோதிக்கொள்ளும் அந்த அற்புத காட்சியை உற்சாகத்துடன் பார்த்து ரசித்தார்கள் மற்ற இருவரும். தலைவன் என்கிற பாரபட்சமில்லாமல் கடுமையாக போரிட்டான் டேவிட். ஒருமுறையாவது அவனை வென்றுவிட வேண்டும் என்கிற ஆசை அவனுக்குள் இருப்பதை காண முடிந்தது.

பயிற்சியின் ஊடே, “பட்டேல் எப்படி இருக்கான்?” என்று கேட்டபடி அவன் முகத்தை குறிவைத்தான் அர்ஜுன் ஹோத்ரா.

அவனிடமிருந்து லாவகமாக தப்பித்தபடி, “உயிரோட இருக்கான்” என்று எள்ளலாக பதில் கூறினான் டேவிட்.

“இருக்கணும்… எனக்கு தேவையான இன்பர்மேஷனை கொடுக்கறவரைக்கும் அவன் உயிரோடுதான் இருக்கணும்” என்றபடி மீண்டும் ஒரு கையால் அவன் முகத்தை குறிவைத்து மறுகையால் விலாவை தாக்கி நாக் அவுட் செய்து, ‘அவன் சாக வேண்டிய நேரத்தை நான் முடிவு செய்வேன்’ என்று சொல்லாமல் சொன்னான்.

மூன்று மணிநேர தொடர் பயிற்சிக்கு பிறகு தன்னுடைய அறைக்கு வந்து குளித்து உடைமாற்றி கீழே வர தயாரானான். தொழில் சம்மந்தப்பட்ட பல விஷயங்களை சிந்தித்தபடி கீழே இறங்கியவன் கடைசி படியில் கால் வைக்கும் போது அவனுக்குள் ஒரு விசித்திர உணர்வு தோன்றியது.

‘அவள் இங்குதான் இருக்கிறாள்’ என்பது போன்றதொரு உணர்வு. காலை எழுந்ததிலிருந்து அவளை பற்றி அவன் யோசிக்கவே இல்லை… ஆனால் இப்போது! ஏன் இப்படி தோன்றுகிறது! அவனுக்கு புரியவில்லை… தலையை உலுக்கி சிந்தனையை திசைதிருப்பியபடி உணவு கூட்டத்திற்குள் செல்ல எத்தனித்தவன் திகைத்தான். அவள் அங்கேதான் இருந்தாள். மிருதுளா…

அவளை பார்த்த கணத்தில் அவனுக்குள் ஓர் தவிர்க்க முடியாத உற்சாகம் தோன்றியது. அதற்கு காரணமெல்லாம் தெரியாது… தோன்றியது அவ்வளவுதான்…

அவள் மீது பார்வையை பதித்தபடியே உணவு கூடத்திற்குள் நுழைந்து டைனிங் டேபிளில் அமர்ந்தான். சமையலறை நுழைவாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த, அவளுடைய பக்கவாட்டு உருவம் அவனுடைய கவனத்தை முழுமையாக இழுத்துப் பிடித்திருந்தது. தலையை உயர்த்தி சீவி குதிரைவால் போட்டிருந்தாள். வேலையாட்களுக்கான சீருடை அவளுக்கு கச்சிதமாய் பொருந்தியிருந்தது. வளர்ந்த உருவமும் மெலிந்த தேகமுமாக செதுக்கி வைத்த சிற்பம் போல் அழகாக இருந்தாள். தன்னை மறந்து அர்ஜுன் ஹோத்ராவின் கண்கள் அவளை அளந்துக் கொண்டிருந்த போதுதான் அந்த குரல் அவன் ரசனையில் குறுக்கிட்டது.

“முடியாது முடியாது… இந்த பொண்ணு சரியில்ல… எங்க ஆளுங்க வீடு முழுக்க போவாங்க வருவாங்க… இவ ஏதாவது தப்பு பண்ணிட்டான்னா நா பதில் சொல்லணும். எனக்கு அந்த தலைவலி வேண்டாம். வேணுன்னா தோட்ட வேலை செய்ய அனுப்புங்க. அதுதான் வீட்டுக்கு வெளியே இருக்க வேலை. பிரச்சனை கம்மியாகும்” – அர்ஜுன் ஹோத்ராவின் முகம் கடுத்தது.

“வாட்ஸ் த மேட்டர்?” என்றான் கடுமையாக.

திடுக்கிட்டுக் குலுக்கினாள் மிருதுளா. குரல்வந்த பக்கம் திரும்பாமல் மெல்ல பூஜாவிற்கு பின்னால் பதுங்கினாள். அவளுக்கு புரிந்தது… இது அவனுடைய குரல்… நேற்று அவள் நடந்துகொண்ட விதத்திற்கு இப்போது எப்படி அவனை எதிர்கொள்வது! சங்கடத்துடன் மறைந்து நின்றாள். அவளுடைய ஒதுக்கம் அவனுக்கு சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது.

முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் எழுந்துச் சென்றான். அவன் அருகில் நெருங்கி வரவர அவளிடம் ஓர் இறுக்கம் உண்டானது. அதை அவனால் உணர முடிந்தது. அவன் புருவங்கள் நெரிந்தன.

மிருதுளாவின் கண்கள் மெல்ல உயர்ந்தன. பளபளக்கும் ஷூ, கருப்பு பேண்ட் அணிந்த நீண்ட கால்கள்… அதே நிறத்தில், அவனுடைய இறுகிய தேகத்தில் கச்சிதமாய் பொருந்தியிருந்த கோட்… ஆஜானுபாகுவான உருவம்… இறுக்கமான முகம்… அதில் அந்த கண்கள்… பார்வையால் அவளை கூறுபோடும் கத்திக் கண்கள். – சட்டென்று பார்வையை விலக்கிக் கொண்டாள். உள்ளே தடதடவென்று ஆடியது. வியர்வை முத்துக்கள் அரும்பின. பதட்டம் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. தன்னுடைய அருகாமை அவளை பாதிக்கிறது என்பது அவனுக்குப் புரிந்தது. இறுக்கம் சற்று தளர்ந்து,

“ஐ ஆஸ்க்ட் யு சம்திங்…” என்று பூஜாவிடம் புருவம் உயர்த்தினான்.

“புது பொண்ணு… ஹவுஸ் கீப்பிங்ல… எதுக்கு ரிஸ்குன்னு…” – பானு இழுத்தாள்.

“ஷட்…” என்று சீரியவன், அவளை வெறித்துப் பார்த்து “நன் ஆஃப் யுவர் பிசினஸ்…” என்றான் அழுத்தமாக. அவன் சற்றும் குரலை உயர்த்தவில்லை. ஆனால் அவனுடைய முகமாற்றமும் தீவிரமான பார்வையும் அவளை வாயடைக்கச் செய்தது.

“சாரி சார்” என்று முணுமுணுத்தபடி கீழே குனிந்துக் கொண்டாள். இப்போது அவனுடைய பார்வை பூஜாவின் பக்கம் திரும்பியது.

“ஷி நீட்ஸ் டு மிங்கில் வித் பீப்பிள்” – ‘இவ மத்தவங்களோட பழகணும்’ – பூஜா.

“தென் மேக் இட் ஹேப்பன்…” – ‘அப்போ அதை நடைமுறை படுத்து’ – என்று பூஜாவிடம் கூறிவிட்டு பானுவின் பக்கம் திரும்பி, “மிருதுளா இங்கதான் ஒர்க் பண்ணறா… உன்கூட…” என்றான்.

“எஸ் சார்…” – தலையை மேலும் கீழும் ஆட்டினாள் பானு.

எதுவும் பேசமுடியாமல் இறுகி போய் நின்ற மிருதுளாவை பார்த்து, “மீட் மீ இன் மை ஆபீஸ் அட் 10 AM ஷார்ப்” – ‘பத்து மணிக்கு என்னை ஆபீஸ்ல வந்து பாரு’ என்றான். அவன் முகத்தில் உணர்வுகள் ஏதும் இல்லை. ஆனால் தொனி உத்தரவிட்டது.

மிருதுளாவின் தன்மானம் வெடுக்கென்று மேலெழுந்தது. சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். கூர்மையான அவனுடைய பார்வை அவளை ஊடுருவியது. முகம் கன்றி சிவக்க… கைவிரல் நகங்கள் உள்ளங்கையில் பதிய, உதடுகளை அழுந்த மூடிக் கொண்டு ஆமோதிப்பாக தலையசைத்தாள். அமைதியாக அங்கிருந்து சென்றான் அர்ஜுன் ஹோத்ரா.

“எனக்கு இங்க வேலை பார்க்க விருப்பம் இல்ல… நா போகணும்” – அர்ஜுன் அகன்றதும் பூஜாவிடம் முறையிட்டாள் மிருதுளா.

“எங்க போகணும்?” – பூஜா.

“எங்கிருந்து வந்தேனோ அங்க…” – பொறுமையிழந்து குரலை உயர்த்தினாள்.

“அங்க பாதுகாப்பு இல்லாம தானே ஓடி வந்த? திரும்ப அங்கேயே போகணும்னு சொல்ற?” – பூஜாவின் கண்கள் இடுங்கின.

“ஓ காட்!!! அதுக்காக நா இங்கேயே இருக்க முடியுமா? திஸ் இஸ் நாட் மை ப்ளேஸ்… ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்…”

“ஐம் சாரி மிருதுளா… இது என்னுடைய முடிவு இல்ல…” – உதட்டைப் பிதுக்கினாள் பூஜா.

மிருதுளாவின் கண்கள் கலங்கின. பூஜாவுக்கு சங்கடமாக இருந்தது. அவளை சந்தேகத்திற்கு இடமானவள் என்று எண்ணவே இயலவில்லை. ஆனால் சூழ்நிலைகள் அனைத்தும் அவளுக்கு எதிராகவே இருக்கும் போது, உள்ளுணர்வுக்கெல்லாம் மதிப்பளிக்க முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் அவள் வேலை செய்யவில்லை. எனவே சற்று இளகிய மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, “இட்ஸ் ஓகே… எல்லாம் சரியாயிடும்… இட்ஸ் கோண பி ஆல்ரைட்…” என்றாள் அவளுக்கு ஆறுதலாளிக்கும் விதமாக.

மிருதுளா மறுப்பாக தலையசைத்தாள். “இல்ல… எதுவும் சரியாகப்போறதில்ல…” என்றாள். கண்களில் கண்ணீர் வடிந்தது. அவளை பார்க்க பரிதாபமாக இருந்தது பூஜாவுக்கு. அவளுடைய கண்ணீரை ஒதுக்க முடியவில்லை. தன்னனுடைய கட்டுப்பாட்டையும் மீறி அந்த ஆலோசனையைக் கூறினாள்.

“அர்ஜுன்கிட்ட பேசிப்பாரு… ஹி மே பிலீவ் யு”

20 Comments

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  PAPPU PAPPU PAPPU PAPPU says:

  super ud ma

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Anjali Suresh says:

  Ha ha thappana idea pooja. Aju epdi ivala poga viduvan…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  NICE UD SIS

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Emily Peter says:

  Oruvela Mirudhula Arjunoda PA aagividuvalo?mella mella malarum soft corner pola

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   //Arjunoda PA aagividuvalo?// Achcho WHY ma WHY…??? appadillaam illa…

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Anjali Suresh says:

   Aju voda PA aana avan parvailaye thane irukanum. Avan avala santhega padran apo epdi avala than kanparvaila veppan? Avala freeya suthavittu thane kandupudikka try panvan.

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Rajee Karthi says:

  Pavam miruthula

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Rajee…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Ambika V says:

  Pavam pa miruthu eppadiyavathu avala velila anupitanum kadavule😁😁

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Ambika…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vidya Priyadarsini says:

  Nice update…… Waiting for the next episode eagerly……..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Vidya…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  Mmmm… Avanuku urchagama iruku, at the same time Ava avoid panna pidikala polave… Mridu Pooja solra madiri pesi paru

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Vatsala…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  vijaya muthukrishnan says:

  very very nice ud. eagerly waiting for your next ud

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Vijaya…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Ganeshan says:

  Nice ud sis…..

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Priya…

 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Daisy Mary says:

  its gng gud…..
  interesting to read….

  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Daisy…