Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

முள்ளோடு முத்தங்கள்-30-32

 முள்ளோடு முத்தங்கள்

 

  அத்தியாயம் 30

 

போன எபிசோட் கண்டினுயேஷன் பிரண்ட்ஸ் போனதடவ கொடுக்க டைம் இல்ல சோ இப்போ தரேன் பிரண்ட்ஸ் மூன்றுஎபி கொடுத்திருக்கேன் என்ஜாய்….

 

கனவு உலகில் மிதந்தவளை பேபி’  என்றழைத்து தன் முகவாயை பற்றி இழுத்த கணவனைப் பார்த்தவள் சொல்லுங்க பாவாஎன் பாவாக்கு இப்போ என்ன வேணாமாஅவனை கொஞ்சிக்கொண்டு கேட்க

 

ஆதியோ காதலோடு அவளைப்பார்த்துஎனக்கு ஒன்னும் வேண்டாம் பேபிஉனக்கு என்ன வேணும் அதை சொல்லுஏன்னா இந்த மாதிரி நேரத்துல அவங்க ஆசைப்படரத செய்யணும்னு சொல்வாங்க

 

உனக்கு என்ன வேணும் பேபிஇதுவரைக்கும் நானா உனக்கு எதும் செய்யலையே பேபிநீயும் இதுவரைக்கும் எதுவுமே கேட்டதில்ல  ‘

 

ம்ம்ம்  சொல்லு பேபி உனக்கு  என்ன வேண்டும் என்று அவளை வற்புறுத்தஅவனது மனைவியோ புன்னகை முகத்தோடு பாவா  இது வரைக்கும் நீங்க எனக்கு என்ன செய்யலைஎனக்கு தேவையான எல்லா அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கும் போது எனக்கு என்ன தேவைப்பட்ட போகிறது பாவா என்றவளை பார்த்தவன்

 

ஹ்ம்ம் அது உன் பெருந்தன்மையா இருக்கலாம் பேபி’…. ஆனால் எனக்குனு ஒரு கடமை இருக்கிறது அல்லவா… ‘என்னை மேலும் குற்றவுணர்சிக்கு ஆளாக்காத பேபி

 

அச்சோ பாவா என்ன இது பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டுஎன்றவளை பார்த்தவன்…. அப்படியென்றால் நீ என் ஆசையை புரிந்துக்கொள்ள வேண்டும் அல்லவா விடாமல் அவளிடம் மன்றாட….

 

அவனது  முகத்தை தன் கையில் எந்தியவள்எப்பவும் உங்களோட காதலை எனக்கே …. எனக்கேன்னு கொடுப்பிங்களா பாவாஇதே அன்பும் காதலும் எப்பவும் மாறாமல்தன் கண்களில் தனது ஒட்டுமொத்த காதலையும் தேக்கி வைத்து அவனிடம் கேட்க ….

 

அவளது மணாளனோ உணர்ச்சி பெருக்கில் தன் காதலை அவளுக்கு உணர்த்திடும் பொருட்டு அவள் இதழை தன் முரட்டு உதட்டால் சிறைசெய்தான்நீண்ட நேரம் சென்ற பின்பே தன்னை விடுத்தவனை சந்திக்க முடியாமல் அவன் மார்பிலே தலை சாய்த்துக்கொண்டாள்

 

அவளை சிரிப்போடு தன் நெஞ்சில் புதைத்துக்கொண்டவன் அவளிடம் பேபி ஆனாலும் என் மேல் உனக்கு இவ்ளோ நம்பிக்கை கூடாது என்று கதைத்தவனை பார்த்தவள் அய்யோ பாவா உங்கமேல நம்பிக்கை இல்லாமலாம் இல்ல பாவா நீங்க கேட்டதால சொன்னேன் உங்க மனசு கஷ்டப்படும்படி பேசிருந்தா மன்னிச்சு பாவா என்றவளின் முகம் சிறுத்து போக

 

ஹேய் பேபி சும்மா சொன்னா உடனே சீரியஸ் ஆகிட வேண்டியதுஎனது காதல் எப்பவும் உனக்கு கிடைக்கும் பேபி  அதுல சின்ன சந்தேகம் கூட வேண்டாம்….அதெல்லாம் தினமும் கிடைப்பதுஆனா நான் கேட்பது உனக்கு ஏதாவது ஆசையா இருக்கானு ப்ளீஸ் பேபி சொல்லுஎன்க

 

அவனது மனையாலோ கர்மசிரத்தையாக யோசித்து ம்ம்ம்…. பாவா எனக்கு ரெண்டு ஆசை இருக்குஆனா அதில் ஒன்னு இப்போ கேட்க மாட்டேன் நேரம் வரும் போது சொல்றேன்என புதிர் போட்டவளை புரியாமல் பார்த்து வைத்தான் ஆதி….

 

அப்புறம் இன்னொன்று என்று தீவிரமாக யோசித்தவள் அவனை நெருங்கி அவன் சட்டை பொத்தானை திருகியப்படி அவனிடம் சரசமாக பேசஅவளது செயலில் கள்ளுண்டவன் போல் தனக்கு அருகில் தன்னை நெருங்கி அமர்ந்திருந்தவளை அள்ளி எடுத்து தன் மடியில் அமர்த்தியவன் ஹ்ம்ம்  சொல்லு பேபிஅப்புறம் என்ன வேணும் மேடத்துக்கு

 

எனக்குகுகு …. ‘ உனக்கு சொல்லு பேபி…….

 

எனக்கு உங்கள மாதிரியே  ஒரு அழகான ஆண் குழந்தை வேணும் பாவா…. உங்கள மாதிரியே அழகா…. கர்வமாஆளுமை நிறைந்த ஒரு செல்வந்தன் வேண்டுமென்று கெஞ்சியவளை கொலை வெறியுடன் பார்த்திருந்தான் அவள் கணவன்என்னஎன்ன டி பேபி சொன்னஅடி பிச்சிருவேன் பாத்துக்கோஎன கூறியவனை மிரண்டுப்போய் விழித்தாள் மித்ரா

 

அவளது கணவனோநானே…. எனக்கு பெண் குழந்தை வேண்டுமென்று தவமிருக்கேன்…. நீ என்னடான்னா ஆண் குழந்தைதான் வேணும்னு சொல்றியே பேபிசெல்லமாக கோபித்துக் கொண்டு தனக்கு புதல்வித்தான் வேண்டுமென்று சிறு குழந்தைப்போல் அடம் பிடிக்கும் தன்னவனை பார்த்து சிரித்து வைத்தாள்

 

கிலுக்கி சிரித்தவளை கண்ட ஆதிஎன்ன என்ன உனக்கு சிரிப்பு வேண்டிக்கிடக்கு இப்போநான் பெண் குழந்தை கேட்டதாலையாஹ்ம்ம் பரவாயில்லை நல்லா சிரிச்சிக்கோ ஆனால் எனக்கு பெண் பிள்ளைகள் என்றால் ரொம்பவும் இஷ்டம் பேபி அதுவும் உன்னைப்போல் இருந்தால் இன்னும் ரொம்ப இஷ்டம் பேபி

 

அவளை என் கையில் தாங்கி என் நெஞ்சில் சுமக்க வேண்டும் பேபிநான் இழந்த அத்தனை மகிழ்ச்சியையும் என் பிள்ளைகளுக்கு நான் திருப்பிக் கொடுக்க வேண்டும்  என்றவன் குழந்தைகளின் வளர்ப்பை பற்றி ஒரு தந்தையாக மாறி தன்னவளிடம்  விவரித்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்

 

அவளுக்கோ பெருத்த ஆச்சரியம் தன் கணவனுக்கு இவ்வளவு விஷயங்கள் தெரியுமா? இத்தனை நாள் ஒரு முறைக்கூட அவன் இது மாதிரி மனம் விட்டு பேசியதில்லை ஒன்றை தவிர அவன் பெற்றோர்கள் பற்றின உண்மையை மட்டும் பகிர்ந்துள்ளான்….

 

அதை தவிர வேறெதுவும் தன்னிடம் பகிர்ந்து கொள்ளாதவன் இன்று அவன் மனதில் உள்ளதை தன்னிடம் விவரிக்கிறான் என்றாள் அவன் ஆழ்மனதில் எத்தகைய அதீத ஏக்கங்கள் எண்ணிலடங்காது புதைந்திருக்கும்

 

அவனுக்கு மகிழ்ச்சி தருவது எதுவாக இருந்தாலும் சரிஅது அவளது உயிரே இருந்தாலும் சரி அவனுக்குகாக தான் அவன் மீதுக் கொண்ட அலாதி காதலுக்காக ஊனையும் உருக்கி அவன் காலடியில் சமர்பிப்பாள் அவன் மனைவி அத்தகைய அன்பினை சுமந்துக் கொண்டிருப்பவளின் உள்ளம் அவனுக்காக தன் ஆசையை விட்டுக்கொடுக்க துணியாதா என்ன? ……

 

சரி பாவாஉங்களுக்கு எது இஷ்டமோ அதுவே எனக்கும் இஷ்டம் பாவா…. நீங்க நினைச்சதுப்போல் உங்க கையில உங்க பொண்ணு இன்னும் கொஞ்ச நாளில் தவழுவா போதுமாஎன்னும் மனைவியின் வார்த்தையில் அவளை நிமிர்ந்து பார்க்க

 

 தனக்காக பார்கிறாளா என்று அவள் முகத்தை ஆராய்ந்தவன் பேபி நான்  இப்படி கேட்டதும் உனக்கு கஷ்டமா இருக்காமனைவியை ஏமாற்ற மனம் வராதவனாய்

 

ஆதரவோடு அவன் முகத்தை வருடியவள்ம்ஹும் இதுல கஷ்டமே இல்ல பாவாஉங்களுக்கு எதுவிருப்பமோ அதுவே எனது விருப்பம் என கூறியவளை கண்டு அவன் காதல் கொண்ட நெஞ்சம் அவளை மோகத்தோடு பார்த்தது

 

அப்போ சரிஎன் விருப்பத்தை நான் மருத்துவமனையிலே கூறிவிட்டேன் உனக்கு நினைவு படுத்தவா பேபி? தன்னை கேள்வியால் துளைத்து எடுத்தவனை புரியாமல் பார்த்து வைத்தாள் அவன் மனையாள்

 

சற்று தாமதத்திற்கு பிறகு அவன் கூறிய விருப்பம் எதை பற்றி என புரிந்தவளாய் முகம் சிவந்து தலைக் குனிந்தாள் போங்க பாவாஎன்றவள் தன் முகத்தில் படர்ந்திருக்கும் செம்மையை மறைப்பதற்காக தன் கைக்கொண்டு முகத்தை மூடிக்கொண்டாள்

 

அவளை மேலும் சிவக்க வைக்கும் பொருட்டுஅடடேபாருடா என் பொண்டாட்டியவீர மங்கைப்போல் பேசியவளை எங்கு காணோம் என்றவனின் கூற்றில் மேலும் வெட்கப்பட்டாள்

 

ஹும் என்ன என்னோட  ஜான்சி  ராணி அப்பப்போ வெளிய வராங்க ஆனா நான் ஏதாவது கேட்டா மட்டும் பேச்சையும் காணும்…. மூச்சையும் காணும் ஹாச்பிட்டல்ல வச்சி அப்படி பேசுனியே பேபிஆனா இங்க என்னடான்னா பேச்சையே காணோம்என்க

 

அவளோ அவனைப் பார்த்து இறையாக இருக்கும் மான் சிங்கத்தின் குகைக்குள் மாட்டிக்கொண்டு சத்தம் செய்தால்அது தானாக வழியவந்து இறையாகிவிடாதா அதனால் தான் அமைதியாக இருப்பது என பூடகமாக பேசியவளை கண்டவன் சூப்பர் அருமையான பதில் பேபிஆமா இங்க யாரு சிங்கம்? யாரு மான்? பேபி அதையும் பார்க்கலாமா…. ‘ தன் ஒற்றை புருவத்தை மேல தூக்கி கண் சிமிட்டியவனை பார்த்தவள் அவன் பேச்சின் உள்ளர்த்தம் புரிந்தவளாக அவனிடம் விரும்பியே சரண் புகுந்தால்வேட்டையாடும் சிங்கத்தின் இறை மானாக மாறியவள்!!!

 

அங்கு அவர்களின் மகிழ்ச்சியை கொண்டாடும் பொருட்டு அழகிய இல்லற காவியம் அரங்கேறியது ஆர்பாட்டமின்றி அமைதியான முறையில்….

 

அத்தியாயம் 31

 

பேபி….. கொஞ்சம் சீக்கிரமா கிளம்பு…. செக்கப்க்கு போகணுமா இல்லையாமித்ராவின் கணவன் அடிக்குரலிருந்து கத்தஅவனது கோபம் எதனால் என்று புரிந்துக்கொண்டவள்விரைவாக தயாராகி கீழே வந்தாள்படிகளில் வேக வேகமாக எட்டுக்கலை எடுத்து வைத்து வருபவளை பார்த்து அடிவயிற்றில் புளியைக்கரைக்க ஹேய் பேபி பொறுமையா வாடிஇப்ப நீ மட்டுமில்ல பேபி உன்னோடு சேர்த்து மூணு பேர் இருக்கீங்க பொறுமையா டிஎன்றவன் அவளுக்கு அருகில் வந்து கடியஅவனைப்பார்த்து அசடு வழிந்தாள்

 

 ஆம் இது மித்ராக்கு மூன்றாவது மாதம் குழந்தை உருவாகியிருந்த நாற்பத்தைந்து நாளில் செய்த பரிசோதனையில் கரு மட்டுமே இருப்பதை உறுதி செய்யப்பட்டது….

 

பின்னர் வந்த மாதத்தின் பரிசோதனையில் தான் தெரிந்தது இரண்டு கரு உருவாகியிருப்பதைதன் மனைவி ரெட்டை குழந்தைகளை தாங்கி இருப்பதை உணர்ந்தவன் அவள் கால் தரையில் படாமல் தன் உள்ளங்கையில் வைத்து தாங்கினான் என்றால் மிகையல்லகண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டான்  நல்ல கணவனாக !!!

 

வீட்டில் இரட்டை குழந்தை என்று கூறியதும் குடும்பமே தங்களது மகிழ்ச்சியில் ஆழ்த்திருந்தது…  அவர்களின் கவனிப்பும் இரட்டிப்பாக இருந்தது

 

சாரி பாவாஎன தயங்கி உள்ளே சென்ற குரலில் அவனிடம் வேண்டஅதைப் பார்த்தவன் தன் கோபத்தை இழுத்து வைக்க மனமில்லாது அவள் செய்யும் சின்னச் சின்ன குறும்புகளை ரசிக்கவும் செய்தான் சரி இப்போவது போலாமா மகாராணிஎன்று அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்

 

மருத்துவரை சந்தித்தவர்கள் ஸ்கேன் எடுக்கும் அறைக்கு சென்றனர்ஸ்கேன் திரையில் பார்வையை பதிக்குமாறு மருத்துவர் கூறதம்பதியினர் இருவரும் தங்கள் காதலின் சின்னமாய் உருவாகியிருந்த  மகவுகளை கண்டு மெய் மறந்து கணினி திரையில் பார்திருந்தனர்

 

மருத்துவரோ பாதி உருவம் மட்டுமே வடிவிலிருந்த குழந்தைகளை கண்டு கை, கால்கள் வளர்ச்சி அடைகிறது என்றும் இது குழந்தையின் கண்,மூக்கு,காது என்று கணினி திரையைப் பார்த்து அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார்

 

இரண்டு சின்னஞ்சிறிய உயிர்களை கண்டவனின் மனம் எதைப்போல் உணர்ந்தது என்று விவரிக்க முடியாத சுகம் அவனுள் பரவியதுதன் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அருகில் படுத்திருக்கும் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான் நன்றி செலுத்தும் வகையில்

 

மேலும் மருத்துவர் இது குழந்தைகளின் ஹார்ட் பீட்   நார்மலா இருக்கு பாருங்கஎன்றவர் திரையில் ஒளிரும் (ECG) இசிஜியின் பயன்பாட்டினை காண்பித்தார்

 

குழந்தைகளின் இதய துடிப்பை  காதுக்கொடுத்து கேட்டவனின் உள்ளத்தில் தந்தையென்னும் அமுத சுரபி சுரந்து பொங்கி வழிந்ததுஇந்த இனிமையான தருணத்தை அனுபவிக்கவே இந்த பிறவி போதாதேன அவன் உள்ளம் ஏங்கியது….  

 

மனம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்க  வீட்டை அடைந்தவர்கள்…. பிள்ளைகளின் நலனைப்பற்றி அனைவரிடமும் பகிர்ந்துகொண்டவன் தன்னவளை விட்டு பிரிய மனமே இல்லாமல் தொழில் கூடத்திற்கு கிளம்பி சென்றான் அவளிடம் சொல்லிக்கொண்டு

 

இரவில் வேலையை முடித்துக்கொண்டு விரைவாக வர நினைத்தவன்என்ன செய்தும் அவனால் வரமுடியாமல் போனது ஏனெனில்  வேலைப்பளு அவனை மூழ்கடித்துக் கொண்டதுஇருப்பினும் விரைவாக வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்

 

என்றும் போல் அன்றும் அவனது மனைவி அவனுக்காக காத்திருந்தாள் நினைச்சேன் பேபிநான் தான் ஏற்கனவே சொல்லிற்கேன் எனக்காக வெயிட் பண்ணாம சாப்பிட்டு தூங்குன்னு  சொல்வதை கேட்க வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாய் அப்படித்தானே பேபி என்றவன்

 

 அவளைப் பார்த்துசாப்பிடவாவது செஞ்சியா பேபிஎன்க அவளோ தலையை இடதும் வலதுமாக இல்லை என்று அசைக்கஅவளை ஒன்றும் செய்யமுடியாதவனாய் இன்னும் சாப்பிடல அப்படித்தானே…. ஏன் பேபி கொஞ்சம் கூட அக்கறை இல்லாம இருக்கஎன் வேலைபளுவின் காரணம் தெரிந்தும் நீ இப்படி செய்யலாமா பேபிநீ நன்றாக இருந்தால் தானே பிள்ளைகள் நன்றாக இருக்கும் என மொழிந்தவனை பார்த்தவள் பாவா என்ன பார்த்துக்க நீங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலைஅவள் தன் நிலையிலிருந்து வாதிட்டாள்அவன் எத்தனை முறை தான் அவளை கடிந்துக் கொண்டு அறிவுரை கூறினாலும் இந்த விசயத்தை பொறுத்தவரை அவன் மனைவி கேட்பதாய் இல்லை

 

 அவளை அழைந்துக் கொண்டு உணவு மேஜைக்கு சென்றவன் அவளை உட்கார வைத்து உணவு பரிமாற அதை தடுத்தவளை பார்த்தவன்ஏன் பேபிசாப்பாடு பிடிக்கலையா???’ என்று கேள்வி கேட்பவனை கண்டு மறுப்பாய் தலையசைக்க நீங்க ஊட்டிவிட்டா நான் சாப்பிடறேன் பாவாஅவனிடம் பேரம் பேசியவளை பார்த்தவன் எந்த ஒரு மறுபேச்சுமின்றி  ஊட்டிவிட்டான் அவளுக்கு ஒரு அன்னையாக மாறிஇதுவே தினமும் தொடர்ந்தது மனைவியின் எண்ணத்தை புரிந்துக்கொண்டவனாய் சலைக்காது அவளின் விருப்பத்திற்கு உயிருட்டுவான்

 

தானும் ஒன்னும் சலைத்தவள் இல்லை என்ற வகையில் உணர்த்தும் பொருட்டு அவன் அவள் மீது காதலை வைத்திருந்தான் என்றால் அவளோ அவன் மீது உயிரையே வைத்திருந்தால் அவனது எல்லா வேலைகளிலும் பங்கெடுத்துக்கொள்வாள் அவன் வேண்டாம் என்று தடுத்தாலும் அதை செய்து முடித்த பின்பே மறுவேலை செய்வாள் …..

 

அன்றும் அப்படியே தன் கணவனுக்கு என்னென்ன பதார்த்தங்கள் பிடித்தமை என்று பட்டியலிட்டவள்அவனுக்காக சமைத்து எடுத்து செல்ல ஆயுத்தமானாள் ஏனெனில் அன்று மதியம் தன்னால் வீட்டிற்கு உணவு அருந்த வரமுடியதென்றும் சர்வதேச தொழில்குழுமத்தின் சந்திப்பு இருப்பதால் தன்னிலையை முன்னிருத்தி அவளிடம் கூறியவன் தனக்காக காத்திருக்காமல் உணவு உண்ணுமாறு சொல்லிச் சென்றான்….

 

****************************************

 

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் தோழமைகளே (good morning to everybody frnds and this is a pleasant day we r joing together dis wonderful auspicious occasion) இந்த இனிய சர்வதேச குழும சந்திப்பிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் முதல் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்சந்திப்பின் தலைமை செயலாளர் உரையாடிக் கொண்டிருந்தார்சர்வதேச குழும சந்திப்பில் அத்தனை கம்பெனிகளின் தொழிலதிபர்களும் பங்குதாரர்கள் என்று பிரம்மாண்டமாக தயார்செய்து கடல் போல் காட்சியளித்தது பொதுக்கூட்டம்அனைத்து பங்குத்தாரர்களும் பங்கு பெறுவதால் இதில் MR கம்பெனியின் எம்டி தினேஷும் உள்ளடக்கமே

 

 ஆதியை இங்கு நேருக்கு நேராக சந்தித்தவனின் கோபம் அதிகரித்ததுஅதில்  எண்ணெய் ஊற்றுவதுப்போல் தலைமைசெயலக குழுமம் இந்த ஆண்டிற்கான சிறந்த தொழிலதிபன் விருதை ஆதித்ய வர்மனுக்கு வழங்கவே இந்த குழும சந்திப்பை ஏற்படுத்தியது ஏனென்றால் இந்த ஆண்டும் பொருளாதாரத்தின் புள்ளி விகிதத்தை தட்டிச் சென்றது கே.கே குரூப்ஸ் அதன்( MD) எம்டி Mr. ஆதித்ய வர்மனை மேடைக்கு அழைத்து ஊகிவிப்பதாய் பொருட்டு ஊக்க விருந்து வழங்கப்பட்டதுஇதை ஒருவிதமான காழ்புணர்ச்சியோடு பார்த்திருந்தான் தினேஷ்

 

காங்கிராட்ஸ் ஆதித்ய வர்மன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் என்று சக தொழிலதிபர்கள் அனைவரும் தங்களின் பாராட்டை ஆதிக்கு தெரிவித்தனர்தினேஷும் தன் பங்கிற்கு அவனது கையை குலுக்கி காங்கிராட்ஸ் ஆதிநான் நினைச்சத விட பாஸ்டா மூவ் பண்ற லைக் யூர் வெ ஆஃ மூவிங்அப்புறம் ஆதி வீட்டுல எல்லாரும் நலமா முக்கியமா உன்னோட தர்ம பத்தினியும் உன்னோட பேபிசும் நலமாஎன்று இருபொருள் கொண்டு பேசியவனின்

 

பேச்சில் வெகுண்ட ஆதிஎன்னோட தர்ம பத்தினியும்  என் பிள்ளைகளும் எப்பவும் நலமாக இருப்பார்கள் தினேஷ் அதைப்பற்றி உனக்கு கவலை வேண்டாம் என்று அவனின் நக்கலான பேச்சிற்கு தகுந்த பதிலடி கொடுத்தான் ஆதி  ஒஹோ அப்படியா ஆதி அப்போ ரொம்ப சந்தோஷம்…. ஒன்ஸ் அகைன் காங்கிராட்ஸ் யூ ப்ரோமோடட் டூ பி அஸ் பாதர்ஹ்ம்ம் எப்பவும் நல்லாயிருந்த சரி நல்லா பார்த்துக்கோஎன்று கூறியவன் பேச்சில் ஏதோ அறிவிப்பதுப் போல் உணர்ந்தவன்

 

 ‘ தாங்க்ஸ் தினேஷ்என்ற வார்த்தையை கூறி சந்தேகப் பார்வையை அவன் மேல் வீசினான்அவன் ஏதோ வில்லங்கம் விளைவிக்க போவதாக அவன் தொழில் மூளை அவனுக்கு உரைக்க அதற்கு முன் தான் முந்திக்க முடிவெடுத்தவன் செயலில் இறங்கினான்

 

சிரித்து பேசிக்கொண்டிருக்கும் ஆதியை பார்த்தவன்நல்லா சிரிச்சிக்கோ ஆதி இதுதான் நீ சிரிக்கிற கடைசி சிரிப்பா இருக்கும்  ‘ – வன்மைக்கொண்டு மனதில் உரைத்துக்கொண்டான் தினேஷ்

 

 

மீட்டிங்கை முடித்துக்கொண்டு அலுவலகம் வந்தவன் அங்கு எதிர்பாராத விதமாக நேஹாவின் வருகையை எதிர்நோக்கினான்ஆதியின் வருகைக்காக கத்திருந்திருந்தவள்அவன் வருவதைப் அறிந்து அவனை இடைமறித்து பேச மூயன்றாள்அவளை தடுத்தவன் தன் கேபின்கு வருமாறு அவளை அழைத்து சென்றான்….

சூழல் நாற்காலியில் வந்து கேசுவலாக அமரந்தவன்…. இப்படி ஏதாவது நடக்கும் என்று முன்பே எதிர்பார்த்தவனாய் எந்த ஒரு உணர்ச்சியும் முகத்தில் வெளிப்படுத்தாமல் அமர்ந்திருந்தான்அவனை நோக்கி வேக நடையிட்டு வந்தவள்ஆதி நீ செய்யுறது உனக்கே நல்லர்க்காஎன்னைய கல்யாணம் பணிக்கிறதா சொல்லிட்டு இப்படி                    டபுப்ளே கேம் ஆடி என்ன ஏமாதிட்டியே ஆதிஅவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதுதே மித்ரா அங்கு வந்தது விதியின் கோலமா அல்லது ஆதியின் துர்தஷ்டமா???… தெரியவில்லை!!

 

சொல்லு ஆதி …. இன்னைக்கு நீ மட்டும் குடும்பமா சந்தோஷமா இருக்க…. நான் தனி மரமா ஆகிட்டேன் இத்தனை நாள் என் கூட இருந்துட்டு என்ன காதலிச்சிட்டு எப்படி ஆதி உனக்கு என்ன ஏமாத்த  முடிஞ்சதுநம்ப வாழ்ந்த  வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் ஆதிகத்திக் கூப்பாடு போட்டவளை கண்டு ஆதிரமடைந்தான்….

 

அந்நேரம் பார்த்து மித்ரா தன் கணவனுக்காக மத்திய உணவை சமைத்து எடுத்துக்கொண்டு வந்திருந்தால்அவனுக்கு இன்பதிர்ச்சி கொடுக்க வேண்டி தன் வருகையைக் கூட அவனிடம் கூறவில்லைஎங்கே தான் வருவதாக கூறினாள் அவன் சம்மதிக்க மாட்டானென்று அஞ்சினாள்….

 

உள்ளே நுழைந்தவள் தன் கணவன் இருக்கும் கேபின்  அறையை திரக்க சென்றவள் செவியில் நேஹாவின் அழுகை பேச்சும் ஆதியின் கர்ஜனை குரலும் ஒரு சேர ஒலித்தது இருப்பினும் அவள்  மனதில் சிறிதும் சந்தேகம் வரவில்லை மராய் ஏதோ வார்த்தை தகறாராக இருக்கும் என்று எண்ணியவள் அந்த இடத்தை விட்டு நகர முயன்றாள்

 

அவர்கள் பேசுவது தானாக காதில் விழுந்தாலும் அது ஒட்டு கேட்பதாகத் தான் குறிக்கும் ஆகையால் தான்  அதிகப்படியாக அங்கு இருப்பதாக நினைத்தாள்அந்த இடத்தை விட்டு கடந்து செல்ல முயன்றவளின் காதில் மித்ராஎன்று தன் பெயர் அடிப்படுவதை  செவிசைத்தவளின் நடை முற்றிலுமாக தடைப்பட்டது…..

 

ஒரு நிபந்தனை பெயரில் அவளை திருமணம் செய்துகொண்டதாக கூறியது எதற்கு…’ அப்போ என்ன காதலிச்சதுஎன்கூட கல்யாணத்துக்கு முன்னாடி நீ வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன பெயர் ஆதி…. என்ன காரணம் ஒரு வேலை புதுசா அவ வந்ததும் …. நான் உனக்கு கசந்து போய்ட்டானாஅவன் சட்டை காலரைப் பற்றிக்கொண்டு அவள் ஆக்ரோஷமாக கத்த….

 

ஆதியின் பொறுமை காற்றில் பறந்துகைய எடு நேஹா…. கைய எடுடி …. நீ வந்து இங்க கூப்பாடு போன்றளவுக்கு நீ ஒன்னும் அப்படியே பத்தினி தெய்வம் கிடையாது…. உனக்கு மட்டும்தான் பேச தெரியும்னு பேசாத …. ‘நான் பேச  ஆரம்பித்தாள் நீ தங்கமாட்டாய் என்றவன் நேஹாவிடமிருந்து தன்னை விடுத்துக்கொண்டு நல்லா யோசிச்சி பாரு நேஹாநானா உன்ன தேடி வந்தானா இல்ல நீயா என்ன தேடி வந்தியாதன் முழு நீளத்துக்கு உயர்ந்து நின்றவன் அவளை நோக்கி கேள்வி அம்புகளை தொடுத்தான்….

 

அடிபட்ட பெண் புலிப்போல் சிலிர்த்தெழுந்தவள்எஸ் ஆதி நான் ஒத்துக்குறேன் நான்தான் உன்ன தேடி வந்தேன்…. ஆனா உன்மனசுல ஒன்னும் இல்லனா அப்போவே என்ன போனு சொல்லிற்காலமே ….. பதில் பேசு ஆதிநேஹாவின் கேள்விக்கு அவனிடம் பதில் இல்லாமல் போகவே மௌனமாக நின்றான்….

 

பதில் பேச முடியலையா ஆதி…. என்னனு நான் சொல்லடா …. உன்னோட உணர்வுகளை அடக்க தெரியாத கோழை நீஅதான் உன் உணர்வுகளுக்கு வடிகாலாய் பெண் சுகம் தேடி என்கிட்ட நீ வந்தஉன் மணசாட்சியே கேட்டு பாரு அது சொல்லும் உண்மையா பொய்யானு ’ …..

 

நேஹாவின்  பேச்சு அவன் தன்மானத்தை சீண்டி பார்க்கதொடர்ந்து தன் மேலே மட்டும் குற்றம் சுமத்திக்கொண்டு இருப்பவளை பார்த்தவன்ஹ்ம்ம் நேஹா ஒரு சின்ன திருத்தம் நானா வரல ….. நீயதான் என்ன தேடிவந்தஉனக்கு இதுல எந்த சமந்தமும் இல்லாத மாதிரி பேசுறஅவள் கூற்றை ஆமோதிக்க மறுத்தவனாய்

 

தன்னையும் தன் வார்த்தைகளையும் நிராகரிக்கும் அவன் மேல் கொலை செய்திடும் பொருட்டு கோபம் எழுந்தது’  எதுவோ ஆதி நீயும் நானும் சேர்ந்து வாழ்த்திருக்கோம்நீ வீட்டுல பேருக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கியே அளவிட நான் எந்த விதத்தில் நான் கொறஞ்சிட்டேன் அப்படி என்கிட்ட இல்லாதது அந்த ஊனத்துக்கிட்ட என்ன இருக்குனு அவள விட்டு பிரிய மனசுவரல உனக்குஎன்ன கல்யாணம் பண்ணிக்குறேன்  சொன்னதுலாம் பொய்யா???…. என்ன நம்ப வச்சி கழுத்த அருத்துடல்ல ஆதி…. இதுகுலாம் நீ பதில் சொல்லியே ஆகணும்’….

 

ஒரு கேடைய பொருளாய் அவளை நீ பயன்படுதிக் கொண்டதை நான் உன் மனைவியிடம் கூறினால் உன் என்னவாகும் ஆதிஅதுமட்டுமின்றி இதோ இப்போது என் வயிற்றில் உன் குழந்தை மூன்று மாதக் கரு அது உனக்கு தெரியுமா?….. நேஹாவின் வார்த்தையில் ஆதியை விட கதவுக்கு அப்பால் நிற்கும் அவனது மனைவித்தான் நிலைகுலைந்து போனால்…..

 

மடாரென்று யாரோ தன் இதயத்தில் ஓங்கி அடித்ததுப்  போல் உணர்ந்தாள் மித்ராகண்ணீர் தாரை தாரையாக ஊற்ற தன் உணர்வுகளை தொலைத்து உயிரற்ற ஜடமாக நின்றிருந்தாள்ஒரு நிமிடம் அவளின் இதயத் துடிப்பு நின்று அதிவேகமாக அடித்துக் கொண்டிருந்தது அப்படியே பூமியை பிலந்துக்கொண்டு உள்ளே சென்று விட மாட்டோமா என்று தோன்றியது அவளுக்கு

கணவன் தன்னை ஓரு கேடையமாக பயன்படுத்திக் கொண்டானா…. அம்மம்மா போதும் என்னால் முடியவில்லை எவ்வளவு கிழ்த்தரமான  வாசகங்கள் நெஞ்சமெல்லாம் படபடக்க இதயத் துடிப்பின் வேகம்  இரட்டிப்பாக துடித்ததுகண்களெல்லாம் இருட்டிக் கொண்டு வர பிடிமானமில்லாமல் சுவற்றின் மேல் சாய்ந்து கண்களை இருக்கமாக மூடிக்கொண்டாள் இதற்கு மேல் தாம் இங்கு நின்றாள் நெஞ்சுக் கூட்டிற்குலிருக்கும் இதயம் வெடித்து வெளியே விழுந்து விடும் அபாயம் உள்ளது என்று உணர்ந்தவள் அந்த இடத்தை விட்டு அகன்றாள் கனத்த மனதுடன்….

 

இதுவரை பொறுமையோடு கேட்டவள் முழுதாக தன்னவன் பேசியதையும் கேட்டிருக்கலாம்….. இதுதான் விதியின் சதியோ???

  **********************************

அத்தியாயம்32

 

நேஹாவை  ஏளனமாக பார்த்தவன் என்ன பிளாக் மெயில் பண்றியாஒரு பொண்ணு உனக்கே விருப்பமிருந்து தவறுன்னு தெரிஞ்சும் வரப்போஹௌ கூட் கெட் பாக் சோ நானும் அக்ஸ்ப்ட்  பண்ணேன் பட் அத போய் நீ  காதல்னு சொல்றதுதான் நேஹா என்னக்கு முட்டாள் தனமா படுதுஉனக்கும் விருப்பமிருக்க போய்த்தான் நான் உன்னுடன் சல்லாபித்தேன் என்று தொடர்ந்தவன்….

 

அப்புறம் என்ன சொன்ன? என் பொண்டாட்டி கிட்ட என்ன இருக்கா? என்ன டி இல்ல…  அவ கிட்ட நல்ல மனசு இருக்கு அத விட என்மேல் அவளுக்கு கடலவில் காதல் இருக்கு…. பணத்துக்கு ஆசைப்பட்டு வேறொருவனுக்கு முந்தி விரிக்கும் பரம்பரை என் பொண்டாட்டி இல்லடி …. அதுவும் உன்ன போல கேவலமான பிறவி இல்ல…. யூ ப்ளடி வுமன்உன்கூட என்னோட மனைவியை சேர்த்து பேசுகிறாயாஅவள் கால் தூசிக்கூட நீ பேரமாட்டாய்என்று அவளை எச்சரித்தவன்….. வெளியே போகுமாறு கத்தினான்

 

ஆதி மைண்ட் யூர் ஒர்ட்ஸ்’  அவன் எதற்கும் மசியவில்லை என்றதும் அவனைப் பற்றிய உண்மையை அவன் மனைவியிடம் கூறிவிடுவேன் என்று சொல்லியும் கூட அசராமல் இருக்கிறான் என்றால்  அத்தகைய நம்பிக்கை உடையவளா  அவன் மனையாவி!!!

 

முடியவில்லை தன் தோல்வியை அவளால் ஏற்க முடியவில்லை நேஹா தோல்வியடைவதா சாத்தியமே இல்லைகடைசி முறையாக அவனை நோக்கி பலமான ஆயுதத்தை எய்த முயன்றாள்சரி ஆதி எனக்கு உன்னோட மனைவினு அந்தஸ்துக்கூட  வேண்டாம்’…. ஆனால் என் வயிற்றிலிருக்கும் உன் குழழத்தைக்கு என்ன பதில் ஆதி ஆத மட்டும் சொல்லு நான் இப்பவே இந்த இடத்தை  விட்டு மட்டுமல்ல உன்னோட வாழ்க்கையே விட்டு போக தயார்என்றவளை கொலை வெறியுடன் பார்த்தவன்என்ன கொலை பண்ண வச்சிராத நேஹா நான் உன்கூட எந்தளவுக்கு சேஃபா இருந்தேனு எனக்கு தெரியும் ….. யாரோட குழந்தைக்கு யாரு டி அப்பாஇன்னும் நீ கொஞ்ச நேரத்துல இங்க நின்ன நானே உன்ன கொலை பண்ணாலும் பன்னிருவேன்இதோ பார் கடைசி முறையாக எச்சரிக்கிறேன் உன்னை மட்டுமில்ல அவனையும் சேர்த்துதான் யார் சொல்லி நீ இங்கு வருகை தந்திருப்பாய் என்று நன்கு அறிந்தவன் நான் மேலும் எனக்கோ என் மனைவிக்கோ தீங்கு விலைவிக்க நினைத்தால் கூட என் பதில் வேறுமாதிரி இருக்கும் யாரும் நினைத்து பார்க்காத வகையில் …. கெட் லாஸ்ட் என்று கூறியவன் சேக்குரிட்டியை அழைத்து அவளை வெளியேற்றினான்….

 

நேஹா தனது இயலாத நிலையை நினைத்து வருத்தினாலும் ஆதி மேல் இருக்கும் வன்மம் இன்னும் அதிகரித்தது

 

 

கால்கள் மறுத்துப்போய் நகர மறுத்ததுஉடலிலுள்ள அத்தனை சக்தியும் வடிந்ததுப்போல் செயலாற்ற முடியாமல் நின்றிருந்தாள் மித்ராதன்னிலை உணராமல் கால்கள் சென்ற திசையில் சென்றவள் தான் எங்கு செல்கிறோம் என்பதுக்கூட நினைவில்லாமல் பிரம்மை பிடித்தவள் போல் சாலையை கடந்தவளின் நினைவில் இருந்ததெல்லாம் அவள் கணவனே …. எவ்வாறு வீட்டை அடைந்தாள் என்பது சத்தியமாக நினைவில்லைஅவள் காதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டதுப் போல்  ஒலித்தது அதே வார்த்தைகள்ஆமாம் நான் மித்ராவ ஒரு கேடைய பொருளாக உபயோகித்தேன் அது மறுப்பதற்கு இல்லை…. நான்  என்னுடைய சுயநலத்திற்காக செய்திருந்தாலும் இது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு பொதுப்படையாக நடந்த திருமணமாகத்தான் தெரியும்தன் உயிருக்கு மேலானவனின் வாய்மொழியாக இத்தகைய வார்த்தைகள் கேட்க கூடும் என்று அவன் கனவிலும் எண்ணவில்லை….

 

அவள் மனதில் இருந்ததெல்லாம் ஒரே கேள்வி தான் அவன் கூறிய உரிமைக்கூட இல்லாமல் போய்விட்டதே ….    

 

இத்தனை நாள் என்மேல் அன்பில்லாமல் தான் என்னுடன் வாழந்தாரா???…. நம்பமுடியவில்லை ஒவ்வொரு இரவும் என்னை எவ்வளவு ஆசாசையோடு எதிர்கொண்டார் அது எல்லாம் பொய்யா?? அவர்கள் உறவுக்கு மட்டும் கலங்கம் ஏற்படவில்லை அவனுடன் அவள் வாழ்ந்த வாழ்க்கைக்கும் அவன் மீது அவள் கொண்ட காதலுக்கும் சேர்த்து அவன் கலங்கம் இழைத்துவிட்டதுப் போல் உணர்ந்தாள்….

 

தன்னை உணராது தன் காதலை உணராது எப்படி அவன் பொய்யத்துப் போனான் …..

 

அவன் தொட்ட இடம் எரிந்தது அவன் முத்தமிட்ட இடமெல்லாம் அருவருப்பில் கூசியதுதன் வெகுளி தனத்தை பயன்படுத்திக் கொண்டவனை எண்ணியெண்ணி கண்ணீரில் கரைந்தாள்ஒரு முறை கூட என் காதலை அவர் உணரவில்லையா இல்லை அவன் உணரும் மாதிரி தான் நடந்துக் கொள்ளவில்லையா…. தனக்குத் தானே கேள்வியும் கேட்டுக்கொண்டு …. அந்த கேள்விக்கான விடையையும் தனக்கு தானே அளித்துக்கொண்டாள் அந்த பேதைஏன்னென்றால் அவள் கேள்விக்கு    விடையளிக்க வேண்டியவனே கேள்வியாகி போனான்….

 

இதற்குமேல் தான் அவனுடன் சேர்ந்து வாழ்வது சாத்தியப்படுமா??? என்று நினைத்தவளுக்கு மனம் முழுவதும் கசிந்தது…. காதலுக்கு அடிப்படை தகுதியே அன்பு அதுவே ஆட்டங்காணுகையில் இதில் எங்கு போய் நான் காதலை தேடுவதுபின்பு நேஹாவின் நியாபகம் வந்தவளாக அவள் வயிற்றில் அவன் குழந்தையா??? அந்த நினைப்பே அவள் மனதில் பாரம் ஏறியதுஏதோ ஒன்று மூலையில் உரைக்க தன்னால் ஏன் அவர்கள் பிரிந்து வாழவேண்டும்அவனுக்கு எந்த ஒரு அவசியமுமில்ல பிடித்தமில்லாத மனைவியுடன் கடமைக்காக வாழ்வதுஅப்படி அவன் தன்னுடன் கடமைக்காக வாழ்ந்தாள் என்றால் அது தான் பெண்மைக்கும் தன் பரிசுத்தமான காதலுக்கும் இழுக்கன்றோஒருவேளை அவன்  எதிர்பார்த்த காதல் அவளிடம் கிடைத்ததோ என்னவோ இனியும் தமதிப்பென்றது அவன் வாழ்க்கைக்கு தான் செய்யும் தொரகமென்று கருத்தியவள் சடுதியில் அந்த செய்யலை செய்தால் தான் அவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டாள் என்ன …. தாம் தான்  அவர்கள் வாழ்க்கைக்கு பெருத்த பாலமாக இருக்கிறோம் என்று எண்ணியவள் தன்னவனின் வாழ்க்கையை சீராக்கும் பொருட்டு தன்னையும் தங்களின் மகவுகளையும் கருத்தில் கொள்ளாமல் போதுநலமாக யோசித்து தன்னலம் கருதி முடிவெடுத்தால் அவனை விட்டு பிரிவதென்று…. தன்னவனை விட்டு பிரிவதென்று முடிவெடுத்தவளால் அதை செயல் படுத்ததான் மிகவும் சிரமப்பட்டு போனால் தன் உயிரை யாரோ வேரோடு வெளியே பிடிங்கி எரிந்ததுப்போல் உணர்த்தாள்

 

இதையெல்லாம் யோசித்த அவன் மனைவி ஒன்றை மட்டும் மறந்துப்போனாள்நேஹாவுடன் நிச்சயித்த திருமணமே பொய் என்ற பட்சத்தில் தன்னுடன் ஏன்??? அவன் வாழ்வை பகிர்ந்து கொள்ளவேண்டும்அவன் நினைத்திருந்தாள் அந்த                  திருமணமே நடந்திருக்க வாய்ப்பில்லையேஅவன் பேச்சை எதிர்த்து வாதிட அங்கு எவருமிருக்கவில்லை…… அப்படி அவன் செய்யாமல் அவள் கரம் பிடித்தது உரிமையின் போர்வைக்குள் இருந்த காதல்!!!! அது ஒன்று மட்டுமே காரணமாக முடியும்

 

கண்ணால் பார்ப்பதும் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்….

 

அவன் மனைவி விசாரிக்க தவரிவிட்டால்அவள் தவரவிட்டது விசாரிப்பை மட்டுமல்ல அவனையும் சேர்த்துதான் என்பது பிற்பாடெனும் அவளுக்கு ஞானோதயம் வருமா!!!

 

நன்றி தோழமைகளே

முள்ளோடு முத்தங்கள் தொடரும்

திவ்யபாரதி

 




8 Comments